இன்றைய சமூகத்தில் சிந்தனைமுறை;ஜாதியம் மேலும்

 நேற்றைய கிளப் அவுஸ் விவாதம்.

ஈழ தோழர்கள் பேச அழைத்தனர் இன்று ஈழத்தில் மேலேழும் ,"ஜாதி பிரச்சினை" பற்றி அவர்களுக்கிடையில் விவாதத்தை கேட்டதோடு அவர்களின் மூலம் இன்று கம்யூனிஸ்ட் கட்சி மீது அவர்கள் வைத்த விமர்சனம் மற்றும் இன்று பிரதான பிரச்சினையாக ஜாதியம் பேசப்படுவதில்லை அவை ஏன் என்று தோழர் பாரதி முன்வைத்து பேசினார். அதற்கு பதிலளிக்குமுகமாக தோழர் வேலன் பேசினார். மற்றும் தோழர்கள் ஹரி, பகீர் தங்களின் அனுபவங்களை பகிந்துக் கொண்டனர். இதில் பல்வேறு வகையில் மார்க்சிய வழியில் பயணிக்க தவறியதே மற்றும் சரியான மார்க்சிய பார்வையை தோழர்களுக்கு அளித்து வளர்தெடுக்க வேண்டுமென்று தோழர் ரவீந்திரன் பேசினார். மற்றும் தோழர் சுப்பிரமணி இன்னும் சிலர் பேசி விவாதம் 3 மணி நேரத்திற்கு மேல் செல்லவே விவாதத்தை முடித்துக் கொண்டோம். முழுமையாக கேட்க கீழ் காணும் லிங்கில் கேட்டு கருத்திடவும் தோழர்கள்.

நேற்றைய வகுப்பை முழுமையாக ஒலி வடிவில் இந்த லிங்கில்.

அவர்களின் உறையாடலை கேட்டிருந்தால் எமது பதிலாக சின்ன முன்னேடுப்பு 

ஜாதியம் ஓர் தேடல்

அறிமுகம்:- அண்மையில் சாதிவெறி கொடுமை நிகழ்ந்தேறிய வேங்கைவயல் கிராமமாகட்டும் ரோகினி தியேட்டரில் சாதி ரீதியான வன்மமாகட்டும் இவை பொருளாதார அடிப்படையில் என்ன முகாந்திரமுள்ளது? உண்மையில் அமெரிக்காவில் நிறவெறி பாகுபாட்டிற்கு என்ன பொருளாதார அடிதளமுள்ளதா?(சிந்தனை ரீதியான மேற்கட்டுமானமல்லவா?) மேலும் அவை நிலவும் ஒடுக்குமுறையின் அடிப்படை ஏன்? அவைதான் இங்குள்ள சாதி ஒடுக்குமுறை பலகாலமாக இங்கு நிலவும் ஒடுக்குமுறை புரிந்துக் கொள்வோம்.

வரலாற்று வழியில் புரிந்துக் கொள்வது

நான் இந்திய சாதி அமைப்பு முறையை தேடிய பொழுது அதற்கான பிர்ச்சினை நமது கல்வியிலே உள்ளது என்றறிந்து அதனையும் இதன் ஊடாக அறிந்துக் கொள்ள ஒரு முயற்ச்சியேதான் இந்த கல்வி பற்றி தேடுதலும்.

1765இல் வங்காளதிலும் பீகாரிலும் கிழக்கிந்திய கம்பெனியின் ஆளுகையின் கீழ் வந்தபோது இந்து வாரிசு உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது கடினமாக இருந்ததை கண்டனர்,எனவே  அந்நாட்களில் மிகவும் அதிகார உரிமை படுவதாக கருதப்பட்ட மனுதர்மத்தில் உள்ள கருத்துகளை பிரிட்டிஷ் தங்களின் நலனுக்காக 1776இந்து சட்டத்தொகுப்பாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தனர்.இதன் மூலம் பிரிட்டிஷ்சார் இந்துக்களின் சிவில் சட்டங்களை செயல்படுவது வதற்க்கு இந்து சமய சாஸ்திர வல்லுனர்களையும் பண்டிதர்களும் பயன்படுத்தியது போன்றே முஸ்லிம் சட்டங்களை செயல்படுத்துவதில் மௌலிகளை பிரிட்டிஷ் நீதிபதிகளுக்கு துணையாக இருந்தனர்.

