இந்திய விவசாயம் முதலாளித்துவ உற்பத்திமுறைக்கு மாறிவிட்டதா?


நேற்றைய கிளப் அவுஸ் விவாதம் ஒலி வடிவில் இங்கே அழுத்தி கேட்கலாம் தோழர்களே

விவாதத்தை தொடக்கி வைத்து நான் பேசியவை கீழே;- தோழர் ஞானசூரியன் பல்வேறு தகவல்கள் அடிப்படையில் கிராமபுற மக்கள் எப்படியுள்ளனர் மற்றும் அரசின் நடவடிக்கைகளை அடுக்கினார். தோழர் சுப்பிரமணி அண்மையில் வசந்தகுமார் அவர்களின் நூலினை மேற்கோள் காட்டி இதனை பற்றி பரிசீலிக்க வேண்டுமென்றார் மேலும் தோழர் வேலன், தோழர் ரவீந்திரன் தொடர்ந்து வாதித்து நேரம் 1:30 நேரத்திற்க்கு மேலே செல்லவே விவாதத்தை அடுத்த வாரம் தொடரலாம் என்று முடித்துக் கொண்டோம். உங்களின் கருத்துகளை முன் வைக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்.

இனி நான் பேசியவைஅன்பு தோழர்களே இன்றைய விவாதிற்கு செல்லும் முன் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையிலிருந்து முதலாளித்துவம் என்றால் என்னவென்று கோட்பாட்டு ரீதியாக கூறுவதை பார்ப்போம்.  

எங்கெல்லாம் முதலாளித்துவ வர்க்கம் மேலாதிக்கம் பெற்றதோ, அங்கெல்லாம் அது அனைத்து நிலப்பிரபுத்துவ உறவுகளுக்கும், தந்தைவழிச் சமுதாய உறவுகளுக்கும், பழம் மரபுவழி உறவுகளுக்கும் முடிவு கட்டியது. ”இயற்கையாகவே தன்னைவிட மேலானவர்களிடம்” மனிதன் கட்டுண்டு கிடக்கும்படி செய்த, வெவ்வேறு வகைப்பட்ட நிலப்பிரபுத்துவத் தளைகளை ஈவிரக்கமின்றி அறுத்தெறிந்தது. மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையே அப்பட்டமான சுயநலம் தவிர, பரிவு உணர்ச்சியற்ற ”பணப் பட்டுவாடா” தவிர, வேறெந்த உறவும் இல்லாமல் செய்துவிட்டது. மத உணர்ச்சி வேகம், பேராண்மையின் வீராவேசம், போலிப் பண்புவாதிகளின் (philistines) உணர்ச்சிவயம் ஆகியவற்றால் ஏற்படும் அதி தெய்வீக ஆனந்தப் பரவசங்களைத் தன்னகங்காரக் கணக்கீடு என்னும் உறைபனி நீரில் மூழ்க்கடித்துவிட்டது. மனித மாண்பினைப் பரிவர்த்தனை மதிப்பாக மாற்றிவிட்டது. துறக்கவொண்ணாத, எழுதி வைக்கப்பட்ட, எண்ணற்ற சுதந்திரங்களுக்குப் பதிலாகச் சுதந்திரமான வணிகம் என்னும் ஒரேவொரு நியாயமற்ற சுதந்திரத்தை உருவாக்கி வைத்துள்ளது. சுருங்கச் சொல்லின், முதலாளித்துவ வர்க்கம், மதம் மற்றும் அரசியல் பிரமைகளால் திரையிட்டு மறைக்கப்பட்டிருந்த சுரண்டலுக்குப் பதிலாக, அப்பட்டமான, வெட்கமற்ற, நேரடியான, கொடூரமான சுரண்டலை ஏற்படுத்தியுள்ளது.

