இந்த இதழில் பேசப்பட்டுள்ள கட்டுரைகள்
1). ஆசிரியர் பகுதி
2). தியாக தோழர்களின் நினைவுநாளிற்கானவை
3). கம்யூன்கள் சிறந்தவை-மாவோ
4). இந்திய பொதுவுடமை கட்சி பற்றிய ஒரு சித்திரம்
5). சிறந்த கம்யூனிஸ்ட் ஆவது எப்படி?. லியுஷாவோகி.பாகம் 3.
இன்று அடையாள அரசியலுக்குள் புரட்சிகர கட்சிகளே அடைபட்டுகிடக்கும் பொழுது. அன்று சாதியெனும் கட்டமைப்புக்கு சம்மட்டி அடி கொடுத்தவர் பாலன். உன்னதமான தனது வர்க்க அரசியல் மூலம் சாதிகடந்து உழைக்கும் மக்களை ஓரணியில் இணைத்துக் காட்டியவர் பாலன். அன்று அங்கு ஆண்டாண்டு காலமாய் கட்டிக் காக்கப்பட்டு வந்த சாதியம் தகர்க்கப்பட்டது .ஒரு புரட்சிகர இயக்கம் மக்கள் பாதையை நடைமுறைப்படுத்தி வர்க்கப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் போது மக்கள் ஜாதியை கடந்து ஒன்றுபடுகிறார்கள் என்பது அன்றைய களநிலவரம். அன்றைய தர்மபுரி மாவட்டத்தில் நடந்த பல்வேறு கொடுமைகளுக்கு எதிரான போராட்டங்கள் இன்றும் சாட்சிகளாக உள்ளன.
கம்யூன்கள் சிறந்தவை- மாவோ ஆகஸ்ட் 9, 1958.
அனைத்து வகையான பணிகளுக்குரிய ஏற்பாடுகளும் தீவிரமாகவும் தங்குதடையு மின்றியும் மக்களால் விவாதிக்கப்படும் விஷயமாக வேண்டும்என்று தலைவர் மாவோ வலியுறுத்தினார். திட்டங்களும் வழிகாட்டுதல்களும் மக்களால் விவாதிக் கப்படவில்லை என்றால் அந்தக் கருத்துக் கள் உங்களுடையதாகிவிடும் (அதாவது தொண்டர்களுடையதாகிவிடும்) என்று அவர் சொன்னார். இத்தகைய விவாதங் களுக்குப் பின், மக்கள் தாங்களாகவே தேர்ச்சி பெற்றவர்கள் ஆகிவிடுவர். இயற்கையாகவே அவர்கள் மிகுந்த ஊக்கத்தோடு பணிபுரியத் தயாராகி விடுவார்கள். முன்னணித் தொண்டர்கள் கீழ்நிலையில்உள்ளவர்களைக் காண அடிக்கடி செல்ல வேண்டும். அவர்களின்
அனுபவங்களைத் தொகுத்துரைத்து அடித்தளத் தொண்டர்களுக்கு உதவ வேண்டும்; அந்த இடத்திலேயே வழிகாட்டுதலை வழங்க வேண்டும். லீ -
சென் சியெனில் உள்ள பெய் - யுவான் சியாங் மிகப் பெரிய (கூட்டுப்) பண்ணை களை அமைக்கத் தயாராகிறது என்று டான் சி - லுங் (ஷான்டூங் மாகாண செயலாளர்) கூறிய போது தலைவர் மாவோ சொன்னார்: மக்கள்கம்யூன்களை அமைப்பது நல்லது. அவர்கள் தொழிற்சாலை, வேளாண்மை, வர்த்தகம், கல்வி, மற்றும் ராணுவ விவகாரங்களை இணைப்பார்கள் என்ற எதார்த்தம் அவற்றில் அடங்கியிருக்கும் சாதக நிலையாகும். (1958 ஆகஸ்ட்9 இல் ஷான் டூங்கில் மாவோ மேற்கொண்ட ஆய்வுப் பயணக்கட்டுரையின் சாரம். 1958 ஆகஸ்ட் 13 மக்கள் நாளிதழ் இதழில் இது வெளியாகியிருந்தது).
நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை:-
கம்யூனிஸ்ட் கட்சி போடுகின்ற திட்டங்கள், வழிகாட்டுதல்கள் மற்றும் செய்ய வேண்டிய பணிகள் குறித்து மக்களிடம் விவாதிக்க வேண்டும் என்றார் சீனக் கம்யூனிஸ்டுக் கட்சித் தலைவர் மாவோ. மக்களிடம் விவாதித்து அதனை மக்கள் ஏற்றுக் கொள்ளும் போதுதான் அந்த திட்டங்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் மக்களின் திட்டங்களாக மாறும் இல்லையென்றால் அது கட்சித் தலைவர்களால் உருவாக்கப்பட்ட திட்டமாகவே இருக்கும், மேலும் கட்சித் தலைவர்களால் மக்கள் மீது திணிக்கப்படுபவை யாகவே இருக்கும். ஆகவே கம்யூனிஸ்டுக் கட்சியின் கொள்கைகளை மக்களிடம் விவாதித்து மக்களை ஏற்றுக்கொள்ளச் செய்வது கம்யூனிஸ்டுகளின் கடமையாகும் என்று மாவோ போதித்துள்ளார்.
ஆனாலும் கம்யூனிஸ்டுக் கட்சியின் இந்தக் கொள்கைகளை மக்களிடம்விவாதிக்க வேண்டும் என்றால் மக்களுக்கு அதனை விவாதிப்பதற்குத் தேவையான அறிவை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகிறது. இந்த அறிவை மக்களுக்கு கொடுப்பதற்கு சீனக் கம்யூனிஸ்டுக் கட்சியானது மார்க்சியப் பள்ளிகளை நடத்தி மார்க்சிய கல்வி இயக்கத்தை தொடர்ந்து செயல்படுத்தியது.
மாவோவின் இந்த போதனையை இந்தியாவில் எந்த கம்யூனிச அமைப்புத் தலைவர்களும் பின்பற்றுவதில்லை. கொள்கை முடிவுகளை தலைவர்களே முடிவு செய்கிறார்கள். அதனை கட்சி உறுப்பினர்கள் மூலம் மக்களிடம் கொண்டு சென்று மக்களிடம் திணிக்கிறார்கள். ஆகவே தான் மக்களுக்கு இந்தக் கொள்கைகள் பிடிக்கவில்லை என்றால் மக்கள் கம்யூனிஸ்டுக் கட்சிக்குத் தந்த ஆதரவை விலக்கிக் கொள்கிறார்கள். கட்சியும் மக்களிட மிருந்து தனிமைப்பட்டு, மக்களின் செல்வாக்கை இழந்து விட்டது.
உதாரணமாக மேற்கு வங்கத்தில் விவசாயி களுடைய நிலங்களை கைப்பற்றும் முடிவை சிபிஎம் கட்சி தன்னிச்சையாக முடிவெடுத்து செயல்பட்டது. அந்தக் கொள்கையை விவசாயி களிடம் விவாதிக்கவேஇல்லை. அதன் விளைவாக விவசாயிகள் கட்சி எடுத்த கொள்கையை ஏற்க மறுத்து அந்தக் கொள்கைக்கு எதிராகப் போராடினார்கள். கட்சியும் ஆட்சி அதிகாரத்தின் மூலம் இந்தக் கொள்கையை விவசாயிகளிடம் திணித்தது, போராடிய விவசாயிகளை சுட்டுக் கொன்றது. இதன் காரணமாகவே மேற்கு வங்க மக்கள் சிபிஎம் கட்சியைப் புறக்கணித்தனர், சிபிஎம் கட்சியும் மக்களின் செல்வாக்கை இழந்து தனிமைப்பட்டு நிற்கிறது.
