இலக்க இதழில் வெளியாகும் கட்டுரைகள் எழுதும் ஆசிரியர்களின் கருத்தே விமர்சன பூர்வமாக அணுகி சரியான விவாதங்கள் மூலம் மார்க்சிய-லெனினியத்தை புரிந்துக் கொள்ள முயற்சியே தோழர்களே....
"நிலம், ரொட்டி, சமாதானம்" என புரட்சியின் போது லெனின் கொடுத்த முழக்கம் வெறும் வாய்ப் பந்தல் அல்ல என்பதை நடைமுறை மூலம் சோவியத் நிரூபித்தது. அனைவருக்கும் வேலை கல்வி மருத்துவம் வாழ்க்கை பாதுகாப்பு உரிமை உள்ளிட்ட உலகு அனுபவிக்கும் பலவற்றை கொடையாகத் தந்தது சோவியத் புரட்சி.
இந்த இதழில் பேசப்பட்டுள்ளவை
1).வினேஷ் போகத்-மல்யுத்த வீராங்கனை
2).நூல் அறிமுகம் மற்றும் விமர்சனம்-1& 2
3).இந்திய பொதுவுடமை இயக்கம் பற்றிய தேடல்
4).சிறந்த கம்யூனிஸ்ட் ஆவது எப்படி? லியுஷாவோகி -பாகம்- 2
5).உண்மையைப் பேசுங்கள் - சௌ என் - லாய்.
6).ஹிண்டன்பெர்க் விவகாரத்தில் அழுகிநாறும் செபி
7).இட ஒதுக்கீட்டுக் கொள்கையை நாம் எப்படி பார்த்து, எப்படி மதிப்பீடு செய்வது?-தேன்மொழி
இங்குள்ள கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனங்களான என் சி பி எச் ம் பாரதி புத்தகாலயமும் கம்யூனிசத்தை வளர்க்கும் கம்யூனிஸ்ட் ஆசான்களின் நூல்களை வெளிக்கொணர மறுக்கும் அதே வேளையில் தனி நிறுவனமான அலைகள் நமது ஆசானின் "பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும்" நூல் கொண்டுவந்துள்ளதை பாராட்ட செய்வதோடு இந்த பணிக்காக அவர்களை வாழ்த்துவோம்.
அதேபோல் லெனின் தேர்வு நூல்கள் 12 தொகுதியையும் கொண்டு வரும் செந்தளம் பதிப்பகதிற்கும் வாழ்த்துகள் பணி சிறக்க. எல்லோரும் வாங்கி வாசிக்க வேண்டிய நமது ஆசான்களின் நூல்கள்.
- தனிமனித விருப்பு மகிழ்வுதான் சிறந்த வாழக்கையாக உழைக்கும் மக்கள் நலம்சார்ந்த அரசியல் புரட்சியெல்லாம் வீண்வேலை என்ற தோற்றத்தை ஏற்படுத்தி அதில் வெற்றியும்பெற்று வருகிறது இங்குள்ள எதிர்புரட்சிகர சக்தி.
அனைவரையும் அரசியல் படுத்தவேண்டிய பணி நம்முடையது அது கடிணமான பணியாகயிருக்கலாம் “எது கடினமான பணியோ அதுவே நாம் செய்து முடிக்க வேண்டிய முதல் பணி” என்றார் லெனின்...
வலிமையானது எங்கள் நாடு, இளமையானது எங்கள் நாடு, இன்னும் பாடப்படவில்லை அதன் உன்னதப் பாடல்கள்மோசடிகளிலிருந்தும் கூச்சல்களிலிருந்தும் கொலையாளி களிலிருந்தும் சித்திரவதைகளிலிருந்தும் வாயாடி வம்பளப்புகளிலிருந்தும் தேசபக்த சொற்ஜாலங்களிலிருந்தும் நிச்சயமின்மையிலிருந்தும் சந்தேகத்திலிருந்தும் விடுபட்டு அது மீண்டும் வரும் நமது போர்ப் பாடல் மீண்டும் வரும் மனதுக்குப் பிடித்த ஒருராகம்போல் இனிமையானதாய் நமது பள்ளதாக்குகள் போல் ஆழமானதாய்நமது மலைகளைப் போல் உயரமானதாய் அதனை இயற்றிய மக்களைப் போல் வலுவானதாய் அது மீண்டும் வரும்.1974 ல் பேராசிரியர் ஜார்ஜ் தாம்ஸன் அவர்களின் மனிதசாரம் நூலின் முன்னுரையிலிருந்து, இன்றைய நமது நாட்டில் நிலவும் உண்மையான நிலையை விளக்குவது போல அமைந்துள்ள கவிதை.
இலக்கு இணைய இதழ் -54 PDF வடிவில் இந்த லிங்கை அழுத்தி பெற்றுக் கொள்ளுங்கள் தோழர்களே
No comments:
Post a Comment