வியட்நாம் படிபினைகளும் மாவோவின் அய்க்கிய முன்னணி பற்றியும்

 வீரம் மிக்க வியட்நாம் மக்கள் அந்நிய ஆக்கிரமிப்பை எதிர்த்து போராடிய தீரமிக்க வரலாறு கொண்டவர்கள். அவர்கள் பல நூற்றண்டுகளுக்கு முன்பே தங்களை விடப் பெரிய வலிமையான ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்து நாடு தழுவிய எழுச்சியையும், மக்கள் யுத்தத்தையும் நடத்திய செழுமையான அனுபவத்தைப் பெற்றிருந்தார்கள்.

வியட்நாமிய பாட்டாளி வர்க்கம் உருவான பின்னர், தம் கட்சியின் தலைமையில், சுதந்திரம், ஜனநாயகம், சோஷலிசம் ஆகிய புரட்சிகர இலக்குகளுக்காக,தமது நாட்டின் அந்நிய ஆக்கிரமிப்பை எதிர்த்த செழுமைமிக்க பாரம்பரியத்தை மேலும் வளர்த்தெடுத்து தேசந்தழுவிய எழுச்சியையும், மக்கள் யுத்தத்தையும், மிக உயர்ந்த மட்டத்திற்கு வளர்த்தெடுத்தார்கள்

ஜப்பானிய ஏகாதிபத்தியத்தையும், பிரெஞ்சு காலனியவாதிகளையும் அவர்கள் முறியடித்தார்கள். அமெரிக்க ஏகாதிபத்தியத்தை முறியடித்தார்கள்; தங்கள் நாட்டின் வரலாற்றை சிறப்புமிக்க பக்கங்களால் நிரப்பிக் கொண்டுள்ளார்கள். இந்தோசீனு, தென் கிழக்காசியா மற்றும் உலக மக்களின் புரட்சிக்கான தனது பங்களிப்பை தந்தார்கள்.

ஏகாதிபத்தியம் மற்றும் காலனியாதிக்கத்தை எதிர்த்த,இருபதாம் நூற்றண்டின் காட்டுமிராண்டித்தனமான ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்த வியட்நாம் தனது வெற்றிகரமான போராட்டத்தின் மூலமாக, முறியடிக்க முடியாதபோர்க்குணத்திற்கும், ஆக்கபூர்வமான அறிவிற்கும், இராணுவ வலிமைக்கும், மக்கள் யுத்த முறையின் மேன்மைக்கும் அடையாளமாக விளங்குகின்றது. இருபதாம் நூற்றண்டின் மிகச் சிறந்த அம்சமாக வியட்நாமிய மக்கள் யுத்தம்விளங்குகின்றது. வியட்நாம் மக்கள் பின்வரும் ஒளிரும் உண்மையை உலக மக்களுக்குப் புலப்படுத்துகிறர்கள். அதாவது ஒரு சிறிய, பரந்த பரப்பில்லாத, மக்கள் தொகை அதிகமில்லாத, பொருளாதார வலிமை இல்லாத நாடு திடமனதுடன் ஒன்றுபட்டு, சரியான புரட்சிகர மார்க்கத்தைக் கொண்டு, நாடு தழுவிய ஆயுத எழுச்சி மற்றும் மக்கள் யுத்தம் பற்றிய மார்க்சிய-லெனினிய கோட்பாட்டை தங்கள் நாட்டுக்குரிய வகையில் பிரயோகித்து, முற்போக்கான மனித இனம் மற்றும் சகோதர சோஷலிச நாடுகளின் ஒத்துழைப்பு ஆகியவற்றுடன் முதன்மையான ஏகாதிபத்திய அரசான அமெரிக்கா உள்ளிட்ட வலுமிக்க ஆக்கிரமிப் பாளர்களை முறியடிக்க முடியும்.