உற்பத்திக் கருவிகளையும், அதன்மூலம் உற்பத்தி உறவுகளையும், அவற்றோடு கூடவே ஒட்டுமொத்த சமுதாய உறவுகளையும் இடையறாது புரட்சிகரமாக மாற்றி அமைத்திடாமல் முதலாளித்துவ வர்க்கம் உயிர்வாழ முடியாது. இதற்கு மாறாக, பழைய உற்பத்தி முறைகளை மாற்றமில்லா வடிவில் அப்படியே பாதுகாத்துக் கொள்வதுதான் முந்தைய தொழில்துறை வர்க்கங்கள் அனைத்துக்கும் வாழ்வுக்குரிய முதல் நிபந்தனையாக இருந்தது. உற்பத்தியை இடையறாது புரட்சிகரமாக மாற்றியமைத்தலும், சமூக நிலைமைகள் அனைத்திலும் இடையறாத குழப்பமும், முடிவே இல்லாத நிச்சயமற்ற நிலைமையும், கொந்தளிப்புமே முதலாளித்துவ சகாப்தத்தை அதற்கு முந்தைய சகாப்தங்கள் அனைத்திலிருந்தும் வேறுபடுத்திக் காட்டுகின்றன. நிலைத்த, இறுகிப்போன எல்லா உறவுகளும், அவற்றுடன் இணைந்துள்ள பயபக்தி மிக்க பண்டைய தப்பெண்ணங்களும் கருத்துகளும் துடைத்தெறியப்படுகின்றன. புதிதாக உருவானவை அனைத்தும் நிலைத்துக் கெட்டியாகும் முன்பே காலாவதி ஆகிவிடுகின்றன. கட்டியானவை அனைத்தும் கரைந்து காற்றிலே கலக்கின்றன, புனிதமானவை யாவும் புனிதம் கெடுக்கப்படுகின்றன. இறுதியாக, மனிதன் தனது வாழ்க்கையின் எதார்த்த நிலைமைகளையும், சக மனிதர்களுடன் தனக்குள்ள உறவுகளையும் தெளிந்த அறிவுடன் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகிறான்.

முதலாளித்துவ வர்க்கம் நாட்டுப்புறத்தை நகரங்களின் ஆட்சிக்கு உட்படுத்திவிட்டது. மாபெரும் நகரங்களை உருவாக்கியுள்ளது. நாட்டுப்புற மக்கள் தொகையுடன் ஒப்பிடுகையில் நகர்ப்புற மக்கள் தொகையைப் பெருமளவு அதிகரிக்கச் செய்துள்ளது. இவ்வாறாக, மக்கள் தொகையில் கணிசமான ஒரு பகுதியினரைக் கிராம வாழ்க்கையின் மடமையிலிருந்து மீட்டுள்ளது. நாட்டுப்புறம் நகரங்களைச் சார்ந்திருக்குமாறு செய்துள்ளதைப் போன்றே, அநாகரிக நிலையிலும் அரை-நாகரிக நிலையிலுமுள்ள நாடுகள் நாகரிக நாடுகளைச் சார்ந்திருக்குமாறும், விவசாயிகளின் நாடுகள் முதலாளித்துவ நாடுகளைச் சார்ந்திருக்குமாறும், கிழக்கு நாடுகள் மேற்கு நாடுகளைச் சார்ந்திருக்குமாறும் செய்துள்ளது.

முதலாளித்துவ வர்க்கம் தன்னைக் கட்டி அமைத்துக்கொள்ள அடித்தளமாக இருந்த உற்பத்திச் சாதனங்களும், பரிவர்த்தனைச் சாதனங்களும் நிலப்பிரபுத்துவ சமுதாயத்தில் உருவாக்கப்பட்டவை. இந்த உற்பத்தி மற்றும் பரிவர்த்தனைச் சாதனங்களுடைய வளர்ச்சியின் குறிப்பிட்ட ஒரு கட்டத்தில், நிலப்பிரபுத்துவ சமுதாயம் எத்தகைய சமூக நிலைமைகளின்கீழ் உற்பத்தியும் பரிவர்த்தனையும் செய்து வந்ததோ அந்தச் சமூக நிலைமைகளும், விவசாயம், பட்டறைத் தொழில் ஆகியவற்றில் நிலவிய நிலப்பிரபுத்துவ ஒழுங்கமைப்பும், சுருங்கக் கூறின், நிலப்பிரபுத்துவச் சொத்துடைமை உறவுகள், ஏற்கெனவே வளர்ச்சிபெற்றுவிட்ட உற்பத்திச் சக்திகளுக்கு இனிமேலும் ஒவ்வாதவை ஆயின. அவை, [உற்பத்தியைக் கட்டிப்போடும்] கால் விலங்குகளாக மாறின. அந்த விலங்குகளை உடைத்தெறிய வேண்டியிருந்தது; அவை உடைத்தெறியப்பட்டன.