பண்டைய சட்டங்களையும் பழக்கவழக்கங்களில் புரிந்து கொள்ளும் ஆரம்பகால முயற்சிகள் அனேகமாக 18-ம் நூற்றாண்டு வரை நீடித்தன. இதன் விளைவாக 1776 கல்கத்தாவில் வங்காள ஆசியக் கழகம் நிறுவப்பட்டது. கிழக்கிந்திய கம்பெனியை சேர்ந்த சேர் வில்லியம் ஜோன்ஸ் என்ற அதிகாரி தான் அந்த கழகத்தை நிறுவியவர். 1785 ல் வில்கின்சால்  பகவத் கீதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது.

இன்றுள்ள பல போக்குகளும் ஆங்கில ஆட்சியும்

ஆங்கில ஆட்சியில் அரசு அலுவலர்களும் சட்டமன்ற பதவிகளும் பார்ப்பனர்களுக்கு பார்ப்பனர் அல்லாதார் என்ற சண்டை சச்சரவுகளுக்கு இடையில் இவையெல்லாம் காலனிய அரசு அதிகார கட்டமைப்பில் தத்தமக்குரிய பங்கேற்பு கோருவதற்கான என்பதை தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். இது வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கோரிக்கையின் இன்னொரு பரிணாமம் இதில் முதல் பயனை உய்தவர்கள் பிராமணர்கள் இருந்ததில் வியப்பில்லை.

1860 முதல் இங்கு அறிமுகப்படுத்தப்பட்ட நவீன கல்வி நவீன பொருளாதாரம் நவீன அரசியல் நிறுவனங்கள் ஆகியவற்றின் முதற் பயனை பிராமணர்களே நுகர்ந்தனர். இங்கு அதற்குமுன் பிராமண சிந்தனை போக்கும், நிலப்பிரபுத்துவ ஆதிக்கம் இருந்தது. இங்கே பிராமணக் குடும்பங்கள், வேளாளர் நிலப்பிரபுத்துவதுடன் முரண்பாடு கொண்டிருந்தனர்.

நவீன கல்வி பிராமணர்களுக்கு அடுத்த நிலையில் இருந்த வேளாளர்கள் விரைவாக நலன் பெற்றனர். இப்போது காலனிய அரசு அதிகாரத்தின் இளைய பங்குதாரர்களாக வேளாளர்கள் ஆவதில் பிராமணர்களுடன் முரண்பட்டனர். 

பணப்பயிர் பொருளாதாரத்தின் விளைவாக கவுண்டர், நாயுடு, நாடார், வன்னியர், செட்டியார் ஆகிய ஜாதிகளில் இருந்த பணக்கார விவசாயிகள், வட்டி முதலாளியாக, ஆலை முதலாளியாக வளர்ந்தனர். இத் தோற்றமாறனது, அதுவரை பிராமணர்கள் மட்டுமே செய்துவந்த வட்டி முதலாளி, தரகு வணிகர், ஆலை முதலாளி ஆகிய வர்க்கங்கள் இந்த ஜாதிக்குள்ளும் தோன்றின. அந்த ஜாதிக்குள் இருந்த சிறுபான்மை இவ்வாறு புதிய வர்க்கமாக உருவெடுத்தனர். எனினும் இந்த புதிய வர்க்கம் தத்தம் பழைய ஜாதி அடையாளத்தை இழந்து விடவில்லை. அதற்கு மாறாக ஜாதியில் உள்ள பெரும்பான்மையான மக்களின் பலத்துடன் புதிய ஜாதிய கோரிக்கைகளை முன் வைத்தனர்.

புதிய பொருளாதார தகுதியுடன் புதிய கலாச்சார தகுதியும் இந்தப் புதிய வர்க்கங்கள் தோன்றின, எனவே இது காலனிய அரசு அதிகார கட்டமைப்பில் அரசியல் பொருளாதார நிலைகளில் பிரிட்டன் ஏகாதிபத்தியத்தின் கீழ் உள்ள பிராமண, நிலப்பிரபுத்துவ, தரகு வணிக, வட்டி முதலாளிகளின் ஆலை முதலாளிகளின் நலன்களை முன்னிறுத்தும் வேலையாகும். இருந்தும் பிராமணர் பிராமணர் அல்லாதோர் என்ற தொடர் எதிர்ப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது பல்வேறு சாதிகளில் இருந்து தோன்றிய பணக்கார விவசாயிகளும் முதலாளிகளும் படைப்பாளிகளும் பிராமண ஆதிக்கத்தை எதிர்க்க முனைந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது. எனவே இத்தகைய எதிர்ப்பை காலனி ஆதிக்க ஆதரவு என்ற பரந்துபட்ட அடைப்புக்குள் காண வேண்டும்.

