மார்க்சியப் புரட்சியும் திருத்தல்வாதத்திற்கு எதிரான கருத்தியல் போராட்டமும்
மார்க்சியத்தின் அடிப்படை கொள்கைகளைச் சிதைக்கும் திருத்தல்வாதம் மற்றும் சந்தர்ப்பவாதத்திற்கு எதிரான தத்துவார்த்தப் போராட்டத்தை ....தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரப் பாதையை முடக்கி, ஆளும் வர்க்கத்துடன் சமரசம் செய்துகொள்ளும் போலியான புரட்சி பேசும் கம்யூனிசப் போக்குகள் ....
குறிப்பாக, பெர்ன்ஸ்டீனின் சீர்திருத்தவாதக் கருத்துக்களை நிராகரித்து, லெனின் உருவாக்கிய புதிய வகையிலான போல்ஷ்விக் கட்சிக் கட்டமைப்பின் அவசியத்தை....
புரட்சிக்கான எந்த தயாரிப்பையும் செய்யாத ஆளும் வர்க்க கைதடிகளாய்போனவர்ளின் நோக்கமென்ன புரிந்துக் கொள்ள இந்தஇணைப்பில் உள்ளாஒலி மற்றும் ஒளி படத்தையும் அதற்கான இணைப்பில் காண்க தோழர்களே
இந்த ஆதாரங்கள் மார்க்சியத்தின் அடிப்படை கொள்கைகளைச் சிதைக்கும் திருத்தல்வாதம் மற்றும் சந்தர்ப்பவாதத்திற்கு எதிரான தத்துவார்த்தப் போராட்டத்தை வலியுறுத்துகின்றன. தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரப் பாதையை முடக்கி, ஆளும் வர்க்கத்துடன் சமரசம் செய்துகொள்ளும் போலி கம்யூனிசப் போக்குகளை இவை கடுமையாகச் சாடுகின்றன. குறிப்பாக, பெர்ன்ஸ்டீனின் சீர்திருத்தவாதக் கருத்துக்களை நிராகரித்து, லெனின் உருவாக்கிய புதிய வகையிலான போல்ஷ்விக் கட்சிக் கட்டமைப்பின் அவசியத்தை இக்கட்டுரை விளக்குகிறது. வெறும் சட்டரீதியான போராட்டங்களுடன் நின்றுவிடாமல், சுரண்டலற்ற சமூகத்தை அமைக்க பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமே இறுதி இலக்காக இருக்க வேண்டும் என்பது இங்கு சுட்டிக்காட்டப்படுகிறது. கட்சிக்குள் ஊடுருவும் தவறான சித்தாந்தங்களை விமர்சனம் மற்றும் சுயவிமர்சனம் மூலம் களைந்து, மார்க்சிய-லெனினிய வழியில் உழைக்கும் மக்களை அணிதிரட்ட வேண்டிய கடமையை இப்பாடம் முன்வைக்கிறது. இழிந்த சமூக அமைப்பை வீழ்த்தி விடுதலை பெற மார்க்சிய-லெனினிய-மாவோ சிந்தனையே சரியான வழிகாட்டி என்று இவ்விளக்கம் முடிகிறது.
மார்க்சியத்தில் திருத்தல்வாதம் (Revisionism) என்றால் என்ன மற்றும் அதன் பாதிப்புகள் யாவை?
லெனின் முன்மொழிந்த 'புதிய வகை கட்சி' எவ்வாறு மற்ற ஐரோப்பிய கட்சிகளிடமிருந்து வேறுபடுகிறது?
தொழிலாளர் வர்க்கத்தின் விடுதலைக்காக மார்க்சிய ஆசான்கள் காட்டும் புரட்சிகரமான வழிமுறைகள் எவை?
