கிராமபுற விவசாயிகள் நிலை குறித்த ஓர் தேடுதல்-சிபி

கிராமபுறத்தில் ஏற்பட்ட மாற்றங்களை தேடி சென்று சேகரித்த சில தகவல்கள் பதிவிட உள்ளேன் வாசித்து கருத்திடுங்கள் தோழர்களே..
கிராமங்கள் கிராமங்களாகவே இல்லை சில மாறுதல்கள் ஏற்பட்டுள்ளது ஆனால் இங்குள்ள சிலர் பேசுவது போல் எல்லாம் பெருவீத உற்பத்தியில் அதாவது முதலாளித்துவ உற்பத்திமுறைக்குள் சென்று விட்டதா என்றால் அவர்களின் கண்ணோட்டமே கேள்வி குறியாக உள்ளது.
ஏனெனில் விவாசாய உற்பத்தி சாதனங்கள் பெரும் தொழில்நுட்ப வளர்ச்சி பெற்றுவிட்டதா என்றால் அவையும் இல்லை மாடு கட்டி ஏர் ஓட்டுவது போய்விட்டதா என்றால் டிரக்டர் வரவு என்ன மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது கவனிக்க வேண்டுமெனிலும் பணக்கார விவசாயிக்கும் சிறுகுறு விவசாயிக்கும் உள்ள ஏற்ற தாழ்வை புரிந்திருக்க வேண்டும்.
கிராமங்களில் ஒருசிலர் கையில் முன்பு போல் நிலம் குவிந்து கிடக்கவில்லை ஆனாலும் கனிசமான அளவில் நிலமற்ற விவசாயிகளும் விவசாய தொழிலார்களும் நிலவவே செய்கின்றனர். இந்த கூட்டம் வேலையின்மையும் குறுசிறு விவசாயிகள் இன்றைய உலக மயமாக்கப் பட்ட சூழலில் விளைவிக்கும் பொருளுக்கும் விலையில்லை வாழ்வா சாவா என்று போராடிதான் வாழ்ந்துக் கொண்டுள்ளனர்.