முதல் காலகட்டத்தில் சுயமரியாதை இயக்கத்தின் லட்சியமாக வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் பிராமணர் கலாச்சார எதிர்ப்பு அரசு ஆதரவு பார்ப்பனர் அல்லாதவர்கள் இடையே உள்ள ஜாதி வேறுபாடுகளை களைதல், சமயச் சீர்திருத்தங்கள் வருண சிரம ஒழிப்பு என்பனவாக இருந்தன. 

இன்றும் சாதி ஒடுக்குமுறை இருந்தாலும் இந்த ஜாதியில் தோன்றிய புதிய வர்க்கங்களான அதிகாரிகளும் முதலாளிகளும் வணிகர்களும் தத்தம் நலன்களை அடைந்து கொள்வதில் ஜாதியின் எல்லா மக்களையும் பயன்படுத்திக் கொள்ளும் போக்கு பிரதானமாக உள்ளது.

புதிய மேல்நிலை வர்க்கங்கள் சாதிகளை கடந்து தமக்குள் ஒருங்கிணைவு ஏற்படுத்திக் கொண்டனர் இதுவே பிராமணரல்லாதோர் என்ற பெயரில் ஒளிந்து கொண்டது.

அதுமட்டுமின்றி பிராமணர் இடத்தில் உள்ள மேல்நிலை வர்க்கத்தில் இவர்களும் உறவு கொண்டுள்ளனர்.ஆனால் உழைக்கும் ஏழை எளிய மக்கள் எல்லா ஜாதி பிரிவினருக்கிடையே உள்ளனர், அவர்கள் இன்று ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் இந்த பல்வேறு நிலைகளில் இருந்து ஒன்றுபடுத்த வரர்க்கங்களாக அணி திரட்டுவது பெரும்பாடாக உள்ளது.

ஒரே ஜாதிக்குள் இருக்கும் முதலாளியை, அதிகாரியை முதலாளியாகவும் அதிகாரியாகவும் பார்க்காமல், தன் ஜாதி காரணமாக மட்டுமே பார்க்கும்படி பாமரமக்கள் பழக்கப் படும்வரை ஜாதியானது வர்க்க அணி சேர்க்கைக்கும் தடையாக இருக்கும் என்பதில் சந்தேகப் பட தேவையில்லை. இதனை பேசியவர் கவனித்தில் கொண்டிருந்தால் சிறாப்பாக இருந்திருக்கும் என்றுக் கூறி கொள்கிறேன்.

 

மேலும்

தலித்'என்ற பெயரில் அணிதிரள்வது முற்போக்கானது சமூகவிடுதலைக்கு அவசியமானது. உயர்சாதியை எதிர்க்க உதவுகின்றது’’எனப் பலவாக தலித்திய வாதிகள் குறிப்பிடுகிறார்கள்இந்தியாவிலும் தமிழ் நாட்டிலும் ஏகாதிபத்திய எடுபிடிகளால்திட்டமிட்டுஉருவாக்கப்பட்ட''தலித்தியத்''தைத்தான்  இன்று மார்க்சியவிரோதிகள் உயிர்மூச்சாக உயர்த்திப்பிடிக்கிறார்கள்.தலித்திய வரலாறும் அதன் உருவாக்கமும் ஏகாதிபத்திய கிறிஸ்தவ நிறுவனங்களால் அமெரிக்க கருப்பின மக்களுக்குள் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது என்பதும் தலித்திய வரலாறாகும்.

தலித்என்பதுதனக்குள்சாதிஒடுக்குமுறையைபேணியபடி,ஒடுக்கப்பட்ட மக்களாக அணிதிரள முயன்றவர்களுக்குள் பிளவுகளை ஏற்படுத்த உருவாக்கப்பட்ட சமூகப்பிளவே தலித்தியம். தலித்தியம் மூலம் எப்படி விடுதலையடைய முடியும.; அதன் கோட்பாடு என்ன? அதிலுள்ள முரண்பாட்டுப்பிரிவின் அரசியல் நிலை என்ன? எதுவுமற்ற சமூகமாற்றத்திற்கு அணிதிரள்வதைத் தடுக்க தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக உருவாக்கப்ட்ட அமைப்பே ' தலித்' என்ற சவக்குழி

