இந்தியச் சாதியமைப்பு: தோற்றம், வளர்ச்சி மற்றும் மார்க்சியத் தீர்வு-1

 தோழர்களே

இரவு 8 மணிக்கு (01-02-2026) கிளப் அவுஸில் “சாதி அன்றும் இன்றும் மார்க்சிய பார்வையில்” விவாதிப்போம். உலகின் தோற்றம்; உயிரினங்களின் தோற்றம்; மனிதகுலத்தின் தோற்றம் விலங்கிலிருந்து மனிதனாக மாறிய வரலாற்று வளர்ச்சி மற்றும் அதனூடாக சமூக பொருளாதார அரசியல் காரணங்களையும் ஆராய்வோம். இன்றும் இந்தியாவில் காணும் சாதி அதன் இருப்பு ஒழிப்பு பல்வேறு கருத்துகள் நடைமுறைகள் அதன் சாத்தியபாடுகள் பற்றி விரிவாக விவாதிக்க உள்ளோம், தங்களின் கருத்துகளை பகிர்ந்துக் கொள்ள அழைகின்றோம். அவை ஆதார பூர்வமான வரலாற்று (தொல்லியல்/மற்றும் பிற) ஆதாரங்களின் அடிப்படையில் பேச அழைக்கிறோம். ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுகிழமை இரவு 8 மணிக்கு கிளப் அவுஸில் இதே விவாதம் தொடர்ந்து விவாதிப்போம் தெளிவடையும் வரை வாருங்கள் விவாதிக்க தோழர்களே  …


அறிமுகமாக:-  சாதியானது  இந்திய சமூகத்தில் பெரும் நோயாக, மனிதனை மனிதனாக மதியாத ஒரு தொற்று நோய் எங்கும் வியாபித்துக் கொண்டுள்ளது. இவை ஏன் என்ன? இவை இல்லாதொழிக்க என்ன வழிமுறை என்பதோடு இதுவரை இதனை பற்றி இந்திய சமூகத்தில் பல்வேறு முன்னோடிகள் அரசியல் தலைவர்கள் பேசாதிருக்கவில்லை. சாதிய ஒடுக்குமுறைக்கும் தீண்டாமை நடமுறைக்கும் எதிராக முற்போக்காளர்கள் பேசாமல் செயல்படாமல் இருக்க முடியாது.


இன்றும் சாதி இருப்பிற்கு காரணத்தையும் அதன் ஒழிப்பிற்கு என்ன வழிமுறை என்பதனையும், கடந்த கால படிப்பினைகளையும் இங்கே முன்வைத்து விவாதித்து தீர்வை காண்போம். சாதி பற்றிய புரிதலோடு இன்று நம் மத்தியில் ஏன் சாதி கோலோச்சுகிறது என்பதனையும் விரிவாக விவாதிப்போம்.


சாதி பற்றி பல்வேறு ஆதாரங்களை கொண்டு நாம் தேடும் பொழுது சாதியின் ஆதார தோற்றம் அதன் வளர்ச்சி மிகத் தெளிவாக வேளாண்மை உற்பத்தியில் மக்கள் சமூகம் ஈடுபடும் பொழுது தோன்றியதே. இந்த உழைப்பு பிரிவினை உலகிற்கே பொருந்தும். ஆனால் இந்தியா போன்ற நாட்டில் இன்றும் ஏன் உயிர்புடன் உள்ளது என்பதே நம் முன் உள்ள கேள்வி. அவை அரசின் அதிகார தேவைகாக உள்ளது சாதரணமாக கடந்து செல்லாமல் அதன் ஆழத்தை புரிந்துக் கொள்வோம்.

