இந்திய கம்யூனிஸ்டுகள் பற்றி அறிவோம்.இலக்கு 46 இதழின் கட்டுரை

 இந்திய கம்யூனிஸ்டுகள் பற்றி அறிவோம்.

இந்தியாமுழுவதும்செயல்படும்700க்கும் மேற்பட்ட கம்யூனிஸ்ட் கட்சிகளும் குழுக்களும் நூற்றுக்கணக்கான பத்திரிகைகளை  நடத்திவருகின்றன.இந்த அமைப்புகளும்,பிற குழுக்களும்,தனிநபர்களும் சமூக வலைத்தளங்களில் பிரச்சாரம்செய்வதையும் மார்க்சிய லெனினிய கல்வி புகட்டுவதையும் செய்து வருகின்றனர்.இவை அனைத்தும்இருந்தும்,நம் எதிரிகளும் மதிக்கும் வகையிலான இயக்கமாக,வலுவான கோட்பாட்டு அடித்தளம் கொண்ட அமைப்புகளாக கம்யூனிஸ்டுகள் இல்லை என்பது யதார்த்தம்.

மேலும், இந்தக் கட்சிகள் அனைத்தும் தமக்கிடையே ஐக்கியமும் ஒற்றுமையும் இன்றி தனித்தனி தீவுகளாக செயல்படுகின்றன, தொழிலாளி வர்க்க இயக்கத்தை பலவீனப் படுத்துகின்றன.

லெனின், என்ன செய்ய வேண்டும் நூலில், “ஒரு அனைத்து ரசிய பத்திரிகைக்கான திட்டம்என்ற 5-வது அத்தியாயத்தின், . “கூட்டு அமைப்பாளராக ஒரு பத்திரிகை இருக்க முடியுமா?” என்ற பிரிவில் இந்தத் தருணத்தில் நமக்கு மிக முக்கியமான கண்ணி எது? நாம் ஆனமட்டும் பலமாகக் கையில் பிடித்துக் கொள்ள வேண்டிய கண்ணி எது? எந்தக் கண்ணியைப் பற்றிக் கொண்டால் சங்கிலி முழுவதும் நம் கைவசம் ஆகிவிடுவதற்கான உத்தரவாதம் உள்ளது? என்பதைப் பார்க்க வேண்டும்.

1895ஆம் ஆண்டில் லெனின் கூறினார்,“புரட்சிகர அமைப்பு ஒன்றை உருவாக்கும் பணி தொடங்கப்பட வேண்டும், அது புதிய வரலாற்று சூழலின்,பாட்டாளி வர்க்கப் புரட்சிகர நடவடிக்கைச் சகாப்தத்தின் கட்டாயமாகும். ஆனால் புரட்சிகர ஆற்றலை நசுக்குபவர்களான பழைய தலைவர் களையும்,பழைய கட்சியின் தலைமை யையும் அழிப்பதன் மூலமாக மட்டுமே அது தொடங்க பட முடியும்....".
இங்கோ நிலை என்ன? திருத்தல்வாத சந்தர்ப்பவாத கட்சி ஒருபக்கம் இன்னொறு பக்கம் புரட்சி பேசுபவர்கள் எவை சரியான கம்யூனிஸ்ட் கட்சி என்பதில் இங்கிருந்துதான் குழப்பத்தை விதைக்கிறது. இதனை உண்மையாலுமே கம்யூனிசத்தை விரும்புவோர் ஆவண செய்ய வேண்டிய பணி தோழர்களே....!

இந்தியாவில் செயல்படும் எந்தக் கட்சி யாவது, நாங்கள் பிடித்துக் கொண்டிருக்கும் கண்ணிதான் சங்கிலி முழுவதையும் நம் கைவசம் ஆக்கிக்கொள்வதற்கான உத்தரவாதத்தைத் தருகிறது என்று நமக்குச் சொல்ல முடியுமா?