இந்த விவாதத்தை வீடியோவடிவில் இந்த இணைப்பில்
இந்தப் பகுதியை ஒலி வடிவில் கேட்க இந்த இணைப்பை அழுத்துங்கள் தோழர்களே
மார்க்ஸ் தலைகீழாக மார்க்சியத்தை விட்டு சென்றுவிட்டாராம் இதோ மனோகரன் அதனை நிமிர்த்து நிறுத்தி விட்டாராம்???அப்ப இவருக்கு இருக்குமறிவு அன்று லெனின் மாவோ போன்ற புரட்சியாளர்களுக்கு தெரியவில்லையா? இதனை பற்றி பேசுவதற்கு முன்னர் ஆசான் வார்த்தையை பார்ப்போம்
மார்க்சியவாதிகளைப் பற்றி எங்கெல்ஸ் இவ்வாறு சொல்கிறார், "மார்க்சின் மேற்கோள்களை எடுத்து அப்படியே கையாள்பர் மார்க்சிஸ்டு அல்ல, அந்த இடத்தில் மார்க்ஸ் இருந்தால் எப்படி சிந்திப்பாரோ அவ்வாறு சிந்திப்பவே மார்க்சியவாதி" என்பார்.
மார்க்ஸ் உலகில் உள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் ரெடிமேடாக பதிலை விட்டுச் செல்லவில்லை, ஒருவேளை அவ்வாறு விட்டுச்சென்றிந்தால் அது இயங்கியல் அல்ல ஆம் மார்க்சியமே ஆகாது.
மார்க்ஸ் மார்க்சியவாதிகளுக்கு கற்றுக்கொடுத்தது இந்த சமூகம் எவ்வாறு இயங்குகிறது, அதன் கட்டமைப்பு எவ்வாறு உள்ளது என்பதையும் அதனை ஆய்வு செய்யும் முறையையும், அதன் அடிப்படையில் ஆய்வு செய்து நாம் வாழும் சமூகம் எவ்வகையானது என்பதனை புரிந்துக் கொள்வது(மூலதனம் நூலில் முதலாளித்துவ பொருளுற்பத்தி இயங்கும் முறை) நமக்கு வழிகாட்டியதுதான்.
அவர் ஆய்வு செய்வதற்கு அரசியல் பொருளாதார சமூக இயக்கத்தின் தொடர்ப்புகளை அதன் இயங்கியல் உறவுகளை புரிந்துக் கொள்ள "இயக்கவியல் பொருள்முதல்வாதம், வரலாற்று பொருள்முதல்வாதம்" என்கிற தத்துவங்களை நமக்களித்தார் அதன் அடிப்படையாக கொண்டோரே மார்க்சியவாதிகள் ஆவர்.
மார்க்சியவாதிகளை விமர்சிப்பவர்கள் இரண்டு விடயங்களை மட்டுமே கைகொள்ள முடியும்:
அவரின் தத்துவபோதனையை தவறு என்று நிறுவ வேண்டும். இறுதியில் மார்க்சியமே தவறு என்றுகூறி ஏகாதிபத்திய கழிச்சடை குப்பைகளை நம் தலையில் ஏற்ற வேண்டும்.
