ராமர் கோயில் பிரச்சினையும் ஆளும் வர்க்கம் மூடி மறைக்கும் உழைக்கும் மக்கள் பிரச்சினையும்

 மதம் மட்டுமே மக்கள் பிரச்சினையாக்கி உள்ள ஆட்சியாளர் தவறியும் உழைக்கும் மக்கள் பிரச்சினையை பற்றி பேசுவதில்லை தவறி பேசினாலும் அவர்களுக்காக செய்யும் சில செயல்களை ஊதி பெருக்கி காலம் கடத்துகின்றனர். 

முழுமையாக கேட்க கீழ் காணும் லிங்கில் செல்லவும் தோழர்களே...

ஒவ்வோர் இந்தியக் குடும்பத்தின் வங்கிக் கணக்குகளில் 15 லட்சம் ரூபாய் விழும்’’ என்கிற மோடியின் வார்த்தைகளை இன்னும் நம்பிக் கொண்டிருக்கும் கடைக்கோடி இந்தியர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
2014 நாடாளுமன்றத் தேர்தலில் திடீரென பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டவர் நரேந்திர மோடி. பத்தாண்டு மன்மோகன் சிங் ஆட்சியை வீழ்த்த மோடியைக் கொண்டு வந்தது பா... ‘மோடி மேஜிக்என வர்ணிக்கப்பட்ட 2014 நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தில் மோடி உதிர்த்த வார்த்தைகள் ஒவ்வொன்றும் அக்னி குஞ்சுகள்.
குஜராத் முதல்வராக இருந்த போதே மோடி பொய்களைச் சொல்லியிருக்கிறார். ஆனால், 2014 நாடாளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடி சொன்ன வாக்குறுதிகள் இந்தியாவையே கலங்கடித்தன. மூன்று லட்சம் கிலோ மீட்டர் பயணம் செய்து, 5,827 பொதுக் கூட்டங்களில் பங்கேற்ற மோடி சொன்ன பொய்களை எல்லாம் சேகரித்து போஸ்ட் மார்ட்டம் செய்திருக்கிறது இந்த புத்தகம்.
மோடி பிரதமர் ஆன ஐந்து ஆண்டுகள் கழித்து, 2019 நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொண்ட போது 2014 தேர்தலில் அவர் சொன்ன வாக்குறுதிகளை எல்லாம் மீண்டும் தேடி எடுத்து நீண்ட கட்டுரையாக வெளியிட்டது .

`இந்தியாவில் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது' எனத் தேசியப் புள்ளியியல் ஆணையத்தின் அறிக்கை கூறுகிறது. ``இதனால்தான் வேலைவாய்ப்பு பற்றி தேசிய கணக்கெடுப்பு அலுவலகத்தின் அறிக்கை வெளியிடப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது'' எனக் காங்கிரஸ் குற்றம்சாட்டியது. இந்த விவகாரம் காரணமாக, தேசியப் புள்ளியியல் ஆணையத்தின் செயல் தலைவர் பி.சி.மோகனன் உட்பட இரண்டு பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்கள்.

``காங்கிரஸின் 2009 தேர்தல் அறிக்கையில் 10 கோடிப் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவோம் என்றீர்கள். எவ்வளவு இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்றனர்?'' எனக் கடந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தில் உத்தரபிரதேசம் சந்த் கபீரில் (2014 மே 3) மோடி கர்ஜித்தார். இப்போது மோடியின் ஆட்சியிலேயே வேலைவாய்ப்புக்கு ஆப்பு வைத்திருக்கிறார்கள்.


நேற்றைய விவாதம் ஒலி வடிவின் இந்த லிங்கை அழுத்தி கேட்கலாம்


ராமர் கோயிலை முன் வைத்து ஆளும் வர்க்கம் இது வரை செய்து வரும் மொசடிகளும் உழைக்கும் மக்கள் பிரச்சினையை பேச மறுக்கும் போக்கும் நூல் PDF ல் இந்த லிங்கில்

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்