ஒவ்வொரு செயலுக்குப் பின்னாலும் முதலாளியப் பொருளியல் நலன் இருப்பதை காட்டிய சிந்தனைமுறையே மார்க்சியம்.
இதுவரையிலான தத்துவவாதிகள் உலகை விளக்கினார்கள் பிரச்சனை அதை எப்படி மாற்றுவதுஎன்பதுதான்.
கடவுள்,இயற்கை பேராற்றல்,அப்பாலை சக்தி உள்ளிட்ட கருத்தியலான நம்பிக்கைகளை சிதைவாக்கம் செய்து அதற்குள் உறைந்திருப்பது உழைப்பைச் சுரண்டும் முதலாளிய லாபவெறியே என்பதை வெளிப்படுத்திக் காட்டியவர் மார்க்ஸ். உலகை மனிதர்கள் இத்தகைய கருத்தியலால் தலைகீழாக உணர்கிறார்கள் என்றார். கருத்தியல் என்ற ஒரு கருத்தாக்கத்தை முன்வைத்தது அவரது தத்துவார்த்த சிந்தனையில் தனிச்சிறப்பான ஒன்றாகும்.கருத்தியல் என்ற சிந்தனைவழியாக எப்படி ஒவ்வொருக்குளும் தவறான உலகப்பார்வையாகக் கொள்கிறது என்பதை விவரித்தவர்.
மாற்றம் ஒன்றைத்தவிர மாறாதது உலகில் இல்லை என்று உலகின் இயங்கு சக்தி மனித உழைப்பும் அதனால் மாறிக் கொண்டே இருக்கும் உலகம் என்பதையும் தனது சிந்தனைகள் வழி மெய்ப்பித்துக் காட்டியவர். தனது வாழ்வு முழுவதையும் உலகப் பாட்டாளி வர்க்கம், ஏழைகள் மற்றும் சமூகத்தை முன்னோக்கி கொண்டு செல்லும் ஒடுக்கப்பட்ட மனிதர்கள்பற்றி மட்டுமே சிந்தித்தவர்.
உணர்வு ஒருவரது வாழ்நிலையை தீர்மானிப்பதில்லை,வாழ்நிலையே உணர்வை தீரமானிக்கிறது என்று புற உலகும் அதன் பொருளாயுத உறவுகளுமே மனித உணர்வை, சிந்தனையை தீர்மானிக்கிறது. உணர்வும் யதார்த்தத்தை படைத்துக் காட்டுகிறது என்கிற அகநோக்கிலான கருத்துமுதல்வாதத்தை அடித்து நொறுக்கி,வாழும் சூழல்தான் ஒருவரது உணர்வை, சிந்தனையை தீர்மாணிக்கிறது என்பதை வெளிப்படுத்திக் காட்டினார்.
சமூகப்புரட்சி அதன் உள்ளார்ந்த பொருளியல் முரண்களால் தீர்மாணிக்கப்படுகிறது என்ற அவரது கருத்தாக்கம் ரஷ்யா, சீனா, போன்ற நாடுகளின் புரட்சிகர வரலாற்றால் நிரூபிக்கப்பட்டது.
உலக வறுமையைப்போக்க சொந்த வாழ்வை வறுமையாக்கிக் கொண்டவர்.
மார்க்சியம் என்கிற கார்ல் மார்க்சின் தத்துவ சிந்தனையின் உருவாக்கத்திற்கு ஜென்னி மார்க்சின் அளப்பறிய தியாகம் முக்கியமானது.மார்க்ஸை அவரது சுதந்திர சிந்தனையோடு இறுதிவரை வறுமையில் போராடிக் காத்தவர் ஜென்னி.
மார்க்ஸின் அளப்பறிய சிந்தனைவளத்தைக் கண்டுணர்ந்து இறுதிவரை தனது நட்பின் வழியாக அவரது எழுத்துக்களுக்கு பலமாகவும்,அவரது குடும்ப வறுமையிலிருந்துமீட்பாளாராக உதவியாளராகவும் இருந்து மார்க்சியத்தை உருவாக்கிய ஏங்கல்ஸ் நட்பிற்கு ஒரு இலக்கணமாக இருந்தவர்.