நீதிமன்றம் மத நிறுவனமான கோயில் நிர்வாகத்தின் செயலில் அரசின் இடர்பாடு இல்லை. கலாச்சார அங்கமான எல்லா நச்சு விச கிருமிகளையும் பிற்போக்கையும் மத நிறுவனம் வளர்த்து மக்கள் மூளையில் ஏற்றும் வேலையை காலகாலமாக செய்கிறது. அந்த நிறுவனத்தின் செயலில் எந்த ஆட்சியில் உள்ளவர்களும் தலையிடுவதில். மதத்தின் பெயரில் நடைபெறும் பிற்போக்கு பித்தலாட்டங்களும் தொடர்கதையாக உள்ளது. அதனை ஆளும் வர்க்கம் ஊற்றி வளர்க்கும் பிற்போக்கு பணியை திறம்பட செய்கிறது. அதில் ஒன்றுதான் மத நிறுவனங்களில் ஆட்சியாளர்கள் தலையிடுதலில்லை. ஆகையால் அதன் தன்னாட்சியின் வெளிபாடுதான் சனாதிபதியாக இருந்தாலும் சாதியின் அடிப்படையில் ஒடுக்கபட்ட பிரிவை சார்ந்தவராக இருப்பின் கோயிலில் நுழைவதை தடுக்கின்றனர். இதற்கான சட்டமுறை என்பது ஆளும் வர்க்க தேவைக்கானதே. அவை அடக்குமுறைக்கானதே அதன் ஒரு வடிவம்தான் இவை. இந்த அரசுதான் இந்த வடிவத்தை காக்கிறது. ஏற்றதாழ்வை கற்பித்து சாதிய மனோபவத்தை மக்கள் மத்தியில் துளிர்ப்புடன் வைத்துள்ளது. இந்த அரசையும் மத நிறுவனங்களையும் இல்லாதொழிக்க மற்றதெல்லாம் காணமல் போகும் கால போக்கில்… அதற்கான முதன்மையான பணி இந்த எல்லா அடக்குமுறை ஒடுக்குமுறைக்கும் காரணமான அரசமைப்பை இந்த அடக்குமுறை ஒடுக்குமுறையில்லா சுரண்டல் இல்லா அரசை உருவாக்க வேண்டும்.இங்குள்ள ஏற்றதாழ்வான சமூக அமைப்பில் உள்ள சாதியின் தோற்றம் ஒருவகையில் உழைப்பு சுரண்டலிலிருந்தே தோன்றியது. அதன் சமூக இருப்பானது அதிகாரம் படைத்த கூட்டம் ஏதுமற்ற சாதரண மக்களின் உழைப்பை சுரண்ட எதிர்த்து கேள்வி கேட்காமல் இருக்க மத சாயம். எல்லாம் வர்க்க சமூக ஒடுக்குமுறையின் வடிவங்களே. இந்த வர்க்க சமூகத்தை மாற்றி அமைக்காமல் தனியாக சாதி ஒழிப்பது என்பது சாதியின் விரிந்த பரப்பை புரிந்துக் கொள்ளாமையாக இருக்கும். 

இவ்வாறு ஒடுக்குமுறை தீண்டாமை காக்கும் கூட்டம் கூண்டோடு ஒழிக்கப்படுவதோடு, உழைப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வோ சமூக அமைப்பில் ஒடுக்குமுறைக்கான கருவி அவர்களின் கையிலிருந்து பறிக்கப்பட்டு உழைக்கும் மக்கள் கைகளில் இருக்கும் பொழுது இந்த ஏற்றதாழ்வு நிலை ஒழியும். உழைக்கும் மக்களுக்கான அரசு மட்டுமே உழைக்கும் மக்களை பாகுபாடின்றி பாதுகாக்கும் அவர்களின் நலனில் செயலாற்றும் பரந்துபட்ட சொத்தற்ற வர்க்க சொத்துடைய வர்க்கத்தின் கொடூரத்திலிருந்து விடுபட இந்த சமூக அமைப்பை மாற்றி அமைத்தால் இந்த கொடுமைக்களுக்கு முற்று புள்ளி வைக்கலாம் அதற்கான வழிமுறையாக உழைக்கும் மக்கள் கம்யூன் அல்லது சோவியத்துகளை கட்டி அவர்களின் ஒற்றுமையை பேணி எதிர்கால சமூக மாற்றதிற்கு தயார் படுத்தலாம். அதற்கான பணி உழைக்கும் மக்களை நேசிக்கும் கம்யூனிஸ்ட்டுகளால் மட்டுமே முடியும். 

இந்தப்பகுதியை ஒலி வடிவில் கேட்க இந்த இணைப்பை அழுத்தி கேட்கவும்

இந்தியச் சாதியமைப்பு: தோற்றம், வளர்ச்சி மற்றும் மார்க்சியத் தீர்வு

இந்த மூல உரை மார்க்சிய கோட்பாடுகளின் அடிப்படையில் சாதிய அமைப்பின் தோற்றம் மற்றும் அதன் நீட்சியை ஆய்வு செய்ய அழைப்பு விடுக்கிறது. இந்திய சமூகத்தில் நிலவும் இந்த படிநிலை அமைப்பு, அடிப்படையில் உழைப்புச் சுரண்டல் மற்றும் பொருளாதார வர்க்க முரண்பாடுகளிலிருந்து உருவானதாக இதில் விளக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் மத நிறுவனங்கள் அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ள சாதியப் பாகுபாடுகளைப் பாதுகாப்பதாக இந்த உரை குற்றம் சாட்டுகிறது. சாதிய ஒடுக்குமுறையை முழுமையாக வேரறுக்க வேண்டுமானால், தற்போதைய அதிகார வர்க்க கட்டமைப்பை மாற்றி உழைக்கும் மக்களுக்கான அரசை நிறுவ வேண்டும் என்று இது வலியுறுத்துகிறது. வரலாற்று மற்றும் தொல்லியல் ஆதாரங்களுடன் சாதி குறித்த ஆழமான விவாதங்களை முன்னெடுப்பதன் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று இந்த உரை நம்புகிறது. இறுதியாக, வர்க்கமற்ற சமூகத்தை உருவாக்குவதன் மூலமே சாதியற்ற சமத்துவத்தை எட்ட முடியும் என்பதே இதன் மையக்கருத்தாகும்.

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்