முதன்மையான நோக்கம் மார்க்சிய விரோத போக்கை அம்பலப்படுத்துவதே!-சமரன் குழப்பமும் மார்க்சியத்தை குழப்புதலும்

 மார்க்சியத்தை மறுத்து விட்டு என்ன மார்க்சியம் பேசவது என்ன வகையான மார்க்சியம்? மார்க்சியம் பற்றி கவலையில்லை இவருக்கு இவர் பெயர் மட்டும்தான் கவலை இவருக்கு இவை ஏற்புடையவையும் இல்லை... இவர் போன்ற மார்க்சிய விரோதிகளை அம்பலப்படுத்த வேண்டும்... தொடர்புடையவர்கள் விவாதிக்க அழைக்கிறேன் தோழர்களே..

சமரன் வெளியீட்டாகம் 11.06.2024 அன்றைய இந்திய சமூக பொருளாதார படிவம் ஆசிய பாணி முதலாளித்துவமா? நவீன நிலப்பிரப்புத்துவமா ?

என்ற நூலின் முகப்பில் 

"மார்க்சின்  ஆசிய உற்பத்தி முறை கோட்பாடு : கீழைத்தேய பொருள் முதல்வாதம் இயக்க மறுப்பில் வாதம், மேற்கத்திய மையவாத ஆதரவு  நிலைபாடே ஆகும். அது காலணிய விடுதலை ஜனநாயக புரட்சி பற்றிய பிரச்சினையில் எதிர்மறை ஆகும். எனவே புதிய வரலாறு படைப்பதில் மேதமை நிரம்பி வழியும் மார்க்சிய பால்குடத்தில் ஒரு துளி விஷமே ஆசிய உற்பத்தி முறை. மார்க்சிடம் இருந்த இந்த மார்க்சிய விரோத போக்கை ஒழித்து மார்க்சியத்தை மீண்டும் மீட்போம்! வரலாற்று வளர்ச்சியின் ஒருமைத்துவத்தை காப்போம். பன்மை துவம் பேசி மண்ணுக்கேற்ற மார்க்சிய அடையாள அரசியலை முன்னிறுத்தும் கலைப்பு வாதத்தை ஒழித்து மானுடத்தை மீட்போம்.

இப்படிக்கு சமரன் வெளியீட்டகம்- தொடர்புக்கு மா. மனோகரன்.

பகுதி 1

அறிமுகம் பக்கம் 6...மார்க்சியத்தின் அடிப்படை நிலைப்பாடுகளை தகர்த்து மாலெ  இயக்கத்தை முதலாளித்துவ கட்சியாக மாற்றி அமைப்பதற்கான கலைப்பு வாத போக்குகள் பெருமளவில் தலை தூக்கியுள்ளன. அத்தைகைய போக்குகள் லெனின் ஏகாதிபத்திய  சகாப்தத்தின் புரட்சி திட்டத்திற்கு (மூன்றாம் அகிலத்தின் காலணி ஆய்வுரை) மாறாக மார்க்சின் ஆசிய உற்பத்தி முறை கோட்பாட்டை முன்னிறுத்தி மார்க்சிய லெனின்யத்தையும்  பாட்டாளி வர்க்க  கட்சியின்  புரட்சி திட்டத்தையும் ஒழித்து விட கடுமையாக போராடுகின்றன. இத்தகைய சூழலில் மார்க்சின் ஆசிய பாணி உற்பத்தி முறை குறித்த சரியான மார்க்சிய நிலைப்பாட்டை நிறுவுவது முக்கிய கடமையாகும். இங்கே எனது கமெண்ட் 1917 இல் ரஷ்ய புரட்சி பின்தங்கிய ஆசிய பகுதியிலும் புரட்சி நடந்தது அதே போல இரண்டாம் உலகப்போருக்கு பின் சீனாவில் புரட்சி நடந்து முடிந்தது. அன்று நிலவிய சமூகப் பொருளாதார நிலைமைகளை அன்றைய மார்க்சியவாதிகள் புரிந்து கொண்டு தங்களுக்கான பணியை செவ்வனே செய்ததால் புரட்சி நடந்தது. இன்றோ ஒரு புரட்சிகர கட்சி இல்லாமலே பல்வேறு விதமான போக்குகளில் சீரழிந்து கொண்டுள்ளோம்.  முதலில் கட்சி அதற்கான திட்டம் அது சம்பந்தமாக பேசலாமே? 