இந்த பிரச்சினையை நாம் புரிந்துக் கொள்ள இங்குள்ள மார்க்சியவாதிகள், மார்க்சிய தத்துவ அடிப்படைகளை முழுமையாக புரிந்துகொள்வதில் உள்ள கோளாறே. மார்க்ஸ் நிறுவிய தத்துவப்படி நாம் தேடலை செய்ய வக்கற்று மார்க்சிற்கு கற்றுக் கொடுபவர்கள் நோக்கம் என்னே? மார்க்சியத்தை தவறாக புரிந்துக் கொண்டு அதனை தவறாக நடைமுறைப் படுத்தும் பொழுது மார்க்சியம் அல்ல தவறானவை அதனை புரிந்து நடைமுறை படுத்துவோரின் தவறே இதில் உள்ள தவறை தவறு என்று நிறுவதே எமது நோக்கம்
மேலும் மார்க்சியத்திற்கு முன்பு சமூகத்தை யாரும் சரியாக புரிந்துக்கொள்ள முடியவில்லை. மார்க்சியத்திற்கு பிறகே அது 100% சரியானதாக அறிவியல் பூர்வாக உள்ளது. பிரெஞ்சு புரட்சி செய்தவர்கள்கூட எந்த சமூகத்தை கட்டமைக்கப்போகிறோம் என்று புரிந்துக்கொண்டு செய்யவில்லை, தன்னெழுச்சியாக செயல்பட்டனர். முதல் தொழிலாளர் புரட்சியான 1871 பாரிஸ் கம்யூன்கூட 'உணர்வுபூர்வமாக' புரிந்துக்கொண்டு செய்ததல்ல. ஆனால் ரஷ்ய சோசலிச புரட்சியோ, சீனப் புரட்சியோ எந்த சமூகத்தை கட்டமைக்கப் போகிறோம் என்பதை திட்டமிட்டு 'உணர்வுபூர்வமாக' நடத்திய புரட்சியாகும்.=
மார்க்சியம் வெறும் தத்துவமாக இல்லாமல் நடைமுறையில் பிரயோகித்து சரிபார்க்கப்பட்டது. மார்க்சியத்திற்கு முன்பும் பின்பும் வேறோரு தத்துவம் இத்தகைய அறிவியல் தன்மையைப் பெற்றிருக்கவில்லை. அவ்வாறு இருக்கவும் முடியாது ஏனெனில் இந்த சமூக சுரண்டலை முற்றுபுள்ளி வைக்க மார்க்சியத்தினால் மட்டுமே முடியும்.
வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளான ஐரோப்பாவில் புரட்சி நடக்கவில்லை அதற்கு காரணம் என்ன? மார்க்சியத்திலுள்ள குறைபாடே என்று சில கழிசடைகள் ஓலமிடுகின்றன. ஆனால் உண்மை என்ன? ரஷ்யா மற்றும் சீனாவில் இந்த நாடுகள் முதலாளித்துவ வளர்ச்சி குன்றிய நாடுகளில் மார்க்சியத்தை பின்பற்றித்தானே புரட்சி நடந்தது. இந்த நாடுகளில் எப்படி புரட்சி நடந்தது?. மார்க்சியத்தில் குறை இருக்குமானால் ரஷ்யாவிலும் சீனாவிலும் புரட்சி நடந்திருக்கக்கூடாதே. ஆகவே மார்க்சியத்தின் மீது குறைசொல்லும் இந்த கழிசடைகளின் கருத்து தவறானது என்பதை நாம் எளிதில் புரிந்துகொள்ளலாம். மார்க்சியத்தில் இல்லை குறைபாடு. மார்க்சியவாதிகள் என்று சொல்லிக்கொள்பவர்களிடம்தான் குறை உள்ளது. இந்த உண்மையை இந்த கழிசடைகள் மூடிமறைத்து மார்க்சியத்தில் குறை உள்ளது என்றும் அதனை மாற்றி வாசிக்கவேண்டும் என்றும் அதாவது மார்க்சியத்தை திருத்தவேண்டும் என்கிறார்கள். மார்க்சியத்தை அடிப்படையில் பின்பற்றி செயல்பட்ட லெனினும் மாவோவும் வெற்றி பெற்றார்கள். ஐரோப்பிய சந்தர்ப்பவாதிகள் மார்க்சியத்தை திருத்தி செயல்பட்டவர்கள் தோல்வியடைந்தார்கள். இதுதான் உண்மை. ஆகவே தோழர்களே மார்க்சியத்தை மாற்றி வாசிக்கவேண்டும் என்று சொல்லும் கயவர்களை அடையாளம் கண்டு புறக்கணிக்க வேண்டும். மர்க்சியத்தை உள்ளது உள்ளபடி கற்று நாம் சந்திக்கும் குறிப்பான பிரச்சனையோடு பொருத்தி குறிப்பான கொள்கை முடிவெடுத்து செயல்பட வேண்டும் என்ற மார்க்சிய ஆசான்களது போதனைகளையே பின்பற்றி கூலிஅடிமைத்தனத்துக்கு முடிவுகட்டுவோம்.
தொடரும்....
No comments:
Post a Comment