சுயநிர்ணய உரிமை மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போர்
இந்த ஆவணம் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக இந்திய உழைக்கும் வர்க்கம் முன்னெடுக்க வேண்டிய போராட்டத்தைப் பற்றி விளக்குகிறது. தற்போதைய ஆட்சியாளர்கள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாகச் செயல்படுவதால் சிறு தொழில்களும் விவசாயமும் அழிந்து வருவதாக இக்கட்டுரை எச்சரிக்கிறது. நாட்டின் இறையாண்மையைக் காக்க தேசிய சுயநிர்ணய உரிமை மற்றும் மாநிலங்களுக்குப் பிரிந்து செல்லும் அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. அரசியல் கட்சிகளின் துரோகத்தை விமர்சிக்கும் இவ்வுரை, பாராளுமன்ற அரசியலை நம்பாமல் மக்களின் நேரடிப் போராட்டமே தீர்வாகும் எனக் கூறுகிறது. அமைதி வழியில் அந்நியப் பொருட்களைப் புறக்கணிப்பதன் மூலமும், உண்மையான கூட்டாட்சியை உருவாக்குவதன் மூலமுமே அமெரிக்க ஆதிக்கத்தைத் தடுக்க முடியும் என்று இச்சமூகம் சார்ந்த உரை முன்மொழிகிறது. இதன் மூலம் உழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதே இந்தப் பாடத்தின் முக்கிய நோக்கமாகும்.
ஏகாதிபத்திய ஆதிக்கத்தால் இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்படும் பாதிப்புகளை ஒரு தொடக்கநிலைப் புரிதலுடன் விளக்கவும்.
இந்திய அரசியல் அதிகாரப் பரவலாக்கத்திற்கும் தேசிய சுயநிர்ணய உரிமைக்கும் உள்ள தொடர்பைப் பற்றி விவரிக்கவும்.
கார்ப்பரேட் மயமாக்கலை எதிர்கொள்ள இந்த ஆதாரம் முன்வைக்கும் போராட்ட வழிமுறைகள் எவை என ஆராய்க.
அமெரிக்க கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சாதகமாக இந்திய வணிகச் சந்தையை மோடி கும்பல் திறந்துவிட்டுள்ளது. இதனால் உடனடியாக இந்தியா முழுவதிலுமுள்ள சிறு மற்றும் நடுத்தர தொழில் முதலாளிகளும் சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளின் சந்தைகள் பறிபோய்விடும். இந்த வர்க்கப் பிரிவினரது சந்தை பறிபோய்விட்டால் இவர்களால் தொழிலையும் விவசாயத்தையும் நடத்தமுடியாமல் வாழ்க்கை இழந்து தற்கொலை செய்துகொள்ளும் நிலை ஏற்படும். அதன் மூலம் இந்தியா ஒரு சுடுகாடாக மாற்றப்படும். இந்த நிலைமைக்கு காரணம் என்ன? இந்திய அரசியல் அதிகாரம் ஒரு மையத்தில் குவிக்கப்பட்டதுதான் காரணமாகும். இதனை முன்கூட்டியே உணர்ந்த மார்க்சிய லெனினியவாதிகள் இந்தியாவிலுள்ள ஒவ்வொரு தேசிய இனங்களுக்கும் பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய தேசிய சுயநிர்ணய உரிமை வேண்டும் என்றனர். ஆனால் இந்திய திருத்தல்வாதிகள் தேசிய சுநிர்ணய உரிமை கொடுத்தால் ஒவ்வொரு தேசத்தையும் அதாவது மாநிலத்தையும் ஏகாதிபத்தியவாதிகளின் செல்வாக்கு உட்படுத்தி நாட்டை பிரித்துவிடுவார்கள் என்று ஓலமிட்டனர். ஆனால் அப்போதே மார்க்சிய லெனினியவாதிகள் இந்திய அரசை ஏகாதிபத்தியவாதிகள் ஆட்டிப்படைக்கிறார்கள் என்று சொல்லி திருத்தல்வாதிகளை எதிர்த்துப் போராட்டம் நடத்தினர். அதற்கு முன்பு தென்னிந்திய முதலாளிகளின் சபையினர் ஒரு மாநாடு நடத்தி பொருளாதாரத்தை இந்திய அளவில் திட்டமிடக்கூடாது என்றும் பிராந்திய அளவில்தான் திட்டமிட வேண்டும் என்று தீர்மானம் போட்டனர். அதனை ஆதரித்தவர்கள் திமுகவினர். ஆனால் பிரிட்டீஷார் வெளியேறிய பின்பு தமிழ் முதலாளிகளில் சிலர் அந்நிய முதலாளிகளோடு கூட்டுசேர்ந்து பெருமுதலாளிகளாக வளர்ந்த பின்பு பிரதேச உரிமையை கைவிட்டனர். அதனைத் தொடர்ந்து இந்த முதலாளிகளின் கட்சியான திமுகவும் தமிழ் தேசிய உரிமைகளை கைவிட்டுவிட்டது. தேசங்களுக்கு சுயநிர்ணய உரிமை வழங்குவோம் என்று வாக்குறுதியளித்த நேருவின் காங்கிரசும் அந்த வாக்குறுதியை கைவிட்டுவிட்டனர். ஆக மொத்தத்தில் இந்தியாவை ஆளுகின்ற கட்சிகள் அனைத்தும் தேசிய உரிமைகளைப் பறித்துவிட்டு உரிமைகள் அனைத்தையும் அமெரிக்க கார்ப்பரேட் முதலாளிகளின் காலடியில் போட்டுவிட்டு சரண்டைந்துவிட்டனர். இவர்களின் துரோகம் நாடு சுடுகாடாகப் போகிறது. உழைக்கும் வர்க்கம் இதனை எப்படி எதிர்கொள்ளப் போகிறது? பாராளுமன்ற பன்றித்தொழுவத்தின் மூலம் இந்தக் கொடுமையை தடுக்க முடியுமா? நிச்சயமாக முடியாது. சங்கிகளின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு வேறு யாருடைய ஆட்சியாக இருந்தாலும் அவர்கள் அனைவருமே உள்நாட்டு வெளிநாட்டு கார்ப்பரேட் முதலாளிகளின் நலன்களையே பாதுகாப்பார்கள். இதற்கு நாம் உடனடியாக செய்ய வேண்டியது காந்தி காட்டிய வழியில் அந்நிய பொருட்களை வாங்காமல் புறக்கணிப்பது, அதாவது அமைதி வழியில் மீண்டும் ஒரு சுதந்திரப் போராட்டத்தை நாடுதழுவிய அளவில் நடத்துவது. இந்திய ஒற்றை ஆட்சிக்கு மாற்றாக ஒவ்வொரு தேசிய இனங்களுக்கும் பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய தேசிய சுயநிர்ணய உரிமைக்காகவும் ஒவ்வொரு தேசமும் விரும்பி உருவாக்கப்படும் உண்மையான இந்திய கூட்டரசுக்காகவும் பிரச்சாரம் செய்து போராடுவது. வலிமை இருந்தால் அமெரிக்க பொருட்கள் இறக்குமதியை மக்களை திரட்டி தடுப்பது. இந்த மூன்று முறைகளிலும் போராடுவதன் மூலமே அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு நாடு அடிமையாவதை தடுக்கமுடியும். உழைக்கும் மக்களையும் நடுத்தர மக்களையும் மரணத்திலிருந்து பாதுகாக்க முடியும்.
No comments:
Post a Comment