மார்க்சியம் என்பது இன்று உலகளாவிய ஒரு சிந்தனையாக சமூக மொழியில் சிந்தனையில் ஆழ்தளத்தில் இறங்கியுள்ளது.இன்றைய உலகின் எந்த மாற்றுச் சிந்தனையும் அல்லது புதிய சிந்தனையும் மார்க்சியத்துடன் ஒரு உரையாடல் இன்றி தன்னை முன்னகர்த்த முடியாது.
இன்றை பன்னாட்டுபகாசூரகம்பெனிகள்ஏகாதிபத்தியம் தனது உள்நெருக்கடிகளில் சிக்கி வங்கிகள் திவாலாகி,கடன் அட்டை மற்றும் வங்கிக்கடன் பொருளாதார வலைப்பின்னலுக்குள் மக்களை சிக்கவைத்துள்ளது. தனது கார்பரேட்மயத்தை கிராமங்கள்வரை விரிவாக்கியுள்ளது. இதுதான் உலக ஏகாதிபத்யதின் முரண் முற்றும் நிலை. அல்லது மார்க்ஸ்-ஏங்கல்ஸ் தீர்க்கத்தரிசனமாக கம்யுனிஸ்ட் கட்சி அறிக்கையில் அறிவித்த முதலாளியம் தனக்கான சவக்குழியை தோண்டிக்கொள்ளும் என்பதற்கான துவக்கம் எனலாம்.
மார்க்ஸின் மறைவை ஒட்டி கல்லறையோரம் மார்க்ஸ் பற்றி தனது பாராட்டுரையை வழங்கிய ஏங்கெல்ஸ் கூறியதாவது: “எவ்வாறு டார்வின் உயிர்ப் பொருள் இயல்பின் வளர்ச்சியின் விதியைக் கண்டறிந்தாரோ அவ்வாறே மனித வரலாற்றின் வளர்ச்சியின் விதியை மார்க்ஸ் கண்டறிந்தார்; அரசியல், விஞ்ஞானம்,கலை,சமயம் என்பனவற்றில் ஈடுபடுவதற்கு முதல் மனித இனம் தின்னக் குடிக்க,நிலைபெற,உடுக்க வேண்டும் என்ற எளிய உண்மையை இது காறும் தோன்றி வளர்ந்த சித்தாந்தங்களால் மறைக்கப்பட்டிருந்த உண்மையைக் கண்டறிந்தார்;எனவே மனித வாழ்க்கைக்கு உடனடியாக அவசியமான பொருள் சார்ந்த வகைமுறைகளின் உற்பத்தியும் அதன் விளைவாக ஒரு காலப்பரப்பில் பெறப்பட்ட பொருளியல் வளர்ச்சியுமே அரச நிறுவனங்களதும்,சட்டக் கருத்தாக்கங்களதும் கலைகளதும் ஏன் மதங்கள் பற்றிய சிந்தனைகளதும் அஸ்திவாரமாக அமைந்தன எனவும் முன்னையவற்றின் அடிப்படையிலேயே பின்னவைவிளக்கப்பட வேண்டுமேயன்றி இதுவரை இருந்துவந்தது போல மறுவிதமாக அல்ல என்பதையும் கண்டறிந்தார்.
“அது மட்டுமல்ல இன்றைய முதலாளிய உற்பத்தி முறையையும் அந்த உற்பத்திமுறையின் விளைவாகத் தோன்றிய பூர்ஷ"வா (முதலாளிய)சமுதாயத்தையும் ஆளும் சிறப்பு விதியையும் அவர் கண்டறிந்தார். எந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு முதலாளிய பொருளியலாளர்களும் சோஷலிஸ் விமர்சகர்களும் அதுவரை இருளில் வழிதேடிக் கொண்டிருந்தார்களோ,அதன் மீது உபரிமதிப்பு என்பதைக் கண்டறிந்தமை ஒளியைப் பாய்ச்சியது.
“இத்தகைய கண்டுபிடிப்புக்கள் இரண்டே ஒரு வாழ்நாளுக்குப் போதுமானவை. இவற்றுள் ஒன்றை மட்டுமே கண்டறியும் பேறு பெற்றவன் மகிழ்ச்சியுடையவனாவான். ஆனால்,மார்க்ஸோ,தான் ஆராயப்புகுந்த பல்வேறு துறைகளில்,எதிலும் மேலோட்டமாக அன்றி,கணிதமாயினுங்கூட,ஒவ்வொன்றிலும் சுயாதீனமான கண்டறிதல்களைச் செய்தார்”.
தொடரும்....
No comments:
Post a Comment