இலக்கு 22 PDF வடிவில் உள்ளதை இந்த லிங்கை அழுத்தி பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் தோழர்களே
இந்த இதழில் பேசப்பட்டுள்ள தலைப்புகள் கீழ் வருவன.
1. மூன்றாவது கம்யூனிஸ்டு அகிலத்தின் இரண்டாவது காங்கிரசுக்கான ஆராய்ச்சி உரைகள். லெனின்.
2. சமூக விஞ்ஞானம். பகுதி - 1 மார்க்சிய - லெனினியத்தின்அடிப்படைகள். சோசலிசமும் கம்யூனிசமும்.
3. ஐந்து அரங்குகளில் தேர்வை எதிர்கொள்வோம்.சௌ-என்-லாய்.
4. கிராம பகுதிலுள்ள உற்பத்தி உறவுகளை பற்றிய ஆய்வு
“தற்கால இயக்கத்தின் பலம் மக்களின் (முதன்மையாக, தொழில் துறைப் பாட்டாளி வர்க்கத்தின்) விழிப்புணர்வில் அடங்கியிருக்கிறது, அதன் பலவீனம் புரட்சிகரமான தலைவர்களின் உணர்வு இன்மையிலும் முன்முயற்சி இன்மையிலும் அடங்கியுள்ளது, இதை யாரும் இதுவரை சந்தேகித்ததில்லை”
தொழிலாளர்கள், நேரடியாகப் பிரச்சினைகளைச் சந்திப்பதனால் அவர்கள் அதனை உணர்ந்து, உடனடியாக எதிர்ப்பை தெரிவிக்கின்றனர். நிச்சயமாக அது தன்னியல்பான போராட்டமாகதான் இருக்கும். தன்னியல்பான போராட்டத்தை வர்க்கப் போராட்டமாக மாற்றுவது கம்யூனிஸ்ட் கட்சியின் பணி. -என்னசெய்ய வேண்டும் நூலில் லெனின்.
முதலாளித்துவ உற்பத்தி முறையின் வளர்ச்சி என்பது எல்லா நாடுகளிலும் சீராகவும் ஒரே மாதிரியாக ஒத்த தன்மை உடையதாகவும் அமைந்திருக்க இயலாது. முதலாளித்துவ வளர்ச்சி மற்றும் மாற்றங்களை எளிய மற்றும் நேர்கோடான சூத்திரத்தில் அடக்கிவிட முடியாது. அது இடத்திற்கு இடம் நாட்டிற்கு நாடு காலத்திற்கு ஏற்ப மாறுபட்ட வடிவங்களில் கொண்டு வளர்ந்து வந்திருக்கிறது. முதலாளித்துவத்துக்கு முந்தைய உற்பத்தி முறையிலிருந்து முதலாளித்துவ உற்பத்தி முறைக்கும் இட்டுச்செல்லும் வடிவங்கள் பல இருப்பினும் அவை பொதுவாக இரண்டாகப் பிரிக்கலாம் ஒன்று புரட்சியின் மூலம் முதலாளித்துவ உற்பத்தி முறையை உருவாக்குதல் இந்த வகையான தங்குதடையற்ற முதலாளித்துவ மாற்றங்கள் இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் நடந்தேறின மற்றது மெதுவான படிப்படியான முதலாளித்துவ வளர்ச்சி இது பிரஷ்யன் ஷங்கர் பாணி முதலாளித்துவ வளர்ச்சி என்றழைக்கப்படுகிறது.
No comments:
Post a Comment