மனித இனம் பற்றி தேடல்

 பூமியிலுள்ள உயிரினங்கள் தங்களுக்கென ஒரு நிரந்தர உருவத்தோடு பிறந்ததில்லை என்பதை உலகிற்கு அறியச்செய்தவர், இங்கிலாந்தைச் சேர்ந்த இயற்கையிலாளர் சார்லஸ் டார்வின்.

 பேரண்டத்தையும் மனிதர்கள் உட்பட உள்ள அனைத்து உயிரினங்களையும் படைக்க கடவுள் ஆறு நாட்களை எடுத்துக் கொண்டார் என்கிறது கிறித்தவ மதம். பைபிளில் உள்ள படைப்புக் கொள்கையை. அதன் அடிப்படையாக வைத்தே அமெரிக்காவில் சிலர் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பரிணாமக் கொள்கையோடு படைப்புக் கொள்கையையும் சொல்லித் தர வேண்டும் என்கின்றனர்.

இங்கே இந்தியாவில் உள்ள இந்துத்துவ வாதிகள் சிறுபான்மையினர் மீது தாக்குதல் தொடுத்தாலும் மத அடிப்படைவாதம் என்று வரும்போது அங்குள்ள பழமைவாதிகளைப் பின்பற்றவே முனைகின்றனர். ஏன் இந்த இரட்டை நிலை?

கோல்வால்கர் பழைய இந்தியாவை அல்ல, நவீன இந்தியா இப்படித்தான் இருக்க வேண்டும் என்று வரையறை செய்கிறார். அவரைப் பொறுத்தவரை நமது பண்பாடு மொழி இனம் ஆகியவை ஆரிய இன மேலாண்மை நவீன இந்தியாவின் அடையாளங்களாக இருக்க வேண்டும் என்கிறார். மத அடிப்படைவாதத்தை மட்டுமல்ல, பாசிசத்தையும் இந்துத்துவ வாதிகள் மேற்குலகிலிருந்தே பெறுகிறார்கள். அறிவியலுக்கும் மேலான தாக அவர்கள் மதத்தை வைக்கக் காரணம், கேள்வி கேட்கும் பகுத்தறிவு சிந்தனை களைக் கண்டு அவர்கள் அஞ்சுகின்றனர். வெறுப்பு, பயம் அடிப்படையில் அமைந்த இந்தியாவையே அவர்கள் கட்டமைக்க விரும்புகின்றனர். நம்பிக்கையின் அடிப்படையில் மதவாத குப்பைகளை தூக்கி நிறுத்தும் இவர்கள் அறிவியலின் எல்லாநன்மைகளையும் தாங்கள் பயன்படுத்திக் கொண்டே மக்களை ஆம் உழைக்கும் ஏழை எளிய மக்களை அறிவியலற்ற நம்பிக்கையின் அடிப்படையில் மத அடிப்படை வாதத்தை தூக்கி பிடிக்க சொல்வது வளர்ந்து வரும் அறிவியல் கண்டுபிடிபுகளை கொண்டு மனித குலம் சிறக்க இவர்கள் எண்ணுவதில்லை. மக்களை அடிமைகளாக தங்களின் பின் அணிதிரட்ட நினைக்கின்றனர். உண்மையில் அறிவியல் தொழிற்நுடப வளர்ச்சிதான் இன்றைய சமூகம் இவ்வளவு முன்னேற்றதிற்கும் காரணம் எந்த மதமும் இந்த சமூக முன்னேற்றதிற்கு காரணம் இல்லை என்பது திண்ணம்.

குரங்கிலிருந்து மனிதன் வந்ததை யாரும் பார்க்கவில்லை. அதனால் குரங்கிலிருந்து மனிதன் வந்தானென்பது அறிவியல் பூர்வவமாக தவறானது என்று மனிதவள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் சத்யநாத் சிங் சில ஆண்டுகளுக்கு முன்னர் கூறியிருந்தார். ஆக அறிவியலை மறுத்து தாக்குதல் தொடுக்கும் மதவாதிகள் மக்களை மூடர்களாக இருக்க சொல்கின்றனர்.

முதலில் குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்று எங்காவது குறிப்பிட்டிருக்கிறாரா டார்வின்- இல்லவேயில்லை. டார்வின் மனிதக் குரங்குகளும், மனிதர்களும் ஏற்கனவே வாழ்ந்து மறைந்த மனிதக் குரங்குகளிலிருந்து பரிணமித்திருக்கலாம். மிகவும் சரியாகச் சொன்னால் அவர் வார்த்தைகளிலேயே ““We may infer that some ancient member of the anthromorphous subgroup gave birth to man”” இந்த வாக்கியத்தில் எங்கேயாவது குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறதா?

