தோழர் அறிவொளிக்கு சிவப்பு அஞ்சலி

தோழர் அறிவொளிக்கு சிவப்பு அஞ்சலி.

தோழர் அறிவொளியுடன் ஒருமுறை போனில் பேசினேன், அவர் வெளியிட்ட தியாக தோழர் பாலன் நூல் வாங்க. அவர் எனக்கு அனுப்பி வைத்தார். அதன் பின்னர் நான் அவரை என்றும் தொடர்பு கொண்டதே இல்லை. ஆனால் மார்க்சிய அடிப்படை அறிவே இல்லாத ம.ஜ.இ.க எனும் குறுங்குழுவாதிகள் நான் அந்த நூல் வாங்கினேன் என்பதற்காக அவர்களின் அமைப்பிலிருந்து என்னை தொடர்பு கொள்ளாமல் வெளியேற்றிவிட்டனர் அதனை விடுங்கள் தேவைபடும் பொழுது அவதூறு படுத்துவதே தொழிலாய் கொண்டுள்ளனர். அதில் ஓன்றுதான் இதன் தொடர்ச்சி

AIM ஆதரவு பதிப்பகமான மனிதன் பதிப்பக வெளியீடுகளை அமைப்பிற்கு தெரியாமல் புதுமை பதிப்பக அலுவலகத்திற்கு மனிதன் அச்சகத்தில் இருந்து மற்றொரு தோழர் ஒருவர் மூலம் ரவிந்திரன் தருவித்தார். மற்றும் திருப்பத்தூரில் நடந்த ம.ஜ.இ.க நீட் எதிர்ப்பு அரங்க கூட்டத்தில் அந்த மனிதன் பதிப்பக வெளியீடுகளை அமைப்பிடம் விவாதிக்காமல் பழனி சின்னச்சாமி ( Palani Chinnasamy) என்பவருடன் இணைந்து விநியோகிக்க முயன்றார். அணிகள் அதை தடுத்து நிறுத்தினர். பாலன் வரலாற்றை எழுதுவதாக கூறிக்கொண்டு எமது அமைப்பை தாக்க கொண்டு வரப்பட்ட நூல் அது. அதை அமைப்பிற்கு தெரியாமல் இவர்கள் விநியோகிக்க முயன்றனர்.-மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் ( 28/02/2025 முகநூல் பதிவு).

நான் கேட்கிறேன் "சரி அந்த  நூலை தடைபடுத்தி விட்டீர்கள், நீங்கள் வெளியிட்டீர்களா அவரின் வரலாற்றை ம.ஜ.இ.க வே? ஏனென்றால் உங்களுக்கு தியாகிகளை பற்றி என்ன கவலை உங்கள் தலைமையை புகழ்பாடுவதை தவிர பணி ஏது உங்களிடம்??? "

சரி அப்படி ஒரு அமைப்புக்குள் ஒரு தோழர் தவறான கருத்தை முன்வைத்தால் அந்த அமைப்பு என்ன செய்திருக்க வேண்டும் சொல்லுங்கள்? அந்தத் தோழர் முன்வைத்த கருத்து தவறானது என்பதை விளக்கி அதனை புரியவைத்து அந்தக் கருத்தை தோழர் கைவிடச் செய்ய வேண்டும் அல்லவா???. இவைதான் மார்க்சிய போதனை அல்லவா? அதற்கு சித்தாந்தத் தெளிவு இருந்திருந்தால் அதனை அமைப்பு செய்திருக்க வேண்டும் அல்லவா?. 

ஆனால் அத்தகைய சித்தாந்த தெளிவு அந்த தோழரிடம் இல்லை என்பதால் அந்த அமைப்பும் அமைப்பின் தலைமையும் என்ன செய்திருக்க வேண்டும்? அந்தத் தோழருக்கு சித்தாந்த கல்வியும் பயிற்சியும் கொடுக்க வேண்டும் அல்லவா?.

ம.ஜ.இ.க போதித்தார்களா? அதுகுறித்து அமைப்பிற்குள் சித்தாந்தப் போராட்டம் நடந்ததா? எனக்கு அப்போது சித்தாந்தத் தெளிவு எனக்கு இல்லை என்பதுதானே உண்மை. எனக்கு மட்டுமல்ல அமைப்பிலுள்ள பெரும்பான்மையினருக்கு சித்தாந்த தெளிவு இல்லை என்பதுதானே உண்மை. எனக்கும் என்னைப் போன்றவர்களுக்கும் சித்தாந்த தெளிவை கொடுக்க அமைப்பு என்ன முயற்சி எடுத்தது? இவ்வாறு ஒரு புரட்சிகரமான அமைப்பு எடுக்க வேண்டிய எவ்விதமான முயற்சியையும் எடுக்க மறுத்துவிட்டு ஒரு குறிப்பிட்ட தோழர் மீது பழிபோடுவது என்ன வகையான நியாயம்.