மாறாக, கட்சியில் இணைப்பதற்கு வழக்கமாகச் சொல்லப்படும் முக்கியமான ஒரே வாதம் தனியாக இருந்தால் என்ன செய்யமுடியும்? அமைப்பாக இருந்தால்தான வலிமைஎன்பது மட்டும்தான். இதை ஒவ்வொரு கட்சியும் சொல்கின்றது.“சரியான திசைவழி தீர்மானிக்கப்பட்டு விட்டதும் ஊழியர்கள் [கட்சி அமைப்பு]தீர்மானகரமானவர்களாக ஆகிறார்கள்என்பதுதான் உண்மை.சரியான திசைவழி இல்லாத போது எவ்வளவு வலுவான,எவ்வளவு விரிவான கட்சி அமைப்பு இருந்தாலும் பலனில்லை என்பதுதான் கடந்த 100 ஆண்டுகால அனுபவம் நமக்குக் காட்டும் பாடம்.

பிளவுகளும் உடைவுகளும் எந்த சித்தாந்த போரில் எழுந்தது? என்று தேடினால் விரக்த்தி அடைவதை தவிர சரியான தகவல் ஏதும் கிடைக்காது. ஆனால் இவர்களின் நடைமுறையிலிருந்து இவர்களின் பணியை அவர்களின் நோக்கம் தெளிவுப்படுத்துகிறது.

அமிர்தசரஸில்ஏபரல்1958ல்நடைபெற்ற சி.பி.அய்யின் மாநாடு ,”கேரளா வழிகாட்டு கிறது என்ற சி.பி.அய்யின் வழியில் சி.பி.எம்மும் பாராளுமன்ற சாக்கடையில் புரட்சிகர வழிக்கு முரணாக உள்ள அமைதியான சரணாகதி பாதையில் வர்க்க கூட்டுக்கும், வர்க்க சரணாகதிக்கும் இட்டு சென்றது. தொழிலாளிகள்,விவசாயிகள்,பிற உழைக்கும் மக்கள் ஆயுதப் போராட்டத்தின் மூலமாக அதிகாரத்தைக் கைபற்றுவார்களா? அல்லது வாக்கு பெட்டி மூலமாக அதிகாரத்தைக் கைபற்றுவார்களா? என்பதுதான் மார்க்சிய லெனின்யத்திற்கும்,வலது சந்தர்ப்பவாததிற்க்கும் இடையேயான அடிப்படை வேறுபாடாக இருந்தது. இன்று மார்க்சிய லெனினியத்தை விட சந்தர்ப்பவாத நிலைப்பாட்டை எல்லோரும் மேற்கொள்ளூம் வேளையில் புரட்சிக்கான பாதையை மூடிமறைத்து பாராளுமன்ற சரணாகதிபாதைதான் இன்றைக்கு சரியானது ஆபத்தற்றது சொகுசாக வாழவழியுள்ளது என்று சீரழிந்து போனதுதான் மிச்சம்.

இந்தியாவிலும் பிறநாடுகளிலும் நடைபெற்ற போராட்டங்களின் அனுபவம் தெளிவாக காட்டுவதைப் போல கேரளாவின் பாதையைப் பின்பற்றுவதன் மூலமாக அரசாங்கங்கள் மட்டுமே மாற்றபட முடியும்,ஆனால் அனைத்துவகையான அநீதி,சுரண்டல்,ஒடுக்குமுறை ஆகியவற்றுக்கு ஆணிவேராக உள்ள தற்போதைய பொருளாதார,அரசியல்அமைப்பை மாற்ற முடியாது.வன்முறை புரட்சியின் மூலம் மட்டுமே தற்போதுள்ள ஆளும் வர்க்கமும் அவர்களுடைய அரசும் தூக்கியெறியப்படும், ஒரு புதிய பொருளாதார,அரசியல் அமைப்பு உருவாக்க முடியும் எங்கின்ற கருத்தை மார்க்சியம் கூறுகிறது. அதாவது, வன்முறை தான் புதிய சமூகத்தை பிரசவிக்கப் போகும் பழைய சமூகத்தின்  மருத்துவச்சியாக உள்ளது,” என்றார் மார்க்ஸ்.

