அன்று ரஷ்யாவில் எப்படி மார்க்சிய தத்துவத்தை எதிர்த்து குழப்பும் வேலையில் சிலர் ஈடுபட்டார்களோ, அதே போலவே தற்போது இந்தியாவில் மார்க்சிய தத்துவத்தை எதிர்த்து குழப்பம் செய்யும் வேலைகளில் கம்யூனிச எதிர்ப்பாளர்களும் தங்களை கம்யூனிஸ்டுகள் என்று சொல்லிக்கொண்டு ஏகாதிபத்தியங்களிடம் விலைபோன கம்யூனிச துரோகிகளும் மார்க்சியத்துக்கு எதிரான குழப்பும் வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களைப் புரிந்துகொண்டு எதிர்த்துப் போராடுவதற்கு ஒவ்வொரு கம்யூனிஸ்டும் பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சமும் என்ற லெனினது நூலூப் படிக்க வேண்டியது மிகமிக அவசியம் என்று நாங்கள் கருதுகிறோம். ஆகவே அலைகள் வெளியீட்டகம் வெளியிட்டுள்ள இந்த நூலை கம்யூனிஸ்டுகள் உடனடியாக வாங்கிப் படித்து விவாதியுங்கள் என்று கேட்டுக் கொள்கிறோம். இந்த நூலை ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையன்று கிளப்ஹவுசில் நாங்கள் வாசித்து விவாதிக்கவுள்ளோம், அதில் கலந்துகொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறோம்.

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்