தீண்டத்தகாதவர்களை காந்தி என்ற சாதித்திமிர் பிடித்த உயர்சாதிக்காரன் அரிசனன்என்று அழைத்தது எப்படி இந்தியப்புரட்சியை தடுத்து தாழ்த்தப்பட்டவர்களை தனியாக அடையாளப்படுத்தி பிளவுபடுத்தி  தடுத்ததுபோல்,இன்று உலகமயமாக்கத்திற்கு எதிரான புரட்சியைத் தடுக்க ஏகாதிபத்திய முன்வைப்புத்தான் தலித்தியம் என்ற இனிப்புத் தடவிய சாதி பேசும் சாதி அமைப்பு

தலித்தியத்துக்குள்உள்ள சாதிப்பிளவை கூட மாற்றமுடியாத இந்த தலித்தியம் சரி, ஒருசாதியின்பெயரால்அமைப்பாகும்ஒருசாதியும்சரி,இந்த சாதி அமைப்பைப் பேணுவதற்கும் அதன் மூலம் சில சலுகைகளை பெறுவதற்கும் அப்பால், இத் தலித்தியம் படியியல் இன மக்கள் பெற்றுக்கொள்ள எதையுமே பெற்றுக் கொடுக்காது. ஆனால் மார்க்சியவிரோதிகள் இதை முன்னெடுப்பதன் மூலம் சாதியை ஒழிக்க முனையும் ஒரு வர்க்கப்புரட்டசியைத் தடுப்பதன் மூலம் தமது எஜமானர்களான ஏகாதிபத்தியத்திற்கு சேவை செய்கின்றனர்.

உயர்சாதிக்காரன் சாதிசங்கம் வைத்திருந்தால் நான் ஏன் வைத்திருக்க முடியாது என்று கேட்பது முஸ்லீம் அப்பாவி மக்களை ஈழத்தமிழ்இயக்கங்கள்கொல்லுவதால்,ஏன் முஸ்லீம் ஊர்காவல்படையினர் தமிழரை கொல்லக்கூடாது என்று கேட்பதற்குச் சமனாகும்.சமன்பாட்டிற்குள் சிக்கிக் கொண்டு சாதியை வேறு ஒரு வடிவில் பாதுகாப்பது என்பது உண்மையாக சமூக அக்கறை கொண்டவர்கள் வெட்கப்படவேண்டிய ஒன்றாகும்.

மாறாக சாதி ஒடுக்குமுறைக்கு எதிராக ஒடுக்கப்பட்ட மக்கள் (வர்க்கமாக) அணிதிரண்டு பதிலடி கொடுப்பதன் மூலம் தான், நாம் சாதியை கடந்து ஒரு பரந்து பட்ட விடுதலையை அடையமுடியும். இதைவிடுத்து  தலித்தாகவோ அல்லது ஏதோ ஒரு சாதியின் பெயரால் அணிதிரள்வது என்பது எப்படி ஒரு சாதியைக் கடந்து விடுதலை அடையமுடியும் என்ற ஒரு அற்ப கேள்வியைக் கூட கேட்கமுடியாத இந்த ஆய்வு அறிவாளிகளின் நோக்கத்தை நாம் அறிவற்றவர்களாக நின்று தான் உயர்த்த முடியும்.

இந்திய சாதி அமைப்பு முறையை ஆராய்ந்த பலரும் பல்வேறு கருத்துகளை முன் வைத்தாலும், மார்க்சிய தத்துவம் மட்டுமே இயக்கவியல் பொருள்முதல்வாத அடிப்படையில் விளக்கி கூறியதாகும்.அதாவது உலகில் உள்ள மற்றச் சமூகப்பு போலவே இந்தியச் சமுக அமைப்பும் வர்க்க அமைப்பே அதில் சில தனிச் சிறப்புகள் உண்டு.

இந்தியச் சமூகத்தில் இரண்டாயிரம் ஆண்டுகளாக சாதி நிலவி வந்தாலும் அதன் செயல்பாடும் வடிவமும் எல்லா காலங்களிலும் ஒரே மாதிரியாய் இருந்ததில்லை.நிலபிரப்புத்துவ அமைப்பு முறையில் தொழிற் பிரிவினை அடிப்படையில் சாதியம் உறுதியாக செயல்பட்டது இன்றோ நடைமுறையில் அவை இருந்தாலும் கோட்பாட்டு அளவில் மறுக்கப் பட்டுள்ளது.சாதியை ஆரியர்கள்தான் (பிராமணர்கள்தான்) உருவாக்கினர் என்பதோ திராவிடர்கள் தமிழர்கள்தான் உருவாக்கினர் என்பதோ அறிவியல் பூர்வமான (இயக்கவியல் பொருள்முதல்வாத) மார்க்சிய விரோதமான ஒன்றே.

