இன்றைய நமது புரிதலுக்கு பல்வேறு போக்குடையவர்களை எப்படி கணிப்பது?
மார்க்சியத்தின் வளர்ச்சி போக்கு
மார்க்சிய
மூலவர்கள் எடுத்த முடிவுகளுக்கு அவர்களே மாற்றம் கண்டுள்ளனர் 1848 இல் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை
வெளியிடப்பட்டது 1872 இல் அறிக்கைக்கு எழுதிய முன்னுரையின்
சில விவரங்கள் இந்த வேலைத்திட்டம் காலங்கடந்து விட்டன என்பது விளங்கும் என அவர்
குறிப்பிட்டுள்ளார், இன்னொன்றும் காண்போம் ஏகாதிபத்திய
சகாப்தத்துக்கு முந்தைய முதலாளித்துவ உலகில் வாழ்ந்த எங்கெல்ஸ் ஒரு நாட்டில்
மட்டும் சோஷலிசப் புரட்சி சாத்தியமா என்பதற்க்கு இல்லை என மறுத்துள்ளார்.
ஆனால்
ஏகாதிபத்திய சகாப்தத்தில் சில நிலைக்கு உட்பட்டு இவ்வாறு ஒரு நாட்டில் புரட்சி
சாத்தியம் என லெனின் நடைமுறை ஆக்கினார் இவை இரண்டும் முடிவுகளில் ஏற்பட்ட
மாற்றங்களாகும். அந்த மாற்றங்கள் மார்க்சிய அடிப்படையில் இயக்கவியல்
பொருள்முதல்வாதம் வழிநின்று புரட்சிகர நடைமுறை அனுபவங்களைக் கொண்டு எடுக்கப்படும்
மாற்றங்களாகும், மார்க்சிய
பூர்வமாக இருக்க வேண்டும், இதுவன்றி கருத்து முதல்வாத
கண்ணோட்டத்தின் வழி நின்று எடுக்கப்படும் மாற்றங்கள் மார்க்சிய மாற்றங்கள் ஆகாது. மார்க்சியமானது விஞ்ஞானபூர்வமான மாற்றங்களும் அவை குறித்த
தேடல்களும் உண்டு தேடலே இல்லை வளர்ச்சியே இல்லை என்பது மார்க்சியத்திற்கு உடன்பாடு இல்லை அவை விஞ்ஞானபூர்வமான
வளர்ச்சியோடு வளரும் தன்மை கொண்டது .
ஆக
புரட்சியானது ரஷ்யாவை போன்றதே உலக நாடுகள் எல்லாவற்றிலும் நடைபெற வேண்டும்
என்பதும் சீனாவில் நடந்தது புரட்சி அல்ல என்பதும் அப்படியில் மார்க்சியத்தை சரியான
முறையில் புரிந்து கொள்ளலாமையே என்பேன் ஏனென்றால் ரஷ்யாவில் ஒருபுறம் பின்தங்கிய
விவசாய பகுதியான ஆசியப் பகுதியில் இன்னொரு ஐரோப்பிய சார்ந்த தொழில் வளர்ச்சியான
பகுதியையும் லெனின் தன்னுடைய நூல்" சமூக ஜனநாயகவாதத்தின் இரண்டு போர்த் தந்திரங்களில் " சுட்டிக் காட்டியிருப்பார்.
இதைப்போல்
தன்னுடைய நாட்டின் சரியான பொருத்தமான முறையில் மாவோ கணித்து சீனப்புரட்சி கையிலெடுத்த அங்கு பின்தங்கிய விவசாய முறையில்
பல்வேறு விதமான குறு மன்னர்கள் நிலப்பிரப்புகள் ஆட்சி
அதிகாரத்தை தூக்கி எறிந்து அந்நாட்டில் புரட்சிக்கான வழி முறையை கண்டறிந்தார்,
அங்கே ஒரு வளர்ந்த பாராளுமன்றமும் தொழில் துறையை இல்லாமையால் அவை
புரட்சியை இல்லை என்பது தவறானது ஆகும்.
அப்படியெனில்வியட்நாம்
மற்றும் தெற்காசிய நாடுகளில் ஏற்பட்ட புரட்சிகள் எவ்வகையான புரட்சி அதை தன்னுடைய
தேசிய விடுதலைக்கான புரட்சி அல்லவோ அதேபோல் சில நாடுகளில் காலனி ஒடுக்கு முறையில்
ஆட்சி அதிகாரத்தை தூக்கி எறிந்த Cuba போன்ற புரட்சி சோசலிச புரட்சி அல்ல சோசலிசதிற்க்கு முந்தைய புரட்சியே அவை
சோசலிசத்திற்கு வழி வகுத்தது.
விஞ்ஞானிகள்
விஞ்ஞானத்தை திரித்து அல்லது தன் வாழ்க்கைக்கு ஏற்ப மாற்றி அமைத்துக்கொண்டு அதில்
தோல்வியுற்ற பின் இது விஞ்ஞானம் இல்லை என்பதும் இந்த விஞ்ஞானம் வெற்றி பெறாது
என்பது தவறாகும். விஞ்ஞானிகள் விஞ்ஞானிகளாக இருக்க வேண்டும் அஞ்ஞானிகளாக
மாறிவிடக்கூடாது.
அறிவியலின்
அடிக்கல்லை மட்டுமே மார்க்சியம் அமைத்துக் கொடுத்தது, பொதுவான வழிகாட்டும் கோட்பாடுகளையே
அளித்துள்ளது -லெனின்.
No comments:
Post a Comment