உடற்செயலியல் ரீதியாக, கரு வளர்ச்சியின் போது, உருவ அமைப்பில், ஏன் மரபணுக்களின் செயல்பாட்டில் விலங்குகளுக் கான ஒற்றுமை அமைப்பை வெகுவாக விளக்கிவிட்டார்கள். குரங்கிலிருந்து மனிதன் வந்துவிட்டான். அந்தக் குரங்கு ஏன் இன்னொன்றாக பரிணமிக்கவில்லை என்பதும் சிறுபிள்ளைத்தனமான கேள்வியே! இயற்கைத் தேர்வு நடந்துகொண்டேதான் இருக்கிறது. ஒரு வாதத்திற்கே வைத்துக் கொண்டாலும்கூட டார்வின் குறிப்பிடும் ancient anthropomorphous ancient anthropomorphous group வாழ்ந்த காலம் சமார் 60 இலட்சம் வருடங்களுக்காவது முந்தையது. ஆதித்தாய் என்று கருதப்படும், மனிதனுமல்லாத, மனிதக் குரங்குமல்லாத நிமிர்ந்த நடை பழகிய அர்திபித்திகஸ் ரேமிடஸ் வாழ்ந்த காலம் குறைந்தது 43 இலட்சம் வருடங்கள்.

இந்த மதவாதிகள் அத்தனை வருடங்கள் வாழ்ந்து விடுவார்களா என்ன அதையெல்லாம் பார்ப்பதற்கு? மனித ஆயுளை வைத்து பரிணாமத்தையெல்லாம் கணித்துவிட முடியாது. இக்கால அறிவியல் சூழல் போலவே ‘தகுதியுள்ளவை தங்கி நிற்கும்’ ((Survival of the fittest)) என்பதும் டார்வினால் வரையறுக்கப்பட்டதல்ல. டார்வின் சமகாலத்தவரான ஆப்ஃபிரட் ரஸ்ஸல் வாலங் மலாய் தீவுக் கூட்டங்களில் ஆய்வு நடத்தி இந்தக் கோட்பாட்டினை உருவாக்கினார். ‘இயற்கைத் தேர்வு’ தம் சூழலுடன் மிகச் சிறப்பாக, ஒத்திசைந்து போகும் உயிர்களே பிழைத்திருக்கும். அவை அடுத்து வரும் தலைமுறைகளுக்கு மரபணு சார்ந்த பண்பியல்புகளை அதிக அளவில் வழங்கும். சரிவர ஒத்திசைந்து போகாதவை வெளியேற்றப்படும் என்பதே இந்த ஆய்வு. இந்த ஆய்வை டார்வின் ஏற்றுக் கொண்டார். அதேபோல இயற்கைத் தேர்விற்கு பாரபட்சம் கிடையாது.

அதுமட்டுமல்ல, அனுகூலமான பண்பு களைக் கொண்ட விலங்குகள் வெற்றிகர மாக வாழ்ந்துவிடும் என்பதும் தவறு.

விஞ்ஞானிகளிடமிருந்து கிளம்பிய எதிர்ப்பு:

அண்மையில் 'தி கார்டியன்' பத்திரிகையில் ஜூல்ஸ் ஹோவர்டு எனும் விலங்கியல் நிபுணர், "டார்வினின் கோட்பாடுகள் நாம் இயற்கையில் காணும் பல்வேறு விஷயங்களை விளக்குவதாகவே உள்ளது. ஆனால், இதைவிட துல்லியமாக இப்பூமியில் வாழும் உயிரினங்களின் பன்முகத்தன்மையை விளக்கும் ஓர் ஆய்வறிக்கை வெளிவந்தால் டார்வின் கோட்பாடு அறிவியலில் இருந்து வெளியேற்றப்படும்" எனக் கூறியுள்ளார்.

ஆக இயக்கவியல் என்பதனை நாம் புரிந்துக் கொண்டால் அறிவியல் வளர்ச்சியானது புதிய புதிய கண்டுபிடிப்புகள் போல் பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை வளர்தெடுக்கும் முயற்சி வரவேற்க தக்கவையே.

 

இரண்டு நாட்களுக்கு முன்னர் முகநூல் விவாதத்தில் ஆரிய இனம் திராவிட இனம் பற்றி பேசியிருந்தனர் அங்கே கேட்ட கேள்விகள் எவ்வளவு குறுகிய அறிவுடையவை என்பதனை புரிந்துக் கொள்ள நான் தேடிய பொழுது கிடைத்த சில சான்றுகள்.

மனித குல வளர்சியை புரிந்துக் கொள்ள ஒரு குழந்தையின் தேடுதலும் ஆழ்ந்த விருப்பமும் இருந்தால் மட்டுமே இவை சாத்தியம் என்று நினைக்கிறேன் தோழர்களே...

