இலக்கு 46 இணைய இதழ் PDF வடிவில்

இந்த இதழில் பேசப்பட்டுள்ள கட்டுரைகள்

1.நமது ஆசான் லெனின் வழிகாட்டுதல்

2. இந்திய கம்யூனிஸ்டுகள் பற்றி அறிவோம்.

3. புரட்சியை மறுக்கும் திருத்தல்வாத சீர்திருத்தவாத  அடையாள அரசியலில் வீழ்ந்துள்ள இடதுசாரிகட்சிகள்

4. இந்தியாவில் தோன்றிய கம்யூனிஸ்ட் கட்சிகள் இயக்கங்கள் செய்ய வேண்டியதும் செய்ய மறந்தவையும் ஓர் தேடல்.

5. அரசும் புரட்சியும் 1871 ஆம் ஆண்டு பாரீஸ் கம்யூனதுஅனுபவம். மார்க்சின் பகுத்தாய்வு பாகம் 5,அத்தியாயம் 4

 இதுவரை தத்துவ அறிஞர்கள் உலகத்தை விவரிக்க மட்டுமே செய்தார்கள்;ஆனால் அதன் நோக்கம் உலகத்தையும் மாற்றுவதாக இருக்கவேண்டும்"என மார்க்ஸ் குறிப்பிட்டார்.விவரிப்பது,மாற்றுவது ஆகியவற்றுக்கு மார்க்ஸ் அழுத்தம் கொடுத்தார்.அவருடைய பார்வையில்,தத்துவ அறிஞர்கள் புதிய பங்காற்ற வேண்டியிருந்தது.தத்துவ அறிஞர்களும் வாழ்கின்ற இவ்வுலகின் நடைமுறை செயல்பாட்டில் ஆற்றல் வாய்ந்த இடையீட்டை தத்துவங்கள் செய்யவேண்டும்.

தத்துவத்தின் வரலாறு முழுவதும் தத்துவ அறிஞர்கள் ஆற்றிய பாத்திரத்தில் இருந்து வேறுபட்டது. அதுவரை தத்துவ அறிஞர்களின் செயல் உலகைப் பற்றி ஆழ்ந்து சிந்திப்பது, அதாவது அனுபவச் சான்றுகளின்  உதவியுடனோ, உதவி இல்லாமலோ, கருதுகோள் அல்லது தருக்கஇயல் கருவிகள் கொண்டு உலக உண்மைகளைத் தேடுவது ஆகும். மார்க்ஸ் இதை உலகைப் பொருள்படுத்துவது  அல்லது விவரிப்பது எனக் கூறினார். இது அறிவுத்துறை செயல்பாடாகும்.

மரபுவழியைச் சார்ந்த தத்துவ அறிஞர்கள் எதையும் சாதிக்கவில்லை என்று மார்க்சியம் கூறவில்லை. அவர்களுடைய சாதனை சிந்தனை அல்லது உணர்வு ஆகியவற்றோடு அடங்கிவிடுகிறது. செயல்பாட்டிலிருந்து விலகிய சிந்தனையில் மரபுவழித் தத்துவ அறிஞர்கள் மூழ்கியதன்  மூலம் - அவர்களுடைய சிந்தனை நோக்கம் எதுவாக இருந்தாலும் இந்த உலகை அதன் போக்கில் செல்ல அனுமதித்தனர் அல்லது அதைப் பின்தொடர்ந்து சென்றனர் என மார்க்சிய பார்வை கருதுகிறது.

"மனிதர்களை விலங்குகளிடமிருந்து உணர் வாலோ அல்லது மதத்தாலோ வேறுபடுத்தலாம். ஆனால் முதன்மையாக வாழ்க்கைக்கு தேவையான சாதனங்களை உற்பத்தி செய்யத் தொடங்கியவுடனே அவர்கள்விலங்குகளிட மிருந்து தங்களை வேறபடுத்திக் கொண்டார்கள்அது அவர்கள் தங்களுக்குள் ஏற்படுத்திக்கொண்ட அமைப்பினால் சாத்தியமான முதல் அடியாகும்.

