ஆண்டாண்டுகாலமாக அடிமைபட்டு கிடந்த இந்தியர்களின் மீது ஆங்கில ஏகாதியபத்தியம் தனது கொடூரகரங்களை கொண்டு நிகழ்த்திய ஒரு வன்முறையை கொடூரத்தை புரிந்துக் கொள்ளாமலே, நாம்மில் சிலர் ஆங்கிலேயரை தூக்கி நிறுத்துகின்றனர் அவர்கள் இதை தெரிந்தேதான் செய்கின்றனரா?
இந்த அரசு அதிகாரம் எப்பொழுதுமே உழைக்கும் ஏழை எளிய மக்களுக்கானதே இதில் அதிகார வர்க்கம் எங்கேயும் பாதிக்கப் படுவதில்லை பல சாட்சிகள் உள்ளன.
அமிர்தசரஸின் ஜாலியன்வாலா பாக்கில், 104 ஆண்டுகளுக்கு முன் இதேநாளில், பல மணி நேரம் பெரும் ஓலம் எழுப்பினர் மக்கள். ஆங்கிலேயர்கள் துப்பாக்கியிலிருந்து வெளிவந்த தோட்டாக்கள், குழந்தைகள், பெண்கள் என நூற்றுக்கணக்கானோரின் குருதியைப் பூசிக்கொண்டன. உயிரைக் காத்துக்கொள்ள அப்பாவி மக்கள் அலறித் துடித்தனர். பிரிட்டிஷ் ஆட்சியின் அழிக்க முடியாத ரத்தக்கறையாக `ஜாலியன்வாலா பாக் படுகொலை' நினைவுகூரப்படுகிறது. இந்தக் கோரச் சம்பவம் நடந்து 104 ஆண்டுகளான நிலையில், எந்தவித நிபந்தனையுமின்றி, தற்போது இந்திய அரசிடம் மன்னிப்பு கேட்டுள்ளது பிரிட்டிஷ் அரசு நிர்வாகம். இந்த நினைவுதினத்தில், அந்தப் படுகொலை தொடர்பான சில குறிப்புகள்...
ஜாலியன் வாலாபாக் வரலாறு
போரும் வாழ்வும்:
ஐரோப்பாவை மையம்கொண்ட முதல் உலகப்போர், ஐரோப்பிய ஆதிக்கமான இந்தியாவையும் விடவில்லை. பத்து லட்சத்துக்கும் அதிகமான இந்திய வீரர்கள், அயல்நாட்டுப் போரில் ஈடுபடுத்தப்பட்டனர். குறிப்பாக, பஞ்சாப் மாகாணத்தில் போரில் பங்கேற்க வீரர்கள் வற்புறுத்தப்பட்டனர். போர் நிதிக்குப் பங்களிக்கும்படி மக்களிடம் பிடிவாதமாக நன்கொடைகள் பெற்றனர். போரிடும் இந்தியப் படையினரைப் பராமரிக்கும் செலவும், பிரிட்டிஷ் - இந்திய படைப் பிரிவில் சேர்ந்த கூடுதல் பிரிட்டிஷ் வீரர்களுக்கான செலவும், இந்தியாவின் வரவு - செலவுக்கான கணக்கிலேயே வைக்கப்பட்டது. போருக்குத் தேவையான மூலப்பொருள்கள், உணவுகள், கருவிகள் போன்றவற்றை ஏற்றுமதி செய்ய, இந்தியா கட்டாயப்படுத்தப்பட்டது.
போரினால் அவதியுற்றுக் கொண்டிருந்த மக்களிடையே, அரசாங்கத்தின் மீதான எதிர்ப்பு பரவலாக இருந்தது. துருக்கியின் கிலாபத் வீழ்ச்சி இஸ்லாமியர் களிடையேயும், பஞ்சாப் வீரர்களிடையே இருந்த அதிருப்தியும் சேர்ந்து பெரும் பதற்றத்தை உண்டாக்கியது. அதேநேரத்தில் ரஷ்யாவில் நடந்த புரட்சி, பிரிட்டனின் அச்சத்தை மேலும் அதிகரித்தது. `புரட்சிகர மனநிலையில் உள்ள இயக்கங்களின் சதிகளைப் பற்றி ஆராயவும், அவற்றைத் திறம்பட கையாள அரசாங்கத்துக்குத் தேவையான சட்டங்களை அறிவுறுத்தவும்''ரௌலட் குழு" நியமிக்கப்பட்டது.
கைது செய்யும் அதிகாரம், விசாரணையின்றி சிறையில் தள்ளும் அதிகாரம், சிறப்பு நீதிமன்றங்களை அரசே நிறுவும் அதிகாரம் போன்றவற்றை உள்ளடக்கி, 1919-ம் ஆண்டு பிப்ரவரியில் அதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டது. இதனால் மொத்த நாட்டிலும் அதிருப்தியையும் கிளர்ச்சியையும் சந்திக்க நேரிடும் என்று எச்சரித்தார் ஜின்னா. அனைத்து இந்தியப் பிரதிநிதிகளும் எதிர்த்தனர். ஆனால், வன்முறையைக் கட்டுப்படுத்தும் என்ற அடிப்படையில் ஆரம்பத்தில் ரௌலட் சட்டத்தின் மீது பரிவு காட்டினார் காந்தி. பிறகு, இதன் எதிர்வினையையும் மக்களின் பரவலான எண்ணங்களையும் உணர்ந்து ரௌலட் சட்டத்தை அவர் எதிர்த்தார்.
மக்கள் அணிவகுப்பு
அன்று சீக்கியர்களின் புத்தாண்டான பைசாகித் திருவிழா (ஏப்ரல் 13, 1919). அமிர்தசரஸே மிகுந்த கொண்டாட்டத்தில் இருந்தது. ரௌலட் சட்டத்தின் எதிர்ப்பை அடக்குவதில் குறிக்கோளாய் இருந்தார் ஜெனரல் டயர். அதனால் மக்கள் திரண்டு நிற்கவும், ஊர்வலம் செல்லவும், போராட்டம் நடத்தவும் தடை விதிக்கப்பட்டது. மக்களை அச்சுறுத்தும் வகையில் அமிர்தசரஸின் முக்கிய வீதிகளில் காவலர்களின் அணிவகுப்பை நடத்தினார் டயர். போட்டிக்கு உள்ளூர் இளைஞர்கள் சிலர் ஊர்வலம் நடத்தி, ஜாலியன்வாலா பாக்கில் அனைவரும் கூடுமாறு அறிவித்தனர். ஏற்கெனவே, கலகக்காரர்களைக் கைதுசெய்த நிகழ்வு ஒன்றில் இந்தியர்கள் மீது கோபத்தில் இருந்த டயருக்கு, இந்த எதிர் ஊர்வலம் ஆத்திரத்தை அதிகரித்தது. ரகசிய காவல்துறையை வைத்து மைதானத்தின் அமைப்பு மற்றும் நிகழ்வில் கலந்துகொள்ளும் நபர்களின் விவரங்களைப் பெற்றார்.
இரண்டரையடிகொண்ட ஐந்து வாசல்களுடன் 250 அடி நீளமும் 200 அடி அகலமுமான அமைப்பைக் கொண்டது மைதானம். 20,000 பேருக்குமேல் அங்குக் கூடியிருந்தனர். சொற்பொழிவு நடந்துகொண்டிருக்கும்போதே மாலை 4.30 மணிக்குப் படையுடன் மைதானத்துக்குள் நுழைகிறார் ஜெனரல் டயர். உத்தரவிட்ட அடுத்த நொடி தொடங்கி 15 நிமிடம்வரை விடாமல் முழங்கியது துப்பாக்கிக் குண்டுகள். அருகில் இருந்த கிணற்றில் குதித்தும், நெரிசலிலும், சுவர் மீது ஏற முயன்றும் மக்கள் செத்து விழுந்தனர். 1,600 வட்டத்துக்கு மேலும் சுட்டதில் அந்த இடமே ரத்தக் களரியாகக் காட்சியளித்தது.
பிரிட்டிஷார் சார்பில் குறைத்துக் கூறினாலும் 1,000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 2,000-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். இந்த நிகழ்வுக்காக அமைக்கப்பட்ட ஹன்டர் விசாரணைக் குழுவிடம், "என்னை மதிக்காத இந்தியர்களுக்கு, பாடம் புகட்டினேன். இதற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். என்னிடம் அதிகம் குண்டு இருந்தால் இன்னும் பலரைச் சுட்டிருப்பேன்'' என்றார் டயர். அப்போதைய பஞ்சாப் ஆளுநர் மிகேல் ஓ டயரும் இந்தச் செயலை ஆமோதித்தார்.
இங்கிலாந்துப் பத்திரிகை `மார்னிங் போஸ்ட்' டயரை `வெற்றி நாயகன்' என்றது. சில வெள்ளையர்கள் `சேவியர் ஆஃப் பஞ்சாப்' (பஞ்சாபின் காவலன்) எனப் பட்டம் சூட்டினர். இரண்டு டயரையும் கொல்வேன் என்று சபதமெடுத்த இந்தியர் உத்தம் சிங், லண்டனில் மிகேல் ஓ டயரை கொன்றார். இதற்காக அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

