லுவானா அலோன்சா ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் qualify ஆவதற்கான போட்டியில் 0.24 நொடிகள் தாமதமாக முடித்த காரணத்தினால் தான் disqualify செய்யப்பட்டாராம். மேலும் அவர் போட்டியிட முடியாமல் போனாலும் சக வீரர்களை ஊக்குவித்து அவர்களுக்கு துணையாக இருக்காமல் பராக்குவே ஒலிம்பிக் கமிட்டியின் அனுமதியின்றி டிஸ்னிலேண்டுக்கு சென்றதாலும் அவரை பராக்குவே ஒலிம்பிக் கமிட்டி வீட்டுக்கு அனுப்பிவிட்டனராம். ஆனால் அவர் அழகாக இருக்கிறார் என்ற காரணத்திற்காக ஒலிம்பிக்கிலிருந்து வெளியேற்றப்பட்டார் என்ற முட்டாள்தனமான செய்திகளை பரப்புகிறார்கள். இந்த கீழ்கண்ட லிங்கில் செய்தியின் தலைப்பு கவர்சிகரமான பராக்குவே நீச்சல் வீராங்கனை ஒலிம்பிக்கில் போட்டியிட அனுமதிக்கப்பவில்லை என்று இருக்கிறது. இந்த தலைப்பை படித்துவிட்டு கவர்ச்சிகரமாக இருந்ததால் வெளியேற்றப்பட்டார் என அபத்தமாக செய்தி வெளியிடுகிறார்கள் 



லுவானா என்ற பராக்குவே நாட்டு நீச்சல் வீராங்கனை தகுதிபெறுவதற்கான போட்டியில் 0.24 நொடிகள் தாமதமாக முடித்த காரணத்தால் disqualify செய்யப்பட்டார் என்பது சரியான தகவல். ஒரு விளையாட்டு வீரர் disqualify செய்யப்பட்டாலும் போட்டிகள் முடியும் வரை அவர் ஒலிம்பிக் நடக்கும் Athletes Village இல் தங்கள் நாட்டு சக வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையில் தங்கி இருக்கலாம் என்ற அடிப்படையில் அவர் அங்கேயே தங்கவைக்கப்பட்டிருக்கிறார். ஆனால் லுவானா பராக்குவே நாட்டு ஒலிம்பிக் கமிட்டியின் அனுமதியின்றி ஒரு இரவு Athletes Village லிருந்து Disney Land க்கு சென்று விட்டார் என்ற அடிப்படையில் misbehaviour செய்துள்ளார் என்ற அடிப்படையில் அவரை வீட்டுக்கு அனுப்பிவிட்டதாக செய்தி குறிப்பு சொல்கிறது. சுட்டி கீழே தருகிறேன்.
No comments:
Post a Comment