சிறுகுறு விவசாயிகள் தன்நிலத்தை காப்பாற்ற ஏதோ விளைவிக்க முயல்கிறான் அவன் வயித்துபாட்டையும் போக்கவில்லை அவனை மேலும் மேலும் கடன்காரனாக வாழ வைக்கிறது. பணம் படைத்த விவசாயி அல்லது ஏதோ அரசு தனியார துறையில் பணிபுரியும் விவசாய குடும்பம் சிறிது அரசின் நிதி திட்டங்களை பயன்படுத்தி சற்று முன்னேற அவை விவசாய தொழிற்நுட்ப சாதனங்களை வாங்கி தானும் பயன்படுத்துவது போல் பிறருக்கும் வாடகைக்கு கொடுக்கிறது.
மாட்டின் பயன்பாடு அற்றே போய் விட்டது ஜல்லிக் கட்டுக்கு போராடும் பலருக்கு விவசாயின் கையில் இனி நாட்டு மாடு இருக்காது என்பது தெரிந்திருக்காதோ என்று எனக்கு தெரியவில்லை.
ஆங்காங்கே சிறு மாட்டு பண்ணைகள் ஆம் அன்று வீட்டிற்க்கு இரண்டு மூன்று கறவை மாடுகள் வைத்திருந்தனர் இன்றோ நிலம் படைத்தவர்கள், ஆடு மாடு கோழி போன்றவற்றை வளர்பதில் முக்கிய கவனம் செழுத்துகின்றனர். அதன் பராமரிப்பு மிகவும் அதிக செலவு பிடித்தவை இருந்தும் ஏதோ வாழ்க்கைக்கு உதவும் என்று உழைத்துக் கொண்டுள்ளனர்.
சரி சில தேடியதிலிருந்து உண்மையில் கிராமம் என்றாலே சாதியத்தின் மூடமைப்பு என்பர். கிராமமானது நிலத்தை உடமையாக கொண்ட உழைப்பை செலுத்தும் பெருவாரியான மக்களின் இருப்பிடமானது.
ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் நில உடமையாளர்கள் நிலமற்ற விவசாய கூலிகளை சுரண்டி வாழ்வதற்காக சுரண்டல் வடிவில் உருவான ஜாதி அமைப்பு முறை கிராமங்களில் இன்றும் காணலாம்.
ஆனால் உண்மையில் அன்று தோன்றிய ஜாதி அப்படியே அதே வடிவில் இன்றும் தொடர்கிறதா என்பது கேள்விக்குறியே. (அதனை விரிவாக வேறொரு நேரத்தில் பேசுவோம்) . இன்று பேசுபொருள் கிராமத்தில் உள்ள உற்பத்தி முறையும் வர்க்க நிலைகளைப் பற்றியும் தேடுதலே இந்த கட்டுரையின் நோக்கம்.
பெரும் நில உடைமாளர்களும் பெரும் பண்ணையார்களும் நிலவுகின்றார்களா என்றால் ஆன்மீக வழிபட்ட பண்ணை நிலங்கள் உள்ளதை போல் பெருவாரியான சொத்தை குவித்துள்ள பெரும் பண்ணையாளர்கள் மிகக் குறைவு அதேபோல அவர்கள் குறிப்பிட்ட நிலப் பகுதியில் மட்டுமே உள்ளனர் எல்லா கிராமப்புறத்திலும் தேடினால் இவர்கள் கிடைக்கவில்லை.
ஆக ஒரு சமூக அமைப்பின் தன்மையை அதன் உற்பத்தி முறையே தீர்மானிக்கிறது. மார்க்சியம் அதன் உற்பத்தி முறையின் அடிப்படையில் சமூக வரலாற்றை புராதான பொது உடமை சமூகம் அடிமை உடமை சமூகம் நில உடமை சமூகம் முதலாளித்துவ சமூகம் பொதுவுடமை சமூகம் என்று குறிப்பிட்டுள்ளனர். முதலாளித்துவதற்கும் பொதுவுடைமைக்கும் இடையே சோசலிச சமூகத்தை காண்பர்.
இது அனைத்து நாடுகளுக்கும் தழுவிய பொது தன்மையாகும். இவை கோட்பாடு. இந்த பொதுத்தன்மை ஒவ்வொரு நாட்டின் தனித்தன்மையுடன் வெளிப்படும். ஐரோப்பிய பகுதியில் தோன்றிய அடிமை முறையும் நிலவுடமை முறையும் அப்படியே இந்தியப் பகுதிகளுக்கு பொருத்தி காட்டுவது இயந்திரவகைப்பட்டதே. இந்தியப் பகுதிகளின் தனித்தன்மையை புரிந்து கொள்ளுதல் உற்பத்தி முறையின் விளக்கத்துக்கான பொதுத்தன்மை விட்டு விட்டு அல்ல ...