பக்கம் 9

எம் எல் பி டி கலைப்பு வாதத்தின் வாரிசுகளாக ஏ எம் கே வின் சீடர்கள் 

இந்தத் தலைப்பின் கீழ் மூன்று பக்கத்திற்கு மேல் தன்னுடன் பயணித்த முன்னால் அமைப்புத் தோழர்கள் மீதான விமர்சனத்தை முன் வைக்கிறார். இவற்றை நான் குறுங்குழுவாத போர் என்று ஒதுக்கி தள்ள நினைக்கின்றேன்.

அதனை எடுத்து பக்கம் 12 இல் எஸ் ஓ சி யின் ஆசியபாணி முதலாளித்துவத்தைப் பற்றிய விமர்சனம் . இவர்களைப் பற்றி தொடர்ந்து விமர்சித்த இவர் பக்கம் 15 இல் முதலாளித்துவம் பற்றிய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் மேற்கோளை முன் வைக்கிறார்.

அனைத்து உற்பத்திக் கருவிகளின் அதிவேக மேம்பாட்டின் மூலமும், தகவல் தொடர்பு சாதனங்களின் பிரம்மாண்ட முன்னேற்றத்தின் மூலமும் முதலாளித்துவ வர்க்கம் அனைத்துத் தேசங்களையும், மிகவும் அநாகரிகக் கட்டத்தில் இருக்கும் தேசங்களையும்கூட, நாகரிக வட்டத்துக்குள் இழுக்கிறது. முதலாளித்துவ வர்க்கம் தன்னுடைய பண்டங்களின் மலிவான விலைகள் என்னும் வலிமை மிக்க பீரங்கிகளைக் கொண்டு, சீன மதிலையொத்த தடைச்சுவர்களை எல்லாம் தகர்த்தெறிகின்றது; அதன்மூலம், அநாகரிக மக்களுக்கு அந்நியர்பால் உள்ள முரட்டுப் பிடிவாதமான வெறுப்பைக் கைவிட்டுப் பணிந்துபோகக் கட்டாயப்படுத்துகிறது. முதலாளித்துவ உற்பத்தி முறையை ஏற்காவிடில் அழிய நேருமென்ற அச்சத்தின் காரணமாக அனைத்துத் தேசங்களும் அம்முறையைத் தழுவிட நிர்ப்பந்திக்கிறது. அனைத்து தேசங்களையும் நாகரிகம் என்று தான் கருதுவதை ஏற்கும்படி, அதாவது, அவை தாமாகவே முதலாளித்துவமாக மாறக் கட்டாயப்படுத்துகிறது. சுருங்கக் கூறின், தன்னுடைய பிரதிபிம்பமான ஓர் உலகைப் படைக்கிறது.

அடுத்த பக்கத்திலேயே ...மார்க்ஸ் பல முரண்பட்ட கருத்துக்களை பதிவு செய்திருந்தாலும் மார்க்ஸ் இறுதி வரை ஆசிய உற்பத்தி முறை கோட்பாட்டை மாற்றிக் கொள்ளவே இல்லை என்று கூறும்  மனோகரன் லெனியத்துக்கு எதிராக மார்க்சை நிறுத்துகின்றனர் என்று குற்றச்சாட்டுகிறார்.

தொடர்ந்து இவரே எழுதுகிறார் ஆனால் மார்க்சின் ஆசிய பாணி உற்பத்தி முறையை லெனின் ஸ்டாலின் மாவோ போன்றவர்கள் ஏற்கவில்லை.அந்தக் கோட்பாட்டை முறியடித்து தான் ஒடுக்கப்பட்ட நாடுகளில் புரட்சி தொடங்கினர் எனவே அதற்கு பொருள் முதல்வாதத்தின் பொருத்தம் இல்லை. அது நிரூபிக்கப்பட்ட கோட்பாடும் இல்லை.

இவருக்கு எமது ஆசான் மார்க்சின் மேற்கோள்கள் கீழே:- 

  • கம்யூனிஸ்டுகளுடைய உடனடி நோக்கம், மற்றெல்லாப் பாட்டாளி வர்க்கக் கட்சிகளின் உடனடி நோக்கம் எதுவோ அதுவேதான். பாட்டாளிகளை ஒரு வர்க்கமாகக் கட்டியமைத்தல், முதலாளித்துவ மேலாதிக்கத்தை வீழ்த்துதல், பாட்டாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தை வென்றெடுத்தல் ஆகியவைதாம்.(க.க அறிக்கை இரண்டாம் அத்தியாயம்).
  • பொருள் உற்பத்தியில் எந்த அளவுக்கு மாற்றம் ஏற்படுகிறதோ அந்த அளவுக்கு அறிவுத்துறை உற்பத்தியின் தன்மையிலும் மாற்றம் ஏற்படுகிறது என்பதைத் தவிர கருத்துகளின் வரலாறு வேறு எதை நிரூபிக்கிறது? ஒவ்வொரு சகாப்தத்திலும் ஆதிக்கம் செலுத்திய கருத்துகள், அந்தந்தச் சகாப்தத்தின் ஆளும் வர்க்கத்துரிய கருத்துக்களாகவே எப்போதும் இருந்துள்ளன..(க.க அறிக்கை இரண்டாம் அத்தியாயம்).

