இதற்கு முற்றிலும் நேர் எதிரான வகை பட்டவர்களும் கட்சியில் இருக்கின்றனர். அவர்கள் எல்லாவற்றுக்கும் மேல், தம்மை மார்க்சியத்தைத் தோற்றுவித்தவர்களின் மாணவர்களாக கருதிக் கொள்கின்றனர். மார்க்சிய லெனினிய தத்துவத்தை அவர்கள் முழு மனதுடன் உணர்வு பூர்வமாக கற்கின்றனர்.. அந்த தத்துவத்தின் சாரத்தையும் உயிர் ஆதாரமானவையும் உட்செரிக்க எல்லா முயற்சிகளையும் மேற்கொள்கின்றனர். இந்த தத்துவத்தை தோற்றுவித்தவர்களின் உயரிய குணநலன்களையும் பாட்டாளி வர்க்க புரட்சி பண்புகளையும் உயர்வானதாக அவர்கள் கருதுகின்றனர். புரட்சி போராட்டங்களின் போக்கில் சுய வளர்ப்பு பயிற்சியை உணர்வுப்பூர்வமாக மேற்கொள்கின்றனர். பல்வேறு விவகாரங்களை கையாளுவதிலும் மக்களுடனான விவகாரங்களை கையாள்வதிலும் தமது சொந்த நடவடிக்கைகளிலும் மார்க்சிய லெனினிய உயிராதாரப் பண்புகளுக்கு பொருத்தமாக தாம் நடந்து கொள்கிறோமா என்பதை அவர்கள் கூர்ந்து பரிசீலிக்கின்றனர்.மார்க்சிய லெனினியத்தை அவர்கள் ஆழ்ந்து கற்கின்றனர். ஆனால் அதே வேலையில் எதார்த்த நிலைமையை ஆழ்ந்து பரிசீலிப்பதையும் ஆய்வு செய்வதையும் தனிச்சிறப்பான முயற்சிகளை எடுத்து மேற்கொள்கின்றனர்.
சிறந்த கம்யூனிஸ்ட் ஆவது எப்படி தொடர்-1
தம் காலத்தின் சிறப்பான நிலைமைகளையும் தமது சொந்த நாட்டின் பாட்டாளி வர்க்கம் எதிர்கொள்ளும் நிலைமைகளின் எல்லா சிறப்பு கூறுகளையும் ஆய்வு செய்கின்றனர். மார்க்சிய லெனினியத்தின் அனைத்தும் தழுவிய உண்மையை, தமது சொந்த நாட்டினுடைய பருண்மையான புரட்சி நடை முறையுடன் இணைக்க கடுமையாக முயற்சிக்கின்றனர். மார்க்சிய லெனினியக் கோட்பாடுகளையும் அறுதியான முடிவுகளையும் மனப்பாடம் செய்து செய்வதுடன் அவர்கள் மனம் நிறைவு அடைவதில்லை. பிரச்சனைகளில் உறுதியான மார்க்சிய லெனினிய நிலைப்பாட்டை எடுக்கின்றனர். மார்க்சிய லெனினிய வேலை முறையைக் கற்க எல்லா வழிகளிலும் முயன்று அதை செயல்படுத்துகின்றனர். தாம் பங்கேற்கும் ஒவ்வொரு புரட்சி போராட்டத்திலும் உயிர்த்துடிப்பாக வழிகாட்டுகின்றனர். இவற்றையெல்லாம் சரியாக செய்வதன் மூலம் எதார்த்த நிலைமையை மாற்றி அமைக்கும் அதே வேலையில் தம்மையும் மாற்றி அமைத்துக் கொள்கின்றனர். எந்த ஒரு விதிவிலக்குமின்றி அவர்களுடைய நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் மார்க்சிய லெனினிய பொதுக் கோட்பாடுகளால் வழிநடத்தப்படுகின்றன. பாட்டாளி வர்க்க இலட்சியத்தினுடைய வெற்றிக்கும் நாட்டின் மனித குலம் அனைத்தின் விடுதலைக்கும் கம்யூனிசத்தின் வெற்றிக்கும் உதவுபவையாக அமைகின்றன. (சிறந்த கம்யூனிஸ்டாக ஆவது எப்படி என்ற நூலிலிருந்து)
ஒரு கம்யூனிஸ்டு எப்படி இருக்க வேண்டும் என்பதை லியுஷாவோகி இங்கே விளக்கியுள்ளார். முதன்மையாக 1) ஒவ்வொரு கம்யூனிஸ்டும்