இந்திய கம்யூனிச இயகத்தின் நீண்டகால வரலாற்றில் முதன்முறையாக மக்கள் ஜனநாயகத்தையும், சோசலியத்தையும் அடைவதற்கான ஒரே பாதை மா-லெ பாதைதான் என்பதை நக்சல்பாரி கோடிட்டு காட்டிற்று அவை முழுமையான அளவில் செயல்படாமையால் தொய்வுற்றது இருந்தும் அவர்கள் அணுபவ படிப்பினைகளில் சரி தவற்றை ஆய்வு செய்து சரியான பாதையை தேர்ந்தெடுக்க கடமை பட்டவர்களாவோம்.

இதற்கு முன்பாக நடத்தபட்ட தெலுங்கான போராட்டமானது இந்திய அரசாங்கத்திற்கு எதிரான போராட்டமாக அமையவில்லை.புரட்சிகர வன்முறையை பயன்படுத்துவதன் மூலமாக மட்டுமே நிலவுகின்றஅரசியல், பொருளாதார அமைப்பை ஒடுக்கபட்ட வர்க்கங்களால் தூக்கியெறிய முடியும் என்றும், அப்போதுதான் மேம்பட்ட இந்தியாவை உருவாக்க முடியும் என்றும்   துணிவுடன் அறிவித்தது. மோசடியான,போலியான பாராளுமன்ற பாதையால் ஈர்க்கப்பட்டிருந்த இரு கம்யூனிஸ்ட்டு கட்சிகளின்தலைமைகளையும் நக்சல்பாரி அம்பலப்படுத்தியது. இந்தப்பாதை(CPI,CPM) வர்க்க போராட்டத்தின் உயரிய வடிவமான புரட்சிகரப் பாதையிலிருந்து மக்களை திசை மாற்றுகிறது, சுரண்டலும்,ஒடுக்குமுறையும் நிறைந்துள்ள அமைப்பை முடிவுக்கு கொண்டு வருவதற்கு பதிலாகக் கேரளாவின் பாதை அதனைதொடரவே வழிவகுக்கின்றது. புரட்சிகர பாதை என்பது மிருதுவான, நேரான பாதையல்ல, மாறாக, வளைவுகளும், சுளிவுகளும், மேடுகளும், பள்ளங்களும் நிறைந்த கரடுமுரடான பாதை.இப்பாதையானதுஎதிர்காலத் தலைமுறைகள் பொருளியல் ரீதியாகவும்,பண்பாட்டு ரீதியாகவும் செழுமையான வாழ்க்கை வாழ்வதற்க்காகவும்,சுரண்டல், ஒடுக்குமுறை ஆகியவற்றிலிருந்து விடுபட்டு வாழ்வை வாழ்வதற்காகவும் நிகழ்காலத்தில் இன்றியமையாததாகஉள்ள இடர்பாடுகளைக் கொண்ட நீண்டபாதையாகவும்,அவ்வப் போது தோல்விகளைச் சந்திக்கக் கூடிய பாதையாகவும்,மாபெரும் தியாகங்களையும் கோருகின்ற பாதையாக உள்ளது.நக்சல்பாரிதான் இந்திய கம்யூனிச இயக்கத்தின் மீது ஆதிக்கம் செழுத்தி அதன் ஆற்றலை இழக்கச்செய்திருந்த சந்தர்ப்பவாதத்தின் நீண்டகாலப் பிடியை உடைத்தெறிந்து, அதனை விடுவித்தது.

