மனித குல ஒற்றுமையை சிதைக்கும் இனவியல் கோட்பாடு-2

 விஞ்ஞான வளர்ச்சியும்,புதிய கண்டுபிடிப்புகளும் உலகத்தை மின்னல் வேகத்தில் முன்னெடுத்துச் சென்றுக் கொண்டுள்ளது. ஆனால் அவை அனைத்து மக்களுக்கும் பயனளிக்கும் வகையில் உள்ளதா என்றால்? ஒடுக்கும் ஆளும் வர்க்க தேவைக்காக நாட்டில் பெரும் பகுதி மக்கள் ஜாதி, மத நம்பிக்கை மூடப்பழக்க வழக்கங்களின் காரணமாக அறியாமையில் மூழ்கடித்துள்ளுது என்பேன்.

வரலாறு என்பது மக்கட்சமுதாயத்தின் அல்லது அதன் கூறுகளின் காலப்பதிவாகும் அது வரலாற்று நிகழ்வுகளின் ஆவணத் தொகுதியாகவும் அமைகின்றது அத்தோடு நாட்டையும் அம்மக்களையும் பற்றி நிற்பதோடு மானிடத்தையும் அதனோடு கூடியதான கால உறவினையும் தொடர்புபடுத்தும் பதிவேடாகவும் வரலாறு திகழவேண்டும்.இதற்கான தேடல்கள் தவறான தரவுகளைக் கொண்டிருப்பின் அதுவே தவறான வழிகாட்டியாகவும் ஆகிவிடும். ஆகவேதான் அதற்கெனகுறிக்கப்பட்ட கொள்கைகள் மற்றும் கோட்பாடுகளின் அடிப்படையில் வரலாறுகள் எழுதப்படவேண்டிய அவசியம் உணரப்படுகின்றது. வரலாற்றை இரண்டாக பிரிப்பர் அவை வரலாறிற்கு முந்திய காலம் மற்றது வரலாற்றுக்குட்பட்டகாலம். கடந்த காலத்தில் நடந்தேறிய வற்றைப்பற்றி நம் முன்னோர் எழுதிவைத்துச் சென்றனவற்றிலிருந்து அறிகிறோம். ஆனால் எழுத அறியாதகாலம் ஒன்றிருந்தது அன்று எழுத்துச்சான்றுகளும் அக்காலத்தில் இல்லாததாயிருந்தது. ஆதிகாலத்து மனிதன் எழுதத் தெரியாதவனாயினும் அவன் உபயோகித்த கருவிகள், ஆயுதங்கள், சிதைவுற்ற கட்டடங்கள், குகைச்சித்திரங்கள், மட்கலங்கள் முதலியன உண்டு. இவைகளிலிருந்து ஆதிகாலமனிதர் எவ்வகையாக வாழ்ந்தனர் என்று ஒருவாறு யூகித்தறியலாம். எழுத்துச் சான்றுகள் இல்லாத காலத்தைச் வரலாற்று எல்லைக்கு முந்திய காலமென்கிறோம். எழுத்துச்சான்றுகள் உள்ள காலத்தைச் வரலாற்றுகாலம் என்று கூறுகிறோம் சுமார் 6,000 வருடங்களுக்கு முன்வசித்த ஆதி எகிப்தியர், பபிலோனியரது காலத்துக்கு முந்திய எழுத்துச் சான்றுகள் கிடைக்காததினால் அக்காலத்தில் உள்ள மனிதர் எவ்வாறு வாழ்ந்தனர் என்பதுபற்றிக் கூறுவது சுலபமல்ல. அதனாலேயே மனிதன் பூமியில்தோன்றிய காலந்தொட்டு இன்றைக்கு 6,000 வருடங்களுக்கு முன் உள்ள காலத்தைச் வரலாற்று எல்லைக்கு முந்திய காலமென்கிறோம். ஆதிகால எகிப்தியர், பபிலோனியருடனான எழுத்துச் சான்றுகளுள்ள வரலாற்றுகாலம் தொடங்குகின்றது. வரலாற்று எல்லைகுட்பட்டகாலமும் அதற்கு முந்தியகாலமும் நாட்டுக்கு நாடு (ஒவ்வொவொரு நாட்டிற்கும் வேறுவேறானகாலம்)  வித்தியாசப் படுகின்றன. ஆதிகால மனிதருடைய வாழ்வியல் தன்மையைப் பற்றி நாம் ஒருவகையில் யூகித்து அறிந்துகொள்ள முடியும். இன்னும் சில புரிதலுக்கு கீழே.