நேற்று ஆசியபாணி உற்பத்தி முறையைப் பற்றி பார்த்தோம் இன்று அதற்கான விரிவானபதிலை பார்ப்போம்.
1).ஆசிய உற்பத்தி முறை பற்றிய மார்க்சிய கோட்பாடுகள் மாற்றத்துக்கு உள்ளானது போலவே இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி பற்றி அவர் கொண்டிருந்த முந்தைய கருத்துகளும் மாற்றத்துக்கு உள்ளாகின அந்நிய மூலதனத்தின் ஆட்சியானது தொழில் மயமாக்களுக்கு எதிரான (De- Industrialization) ஒரு போக்கை தொடங்கி வைத்துள்ளது இந்திய பொருளாதாரத்தை ஏகாதிபத்திய பொருளாதாரத்தின் பின்னணிப்பாக மாற்றி அதனை மேலும் பிற்பட்ட நிலைக்கு தள்ளுகிறது என்று அம்சத்தை தொடர்ந்து தான் மேற்கொண்ட ஆய்வுகள் மூலம் மார்க்ஸ் புரிந்துக் கொண்டார்.
2). மற்ற நாடுகளில் கைத்தொழில் உற்பத்தியை அழித்ததன் மூலம் இயந்திரம் ஆனது அந்நாடுகளை தனக்கு வேண்டிய மூலப் பொருட்கள் வழங்கும் களங்களாக வலுக்கட்டாயமாக மாற்றுகிறது இவ் விதமாக பிரிட்டனுக்கு வேண்டிய பருத்தி கம்பளிநூல், சணல் நார், சணல், நீலச்சாயம் ஆகியவற்றை உற்பத்தி செய்யுமாறு இந்தியா கட்டாயப்படுத்தப்பட்டது. நவீன தொழில் வள நாடுகளின் தேவைகளுக்கு பொருத்தமான ஒரு புதிய அனைத்து உலக உழைப்பு பிரிவினை தோன்றி உலகின் ஒரு பகுதியை முதன்மையானது ஒரு தொழில் மயமாக்களையும் மற்றொரு பகுதி மூலப்பொருட்களை வழங்குகின்ற முதன்மையான வேளாண்மை உற்பத்திக் களமாகும் மாற்று கருத்து என்று மார்க்ஸ் சொன்னார்.
3). தொடக்கத்தில் ரயில் பாதைகளைப் பற்றி எழுதுகையில் அவை இந்தியாவில் தொழில் புரட்சிக்கான கிரியா ஊக்கியாக செயல்படும் என்று மார்க்ஸ் குறிப்பிட்டு இருந்தார் அவரே பின்னர் 1880 பொதுவாக சொன்னால் ரயில் பாதைகள் வெளிநாட்டு வாணிபத்தின் வளர்ச்சிக்கு பெரும் தூண்டுதலை தந்தன என்பது உண்மைதான்.ஆனால் மூலப் பொருள்களை முக்கியமாக ஏற்றுமதி செய்து வந்த நாடுகளில் வாணிபமானது மக்கள் திரளினரின் துன்பத்தை அதிகரித்தது. உண்மையான உற்பத்தியாளர்களுக்கு ரயில் பாதைகள் துயரத்தையே தந்தன என்று மார்க்ஸ் சொன்னார்.
4). ரயில் பாதைகள் பிரிட்டன் இந்திய பொருளாதாரங்களுக்கு இடையிலே நிலை வந்த காலனி உறவை வலுப்படுத்தின மேலும் ஏற்றுமதி செய்யப்படுவதற்கு பெரிய அளவிலும் சிறிய அளவிலும் அது கொண்டிருக்கும் பொருத்தப் பாட்டுற் கேற்ப மாற்றி அமைக்கப்படுருக்கிறது என்று மார்க்ஸ் எழுதியுள்ளார்.
5). முதலாளிய உலக வாணிபம் என்ற வட்டத்திற்கு இழுத்து செல்லப்பட்டதன் மூலம் தொழில்துறை நாடான பிரிட்டனின் தேவைக்கு பொருத்தமாக இந்தியாவின் உற்பத்தி சக்திகள் பெரும் பகுதி அழிக்கப்பட்டன அல்லது மறுவடிவம் தரப்பட்டன . இதை ஒட்டி பிரிட்டனை அண்டி வாழக்கூடியதாகவே இந்திய நாட்டின் பொருளாதாரம் மாறியது.
