மார்க்ஸ் ஒரு புரட்சியாளர்

 மார்க்ஸ் ஒரு புரட்சியாளர் ஆவார். முதலாளித்துவ சமூகத்தையும், அதன் அரசு இயந்திரத்தையும் தூக்கியெறிவதற்காகவும், உழைக்கும் மக்களின் நிலைமைகளையும் அவர்களின் தேவைகளையும் மக்களுக்கு உணரச் செய்ததில் காரல்மார்க்சின் பங்கு மிகவும் சிறப்பானதாகும். இதற்காக வெற்றி தோல்வியைப் பற்றி கவலைப்படாமல் அவர் தம் வாழ்நாள் முழுவதும் போராடினார். மார்க்சை பின்பற்றக் கூடிய கம்யூனிஸ்டுகளும் மார்க்சின் வழியில் மக்களின் நிலைமைகளையும் அவர்களது தேவைகளையும் புரிந்துகொண்டு மக்களுக்கு அதனை எடுத்துச் சொல்ல வேண்டும். மக்களின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் முதலாளித்துவ சமூக அமைப்பையும் அதனை கட்டிக்காக்கும் அரசு இயந்திரத்தையும் தகர்த்துவிட்டு ஒரு பாட்டாளி வர்க்க அரசுக்காகவும் சமூக அமைப்பிற்காகவும் பாடுபடுபவர்தான், மார்க்சை உண்மையிலேயே பின்பற்றக் கூடிய கம்யூனிஸ்டாக இருக்க முடியும். அதற்காகப் பாடுபடும் அதே வேளையில் உழைக்கும் மக்களின் உடனடியான தேவைகளுக்காக நிலவுகின்ற முதலாளித்துவ அமைப்பு வழங்கியுள்ள சட்டப்பூர்வமான வாய்ப்புகளையும் கம்யூனிஸ்டுகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும் சட்டப்பூர்வமான போராட்டங்களையும் சட்ட மறுப்பு போராட்டங்களையும் இணைக்கும் திறனையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். இதுவே மார்க்சிய லெனினியத்தை பின்பற்றுவதற்கான வழிமுறையாகும்.

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்