பாட்டாளி வர்க்க புரட்சியும் ஓடுகாலி காவுட்கியும்- லெனின் அறிமுகம்

 பாட்டாளி வர்க்க புரட்சியும் ஓடுகாலி காவுட்கியும்- லெனின்

நூலின் முன்னுரை தேவைக் கருதி அப்படியே இருபக்கங்கள் கீழ்:-

வியன்னாவில்சமீபத்தில் வெளியிடப்பட்ட காவுட்ஸ்கியின் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் னும் சிறுபிரசுரம் (Wien, 1918, Ignaz Brand, pp. 63). இரண்டாம் அகிலத்தின்படுமோசமான,அவமானகரமான திவால்நிலைமைக்கு மிகத் தெளிவான ஓர் உதாரணமாகும். இதைப் பற்றி அனைத்து நாடுகளிலும் உள்ள எல்லா நேர்மையான சோசலிஸ்டுகளும்  நீண்ட காலமாகப் பேசிவருகின்றனர். பாட்டாளி வர்க்கப் புரட்சி இப்போது பல நாடுகளில் நடைமுறைப் பிரச்சினையாகி வருகிறது, எனவே காவுட்ஸ்கியின் ஓடுகாலி குதர்க்கங்களையும் (துரோகச் சூழ்ச்சிகள்)  மார்க்சித்தை அவர் முழுமையாகக் கைவிட்டுவிட்டதையும் குறித்து ஒரு பரிசீலனைசெய்வது அத்தியாவசியமானது. (இன்று நமது நாட்டில்  இடதுசாரிகள் பலரின் நிலைப்பாடு என்பது காவுட்ஸ்கி வகைபட்டதே அதனால் சற்று ஊன்று கவனிப்போம் தோழர்களே).

யினும், மார்க்சிசத்தோடு காவுட்ஸ்கி முறித்துக் கொண்டது சம்பந்தமாக, இன்நூலாசிரியர்போரின்தொடக்கத்திலிருந்தே,மீண்டும்மீண்டும்சுட்டிக்காட்டியுள்ளார் என்பதை முதலில் வலியுறுத்த வேண்டும். 1914 மற்றும் 1916 க்கு இடையில்வெளிநாட்டில் வெளியிடப்பட்ட Sotsial-Demokrat and Kommunist இதழில் வெளியிடப்பட்ட பல கட்டுரைகள் இந்த விஷயத்தை எடுத்து விளக்கின. பின்னர் இக்கட்டுரைகள் ஒன்றாகத்திரட்டப்பட்டு  ஜி. ஜினோவியேவ் மற்றும் நி. லெனின் தந்த வெள்ளைத்தை எதிர்த்து என்ற மகுடத்தின்கீழ் பெட்ரோகிராட் சோவியத்தால் வெளியிடப்பட்டது. (பெட்ரோகிராட், 1918, பக். 550). 1915 இல் ஜெனிவாவில் வெளியிடப்பட்டு அதே நேரத்தில் ஜெர்மன் மற்றும் பிரெஞ்சு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டதான் ஒரு சிறுபிரசுரத்தில் நான் காவுட்ஸ்வாதம்" பற்றி பின்வருமாறு எழுதினேன் என்கிறார் லெனின்:

"இரண்டாம் அகிலத்தின் தலைமை நிபுணரான காவுட்ஸ்கி, மார்க்சித்தின் சொல்லளிவிலான ஏற்பு நடைமுறையில் 'ஸ்ட்ருவிசமாக'அல்லது'ப்ரெண்டனோயிசமாக' மாற்றமடைவதற்கு [அதாவது, பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகரமல்லாத "வர்க்க" போராட்டத்தை அங்கீகரிக்கும் ஒருமிதவாத முதலாளித்துவதத்துவமாக மாறுவதற்கு வழிவகுத்தது என்பதற்கு மிகவும்பொதுவானமற்றும்குறிப்பிடத்தக்க உதாரணம்.இது ரஷ்ய எழுத்தாளர் ஸ்ட்ரூவ் மற்றும் ஜேர்மன் பொருளாதார நிபுணர் பிரென்டானோ ஆகியோரால் மிகத் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளனர்). மற்றொரு உதாரணம் பிளெக்கானோவ் அப்பட்டமானகுதர்க்கவாதம்மூலம்.மார்க்சியத்தின்புரட்சிகரமானஉயிர்துடிப்புள்ளஉணர்வு அகற்றப்படுகிறது. புரட்சிகர போராட்டமுறைகள்,இந்தமுறைக்கானபிரச்சாரம் மற்றும் அந்த முறைகளை தயாரித்தல் மற்றும் இந்ததிசையில் வெகுஜனங்களுக்கு போதனைஅளித்தல் ஆகியவைதவிர்த்து மார்க்சியத்தில் அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.

ஆக நமது நாட்டில்உள்ள இடதுசாரிகள் நிலையை புரிந்துக் கொள்ள இந்தப் பகுதி பயன்படும். "ஜனநாயம், பாராளுமன்றம் மார்க்சிய புரிதலுக்காக"  இந்த தொடர் எழுத நினைக்கிறேன்.

ஒரு மார்க்சியவாதிக்கும் சாதரண மக்களுக்கும் உள்ள வேறுபாடு என்ன இன்னும் விரிவாக இந்த அமைப்புமுறை கையாளுவதை பற்றிய நமது மார்க்சிய ஆசானின் வழிகாட்டுதலில் இருந்தே தெளிவடைவோம் தோழர்களே.

மத்திய கால நிலையுடன் ஒப்பிடும்போது முதலாளித்துவ ஜனநாயகம் ஒரு மாபெரும் வரலாற்று முன்னேற்றமாக இருந்தபோதிலும், அது எப்போதும் முதலாளித்துவத்தின் கீழ் கட்டாயமாயும் வரையறுக்கப்பட்ட மொட்டையான பொய்யான போலியான ஒன்றாகவும் செல்வந்தர்களுக்கு ஒரு சொர்க்கத்தையும் சுரண்டப்படும் ஏழை எளிய மக்களுக்கு ஒருமாயப்பொறியமைவையும்மோசடியாகவும் நிலவும். ஒவ்வொரு முதலாளித்துவ ஜனநாயகம் செல்வந்தருக்குகந்த ஜனநாயகமாயாகும்.

ஜனநாயகத்தூண்களான முதலாளித்துவ நாடாளுமன்றத்தை எடுத்துக் கொள்வோம். ஜனநாயகம் எவ்வளவு அதிகம் உயர்வாக வளர்ச்சி அடைகிறது அவ்வளவு அதிக அளவில் முதலாளித்துவ நாடாளுமன்றங்கள் பங்கு மார்க்கெட் மற்றும் வங்கி அதிபர்களால் ஆட்படுத்தப்படுகின்றன.ஆகமுதலாளிகளால் வழங்கப்படும் ஜனநாயகம் ஆனது ஏழைஎளிய உழைக்கும் மக்களுக்கானவை அல்ல.

மக்களை வெறும் ஓட்டு போடும் இயந்திரமாகசிந்திக்கின்றனர்ஆட்சியாளர்கள், அந்த ஓட்டை பெருவதற்காகவே இங்கே ஒவ்வொரு அரசியல் கட்சிகளின் நகர்வும் உள்ளது. ஓட்டை பெருவதும் நாட்டில் ஆட்சியை பிடிப்பதும் நோக்கமாக கொண்ட இந்த ஓட்டரசியல்கட்சிகள் இங்குள்ள மக்கள் உண்பதை பற்றியோ வாழ்வதை பற்றியோ தவறியும் பேசுவதில்லை.