6). இந்தியாவிலிருந்து மிகப் பெரும் அளவில் செல்வங்கள் பிரிட்டனுக்கு கொள்ளையடித்து செல்லப்பட்டன. இந்த போக்கு இந்தியாவில் முதலாளித்துவம் வளர்ச்சி அடைவதற்கு பெரும் தடையாக இருந்ததாக மார்க்ஸ் கூறுகிறார்.
7). 1881 ல் அவர் பின்வருமாறு எழுதினார் எடுத்துக்காட்டாக இந்தியாவை பார்ப்போம் நிலம் பொது உடமையாக இருந்த முறை மறைந்தொழிந்ததற்கு ஆங்கிலேயரின் அழிவுச் செயலே காரணம் என்பதையும் அறியலாம்.
8). காலனி ஆட்சியானது ஒரு முதலாளித்துவ சமூகத்திற்கான பொருளாதார அடிப்படைகளில் இடுவதற்கு மாறாக ஏற்கனவே இருந்து வந்த உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியை தடுத்து நாட்டை பின்னுக்கு தள்ளி அதன் குறை வளர்ச்சிக்கான அடிப்படைகளை உருவாக்கியது என்று மார்க்ஸ் முடிவுக்கு வந்தார்.
9). புதிய உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கு மாறாக வேளாண்மையை முதன்மை கொண்ட களமாக இந்தியாவை உலக சந்தையில் பிணைத்தது. ரயில் பாதைகள் நவீன தொழில் முன்னோடியாக செயல்படுவதற்கு மாறாக இந்தியாவை பிரிட்டனின் தொழில்நுட்பத்தின் பொருள்களுக்கான சந்தையாகவும் பிரிட்டனுக்கு வேளாண்மை பொருள்களை வழங்கும் களமாக மாற்றுவதற்கு ஊடகமாயின. (பக்கம் 29) இதனை தொடர்ந்து விவாதிப்போம் மேலும் சில...
ஆசியாவில், ஆப்கன் போன்ற நாடுகளில், ’கிராம சமூகம்’ இருந்தது. ஆனால் அவை எல்லா இடங்களிலும் மிக இளைய வடிவமாகும். ஏனெனில் அவையே தொன்மையான சமூக அமைப்புகளில் கடைசி வடிவமாகும். புராதன சமூக அமைப்புகளின் கடைசி கட்டத்தில், விவசாய சமூகமே இரண்டாம் தர சமூகமாக மாறும் கட்டத்தில் இருந்தது. அதாவது பொது சொத்து அடிப்படையிலான சமூகத்திலிருந்து தனி சொத்து அடிப்படையிலான சமூகமாக மாறும் நிலையிலிருந்தது. இந்த இரண்டாம் தர அமைப்பு அதன் தொடர்ச்சியான அடிமைகள் மற்றும் பண்ணை அடிமைகள் அடிப்படையிலான சமூகங்களையும் உள்ளடக்கி இருந்தது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். (P.144-145). “என்கிறார் மார்க்ஸ்.
‘இதன் ஒரு பகுதி உபரி உழைப்பு’, இறுதியில் தனிமனிதனாக உருவான உயர் சமூகத்திற்கு சொந்தமாக இருந்தது. இந்த உபரி உழைப்பு, நன்றி கடனாகவும், ஒற்றுமையின் புகழுக்காகவும், எதேச்சாதிகாரத்திற்கான ஒரு பகுதியாகவும், கடவுளாக காட்டப்பட்ட பூர்வீக குடிகளின் கற்பனையான நிறுவனத்திற்கான ஒரு பகுதியாகவும் , பொது உழைப்பு வடிவில் தரப்பட்டது.’ .என்கிறார் மார்க்ஸ்.(p.70)
கிழக்கத்திய அடிமை முறையையும் , ஐரோப்பிய அடிமை முறையையும் மார்க்ஸ் ஒப்பீடு செய்திருப்பது சிறப்பானதும் முக்கியமானதும் ஆகும்.
No comments:
Post a Comment