சில வாரங்களுக்கு முன்னர் நானும் தொழர் ரவிந்திரனும் முன்னால் நட்பின் அடிப்படையில் பாட்டாளி வர்க்க சமரன் அணியின் மனோகரன் அவர்களை பெங்களூருவில் சந்தித்தோம் அப்பொழுது இருவேறு நூல்களை கொடுத்தார்

1). நவதாராளமய நவீன -ஆதித்திரட்டல்:முதலாளித்துவ பேரழிவின் உச்சக்கட்டம்

இரு பிரதி இருவரும் எடுத்துக் கொண்டோம் செல்லும் பொழுது  இரண்டாவது நூல்

2). இந்திய சமூக பொருளாதாரப் படிவம் ஆசியபாணி முதலாளீத்துவமா? நவீன - நிலப்பிரத்துவமா? என்ற நூல் இவை ஒரே பிரதி உள்ளதாக கூறியதால் நான் எடுத்துக் கொண்டேன் ரவீந்திரன் தோழருக்கு கொடுக்கவில்லை.

இவை கிடைத்த நீண்ட நாட்கள் ஆகியும் பதிலளிக்காமையால் தோழர் மனோகரன் போனில் தொடர்புகொள்ள முயன்றார் ஆனால் நான் வாசிக்காமையால் பதிலளிக்கவில்லை இதனிடையே ரவீந்திரன் தோழரிடம் அவர் தொடர்புகொண்டு விவாதிக்க முனைந்ததால் அதன் பெயரில்  வாசித்து விளக்கியதோடு சில பக்கங்களை படமாக அனுப்பியிருந்தேன் அதன் அடிப்படையில் அவர் எழுதியிருந்தார் அதானல் எனது பணி முடிந்து விட்டதாக ஒதுங்கி விட்டேன் ஆனால் இன்று காலையில் தோழர் என்னிடம் தொடர்பு கொண்டு ர்வீந்திரன் தோழரின் எழுத்து குழப்பத்தை விளைவிப்பதாக கூறினார், நானும் சரி தோழர் அவருக்கு தெரிவித்து விடுகிறேன் என்று கூறிவிட்டேன் இப்பொழுது முகநூலில் என்னிடம் கேள்வி வைத்துள்ளமையாளே இந்த பகுதி எழுத்து.

சரி முகநூலில் என்ன எழுதியுள்ளனர்பார்ப்போம்:-

ஆசிய பாணி உற்பத்தி முறை பற்றி ஒரு நூல் சில வாரங்களுக்கு முன் என் கைக்கு கிடைத்தது.
அதனைப் பற்றி வாசித்து விவாதிக்க நேரம் இன்மையால் நான் முழுமையாக உள்வாங்கி விவாதிக்க முடியவில்லை ...
தொடர்ந்து தேவையை ஒட்டி அந்த நூலின் சில பக்கங்களை இங்கே பதிவேற்றம் செய்கிறேன்.
மார்க்சியத்தைக் காப்பதற்காக இந்த நூலை எழுதிய ஆசிரியர்...
மார்க்சிய ஆசானுக்கு மார்க்சியம் கற்றுதர புறப்பட்டுள்ளது வருத்தமாக உள்ளன.
மார்க்சிடமிருந்து இந்த மார்க்சிய விரோத போக்கு ஒழித்து மார்க்சியத்தை மீண்டும் மீட்பாரம்!
ஒரு ஆங்கிலப்பதம் "Don't teach your father how to ...." என்பர் அது போல் உள்ளது . இவர் மார்க்சிய ஆசானுக்கே மார்க்சியம் கற்றுத்தரப் போகிறாராம்...

