தோழர்களே "அரசியல் சொற் களஞ்சியம்" என்ற நூல் என்னுடைய தேடலில் கிடைத்தது ஆரம்ப வாசிப்பு புரிதலுக்கு எளிதாக இருக்கும் தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்க...
நூலிலிருந்து
கம்யூனிச கண்ணோட்டம் என்பது!
உலகையும் இயற்கையையும் சமுதாயத்தையும் பற்றிய கருத்துகளின் தொகுதி கம்யூனிஸ்ட்களின் உலக கண்ணோட்டம் ஆகும்.
நாம் வாழும் சமூகத்தில் ஆளும் வர்க்கமான முதலாளித்துவ ஏகாதிபத்திய கருத்துகளுக்கும் கம்யூனிஸ்ட்களின் கருத்துகளுக்கும் இடையே கடுமையான போராட்டம் நடைபெறுகிறது.
கம்யூனிஸ்டுகளின் உலக கண்ணோட்டமானது உலகை மாற்றி அமைக்க முனைப்புடன் செயல்படுமாறு உழைக்கும் மக்களை தன்னுடன் இணைத்து தட்டி எழுப்பி எல்லா உழைக்கும் மக்களுக்குமான சமூகமாக மாற்றி அமைக்க நம்பிக்கையூட்டி அவர்களை தட்டியெழுப்பி உத்வேகமுற முனைகிறது.
ஆனால் ஆளும் ஒடுக்கும் வர்க்கமானது உள்ள அமைப்பு முறை கொள்கைகளையே சிற்சில சீர்திருத்தங்களை வழங்கி அரை பட்டினி பசி மூலமாக அடிமைகளாக் அவர்களை இந்த அமைப்புமுறையில் வாழ வைக்கிறது அவர்களுக்கு வேறு வழி தெரியாமையால்.
இந்தக் கொடுமைகளை தீர்க்கும் வழிமுறை பற்றி பொதுவுடைமைவாதிகள் மிகத் தெளிவாக அந்த செயல்பட வேண்டிய கட்டாயம் உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் உள்ள அமைப்புமுறையை கட்டிக்காப்பது அல்ல மாற்றி அமைப்பது அவை எல்லா ஒடுக்கப்பட்ட அடக்கப்பட்ட மக்களின் வாழ்வளிக்க வல்லதாக..

No comments:
Post a Comment