எந்த ஆயுதங்களைக் கொண்டு முதலாளித்துவ வர்க்கம் நிலப்பிரபுத்துவத்தை வீழ்த்தித் தரைமட்டம் ஆக்கியதோ, அதே ஆயுதங்கள் இப்போது முதலாளித்துவ வர்க்கத்துக்கு எதிராகத் திருப்பப்படுகின்றன. ஆனால், முதலாளித்துவ வர்க்கம் தனக்கே அழிவைத் தரப்போகும் ஆயுதங்களை மட்டும் வார்த்தெடுக்கவில்லை; அந்த ஆயுதங்களைக் கையாளப்போகும் மனிதர்களையும், அதாவது நவீனத் தொழிலாளி வர்க்கமாகிய பட்டாளிகளையும் உருவாக்கி உலவவிட்டுள்ளது.

முதலாளித்துவ வர்க்கம், அதாவது மூலதனம் எந்த அளவுக்கு வளர்கிறதோ, அதே அளவுக்கு நவீனத் தொழிலாளி வர்க்கமாகிய பாட்டாளி வர்க்கமும் வளர்கிறது. இந்த வர்க்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தமக்கு வேலை கிடைக்கும் வரைதான் வாழ முடியும்; இவர்களின் உழைப்பு மூலதனத்தைப் பெருக்கும் வரைதான் இவர்களுக்கு வேலையும் கிடைக்கும். தம்மைத்தாமே கொஞ்சம் கொஞ்சமாக விலைக்கு விற்றாக வேண்டிய நிலையிலுள்ள இந்தத் தொழிலாளர்கள், ஏனைய பிற விற்பனைப் பொருள்களைப் போன்று ஒரு பரிவர்த்தனைப் பண்டமாகவே இருக்கிறார்கள். அதன் விளைவாக, வணிகப் போட்டியின் அனைத்து வகையான சாதக பாதகங்களுக்கும், சந்தையின் ஏற்ற இறக்கங்கள் அனைத்துக்கும் இலக்காகிறார்கள்.

பரந்த அளவில் எந்திரங்களின் பயன்பாடு, உழைப்புப் பிரிவினை ஆகியவற்றின் காரணமாக, பாட்டாளிகளின் வேலையானது அதன் தனித்தன்மை முழுவதையும் இழந்துவிட்டது. அதன் விளைவாக, தொழிலாளிக்கு தன் வேலை மீதிருந்த ஈர்ப்பு முழுவதும் இல்லாமல் போனது. அவர் எந்திரத்தில் பொருத்தப்பட்ட ஒரு துணையுறுப்பாக ஆகிவிடுகிறார். 

இன்றைக்கு முதலாளித்துவ வர்க்கத்தை நேருக்குநேர் எதிர்த்து நிற்கும் வர்க்கங்கள் அனைத்திலும் பாட்டாளி வர்க்கம் ஒன்று மட்டுமே உண்மையில் புரட்சிகரமான வர்க்கமாகும். பிற வர்க்கங்கள் நவீனத் தொழில்துறையின் முன்னே சிதைவுற்று முடிவில் மறைந்து போகின்றன. பாட்டாளி வர்க்கம் மட்டும்தான் நவீனத் தொழில்துறையின் தனிச்சிறப்பான, சாரமான விளைபொருளாகும்.

