இந்திய மக்கள் தொகை வளர்ச்சியும்; மக்களின் வாழ்க்கை தரம் வீழ்ச்சியையும் இந்தப் படம் காண்பிக்கிறது. இதில் ஆன்மீகத்தின் பெயரில் செயல்படும் வலதுசாரிகளும் ஏழை எளிய உழைக்கும் மக்களுக்காக பேசுவோர்களின் உண்மையான பணி வேறு வேறல்லவா? அந்த உழைக்கும் மக்களை பற்றி எண்ணாத வலதுசாரிகளை அம்பலப்படுத்துவதும் உழைக்கும் மக்களை வாழவழிவகை பற்றி பேசுவதுதானே இடதுசாரிகளின் முதன்மையான பணி
இன்றைய செய்திதாளில் உள்ளவை எவ்வளவு கீழ்தரமான முன்னெடுப்பு. இன்று நாட்டு மக்கள் தொகை 143 கோடி பேர். அவர்கள் வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்க முடியாத ஆட்சியாளர்கள் சொர்கத்தில் வாழ டிக்கெட் விற்பனை செய்கின்றனர் அவை அமோகமாக கல்லா கட்டப்படுகிறது... ஆனால் மக்கள் உண்ண உணவும் உடுத்த உடையும் இருக்க இருப்பிடமும் அந்த மக்களின் உழைப்பில்தான் அடங்கியுள்ளது.
அதனை பற்றி கவலைபடாத ஆட்சியாளர்கள் மத நம்பிக்கையை வியபாரம் செய்கின்றனர் அவை மக்களுக்கு எவ்வகையில் வாழ்வளிக்கும் சிந்தியுங்கள். நாட்டின் வளர்ச்சி ஆதாளபாதளத்தை நோக்கி பயனிக்கிறது மக்கள் தொகையோ பெருகிக் கொண்டுதான் உள்ளது. மக்கள் வாழ என்ன திட்டம் உள்ளது இவர்களிடம்?
செய்தித்ளிலிருந்து கீழே:-
அகில இந்திய வர்த்தகர்கள் சம்மேளத்தின் தேசியப் பொதுச் செயலாளர் பிரவீன் கண்டல்வால் கூறும்போது,“ராமர் கோயிலால், நாடு முழுவதிலும் உள்ள வியாபாரிகளுக்கு ரூ.50,000 கோடி மதிப்பிலான வியாபாரம் புதிதாக உருவாகும். சிறிய வியாபாரிகள் முதல் பெரு நிறுவனங்கள் வரை பலன்பெற உள்ளனர்.
ராமர் கோயில் தொடர்பான பலபொருட்கள் அனைத்து மாநிலங்களிலும் தயாரிக்கப்படுகின்றன. ராமரின் உருவம் பதித்த கீசெயின்.படங்கள், துணிகள், பேனர்கள் என பல பொருட்கள் இதில் அடங்கும். ராமருக்கான அலங்காரப் பொருட்களும் கோயிலின் வடிவமும் பல்வேறு அளவுகளில் பிளாஸ்டிக், மரம், காகித அட்டைபோன்றவற்றில் தயாரிக்கப்படுகின்றன” என்றார்.
வியாபாரிகள் தவிர கைவினைஞர்கள், ஓவியர்கள், இசை மற்றும் நடனக் கலைஞர்கள் என பிற துறைகளை சேர்ந்தவர்களும் பலன் அடைந்து வருகின்றனர். ஆன்மிகம் தொடர்பான பண்டிதர்கள் உள்ளிட்டோருக்கும் ராமர் கோயிலின் பலன் கிடைத்துள்ளது. வாடகைவாகனத் துறையினர், வாகன ஓட்டுநர்கள், பல்வேறு நிலையிலான பணியாளர்கள் உள்ளிட்டோரும் பலன் அடையத் தொடங்கியுள்ளனர்.
ராமர் கோயிலுக்கு பிறகு பிரம்மாண்ட ரயில் நிலையம், புதிய சர்வதேச விமான நிலையம் என அயோத்தி பல மடங்கு வளர்ச்சி அடைந்து வருகிறது.
No comments:
Post a Comment