ஆசிய பாணி உற்பத்தி முறை குறித்த விவாதமும் பதிலும்-1

 

ஆசியபாணி உற்பத்தி முறைதான் என்ன?

இந்தியாவைப் பற்றி காரல் மார்க்ஸ் விடியல் பதிப்பகத்தின் அணிந்துறையில் எஸ்.வி.ராஜதுரை பக்கம் 11 இல் "என் அப்பன் குதிருக்குள் இல்லை" என்ற பழமொழிக்கு ஏற்ப ஏகாதிபத்திய புதிய இடது கருத்தாக்கங்களை  முன்வைத்து எழுதியுள்ள எழுத்துக்கள் புதிய புதிய பெயர்களில் மீண்டும் மீண்டும் உயிர் பெற்றுக் கொண்டே உள்ளது. "விளிம்பு நிலை சமுதாயங்கள் பற்றி மார்க்ஸ்" முத்து மோகனால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கருத்துகள் மற்றும் எஸ் வி ஆரின் ஏகாதிபத்திய கருத்துகளை மார்க்சின் கருத்தாக முன் வைத்துள்ளதுதைதான் இன்று சிலர் பேசுகின்றனர்.

அடுத்து காமராஜர் அவர்கள் தனது பணியினை மார்க்சிய விரோத நிலையில் நிலைநாட்டியுள்ளார்.

அறிமுக உரையாக சுனிதி குமார் கோஷ் அவர்கள் இந்தியாவைப் பற்றிய மார்க்சின் கருத்தாக்கங்களையும் அவருடைய கண்ணோட்டங்களையும் மிக ஆழமாக தெளிவாக விவரித்துள்ளார்.

அதனைப் பற்றி தொடர்ந்து வரும் பகுதியில் எழுதவுள்ளேன் அதற்கு முன்பாக ஆசிய பாணி உற்பத்தி முறை பற்றிய மார்க்ஸ் ஏங்கெல்ஸ் இன் கருத்துகளை பார்ப்போம்.

1). நிலத்தின் தனி உடைமை இல்லாமை

2).செயற்கையான நீர்ப்பாசன வசதிகளை சார்ந்து இருந்தது.

3).'மாற்றமே இல்லாமல் ஒன்றுக்கு ஒன்று தொடர்பே' இல்லாமல் தனித்தனி அணுக்களாக இருந்த கிராமங்களை கொண்ட சமூகம் அது ; குறைவான வசதிகளோடும் மற்ற கிராமங்களோடு பெரும்பாலும் எத்தகைய தொடர்பு இல்லாமல் இவை இருந்தன. சமூக வளர்ச்சிக்கு இன்றியமையாத வேட்கைகளோ முயற்சிகளோ இக்கிராமச் சமூகங்களுக்கு

 இருக்கவில்லை.

4). விவசாயத்திற்கும் கைத்தொழிலுக்கும் இடையே தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வந்த ஐக்கியம் மரக்கலப்பையும் கைத்தறியையும் இதர கைத்தொழில் கருவிகளுக்கும் இடையே தொன்று தொட்டு இருந்து வந்த பிணைப்பும் "மாற்ற முடியாத வேலை பிரிவினையை நிலவியதும் "(நிலம் எல்லோருக்கும் பொதுவாக இருந்த நிலை) தன்னிறைவு பெற்று தனிமைப் பட்டு கிடந்த கிராம சமூகங்களின் அடிப்படையாக அமைந்தன.

5). வேளாண்மை உற்பத்தியாளர்களுக்கும் தொழில் உற்பத்தியாளர்களுக்கும் கிராம ஊழியர்களுக்கும் இடையில்  பரம்பரையாக நடந்து வந்த பண்டப் பரிவர்த்தனை மற்றும் பரஸ்பர ஊழியம்; அதனால் சந்தைக்கான உற்பத்தி என்பது முழுக்க முழுக்க தோற்றம் பெறவில்லை.