பிரிட்டிஷ் பிரதமர் தெரசா மே தனது மன்னிப்பு விளக்கத்தில்...
"ஜாலியன்வாலா பாக் படுகொலை இந்திய - பிரிட்டிஷ் வரலாற்றில் ஒரு நீங்காத வடுவாக உள்ளது. அதற்காகப் பிரிட்டன் சார்பில் மிகுந்த வருத்தம் தெரிவித்து கொள்கிறேன். தற்போது இந்தியாவுக்கும், பிரிட்டனுக்கும் இடையே சிறந்த உறவு நிலவி வருகிறது. பிரிட்டனில் உள்ள இந்திய வம்சாவளியினர் பிரிட்டனின் வளர்ச்சிக்கு சிறப்பாகப் பங்களித்திருக்கிறார்கள். அந்த உறவு மேலும் வலுவடையும் என்பதே இந்தச் சபையின் நோக்கம்" என்று கூறியிருக்கிறார். 379 உயிர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதை நூறு வருடங்கள் கழித்து தவறென்று வருந்தியிருக்கிறார்கள். இருப்பினும் மன்னிப்புக் கேட்பது ஆயிரக்கணக்கில் நிகழ்ந்த மரணத்துக்கான நியாயமாகி விடுமா?

ஜாலியன் வாலாபாக்கில் எத்தனை பேர் இறந்தார்கள்?


ஜாலியன் வாலாபாக் கிணறு

No comments:
Post a Comment