முதலாளித்துவ பாராளுமன்றதின் பால் கடைபிடிக்க வேண்டிய சரியான அணுகுமுறை குறித்து மார்க்சிய லெனினிய வாதிகளுக்கும் பிற சந்தர்ப்பவாதிகளுக்கும் மற்றும் திருத்தல்வாதிகளுக்கும் இடையே ஒரு அடிப்படை வேறுபாடு எப்போதும் வந்திருக்கிறது."முதலாளிகளின்பிற்போக்கு தன்மையை அம்பலப்படுத்தவும் மக்களுக்குகற்றுக் கொடுக்கவும் புரட்சிகர வலிமை சேகரித்துக் கொள்ளவும் உதவும் குறிப்பான சூழ்நிலைகளில் பாட்டாளி வர்க்கக்கட்சிபாராளுமன்றபோராட்டத்தில் பங்கு கொள்ளவேண்டும் என்றும், பாராளுமன்ற மேடையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் மார்க்சிய லெனினியவாதிகள் புரிந்து செயல்பட வேண்டும். தேவைப்படும்போதுஇந்தசட்டப்பூர்வமான போராட்டத்தை பயன்படுத்திக் கொள்ள மறுப்பது தவறாகும், ஆனால் பாட்டாளி வர்க்க கட்சி ஒருபோதும் பாட்டாளி வர்க்க புரட்சிக்கு மாறாக பாராளுமன்ற போராட்டத்தை கருதக்கூடாது அல்லது சோசலிசத்திற்கான மாற்றாக பாராளுமன்றபாதை மூலம் சாதித்து விடலாம் என்று மாயையில் ஆழ்ந்து விடக்கூடாது அதாவது எல்லா சமயங்களிலும்வெகுஜனபோராட்டங்களில் கவனம் செலுத்த வேண்டும் .மேலும் லெனின் கூறினார்,"புரட்சிகர பாட்டாளி வர்க்க கட்சி மக்களை விழிப்படையச் செய்யும் பொருட்டு முதலாளித்துவ பாராளுமன்றத்தில் பங்கெடுக்க வேண்டும் தேர்தலின் போதும் பாராளுமன்றத்தில் கட்சிகளுக்கு இடையில் நடக்கும் போராட்டங்களின் போதும் அவ்வாறு செய்ய முடியும் ஆனால் வர்க்கப் போராட்டத்தைபாராளுமன்றபோராட்டமாக குறுக்கி விடுவது பாராளுமன்ற போராட்டத்தைஉயர்ந்தபட்சதீர்மானகரமான வடிவமாக்கி அனைத்துப் போராட்ட வடிவங்களையும் இதற்கு உட்பட்டவே ஆக்குவது உண்மையில் பாட்டாளி வர்க்கத்துக்கும் எதிராக முதலாளி வர்க்கத்தின் பக்கம் ஓடி விடுவதாகும்" (லெனின் அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தலும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் பக்கம் 36 ஆங்கில பதிப்பு மாஸ்கோ).

இனி

லெனின் தேர்வு நூல்கள் 12 தொகுதிகளில் ஒன்பதில் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளது.

கவுத்ஸ்கி மார்க்சின் போதனைகளை முழுமையாக திரித்துப்புரட்டி சந்தர்ப்ப வாதத்துக்குப் பொருத்தமாக அமைத்துக் கொண்டிருக்கிறார் என்பதையும்,புரட்சியை சொல்லளவில் ஏற்றுக் கொண்டு செயலில் மறுத்து உதறிவிட்டார் என்பதை லெனின் எடுத்துக்காட்டுகிறார்.

சாரம்சத்தில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் பற்றிய தமது சிறு பிரசுத்தில் காவுத்ஸ்கி செய்துள்ள பிரதானமாக தத்துவப்பிழை அரசு குறித்த மார்க்சின் போதனைகளை சந்தர்ப்பவாத போக்கில் திரித்து புரட்டியதே ஆகும் இந்த  புரட்டுகளை அரசும் புரட்சி நூலில் விரிவாக அம்பலப்படுத்தி உள்ளார் லெனின்.