தத்துவம் மக்களிடம் சென்றால் அது ஒரு பொருள் வகை சக்தியாக மாறும் என்றார் காரல் மார்க்ஸ். ஆகவே ஒரு கம்யூனிஸ்ட் கட்சியானது தனது கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் மக்களிடம் விவாதிக்க வேண்டும் அதன் மூலம் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கை களை மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் அவ்வாறு மக்கள் கட்சியின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டால் அந்தக் கொள்கையானது மக்களின் கொள்கையாக மாறிவிடுகிறது மக்கள் இந்தக் கொள்கையை சரியாகப் புரிந்து கொண்டால் அதன் அடிப்படை யில் செயல்பட வேண்டும் என்று அவர்கள் உணர்வார்கள் அத்தகைய உணர்வு மக்களிடம் ஏற்படும்போது தான் கம்யூனிஸ்ட் கட்சியானது மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்ற முடிவை மக்களுக்கு சொல்லி அவர்களை செயல்பட வைக்க முடியும் அவ்வாறு மக்கள் செயல்படும் பொழுது தான் அதன் மூலம் தான் சமூகத்தில் மாற்றம் ஏற்படும் மார்க்சியமானது பொருளாதாரத்தை மட்டும் பேசுகிறது வாழ்நிலையைப் பற்றி மட்டும் பேசுகிறது என்று சிலர் கருதுகிறார்கள் உண்மை அதுவல்ல. மார்க்சியமானது மக்களது உணர்வுகளையும் சிந்தனைகளையும் கருத்து களையும் பற்றியும் பேசுகிறது ஆகவேதான் சமுதாயத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்றால் பொருளாதார த்தில் மாற்றம் ஏற்பட வேண்டும் அவ்வாறு பொருளாதாரத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்றால் நாம் என்ன செய்யவேண்டும் என்ற கருத்தியல் முடிவுக்கு நாம் முதலில் வரவேண்டும்.அத்தகைய கருத்துக்களை உருவாக்காமல் பொருளாதார மாற்றத்திற்காக நாம் பாடுபட முடியாது.
ஆகவேதான் மார்சியம் மிக தெளிவாக நடைமுறையில் இருந்து கருத்துக்களை உருவாக்குவதும் அந்த கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு மீண்டும் நடைமுறையில் இந்த கருத்தை சோதித்து அதன் உண்மை தன்மையை புரிந்து கொண்டு நடைமுறையில் சரி என்று தெரிந்தால் அந்தக் கருத்தை ஏற்றுக் கொள்வதும் நடைமுறையில் தவறு என்று புரிந்தால் அந்தக் கருத்தை மறுப்பதும் என்ற கொள்கையை மார்சியம் பேசுகிறது அதாவது வாழ்நிலைக்கும் சிந்தனைக்கும் இடையில் இயங்கியல் உறவு இருக்கிறது என்று மார்க்சியம் சொல்கிறது அதன் மூலம் வாழ்நிலையையும், நடைமுயைப் பற்றியும் மார்க்சியம் பேசுகிறது, அதே வேளையில் சிந்தனையைப் பற்றியும் மார்க்சியம் பேசுகிறது. இவ்விரண்டுக்கும்இடையிலான உறவைப் பற்றியும் பேசுகிறது. ஆகவே தான் கம்யூனிஸ்ட் கட்சியானது தனது கொள்கையை செயல்படுத்துவதற்கு மக்கள் தான் அவசியம், அவர்கள் எந்த அளவுக்கு அந்தக் கொள்கையை புரிந்து கொண்டு செயல்படுகிறார்களோ அந்த அளவுக்கு அவர்கள் வெற்றி அடைவார்கள்.