முடியல சாமீயோய்?!! (18/08/2024 அன்று நான் முகநூலில் எழுதியது)

அதற்கு ரவீந்திரன் தோழரின் பதில் சமரன் கட்டுரை ஆசிரியர் ரெட்ஸ்டார் போன்ற மா.லெ. அமைப்புகளை விமர்சிக்கிறார். அதே வேளையில் காரல் மார்க்சையும் விமர்சிக்கிறார். இவ்வாறு இவர் விமர்சிப்பதன் நோக்கம் என்ன? நாம் சிந்திக்க வேண்டும். காரல் மார்க்சை விமர்சிப்பதுதான் இவரது முதன்மையான நோக்கமாகத் தெரிகிறது. மார்க்சும் குறை உள்ளவர்தான் என்று சொல்லி மார்க்சியத்தின் மீது உழைக்கும் மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையைத் தகர்ப்பதுதான் இவரது நோக்கமாக இருக்கிறது. இத்தகைய நோக்கம் கொண்ட பல அறிவாளிகள் மார்க்சைப் பற்றி குறை சொல்லித் திரிகிறார்கள். அந்த வரிசையைச் சேர்ந்தவர்தான் இந்தக் கட்டுரை ஆசிரியர் ஆவார் என்றே நான் கருதுகிறேன். மார்க்ஸ் பல பிரச்சனைகளைப் பற்றி அலசி ஆராய்ந்துள்ளார். அது பற்றி அவர் விரிவாகவும் எழுதியுள்ளார். எனினும் அவர் இறுதியாக என்ன முடிவை முன்வைத்தார் என்பதுதான் முக்கியமானதாகும். மார்க்சியவாதிகள் மார்க்சால் முன்வைக்கப்பட்ட முடிவுகளைத்தான் முதன்மையாக எடுத்துக் கொள்வார்கள். ஆனால் மார்சியத்தை எதிர்ப்பவர்களும், மார்க்சியவாதிகள் போல் வேடமிட்டு எதிர்ப்பவர்களும் மார்க்ஸ் பேசியவற்றில் அங்கொன்றும் இங்கொன்றையும் எடுத்துக்கொண்டு மார்க்சை பிரச்சனைகளை புரிந்துகொள்ளாத முட்டாளைப் போல சித்தரிப்பார்கள். அதன் மூலம் மார்க்சிடமே குறை காணும் மிகப் பெரிய மேதாவிகள் போல் தங்களைக் காட்டிக்கொள்ள முயற்சிக்கிறார்கள். ஆனால் மார்க்சைப் பின்பற்றிய லெனினும் மாவோவும் இந்த வகையான மெத்தப்படித்த மேதாவிகளைப் போல மார்க்சை குறை சொல்லவில்லை. மாறாக மார்க்சால் முன்வைக்கப்பட்ட மதிப்புமிக்க கோட்பாடுகளையும் நடைமுறைக்கான வழிகாட்டுதல்களையும் எடுத்துக்கொண்டு அவர்கள் வாழ்ந்த சமூகத்தை மாற்றுவதற்கான வழிமுறைகளை கண்டுபிடித்து மக்களுக்கு எடுத்துச் சொல்லி புரியவைத்து மக்களை ஒன்றுதிரட்டி மக்களை புரட்சியில் ஈடுபடுத்தி வெற்றி கண்டார்கள். ஆனால் மார்க்சை குறை சொல்லும் இதுபோன்ற அரைவேக்காடுகள் மார்க்சாலும் லெனினாலும் சொல்லப்பட்ட எதையும் புரட்சி நோக்கத்திலிருந்து பின்பற்றவில்லை. உழைக்கும் மக்களை ஒன்றுபடுத்த வேண்டும் என்ற மார்க்சிய கோட்பாட்டை இவர்கள் பின்பற்றவே இல்லை. மாறாக இவர்கள் கம்யூனிஸ்டுகளுக்கு இடையிலேயே குறை சொல்லி, பிளவுபடுத்தினார்கள் என்பதுதான் உண்மையாகும். நடைமுறையில் மார்க்சியத்தைப் பின்பற்றி ஆசான்களது வரலாற்றிலிருந்து படிப்பினைகளை எடுத்துக்கொள்வதற்கு மாறாக மார்க்சை குறை சொல்லும் முதலாளித்துவ அறிவாளிகளையும் ஓடுகளாகளையுமே பின்பற்றுகிறார்கள். மார்க்சிய ஆசான்களிடமிருந்து மார்க்சியத்தின் அடிப்படைகளை கற்றுக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை மறுக்கும் இவர்கள் மார்க்சைப் பற்றி குறைசொல்வதில் முதன்மையாக கவனம் செலுத்துவது ஏன்? மார்க்சியத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுவிடக் கூடாது, மேலும் மார்க்சியத்தின் அடிப்படைகளை மக்கள் தெரிந்துகொள்ளக் கூடாது என்பதே இவர்களின் நோக்கமாக உள்ளது. மார்க்சியத்தின் அடிப்படைகளை மக்கள் தெரிந்துகொண்டால் இத்தகைய அறிவாளிகளை ஓடோட விரட்டியடிப்பார்கள். இவர்கள் நல்லவர்களைப் போல் நடிப்பதற்காக மார்க்சிய ஆசான்கள் சொல்லிய நல்ல கருத்துக்கையும் முன்வைப்பார்கள், அதே வேளையில் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல நஞ்சை ஏற்றுவார்கள். இத்தகைய நயவஞ்சகர்களை நாம் மார்க்சியத்தின் அடிப்படைகளை புரிந்துகளை புரிந்து கொண்டால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.