கிராமப்புறங்களில் வாழ்க்கை போராட்டம் வர்க்கப் போராட்டம் என்றால் என்ன? ஒடுக்கும் வர்க்கத்திற்கு எதிராக ஒடுக்கப்படும் வர்க்கம் நடத்தும் போராட்டமே. நிலப் பிரபுக்களுக்கு எதிரான உழைக்கும் பெருந்த் திரளான விவசாயிகளின் போராட்டம். ஏனெனில் நிலப் பிரப்புகளை காப்பது முடியாட்சியாளர்களே ஆகவே அவர்களுக்கு எதிராக உழைக்கும் மக்கள் ஒன்று திரண்டு போராட வேண்டுமென (ரசியாவில் லெனின் அறைகூவல் விடுத்தார்). இங்கு இன்றோ கிராமங்களில் நிலப்பிரப்புகளும் இல்லை ஏன் பண்ணையார்களும் இல்லை(விதிவிலக்கு). அதனை ஒட்டி கிராமப்புற உற்பத்தி முறையைப் பற்றி பேசுவோம்.
அதற்கு முன் இந்திய விவசாயத்தின் உண்மையான நிலையை புரிந்து கொள்ள முயற்சிப்போம் ... இந்தியாவில் நகரப்புறங்களை விட கிராமப்புறங்களில் அதிக மக்கள் வாழ்வதால் கிராமப்புறங்களை வளர்க்க தேவை உள்ளது. அதன் அடிப்படையில் அரசு முழுவீச்சில் செயல்பட்டதா என்பது நமது தேடுதலே...
1950-60 பாசனத்திற்காக பல்நோக்கு திட்டங்கள் கொண்டு வந்தாலும் நில சீர்திருத்தம் இன்மையால் பெரிதாக மாற்றத்தை கொண்டு வரவில்லை. 1960 - 1966 ஏற்பட்ட பெரிய நெருக்கடிகளை சந்திக்க பசுமைப் புரட்சி கொண்டு வரப்பட்டது புதிய விவசாய தந்திரம் என்று கூறப்பட்டது. உண்மையில் அதன் பயன் எல்லா விவசாயிகளுக்கும் சென்றடைந்ததா என்றால் கேள்விக்குறியே இந்த பசுமைபுரட்சியின் சாதக பாதங்கள் பல (அதனை இங்கே முழுமையாக பேச முடியாது). 1970-80 புது பாசன திட்டம் கைவிடப்பட்டு பம்பு செட்டுகளும் இயந்திர வகைப்பட்டு விவசாய உற்பத்தி பொருள்களும் அரசு வங்கிகள் மற்றும் அரசின் மானியங்கள் மூலமாக வழங்கப்பட்டது. இதனால் சில தொழில்நுட்ப பிரிவுகள் இதில் பயனடைந்தன. உலக நெருக்கடியோடு நாட்டில் நெருக்கடி 1980 பிறகு அரசு மானியங்கள் குறைக்கப்பட்டன.
1980 ல் மேற்கொள்ளப்பட்ட தாராளமயக் கொள்கை வேளாண்மை துறையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
1990 துவங்கிய தனியார் மயம் தாராள மையம் உலக மையம் கிராமப்புற பொருளாதாரத்தையும் வேளாண்மை துறையையும் பெரிதும் நாசப்படுத்தி உள்ளது.
இந்தக் கொள்கைகளால் கிராமப்புறங்களில் கடன் நெருக்கடியும் வேலை இன்மையும் பட்டினி சாவுகளும் பெருகின. பல லட்சம் விவசாயிகள் தற்கொலைக்கும் வித்திட்டது.
கிராமங்களில் வாழ்க்கையானது கடினமானது கூலித் தொழிலாளர்கள் நகரப்புறங்களில் நோக்கி படையெடுத்தனர் அவர்கள் வாழ்வதற்கு உண்ணுவதற்கும் வழிவகை கிடைத்துள்ளது. இருந்தும் இடம்பெயர முடியாத நிலம் சார்ந்த உழைப்பில் உள்ள நில உடமையாளர்கள் மற்றும் கூலிதொழிலாளர்கள் இங்கே வாழ வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அவர்களை பற்றி விரிவாக பேசுவேன். அவைதான் நமது விவாத பொருளே.

இன்று அடிக்கடி இந்திய பிரதமர் மோடி டிவியில் தோன்றி ஏதோ விவசாய மக்களின் வாழ்வுக்கு தான் பங்கு அளிப்பதாக கூறி கொண்டுள்ளார். இவை ஆளும் வர்க்கம் தனக்கு எப்பொழுதெல்லாம் நெருக்கடி ஏற்படுகிறது உணவுப்பஞ்சம் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் விவசாயிகளை காப்பதாகவும் அவர்களுக்கு தங்களால் உதவி செய்வதாகவும் பேசுவதும் நடந்து கொள்வதுதான்.இதில் அந்த மக்களுக்கு எந்த பயனும் இல்லை . அவை உண்மையில் பெரும்பான்மையான மக்களுக்கு போய் சேருவதேயில்லை ஏனெனில்,அரசின் கடன் வசதி, வருமான வரி சலுகைகள் பணக்கார விவசாயகளுக்கு மட்டுமே பயன்படுகிறது. இவர்கள்தான்  டிராக்டர் வங்கி கடன் வாங்குவது , கூட்டுறவு சங்கத்தில் ஆதிக்கம் அரசியல் ஆதிக்கம் இவை மென்மேலும் செல்வ செழிப்புக்கு சொத்து சேர்ப்பதில் வளர்ச்சி பெறுகிறான்.