வரலாற்று முற்பட்டகாலம்:-மனிதன் தன் கருத்துகளை வெளிப்படுத்த பயன்படுத்திய மொழியின் பண்பட்ட நிலையை அடிப்படையாகக் கொண்டு வரலாற்றை, வரலாற்றுக்காலம், வரலாற்றுக்கு முந்தைய காலம் என பாகுபடுத்துவர். கருத்துப் பரிமாற்றதிற்குரிய  மொழியின் எழுத்து வடிவம் வரலாற்றுக் காலத்தில் தொடக்கத்திற்கு சான்றாக கருதப்படுகிறது. வரலாற்றுக்கு முந்திய காலத்தை பழங்கற்காலம், புதிய கற்காலம், இரும்புக்காலம், என மனிதன் பயன்படுத்திய கருவிகளின் அடிப்படையில் உட்பிரிவுகளாக பார்க்கலாம். ஆனால் அனைத்துப் பகுதிகளிலும் இக்காலபகுப்பாடுகள் ஒரு குறிப்பிட்டகாலம் வரையறைக்குள் காணப்படும் என்பது கடினமே. ஏனெனில் சமசீரற்ற வளர்ச்சி நிலை என்பது மனித வரலாற்றில் அனைத்து நாடுகளுக்கும் அனைத்து காலங்களுக்கும் பொதுவான ஒரு சிறப்பான கூறாகும்.‘ஒரு பகுதி வாழ் மக்கள் தம் தேவையையும் சூழ்நிலையும் பொறுத்து உற்பத்தி கருவிகளையும் சமூக அமைப்பையும் உருவாக்கிகொள்வதாக’ சட்டோபாத்தியாய கருதுகிறார்.ஆக மனிதன் தோன்றியதிலிருந்து இன்றைய நிலை வரை அவனின் சமூக பொருளாதார வளர்ச்சி நிலைகளை அறிய முற்படுவதோடு பல்வேறு ஆய்வாளர்கள் எழுத்தாளார்களின் உதவியோடு நமது பணியினை முன்னெடுப்போம்.
மனித குலத்தின் ஆரம்பகாலம்
னிதனின் வளர்ச்சி போக்கை அறியும் நாம் மனிதன் மூலம் பற்றி பல்வேறு கருத்துக்கள் இருந்தாலும் அவன் விலங்கினத்தை சேர்ந்தவன் என்பதில் ஐயமில்லை. அவன் ஹோமோசெபியன் (Homo sapien) எனும் வகையினத்தை சார்ந்தவன். ஆதியில் ஒரே பூர்வமனித குலத்தின் வழிவந்த மனிதன் அதன் ஒவ்வொரு நிகழ்விலும் ஒன்றிலிருந்து மற்றொன்றாக மாறியும் வளர்ந்தும் வந்துள்ளான். அவன் ஒன்று கலந்து வளர்ச்சியில் இன்று பல பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து இனம், மதம், மொழி, பிரதேசம், ஏன் ஜாதி என்று பிளவுண்டு கிடக்கிறோம். இயற்கையின் இந்த நியதிப்படி அனைத்து மனிதர்களும் ஒரேவகைபிரிவை(இனத்தை) சேர்ந்தவர்கள். விலங்கு இனங்களின் சில வகையினம் வேறு வகையினதுடன் சில வேளைகளில் சேரக்கூடும், ஆனால் அவ்வாறு சேர்ந்தால் அவைஅவையாக இருப்பதில்லை வேறாகதான் இருக்கும்; அத்துடன் அவை அநேகமாகக் கலந்து உருப்பெறுவதில்லை. ஆனால் மனித வகைகள் அல்லது இனங்கள் பொதுவாகக் கலந்து உருவாகக்கூடியன. ஒரேவகையை சேர்ந்தவர்கள் எனும் அடிப்படையில் ஒரேபிரிவின் (இனத்தின்) எந்த ஆணும் எந்த பிரிவு பெண்ணுடன் சேர்ந்து இனப்பெருக்கம் செய்யமுடியும். அதாவது  இவ்வாறு வெவ்வேறு பிரிவினர்(இனங்கள்) கலப்பதனால் மலட்டுத்தன்மை எங்காயினும் உண்டாவதாகத் தெரியவில்லை. இன்று தூயஇனவாதம் பேசும் பலர் மறந்தே போனயிடம் இன்று வெவ்வேறு பிரிவாக(இனமாக) காணப்படும் இவர்கள் முந்தைய நகர்வுகளில் கலப்புற்றுப் பிறந்தவர்களேயென்பதை இதிலிருந்து தெளிவாக நாம் புரிந்துக் கொள்ள முடியும் மனிதகுலமான ஒரே தொப்பூல் கொடி உறவுதான் என்பதனையும்.