Ravindran

Palani Chinnasamy குழப்புவதுதான் இவர்களது நோக்கமாக இருக்கிறது. இவர்கள் தங்களை பெரிய அறிவாளிகள் போல் காட்டிக்கொண்டு அணிகளையும், மக்களையும் குழப்புவது ஏமாற்றுவது ஆகிய வேலைகளை செய்துகொண்டு இருக்கிறார்கள். மார்க்சிய ஆசான்கள் சொல்லிய மதிப்பு மிக்க கொள்கைகள் எல்லாம் இவர்களின் கண்களில் படாது. அதைப்பற்றி பேசி மக்களிடம் சோசலிச சிந்தனை முறையை வளர்க்க மாட்டார்கள். ஆனால் மார்க்சிய ஆசான்களை குறை செல்வதில் முக்கிய பங்கு வகிப்பார்கள். ரஷ்யாவில் டிராட்ஸ்கி எப்படி லெனினை குறை சொன்னாரோ அதே போலவே இத்தகையோர் மார்க்சிய ஆசான்களை குறை சொல்வார்கள். குறையே இல்லாத புனிதமானவர்களாக தங்களைக் காட்டிக் கொள்கிறார்கள். மக்கள் மார்க்சியத்தின் அடிப்படைகளைப் புரிந்துகொண்டால் கபடத்தனமான முறையில் மார்க்சியத்தை மறுக்கும் இவர்களைப் போன்றவர்களை கட்டாயம் புறக்கணிப்பார்கள். மார்க்சின் மீது தனிப்பட்ட தலைமை வழிபாட்டிலிருந்து நாம் பேசவில்லை. மார்க்சால் முன்வைக்கப்பட்ட கொள்கைகளை அரைகுறையாகப் புரிந்துகொண்டு மார்க்சிடம் குறை காணும் இந்த அரைவேக்காட்டுப் பேர்வழிகளை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே நாம் பேசுகிறோம்.

அதற்கு மேல் அவரின் பகுதியில் எழுதியதே

Ravindran is with Vchinnadurai Durai and 
17 others
.