இந்தியா ஒரு விவசாய நாடு நாட்டின் பெரும்பாலான மக்கள் விவசாயிகள் இந்திய அரசின் அண்மைய ஆய்வறிக்கையின் அடிப்படையில் 70%மக்கள் கிராமப்புறத்தில் தான் இன்றும் வாழ்ந்து கொண்டுள்ளனர் அதில் 60சதவீத மக்கள் விவசாயம் சார்ந்த தொழில்களில் தான் ஈடுபட்டுள்ளதாக அதே அறிக்கை குறிப்பிடுகிறது

அப்படி எனும்போது இந்தியாவின் முதன்மையான முரண்பாடாக எதை காண்பது என்பது இங்கு சிலர் விவாதித்து கொண்டுள்ளனர். அதனைப் பற்றி இங்கே நான் எந்தவிதமான கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை. ஏனெனில் இன்று நமது சமூகத்திலுள்ள நேரடி பிரச்சனைகளுக்கான காரணங்களை விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாக உள்ளது.(ஓரு சிறிய அறிமுகம் மட்டும் குறிப்பாக கீழே இணைக்கிறேன்).

விவசாயிகளின் வாழ்வு இன்றும் விடிந்தபாடில்லை. உணவு உற்பத்தி உயர்த்தும் திட்டங்கள் விவசாயிகளின் வாழ்க்கையை உயர்த்தவில்லை. விவசாயிகள் அரைப் பட்டினியுடன் வாழ்கின்றனர் காரணம் என்ன?  விவசாயிகளுக்கும் உற்பத்திக்கும் இடையில் முதல் முரண்படாக இந்நாட்டில் விளங்குவது நிலமாகும் , உண்மையாக உழைக்க முன்வரும் விவசாயிகளிடம் நிலம் இல்லை.

இன்று நாம் பல்வேறு பெரும் சொத்து உடையவர்கள் என்பவர் தனது முதலீடாக ஆங்காங்கே நிலத்தை வாங்கி குவிப்பதும் ஒரு போக்காக் காணமுடிகிறது .நாட்டின் பெரும்பான்மையான நிலங்கள் இன்றும் அன்றைய நிலவுடைமையாளர்கள் இன்றைய பெருமுதலாளிகளுக்கு கையில் உள்ளது சில பன்னாட்டுக் கம்பெனிகள் வசமும் உள்ளது. மக்களிடையே காணப்படும் நிலமானது பெரும்பாலும் வானம் பார்த்த நிலமாக உள்ளது அப்படியே கிணற்று நீர் இன்றைய சுற்றுச்சூழல் சீர்கேட்டால் தண்ணீர் மாசுபட்டுள்ளதால் விவசாயம் செய்யவே பயன்படாத பல பகுதிகள் உருவாகியுள்ளது .இன்னொறுபுறம்  இன்று பெரும்பகுதி நிலங்கள் யார் கையிலுள்ளதோ அவர்களுக்கு விவசாயம் சார்ந்த உழைப்பிற்கு ஊக்கம் இல்லை. உணவு உற்பத்திக்கு ஈடுபட உள்ள தொழிலாளர் விவசாயிகள் கையில் நிலம் இல்லை.

 மறைந்துள்ள விசியம் விவசாய வர்க்கம் அரசியல் அதிகாரம் பெறும் வரை அவர்களுக்கு எவ்வித சலுகையும் பெறப்போவதில்லை; பணக்கார விவசாயிகள் மேலும் அரசியல் அதிகாரம் பெற கூலி விவசாயிகளை நாட்டில் பெருகி வருகிறார்கள் . இதே நேரத்தில் நாம் நாட்டில் ஏற்பட்டு வரும் முதலாளித்துவ அமைப்பில் மக்களுக்கு எவ்விதமான பயனளித்துள்ளது என்பதையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்

வறுமையும் ஏற்றத்தாழ்வும் முதலாளித்துவத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இவை முதலாளித்துவத்தின் முரண்பாடுகளில் முதன்மையானது முதலாளித்துவம் வறுமை இரண்டுமே பகைமை உறவு கொண்டவை முயலும் அதனால் தான் முதலாளித்துவம் அதன் பிறப்பிலேயே அதை அழிக்கும் கருவையும் கொண்டிருக்கிறது என்று நமது ஆசான் கூறியுள்ளார்.