1909 இல் புரட்சிகளின் நெருங்கி வரும் சகாப்தம் மற்றும் போருக்கும் புரட்சிக்கும் இடையிலான தொடர்பைப் பற்றி ஒரு புத்தகத்தை எழுதிய காவுட்ஸ்கி,வரவிருக்கும் போரைப் புரட்சிகரமான முறையில் பயன்படுத்திக் கொள்வதற்காக 1912 இல் பாஸ்லே அறிக்கையில் கையெழுத்திட்டகாவுட்ஸ்கி, இன்று சமூகப் பேரினவாதத்தை அலங்கரித்து,பிளெக்கானோவைப் போலவே,புரட்சி மற்றும்உடனடிப்புரட்சிகரப் போராட்டத்தை நோக்கிய அனைத்து நடவடிக்கைகளையும் பற்றிய எந்தவொரு சிந்தனையையும் கேலி செய்வதில் முதலாளித்துவ வர்க்கத்துடன் இணைகிறார்.

"இந்த பின்னடைவு,முதுகெலும்பற்ற தன்மை,சந்தர்ப்பவாதத்திற்கு அடிபணிதல் மற்றும் மார்க்சிக் கோட்பாடுகளின் மீதுஅவரின்கொச்சைப்படுத்தலுக்கு எதிராக இரக்கமற்ற போராட்டத்தை நடத்தாத வரை தொழிலாளி வர்க்கம் அதன் உலகப் புரட்சிகர பாத்திரத்தை வகிக்க முடியாது. காவுட்ஸ்கிசம் தற்செயலானது அல்ல;இது இரண்டாம் அகிலத்திற்குள் உள்ள முரண்பாடுகளின்சமூகவிளைபொருளாகும்,வார்த்தையில் மார்க்சிசத்திற்கு விசுவாசம் மற்றும் செயலில் சந்தர்ப்பவாதத்திற்கு அடிபணிதல்"

மீண்டும்,ஏகாதிபத்தியம்முதலாளித்துவத்தின் உச்சகட்டம்,[இது லெனினின் ஏகாதிபத்தியத்தின் அசல் தலைப்பு, முதலாளித்துவத்தின் மிக உயர்ந்த கட்டம்.] 1916 இல் எழுதப்பட்டு 1917 இல் பெட்ரோகிராடில் வெளியிடப்பட்ட நூலில், அனைத்து காவுட்ஸ்கியின் தத்துவார்த்த தவறுகளையும் விரிவாக ஆய்வுதுள்ளார். ஏகாதிபத்தியம் பற்றிய வாதங்கள்.ஏகாதிபத்தியம் பற்றிய காவுட்ஸ்கியின் வரையறையைமேற்கோள் காட்டியுள்ளார்:ஏகாதிபத்தியம் என்பது மிகவும் வளர்ந்த தொழில்துறை முதலாளித்துவத்தின் விளைபொருளாகும்.ஒவ்வொருதொழில்துறை முதலாளித்துவ தேசமும் அதன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கு அல்லது விவசாய [காவுட்ஸ்கியின் சாய்வு]பிரதேசத்தின் அனைத்து பெரிய பகுதிகளையும் இணைக்கும் முயற்சியில் உள்ளது, எந்த நாடுகள் அதில் வசிக்கின்றன என்பதைப் பொருட்படுத்தாமல்." இந்த வரையறை எவ்வளவு முற்றிலும் தவறானது என்பதையும், அது எப்படி ஏகாதிபத்தியத்தின் மிக ஆழமான முரண்பாடுகளின் பளபளப்பிற்கும், பின்னர் சந்தர்ப்பவாதத்துடனான சமரசத்திற்கும் "தழுவியது" என்பதைக் காட்டினேன். ஏகாதிபத்தியம் பற்றிய எனது சொந்த வரையறையை நான் அளித்தேன்: ஏகாதிபத்தியம் என்பது ஏகபோகங்கள் மற்றும் நிதி மூலதனத்தின் மேலாதிக்கம் நிலைநிறுத்தப்படும் வளர்ச்சியின் அந்த கட்டத்தில்முதலாளித்துவம்;மூலதனத்தின் ஏற்றுமதி உச்சரிக்கப்படும் முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது; சர்வதேச அறக்கட்டளைகளுக்கு இடையே உலகப் பிரிவினை தொடங்கியதில்; இதில் உலகின் அனைத்துப் பகுதிகளையும் மிகப்பெரிய முதலாளித்துவ சக்திகளுக்கு இடையே பிரிப்பது நிறைவடைந்துள்ளது. காவுட்ஸ்கியின் ஏகாதிபத்திய விமர்சனம், முதலாளித்துவ, ஃபிலிஸ்டைன் விமர்சனத்தை விடவும் தாழ்வான நிலையில் உள்ளது என்பதை நான் காட்டினேன். மேலே லெனின் கூறியவைதான்