செத்த பிணம் பேசாது என்பர் இன்று அந்த தலைவர் இல்லை! ஆனால் இதுவரை அதனைபற்றி பரிசீலித்ததுண்டா? 

தங்களின் பின்னடைவுக்கு இவர்களின் அரசியல் அற்ற போக்குதான் அதை மூடிமறைக்கு அணியிலிருந்து வெளியேறிவர்களை குற்றம் சுமத்தி தன் அணிகளை மேய்கின்றனர். ஏனெனில் வெளியில் உள்ளவர்களுக்கு இவர்களின் அவதூறு தெரியப்போவதில்லை இதுபோன்ற சில கண்துடைப்பில் தங்களின் குறுங்குழுவாத புதைசேற்றை பூசி வாழும் அவலம் ....

வேறு ஒரு தோழர் கூறினார், "இது வேலை வெட்டி இல்லாதவர்களின் பிதற்றுகள் தோழர் இதெல்லாம் பழைய பஞ்சாயத்துகள் மஜஇக என்ற சிறு குளுவானது புரட்சி நடக்காததற்கு யாரையாவது குற்றம் சொல்லிக்கொண்டே காலத்தை ஓட்டி விட்டனர், அவர்கள் அமைப்பில் வேலை செய்யப்படும்வரை ஒருவர் நல்லவர் என்று சொல்வதும் வெளியேறினால் அவரை மோசமானவர் என்றும் தூற்றுவது அவர்களின் வழக்கம். அதுதான் AMK ன் தத்துவம். ஏற்கனவே வெளியேறிய சில தோழர்கள் அமெரிக்காவிடம் 100 கோடி வாங்கிவிட்டனர் என்று அவதூறு பரப்பியவர்கள்தான் இவர்கள். ஒரு காலத்தில் யார் கூடவும் இணைந்து வேலை செய்ய மாட்டார்கள் குறிப்பாக பெரியார் அம்பேதகர் இயக்கங்களுடன் இணைந்து வேலை செய்யாமாட்டார்கள். இன்று AMK செத்தததிற்கு பின்பு அதே NGO அரசியல் இயக்கங்களுடன் இணைந்து பொதுகூட்டம் நடத்துகின்றனர். இன்று அடையாள அரசியலில் தேய்ந்து போய் கொண்டுள்ளனர். இதில் பேசுவதற்கு ஒன்றிமில்லை. அவர்களுக்கு வேறு வேலை இல்லை, கடந்த 30 ஆண்டுகளாக அவர்கள் செய்த வேளையில் பெறுபான்மை வேலை அவர்களின் அமைப்பில் இருந்து வெளியேறியவர்களை பற்றி அவதூறு பரப்புவதே முதன்மை வேலையாக கொண்டுள்ளனர்" இது அவரின் அனுபவம்.

இந்த வீரவேசம் போட்டவர்கள் ஒரு மாநில கமிட்டி இருக்கும்போதே அந்தக் கமிட்டியிலுள்ள ஏ.எம்.கே, மற்றும் மனோகரனுக்கு பிடிக்காத நால்வர் அணித் தோழர்களுக்கு எவ்விதமான அழைப்பும் கொடுக்காமல் ரகசியமாக கூடி ஒரு புதிய மாநில கமிட்டியை உருவாக்கியது யார்? உங்களது தலைவர் ஏ.எம்.கேயும் மனோகரனும்தானே… இன்று மனோகரன் மூச்சுக்கு முன்னூறுதரம் உங்களை NGO என்று முத்திரை குத்துகிறானே அந்த முத்திரை எங்கே வினியோகிக்க படுகின்றது. நீங்களும் அவரும் இந்த சான்றிதழ் வினியோகிக்கும் அதிகாரம் படைத்தவர்களோ??? உங்களை விமர்சித்தாலே முத்திரை குத்தி ஒதுக்கும் நீங்கள் இதுவரை சாதித்ததென்ன சொல்வீர்களா?