ஆகவே கம்யூனிஸ்டுகள் எப்பொழுதும் தனது கொள்கைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்லி விளக்கி புரிய வைத்து அவர்களை செயல்படுத்துவதற்கு வழிகாட்ட வேண்டும். இதற்கு மாறாக மக்களிடம் விவாதிக்காமல், மக்களுக்குப் புரிய வைக்காமல் கட்சித் தலைவர்கள் உருவாக்குகின்ற கொள்கைகளை கண் மூடித்தனமாக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும், அதன் அடிப்படையில் செயல்பட வேண்டும் என்ற வகையில் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் செயல்பட்டால் அந்தக் கட்சி மக்களின் நம்பிக்கை இழப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. இவ்வாறு மக்களின் நம்பிக்கை இழந்துவிட்டால் ஒரு கம்யூனிஸ்ட் கட்சியானது தனது லட்சியத்தை செயல்படுத்த முடியாது.
சீன கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களுக்கு தோழர் மாவோ கம்யூன்களை உருவாக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். கம்யூனிஸ்ட் கட்சியினுடைய நோக்கம் உழைக்கும் மக்கள் சுதந்திரமாகவும் வளமான வாழ்க்கையை வாழவும் தேவையான ஏற்பாடுகளை மக்களே செய்து
கொள்ள வேண்டும், அதற்கு வழி காட்டுவது தான் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய கடமை. அந்த வகையில் உழைக்கும் மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கும் அவர்கள் வளமான வாழ்க்கை வாழ்வதற்கும், அவர்களுக்கு தேவை அரசியல் சுதந்திரம், அத்தகைய அரசியல் சுதந்திரம் இல்லாமல்
அவர்களால் அவர்களுடைய வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொள்வது என்ற முடிவை எடுப்பதும் அதன் அடிப்படையில் செயல் படுவதும் இயலாது.
ஆகவே மக்கள் தங்களது சொந்த முயற்ச்சியின் மூலமாக தங்களுக்கு தேவையான அரசியல் அதிகாரத்தை வழங்கக்கூடிய ஒரு நிறுவனத்தை அமைத்துக் கொள்ள வேண்டும். அத்தகைய நிறுவனம்தான் கம்யூன் அல்லது சோவியத்து என்று சொல்லப்படுகிறது. அத்தகைய கம்யூனை மக்கள் உருவாக்கி விட்டால் அந்த கம்யூன்களுக்கு மட்டும் அரசியல் அதிகாரம் உண்டு என்ற நிலைமையை ஏற்படுத்தி விட்டால், அதன்மூலம் மக்களின் தேவைக்கான கொள்கை முடிவுகளையும் திட்டங்களையும்
மக்கள் தங்களிடைய விவாதித்து மக்களின்பெருவாரியானவர்களின் கருத்துக்களின் விருப்பங்களின் அடிப்படையில் கொள்கை முடிவு எடுத்து அதனை செயல்படுத்த முடியும். இதற்கு மாறாக தற்போது நிலவும் பாராளுமன்ற ஆட்சி முறையில் மக்கள் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தலில் வாக்களித்து சட்டமன்றத்துக்கோ அல்லது பாராளுமன்றத்துக்கோ உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பார்கள், இந்த உறுப்பினர்கள் பாராளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் விவாதங்கள் நடத்தி சட்டங்களையும் திட்டங்களையும் உருவாக்குவார்கள், அந்தச் சட்டங்களும் திட்டங்களும் மக்களுக்கு சாதகமாய் இருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. பெரும்பாலும் இந்த பாராளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களால் நிறைவேற்றப்படும் சட்டம் திட்டங்கள் எல்லாம் மக்களுக்கு எதிரானதாகவேஇருப்பதை நாம் பார்க்கலாம். இவ்வாறு மக்களுக்கு எதிரான சட்டங்களையும் திட்டங்களையும் போடும் இந்தச் சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர்களை மக்கள் கேள்வி கேட்க முடியாது, அவர்கள் ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து மக்களுக்கு எதிராகவே செயல்படுவார்கள். மக்களால் எதுவும் செய்ய முடியாது. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியில் இருக்கக்கூடிய கட்சி மக்களுக்கு எதிராக செயல்பட்டது என்பதற்காக தேர்தலில் அந்தக் கட்சியை வீழ்த்திவிட்டு வேறு கட்சியை ஆட்சிக்கு கொண்டு வந்தாலும், புதிதாக ஆட்சிக்கு வந்த அந்தக் கட்சியும் மக்களுக்கு எதிராகவே தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் செயல்படும். மக்களால் எதுவும் செய்ய முடியாது. ஆனால் மக்களால் உருவாக்கப்படும் கம்யூனமைப்புக்குள்மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் பதவிக்கு வருவார்கள் அவர்கள் மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதன் அடிப்படையில் செயல்படுவார்கள். அவ்வாறு செயல்பட மறுத்தால் அந்த கம்யூன் உறுப்பினர் உடனடியாக மக்களால் பதவியிலிருந்து கீழ் இறக்கப்படுவார்.
