இத்தகைய குறைபாடுகளை உடையவர்கள் மார்க்சிய லெனினியத்தை கற்கும் போதும் அதன் சாரத்தை உட்செரிக்க அதாவது கிரகிக்க தவறுகின்றனர். இவர்கள் வெறும் சொற்றொடர்களையும் வடிவங்களையும் மேலோட்டமாக மட்டுமே படித்து மனப்பாடம் செய்கின்றனர். மார்க்சிய லெனினிய நூல்களை அவர்கள் படித்த போதும், அதன் கோட்பாடுகளையும் முடிவுரைகளையும் தமது நடவடிக்கைகளுக்கு வழிகாட்டியாக கொள்வதில்லை. எதார்த்த வாழ்வில் உள்ள பருண்மையான நடைமுறை ரீதியிலான பிரச்சனைகளை தீர்ப்பதற்கு அவற்றை பயன்படுத்துவது இல்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக சில கோட்பாடுகளையும் முடிவுரைகளையும் ஒப்புவிப்பதுடன் அவர்கள் மனநிறைவு அடைகின்றனர். "தம்மை உண்மையான மார்க்சிய லெனினியவாதிகள்" என்று கருதி தம்மட்டமடித்துக் கொள்கின்றன. ஆனால் நிச்சயமாக அவர்கள் உண்மையான மார்க்சிய லெனினியவாதிகளாக இருப்பதில்லை. அவர்களுடைய நடவடிக்கைகளும் வேலை முறைகளும் மார்க்சிய லெனினியத்துக்கு நேர் எதிரானவைகளாகவே உள்ளன.
இந்த ரகத்தைச் சேர்ந்த பேர்வழிகள் சீன பொதுவுடமைக் கட்சியில் பலர் இருந்தனர். நமது கட்சியில் வறட்டுவாத பிரதிநிதிகள் ஒரு காலத்தில் இருந்தனர். அவர்களே மிக மோசமான ரகத்தினராக இருந்தனர். மார்க்சிய லெனினியத்தை முற்றாக ஏது மரியாத இந்த ரகத்தினர், மார்க்சிய லெனினிய சொற்றொடர்களை உளரித் திரிபவர்களாக இருந்தனர். அவர்களே தம்மை சீனாவின் மார்க்ஸ் சீனாவின் லெனின் என்று தம்மைத் தாமே கருதிக் கொண்டனர். மார்க்சும் லெனினும் மதிக்கப்பட்டது போல தாமும் மதிக்கப்பட வேண்டும் என்று, வெட்கக்கேடான முறையில் இவர்கள் பிதற்றித் திரிந்தனர். தம்மை தலைவர்களாக மதிக்க வேண்டும் என்றும் மற்றவர்கள் தமக்கு விசுவாசம் ஆகவும் மரியாதை செலுத்துவோர்களாகவும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தனர். தம்மைத் தாமே தலைவர்களாக நியமித்துக் கொள்ளும் அளவுக்கு சென்ற இவர்கள் கட்சியின் உயர் பதவிகளுக்கு உரிய அதிகாரம் செலுத்தி நாட்டாமைகளைப் போல ஆணைகள் பிறப்பித்தனர்.
கட்சியில் ஒவ்வொன்றையும் கேடாக பயன்படுத்திய இவர்கள், வேண்டுமென்றே மற்றவர்களை வரைமுறையின்றி தாக்கிப் பேசிய இவர்கள், கட்சி உறுப்பினர்கள் பலரையும் தண்டித்ததோடு, அவர்களை தாறுமாறாக பந்தாடினர். மார்க்சிய லெனினியத்தை கற்பதற்கு, அல்லது கம்யூனிச லட்சியத்தை அடைவதற்கு உண்மையான விருப்பம் ஏதும் அவர்களுக்கு கிடையாது. அவர்கள் கட்சியில் உள்ள வெறும் பிழைப்பு வாதிகள் தான். கம்யூனிஸ்ட் இயக்கத்தில் உள்ள கரையான்கள் தான் அவர்கள். கட்சியில் உள்ள அணிகள் இத்தகைய பேர்வழிகளை எதிர்த்தே தீர வேண்டும்; அம்பலப்படுத்தி முறியடிக்க வேண்டும்; அலட்சியமாக வெறுத்து ஒதுக்க வேண்டும். நமது கட்சி உறுப்பினர்களால் அவர்கள் வெறுத்து ஒதுக்கப்பட்டனர் என்பது உண்மைதான். இத்தகைய பேர்வழிகள் எதிர்காலத்தில் நமது கட்சியில் மீண்டும் உருவாக மாட்டார்கள் என்று உறுதியான நம்பிக்கையுடன் நான் சொல்ல முடியுமா?, நாம் அப்படி கூற முடியாது என்றே நான் கருதுகிறேன். (சிறந்த கம்யூனிஸ்டாவது எப்படி என்ற நூலிலிருந்து)
இத்தகைய குறைபாடுகள் உள்ள நபர்கள்தான் மக்கள் ஜனநாயக இளைஞர் கழகத்தின் தலைவர்களாக உள்ளனர். இந்தத் தலைவர்கள் அவர்களது அமைப்பைச் சேர்ந்தவர்களையும் இத்தகைய குறைபாடுள்ளவர்களாகவே வளர்க்கின்றனர். இத்தகைய குறைபாடுகளை அடையாளம் கண்டு களையாதவரை இங்கு ஒரு உண்மையான கம்யூனிஸ்டுக் கட்சியை இங்கு கட்ட முடியாது. ஆகவே குறைபாடுகளை களைவோம் ஒன்றுபட்ட பலம் வாய்ந்த கம்யூனிஸ்டுக் கட்சியை உருவாக்குவோம்
No comments:
Post a Comment