சாதியானது இந்திய சமூக வளச்சிப் போக்கில் இயற்கையாய் கருக் கொண்டு சூழலுக்கேற்ப்ப உருக்கொண்டு, உபரியை உறிஞ்சும் சுரண்டல் வடிவமாக உருபெற்ற போது அதற்க்கு கோட்பாட்டு நியாயம் வழங்கி சாதியத்தின் இருதலுக்கு பங்காற்றியது இந்து மத பிராமணியமே அதன் கொடிய அம்சம் சுரண்டல் வடிவில் அடங்கி உள்ளது. பிறப்பின் அடிப்படையில் தொழில்களை ஒழுகமைப்பதில் இச்சுரண்டல் அடங்கியுள்ளது.

நிலப்பிரபுத்துவத்திற்க்கு முந்தைய உற்பத்தி முறையிலேயே சாதி கருக் கொண்டிருந்தாலும் அவை திடமாக நிலபிரபுத்துவத்தில்தான் உருக் கொண்டது.

சாதியம் என்பது மக்கள் தோன்றிய காலம் தொட்டே இருந்த ஒன்று அல்லாஇவை தனி உடைமை தேவையை ஒட்டி சொத்து சேர்க்கும் ஒரு கூட்டம் தோன்றிய பொழுது அடுதவர்களின் உழைப்பை சுரண்ட தேவையான பல வகை சுரண்டல் முறை உலகெங்கும் காண முடியும், அதில் இந்திய துணை கண்டத்தில் அந்த சுரண்டல் முறையின் ஒரு வடிவம் சாதியாக உருதிரண்டு நிலவுடைமை சமூகத்தில் அவை உருபெற்றது.

சாதி மற்றும் தீண்டாமை என்பது இந்துமதம் தனது அடிப்படையாகக் கொண்டுள்ளது. சாதிமுறை என்ற சமூக நிகழ்வுப்போக்கு பரம்பரைத் தொழில் பிரிவினை (Social Division of Labour) அடிப்படையில் தன் நிலைப்பிற்கு ஆதாரம் கொண்டிருக்கிறது. ஆகையால் சாதி மற்றும் தீண்டாமையின் சமூகவேர்கள் நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையில் அடங்கியிருக்கிறது. சாதியும், தீண்டாமையும் நிலைத்து நிற்பதற்கு உத்தரவாதம் செய்யும் பிற அம்சங்களான அகமண முறை, உயர்வுதாழ்வு கற்பித்தல், படிநிலை முறை, பரம்பரை சடங்குகள் ஆகியவற்றிற்கு நிலப்பிரபுத்துவப் பண்பாடே காரணமாகும்.
சாதியும் தீண்டாமையும் நிலைத்து நிற்பதற்கு ஆதாரமாகக் கொண்டுள்ள பரம்பதைத் தொழிற் பிரிவினையும், அவை நிலைத்து நிற்பதற்கு சேவை செய்யும் அகமண முறை, உயர்வு தாழ்வு கற்பித்தல், படிநிலை முறை, பரம்பரைச் சடங்குகள் ஆகிய அம்சங்களும் நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறைக்கு உரியதும்.

இன்று இந்திய சமுதாயமும் அரசும் ஜனநாயக விரோத எதேச்சதிகாரத் தன்மை கொண்டதாக நீடிக்கச் செய்வதால் பழைமையை தூக்கிபிடித்துக் கொண்டே உலகமய மாக்கல் நலன் பேசும் இவர்கள் சுரண்டல் வடிவமான ஜாதி ஏற்ற தாழ்வை போக்கும் திட்டம் எதுவும் இன்மையால் அந்தமுறையை தொடர செய்கிறது.


இன்று எப்படியெல்லாம் ஜாதிய பிரச்சினையை முன்னிலை படுத்தி மார்க்சியத்தை பின் தள்ளும் பல போக்குகளை புரிந்துக் கொள்ள பல்வேறு ....







No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்