சி.பி., சி.பி.எம் இரண்டும் மார்க்சிய-லெனினியத்தை நிராகரித்து, குருசேவ் மற்றும் அவரை தொடர்ந்து வந்தவர்களால் முன்வைக்கபட்ட புதிய திசையமைவு”, “புதிய கருத்தாக்கங்கள்போன்ற திரிப்புவாதக் கண்ணோட்டத்தால் அக்கட்சி வழி நடத்தபட்டபோது, நக்சல்பாரி மா-லெ-மாவோ சிந்தனையை உயர்த்திபிடித்து தெள்ளதெளிவாக முழங்கியது, அது பாராளுமன்ற பாதையை நிராகரித்து,மக்கள் ஜனநாயகத்தையும்,சோசலிசத்தையும் நிறுவுவதற்காகப் புரட்சிகரப் பாதையைக் கடைப்பிடிப்போவதாக உரக்க அறிவித்தது

1895ஆம் ஆண்டில் லெனின் கூறினார்,“புரட்சிகர அமைப்பு ஒன்றை உருவாக்கும் பணி தொடங்கப்பட வேண்டும்,அது புதிய வரலாற்று சூழலின்,பாட்டாளி வர்க்கப் புரட்சிகர நடவடிக்கைச் சகாப்தத்தின் கட்டாயமாகும்.ஆனால் புரட்சிகர ஆற்றலை நசுக்குபவர்களான பழைய தலைவர் களையும்,பழைய கட்சியின் தலைமை யையும் அழிப்பதன் மூலமாக மட்டுமே அது தொடங்க பட முடியும்.....

1967 ஆம் ஆண்டு நக்சல்பாரி போரட்டத்திற்குப் பிறகு இந்திய சமூகத்தைப் பற்றிய வர்க்க ஆய்வினை மிகச் சரியாகவே ஆய்வு செய்து அதன் அடிப்படையில் ஒரு ஒன்றுபட்ட கட்சியை கட்டுவற்கான முயற்சிகளை மேற்கொண்டது குறித்த அனுபவங்களை நாம் மார்க்சிய லெனினிய இயக்க வரலாற்றினை படிக்கும்போது அறிய முடிகிறது. மக்கள் போரட்டங்களையும் கட்சி கட்டும் முயற்சிகளிலும் அது சிறிது முன்னேற்றம் அடைந்தது எனினும் வழக்கம் போலவே உலக அளவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் ஏற்பட்ட சந்தர்ப்பவாதம், திருத்தல்வாதம், பாராளுமன்றவாதம் போக்குகளைப் போலவே இந்திய மா-லெ இயக்கங்களுக்குள்ளும்  பல்வேறு விதமான போக்குகள் எழுந்தன. இதனால் இந்தியா முழுமைக்குமான உருவான மா-லெ இயக்கம் பல்வேறு அரசியல் போக்குகளைக் கொண்ட பல மா-லெ இயகங்களாக பிரிய ஆரம்பித்தது இன்று பல குழுக்களாக் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இது புரட்சிக்கு மாபெரும் பின்னடைவுதான். கிட்டதட்ட 53ஆண்டை நெருங்கப் போகிற மா-லெ இயக்கங்களின் வரலாற்றையும் மற்றும் இதுவரைக்கும் அவர்கள் அடைந்த வளர்ச்சிகளையும் குறித்து திரும்பிப் பார்க்க வேண்டிய இத்தருணத்தில், ஷ்ய புரட்சியின் முன்னும் பின்னும் எழுந்த திருத்தல்வாதத்தையும் சந்தர்ப்பவாதத்தையும் எதிர்த்து லெனின் அவர்கள் கடுமையாக போராடினார். அதாவது கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் எழுந்த ஒவ்வொருபோக்கையும் எவ்வாறு முறியடித்தார் என்பதை தொகுப்பாக பார்க்கும் பொழுது முதலில் புரட்சியைவிட ஒரு புரட்சிகர தத்துவத்தை நிலை நாட்டுவதுதான் முக்கியமானது என்பதை லெனினியம் நமக்கு சுட்டிகாட்டுகிறது.