வியட்நாம் நாட்டுக்குரிய புரட்சிக்கும், புரட்சிப் போருக்குமான சரியான மற்றும் ஆக்கபூர்வமான மார்க்கத்தை தமது கட்சியானது வகுத்தெடுக்க, சமூக வளர்ச்சியின் விதிகளையும், தமது நாட்டின் புரட்சிப் போரின் வளர்ச்சி விதிகளையும், புரட்சிகர வன்முறையின் வளர்ச்சி விதிகளையும் கண்டறிந்து அவற்றைக் கற்றுத் தேர்ந்து புரட்சிகர வன்முறை என்ற விதியின் சாரம் அரசியல் சக்திகளை ஆயுதப் படைகளுடன் இணைப்பதும், அரசியல் போராட்டங்களை ஆயுதப் போராட்டங்களுடன் இணைப்பதும், ஆயுத எழுச்சியை புரட்சிப் போருடன் இணைப்பது மாகும்.

நாடு தழுவிய ஆயுத எழுச்சியையும், மக்கள் யுத்தத் தையும் வழிநடத்திச் செல்கையில் கட்சி, பாட்டாளி வர்க்கத் தலைமையில் பாட்டாளி-விவசாயி கூட்டின் அடிப்படையிலமைந்த ஒரு தேசிய ஐக்கிய முன்னணியை அமைத்துள்ளது.தம் கட்சி பரந்துபட்ட மக்களின் அரசியல் சக்திகளை ஒழுங்கமைத்தது; மக்களின் வலிமையான ஆயுதப்படைகளைக் கட்டியது. இவற்றுள் புரட்சிச் சேனை, பரந்துபட்ட மக்களின் ஆயுதப்படை இரண்டும் அடங்கும். எதிரியை முறியடிக்கவும், அதிகாரத்தைக் கைப் பற்றிப் பாதுகாக்கவும், காலனியாதிக்கத்தையும் அதன் அடிவருடிகளையும் தூக்கியெறியவும், ஏகாதிபத்தியத்தின் ஆக்கிரமிப்புப் போரை முறியடிக்கவும், தமது மக்கள் ஆக்கபூர்வமான அனைத்துப் போராட்ட வடிவங்களையும் கையாண்டார்கள் தாக்குதல்களையும், எழுச்சிகளையும் இணைத்தார்கள் மலைப்பகுதி, சமவெளிப் பகுதி, நகரப் பகுதி ஆகிய மூன்று விதமான யுத்த முக்கியத்துவம் வாய்ந்த கேந்திரங்களிலும் போர்த் தந்திர ரீதியான தாக் குதல்களை மேற்கொண்டுள்ளனர்.

தேசப் பாதுகாப்பு ஆகியவற்றினூடே மக்களின் ஆயுதப் படைகள் தோன் றின; வேகமாக முதிர்ச்சியடைந்தன; பல வெற்றிகளைப் பெற்றன. எதிரியை முறியடித்து நாட்டைப் பாதுகாக்க ஒவ்வொரு வியட்நாமிய தேசபக்தனும் எழுந்தான். ஒவ்வொரு குடிமகனும் போராளியாவது? என்ற தம் பழம் மரபு புதிய வடிவம் பெற்றது. மக்கள் சேனையும் நாடெங்கிலும் போராடும் மக்களின் ஆயுதம் தாங்கிய படைகளும் கட்டப்பட்டன

திறமையான போராளிகள் இரவும் பகலும் தன்னலமின்றி சுதந்திரத்துக்காய் போராடினார்கள் நாட்டை ஒன்றுபடுத்தவும், சுதந்திரத்திற்காகவும், ஜனநாயகத்திற்காகவும், சோஷலிசத்திற்காகவும் நம் காலத்திய முதன்மையான ஏகாதிபத்தியமான அமெரிக்க ஏகாதிபத்தியத்தை முறி யடிக்க அவர்கள் உறுதி பூண்டிருந்தார்கள்.

https://noolaham.net/project/570/56958/56958.pdf மாசேதுங்க பேச்சு வார்த்தை 

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்