நேற்று குப்பம், கோலர் பகுதிக்கு சென்று வந்த அனுபவம்

 

தமிழர்கள் பல்வேறு மாநிலங்களில் பரவிக்கிடக்கின்றனர் அவர்களை பற்றி ஒரு சிறிய தேடல்-நான் அறிந்தவற்றை எழுதுகிறேன்

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நான் பெங்களூருவில் மாறி வரும் தமிழர் விரோத போக்குகளை அடிக்கடி கண்டு வருத்தப் படுவேன் இருந்தும் இதனை நமது ஆட்சியாளர்களின் வேற்றுமையில் ஒற்றுமை இந்தியாவின் பன்மை தன்மை இப்படி ஏமாற்றப்படும் வார்த்தைகளில் மயங்கி விடுவேன்.
உண்மையில் ஆங்கிலேயர்களின் வருகைக்கு முன்னரே மன்னர் ஆட்சிகாலத்தில் தங்களின் ஆட்சி அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதியில் தன்னை சார்ந்த மக்களை தன்னுடன் கொண்டு சென்றனர் அந்த அரசர்கள் அவர்களை அங்கே தங்க வைத்தனர்.
பல்லவர்கள் காலத்தில் குடியேறியவர்கள் யார் என்று நான் சொல்லத்தேவையில்லை அதேபோல் தஞ்சைபகுதியில் கன்ணட அரசர்களும் விஜயநகர அரசர்களும் புகுந்த பொழுது இங்கே அந்த மக்கள் குடியேறினர்.
அதுபோல் இன்றைய கர்னாடகா அந்திரா பகுதிகளில் தமிழர்கள் விரவிக்கிடகின்றனர். ஆனால் தங்களின் அடையாளம் இழந்து அவர்கள் அல்லல் படுவது பெங்களூரிவில் பலப்பகுதியில் பல செயல்களில் தினம் காணலாம். இதனை பற்றி வாய் திறக்காத கூட்டம் என்ன செய்யப் போகிறதோ?
சரி நான் தேடிய பகுதி
கோலார் தங்கவயல் பற்றி
இது தமிழர் நாகரிக வரலாற்றுக் காலத்தில் இருந்தே தங்கம் வெட்டுதலில் புகழ் பெற்றது. அரப்பா , மொகன்சதாரோவில் கிடைத்த வரலாற்றுப் புதையலில் இருந்த தங்கத்துடன் , ஒன்றுபோல் குணம் கொண்டுள்ளது.
எனவே தமிழர் நாகரீகம்.... தமிழகத்தில் இருந்து தற்போதைய இந்திய கண்டத்தின் ஹரப்பா மொகஞ்சதாரோ வரை பரவி இருந்தது என்பதற்கு இங்கு உள்ள தங்கமும், அங்கு அகழ்வாய்வில் கிடைத்த தங்க புதையல் தங்கமும் ஒரே மாதிரியாக இருப்பதுமே சாட்சி.
இங்கு தங்கம் வெட்டும் பணி கி.மு முதலாம் நூற்றாண்டு முதலே நடந்து வருவதாய்த் தகவல்கள் உள்ளன.
ஏனென்றால் கி.மு க்கு முற்பட்ட காலத்தில் இருந்தே இது தற்போதைய இந்தியாவின் தென் பகுதிகளை ஆண்டுவந்த சேர சோழ பாண்டியர் போன்ற தமிழ் மன்னர்களின் ஆளுகைக்கு உட்பட்டதாக இருந்து வந்துள்ளது.
இந்தியா பிரிட்டிஷ் அரசிடம் ஆட்சி மாற்றதிற்கு பின்பு, அப்போதைய மாகாணங்கள் யாவும் மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்பட்டபோது, சில தமிழ் நாட்டில் ஆதிக்கம் செலுத்திய தமிழர் அல்லாத அரசியல்வாதிகளால், இங்கு வாழும் தமிழ் மக்களின் எதிர்ப்பையும் மீறி தமிழ் நாட்டில் இருந்து பிரித்து இது கர்நாடகாவுடன் இணைக்கப்பட்டது.
1800 களில் , ஆங்கிலக் கிழக்கிந்திய நிறுவனத்தால் தங்கச் சுரங்கங்கள் வெட்டும் பணி துவங்கியது . இதற்காகப் பெருமளவில் மக்கள் தமிழ்நாட்டின் வடாற்காடு மாவட்டத்தில் இருந்தும் , சித்தூர் மாவட்டத்தில் இருந்தும் வரவழைக்கபட்டனர். இவர்கள் சுரங்கத்திற்கு அருகிலேயே வீடுகட்டித் தங்கியதால் கோலார் தங்க வயல் நகரியம் உருவாகியது.