முதலாளித்துவவாதிகள் தங்களுக்குள் எவ்வளவு முரண்பாடுகள் இருந்தபோதிலும் தங்களுடைய ஆட்சிமுறைக்கு ஒரு பங்கம் ஏற்படுகின்றதென்றால் அதை முறியடிக்க அவர்கள் யாரிடம் வேண்டுமானாலும் இணைந்து கொள்கிறபோது, ஒட்டு மொத்த சமூகத்தையே காப்பாற்ற நினைக்கும் மா-லெ புரட்சியாளர்கள் நாட்டில் உள்ள சாதாரண பிரச்சினைக்கான போரட்டத்தில் கூட ஒன்றினைந்து செயல்பட முடியாமல் போனதற்கு காரணம் என்ன?

சமூக மாற்றம், புரட்சியும்,மார்க்சியமும் யாருடைய தனிப்பட்ட சொத்தல்லவே, நாங்கள்தான் இந்நாட்டில் புரட்சி செய்வோம் என்று யாரும் சொல்லிவிட முடியாது.  நாடோ வலது அரசியலை நோக்கி திருப்பட்டுள்ளது அதனை ஒட்டி அனைத்து பிழைப்புவாத கட்சிகளும் ஒருங்கிணைந்து கொண்டுள்ளது.

மா-லெ இயக்கப் புரட்சியாளர்கள் அணி திரள வேண்டிய அவசியத்தை லெனின்யம் வரையறுத்துள்ளது. லெனின் அவர்கள் சொன்னது போல் சந்தர்ப்பவாதமும் திருத்தல்வாதமும் நீடித்த நோய்தான், அதைக் குணப்படுத்திக் கொண்டிருக்க வேண்டுமாயின் புரட்சியாளர்கள் நீடித்த ஒற்றுமையும், அவர்களுக்குள் நீண்ட நெடிய விவாதமே அந்த நோய்க்கு மருந்தாகும்.

மார்க்சியம் அது தோற்றம் பெற்ற அதே இடத்தில் அப்படியே இருந்து வந்த ஒன்றல்ல. அது தனது விஞ்ஞான அடிப்படை காரணமாக வளர்ச்சியுற்றது.மாபெரும் அக்டோபர் புரட்சியின் மூலமாக லெனினியமாக வளர்ச்சி கண்டது.சீனப் புரட்சியின் ஊடாக மாவோ சிந்தனையாக விரிவுபெற்றது.இன்னும் பல நாடுகளின் புரட்சிகளில் மார்க்சியம் வளம் பெற்றது.

· எனவே,இன்றைய உலகமயமாதல் சூழலிலே மார்க்சியம் தனது ஒட்டுமொத்த வளர்ச்சியின் ஊடே ஏகாதிபத்தியம் தோற்றுவித்து நிற்கும் பாரிய சவால் களுக்கு முகம் கொடுத்து முன்னேறிச் செல்லும் வரலாற்றுக் கடமையை எதிர்நோக்கி நிற்கின்றது.நமது நாட்டில் அக்கடமைக்குரிய பங்கையும் பங்களிப்பையும் வழங்க வேண்டிய பொறுப்பு நம் எல்லோருக்கும் உண்டு.

அத்தகைய பங்களிப்பின் ஒரு சிறு முயற்சியே மார்க்சியம் கற்பதற்கான இந்த எழுத்து வடிவம்-- சிபி.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++

இன்று இந்தியாவில் உள்ள பல்வேறு இடதுசாரி கட்சிகள்/இயக்கங்கள்/குழுக்கள் தேர்தல் நேரத்தில் ஒன்றிணைந்து I.N.D.I.A கூட்டணியை ஆதரிப்பது இவர்கள் பாசிசத்தை எதிர்க்கும் சக்தி என்பதும் தி.மு.க அ.தி.மு.கா வின் பின் அணி திரள்வதும் சந்தர்பவாதமே அதனை பற்றி அடுத்தப்பகுதியில் பார்ப்போம். இங்குள்ள இடதுசாரிகளின் பணியைவிட அவர்கள் ஆளும் வர்க்க கும்பலிடம் விலை போய் உழைக்கும் மக்களுக்கு துரோகம் இழைக்கும் பகுதி பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்