இப்போதைக்கு நாம் முக்கிய விஷயத்தை கையாள வேண்டும், அதாவது, "ஜனநாயக மற்றும் சர்வாதிகார முறைகளுக்கு"இடையேயான "அடிப்படை வேறுபாட்டை" காவுட்ஸ்கியின் சிறந்த கண்டுபிடிப்புடன். அதுதான் முக்கிய விஷயம்; அதுதான் காவுட்ஸ்கியின் சிறுநூலின் சாராம்சம். அது மிகவும் பயங்கரமான கோட்பாட்டு குழப்பம், மார்க்சிசத்தை முற்றிலுமாக நிராகரிப்பது, காவுட்ஸ்கி, பெர்ன்ஸ்டைனை விட மேலாக மார்க்சியத்தை திரிப்பதில் இருந்ததை ஒப்புக்கொள்ள வேண்டும்.

மார்க்சை ஒரு சாமானிய மிதவாதியாக காவுத்ஸ்கி எவ்வாறு மாற்றினார்.

 தனது நூலில் காவுத்ஸ்கி விவாதிக்கும் அடிப்படையான விஷயம் பாட்டாளி வர்க்கப் புரட்சியின் முக்கிய சாரமான பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமே.

"ஜனநாயகம் மற்றும் சர்வாதிகார முறைகள்"இடையிலான அடிப்படை வேறுபாடு எனும் காவுத்ஸ்கியின் மாபெரும் கண்டுபிடிப்பு குறித்து கவனிப்போம்.

பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்ற விஷயம் பாட்டாளி வர்க்க அரசுக்கும் முதலாளித்துவ அரசுக்கும் உள்ள உறவும் பாட்டாளி வர்க்க  ஜனநாயகத்துக்கும் முதலாளித்துவ ஜனநாயகத்தில் உள்ள உறவும் பற்றிய விஷயமாகும்.

இது மிகத் தெட்டத் தெளிவானது என்று எவரும் கருதுவர்.ஆனால் காவுத்ஸ்கி அதே பழைய வரலாற்று நூல்களில் இருந்து மேற்கோள் தரும் பள்ளி ஆசிரியர் போல அறவே கவர்ச்சி இல்லாதராகி விட்டார்.அதோடுஇருபதாம் நூற்றாண்டின் மீது தனது முதுகையும் 18ஆம் நூற்றாண்டுக்கு தமது முகத்தையும் விடாப்பிடியாக திருப்புகிறார்.நூறாவது தடவையாக நம்பதற்குரிய சலிப்பான பாணியில்,வரம்பில்லா அதிகாரம் மத்திய காலப்போக்குஇவற்றுடனானமுதலாளித்துவ ஜனநாயகத்தின் உறவு சம்பந்தமாகப் பழைய கருத்தையே அசை போடுகிறார்.

அவர் தூக்கத்தில் கந்தைகளை அசை போடுவது போல இது தொணிக்கிறது(13).

