நாட்டின் வளமை படுத்த வந்த SEZ இன்று என்ன செய்துக் கொண்டுள்ளது-சிபி

நான் விவசாயிகள் பிரச்சினையை குறித்து தேடிய பொழுது நாட்டில் முதலாளித்துவ உற்பத்திமுறையை வளர்க்க சிறப்பு பொருளாதார மண்டலாம்(SEZ) அறிமுகப் படுத்தியது தராளமய கொள்கையை அமல்படுத்திய காங்கிரஸ் அரசு ஆனால் அந்த பயன் யாருக்காக இருந்தது?

அதனை பற்றியும் சிறு தேடுதல்

ஏப்ரல் - 1, 2000ல் அமலுக்கு வந்த இந்த இந்திய அரசின் ஏற்றுமதி - இறக்குமதி கொள்கை, இந்த சிறப்புப் பொருளாதார மண்டல கோட்பாடு தொலை நோக்குப்பார்வையுடன் தொழில்களை வளர்க்க அயல்நாட்டு மூலதனங்களை இந்தியாவிற்கு ஈர்க்க உருவாக்கப்பட்டதாகும். இந்த கொள்கை சிறப்புப் பொருளாதார மண்டலங்களை, உலக அளவில் போட்டிகளை சந்திக்க வல்லதாக மற்றும் ஏற்றுமதிக்கு இடர்பாடுகள் இல்லாத நிலைகள் இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடனும் உருவாக்க ஏதுவாக உள்ளது.

இந்தியாவில் 19 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் சிறப்புப் பொருளாதார மண்டல சட்டம் 2005 இயற்றப்படுவதற்கு முன்பே 64 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் உருவாக்கப்பட்டுவிட்டன. சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் சட்டம் 2005, அமலுக்கு வந்த பிறகு பல சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு கொள்கை அளவிலான ஒப்புதல்கள் அளிக்கப்பட்டுள்ளன.

இதனை முழுமையாக தெரிந்துக் கொள்ள இந்த இணைய தளத்திற்கு செல்லவும்

ஆக தோழர்களே விவசாயத்தை வளர்க்க எதையையும் செய்யாத அரசு பன்னாட்டு கம்பெனிகளிடம் கையேந்த சொல்கிறது இதை வளர்ச்சி என்று யார் சொல்வர்?.

இன்று பிஜேபியை எதிர்க்கும் ப்லரும் நேற்றைய காங்கிர்சை ஆதரிக்கின்றனர் இவை படு கேவலமாக உள்ளது. கீழ் காணும் கட்டுரை சிபிஎம் தோழரின் கட்டுரையே மூலம் சமரன்.

ஆங்கில ஆட்சியாளர்கள் கூட தனியார் கம்பெனிகளுக்காக விவசாயிகளின் ஒப்புதலை பெறாமலே நிலத்தை கையகப்படுத்த சட்டத்தைப் பயன்படுத்த துணியவில்லை. நிலம் கையகப்படுத்தும் சட்டத்திருத்த மசோதா 2015 பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக்க்கூட்டணி அரசாங்கம் கார்ப்பரேட் இலாபத்திற்கும், ரியல் எஸ்டேட் ஊக வணிகத்திற்கும் நிலங்களை எளிதான முறைகளில் கையகப்படுத்த ஏற்பாடு செய்வதாக இருந்தது. உண்மையில் அரசாங்கமானது காலனிய காலத்து நிலம் கையகப்படுத்தும் சட்டம் 1894ன் மிகக் கொடூரமான பிரிவுகளை மீண்டும் கொண்டு வந்தது. விவசாயிகள் மற்றும் நிலஉரிமையாளர்களின் ஒப்புதலை பெற வேண்டும் என்ற ஷரத்தை நீக்கியது. அத்துடன் சமூக விளைவின் மதிப்பீடு என்ற முறையையும் கைவிட்டது. திட்டங்களுக்கான வரையறையில் புதிய பிரிவு 10A ஆனது இதுபோன்ற அவசிய அடிப்படைகளிலிருந்து விலக்களிக்கும் அடிப்படையைக் கொண்டது. தொழிற்சாலை மையங்கள் உருவாக்கவும், அடிப்படை கட்டமைப்பு திட்டங்கள் போன்ற ஐந்து வகையானவைகளை PPP அரசு-தனியார் இணைந்து செய்யும் திட்டத்தில் சேர்த்தனர். பெரும்பாலான நிலம் கையகப்படுத்துதல் இந்த இருபிரிவுகளின் கீழ் அடங்கி விடுவதால் LARR 2013 சட்டத்தில் இருந்த குறைந்தபட்ச பாதுகாப்பு அடிப்படைகளை முழுவதுமாக செல்லாததாக்கி விட்டது. அதை எந்த வல்லுநர் குழுவும் இதை மறுபரிசீலனை செய்வதற்கான நிலையில் இல்லை.