 
சமரன் கட்டுரை ஆசிரியர் ரெட்ஸ்டார் போன்ற மா.லெ. அமைப்புகளை விமர்சிக்கிறார். அதே வேளையில் காரல் மார்க்சையும் விமர்சிக்கிறார். இவ்வாறு இவர் விமர்சிப்பதன் நோக்கம் என்ன? நாம் சிந்திக்க வேண்டும். காரல் மார்க்சை விமர்சிப்பதுதான் இவரது முதன்மையான நோக்கமாகத் தெரிகிறது. மார்க்சும் குறை உள்ளவர்தான் என்று சொல்லி மார்க்சியத்தின் மீது உழைக்கும் மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையைத் தகர்ப்பதுதான் இவரது நோக்கமாக இருக்கிறது. இத்தகைய நோக்கம் கொண்ட பல அறிவாளிகள் மார்க்சைப் பற்றி குறை சொல்லித் திரிகிறார்கள். அந்த வரிசையைச் சேர்ந்தவர்தான் இந்தக் கட்டுரை ஆசிரியர் ஆவார் என்றே நான் கருதுகிறேன். மார்க்ஸ் பல பிரச்சனைகளைப் பற்றி அலசி ஆராய்ந்துள்ளார். அது பற்றி அவர் விரிவாகவும் எழுதியுள்ளார். எனினும் அவர் இறுதியாக என்ன முடிவை முன்வைத்தார் என்பதுதான் முக்கியமானதாகும். மார்க்சியவாதிகள் மார்க்சால் முன்வைக்கப்பட்ட முடிவுகளைத்தான் முதன்மையாக எடுத்துக் கொள்வார்கள். ஆனால் மார்சியத்தை எதிர்ப்பவர்களும், மார்க்சியவாதிகள் போல் வேடமிட்டு எதிர்ப்பவர்களும் மார்க்ஸ் பேசியவற்றில் அங்கொன்றும் இங்கொன்றையும் எடுத்துக்கொண்டு மார்க்சை பிரச்சனைகளை புரிந்துகொள்ளாத முட்டாளைப் போல சித்தரிப்பார்கள். அதன் மூலம் மார்க்சிடமே குறை காணும் மிகப் பெரிய மேதாவிகள் போல் தங்களைக் காட்டிக்கொள்ள முயற்சிக்கிறார்கள். ஆனால் மார்க்சைப் பின்பற்றிய லெனினும் மாவோவும் இந்த வகையான மெத்தப்படித்த மேதாவிகளைப் போல மார்க்சை குறை சொல்லவில்லை. மாறாக மார்க்சால் முன்வைக்கப்பட்ட மதிப்புமிக்க கோட்பாடுகளையும் நடைமுறைக்கான வழிகாட்டுதல்களையும் எடுத்துக்கொண்டு அவர்கள் வாழ்ந்த சமூகத்தை மாற்றுவதற்கான வழிமுறைகளை கண்டுபிடித்து மக்களுக்கு எடுத்துச் சொல்லி புரியவைத்து மக்களை ஒன்றுதிரட்டி மக்களை புரட்சியில் ஈடுபடுத்தி வெற்றி கண்டார்கள். ஆனால் மார்க்சை குறை சொல்லும் இதுபோன்ற அரைவேக்காடுகள் மார்க்சாலும் லெனினாலும் சொல்லப்பட்ட எதையும் புரட்சி நோக்கத்திலிருந்து பின்பற்றவில்லை. உழைக்கும் மக்களை ஒன்றுபடுத்த வேண்டும் என்ற மார்க்சிய கோட்பாட்டை இவர்கள் பின்பற்றவே இல்லை. மாறாக இவர்கள் கம்யூனிஸ்டுகளுக்கு இடையிலேயே குறை சொல்லி, பிளவுபடுத்தினார்கள் என்பதுதான் உண்மையாகும். நடைமுறையில் மார்க்சியத்தைப் பின்பற்றி ஆசான்களது வரலாற்றிலிருந்து படிப்பினைகளை எடுத்துக்கொள்வதற்கு மாறாக மார்க்சை குறை சொல்லும் முதலாளித்துவ அறிவாளிகளையும் ஓடுகாலிகளையுமே பின்பற்றுகிறார்கள். மார்க்சிய ஆசான்களிடமிருந்து மார்க்சியத்தின் அடிப்படைகளை கற்றுக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை மறுக்கும் இவர்கள் மார்க்சைப் பற்றி குறைசொல்வதில் முதன்மையாக கவனம் செலுத்துவது ஏன்? மார்க்சியத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுவிடக் கூடாது, மேலும் மார்க்சியத்தின் அடிப்படைகளை மக்கள் தெரிந்துகொள்ளக் கூடாது என்பதே இவர்களின் நோக்கமாக உள்ளது. மார்க்சியத்தின் அடிப்படைகளை மக்கள் தெரிந்துகொண்டால் இத்தகைய அறிவாளிகளை ஓடஓட விரட்டியடிப்பார்கள். இவர்கள் நல்லவர்களைப் போல் நடிப்பதற்காக மார்க்சிய ஆசான்கள் சொல்லிய நல்ல கருத்துக்கையும் முன்வைப்பார்கள், அதே வேளையில் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல நஞ்சை ஏற்றுவார்கள். இத்தகைய நயவஞ்சகர்களை நாம் மார்க்சியத்தின் அடிப்படைகளை புரிந்து கொண்டால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். ஆகவே நாம் மார்க்சியத்தின் அடிப்படைகளை புரிந்து கொண்டு இத்தகைய நயவஞ்சகர்களையும் அவர்களின் வஞ்சகமான கருத்தையும் எதிர்த்துப் போராடுவோம்.