பிரச்சனையை மூடி மறைத்து குழப்புவதற்கு காவுத்ஸ்கி பயன்படுத்தும் பிதற்றல்கள் வ்வகைப் பட்டதாகும். ஏனெனில் அவர் முதலாளித்துவ ஜனநாயகம் பற்றி பேசாமல் பொதுவான ஜனநாயகம் பற்றி மிதவாதிகளைப் போல பேசுகிறார்இந்தத் துல்லியமான வர்க்க வரையறுப்பைபயன்படுத்தாதுதவிர்க்கிறார். மாறாகசோசலிசத்துக்கு முந்தி ஜனநாயகம் பற்றி பேச முயல்கிறார்.இந்த வாயாடி தமது நூல் சுமார் மூன்றில் ஒரு பங்கு அதாவது 63 பக்கங்களில் 20 பக்கங்களை இந்தப் பிதற்றலுக்காகவே ஒதுக்கி உள்ளார். இது முதலாளித்து வர்க்கத்திற்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கிறது. காரணம் இது முதலாளித்துவ ஜனநாயகத்தை அலங்காரப்படுத்தி பாட்டாளி வர்க்கபுரட்சி பற்றிய விசயத்தை மழுங்கடிக்கிறது.

ஆனால் எப்படி இருந்தாலும் காவுத்ஸ்கியின்  நூலின் தலைப்பு பாட்டாளி ர்க்க  சர்வாதிகாரம் என்பதே. மார்க்ஸ் எங்கெல்ஸ் தமது கடிதங்களிலும் பிரசுரிக்கப்பட்டு தமது நூல்களிலும் பாரிஸ் கம்யூனிக்கு முன்பும் விசேஷமாக அதற்குப் பின்பும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் பற்றி திரும்பத் திரும்ப குறிப்பிட்டு இருக்கிறார்கள் என்பதை காவுத்ஸ்கி அறிந்திருக்க வேண்டும். பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்னும் சூத்திரம் முதலாளித்துவ அரசு இயந்திரத்தை தகர்க்க பாட்டாளி வர்க்கத்தின் பணியினது மேலும் வரலாற்று வழியில் ஸ்தூலமான விஞ்ஞான வழியில் துல்லியமான வரையறுப்பே என்பதையும், இதைப் பற்றி மார்க்ஸ் எங்கெல்ஸ்  இருவரும் 1848 புரட்சிகளின் இன்னும் அதிகமாக 1871 அனுபவத்தை தொகுத்தறித்து 1852 முதல் 1891 வரையில் நாற்பதாண்டுகளாக பேசி வந்தார்கள் என்பதை கவுத்ஸ்கி அறிந்திருக்க வேண்டும் (15).

மார்க்சிய போலி பண்டிதரான காவுத்ஸ்கி மார்க்சியத்தை இவ்வாறு கோரமாக திரித்துப்புரட்டுவது எவ்வாறு விளக்குவதுஇந்தப் புலப்பாட்டின் தத்துவியல் வேர்களைபொறுத்தவரைஇயக்கவியலுக்குப் பதில் இவற்றில் கதம்பவாதமும் குதர்க்கவாதமும் பதிலீடு செய்வதில் காவுத்ஸ்கி கைகண்ட நிபுணராவர். நடைமுறை அரசியலின் கருத்து நோக்கில் இருந்துபார்த்தால்இதுசந்தர்ப்பவாதிகளுக்கு அடிபணிவதாகும், அதாவது கடைசியாக ஆய்வு செய்து பார்த்தால் முதலாளித்துவவர்க்கத்துக்கு அடிபணிவது ஆகும் இந்தப் போர் வெடித்தது முதல் காவுத்ஸ்கி சொல்லில் மார்க்சியவாதி செயலில் முதலாளித்துவ வர்க்கத்தின் அடித்தொண்டா இருக்கும் கலையில் மிகவும் அதிக துரிதமான முன்னேற்றம் கண்டுள்ளார் இதில் அவர் ஒரு விற்பனர் ஆகிவிட்டார்.

