இலக்கு 45 இணைய இதழ் PDF வடிவில்

இதழில் பேசப்பட்டுள்ள கட்டுரைகள்

1.தத்துவமும் நடைமுறையும்

2.ஜனநாயகப் புரட்சியில் சமூக – ஜனநாயகவாதத்தின் இரண்டு போர்த்தந்திரங்கள். லெனின் பாகம் 5.    4. முடியரசை ஒழித்தல். குடியரசு

3. சமரசங்கள் குறித்து - லெனின்.பகுதி - 1

4. பாட்டாளி வர்க்க புரட்சியும் ஓடுகாலி காவுட்ஸ்கியும்- லெனின் பகுதி-6

தேர்தல் கூத்து

இலக்கு மார்க்சிய லெனினியத்தை அடிப்படையாக கொண்டுள்ள பத்திரிக்கையாக எமது நிலைபாட்டை எப்பொழுதுமே வெளிப்படையாக வைத்துள்ளோம்.

இன்றைய பாராளுமன்ற தேர்தல் நேரத்தில் இடதுசாரிகள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் பற்றி நாங்கள் பேசியுள்ளோம். அதிலிருந்து மற்றவர்களை குறிப்பாக மார்க்சியம் பேசுபவர்கள் மறந்துபோன இடங்களை தவறாமல் சுட்டிக்காட்டியுள்ளோம். நடைமுறை என்று வலதுசாரிகளுக்கு வால் பிடிப்பதல்ல உழைக்கும் ஏழை எளிய மக்களின் விடுதலைக்காக மார்க்சிய லெனினிய தத்துவத்தை நடைமுறை படுத்த வேண்டும் அதற்கு நமது ஆசான்கள் வழிகாட்டியுள்ளனர். அதனை விடுத்து திருத்தல்வாதமோ சீர்திருத்தவாதமோ சந்தப்பவாத பிழைப்புவாதமோ அம்மக்களுக்கு விடுதலை தராது என்பதனை கணக்கில் கொளல் அவசியம்.

தத்துவத்தில் இரு  போக்கு உள்ளது. நிலவும் வர்க்க சமூகத்தில் ஒன்று ஆளும் வர்க்க தத்துவம் உள்ள அமைப்புமுறையை கட்டிக்காப்பதற்கானது இன்று ஒடுகப்பட்டு கிடக்கும் உழைக்கும் ஏழை எளிய உழைக்கும் கோடான கோடி உழைக்கும் மக்களின் விடுதலைக்கான தத்துவம். இந்த இரண்டில் எதனை நடைமுறை படுத்துவது என்பதில்தான் பலர் குழம்பிப்போய் ஆளும் வர்க்கதிற்கு வால் பிடித்துக் கொண்டே அவைதான் நமக்கானது என்று உலறிதிரிகின்றனர். உண்மையாலுமே உழைக்கும் மக்களின் தத்துவம் மார்க்சியம் மட்டுமேதான் அவை நமது ஆசான்கள் மிகத் தெளிவாக வகுத்தளிதுவிட்டு சென்றுள்ளனர். அதனை கற்று தேர்ந்து நமது நாட்டிற்கு தகுந்த வகையில் பொருத்தி பார்த்து நடைமுறைப் படுத்த வேண்டிய கடமை மார்க்சிய லெனினியத்தை நேசிப்போர் செய்ய வேண்டிய கடமை அவைதான் புரட்சியை நேசிப்போரின் கடமையாகும்.  

1).தற்போது இந்தியாவில் பாசிச பா.ஜ.க.வின் கொடுங்கோல் ஆட்சியை உழைக்கும் மக்களின் நலனிலிருந்து தூக்கியெறிய வேண்டியது அவசியமானதாகும். இதனை சாதிக்கக் கூடிய வலிமை தொழிலாளி வர்க்கத்திற்கு மட்டுமே உள்ளது. அதனை சாதிக்க ஒரு ஒன்றுபட்ட பலம்வாய்ந்த புரட்சிகரமான கம்யூனிஸ்டுக் கட்சி இல்லை. சி.பி.ஐ, சி.பி.எம் போன்ற கட்சிகள் ஒப்பீட்டளவில் தொழிலாளர்களையும் விவசாயிகளையும் திரட்டி வைத்திருந்தாலும் இந்தக் கட்சித் தலைவர்கள் இங்குள்ள முதலாளித்துவ கட்சிகளுக்குவாலாகவே செயல்படுகின்றனர்.