ஆகவே ஓர் அரசமைப்பானது அதன் உறுப்பினர்களை மக்கள் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் வாய்ப்புள்ளதாக இருக்க வேண்டும். அத்தகைய கண்காணிப்பும் கட்டுப்படுத்தலும் கம்யூன் அமைப்பு முறையில் சாத்தியமாகும் ஏனென்றால் கம்யூன் அமைப்பு முறையில்தான் மக்கள் நேரடியாக அதன் உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதோடு மட்டுமல்லாமல் அவர்கள் சரி இல்லை என்றால் உடனே திருப்பி அழைக்கக்கூடிய உரிமையும் அதிகாரமும் மக்களுக்கு இருக்கும். அத்தகைய ஆட்சிமுறையான கம்யூன் ஆட்சி முறையைத்தான் மக்கள் உருவாக்க வேண்டும்.
அதற்கு நிலவுகின்ற ஆட்சி முறை நீடித்துக் கொண்டிருக்கும் பொழுதே கம்யூனை அமைப்பதற்கு கம்யூனிஸ்ட் கட்சி, மக்களைத் திரட்டி மக்களுக்கு உணர்வு ஊட்டி கம்யூனை உருவாக்க வேண்டும். இதைத்தான் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தலைவரான மாவோ விளக்கி உள்ளார். கம்யூன் அமைப்புதான் இதுவரை உருவான அரசமைப்புகளிலே மிகச் சிறந்த மக்களுக்கு உண்மையிலேயே ஜனநாயகத்தை வழங்கக்கூடிய, மக்களுக்கு வளமையான வாழ்வை உருவாக்கிய அரசு முறையாகும். அத்தகைய நிறுவனங்களை உருவாக்குவதற்காக பாடுபடுபவர்களே உண்மையான கம்யூனிஸ்டு கள் ஆவார்கள். அதற்கு மாறாக நிலவுகின்ற பாராளுமன்ற ஆட்சி முறையில் சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை உருவாக்கும் வேலைகளை செய்பவர்கள் கம்யூனிஸ்டுகள் ஆகமாட்டார்கள். அவர்கள் மார்க்சியத்தை திருத்தும் அல்லது மார்க்சியத்தை எதிர்க்கும் திருத்தல்வாதிகளே, இந்தியாவில் பொதுவுடமை வாதிகள் இதுபோன்ற கம்யூன் அமைப்பை உருவாக்குவதற்கு முயற்சி செய்யவேஇல்லை.மாறாக தொழிற்சங்கங்கள் விவசாய சங்கங்கள் இளைஞர் அமைப்புகள் மாணவர் அமைப்புகளை உருவாக்கியுள்ளார்கள், தேர்தலில்பங்குகொண்டு சட்டமன்றம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை உருவாக்கியிருக்கிறார்கள். மார்க்சிய ஆசான்களது போதனைகளை பின்பற்றி கம்யூன்களை உருவாக்குவதற்கு இவர்கள் முயற்சி செய்யவே இல்லை. ஆகவே இனி வருங்காலத்தில் ஆவது கம்யூன் அல்லது சோவியத் அமைப்பை உருவாக்குவதற்கு கம்யூனிஸ்டுகள் பாடுபடவேண்டும்.
தேன்மொழி
No comments:
Post a Comment