அடித்தட்டு நடுத்தர வர்க்கத்தினர், சிறு பட்டறையாளர், கடைக்காரர், கைவினைஞர், விவசாயி இவர்கள் அனைவரும், நடுத்தர வர்க்கத்தின் ஒரு பகுதியாகத் தம் இருப்பை அழிவிலிருந்து காத்துக்கொள்ள முதலாளித்துவ வர்க்கத்தை எதிர்த்துப் போராடுகிறார்கள். எனவே, இவர்கள் பழமைவாதிகளே அன்றிப் புரட்சிகரமானவர் அல்லர். மேலும் இவர்கள் வரலாற்றுச் சக்கரத்தைப் பின்னோக்கிச் செலுத்த முயல்வதால், இவர்கள் பிற்போக்காளரும் ஆவர். இவர்கள் ஏதோ தற்செயலாகப் புரட்சிகரமாக இருக்கிறார்கள் எனில், அவ்வாறு இருப்பதற்கு இவர்கள் பாட்டாளி வர்க்கமாக மாறிவிடும் தறுவாயில் உள்ளனர் என்பது மட்டுமே காரணம் ஆகும். இவ்வாறாக, இவர்கள் தமது நிகழ்கால நலன்களை அல்ல, எதிர்கால நலன்களையே பாதுகாத்துக் கொள்கின்றனர். அவர்கள் பாட்டாளி வர்க்கத்தின் கருத்துநிலையில் தம்மை வைத்துக்கொள்ளும் பொருட்டு, தமது சொந்தக் கருத்துநிலையையே கைவிடுகின்றனர்.

பழைய சமுதாயத்தின் மிகமிக அடிமட்ட அடுக்குகளிலிருந்து தூக்கி எறியப்பட்டுச் செயலற்று அழுகிக் கொண்டிருக்கும் சமூகக் கழிவாகிய ”ஆபத்தான வர்க்கம்” இங்குமங்கும் ஒருசில இடங்களில் பாட்டாளி வர்க்கப் புரட்சியால் இயக்கத்துக்குள் இழுக்கப்படலாம். எனினும், அந்த வர்க்கத்தின் வாழ்க்கை நிலைமைகள், பிற்போக்குச் சூழ்ச்சியின் லஞ்சம் பெற்ற கைக்கூலியாகச் செயலாற்றவே அதனைப் பெரிதும் தயார் செய்கின்றன.

இவை நமக்கு கிடைத்துள்ள வரையறை, உண்மையில் நாம் இங்கே பேசு பொருள் விவசாயம் முதலாளித்துவ உற்பத்திமுறைக்கு மாறிவிட்டதா என்னுமிடத்தில் நாட்டின் பெருவாரியான மக்கள் இன்றும் கிராமபுறத்தில் வாழ்வதோடு அவர்களின் வாழ்வாதரம் இதே விவசாய உற்பத்தியை சார்ந்தே இருப்பதால் அவர்களின் உற்பத்தி சாதனங்கள் உற்பத்தி கருவிகளின் அடிப்படையில் அந்த மக்களின் உற்பத்திமுறையானது முதலாளித்துவ உற்பத்தியாக மாறிவிட்டதா என்பதே நம் முன் உள்ள கேள்வி?.

கிராமபுறத்தில் ஏற்பட்ட மாற்றங்களை தேடி அறிந்த சில தகவல்கள்

கிராமங்கள் கிராமங்களாகவே இல்லை சில மாறுதல்கள் ஏற்பட்டுள்ளது ஆனால் இங்குள்ள சிலர் பேசுவது போல் எல்லாம் பெருவீத உற்பத்தியில் அதாவது முதலாளித்துவ உற்பத்திமுறைக்குள் சென்று விட்டதா என்றால் அவர்களின் கண்ணோட்டமே கேள்வி குறியாக உள்ளது.
ஏனெனில் விவாசாய உற்பத்தி சாதனங்கள் பெரும் தொழில்நுட்ப வளர்ச்சி பெற்றுவிட்டதா என்றால் அவையும் இல்லை மாடு கட்டி ஏர் ஓட்டுவது போய்விட்டதா என்றால் டிரக்டர் வரவு என்ன மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது கவனிக்க வேண்டுமெனிலும் பணக்கார விவசாயிக்கும் சிறுகுறு விவசாயிக்கும் உள்ள ஏற்ற தாழ்வை புரிந்திருக்க வேண்டும்.
கிராமங்களில் ஒருசிலர் கையில் முன்பு போல் நிலம் குவிந்து கிடக்கவில்லை ஆனாலும் கனிசமான அளவில் நிலமற்ற விவசாயிகளும் விவசாய தொழிலார்களும் நிலவவே செய்கின்றனர். இந்த கூட்டம் வேலையின்மையும் குறுசிறு விவசாயிகள் இன்றைய உலக மயமாக்கப் பட்ட சூழலில் விளைவிக்கும் பொருளுக்கும் விலையில்லை வாழ்வா சாவா என்று போராடிதான் வாழ்ந்துக் கொண்டுள்ளனர்.