6). ஊர்களும் நகரங்களும் வெறும் ராணுவ முகாம்களாக காட்சி அளித்தன.

7). இக்கிராம சமூகங்கள் மாற்றத்தை எதிர்த்து வந்தன இந்த கிராம சமூகங்கள் சுய வளர்ச்சி கொண்டு சமூக நிலைமைகளை மாற்றவே முடியாத இயற்கை விதியாக மாறிவிட்டன. 

இவ்வாறு இந்திய சமூக நிலையானது பழங்காலம் தொட்டு 19 ஆம் நூற்றாண்டில் முதல் 10 ஆண்டு வரை மாறாமல் இருந்து வந்ததாக இந்த இடத்தில் குறிக்கப்படுகிறது.


இந்தியாவின் சமூகக் கட்டமைப்பு முழுவதையும் இங்கிலாந்து உடைத்து விட்டது என்று வலியுறுத்தும் மார்க்ஸ் பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவில் அரசியல் ஒற்றுமையை உருவாக்கியுள்ளது. இந்த ஒற்றுமை ஆங்கிலேயரின் வாள் வலிமையால் திணிக்கப்பட்டு மின்தந்தியால் வலுவூட்டப்பட்டு நீடிக்க வைக்கப்பட்டுள்ளது. 

புராதான சமூகங்கள் அனைத்தும் ஒரே வகைப்பாட்டிற்குள் அடைத்து விட முடியாது மாறாக அவை அனைத்தையும் ஒன்றாக பரிசீலித்தால் வகையினம் என்ற அளவிலும், காலத்தில் வேறுபடுகின்ற சமூகக் குழுக்களின் சங்கிலித் தொடராக அவை அமைகின்றன அத்துடன் அடுத்தடுத்து வளர்ச்சி கட்டங்களையும் அவை சுட்டிக் காட்டுகின்றன என்பதை காண முடியும்... விவசாய சமூகங்கள் சமூக அமைப்பின் புராதான வடிவத்தில் இறுதி கட்டத்தை சேர்ந்த என்ற முறையில் இரண்டாம் நிலை சமூக உருவாக்கத்தின் மாறுதல் காலகட்டத்தை சேர்ந்தவையாக இருக்கின்றன அதாவது பொது சொத்தை அடிப்படையாகக் கொண்ட சமூகத்திலிருந்து தனி சொத்தை அடிப்படையாகக் கொண்டு சமூகத்திற்கு மாறுகின்ற இடைநிலைக் கட்டத்தை சேர்ந்தவையாக இருக்கின்றது என்று மார்க்ஸ்  மீண்டும் எழுதுகிறார்(பக்கம் 24).

அதே நேரத்தில் கிழக்கு இந்தியாவில் அதாவது இந்தியாவில் காணப்படும் இந்த கிராம சமுதாயங்கள் பொருளாதார சமூக அமைப்பின் இறுதி கட்டத்தில் அல்லது இறுதிக்காலத்தில் இருக்கின்றன என்றும் அவர் விவரித்துள்ளார்.  மேலும்சில நூல்களிலிருந்து....