இன்று பல தோழர்கள் அஞ்சலி செலுத்துகின்றனர். உண்மையில் தோழரின் பணி அவரின் நூலின் வாயிலாக அறிவேன். அவை மகத்தானவை ஆனால் இவரின் உழைப்பும் தன்நலம் கருத செயலும் எல்லோரும் செய்ய முடியாதவை. அவை உண்மையில் உயரிய இலட்சியம் கொண்டவர்களால் மட்டுமே முடியும்.

இங்கே பலர் அவருக்கு அஞ்சலி செலுத்துகின்றனர். அவர்களின் பின்புலம் ஆளும் வர்க்க சேவையில் இருந்துக் கொண்டே இதுபோன்ற உன்னதமான தோழர்களை உயர்தி பிடிப்பது ஏன் என்பதனை புரிந்துக் கொள்ள ஒரு சந்தர்ப்பம் இவரின் மறைவு எனக்கு கொடுத்தது. ஆம் ஏகாதிபத்திய சேவையில் இருப்பது போலவே ஆளும் வர்க்க சேவையில் உள்ளோரும் தங்களின் ஏமாற்றை மூடிமறைக்க தோழரின் இறப்பை பதிவு செய்திருந்தனர். அவர்கள் நோக்கம் தோழரின் தியாகத்தை முன்னிருத்துவதல்ல தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வதும். தன் பாபுலிச கலாச்சார பணியை தொடரவும் செய்யவே....

அவர்களை நேரடியாக பேச விருப்பம் இல்லை. முகநூலில் வழிந்தோடுகிறது. உண்மையான தோழர்கலின் அஞ்சலியை நான் குறிப்பிடவில்லை சில பூச்சாண்டிகளையே குறிப்பிடுகிறேன் தோழர்களே...


தோழர் அறிவொளிக்கு சிவப்பு அஞ்சலி!(தோழர் ஞானம் முகநூல் பதிவு)

90 ஆம் ஆண்டுகளில் எமது அமைப்போடு( ம.ஜ.இ.க.) இணைந்து செயல்பட்ட நினைவுகள் நிழலாடுகின்றன. பு.ப.இ.மேடைகளில் செரபண்டராஜுவின் கவிதைகளை குழுவாக நடத்திய உரைவீச்சுகளில் உணர்ச்சி பொங்க அவர் வாசித்ததை மறக்க முடியாது! பின்னர் மாவோயிஸ்ட் அமைப்பில் இணைந்து செயல்பட்ட போது சந்தித்த அடக்கு முறைகளைக் கண்டு அஞ்சாது செயல்பட்டவர்.தருமபுரி பாலன் குறித்து கள ஆய்வு செய்து மனிதன் பதிப்பகம் சார்பில் அவர் வெளியிட்ட தோழர் பாலன் அவர்களின் வாழ்க்கை வரலாறு காய்தல் உவத்தல் இன்றி உண்மைகளின் தொகுப்பாக அமைந்திருந்தது. அந்தப் புத்தகம் குறித்தும் அதனை விநியோகித்த "எய்ம்" அமைப்பு குறித்தும் உண்மைக்கு மாறான இட்டுக்கட்டப்பட்ட அவதூறுகளை திரைக்கதையாக வடித்து, தோழர் ஏ.எம் கே.வையே தடுமாற வைத்து தடம் மாற வைத்து, ஒரு "துடைப்பம்" பட்டுக் குஞ்சம் கட்டிக் கொண்டது ஒரு சோக வரலாறு. குஞ்சம் பிய்ந்து அந்தத் துடைப்பம் மூலையிலே முடங்கிப் போனது நிகழ்கால நடப்பு! தோழர் அறிவொளியின் மறைவு இவற்றையெல்லாம் அசைபோட வைத்துவிட்டது!
தோழர் அறிவொளி யின் கவிதை வரிகளை யே அவருக்குக் காணிக்கையாக்குவோம்!
தோழர் அறிவவொளியை நினைவு கூர்வோம்... அவரை பூஜிக்க அல்ல! அவரது கனவுகளை நனவாக்க!
தோழர் அறிவொளி யின் நினைவு நீடு வாழ்க!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இலக்கு இதழின் கட்டுரைகள்

CJP மற்றும் மார்க்சிய வர்க்க அரசியல் ஆய்வு-ஒலி வடிவில்

  Cockroach Janta Party (CJP) என்பது 2026-ஆம் ஆண்டில் வேலையற்ற இளைஞர்களைக் குறித்தான நீதிமன்ற விமர்சனத்திற்கு எதிராக உருவான ஒரு நையாண்டி இய...

செய்தியை சார்ந்த அலசல்