மாடுபிடியும் இன்றைய சமூகமும்

புராண காலம் மாறி, சரித்திர காலம், தற்காலம் என்று காலங்கள் மாறினாலும் இந்த மண்ணின் மனிதர்கள் உடைகளால் மட்டுமே மாறி, மனத்தளவில் இன்னும் தங்கள் பாரம்பரியத்தைப் பேணியே வாழ்ந்து வருகிறார்கள்.

சமூகம் வளர்ந்தும் மாறியும் வந்துக் கொண்டுள்ளது சுழல் ஏணி முறையில் அவை பின்னோக்கி செல்வதல்ல முன்னோக்கியே முன்னேற முடியும் ஏனென்றால் அதன் போக்கு.

சாதாரண ஒரு புரிதலுக்கு "ஒரு குழந்தை வளர வளர அதன் சிந்தனையும் அதன் உடையும் மாறிக் கொண்டே உள்ளது ஒன்று அறிவு வளர்ச்சி மற்றொன்று உடல் வளர்ச்சி அப்படியெனும் பொழுது அந்த குழந்தையை வாலிப நிலையில் அந்த உடையை உடுத்த முடியாது அதன் செயலும் வாலிப நிலைகேற்றே இருக்கும் ஏன் என்றால் அவைதான் இயற்கையோடும் அறிவியலோடும் அதன் வளர்ச்சி.

அதனை புரிந்துக் கொள்ளாமல் இயங்காநிலைவாதிகளான மதவாதிகளும் ஆளும் வர்க்கமும் மக்கள் மீது திணிக்கும் கருத்துகளுக்கு பலியாகி இயக்கவியலை அடிபடையாக கொண்ட பொருள்முதவாதிகளும் ஏனோ கருத்துமுதல்வாதிகளிடம் மண்டியிட்டுக் கொண்டுள்ளனர்?

சரி வருவோம் நமது பேசு பொருளுக்கு.

ஒவ்வொரு கருத்துகளுக்கும் வர்க்க சார்புண்டு எனும் நாம்; நிலவுடமை சமுக கருத்துகள் இன்று மேலோக்குவதேன்? புரிந்திருக்க வேண்டும் அல்லவா? எனுமிடத்து நம்மிடையே உள்ள உற்பத்தி உறவின் அடிப்படையில் ஒரு முழுமையான மாற்றம் ஏற்படாமல் கலந்து கிடக்கும் நிலை என நினைக்கிறேன்.

மாடு பிடி விளையாட்டு என்பது நிலவுடமை சமூக உற்பத்தியில் ஈடுபட்டிருந்த மக்கள் மத்தியில் இருந்தவையே. அன்று மாடு விவசாயிக்கு அங்கமாக அவன் உழைப்புக்கும் வாழ்க்கைகும் இருந்தது இன்றோ பல இயந்திரங்கள் அதன் தேவையை குறைத்து விட்டதோடு அதனை பராமறிபது மிகவும் செலவு பிடித்தவை. ஆக இன்று இந்த வளர்ந்த நிலையில் இவை பேசு பொருளாக உள்ளதை கணக்கில் கொண்டு விவாதிப்போம் அதற்கு முன்...

ஏர்த்தொழில்‌ செய்தவரே போர்த்‌ தொழிலையும்‌ மேற்கொண்டனர்‌ என்ற சங்க இலக்கியங்கலை சார்ந்து பேசுபவர்களும் உள்ளனர்.

மருதநிலத்து மக்கள்‌ பெரும்பாலும்‌ உழவுத்‌ தொழிலையே சார்ந்திருந்த காரணத்தால்‌ இவர்களின்‌ உழைப்பு என்பது உழவு உற்பத்தி தொடர்பான உழைப்பாகவே இருந்தது. இவர்கள்‌ கிடைக்கக்கூடிய ஓய்வு நேரத்தைத்‌ தங்களின்‌ சோர்வைப்‌ போக்கிக்‌ கொள்வதற்கும்‌, பயனுள்ள வழிகளிலும்‌ பயன்படுத்திக்‌ கொண்டனர்‌. இங்கு அடிப்படை மக்களுடைய‘உழைப்பும்ஓய்வும்‌' ஒருவகையாகவும்‌ மேட்டுக்குடிமக்களின்‌ உழைப்பும்‌ ஓய்வும்‌ வேறு வகையாகவும்‌ இருத்தலைக்‌ காண்கிறோம்‌.முந்தைய இவர்களின் வாழ்க்கை ‌ வேட்டையாடியும்‌, கால்நடைகளை வளர்த்தும்‌ நாடோடி வாழ்க்கை வாழ்ந்தார்கள்‌. ஒரு குறிப்பிட்ட இடத்தில்‌ குறிப்பிட்ட காலத்திற்கு நிலையாகத்‌ தங்கியிருக்க அவர்களுக்கு வாய்ப்பில்லை.

