பாட்டாளி வர்க்க புரட்சியும் ஓடுகாலி காவுட்ஸ்கியும்- லெனின், பகுதி-2

 மேல்தட்டு பிரபுகுலம் ஒன்றை தோற்றுவிப்பது ஏகாதிபத்திய போக்காகும் என்றார் லெனின்

ஜனநாயகம் என்பது பொதுவான ஒன்றாக இருக்கவே முடியாது ஏனென்றால் நாம் வாழும் வர்க்க சமூகத்தில் உள்ள வர்க்கத்தின் நலனிலிருந்தே எல்லாம் தீர்மானிக்கப் படும் பொழுது, பொதுவாக ஜனநாயகம் பற்றி பேசுவது எந்த வர்க்கத்திற்கானது  என்று அவசியம் ஒரு மார்சியவாதி அறிந்திருப்பான்.
வர்க்கங்கள் நிலவுகின்ற வரையில் தூய ஜனநாயகம் பற்றி பேச முடியாது. வர்க்க ஜனநாயகம் பற்றி மட்டுமே பேச முடியும். 
தூய ஜனநாயகம் என்பது உழைக்கும் ஏழை எளிய மக்களை ஏய்க்கும் மிதவாதிகள் பயன்படுத்தும் ஒரு பொய்யான தொடராகும்.

மத்திய கால நிலையுடன் ஒப்பிடும்போது முதலாளித்துவ ஜனநாயகம் ஒரு மாபெரும் வரலாற்று முன்னேற்றமாக இருந்த போதிலும்,  அது எப்போதும் முதலாளித்துவத்தின் கீழ் கட்டாயமாயும் வரையறுக்கப்பட்ட மொட்டையான பொய்யான போலியான ஒன்றாகவும் செல்வந்தர்களுக்கு ஒரு சொர்க்கத்தையும் சுரண்டப்படும் ஏழை எளிய மக்களுக்கு ஒரு மாயப்பொறியாயும் மோசடியாகவும்  நிலவும். ஒவ்வொரு முதலாளித்துவ ஜனநாயகம் செல்வந்தருக்குகந்த ஜனநாயகமாகும்.

உண்மையில் அரசு என்பது ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்தை ஒடுக்குவதற்கான ஒரு இயந்திரமே தவிர வேறு ஏதுமல்ல இது முடியரசில் போலவே சற்றும் குறையாத அளவில் ஜனநாயகக் குடியரசிலும் கண்கூடு.(மார்க்ஸ் எழுதிய பிரான்சில் உள்நாட்டு போர் என்ற நூலுக்கு  எங்கெல்ஸ் எழுதிய முகவுரையில்).

ஓடுகாலி காவுட்ஸ்கியும் பாட்டாளி வர்க்க புரட்சியும் -2

முந்தைய பகுதியின் தொடர்ச்சி….

சர்வாதிகாரம் என்பது நேரடியாக பல பிரயோகத்தை அடிப்படையாக்கி எந்த சட்டத்தாலும்கட்டுப்படுத்தப்படாத ஆட்சியாகும்.

பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர சர்வாதிகாரம் என்பது முதலாளித்துவ வர்க்கத்தை எதிர்த்து பாட்டாளி வர்க்கம் பல பிரயோகம் பயன்படுத்தி பெற்று கட்டிக்காத்து வரும் ஆட்சியாகும் எந்த சட்டங்களாலும் கட்டுப்படுத்தாத ஆட்சி ஆகும்.

தமது விமோசனத்திற்காக போராடிவரும் சுரண்டப்படும் வர்க்கங்களின் ஒவ்வொரு பிரதிநிதித்துவதிற்கும் கண்கூடாக தெரியும் ஒவ்வொரு மார்க்சியவாதிக்கும் ஐயம் இல்லாமல் புரிந்து கொள்ள வேண்டியதுதான்.ஆனால் இரண்டாம் அகிலத்தின் தலைவரான காவுட்ஸ்கி முதலாளித்துவ வர்க்கத்திடம் அண்டிப் பிழைக்க கொத்தடிமையாக வாழ நினைக்கிறார்

சர்வாதிகாரம் என்னும் சொல் அதன் நேர் பொருளில் தனிமனிதனின் சர்வாதிகாரத்தை  குறிக்கிறது என்ற கண்கூடான முட்டாள் கதையினை பறைசாற்றியதன் மூலம் காவுட்ஸ்கி முதலில் ஒரு செப்பு வித்தை புரிந்தார்.பின்னர் இந்த செப்பு வித்தையின் வலிமை மீது ஒரு வர்க்கத்தின் சர்வாதிகாரம் பற்றிய மார்க்சிய சொற்கள் நேர்பொருள் அர்த்தப்படுத்த வில்லை என்றதன் விளைவாக (சர்வாதிகாரம் புரட்சிகர பலாத்காரத்தை உணர்த்தவில்லை மாறாக முதலாளித்துவ - இதைக் குறித்துக் கொள்க -"ஜனநாயகத்"தின் கீழ் சமாதான முறையில் பெரும்பான்மை வென்று பெறுவதையே உணர்த்துகின்றது என்று ) சாற்றினார்.(20)