மார்க்சிய லெனினியத்தை கற்றுக்கொள்ள வேண்டும்; 2) இந்த தத்துவத்தை தோற்றுவித்தவர்களின் உயர்ந்த பண்புகளை உள்வாங்கி பின்பற்ற வேண்டும்; 3) சுயவளர்ப்புப் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்; 4) மார்க்சிய லெனினிய தத்துவத்தை எதார்த்த நிலைமைகளோடு பொருத்தும் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும்; 5) மார்க்சிய லெனினியத்தை புரட்சிகர நடைமுறையோடு இணைக்க வேண்டும்; 6) நமது சிந்தனையும் நடைமுறையும் மார்க்சிய லெனினிய பொதுக் கோட்பாடுகளுக்கு பொருத்தமாக இருக்கிறதா? என்று எப்போதும் பரிசீலனை செய்ய வேண்டும்; 7) மார்க்சிய லெனினியக் கோட்பாடுகளை மனப்பாடம் செய்வதுடன் பிரச்சனைகளை இந்தக் கோட்பாட்டுகளின் அடிப்படையில் புரிந்துகொண்டு உறுதியான முடிவுகளை எடுக்க வேண்டும். இவ்வாறுதான் கம்யூனிஸ்டுகள் தங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். கட்சி உறுப்பினர்களை இவ்வாறு வளர்ப்பவர்கள்தான் ஒரு கம்யூனிச அமைப்பிற்குத் தலைமை தாங்க வேண்டும். அத்தகைய தலைவர்களாக மக்கள் ஜனநாயக இளைஞர் கழகத்தின் தலைவர்கள் இல்லை. இதற்கு நேர் எதிரான பண்புகளைக் கொண்ட தலைவர்களாகவே அவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தங்களது தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டும்
Subscribe to:
Post Comments (Atom)
இலக்கு இதழின் கட்டுரைகள்
செய்தியை சார்ந்த அலசல்
-
தலித் விடுதலை சாதி ஒழிப்பு பற்றி பேசுவோர் இதுவரை செய்தவற்றை தொகுப்பாக காணும் பொழுது அவை எந்த வர்க்க நலனில் உள்ளது? உண்மையாலுமே சாதி ஒழிப்ப...
-
ஒரு கம்யூனிஸ்ட் கட்சியானது கறாரான பாட்டாளிவர்க்க கண்ணோட்டம், கொள்கை கோட்பாடுகளில் உறுதியான பற்றுகொண்டிருக்கவேண்டும். ஆகவே கம்யூனிஸ்ட் கட்சி...
-
தோழர் ஞானம் அவர்களின் பதிவே. இவை சில தினங்களாக வாட்சாப் விவாத பொருளாக உள்ளது ஆகையால் இங்கே பகிர்கிறேன் தோழர்களே, பாசிச எதிர்ப்பு மக்கள் முன்...
-
அம்பேத்கரும் கம்யூனிசமும் என்கிற இந்த சிறிய வெளியீடு அம்பேத்கர் குறித்த புத்தகம் ஒன்றிற்காக எழுதிபார்க்கப்பட்ட பகுதிகளில் ஒன்ற...
-
தோழர்களுக்கு வணக்கம், சிலர் ஏன் குறைக்கூறிக் கொண்டே உள்ளீர் நடைமுறையில் ஈடுபடுவதில்லை தத்துவம் பேசி என்ன பயன் சமூகம் சீரழிந்துவிட்ட பின்னர்ந...
-
தோழர்களுக்கு வணக்கம் இன்றைக்கு தொடங்கி இந்த நூல் வாசிக்க உள்ளோம். தேசிய இனப்பிரச்சனைகளும் பாட்டாளி வர்க்க சர்வதேசிய வாதமும் நூல் pdf வடிவி...
-
தோழர்களுக்கு வணக்கம், இந்த இதழில் நாம் செய்ய வேண்டியதை மார்க்சிய ஆசான்கள் செய்தவையில் இருந்து தேர்ந்தெடுத்து எழுதிக் கொண்டும் அதில் குறிப...
No comments:
Post a Comment