முதலாளித்துவம் ஆனது கீழ்க்கண்ட நோக்கங்களுக்காக இந்த ஏற்றத்தாழ்வை கட்டிக் காக்கிறது .

1). கூலி விகித ஏற்ற தாழ்வுகளை ஏற்படுத்தி பல்வேறு ரக இக்கட்டான வேலைகளையும் தொழிலாளர்கள் கொண்டு செய்விக்க முடிகிறது.

2). வேலையில் உள்ளவர்களுக்கு வறுமையை காட்டி எச்சரித்து தொழிலாளர்களை பல்வேறு பணிகளில் பிரித்து வேலை வாங்குகிறது வேலை செய்யாவிடின் பட்டினியாக இருக்க நேரிடும் என்று எச்சரிக்கிறது.

3). வேலையற்ற ஏழைகளை காண்பித்து உழைப்போர் ஊதியத்தை குறைத்து தொழிற்சங்கங்களை பலவீனப்படுத்த முடிகிறது. உழைப்போர் லாபத்தில்  அதிகப்பங்கு பெற முடியாது போகிறது.

4). குறைந்த ஊதியம் பெறும் தொழிலாளரும் வறியவர்களின் சேவையையும் உற்பத்தி பண்டங்களும் குறைந்த விலையில் பெற முடிகிறதுஇவைதான் முதலாளித்துவ லாப வேட்டைக்கான அடிப்படை ..

நாட்டின் முன்னேறி வர்க்கமான தொழிலாளர்களும் நலிவுற்று கொண்டுருக்கும் விவசாயிகளுடன் இணைந்து புதியஜனநாயக  புரட்சிக்கு வழி தேட வேண்டும். அத்தகைய புரட்சியே நாட்டில் உண்மையான ஜனநாயக தன்மை நிலைநாட்ட முடியும்நிலம் அனைத்தும் மக்கள் சொத்தாகவும்; அனைவரும் நாட்டின் தேவையை ஒட்டி உழைப்பர். நாம் அனைத்திலும் தன்னிறைவு பெறுவோம் விலையேற்றம்  பற்றாக்குறை பற்றிய துன்பம் அனைத்தும் அப்பொழுது மறைந்து போகும்.

· குறிப்பு:- “முதலாளித்துவம் வளர்ச்சி விவசாயத்தில் துவாகவும் பல வடிவங்களும் நுழைகின்றது மேலும் விவசாயத்தில் முதலாளித்துவம் அதன் தன்மையிலேயே தொழில்துறை போல் சமமாக வளர்ச்சி அடைய முடியாது ஒரு இடத்தில் ஒரு நாட்டில் ஒரு பகுதியில் ஒரு வடிவத்தில் விவசாயத்தில் ஒரு அம்சம் அது முன்னுக்கு எடுத்துச் செல்கிறது” - லெனின் .

· தொழில்துறை முதலாளித்துவம் விவசாயத்துறை முதலாளித்துவம் உள்ள ஒப்பீட்டு ரீதியான வளர்ச்சியையும் இயங்கியல் உறவுகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டால் தான் ஒரு நாட்டின் முதலாளித்துவ வளர்ச்சியை ஆராய முடியும். தொழில்துறை முதலாளித்துவத்தில் வெளிப்படும் தெளிவான வர்க்க ணி சேர்க்கையும் வர்க்க முரண்பாடுகளும் விவசாயத்துறை முதலாளித்துவத்தில் காண்பது இயலாது. ஆனால் ஒப்பீட்டு ரீதியான அளவில் தொழில்துறை முதலாளித்துவ வளர்ச்சிக்கு ஏற்ப அதன் பலம் பலவீனம் உள்வாங்கிக்கொண்டு விவசாயத்துறையில் முதலாளித்துவம் வளரும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

