"நம் கருத்துகள் அனைத்தும் நாம் வாழும் சமூகத்தின் கருத்துகளே"
இதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க வாய்பில்லை என்றே நினைக்கிறேன் தோழர்களே...நம்மிடையே உள்ள கலாச்சாரம் கல்வி ஒழுக்க நெறிகள் அனைத்தும் இச்சமூக கருத்துகள்தானே?
மனிதன் எதையும் சிந்தித்துப்பார்க்கும் தன்மையைப்பெற்றவன், இத்தன்மையை அறிவு என்கிறோம். உலகத்தை அப்பொருள்கள்யாவையும் சிந்தனையைத் தூண்டக்கூடியனவே. ஆதலால்தான் பல அறிஞர்கள் சிந்தித்துச் சிந்தித்துப் பலபுதுப் பொருள்களையும், பல புதுஅறிவியல் உண்மைகளையும் கண்டுபிடிக்கின்றனர், இப்படிக் கண்டுபிடிக்கப் படும் பொருள்கள் யாவையும், ஆராய்ந்து பார்க்கப்படும் உண்மைகள் யாவையும் ஒரு தன்மையானவை ௮ல்ல ஆகையால் இப்பொருள்களையும் உண்மைகளையும் பல தலைப்புக்களில். பிரித்துப் பார்க்க வேண்டியிருக்கறது, இப்படிப் பிரிக்கப் பட்ட பிரிவுகளே கலவையியல் (Chemistry), பொருளியல்(economics), உடலியல் ,
மனவியல்(psychology) என்பனவும் பிறவும். இப்படிப்பட்ட பிரிவுகளில் ஒன்றே மானிடவியல். ஆன்த்சொபோ (Anthropos) மனிதனைப் பற்றிய, அதாவது மனிதனின் ௮ன்றைய, இன்றைய பிறப்பு, 'வளர்ப்பு, வாழ்வு போல்வனவற்றின் உண்மைகளை எடுத்துச் சொல்லும் ஓர் அறிவியல் என்ற பொருளில் மானிடவியல் எனப்பட்டது.
மனிதன் வாழ்க்கை வரலாற்றைப் புரிந்து(மானுடவியல்)
மனித வளர்ச்சியை தெரிந்து கொள்ளச் செய்யும் முயற்சி இந்த மானுடவியல் வரலாறு கடல் போன்றது எனலாம், ஒரு காலத்தை மட்டுமோ, ஒரு நாட்டை மட்டுமோ, ஒரு கலையை மட்டுமோ, அல்லது ஒரு நாகரிகத்தை மட்டுமோ பற்றியது ௮ன்று இவ்வியல். மனிதன் மிருகத்தன்மையுடையவனாக, நாகரிகம் கொஞ்சமும் அற்றவனாக இருந்த காலத்தையும் நன்கு ஆய்ந்து பார்ப்பதே மானுடவியல். எல்லா நாகரிகங்களும், எல்லாப் பண்பாடுகளும், எல்லா நாடுகளும் எல்லா மனிதர்களும், எல்லாப் பழக்க வழக்கங்களும் இவ்வியலுக்குள் அடங்கியவையே. மனிதனைப் படித்தல் என்றால், மனிதனின் மனப்போக்கு சிந்தனைவுகள் (thoughts) செயல்கள் (deeds) எவ்வெப்படி அமைந்திருந்தன, எவ்வெப்படி. மாற்றமுற்றுள்ளன என்பனவற்றையெல்லாம் நன்கு தெரிந்துகொள்ளவேண்டும் அல்லவா? இவற்றைக் கொண்ட ஓர் அறிவே மானிடவியல் என்னலாம். மானிடவியல் ஓர் இயற்கை வரலாறு {natural history). (in nature) மனிதனின் இயல்பும் ஓர் இடம் பெறுகிறது, எனவே, இவ்வியல்பைத் 'தெரிர்துகொள்ளும் முயற்சியே ஓர் இயற்கை வரலாறு. இவ்வரலாறு மனிதனை மட்டும் தனித்துப் பார்க்காமல் மனிதன் வாழும் சமூகத்தையும் பார்க்கறது. மனித குலத்தின் பல்வேறுவளர்ச்சி போக்கை அவை பார்க்கிறது. எனவே, ஆயிரமாயிரம் ஆண்டு களுக்கு முன்னிருந்த மனிதனின் நிலையையும் இயல்பையும் கூட இவ்வியல் நமக்குத் கற்று தருகிறது, நாம் இதுவரை "தெரிந்து கொண்டவந்திலிருந்து மனிதன் மிகத் தொன்மையிலிருக்தே, அவன் பிறந்த அந்த நாளிலிருந்தே "ஒருவகைக் கூட்டு அமைப்பில் இருந்து. வருவதையும், இவ்வமைப்பு நாளுக்குநாள் சிக்கல் நிரம்பியதாக ஆகி வந்து 'கொண்டிருப்பதையும் அறிகின்றோம். தன்னையும் ஆதி மனிதனையும் ஒப்பிட்டால், தனிவகையெனத் தோன்றும்,இன்றைய மனிதனுக்கு புரிதல் வேண்டும். 30 லட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய ஆதி மனிதனின் தொடர்சிதான் இன்றைய மனிதன் என்றால் அப்படியே அந்த மனிதனை இங்கே நாம் காண முடியாதுதான். அவை புரிந்துக் கொள்ள முயலுவோம். அன்றைய மனிதனுக்கு நாகரிகம் எது என்றுகூடக் கேட்கத் தோன்றும். அந்த அளவு மாற்றம் இப்பொழுது ஏற்பட்டுவிட்டது வருங்காலத்தும் இப்பண்பாடு அப்படியே நிலைத்திருக்கப் போவதில்லை.
ஒரு காலத்தில் வரலாறு என்பது மன்னர்களைப் பற்றியும் அவர்கள் நடத்திய போர்களைப் பற்றியும் வெற்றி பெற்ற நாடுகளில் அவர்கள் செய்த வேலைகளைப் பற்றியும் பேசுவதாக இருந்தது. காலப் போக்கில் வரலாறு மக்களைப் பற்றிப் பேசுவதாக மாற்றம் பெற்றது. என்றாலும் வரலாற்றில் பல 'குள்ளநரி வேலைகள்' நடந்துள்ளமையை மார்க்சிய ஆய்வாளர்கள் மற்றும் முதலாளித்துவ புத்திஜீவிகள் இப்போது எடுத்துக்காட்டி வருகின்றனர்.
வரலாற்றை மறைப்பது, மாற்றுவது, திரிப்பது, பொய்யை மெய்யாக்குவது என்னும் 'திருப்பணிகள்' இந்திய வரலாற்றில் தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளமையைக் காணமுடிகிறது. காரணம், வரலாற்றை எழுதியவர்கள் பெரும்பாலோர் ஆளும் வர்க்கதினரே ஆக அவர்களின் தேவையை ஒட்டியே சார்புடையதுமாகவே இருந்துள்ளன. இன்றும் இருகின்றது. அதனை பற்றிதான் பேசப் போகிறோம் தொடர்ந்து….
தொடரும்...
No comments:
Post a Comment