இதழில்
பேசப்பட்டுள்ள கட்டுரைகள்
|
1.ஆசிரியரிடமிருந்து 2. நமது
படிப்பைச் சீர்செய்வோம். மாவோ
|
3. இந்தியாவில் தோன்றிய பொதுவுடமை கட்சிகள் பற்றி ஓர் தேடல் |
4. சர்வதேச தொழிலாளர் தினம்-மே தினம்
|
இலக்கு 47 இணைய இதழ் PDF வடிவில் இந்த லிங்கை அழுத்தி பெற்றுக் கொள்ளவும்
இலக்கு இணைய இதழ் தொடங்கி இரண்டாம் ஆண்டை நெருங்க போகிறோம் தோழர்களே.
இந்த நேரத்தில் எங்களின் பணி உண்மையிலே என்ன சலனத்தை மார்க்சியவாதிகளிடையே ஏற்படுத்தியுள்ளது என்று ஆய்வு செய்தால் இந்த இதழில் பேசப்பட்டுள்ள முக்கியமான பகுதியாகும்.
தத்துவத்தை நடைமுறையோடு இணைப்பது என்கின்றனர்- எந்த தத்துவத்தை நடைமுறையோடு இணைப்பது என்ற கேள்வி மட்டுமில்லாமல் விடையாக இங்கு தோன்றி பொதுவுடமை இயக்கங்களின் சுருக்கமான வரலாற்றோடு அவர்களின் நடைமுறை பணி என்ன? அவர்கள் நடைமுறை என்று என்ன செய்துக் கொண்டுள்ளனர் அவர்களின் தோல்விக்கு காரணம் மார்க்சிய ஆசான்கள் வழிக்காட்டிய தத்துவ நடைமுறையை புரிந்துக் கொள்ளாமை மற்றும் கட்சி பற்றிய ஆசான்களின் பாணியை கைவிட்டு மார்க்சியத்தை மறுத்து மார்க்சிய விரோத பாதையில் பயணித்தவையே என்று தெளிவுப்படுத்தியுள்ளோம்.
நமக்கான வழிகாட்டிகள் மார்க்சிய ஆசான்களே அவர்களின் பாதையை கைவிட்டு விட்டு பேசும் மற்றெல்லாம் மார்க்சியம் அல்லாத ஆளும் வர்க்கத்திடம் அண்டி பிழைக்கும் பாதையே…
மார்க்சியத்தை கற்று தேறுவொம் நமது ஆசான்களிடமிருந்தே அதனை நம் நாட்டிற்கு ஏற்றவகையில் நடைமுறை படுத்துவோம் ஆசான்களின் வழியில் நின்று.
உலக தொழிலாளர்களின் உதிரத்தை உரிஞ்சி வாழும் கூட்டத்தை வேரறுக்காமல் சுரண்டலுக்கு முடிவில்லை.
மே நாள் தியாகிகளுக்கு செவ்வணக்கம்
அவர்களின் பணியை அவர்கள் விட்டு சென்ற பணியை முடிக்க சபதமேற்போம்
தோழமையுடன்
இலக்கு ஆசிரியர் குழு
No comments:
Post a Comment