”புராதன சமூகங்கள் ஒரே மாதிரியான பாணியில் அமையவில்லை. மாறாக, ஒட்டு மொத்தமாக பார்த்தால், அவை தொடர்ச்சியான சமூகத்தின் ஒன்றிணைந்த குழுக்களால் (social groupings), வேறுபட்ட விதத்திலும் , வேறுபட்ட முதிர்ச்சி நிலையிலும், என தொடர்ச்சியான வளர்ச்சிக் கட்டங்களை குறித்தன. இதில் ஒரு வகை, பெரும்பாலும் எல்லோரும் ஏற்றுக் கொள்ளும், ‘விவசாய சமூகம்’, ரஷ்ய பாணி சமூகமாகும். இதற்கு இணையான மேற்கத்திய சமூகம் ஜெர்மானிய பாணி சமூகமாகும். இது மிக இளையதாகும்.
ஆசியாவில், ஆப்கன் போன்ற நாடுகளில், ‌’கிராம சமூகம்’ இருந்தது. ஆனால் அவை எல்லா இடங்களிலும் மிக இளைய வடிவமாகும். ஏனெனில் அவையே தொன்மையான சமூக அமைப்புகளில் கடைசி வடிவமாகும். புராதன சமூக அமைப்புகளின் கடைசி கட்டத்தில், விவசாய சமூகமே இரண்டாம் தர சமூகமாக மாறும் கட்டத்தில் இருந்தது. அதாவது பொது சொத்து அடிப்படையிலான சமூகத்திலிருந்து தனி சொத்து அடிப்படையிலான சமூகமாக மாறும் நிலையிலிருந்தது. இந்த இரண்டாம் தர அமைப்பு அதன் தொடர்ச்சியான அடிமைகள் மற்றும் பண்ணை அடிமைகள் அடிப்படையிலான சமூகங்களையும் உள்ளடக்கி இருந்தது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். (P.144-145). “என்கிறார் மார்க்ஸ்.
எனவே , ‘அடிமை சமூகம்-நிலப்பிரபுத்து சமூகம்-முதலாளித்துவ சமூகம்’ அல்லது ‘ஆசியபாணி சமூகம்’- முதலாளித்துவ சமூகம் என்ற இரண்டுதான் இந்திய வரலாற்றைப் பற்றிய மார்க்சிய புரிதலின் துவக்கமும் முடிவுமாகும் என மந்திரக் கோல் வீசுவது மார்க்சியத்திற்கு எதிரானதாகும். எனவே இந்த சூத்திரத்தை மீண்டும் மீண்டும் கூறுவது, உண்மை தரவுகளைக் கொண்டு அரும்பாடுபட்டு மேற்கொள்ள வேண்டிய ஆய்வுகளுக்கு மாற்றாகாது. இதனை இந்திய வரலாற்றின் மார்க்சிய மாணவர்கள் கட்டாயம் அறிந்திருக்க வேண்டும்.
அந்த குறிப்புகள், பரிணாம வளர்ச்சி அடிப்படையில், ஆசிய சமூகம் பற்றி பொதுவாகவும், இந்திய சமூகம் பற்றி குறிப்பாகவும் போதுமான அளவில் உள்ளொளி செலுத்தியுள்ளன. ’கீழைத் தேய ஒடுக்குமுறை அரசு’ அமைப்பில் சொத்து என்ற ஒன்று சட்டப்படி இல்லை என்று கூறுவதை நோக்கி செல்வதாக உள்ளது. உண்மையில் பூர்வீக குடிகள் அல்லது பொது சொத்து என்பதே சொத்து உருவாவதற்கான அடிப்படை ஆகும். பெரும்பாலான இடங்களில் சிறு சமூகங்களுக்குள் தொழிலுற்பத்தி மற்றும் விவசாயம் இரண்டும் இணைந்தே சொத்துக்களை உருவாக்கின. இவை தன்னிறைவு பெற்றதாகவும், உற்பத்தி மற்றும் உபரி உற்பத்தி மீதான கட்டுப்பாடுகளை தமக்குள்ளேயே கொண்டதாகவும் இருந்தன.’
‘இதன் ஒரு பகுதி உபரி உழைப்பு’, இறுதியில் தனிமனிதனாக உருவான உயர் சமூகத்திற்கு சொந்தமாக இருந்தது. இந்த உபரி உழைப்பு, நன்றி கடனாகவும், ஒற்றுமையின் புகழுக்காகவும், எதேச்சாதிகாரத்திற்கான ஒரு பகுதியாகவும், கடவுளாக காட்டப்பட்ட பூர்வீக குடிகளின் கற்பனையான நிறுவனத்திற்கான ஒரு பகுதியாகவும் , பொது உழைப்பு வடிவில் தரப்பட்டது.’ .என்கிறார் மார்க்ஸ்.(p.70)