முதலாளித்துவ உற்பத்தி முறை என்பது இதற்கு முந்தி எல்லா உற்பத்தி முறைகளில் உயர்ந்த கட்டமாகும். அதுமட்டுமல்லாமல் முதலாளித்துவ உற்பத்தி முறை என்பது மிகவும் சிக்கலான பரிணாமங்களை பல்வேறு விதமான வடிவங்களில் கொண்டதாக அமைந்திருக்கின்றன. முதலாளித்துவ உற்பத்தி முறையின் வளர்ச்சி என்பது எல்லா நாடுகளிலும் சீராகவும் ஒரே மாதிரியாக ஒத்த தன்மை உடையதாகவும் அமைந்திருக்க இயலாது. முதலாளித்துவ வளர்ச்சி மற்றும் மாற்றங்களை எளிய மற்றும் நேர்கோடான சூத்திரத்தில் அடக்கிவிட முடியாது. அது இடத்திற்கு இடம் நாட்டிற்கு நாடு காலத்திற்கு ஏற்ப மாறுபட்ட வடிவங்களில் கொண்டு வளர்ந்து வந்திருக்கிறது. முதலாளித்துவத்துக்கு முந்தைய உற்பத்தி முறையிலிருந்து முதலாளித்துவ உற்பத்தி முறைக்கும் இட்டுச்செல்லும் வடிவங்கள் பல இருப்பினும் அவை பொதுவாக இரண்டாகப் பிரிக்கலாம் ஒன்று புரட்சியின் மூலம் முதலாளித்துவ உற்பத்தி முறையை உருவாக்குதல் இந்த வகையான தங்குதடையற்ற முதலாளித்துவ மாற்றங்கள் இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் நடந்தேறின மற்றது மெதுவான படிப்படியான முதலாளித்துவ வளர்ச்சி இது பிரஷ்யன் ஷங்கர் பாணி முதலாளித்துவ வளர்ச்சி என்றழைக்கப்படுகிறது. இம்மாதிரியான முதலாளித்துவ வளர்ச்சி இன்று நமது நாட்டில் நடந்தேறி வருகிறது. தொடரும்

இந்தியாவிலும் முதலாளியத்திற்கான உள்நாட்டு சந்தை வளர முடியவில்லை. விவசாயம் சாராத மக்கள் தொகையோடு ஒப்பிடும்போது விவசாயம் சார்ந்த மக்கள் தொகையின் அளவு குறையவில்லை .விவசாயத்தில் முதலாளிய உறவுகளை வளர்ப்பதில் ஏற்பட்ட தோல்விதான் இந்த தடைக்கு முக்கிய காரணமாகும். 

முதலாளித்துவத்துக்கு முந்தைய வடிவங்கள் தொடர்ந்து ஆதிக்கம் வகிக்கின்றன. வாணிப வட்டி மூலதனத்தின் அசுர வளர்ச்சி ஒரு புறமாகவும் மற்றொருபுறம் விவசாயத்துறையை முதலாளித்துவத்தின் மாற்றத்திற்கு எந்த வழியையும் செய்யப்படாமல் நாட்டின் பெரும் உழைப்பு சக்தி வீணடிக்கப்பட்டுள்ளது. 

நமது நாட்டில் புதிய பொருளாதாரக் கொள்கை தாராளமயம் உலகமயம் இதைதான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது நாட்டின் நெருக்கடி தவிர்ப்பதற்கு மக்களின் தேவைக்கேற்ற திட்டமிட்ட உற்பத்தி வேண்டும் ஆனால் மக்களின் வாங்கும் சக்தியை வழி செய்ய வேண்டும் இவை இரண்டிற்கும் எங்கு உத்தரவாதமில்லை சுரண்டல் ஒன்றே இச் சமூக விதியாக உள்ளது .கடுமையான சுரண்டலின் காரணமாக நாட்டின் பெரும்பான்மையினர் குறைந்த வருவாய் கிடைக்கிறது வாங்கும் சக்தி அற்றவர்களாக இருக்கின்றனர் இன்னொரு பக்கம் நாட்டின் பெரும்பகுதி  வாராக் கடன் மக்களை கொள்ளை அடித்த  லாபத்தில் அதிகாரிக்கு லஞ்சம் ஆகும் மக்களுக்கு வரி சுமையாகும் வளர்ந்து கொண்டே உள்ளது. நாட்டின் 

0.23% உள்ள  முதலாளியை பற்றி பேசும் நாம், நாட்டில்  99.77 % உள்ள மக்களைப் பற்றி பேசுவதே இல்லை. 