Redman A Chandran
பாட்டாளி வர்க்க சமரன் அணி வெளியிட்ட நூலை விமர்சனம் செய்வதன் பெயரில், சமரன் ஆசிரியர் என்று சம்பந்தமில்லாமல் இந்த விமர்சனத்தில் இழுத்து விடுகிறீர்கள். பதிவில் முதலில் தெளிவுபடுத்துங்கள். இல்லையெனில் இது திட்டமிட்டு குழப்புவதாகும்.
இவ்வாறு திட்டமிட்டு குழப்புவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

Ravindran
Redman A Chandran தோழரே நீங்கள் உங்கள் அமைப்பை பாதுகாக்க விரும்புகிறீர்களா? அல்லது மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனையைப் பாதுகாக்க விரும்புகிறீர்களா? மார்க்சியத்தை பாதுகாப்பதில் நீங்கள் ஆர்வம் காட்டவில்லையே ஏன்? மார்க்சியத்தை பாதுகாப்பதில் நீங்கள் ஆர்வம் காட்டினீர்கள் என்றால் உங்களை கம்யூனிஸ்டு என்று ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் இதற்கு மாறாக உங்கள் அமைப்பை பாதுகாப்பதில் மட்டும் நீங்கள் ஆர்வம் காட்டினால் நீங்கள் கம்யூனிஸ்டு அல்ல, மாறாக குறுங்குழுவாதியே. மார்க்சியத்திற்கு எதிராக யார் கருத்துப் பிரச்சாரம் செய்தாலும் அந்தக் கருத்தை எதிர்ப்பவர்தான் உண்மையான கம்யூனிஸ்டு ஆவார். எனது பதிவில் மார்க்சை குறை செல்வதை எதிர்த்து எனது கருத்தை முன்வைத்துள்ளேன். இங்கே எனது கருத்து சரியா? அல்லது மார்க்சை குறை சொன்னவரின் கருத்து சரியா? என்பது பற்றி உங்களது கருத்துக்களை முன்வைத்து மார்க்சியத்தை பாதுகாக்கும் கடமையைச் செய்வதற்கு நீங்கள் முன்வராதது ஏன்? உங்களிடமுள்ள குட்டிமுதலாளித்துவ குறுங்குழுவாதக் கண்ணோட்டம் மார்க்சியத்தை பாதுக்கும் கடமையைச் செய்வதற்குத் தடையாக உள்ளது. உங்களது அமைப்பிலுள்ள பல தோழர்களை தனிநபராக அவதூறு பிரச்சாரம் செய்து விரட்டியடித்துவிட்டு வளர வேண்டிய அமைப்பை பிளவுபடுத்தி மிகச் சிறிய குழுவாக சிதைந்து போன பின்பும், இப்போதும் குறுங்குழுவாதக் கண்ணோட்டத்திலிருந்தே உங்களது சிறிய குழுவைப் பாதுகாக்கும் முயற்சியில்தான் கவனம் செலுத்துகிறீர்கள். மாறாக மார்க்சியத்தை பாதுகாக்கும் சித்தாந்தப் போராட்டத்தின் ஊடாக கம்யூனிஸ்டுகளிடையே ஒற்றுமையை ஏற்படுத்த நீங்கள் முயற்சி செய்யவில்லையே ஏன்? இப்போதும் பாட்டாளிவர்க்க சமரன் அணியினர் தவறானவர்கள், நீங்கள்தான் புனிதமானவர்கள் என்று காட்டிக்கொள்வதிலேயே குறியாக இருக்கிறீர்களே ஏன்? உங்களது சிறிய குழுவை காப்பாற்றிவிட்டால் போதுமா? உங்கள் குழு மட்டுமே புரட்சியை நடத்திவிடுமா? மக்களை திரட்ட வேண்டாமா? மக்களை திரட்டியிருக்கிறீர்களா? இது போன்ற பல கேள்விகள் உள்ளது. அதற்கெல்லாம் பதில் தேடுங்கள். நீங்கள் செய்த தவறுகளை திரும்பிப் பாருங்கள். சுயவிமர்சனம் செய்ய முன்வாருங்கள். உங்களுக்கு இடையில் குழுச் சண்டைதான் போட்டுக்கொண்டு காலத்தை ஓட்டாதீர்கள். ஒன்றுபட்ட கம்யூனிஸ்டுக் கட்சியை கட்டுவதற்கு திட்டமிட்டுச் செயல்பட முன்வாருங்கள். உங்களிடத்திலுள்ள குறுங்குழுவாத கண்ணோட்டத்தை கைவிடுங்கள்.
Palani Chinnasamy
Redman A Chandran தோழர் எனது பின்னர் பதில் எழுதுகிறேன் ரவீந்திரன் தோழரின் பதில் எனக்கு ஏற்புடையவையே ஏனெனில் இந்த இரு நூல்களும் என்னிடம்தான் உள்ளன நான் பதிலளிக்க முடியாத பொழுது தோழர் எழுதினார் அதில் சமரன் வெளியீட்டகம் தேதி 11.06.2024 மற்றும் 09.05.2024 என்று உள்ளன ஆக இதில் எனக்கு யார் சமரன் என்பதில் குழப்பம் இருந்தது காலையில் உறையாடல் பிறகு பிரச்சினையை புரிந்துக் கொண்டேன் விரைவில் என் பதில் அவசியம் எழுதுகிறேன் தோழரே.