சிறு சிறு குழுக்களாக வாழத்‌ தலைப்பட்டார்களே இயற்கையைத்‌ தமது ஆற்றலுடன்‌ பயன்படுத்திக்‌ கொள்ள தெரிந்த மருதநில மக்கள்‌ காட்டைத்‌. திருத்தி கழனியாக்கினர்‌. ஆற்றை திருப்பி நீரைத்‌ தேக்கினர்‌. வேளாண்மையில்‌ : ஈடுபட்டனர்‌. தங்களின்‌ விளைநிலங்களுக்கு அருகிலேயே சற்று மேடான பகுதிகளில்‌ ஊர்களை உருவாக்கிக்கொண்டு குடும்பம்‌ குடும்பமாக வாழத்‌ தலைப்பட்டனர்‌. உணவைத்‌ தேடி வாழ்ந்த முந்தைய மக்களைப்‌ போலல்லாமல்‌ இவர்கள்‌ உணவை உற்பத்தி செய்தனர்‌. உணவு உற்பத்தி என்பது ஓரிரு நாளில்‌ நடந்து முடிவதல்ல. அதற்கு பல நாட்கள்‌, பல மாதங்கள்‌ காத்திருக்க வேண்டும்‌. அதனால்‌ உற்பத்தியில்‌ ஈடுபடும்‌ அம்மக்கள்‌ இடம்பெயர்வது என்பது சாத்திய மற்றது. எனவேதான்‌ ஒரே இடத்தில்‌ நிலையாகத்‌ தங்க தலைப்பட்டனர்‌.

வேட்டை, கால்நடை ஆகிய சமூக அமைப்புகளைவிட வேளாண்‌ சமூக அமைப்பு அடிப்படையில்‌ வேறுபட்டது என்பதையும்‌, முந்தைய சமூகங்களில்‌ காணப்படாத அளவிற்கு இச்சமூக அமைப்பில்‌ தனிஉடைமையும்‌, வர்க்கவேறுபாடும்‌ தோன்றிவிட்டன என்பதையும்‌ வர்க்கங்களுக்கிடையிலான உழைப்பும்‌, ஓய்வும்‌ வேறுபட்டன என்பதையும்‌ அறிகிறோம்‌.ஏனைய நிலப்பகுதியைக்‌ காட்டிலும்‌ மருத நிலப்பகுதியில்‌ வாழும்‌ மக்களுக்கு ஓய்வு நேரம்‌ மிகுதி. வேளாண்‌ சமூக அமைப்பில்‌ அறுவடைக்குப்‌ பின்‌ ஒய்வுதான்‌. மனமகிழ்ச்சியுடன்‌ கூடிய ஒய்வு. இன்றும் கூட தைத்திருநாள்‌, மாசித்‌ திருநாள்‌, பங்குனி உத்திரம்‌, சித்திரைத்‌ திருவிழா, மாரியம்மன்‌ தீ மிதிவிழா போன்ற விழாக்கள்‌ அறுவடைக்கு பின்‌ தொடர்ந்து நடைபெறுவதைக்‌ காணலாம்‌.

சங்ககாலச்‌ சமுதாயம்‌சமயம்சார்ந்தசமுதாயமாகஇருந்ததாகத்தெரியவில்லை. பெரிதும்‌ போர்க்காலச்‌ சமுதாயமாகவே இருந்தது. அத்துடன்‌ அன்றாட நிகழ்வுகளுக்கும்‌, உலகியல்‌ இன்பங்களுக்கும்‌, உலகியல்‌ தேவைகளுக்கும்‌ மதிப்புக்‌ கொடுத்து அவற்றை ஒட்டியே அவர்கள்‌ வாழ்க்கை முறைகளும்‌ அமைந்திருந்தமையால்‌
வேட்டைக்‌ கருவிகளும்‌, ஆடு, மாடுகளும்‌ தனிமனிதனின்‌ உடைமைகளாக இருந்து நிலையைத்‌ தனியுடைமைச் சமுதாயம்‌ எனவும்‌, வளம்மிக்க நிலங்களும்‌, நிலப்பகுதிகளால்‌ சூழப்பட்ட ஊர்களும்‌ வலிமைமிக்க மருதநிலத்‌ தலைவனின்‌ ஆதிக்கத்தில்‌ இருந்த நிலையை நிலவுடைமைச்‌ சமுதாயம்‌ எனவும்‌ கொள்ளலாம்‌.மருதத்தில்‌ தோன்றிய நிலவுடைச்‌ சமுதாயம்‌ தனியுடைமைச்‌ சமுதாயத்தின்‌ வளர்ந்த வடிவமான நிலவுடைமை சமுதாய அமைப்பின்‌ தொடக்க நிலையை மருதப்‌ பாடல்களின்‌ வாயிலாக அறிய முடிகிறது.
இவ்வாறு நேரத்தில் இருந்த வாழ்க்கை இன்று வாழ முடியுமா சிந்தியுங்கள்! மற்றும் பின்னர்

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்