தொழிற்சாலை மையங்கைளைப் பற்றிய விளக்கத்தை புதிய சட்டத்திருத்தத்தின் மூலம் மேலும் விரிவுபடுத்தியது. சாலை அல்லது இரயில் பாதையின் 1கி.மீ தூரம் வரை இருக்கலாம் என்று விளக்கமளித்தது. இதுபோன்ற திட்டங்களுக்காக உண்மையில் தேவைபடுகின்ற குறைந்தபட்ச சட்டவிதிமுறைகளைக் கூட மீறும் அடிப்படைகளைக் கொண்டதாக இந்த விளக்கங்கள் உள்ளன. பலவிதமான பயிர்கள் விளையக்கூடிய நல்ல விவசாய நிலம், மானாவாரிப் பயிர்கள் விளையும் நிலங்களையும் கூட எந்தவித தடையுமின்றி கையகப்படுத்தக் கூடியதாக உள்ளதால் உணவுப் பாதுகாப்புக்கு எந்தவிதமான கவசமும் இல்லை. நிலத்தின் உரிமையாளர் அல்லது நிலத்தைச் சார்ந்து வாழுபவர்களுக்கான மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வுக்கான சலுகைகள முற்றிலுமாக கைவிடப்பட்டுள்ளது. நிலப் பயன்பாட்டுக் கொள்கையை மத்திய அளவிலோ மாநில அளவிலோ உருவாக்குவதற்கான முன்மொழிதல்கள் கூட இல்லை. குடும்பத்தில் யாராவது ஒருவருக்கு வேலை என்பது ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் அதனது வாழ்வாதார நிலையிலிருந்த வேரோடு கெள்ளி எறிந்துவிட்டு ஒருவருக்கு மட்டும் வேலையென்று அடையாளத்துக்கு மட்டும் கூறுகிறது அரசு. அது நிலத்தை சார்ந்திருப்பவர்களான பெரும்பாலான மக்களைப் பற்றி கவலைப்படவில்லை. இலட்சக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் தொழில்மயமாக்கம் மற்றும் அதற்கான கட்டமைப்புகளுக்காக எடுத்துக் கொள்ளப்பட உள்ளன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக்க் கூட்டணி அரசின் இந்த நடவடிக்கை கார்ப்பரேட் கம்பெனிகளுக்கும், விலைமனை ஊகவாணிபர்களுக்கும், நிலத்தை கொள்ளையடிக்கும் மாஃபியா கும்பலுக்கும்தான் ஆதாயம் அளிக்கும். தங்களது நிலமும் தங்கள் வாழ்க்கைக்கான ஒரே ஆதாயமும் பறிபோகின்ற அச்சத்தில் விவசாய மக்களும், விவசாயம் சார்ந்த மக்களும் முன்னெப்போதும் இல்லாத அளவில் நாடுமுழுக்க பரந்த அளவில் எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர். நாடெங்கிலும் நிலமசோதாவிற்கு எதிராக பெரிய அளவில் கோபமும் கொந்தளிப்பும் நிலவி வருகிறது.