Ravindran
சமரன் ஆசிரியர் என்ற பெயரைக் குறிப்பிட்டு அவர் எழுதிய நூலிலிருந்து சில பகுதிகளின் அடிப்படையில் எனது விமர்சனத்தை வைத்துள்ளேன். ஆகவே நான் அந்த குறிப்பிட்ட நபரை மட்டுமே விமர்சிப்பதாக யாரும் குறுக்கிப் பார்க்கக் கூடாது. ஏனெனில் இது போன்று மார்க்சியத்தின் மீது தாக்குதல்களை நரித்தனமாக நடத்துபவர்கள் அனைவரின் மீதான விமர்சனமாகப் பார்க்க வேண்டும் என்று தோழர்களை கேட்டுக்கொள்கிறேன். தனிமனிதர்களை பிரச்சனைக்குரியவர்களாகப் பார்ப்பதும், தனிமனிதர்களை தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுவதும் தனிநபர் வழிபாட்டு முறை என்ற வகையில் தனிவுடமை சிந்தனை முறையாகும். கம்யூனிஸ்டுகள் மார்க்சிய ஆசான்களை தனிநபர்களாகப் பார்ப்பதில்லை. மாறாக அவர்களது கொள்கை மற்றும் நடைமுறைகளையே முதன்மைப் படுத்துகிறார்கள். இதுதான் பொதுவுடமை சிந்தனை முறையாகும். தன்னையும் தனது அமைப்பையும் முதன்மைப் படுத்துவது தனிவுடமை சிந்தனை முறையாகும். இதற்கு மாறாக உழைக்கும் மக்களை முதன்மை படுத்துவதுதான் பொதுவுடமை சிந்தனை முறையாகும். ஆகவே எனது பதிவில் எந்த தனிநபர் என்பது முதன்மையானதல்ல, அந்தக் கருத்து அதாவது காரல்மார்க்சை குறை சொல்லும் முறை தவறு என்ற எனது கருத்து சரியா அல்லது தவறா என்று பார்த்து தோழர்கள் அவர்களது கருத்துக்களை தெரிவிப்பதுதான் அவசியமானதாகும். அதனைச் செய்யாமல் தனது குழுவைப் பாதுகாக்க வேண்டும் என்ற நிலையிலிருந்து கருத்தை வெளியிடுவது அவர்களிடம் குறுங்குழுவாதக் கண்ணோட்டம் தொடர்கிறது என்பதையே குறிக்கிறது. இத்தகைய குறுங்குழுவாதக் கண்ணோட்டத்தை கைவிட்டுவிட்டு மார்க்சியத்தைப் பாதுகாப்பதற்காக மார்க்சியத்திற்கு எதிரான கருத்துக்களை எதிர்த்து போராட முன்வருபவரே சிறந்த கம்யூனிஸ்டாக நான் கருதுகிறேன். என்னைப் பொறுத்த மட்டில் உழைக்கும் மக்களும், அவர்களின் விடுதலைக்கான தத்துவமான மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனைக்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று கருதுகிறேன். மார்க்சிய அடிப்படையிலான எனது கருத்துக்களே முக்கியமாகும், இதற்கு மாறாக என்னை நான் முன்னிலைப்படுத்த விரும்பவில்லை. என்னை நான் முன்னிலைப் படுத்தினால் நான் ஒரு தனிவுடமை சிந்தனையாளனாக மட்டுமே இருக்க முடியும். அத்தகைய தனிவுடமை சிந்தனையாளனாக இருக்க நான் விரும்பவில்லை.

  • கம்யூனிஸ்டுகளுடைய உடனடி நோக்கம், மற்றெல்லாப் பாட்டாளி வர்க்கக் கட்சிகளின் உடனடி நோக்கம் எதுவோ அதுவேதான். பாட்டாளிகளை ஒரு வர்க்கமாகக் கட்டியமைத்தல், முதலாளித்துவ மேலாதிக்கத்தை வீழ்த்துதல், பாட்டாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தை வென்றெடுத்தல் ஆகியவைதாம்.(க.க அறிக்கை இரண்டாம் அத்தியாயம்).
தொடரும்...

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்