அறிவியல் ஆய்வுகள் மனிதர்கள் விலங்கினத்தின் ஒரு வகை ஆனால் சில சிறப்பம்சங்கள் தனிவகை என்பதை உணர்த்துகின்றன. சுருக்கமாகச் சொல்வதானால், மனிதர்கள் விலங்குளிலும் பார்க்க எளிதாகவும், காலநிலைகள், மற்றும் காரணங்களால் மிக எளிதாக இடம் பெயர்ந்துவிடுவர்; மனிதர் தம் உணவு, உடைகள், உதவிக்கு வேண்டிய கருவிகள், மிருகங்கள் ஆகியவற்றைத் தேவைக்கேற்றவாறு மாற்றிக்கொள்வர். இத்தகைய திறமையும் வாய்ப்பும் விலங்குகளுக்கு இல்லை. அநேகமாக, வெவ்வேறு உபகரணங்களும் அமைப்புகளுமுள்ள தொகுதியான மனிதர் உலகில் ஆர்ட்டிக்கண்டம் தவிர்ந்த ஏனைய பகுதிகளிலெல்லாம் வசிக்கின்றனர். ஆதேபோல் விலங்குகளும் இவ்வாறு எங்கும் பரந்துள்ளனவென்று சொல்ல முடியாது. மனிதருடன் சென்ற ஒரு சில விலங்குகள் மாத்திரம் பரந்துள்ளன. விலங்குவகைகள் தனிப்பட்ட இயல்புகளுள்ள தாயகங்களில் மாத்திரம் வசிக்கின்றன. மனித இனங்கள் பெயர்ந்து செல்லும் ஆற்றல் காரணமாக, உலகமெங்கும் பரந்தும், ஒன்றுடன் ஒன்று சேர்ந்தும் கலந்தும் பின்னிப்பிணைந்து விடுகின்றன. இப்பொழுதுள்ள மனிதவகைகள் யாவும் மனித இயல்புகளையே பெற்றிருந்த ஒருவகைப் பூர்வீக மனிதரிலிருந்தே வந்தவை என்பதில் இப்பொழுது சந்தேகமில்லை; உலகில் இங்குமங்குமாக இவர்கள் இடம்பெயர்ந்து முறையாக அப்பூர்வீக மனிதவகையினரிலிருந்து தோன்றியவர்களே இப்பொழுதுள்ள மனிதவகையினர். அவ்வகையான நகர்வில் இப்பொழுதுள்ள ஆப்பிரிக்க நீக்ரோகள்’, ஐரோப்பியவெள்ளையர்வடசீனவிலுள்ள மஞ்சள்நிற மக்கள், மற்றும் உலகெங்கும் சிதறுண்டுள்ள பல்வேறு வகையினர் எவ்வாறு பாதிக்கப்பட்டனர் என்பதை அறியக் கூடியவாறு அந்நகர்வுகள் பற்றி ஆராய்ந்தால் பல குழப்பங்களுக்கு விடை கிடைக்கும்.
இன்று மனிதன் எந்த பகுதியில் வாழ்ந்தாலும் ஆதியில் தோன்றிய அந்த மனிதனிலிருந்து வந்தவர்களே ஆம் ஆப்பிரிக்கநீக்ரோகள், ஐரோப்பியவெள்ளையர் வடசீனவிலுள்ள மஞ்சள்நிற மக்கள் எல்லோர்க்கும் ஒரே மூதாதையர்தான். அவர்களின் நகர்வு சமூக வளர்ச்சி மாற்றம் பிரதேசம், மொழி என்ற பிரிவோடு தன் வளர்ச்சிக்கு தங்களுகுள்ளே நாடுகளாகவும் கண்டங்களாகவும் ஆளுபவர்களாகவும் ஆளாப்படுபவர்களாகவும், சுரண்டுபவர்களாகவும் சுரண்டப்படுபவர்களாகவும் இங்கே ஜாதி ரீதியாக ஏற்ற தாழ்வான சமூகத்தில் மனிதனை மனிதன் பிரித்து ஒதுக்கி அடக்கி ஆளும் கேவலம் தொடர செய்கிறது. ஆனால் எல்லோரும் ஒரு காலத்தில் தோன்றிய அந்த ஆதி மனிதனின் தொப்புழ் கொடி உறவுதான் என்பது தெளிவு.

தொடரும்....

 

 முந்தைய பதிவை வாசிக்க இந்த பகுதியை அழுத்தவும்

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்