 பூமியில் வாழும் பாலூட்டிகளில் மிகவும் முன்னேற்றம் அடைந்து அறிவு வளர்ச்சியடைந்தத விலங்கு மனிதன். பிற விலங்குகளிடமிருந்து மாறுபட்டு எழுந்து நிற்கவும், நடக்கவும் மனிதனால் முடியும். சிந்திக்கும் திறன் மனிதனில் சிறந்து விளங்குபவையாகும். மனித இனத்தின் பரிணாம வளர்ச்சி குறித்து பலர் கருத்துக் கணிப்புகளை கூறியுள்ளனர். குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்பர். ஆனால் அது முற்றிலும் சரியானதன்று. ஏனெனில் மனிதனைப் போன்றே காணப்படும் உராங் உட்டான், சிம்பன்சி, கொரில்லா ஆகிய இனக் குரங்குகளின் ஒட்டு மொத்தச் சேர்க்கைக் கூறுகளாகவே மனிதன் விளங்குகின்றான். உராங்க்- உட்டாங்கின் மூளை, சிம்பன்ஸியின் மண்டையோடு, கொரில்லாவின் கைகள் ஆகியவை மனித இனத்தைப் போன்றது. எனவே மனித இனத்தோடு தொடர்புடைய இந்த மூன்று குரங்கினங்களைக் காட்டிலும் மேம்பட்ட உறுப்பமைப்புகளை (கைகள்- சிந்தனை, குரல்வளம் போன்றவை) பெற்றிருப்பவன் மனிதன். எனவே, மனிதனும் குரங்கும் ஒரே மாதிரி வடிவமைப்புடைய விலங்கிலிருந்து - பொதுவான ஒரு மூதாதையிலிருந்து பரிணமித்திருக்கலாம் என்று கொள்வதே பொருத்தமாகும். எனவே மனிதனின் மூதாதையர்கள் குரங்குகள் அல்ல. ஆனால் குரங்குகளைப் போன்ற விலங்குகளே என உறுதிபடக் கூறலாம்.

மனித இனம் எப்போது தோன்றியது என்பது குறித்து பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. வாலிலா மனிதக் குரங்குகள் நான்கு கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றின என்றும் பத்து லட்சம் ஆண்டுகளுக்கு முன் பெரிய மூளையையும், கூர்மையான கண்களையும், திறமையான கைகளையும் கொண்ட ஆதி மனிதன் தோன்றினான் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.

பதினான்கு மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதனின் தாடை எலும்புகள் இந்தியாவில் சிவாலிக் குன்றுகளிலும் வடமேற்கு கென்யா நாட்டிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

சுமார் 4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனித இனச் சான்றுகள் ஜாவா தீவிலுள்ள சோலோ நதிக் கரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ருடால்ஃப் மனிதன் ( Rudolph man) சுமார் மூன்று மில்லியன் ஆண்டுகட்கு முன் வாழ்ந்ததாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கற்களால் ஆன ஆயுதங்களைப் பயன்படுத்திய மனித இனச் சான்றுகள் தென் ஆப்பிரிக்காவின் ட்ரான்ஸ்வால் பகுதியில் கிடைத்துள்லன.

நன்கு நிமிர்ந்து நடந்த ஹோமோ எரெக்டஸ் ( Homoerectus) என்னும் மனித இனச் சான்றுகள் ஜாவா தீவில் கிடைத்துள்லன.

ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, பெல்ஜியம் ஆகிய நாடுகளில் நியான்டர்தால் மனிதனின் எஞ்சிய அழிவுச் சின்னங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இம்மனித இனம் குகைகளில் வாழ்ந்ததாகவும், தோல் ஆடைகளை உடுத்தியதாகவும், தீயால் சமைக்கத் தெரிந்ததாகவும் அறிந்து கொள்ள முடிகிறது.

நியான்டர்தால் மனித இனம் அழிந்த பின் தோன்றிய இனம் தான் இன்றைய மனிதனின் மூதாதை எனக் கருதப்படும் குரோமன்யான் மனிதன் ஆவான்.

கற்கருவிகளைப் பயன்படுத்திய குரோமன்யான் மனிதன் வேட்டையாடிய பழைய கற்கால மனிதன் ஆவான்.

குரோமன்யான் மனிதனுக்குப் பின் தோன்றியவனே புதிய கற்கால மனிதன் (நியோ லித்திக் ). இவனே மனித நாகரிக இனத்தின் தொடக்கமாகக் கருதப்படுபவன்.

செக்கோஸ்லேவாகியா நாட்டின் லார்ச் நகருக்கு அருகில் உள்ள ஒரு குகையில் 35,000 ஆண்டுகட்குமுன் வாழ்ந்த இன்றைய மனிதத் தோற்றத்தை ஒத்த மனித எலும்புக் கூடொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே, இன்றைக்கு சுமார் 40,000 ஆண்டுகளுக்கு முன் முழுமையான நாகரிகமடைந்த மனிதன் தோன்றி வாழ்ந்தான் என்று புதைபொருள் வரலாற்றறிஞர்கள் உறுதிபடக் கூறுகின்றனர்.