சிறுகுறு விவசாயிகள் தன்நிலத்தை காப்பாற்ற ஏதோ விளைவிக்க முயல்கிறான் அவன் வயித்துபாட்டையும் போக்கவில்லை அவனை மேலும் மேலும் கடன்காரனாக வாழ வைக்கிறது. பணம் படைத்த விவசாயி அல்லது ஏதோ அரசு தனியார துறையில் பணிபுரியும் விவசாய குடும்பம் சிறிது அரசின் நிதி திட்டங்களை பயன்படுத்தி சற்று முன்னேற அவை விவசாய தொழிற்நுட்ப சாதனங்களை வாங்கி தானும் பயன்படுத்துவது போல் பிறருக்கும் வாடகைக்கு கொடுக்கிறது.
மாட்டின் பயன்பாடு அற்றே போய் விட்டது ஜல்லிக் கட்டுக்கு போராடும் பலருக்கு விவசாயின் கையில் இனி நாட்டு மாடு இருக்காது என்பது தெரிந்திருக்காதோ என்று எனக்கு தெரியவில்லை.
ஆங்காங்கே சிறு மாட்டு பண்ணைகள் ஆம் அன்று வீட்டிற்க்கு இரண்டு மூன்று கறவை மாடுகள் வைத்திருந்தனர் இன்றோ நிலம் படைத்தவர்கள், ஆடு மாடு கோழி போன்றவற்றை வளர்பதில் முக்கிய கவனம் செழுத்துகின்றனர். அதன் பராமரிப்பு மிகவும் அதிக செலவு பிடித்தவை இருந்தும் ஏதோ வாழ்க்கைக்கு உதவும் என்று உழைத்துக் கொண்டுள்ளனர்.
சரி சில தேடியதிலிருந்து உண்மையில் கிராமம் என்றாலே சாதியத்தின் மூடமைப்பு என்பர். கிராமமானது நிலத்தை உடமையாக கொண்ட உழைப்பை செலுத்தும் பெருவாரியான மக்களின் இருப்பிடமானது.

பல தலைமுறைகளாக விவசாயம் செய்து வந்தவர்கள் தங்கள் வாரிசுகளை விவசாயத்தில்ஈடுபடுத்த விரும்பவில்லை.விவசாய நிலம் என்பது அசையாத சொத்துஎனினும் விவசாயம் செய்து வருமானம் பெறுவது கடினம் என்பதால் நிலத்தை விற்காமல் வேறு தொழில் செய்து லாபம் பார்த்து விவசாயத்தில் முதலீடு செய்யும் போக்கு உள்ளது.

டாக்டர்கள்வழக்குரைஞர்கள்பள்ளி ஆசிரியர்கள்கந்து வட்டி கறக்கும் பைனான்சியர்கள்ரியல் எஸ்டேட் செய்வோர் விவசாயத்தை விடாமல் செய்வதுடன் தொழில் லாபத்தை நிலத்தில் முதலீடு செய்வோர் உண்டு.
வெளிநாடுகளில் கணினித் தொழில்நுட்பம் கற்ற மென்பொருள் பொறியாளர்கள் தாங்கள் ஈட்டிய வருமானத்தை விவசாய முதலீடுகளாக மாற்றி இயற்கை வழி விவசாயம் செய்கிறார்கள்ஏதோ ஒரு வகையில் வேறு தொழில் மூலம் வருமானத்திற்கு வழியில்லாத விவசாயம் செய்யும் இளைஞர்களுக்கு யாரும் பெண் கொடுப்பதில்லை.விவசாயம் செய்வதில் இளைஞர் சமுதாயத்திற்கு ஆர்வம் இல்லை எனலாம்.

இப்படி பல்வேறு முரண்பாடுகளை தன்னகத்தே கொண்டுதான் கிராமமும் விவசாயமும் வாழ்கிறது.