கிழக்கத்திய அடிமை முறையையும் , ஐரோப்பிய அடிமை முறையையும் மார்க்ஸ் ஒப்பீடு செய்திருப்பது சிறப்பானதும் முக்கியமானதும் ஆகும்.
இது ஆசியபாணி, ஸ்லாவோனிய பாணி, பண்டைக்கால தன்னாட்சி குடியரசுகள், ஜெர்மானிய பாணி அனைத்துக்கும் பொருந்தும். அதாவது வேலை (உற்பத்தி) செய்பவனுக்கும்(அல்லது தன்னைத்தானே மறுஉற்பத்தி செய்து கொள்பவன்), உற்பத்தி மறு உற்பத்தி செய்வதற்கான நிலைமைகளுக்கும் இடையிலான உறவு, அவை அவனுக்கே சொந்தம் என்பதையே உண்மையில் சொத்து என்பது காட்டுகிறது.எனவே உற்பத்தி செய்வதற்கான நிலைமைகளுக்கேற்ப சொத்து வெவ்வேறு விதமான வடிவங்களை எடுக்கிறது. உற்பத்தியின் நோக்கம், உற்பத்தியாளரையும், உற்பத்தியாளர் உயிர் வாழ்வதற்கான புற நிலைகளையும் சேர்த்து மறு உற்பத்தி செய்வதே. ……அடிமை முறை, பண்ணை அடிமை முறை மற்றும் இதர., இங்கே உழைப்பவரே மூன்றாவது ஒருவருக்காகவோஅல்லது சமூகத்திற்காவோ தனது உற்பத்தி செய்வதற்கான இயற்கையான நிலைகளுடன் முன்வருகிறார். இதனால் இங்கு சொத்து, சுதந்திரமாக உழைப்பவனுக்கும், அவனது புறநிலைக்கும் உறவாக இனியும் நீடிப்பதில்லை. அது இப்போது முதல் நிலையிலிருந்து இரண்டாம் நிலைக்கு சென்று விடுகிறது. இதுதான் சமூகத்தின் மூலமும் சமூக உழைப்பின் மூலமும்உருவாக்கப்பட்ட  சொத்தின் அறிவுபூர்வமான, தேவையான முடிவு [முடிவாக இருந்தாலும்] ( அடிமை சமூகத்தின் இந்த பண்பு பொதுவான கிழக்கத்திய அடிமை முறைக்கு பொருந்தாது. ஏனெனில் இது ஐரோப்பியரின் கண்ணோட்டத்திலிருந்து உருவாக்கப்பட்டுள்ளது).(ப.95)
மார்க்ஸின் விவரங்கள் நமக்கு கிழக்கத்திய மற்றும் ஐரோப்பிய நாடுகளில் புராதன பொதுவுடைமை சமூகம் எவ்வாறு வர்க்க சமூகமாக மாறியது என்பதனை அறிவதற்கான ஒரு உள்நோக்கு பார்வையை மட்டுமே கொடுத்துள்ளது.
மார்க்ஸ், சமூக சொத்து எவ்வாறு பல்வேறு வழிகளில், அரசு மற்றும் தனியார் சொத்துக்களாக அதனுள்ளேயே வளர்ந்தன என்பதையும் , அவை வளர்ச்சி போக்கில் எவ்வாறு பிரிந்தன என்பதையும் விவாதிக்கிறார்.
“ஆசியபாணி சமூகம் நிச்சயமாக மிகவும் நீண்ட காலம், இறுக்கமாக நிலைத்துள்ளது. ‘இதற்கு அவை நிறுவப்பட்டிருந்த அடிப்படை கோட்பாடுகளே காரணம். அதாவது தனிமனிதன் சமூகத்திலிருந்து சுதந்திரமாக இருக்கவில்லை; உற்பத்தி சுழற்சி தன்னிறைவு பெற்றதாக இருந்தது; விவசாயம் மற்றும் கைத் தொழில்களிடையே நிலவிய ஒற்றுமை… மேலும் சில…ஒரு தனிமனிதன் சமூகத்துடனான தனது உறவையும் பொருளாதார சூழலையும் மாற்றிக் கொண்டால் நேர்மாறாக அதன் இயக்கவியல்படி அவனது பொருளாதார சூழல் மாற்றப்படும் அதாவது அவன் வறிய நிலை போன்றவற்றிற்கு ஆளாவான். (P.83)”