பாட்டாளி வர்க்க  சர்வாதிகாரம் பற்றிய மார்க்சின் 'சிறுசொல்லை' காவுத்ஸ்கி 'வியாக்கியானம் செய்யும்' தனி குறிப்பான பாணியினைப் பரிசீலிக்கும் போது இது குறித்து மேலும் அதிக திடநம்பிக்கை ஏற்படும் இதை கேளுங்கள்:

"இந்த சர்வாதிகாரத்தை அவர் எவ்வாறு கருத்தில் உருவாக்கினார் என்பதை நமக்கு மேலும் அதிக விவரமாக எடுத்துக்காட்ட துரதிருஷ்ட வசமாக தவறிவிட்டார் மார்க்ஸ்...."(இது ஓடுகாலியின் படு மோசமான பொய்யான தொடராகும்,ஏனெனில் மார்க்சும் எங்கெல்சும்  நமக்கு உண்மையிலேயே பல விவரமான அறிகுறிகளை வழங்கினர்கள்.இவற்றை மார்க்சிய போலி பண்டிதரான  காவுத்ஸ்கி வேண்டுமென்றே புறக்கணித்தார்).நேர் பொருளில் சர்வாதிகாரம் என்ற சொல்லுக்கு ஜனநாயகத்தை ஒழிப்பது என்று பொருளாகும்.ஆனால் நேர் பொருளில் சொல் எந்த சட்டத்தாலும் கட்டுப்படுத்தப்படாத  தனிநபரின் முழுமையான தனிஆட்சி எனவும் பொருள்படும் என்பது திண்ணம்.இது ஒரு நிரந்தர அரசியல் நிறுவனம் ஆகி விடாமல் ஒருதற்காலிகஅவசரகாலநடவடிக்கையாக இருக்கும் எனும் அளவுக்கு மட்டுமே கொடுங்கோல் ஆட்சியில் இருந்து வேறுபடுகிறது.

எனவே பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்ற சொல் ஒரு தனிநபரின் சர்வாதிகாரம் அல்ல மாறாக ஒரு வர்க்கத்தின் சர்வாதிகாரம் ஆகும்.மார்க்ஸ் இதன் தொடர்பாக சர்வாதிகாரம் என்ற சொல்லின் நேர்பொருளிலான அர்த்தத்தை மனதில் கொண்டிருந்தார் சாத்திய கூறினை இது தவிர்த்து விடுகிறது.

"இங்கு அவர் அரசாங்கத்தின் வடிவம் பற்றி குறிப்பிடவில்லை மாறாக நிலைமையை குறிப்பிடுகிறார். பாட்டாளி வர்க்கம் எங்கெல்லாம் அரசியல் ஆட்சி அதிகாரத்தை வென்று பெற்றுள்ளதோ அங்கெல்லாம் இந்நிலமை தவிர்க்க முடியாத வகையில் தோன்றும். இந்த இடத்தில் மார்க்ஸ் தனது மனதில் அரசாங்கத்தின் வடிவம் பற்றி கருதவில்லை என்பது, பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் இந்த மாற்றங்கள் அமைதியாகவே அதாவது ஜனநாயக வழியில் நடைபெறலாம் என்று அவர் கருதி இருந்தார் எனும் மெய் விவரங்கள் நிரூபணமாகிறது"(பக்கம்20). "தத்துவாளர்"காவுத்ஸ்கி கையாளும் முறைகளை வாசகர்கள் தெளிவாக பார்க்கட்டும் என்பதற்காகவே இந்த வாதத்தை வேண்டும் என்று முழுமையாக மேற்கோள் காட்டுகிறோம்.

சர்வதிகாரம் எனும் "சொல்"லின் இலக்கணத்தோடு தொடங்கும் வகையில் இந்த விஷயத்தை அணுக முன் வந்தார் காவுத்ஸ்கி.