நாடு முதலாளித்துவ உற்பத்தியில் ஈடுஇணையற்று முன்னேறிக் கொண்டுள்ளதாக பேசுபவர்கள் உலகமய தாசர்களே!, இவர்களுக்கோ இது குதூகலத்தின் காலமாய் இருக்கிறதுநாட்டின் நுகர்பொருள் கலாச்சாரம் அதிகரித்திருப்பதுஒரு சிறு பிரிவினருக்கு சேவைத் துறையில் வளமான வேலைகள் கிட்டியிருப்பதுஒரு புதிய மேல் நடுத்தர வர்க்கம் உதித்தெழுந்திருப்பதுநவீன மின்னணுப் பொருட்கள் மற்றும் மோட்டார் வாகனங்களின் சந்தை விரிவடைந்திருப்பது மற்றும் இவற்றின் பயன்பாடு அதிகரித்திருப்பது உள்ளிட்டவைகளைச் சுட்டிக்காட்டும் இவர்கள்புதிய பொருளாதாரக் கொள்கைகளை விதந்தோதுகிறார்கள்.

இவ்வாறாக கொண்டாடப்படும் புதிய பொருளாதாரக் கொள்கைகள் நாட்டின் சுயேச்சையான பொருளாதாரக் கட்டமைப்பை சிதைத்துள்ளதோடு இதைப் பன்னாட்டு மூலதனத்தோடு நேரடியாக பிணைத்துள்ளதுதற்போது உலகளவில் முதலாளித்துவம் ஒரு கட்டமைப்பு நெருக்கடியைச் சந்தித்து வரும் நிலையில் அதன் பாதிப்புகளை இந்தியாவும் எதிர்கொண்டு நிற்கிறது.

ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் நில உடமையாளர்கள் நிலமற்ற விவசாய கூலிகளை சுரண்டி வாழ்வதற்காக சுரண்டல் வடிவில் உருவான ஜாதி அமைப்பு முறை கிராமங்களில் இன்றும் காணலாம்.
ஆனால் உண்மையில் அன்று தோன்றிய ஜாதி அப்படியே அதே வடிவில் இன்றும் தொடர்கிறதா என்பது கேள்விக்குறியே. (அதனை விரிவாக வேறொரு நேரத்தில் பேசுவோம்) . இன்று பேசுபொருள் கிராமத்தில் உள்ள உற்பத்தி முறையும் வர்க்க நிலைகளைப் பற்றியும் தேடுதலே இந்த கட்டுரையின் நோக்கம்.
பெரும் நில உடைமாளர்களும் பெரும் பண்ணையார்களும் நிலவுகின்றார்களா என்றால் ஆன்மீக வழிபட்ட பண்ணை நிலங்கள் உள்ளதை போல் பெருவாரியான சொத்தை குவித்துள்ள பெரும் பண்ணையாளர்கள் மிகக் குறைவு அதேபோல அவர்கள் குறிப்பிட்ட நிலப் பகுதியில் மட்டுமே உள்ளனர் எல்லா கிராமப்புறத்திலும் தேடினால் இவர்கள் கிடைக்கவில்லை.
ஆக ஒரு சமூக அமைப்பின் தன்மையை அதன் உற்பத்தி முறையே தீர்மானிக்கிறது. மார்க்சியம் அதன் உற்பத்தி முறையின் அடிப்படையில் சமூக வரலாற்றை புராதான பொது உடமை, அடிமை உடமை சமூகம், நில உடமை சமூகம் முதலாளித்துவ சமூகம், பொதுவுடமை சமூகம் என்று குறிப்பிட்டுள்ளனர். முதலாளித்துவதற்கும் பொதுவுடைமைக்கும் இடையே சோசலிச சமூகத்தை காண்பர்.
இது அனைத்து நாடுகளுக்கும் தழுவிய பொது தன்மையாகும். இவை கோட்பாடு. இந்த பொதுத்தன்மை ஒவ்வொரு நாட்டின் தனித்தன்மையுடன் வெளிப்படும். ஐரோப்பிய பகுதியில் தோன்றிய அடிமை முறையும் நிலவுடமை முறையும் அப்படியே இந்தியப் பகுதிகளுக்கு பொருத்தி காட்டுவது இயந்திரவகைப்பட்டதே. இந்தியப் பகுதிகளின் தனித்தன்மையை புரிந்து கொள்ளுதல் உற்பத்தி முறையின் விளக்கத்துக்கான பொதுத்தன்மை விட்டு விட்டு அல்ல ...

இன்னும் பின்னர் தொடரும் தோழர்களே...

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்