முதலாளித்து அரசு இயந்திரத்தை வலுக்கட்டமாக அழித்து அதன் இடத்தில் எங்கெல்சின் கூற்றுப்படி, " அச்சொல்லின் சரியான அர்த்தத்தின் படி இனிமேல் அரசாக இல்லாத" புதியது ஒன்று நிறுவாமல் பாட்டாளி வர்க்க புரட்சி சாத்தியமல்ல .ஆயினும் தமது ஓடுகாலி நிலை காரணமாக காவுட்ஸ்கி இவற்றை யெல்லாம் மூடிமறைக்கவும் பொய்ப்பிக்கும் வேண்டி இருக்கிறது (21)

பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர சர்வாதிகாரம் முதலாளித்துவ வர்க்கத்திற்கு எதிரான பலாத்காரமே;இத்தகைய பலாத்காரத்தின் அவசியம் ஏற்பட்டுப் பிரத்தியேக காரணம் மார்க்சும் எங்கெல்சும் விவரமாக திரும்பத் திரும்ப விளக்கி உள்ளது படி (குறிப்பாக பிரான்சில் உள்நாட்டு போர் மற்றும் அதன் நூலின் முகவரியில்)கோஷ்டியும்  அதிகார வர்க்கமும் நிலவுவதே ஆகும்.இந்த அமைப்புகளும் குறிப்பாயும் 19ஆம் நூற்றாண்டின் 70 ஆம் ஆண்டுகளிலும் (அப்பொழுதுதான் மார்க்ஸ் இந்த கருத்தறிவிப்பைசெய்தார்)பிரிட்டனிலும் அமெரிக்காவிலும் இருக்கவில்லை(இப்போது அவை பிரிட்டன் அமெரிக்காவிலும் நிலவுகின்றன).

நாம் புரட்சிகர மார்க்சிவாதிகள் தூய ஜனநாயகம் பற்றி என்றுமே குருட்டு வழிபாடு செய்தது கிடையாது.1903இல் பிளாக்னோஒருபுரட்சிகரமார்க்சிவாதியாக இருந்தார் என்பது தெரிந்ததே.அந்த ஆண்டில் தனது வேலை திட்டத்தை ஏற்றுக் கொண்டததான நமது கட்சி காங்கிரசில் பிளக்னோபுரட்சியில் பாட்டாளி வர்க்கம் அவசியமானால் முதலாளிகளின் வாக்குரிமையை மறுக்கும் எதிர்ப்புபுரட்சி தன்மையது என்றுகாணப்பெறும்எந்தநாடாளுமன்றத் தையும் கலைக்கும் என்று சாற்றினார்.மார்க்சியத்திற்குபொருந்தியதான ஒரே கருத்து இதுதான் என்பது நான் மேலே மேற்கோள் காட்டியுள்ள மார்க்ஸ் எங்கெல்சின் அறிவிப்புகளில் இருந்தும் கூட எவருக்கும் தெளிவாக தெரிய வரும் இது மார்க்சியத்தின் எல்லா அடிப்படை கோட்பாடுகளில் இருந்தும் வெளிப்படையாக தொடர்கிறது.

நாம் புரட்சிகரமார்க்சியவாதிகள் எல்லா நாடுகளிலும் உள்ள காவுட்ஸ்கி வாதிகள் முதலாளித்துவ வர்க்கம் முன்னால் கெஞ்சி பணிந்து முதலாளித்துவ நாடாளுமன்றமுறைக்கு தம்மை தகவமைத்துக்கொண்டுநவீனஜனநாயகத்தின் முதலாளித்துவத்தன்மை குறித்து வாய் மூடி மௌனம்சாதித்து அதன் விரிவாக்கத்தை மட்டுமே அது தனது தார்மீகரீதியானமுடிவுக்குநிறைவேற்றப் படுவதை மட்டுமே கோரி உரைகள் ஆற்ற விரும்பியது போன்று என்றுமே உரைகள் ஆற்றவில்லை.

நாம் முதலாளித்து வர்க்கதினரிடம் கூறினோம்:சுரண்டலாளர்களும் கபட வேடதாரிகளுமான நீங்கள் ஜனநாயகம் பற்றி பேசுகிறீர்கள் அதேபோல ஒவ்வொரு அடியிலும் ஒடுக்கப்பட்ட மக்கள் அரசியலில் பங்கேற்பதைத் தடுப்பதற்கு ஆயிரக்கணக்கான தடை மதில்கலை எழுப்புகிறீர்கள் நாங்கள் உங்கள் பேச்சை நம்பி இந்த மக்களின் நலன்களுக்காக சுரண்டலாளர்களான உங்களை வீழ்த்தும் குறிக்கோளுக்கான புரட்சிகர மக்களை தயார் செய்யும் பொருட்டு உங்களது முதலாளித்துவ ஜனநாயகத்தை விரிவுபடுத்தும் படி கோருகிறோம் எங்களது பாட்டாளி வர்க்க புரட்சிக்கு சுண்டலாளர்களான நீங்கள்எதிர்ப்புக்காட்டமுயல்வீர்களானல் நாங்கள் உங்களை தயவு தாட்சண்யம் இன்றி அடக்குவோம் உங்கள் உரிமைகள் அனைத்தையும் பறித்திடுவோம் அதற்கு மேலாக உங்களுக்கு ரொட்டிய எதுவும் தர மாட்டோம்.

(லெனின் தேர்வு நூல் 9 பக்கம் 89-91 சுருக்கம்)

தொடரும் அடுத்த இதழில்…..

            ===================

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்