வாழ்க்கையை உணர்வு தீர்மானிப்பதில்லை. மாறாக உணர்வை வாழ்வு தீர்மானிக்கிறது. அதாவது தத்துவ பார்வைகள் அதாவது அனைத்து சித்தாந்தங்களும் இறுதியாக பொருள் வயப்பட்ட காரணங்களால்,அதாவது உற்பத்திமுறை,அதிலிருந்து விளைந்த உற்பத்திஉறவால் தீர்மானிக்கப்படுகின்றன என மார்க்சிய ஆய்வு கூறுகிறது. எனவே  பருண்மையான நிலைமைகளில் புரட்சிகரமாற்றம் இல்லா விட்டால் தத்துவத் சிந்தனையிலும் புரட்சிகர மாற்றம் இருக்க முடியாது என்கிறது மார்க்சியம்.

தத்துவ அறிஞர்களும்,கோட்பாட்டாளர்களும் தங்களுடைய தத்துவத்தை விடுதலை செய்ய சமுதாய மாற்றத்திற்காக வெறுமனே காத்திருக்கக் கூடாது.கோட்பாட்டாளர்கள் தத்துவ அறிஞர்கள் என்ற வகையில் அவர்கள் சமுதாயப் புரட்சிக்காக செயல்படவேண்டும்.உலகை மாற்றுவது மிகவும் முக்கியம்.அதேசமயத்தில் உலகை தவறாகவோ அல்லது அரைகுறையா கவோ புரிந்து கொண்டு சரியான முறையில் மாற்றி அமைக்க முடியாது.

இது கோட்பாட்டுக்கும் நடைமுறைக்கும் இடையில் உள்ள உறவு பற்றி கேள்விக்கு நம்மை இட்டுச்செல்கிறது. அதை அறிவு,பலம் இரண்டிற்கும் இடையிலான உறவு,சுதந்திரம்,அவசியம் இரண்டிற்கும் இடையிலான உறவு ஆகியவற்றோடு தொடர்பு படுத்திப் புரிந்து கொள்ளலாம்.

அறிவு இடையீட்டு தத்துவத்தில் முக்கிய பங்காற்றுகிறது.நடைமுறையில் இருந்து துண்டிக்கப்பட்ட அறிவு வெற்றுவார்த்தைகளிலும்,கோபத்திலும் முடிவது போல அறிவு இல்லாத இடையீடு குருட்டுத்தனமானதும்,தன்னைத்தானேவீழ்த்திக்  கொள்வது ஆகும்.

உலகை மாற்றியமைக்க இரு வழிகளில் முயலலாம். ஒன்று தவறான வழி இன்னொன்று சரியான வழி. உலகத்தைப் புரிந்து கொள்ளாமல் அதை மாற்றுவது தவறான வழி. உலகத்தை அறிந்து, புரிந்து கொண்டு அதை மாற்ற முயற்சிப்பது சரியான வழியாகும்.

இதிலிருந்து அறிவியல்பூர்வ பொதுவுடமை திட்டத்தில் கோட்பாட்டுக்கு பணிக்குரிய முக்கியத்துவத்தை அறியலாம்.மார்க்சும் எங்கெல்சும் ஏராளமான நூல்களையும் ஆவணங்களையும் அறிவியல்பூர்வமான பொதுவுடமையின் அடிப்படையை நிறுவப் பயின்றதன் அவசியத்தை அறியலாம்.

எந்த ஆயுதத்தால் முதலாளிகள் நிலப்பிரபுத் துவத்தை  வீழ்த்தினார்களோ அதே ஆயுதம் இன்று அவர்களுக்கு எதிராக திரும்பியுள்ளது. தனக்கு அழிவைக் கொண்டு வரும் ஆயுதத்தை மட்டும் அவர்கள் உருவாக்கவில்லை; கூடவே அந்த ஆயுதத்தைக் கையாளும் மனிதர்களையும்;அதாவது பாட்டாளி வர்க்கத்தையும் அவர்கள் உருவாக்கியுள்ளார்கள். "

மார்க்சியம் ஒரு மதம் அல்ல.அது அனைத்துக்கும் தீர்வைத் தன்னிடத்தில் தயார் நிலையில் வைத்துள்ளது எனத் தம்பட்டம் அடித்துக் கொள்ளும் வறட்டுக் கோட்பாடு அல்ல

இலக்கு இணைய இதழ் 46 இங்கே PDF வடிவில் உள்ளன இந்த லிங்கை அழுத்தி பெற்றுக் கொள்ளுங்கள்




No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்