மனித இனப் பாகுபாடு

மங்கோலிய இனம்

காக்கேசிய இனம்

நீக்ரோ இனம்

                                    ++++++++++++++++++++++++++++++++

மனித இனப் பாகுபாடு

புது எகிப்து இராச்சியத்தின் (கிமு 1550 – கிமு 1077) பதினெட்டாம் வம்சத்தின் பார்வோன்முதலாம் சேத்தி கல்லறையில் வரையப்பட்ட உலகின் நான்கு இன மக்களின் சித்திரங்கள்: லிபியர்கள், நூபியர்கள், லெவண்டியர்கள் மற்றும் எகிப்தியர்கள்

மனிதனின் உடல் தோல், தலைமயிர் அமைப்பு, கண்களின் நிறம், மண்டையோட்டு அமைப்பு, இரத்தத் தொகுதி ஆகியவற்றின் அடிப்படையில் மனித இனம் மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை

 

மங்கோலிய இனம் (Mongoloids)

காக்கேசியஸ் இனம் (Caucas)

அமெரிக்க நீக்ரோ (American Negro)

மங்கோலிய இனம்:-மஞ்சள் நிறமுடையவர்கள் இந்த இனத்தைச் செர்ந்தவர்கள். சீனர்கள், ஜப்பானியர்கள், அமெரிக்க இந்தியர்கள், மங்கோலியர் மற்றும் எஸ்கிமோக்கள் இவ்வகையைச் சேர்ந்தவர்கள்.

 

காக்கேசிய இனம்:-வெள்ளை நிறமுடையவர்கள் இந்த இனத்தைச் சேர்ந்தவர்கள். ஐரோப்பியர், அரேபியர், இந்தோ-திராவிட இனத்தவர் எல்லோரும் இவ்வகையில் அடங்குவர்.

 

நீக்ரோ இனம்:-கறுப்பு நிறமுடையவர்கள் இவ்வினத்தில் அடங்குவர். ஆப்பிரிக்காவிலும்,பசிபிக்தீவுப் பகுதிகளிலும் வாழும் மக்கள் இந்த இனத்தைச் சேர்ந்தவர்கள்.

 

மேற்கண்டவாறு மனித இனப்பாகுபாடு இருப்பினும், தற்காலத்தில் இனக்கலப்பு ஏற்பட்டுள்ளது. இனத்துக்கு இனம் கண், வாய், மூக்கு ஆகியவற்றின் அமைப்பு மாறுபட்டு உள்ளது. தலை அமைப்பும் மயிரிழை அமைப்பும் கூட வேறுபட்டுள்ளன.

ஆசியக் குள்ளர்கள் (Asianic Pygmy), பசிபிக் குள்ளர்கள் (Oceanic Pygmy). ஆசியக் குள்ளர்கள் எனப்படுவோர் அந்தமான தீவுகளில் வாழும் பழங்குடியினர் ஆவர். இவர்களில் ஒங்கி போன்ற பழங்குடியினர். மிகக் குறைந்த உயரமுடையவர்கள். பசிபிக் குள்ளர்கள் நியூகினி, அதையொட்டிய தீவுப் பகுதிகளில் பெரிதும் காணப்படுபவர்கள். பப்புவர்கள் நியூகினியிலும் மெலனீஷியாவின் பல தீவுகளிலும் வாழ்பவர்கள்.

 

அமெரிக்க நீக்ரோ (American Negro)

 

இவ்வகையினர் பலரின் கவனத்தை ஈர்ப்பவர்கள். மேற்கு ஆப்பிரிக்க நாடாகிய நைஜீரியாவிலிருந்து பெருமளவு நீக்ரோக்கள் அடிமைகளாக அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டனர். ஆப்பிரிக்காவிலிருந்து அடிமைகளாகக் கொண்டு செல்லப்பட்ட நீக்ரோவினர் 19ஆம் நூற்றாண்டில் அடிமைமுறை ஒழிக்கப்பட்ட பின்னர் அங்கேயே வாழத் தலைப் பட்டதால் அமெரிக்க இனச் சேர்மத்தில் இவர்கள் தனி தனித்தவராகவே உள்ளனர். அமெரிக்க நீக்ரோ என இவர்கள் தனிமைப்பட்டாலும் இவர்கள் அங்குள்ள காக்கேசிய இனத்தாருடன் சில நூற்றாண்டுகள் கலப்புற்றதால் இன்று அங்கு வடஅமெரிக்க காக்கேசியர் என்ற பிரிவினராகவும் தனி இன அடையாளம் பெற்று வாழ்கின்றனர்.

தொடரும்.....

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்