2). சீனாவில் ஒரு பலம்வாய்ந்த சீனக் கம்யூனிஸ்டுக் கட்சி அதன் தலைமையில் ஒரு மக்கள் படை இருந்தது. இத்தகைய அகச் சூழல் நிலவியபோதுதான் முதலாளித்துவகட்சியான கோமிங்டானுடன் ஜப்பானிய எதிர்ப்பு ஐக்கிய முன்னணியை கட்டிப் போராடியது. இத்தகைய பலம்வாய்ந்த அகநிலை சூழ்நிலை இல்லாத நிலையில் மேலும் அகம் பலவீனமாக இருக்கும் சூழலில் தி.மு.க.வோடும் காங்கிரசோடும் ஐக்கிய முன்னணி என்று பேசுவது ஒரு துரோகமே ஆகும். மேலும் சீனாவில் கோமிங்டான் கட்சியின் நோக்கமும் ஜப்பானிய எதிர்ப்பாகும், கம்யூனிஸ்டுகளின் கொள்கையும் அதோடு ஒத்துப் போனதால் அங்கே ஐக்கிய முன்னணி சாத்தியமாயிற்று. ஆனால் இங்கே தி.மு.க, காங்கிரஸ் போன்ற கட்சிகள் இந்த பாசிசத்திற்கு அடிப்படையான தனியார்மயம், தாராளமயம், உலகமயம் போன்ற கொள்கைகளை பா.ஜ.க.வைப் போலவே ஆதரிக்கின்றர். ஆனால் கம்யூனிஸ்டுகளுக்கு இதற்கு எதிரான கொள்கைக்காகப் போராடிக்கொண்டு இருக்கிறார்கள். ஆகவே நேர் எதிரான கொள்கை உடைய கம்யூனிஸ்டுகளும் தி.மு.க, காங்கிரஸ் கட்சிகளோடு எந்தக் கொள்கையின் அடிப்படையில் ஒன்றுபடுவது?

3). தற்கால முதலாளித்துவ ஜனநாயகக் குடியரசுகள் அனைத்தும் இந்த அரசு இயந்திரத்தை நீடித்து வைத்திருக்கின்றன. எனவே பொதுவான ஜனநாயகம்என்று ஆரவாரத்துடன் கூக்குரலிடுவது உள்ள படியே முதலாளித்துவ வர்க்கத்தினரையும், சுரண்டலாளர்கள்என்றமுறையில்அவர்களது தனியுரிமைகளையும் ஆதரிப்பதே ஆகும் என லெனின் எடுத்துரைத்தார்.

4). பாட்டாளி வர்க்க ஜனநாயகம் எந்த முதலாளித்துவ ஜனநாயகத்தையும் விட பத்து லட்சம் மடங்கு அதிக ஜனநாயகமானது; சோவியத் ஆட்சியதிகாரம் மிகவும் ஜனநாயகமான முதலாளித்துவக் குடியரசைக் காட்டிலும் பத்து லட்சம் மடங்கு அதிக ஜனநாயகமானது.இதைப் பார்க்கத் தவற வேண்டுமானால், ஒருவர் வேண்டுமென்றே முதலாளி வர்க்கத்திற்கு சேவை செய்ய வேண்டும், அல்லது முதலாளித்துவ புத்தகங்களின் தூசி படிந்த பக்கங்களுக்குப் பின்னால் இருந்து உண்மையான வாழ்க்கையைக் காண இயலாமல் ஒரு கதவு ஆணியைப் போல அரசியல் ரீதியாக இறந்தவராக இருக்க வேண்டும், முதலாளித்துவ ஜனநாயக தப்பெண்ணங்களில் முழுமையாக மூழ்கியிருக்க வேண்டும், அதன் மூலம் புறநிலையாக ஒருவர் தன்னை முதலாளித்துவ வர்க்கத்தின் எடுபிடியாக மாற்றிக் கொள்ள வேண்டும்-லெனின்.

 

                                                                                                         தோழமையுடன் இலக்கு ஆசிரியர் குழு 

 

 

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்