இதனடிப்படையில், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், சுரங்கங்கள், தொழிற்சாலைகள், நகரமயம் போன்றவற்றிற்காக பெரிய அளவிலான விளைநிலங்களையும், வனப்பகுதியையும் கைப்பற்றி மாற்றம் செய்யப்பட்டு வருவதை நாம் கவனிக்க வேண்டும. சிறப்புப் பொருளாதார மண்டலம் மற்றும் தொழிற்மயமாக்கலுக்காக என்று கூறி அடாவடித்தனமான விலைக்கு வாங்கி மனைவிற்பனையாளர்களுக்காக தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக கைப்பற்றப்பட்ட நிலங்கள் பயன்படுத்தாமல் இருப்பது இந்திய கணக்குத் தணிக்கை அதிகாரியால் அடையாளம் காட்டப்பட்டுள்ளது. 2014ம் ஆண்டுவரை சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக கைப்பற்ற்ப்பட்ட 45,635.63 ஹெக்டர் நிலங்களில், இதுநாள்வரை 28,488.49 ஹெக்டர் மட்டுமே பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. 17 மாநிலங்களில் இது சம்பந்தமாக அப்பட்டமாக விதிமீறல் செய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றில் ஒடிசாவில் மட்டும் 96,587 ஏக்கர் நிலங்கள் SEZக்காக கைப்பற்றப்பட்டு பயன்படுத்தாமல் இருப்பதாக கணக்குத் தணிக்கை அதிகாரி கூறியுள்ளார். ஒடிசாவில் 75,000ற்க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் சட்டவிரோதமாக அடமான முறையில் கைப்பற்றப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளில் 2% திட்டங்கள் மட்டுமே தொடங்கும் நிலையில் உள்ளன. சுரங்கங்களுக்காகவும், அது சார்ந்த பணிகளுக்கானதாகவும் கேட்ட நிறுவனங்கள் அவற்றின் மதிப்பை உயர்த்துவதில் மட்டுமே கவனம் செலுத்தினரே தவிர அந்த நிலங்களைப் பயன்படுத்தவில்லை. பொதுத்தேவைக்காக என்று பல ஹெக்டேர் நிலங்கள் SEZ அடிப்படையில் கைப்பற்றப்பட்டுள்ளது. பிறகு அந்த நிலங்களை வேறு காரியங்களுக்காக விற்றுவிட்டனர். சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கென்று கைப்பற்றி வேறு வேலைகளுக்கு மாற்றிக் கொண்டதில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் மற்றும் எஸ்ஸார் ஸ்டீல் நிறுவனங்கள் குறிப்பிடத்தக்கது. 2005ம் ஆண்டு சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கான சட்ட்ம் கொண்டுவந்த பிறகு 576 சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு சுமார் 60,374.76 ஹெக்டேர் நிலங்கள் நாடு முழுவதும் கைப்பற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில் 392 மண்டலங்களில் 152 மண்டலங்கள் மட்டுமே செயல்பாட்டுக்கு வந்துள்ளன. இந்த மண்டலங்களால் நாட்டின் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தகுந்த மாற்றம் எதையும் கொண்டுவரவில்லை என்று தணிக்கை அறிக்கைகள் கூறுகின்றன. நிலம் கையகப்படுத்தும் பிரச்சினை காரணமாக வெறும் 8% திட்டங்களின் வளர்ச்சிப் பணிகளே பாதிக்கப்பட்டதாக கூறிவருவதற்கு மாறாக, கிட்டத்தட்ட 804 தொழிற்சாலை திட்டங்கள் பாதிக்கப்பட்டதாக தகவல் உரிமைச் சட்டத்தின் வாயிலாக பெறப்பட்ட தகவல்கள் கூறுகிறது.