இன்று பெங்களூர் நகரில் வாழும் பழைய தமிழ்மக்கள் பலரும் கே.ஜி.எப் ஐத் தாய்வீடாக கொண்டவர்கள் ஆவர்கள். இவர்கள் கே.ஜி.எப் சுரங்கம் 1950 களில் பணி குறைந்த போது "பெங்களூருக்கு" வேலை தேடி சென்றோராவர். அந்த பூர்வகுடிகள் பெங்களுருரை உருவாக்கியவர்கள் இன்று வேற்றுமொழியாட்களாக படுகிறது இன்றைய கன்னட வெறியர்களுக்கு. உண்மையில் அவர்கள் பூரிவீகம் அதுதான் என்பதனை மறந்தே போன ஆட்சியாளர்களும் ஓட்டு அரசியலில் உண்மையான வரலாற்றை மறைக்கப் பார்கின்றனர்.
அடுத்து குப்பம்.
குப்பம், ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள சித்தூர் மாவட்டத்தில் இருக்கும் பகுதியாகும். குப்பத்தின் ஆட்சி மொழியாக தெலுங்கு மொழி உள்ளது. இங்கு தமிழ் பேசுவோரும், கன்னடமும் பேசுவோரும் வாழ்கின்றனர். இங்கு திராவிடப் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.
தெலுங்கே அதிகாரபூர்வ மொழி மற்றும் மிகவும் பரவலாக பேசப்படும் மொழி. தமிழ் பழங்குடியினரிடையேயும் பரவலாகப் பேசப்படுகிறது. இது வரலாற்று ரீதியாக சோழ வம்சத்தால் கட்டுப்படுத்தப்பட்டதால், பல தமிழர்கள் இப்பகுதியில் குடியேறினர். அண்டை மாநிலங்களான தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவிற்கு அருகாமையில் அமைந்திருப்பதால் மக்கள் தமிழ் மற்றும் கன்னடத்தை புரிந்து கொள்ளவும் பேசவும் முடியும். குப்பத்தில் பெரும்பாலான மக்கள் மும்மொழி பேசுபவர்கள்.
ஒரு சரியான அம்சம் என்னவென்றால் KGF ல் குப்பம் பகுதிகளில் தமிழில் பேச இந்த மக்கள் அஞ்சுவதில்லை ஆனால் பெங்களூருவில் இந்த நிலை இல்லை என்பேன்.
நேரமிருந்தால் வேறொரு பகுதியில் மீண்டும் பார்த்து அறிந்தவற்றை எழுதுவேன் தோழர்களே.
அங்கு நான் கண்ட பொதுத்துறை நிறுவனமான Bharath Earth Mover Ltd

BEML லிமிடெட், முன்பு பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட், ஒரு இந்திய பொதுத்துறை நிறுவனமாகும், இது பெரிய அளவில் கனரக இயந்திரங்களை கையாளுதல் , இரயில்வே, போக்குவரத்து மற்றும் சுரங்கம் போன்ற பல்வேறு கனரக உபகரணங்களை உற்பத்தி செய்கிறது. இதன் தலைமையகம் பெங்களூரில் உள்ளது. பிஇஎம்எல் ஆசியாவின் இரண்டாவது பெரிய கனரக கருவிகளை உற்பத்தி செய்யும் நிறுவனமாகும்.

இந்தியாவின் முன்னணி இராணுவ பொதுத்துறை நிறுவனமான BEML LTD., 2022-23 நிதியாண்டிற்கான இறுதி ஈவுத்தொகையான ரூ.22.5 கோடியை இந்திய அரசுக்கு செலுத்தியுள்ளது.

இதனை இன்று தனியாருக்கு கொடுக்க ஜரூராக வேலை நடைபேற்றுக் கொண்டிருபதும் பல்வேறு பகுதிகள் செயலிழந்து கிடப்பதையும் காணலாம்

FoundedMay 1964, Bengaluru







No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்