ஏன் இந்த” நீண்டகால இறுக்கமான நிலைப்பு” ஆசியாவில் நடந்தது? இதற்கு சாதி முறை ஒரு குறிப்பான , முக்கியமான பங்கை செலுத்தி உள்ளது என்பதை அந்த விவரங்கள் கோடிட்டு காட்டுகின்றன. மார்க்ஸ் அதற்கு பின்வரும் விவரங்களைத் தருகிறார்:
“பண்டைய கால அரசுகளில் பூர்வீக குடிகள் இரண்டிலொரு விதத்தில் , அதாவது இரத்த உறவுகளாலோ அல்லது இடத்தினாலோ, (kindhip or locality) அமைந்தன. இடத்தை அடிப்படையாகக் கொண்ட பூர்வீக குடிகளுக்கு, இரத்த உறவு பூர்வீக குடிகள் வரலாற்று ரீதியில் முற்பட்டவர்கள். மேலும் எல்லா இடங்களிலும் அவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். அவர்களின் மிக மோசமான மற்றும் இறுக்கமான சாதி நிறுவனங்கள் அவர்களை ஒருவரிடமிருந்தே இன்னொருவரை பிரித்து வைத்திருந்தது, அவர்களுக்கிடையே திருமண உரிமை மறுக்கப்பட்டிருந்தது, மிக வேறுபட்ட நிலைகளில் வைக்கப்பட்டிருந்தனர், ஒவ்வொருவரும் தங்களுக்கே உரிய மாற்ற இயலாத தொழிலை மேற்கொண்டிருந்தனர்.” (P.76-77).
மீண்டும் நிச்சயமாக புராதன சொத்து விசைகள் உற்பத்தியை கட்டுப்படுத்திய பல்வேறு புற சூழல்களிலிருந்து, சொத்து உறவுகள் என்பதற்குள் மூழ்கிவிட்டன. அவையே பல்வேறு வகைப்பட்ட சமூகங்களுக்கும் பொருளாதார அடிப்படை ஆகும். அவையே குறிப்பிட்ட சமூக அமைப்புகளாக முன்னதாக கருதப்பட்டன. இந்த அமைப்புகள், உழைப்பவன் தானே தன்னை உற்பத்திக்கான புற நிலைகளின் முன் வைத்துக் கொள்ளும் போது குறிப்பிடத்தக்க அளவில் மாற்றமடைந்தன. (அடிமை முறை மற்றும் பண்ணை அடிமை முறை போன்றவற்றில் இருந்தது போல). இதன் விளைவாக முதன்முதலாக சொத்து (நில சொத்து)தான் தழுவியிருந்த எளிமையான பொது இயல்பை இழந்தது. மேலும் அதன் சுய அழிவுக்கு வந்தது. இரண்டாவதாக (உற்பத்தி கருவி சொத்துக்கள்) குறிப்பிட்ட வகை உழைப்பாளி- அதாவது கைத்திறன் மற்றும் அதன் தொடர்ச்சியாக உருவான உற்பத்தி கருவிகள் மீதான சொத்து – உற்பத்தி கட்டுப்பாடுகளின் சொத்திற்கு சமமாக விளங்கியது, இது அடிமை முறை மற்றும் பண்ணை அடிமை முறையில் இல்லை என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும். எனினும் இது சாதிய முறை என்ற வடிவில் ஒத்த எதிர்மறை வளர்ச்சிக்கு வழி வகுப்பதாக இருந்தது. (p.101-102). இரத்த உறவு பூர்வீக குடிகள் சாதி என்ற இறுக்கமான கட்டமைப்பாக வளர்ந்தனர். இது இரண்டு வகையான சொத்துக்கள் உருவாகி ஒத்த எதிர்மறையான வளர்ச்சிக்கு வழிவகுத்தன. இது தவிர்க்கவியலாமல், நீண்ட நெடிய காலத்திற்கு, இறுக்கமாக நிலைக்கும் சமூக பொருளாதார அமைப்பிற்கு வழிவகுத்தது. அதாவது மாற்றம் எய்துவதற்கான நிலையை முடிந்தவரை தடுக்கும் வகையில் இருந்தது. இதுவே இந்திய சமூக கூறுகள் குறித்து மார்க்ஸ் நமக்கு தரும் ஒருசில குறிப்புகள் ஆகும். எனினும் கிடைத்துள்ள தரவுகளைக் கொண்டு இதன் உண்மைத் தன்மைகளை ஆய்வு செய்ய இந்திய வரலாற்று மாணவர்களுக்கும் அறிஞர்களுக்கும் இவை குறிப்பிடத்தகுந்த அளவில் போதுமானவையே.