டெல்லிக்கும் மும்பைக்கும் இடையிலான தொழில் நகரங்கள் அமைப்பது என்ற திட்டத்தின்படி 6 மாநிலங்கள் ஊடாக கிட்டத்தட்ட 7லட்சம் சதுர கி.மீ நிலப்பறிப்பு அல்லது நாட்டின் விவசாய நிலத்தில் 38% த்தை கட்டாய நிலம் கையகப்படுத்தலுக்கு உள்ளாக்கப்படுவதாக கணக்கீடுகள தெரிவிக்கின்றன. கையகப்படுத்தும் நிலப்பரப்பைக் கவனித்தால் இங்கிலாந்தைவிட இருமடங்கு பரப்பிற்கும் மேலானது என்பதை புரிந்துக் கொள்ள முடியும். ஆந்திராவின் புதிய தலைநகரமானது கிட்டத்தட்ட 7000 சதுர கி.மீ பரப்பிலான பல்வகை பயிர்விளையும் நிலத்தில் அமைக்கப்படவிருக்கிறது. ஆந்திராவின் கடலோர சிறப்புப் பொருளாதார மண்டல தொடரமைப்பிற்காக 9 கடலோர மாவட்டங்களின் வழியாக 1.5 இலட்சம் ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. உத்திரப்பிரதேசத்தில் மட்டும் நிலம் கையகப்படுத்தலுக்காக 23,000ற்க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்பட உள்ளன என்று மதிப்பிடப்பட்டுள்ளது. யமுனா விரைவுச்சாலைக்காக 1.43 லட்சம் ஏக்கர் நிலமும், கங்கா விரைவுச் சாலைக்காக கைப்பற்றப்பட்ட நிலங்களில் குறிப்பிடத்தக்க அளவிற்கு கோல்.ப் விளையாட்டு மைதானம் மற்றும்ஃ பார்முலா ஒன் கார் பந்தைய இடத்திற்காக கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றில் மிகச் சொற்ப அளவிலான வேலைவாய்ப்பே கிடைக்கும். 100ஸ்மார்ட் நகரங்கள் உருவாக்கப் போவதாக சொல்லப்படுவதிலும் பெரிய அளவில் நில அபகரிப்பும், இடப்பெயர்ச்சியும் இடம்பெறும். 40% விவசாய நிலங்கள் நேரடியாக கட்டாய நிலம் கையகப்படுத்தலுக்கு உள்ளாகும. தரிசு நிலங்களை அளவிடுவது என்ற பெயரில் பல தலைமுறைகளாக அந்த நிலங்களில பயிர் செய்துவரும் சிறுகுறு விவசாயிகளை வெளியேற்றுவதற்கான வேலைகள் நடந்து வருகின்றன. இது உணவுப் பாதுகாப்பிற்கும் இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்திற்கும் பெரிய பாதிப்புக்களை ஏற்படுத்தும்.

நிலம் கையகப்படுத்தல் என்பது புராதன மூலதன திரட்டல் அடிப்படையிலான முக்கிய ஆதாரமாகவும், மக்களின் செல்வத்தைப் பிடுங்கி கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைக்கும் வேலையாகவும் திகழ்கிறது. கட்நாடகாவின் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு 2011ம் ஆண்டு ஒருங்கிணைந்த விவசாய வியாபார வளர்ச்சித் திட்டம் என்ற சுவாரஸ்யமான திட்டம் ஒன்றை அறிவித்த்து. அதற்கான வரைவுத்திட்டத்தில் சிறப்பு சுற்றுலா வளர்ச்சி மண்டலங்கள் அமைப்பது குறித்தும் அதற்காக பெருமளவிலான விவசாய நிலங்களை கையகப்படுத்தி “மாட்டு வண்டிப் பயணம்” “விலங்குகளுக்கு உணவூட்டல்” போன்றவற்றை அமல்படுத்தப் போவதாக வெட்கமின்றி அறிவித்தார். இதுதான் பாஜக அரசு உழவுத் தொழிலை குறைக்க எடுக்கும் நடவடிக்கை.

முடிவுரை:

பாஜக தலைமையிலான தே.ஜ.கூ அரசு விவசாயிகளை ஓட்டாண்டி ஆக்குவதற்கான கொள்கைகளை திட்டமிட்டு முன்னெடுத்துச் செல்கிறது. விவசாயத்தின் மூலம் வரும் தேசிய உற்பத்தி 15% ஆக இருக்கையில், 60% மக்கள் அதைச் சார்ந்து இருக்கின்ற நிலைமையை மாற்றியமைக்கும் வகையில் கிராமப்புற மக்கள்தொகையை குறைக்க வேண்டும் என்று நிதியமைச்சர் இன்னொரு எல்லைக்கு கருத்து தெரிவிக்கிறார். இது முறையான வேலைவாய்ப்புகளை உருவாக்கி சமூகப் பாதுகாப்பை உத்திரவாதப்படுத்தும் அடிப்படையிலான திட்டம் அல்ல. மாறாக, சமூகப் பாதுகாப்பற்ற ஏதில்களாக பெரும்பான்மை மக்களை ஆக்கி கூலிப்பட்டாளமாக பயன்படுத்தும் நோக்கத்திலானது. மோசமான நிலைமைகளில் வேலைசெய்ய நிர்பந்தப்படுத்தக் கூடியது. 2010 ஆண்டிற்குப் பிறகான பொருளாதார மந்தப்போக்கை தொடர்ந்து, 2011-12 காலத்தில் இருந்து 2018 காலகட்டம் வரை விவசாயம் அல்லாத துறைகளில் இருந்து அதிகபட்சம் 380 இலட்சம் வேலைவாய்ப்புகள் கூடுதலாக உருவாக வாய்ப்பு இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால், இதே காலகட்டத்தில் 510 இலட்சம் பேர் கூடுதலாக வேலைவாய்ப்பு தேட இருக்கும் நிலையில், இந்த வேலைவாய்ப்பு உருவாக்கம் போதுமானதல்ல. இவ்வாறு தொழிற்துறை மற்றும் சேவைத் துறையில் போதுமான வாய்ப்புகள் கிடைக்காத நிலையில். கூடுதலான 120 இலட்சம்பேர் குறைந்த உற்பத்தித் திறன் கொண்ட விவசாயத்தையோ அல்லது வேலையில்லா பட்டாளமாகவோ இருக்க வேண்டிய கட்டாயத்த்துக்குள்ளாகிறார்கள். இவர்களில் சிலர் விவசாய வேலையை நாடிச் செல்லாத நிலையில், இந்தியாவின் வேலையில்லாதோர் எண்ணிக்கை விகிதமானது தற்போதைய 2.2% நிலையில் இருந்து வருமாண்டுகளில் உயரக்கூடும. நரேந்திர மோடியும், பாஜகவும் கீன்சியக் கொள்கை அடிப்படைகளான சேமநலம், அரசு முதலீடு, வேலைவாய்ப்பு உருவாக்கம் என்பதில் கிஞ்சித்தும் அக்கறை காட்டுவதில்லை. நாஜிக்களின் பாணியிலான உச்சஸ்தாதியிலான பிரச்சார வடிவத்தையே அது கையாளுகிறது. மக்கள் மிக்க் கடுமையான துன்பத்தில் இருக்கும்போது, அரசு இயந்திரம், கார்ப்பரேட் ஊடகம் மற்றும் சமூக ஊடகம் அனைத்தும் ஒரு மாயதோற்றத்தை உருவாக்க முயற்சிக்கின்றன. பிரித்தாளும் அரசியல் மற்றும் மதவாத போக்குதான் இன்றைய நிலைமையாக இருக்கிறது. நிலம், தொழிலாளர், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின்மீது தாக்குதல் குவிந்திருக்கிறது. நிலஉரிமைக்கான இயக்கம் என்ற பெயரில் பிரச்சினையை ஒட்டிய ஒற்றுமை கட்டியமைக்கப்பட்டுள்ளது. நிலப் பறிப்புக்கு எதிராக, நில உரிமைக்காக மற்றும் பயன்படுத்தப்படாமல் கிடக்கும் கையகப்படுத்தப்பட்ட நிலத்தை, மீண்டும் கோருதல், மாற்றுக் கொள்கைகளுக்காகவும் போராட்டங்களை அது முன்னெடுக்கும். இது, இந்துத்துவ சக்திகளின் மத ரீதியிலான பிரித்தாளும் திட்டத்தை எதிர்த்துப் போராடும். நாடுதழுவிய வேலை நிறுத்த்த்திற்கு தொழிற்சங்கங்கள் அறைகூவல் விடுத்துள்ளன. விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களின் இயக்கங்ள் 2015 செப்டம்பர் முதல் தேதியை கோரிக்கை நாளாகக் கடைபிடிக்க அழைப்பு விடுத்துள்ளது. குறிப்பிட்ட பிரச்சினைகளை முன்வைத்து எதிர்ப்பியக்கங்களை நடத்துவதோடு 2015 செப்டம்பர் 2ந்தேதி நடைபெறும் தொழிலாளர் வேலைநிறுத்த்த்திற்கு ஆதரவுக்கரம் நீட்டுகின்றனர். விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் ஜனநாயக சக்திகளை மேலும் மேலும் இணைத்துக் கொண்டு ஒருங்கிணைந்து நடவடிக்கைகளின் மூலம் புதிய தாராளமயக் கொள்கையை திட்டவட்டமாக எதிர்க்க வேண்டும்.

வீஜூ கிருஷ்ணன்

ஏப்ரல் 2015 முதல் ஜூன் 2015.


No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்