அன்று வெள்ளை காலனியாதிக்கவாதிகளை விரட்ட எத்தனை எத்தனை போராட்டம் தியாகம் புரிந்தனர் நமது மூதாதையர்.
அவர்களுக்கு அஞ்சி நடுங்கி ஆங்கிலேயன் இன்நாட்டு கொள்ளையர்களிடம் ஆட்சியை கொடுத்து சென்றனர். அன்று சோவியத் மற்றும் சோசலிசம் காரணமாக ஏகாதிபத்தியங்களே மக்கள் நல அரசு என்று "கீன்சிய" பொருளாதாரத்தை நடைமுறை படுத்தியது மக்கள் முதலாளித்துவத்தை தூக்கி எறிந்து சோசலிசத்தை நோக்கி போய்விடக்கூடாது என்று.
நேரு, காம்ராஜர் மட்டுமல்ல இங்கிருந்த திராவிட கட்சிகளும் அந்த மக்கள் நல அரசு காரணமாக உழைக்கும் மக்களின் வாழ்க்கைக்கு உதவும் வகையில் சில சட்டதிட்டங்கள் வகுத்தனர் அவை சில சதவீத மக்களுக்கு பயனளித்தது ஆனால் 1980 ல் சோவியத் வீழ்ச்சி உலக நாடுகளிலிருந்த சோசலிசமுகாம் தகர்வையும் ஏகாதிபத்தியங்களின் உலகமயமாக்கலும் உலக நாடுகளின் செல்வங்களை கொள்ளையடிக்க அமெரிக்க தலைமையிலான ஏகாதிபத்தியங்கள் ஐ.நா, IMF,WTO,இன்னும் அதன் அங்கங்கள் மூலம் மூன்றாம் உலக நாடுகளை தன் கொடூர சுரண்டல் வலையில் கொண்டு வந்துள்ளவையே இன்றைய நிலைக்கு ... அப்பொழுது மறைமுகமாக சுரண்டிக்கொண்டிருந்த கூட்டம் இன்று நேரடியாகவே களத்தில் அதற்க்கு ஆட்சியாளர்களும் நேரடியாக செயல்படும் அயோக்கியதனம்.
கல்வி தனியார் மயம்
வேலை வாய்ப்பு தனியாரிடம்
மருத்துவமோ காசுள்ளவர்களுக்கு மட்டும்
வரி மட்டும் எல்லாவற்றிலும் போட்டு சுரண்டும் ஆட்சியாளர்களே நீங்கள் சுரண்டும் வரியை மக்களுக்கு செலவளித்தாலே யாரின் தயவும் வேண்டாம்....
அண்மையில் நிதி அமைச்சர் தமிழ்நாடு மற்றும் மத்திய அமைச்சர் வரி பற்றி பேசியதை கணக்கில் கொண்டு பாருங்கள் மக்கள் மீது சுமத்தும் வரி பளுவை புரிந்துக் கொள்ள அந்த வரியை விட மிகக் குறைவாக இங்கே முதலீடு வரும் அப்படியெனும் பொழுது முதலாளித்துவ அறிவாளிகளே எதற்காக இந்த உலக தொழில்முனைவோர் மாநாடு சொல்வார்களா?
நேற்று கிடைத்த தகவல்தான்..
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் தற்போது வரை..!











இவர்களுக்கு கொடுக்கும் மான்யம் மற்றும் நாட்டின் வளங்களை காட்டிலும் இவை அர்ப்ப தொகைதான் என்ன செய்ய அதனை முன்னெடுக்க வேண்டியவர்கள் சிந்திப்பார்களா?
ஊழைக்கும் மக்கள் வாழ வழிவகை செய்யும் எல்லோருக்கும் கல்வி எல்லோருக்கும் வேலைவாய்ப்பு என்ற பொதுவுடைமை சமுகம் நோக்கிய நடைமுறையால் மட்டுமே இதுபோன்ற சுரண்டல் முறையை விட்டொழிந்து உழைக்கும் மக்கள் தலைநிமிர்ந்து வாழமுடியும்
No comments:
Post a Comment