மிகவும் நல்லது.ஒரு விஷயத்தை தான் விரும்பு வழியில் அணுகுவதற்குரிய புனிதமான உரிமை எல்லோருக்கும் உண்டு.நேர்மையற்ற அணுகுமுறை யிலிருந்து காரியமான நேர்மையான அணுகுமுறையினை மட்டுமே ஒருவர் வேறுபடுத்திக் கண்டறிதல் வேண்டும்.இந்த விஷயத்தை இந்த வழியில்  அணுகுவதில் காரிய நோக்குள்ள யாவரும் இந்த "சொல்"லுக்கு தனது சொந்த இலக்கணத்தினை வழங்க வேண்டும்.ஆனால் காவுத்ஸ்கி  இதை செய்யவில்லை "நேர்பொருளில் சர்வாதிகாரம் எனும் சொல்லின் அர்த்தம்  ஜனநாயகத்தை ஒழிப்பது என்பதே" என்று அவர் எழுதியிருக்கிறார்.(16-17)

முதலாவதாயும் இது ஒரு இலக்கணம் அல்ல சர்வாதிகாரம் எனும் கருத்துருவின் இலக்கணத்தினைத் தராமல் தவிர்க்க காவுத்ஸ்கி விரும்பி இருந்தாரானால்,இந்த விஷயம் சம்பந்தமாக அவர் ஏன் இந்த குறிப்பிட்ட அணுகுமுறையை தெரிந்தெடுத்தார்?.

இரண்டாவதாக, இது தவறானது என்பது தெளிவு. பொதுவான "ஜனநாயகம்" பற்றி பேசுவது ஒரு மிதவாதியின் விஷயத்தில் இயல்பானதே.ஆனால் எந்த வர்க்கத்திற்கு என்ற கேள்வியை ஒரு மார்க்சியவாதி  மறவாதுகேட்பான்.உதாரணமாக தொன்மை காலங்களில் அடிமைகள் மத்தியில் ஏற்பட்ட கலகங்களும்  வலுவான கிளர்ச்சிகளும்  கூட புராதான அரசு அடிமை உடைமைகளின் சர்வாதிகார என்பதாக இருந்தது என்ற உண்மையை உடனடி வெளிப்படுத்தின என்பதை எல்லோரும் அறிவார்கள் (வரலாற்று ஆசிரியர் காவுத்ஸ்கியும்  அறிவார்).இந்த சர்வாதிகாரம் அடிமை உடைமையாளர்கள் மத்தியில் அவர்களுக்கான ஜனநாயகத்தை ஒழித்ததாஅது ஒழிக்க வில்லை என்பது எல்லோரும் அறிவார்கள்.

"மார்க்சியவாதி"காவுத்ஸ்கி வர்க்கப் போராட்டம் பற்றிய மறந்து விட்டதால் இந்த விபரீதமான அபத்தமான பொய்யான அறிவிப்பை செய்தார்(17).

காவுத்ஸ்கியின் மிதவாதத் தன்மை கொண்ட பொய்யான துணிபுரையை ஒரு மார்க்சியத்தன்மை கொண்ட மெய்யான ஒன்றாக மாற்றுவதற்கு கூற வேண்டுவதாவது:சர்வாதிகாரம் என்றால் இதர வர்க்கங்கள் மீது சர்வாதிகாரத்தை செயல்படுத்தும்வர்க்கத்தைப்பொறுத்தவரை ஜனநாயகம் ஒழிக்கப்படுவதாகப் பொருள் கொள்ளத் தேவை இல்லை.ஆனால் எந்த வர்க்கத்தின் மீது அல்லது  எந்த வர்க்கத்துக்கு எதிராக இந்த சர்வாதிகாரம் செயல்படுத்தப்படுகிறதோ அந்த வர்க்கத்தை பொறுத்தவரை ஜனநாயகம் ஒழிக்கப்படுவதாக (அல்லது ஒழிக்கப் படுவதின் ஒரு வடிவமாக மிகவும் உருப்படியான கட்டுப்பாடாக) பொருள் கொள்ள வேண்டும். (18).

குறிப்பு:- அடைப்புகுறியில் உள்ள எண் இந்த நூலின் பக்கத்தை குறிக்கிறது.

தொடரும்அடுத்த இதழில்

+++++++++++++++++++++++++++

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்