கூடுதலான உழைப்பு அல்லது புதிய கருவிகள் மிகக் குறைவாகவே தேவைப்படுவதே. விவசாயி அல்லது குத்தகை விவசாயி விவசாய பொருள்களின் உற்பத்தியில் தனிப்பட்ட செலவை நிர்ணயிக்கும் பொழுது செலவு அளவு விகிதங்களைப் பற்றியும் சமூக ரீதியில் அவசியமான உழைப்பில் அவற்றின் உறவு பற்றிய சிந்திக்க முயற்சிப்பதில்லை. ஆனால் அவர்களுக்கு அநேகமா தொடர்பில்லாத முறையில் சந்தை விலை உள்ளது. எனவே தங்களுடைய குறைந்தபட்ச சொந்த தேவைகளை பூர்த்தி செய்வது அவர்களுடைய உற்பத்தியின் நோக்கமாக இருக்கிறது. உற்பத்தி திறனை தூண்டுவதற்கு உயர்த்துவதற்கோ அல்லது உற்பத்திக்கு அவசியமான நேரத்தை குறைப்பதற்கு அதனால் முடியாது. நடைமுறையில் கிராம உற்பத்தியாளர்கள் அதிக பெரும்பான்மையான பிழைப்பிற்கான அல்லது ஓரளவு பிழைப்பிற்கான பொருளாதாரத்தை கொண்டு இருக்கின்றனர். பொருளாதாரத்தின் விவசாயத் துறையில் முதலாளித்துவ உறவுகளின் உருவாக்கத்திற்கு ஏறக்குறைய விரிவான அடிப்படையை அமைப்பதற்கு அவசியமான கட்டத்திற்கு மெதுவாக வளர்ச்சி அடைகிறது.
2011 நாட்டின் மக்கள் தொகை கண்கெடுப்பிற்கு பின் 2021 ல் கணக்கெடுப்பு 2023 ல் வெளியிடுவதாக கூறியுள்ளது.
இதற்கிடையில் 2011 கணகெடுப்பின் அடிப்படையில்.... நான் இரு கிராமங்களை ஆய்விற்காக எடுத்துக் கொண்டேன் இரண்டு கிராமமும் ஒரே பஞ்சாய்த்துக்குபட்டதே. அவை இரண்டு கிராமமும் ஆண்ட சாதிகள் என்று பேசிக் கொண்டிருக்கும் இருவேறு ஜாதிகளை முழுமையாக கொண்டவை. இந்த பஞ்சாயித்தின் மக்கள் தோகை கணக்கெடுப்படி 1623 குடும்பமும் 6105 மக்கள் தொகை கொண்டவையாகவும் உள்ளது.
ஒரு கிராமம் மானவாரி அடிப்படையாக கொண்டது இன்னொன்று ஆற்று நீர் பாய்சலை அடிப்படையாக கொண்டது. கீழே உள்ள படம் அதனை குறிப்பிடுவதே
மானாவாரி விளைச்சல் நிலம் கொண்ட ஊர் அதிக பட்சம் ஆற்று பாய்சல் ஊரை சார்ந்தும் அவர்களை அடிபணிந்து வாழ்ந்தவர்கள் இன்று பெங்களூரில் கட்டுமான தொழிலை மேற்கொண்டு நல்ல நிலையில் முன்னேறியுள்ளனர். இதே ஆற்றுபாய்சலை நம்பியிருந்த கிராமம் நிலவுடையிலும் வசதியிலும் மேலோங்கியிருந்தாலும் இன்று இன்னொறு கிராமத்தை நோக்கும் பொழுது விவசாயத்தை நம்பி வாழும் இந்த கிராமம் அவர்களின் வளர்சியை விட அதிகமில்லை. இன்று ஜாதி முரண்பாடுகளை தூக்கி நிறுத்தும் அந்த பின் தங்கிய கிராமம் வளர்சியில் மேலோங்கியுள்ளது அவை பெங்களூரிவில் உழைப்பால் அந்த கிராம மக்களின் உயர்வுக்கு காரணம் எனும் அதே நேரத்தில் விவசாயத்தை மட்டுமே நம்பியிருக்கும் ஆற்று பாய்சல் கிராமமக்கள் பெரிய வளர்சி என்று கூற முடியாது...
இதன் ஜாதிய பாகுபாடு மற்றும் அவர்களுக்கு இடையேயான இன்றை முரண் மற்றும் நடப்பு நடைமுறை ரீதியாக நான் உள்வாங்கியவற்றை பின்னர் எழுதுவேன் தோழர்களே.
இவை நடைமுறையில் நான் சேகரித்தவை இன்னும் தொடர்ந்து எழுதுவேன் தங்களின் கருத்துகளை எழுதும் படி கேட்டுக் கொள்கிறேன் தோழர்களே...
2021 வெளியிட வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஏன் முடிக்கப்பட்வேயில்லை இந்த லிங்கில் செய்தியுள்ளது.
அரசு என்னவென்று தெரியாத புரட்சி பேசி உழைக்கும் மக்களை ஏய்க்கு வினவு. இந்த லிங்கில் நமது தோழர்கள் சமூக அறிவை பெருவதெப்போது?.
No comments:
Post a Comment