 இந்திய சமூகம் இன்னும் முதலாளித்துவத்திற்கு முந்தைய வலிமையான கூறுகளையும் தனக்குள்ளே கொண்டுள்ளது. முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில், முதலாளித்துவத்துக்கு முந்தைய சமூகத்தின் சாம்பலிலிருந்து வளர்ந்து, முந்தைய சமூகம், வளர்ந்து வரும் முதலாளித்துவ வாதிகளால் அழித்தொழிக்க பட்டது போல் அன்றி இந்தியாவில் முதலாளித்துவம் முதலாளித்துவத்துக்கு முந்திய சமூகத்தின் மேலடுக்காக உள்ளது. நூற்றாண்டுகளாக இந்த நாட்டை ஆண்ட பிரிட்டிஷ் காலனியவாதிகளோ, 1947ல் அதிகாரத்தை கைமாற்றிக் கொண்ட இந்திய, முதலாளித்துவ வர்க்கமோ, இந்தபழைய அமைப்பை உதைத்து தள்ளிவிடுவதை முதலாளித்துவ அமைப்பு சுதந்திரமாக வளர்வதற்கும் ஒரு முன்னேறிய சமூகத்தை படைபதற்கான முன் தேவையான இவை செய்ய வில்லை. அதனால் இன்றைய இந்திய சமூகம், சாதி, இன, பூர்வீக குடிகள் நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்துள்ள ஏகாதிபத்திய ஆதிக்கம் கொண்ட ஒருவித வினோதமான கலவையாகும். ஆகவே, இந்த பிற்போக்கு முதலாளித்துவத்துக்கு முந்தைய சமூக அமைப்பை, அனைத்து முற்போக்கு சக்திகளையும் ஒன்றுபடுத்தி அழிக்க வேண்டிய பொறுப்பு பொதுவுடமையாளர்கள் மீதும் விழுந்துள்ளது. மேலும், அதன்மூலம் புரட்சிகர சக்திகளை தங்களுக்குள் ஒருங்கிணைத்து, புரட்சியை நடத்தி முடித்து அதன் மூலம் சோசலிச மாற்றத்திற்கான சூழலை ஏற்படுத்தவேண்டும். அப்பொழுதே இந்த கேடுகெட்ட எல்லா பிற்போக்கு முடைநாற்றம் பிடித்த முறைமைகளும் அழித்தொழிக்கப்படும் உண்மாயாலும் எல்லோருக்கும் எல்லாம் என்ற நிலை ஏற்படும் சிந்தியுங்கள் தோழர்களே தொடர்ந்து விவாதிப்போம்...

ஆசிய பாணி உற்பத்திமுறை பற்றிய SOCயின் ஒரு பிரிவின் கதை மட்டுமல்ல SOCயின் நிலைபாடும் இதுவே இந்த லிங்கை அழுத்தி பெற்றுக் கொள்ளலாம்








No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்