பன்னாட்டு கம்பெனிகள் இன்று நாட்டில் உள்ளே உள்ளது போது இந்நாட்டு முதலாளிகளின் வளர்ச்சி பற்றி மட்டும் நாம் பேசுவது  தவறன்றோ?

அரசின் கடன் எத்தனை சதவீதம்?

உள்நாட்டில் எல்லாப் பொருட்களும் தயாரிக்கப்படுகின்றன வெளிநாட்டு கடனில் குறிப்பாக அமெரிக்கா சார்ந்த ஏகாதிபத்திய இருந்து பெறப்பட்ட கடன் எத்தனை?

எதற்காக உலகமயம் தனியார்மயம் நடைபோட்டுக் கொண்டுள்ளது .

இன்றைய நிதி மூலதன சகாப்தத்தில் வணிக முதலாளி வர்க்கத்தை காட்டிலும் காலனி அல்லது அரசியல் சார்ந்த தொழில்துறை முதலாளி வர்க்கமே அந்நிய ஏகாதிபத்திய மூலதனத்திற்கு முகவர்களாக திறம்பட செயலாற்றுகிறது தடையில்லாத போட்டி தனி ஆட்சி புரிந்த பழைய முதலாளியதற்கு உரிதான பண்பு பண்ட ஏற்றுமதியாகும். தற்போதைய முதலாளித்தின் தனிபண்பு மூலதன ஏற்றுமதியே என்று லெனின் கூறியுள்ளார். 

லெனின் சொன்னது போல் மூலதன ஏற்றுமதி மூலம் நேரடி மூலதனம் கடன் மூலதனம் என்று ஏகாதிபத்திய நாடுகள் தனது சார்பு நாடுகள் தங்களின் நலன்களுக்கு ஊதியம் செய்யக்கூடிய கொள்கைகளை பின்பற்றும் படியும் கடன் வாங்கிய நாடுகளின் நெருக்கடி செய்கின்றன . 

1947க்கு முன்பான காலனிய கட்டத்தை நோக்கினால் புரிந்து கொள்வோம். முதலாளித்துவத்திற்கு முந்தைய சமூக அமைப்புகளை தக்க வைக்கப்பட்டது காரணம் காலனி சுரண்டலில் உழைப்பு சக்திகளின் வளர்ச்சி தடைகளை ஏற்படுத்தினர். சிலர் தொழில் துறைகளும் முதலாளித்துவத்திற்கு தேவையான சில தொழிற்சாலைகளை  நிர்மானம் செய்வதிலும் உற்பத்தில் ஈடுபட்டாலும் இன்னொரு பகுதியான பெரும்பகுதியான கிராமப்புற மக்களை உற்பத்தி உறவுகள் கவனமாகப் பாதுகாக்கப்பட்டது .அதாவது கந்து வட்டி வட்டி மூலதனங்கள் செழித்தோங்கின  கிராமப்புற மக்கள் அவர்கள் சார்ந்த தொழில்களையே நம்பி வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஒரு புறம் நிதி மூலதன ஆதிக்கம் செழித்தோங்கும் இந்நாட்டில் மறுபுறம் பெரும்பான்மையான மக்கள் பின்தங்கிய உற்பத்தி உறவில் தள்ளப்பட்டுள்ளது  நாட்டின் வளர்ச்சிக்கு எவ்வித பங்காற்றாது வளர்ச்சியும் இல்லை என்றே நான் வாதிக்கின்றேன் .

"உள்நாட்டுச் சந்தையின் வளர்ச்சி ஒரு நாட்டின் முதலாளிய வளர்ச்சியின் அளவுகோல் ஆகும் " என்று லெனின் சொல்லியிருக்கிறார் .

ஆக நமக்கு நமது சமுதாயத்தில் நிலவும் உற்பத்திமுறையை புரிந்து அதனடிப்படையில் செயலாற்றவே இதனை தேட வேண்டியுள்ளது என்பேன்.

தொடரும்...



No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்