மார்க்சிய-லெனினிய சோஷலிசப்புரட்சித் தத்துவத்தின் அடிப்படைகள்
இந்தக் கட்டுரையானது மார்க்சிய-லெனினியக் கோட்பாட்டின் அடிப்படைகளையும், சமூக மாற்றத்தில் சோஷலிசப் புரட்சியின் அவசியத்தையும் விரிவாக விளக்குகிறது. சமூக வளர்ச்சி என்பது உற்பத்தி சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் இடையிலான முரண்பாடுகளால் தீர்மானிக்கப்படுகிறது என்பதை இது வலியுறுத்துகிறது. வரலாற்றைப் படைப்பதில் உழைக்கும் மக்களின் தீர்மானமான பங்கினையும், முதலாளித்துவத்தை வீழ்த்தி புதிய சமூகத்தை உருவாக்க பாட்டாளி வர்க்கம் முன்னிற்க வேண்டிய தேவையையும் இப்பாடம் சுட்டிக்காட்டுகிறது. புரட்சியை வழிநடத்த ஒரு புரட்சிகரக் கட்சி அவசியம் என்றும், அது அதிகாரத்தைக் கைப்பற்றி பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிறுவுவதன் மூலமே சுரண்டலற்ற சமூகத்தை அமைக்க முடியும் என்றும் விவரிக்கப்பட்டுள்ளது. இறுதியாக, லெனின் இக்கோட்பாடுகளை எவ்வாறு அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றார் என்பதையும், இருபதாம் நூற்றாண்டின் உலகப் புரட்சிகளுக்கு இது எவ்வாறு அடிப்படையாக அமைந்தது என்பதையும் இக்கட்டுரை தெளிவுபடுத்துகிறது.
மார்க்சிய-லெனினியக் கொள்கையின்படி சமூகப் புரட்சி எவ்வாறு ஒரு புதிய பொருளாதார அமைப்பை உருவாக்குகிறது?
வரலாற்றை உருவாக்குவதில் உழைக்கும் மக்கள் மற்றும் பாட்டாளி வர்க்கத்தின் தீர்மானமான பங்கு என்ன?
சோஷலிசப் புரட்சியில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் மற்றும் ஜனநாயகத்தின் முக்கியத்துவத்தை விளக்குக.
முன்னுரை
சோஷலிஸ்ட் புரட்சியைப் பற்றிய தத்துவம் மார்க்சிய- லெனினிய விஞ்ஞானத்தின் மிக முக்கியமான பிரிவுகளில் ஒன்றாகும். கார்ல் மார்க்சும் பிரெடெரிக் எங்கெல்சும் அதன் அடிப்படைக் கோட்பாடுகளை 19ம் நூற்றாண்டில் வகுத்தளித்தனர்.
புரட்சியைப் பற்றிய மார்க்சியத் தத்துவத்தை அடியொற்றியுள்ள பொதுவான தத்துவஞான அடிப்படை, வரலாற்றைப் பற்றிய பொருள்முதல்வாதக் கண்ணோட்டமாகும்.
மார்க்சும் எங்கெல்சும் தத்துவஞானப் பொருள்முதல்வாதத்தையும் வளர்ச்சியின் தத்துவமான இயக்கவியலையும் வரலாற்றுத் துறைக்கு விரிவுபடுத்தினார்கள். பொருளாயத வாழ்க்கையின் உற்பத்தியும் மறுஉற்பத்தியுமே சமூக வாழ்க்கை மற்றும் அதன் வரலாற்று நிகழ்வுப் போக்கின் அடிப்படை என்பதை அவர்கள் எடுத்துக் காட்டினார்கள். சமூக- பொருளாதார அமைப்புக்களின் வளர்ச்சி மற்றும் மாற்றத்தின் இயற்கையான நிகழ்வுப் போக்குதான் வரலாறு. சமூக அமைப்புக்களின் முன்னேற்றம் இறுதிநிலையில் உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியை, உற்பத்தி உறவுகளும் உடைமை யும் தவறாமல் தம்மைத் தகவமைத்துக் கொள்ள வேண்டிய மட்டத்தைப் பொறுத்திருக்கிறது. ஆகவே உற்பத்தி உறவுகள் சமூகத்தின் அடிப்படையாக இருக்கின்றன, அதன் மீது மேற்கட்டுமானம் அதாவது அவற்றுக்குப் பொருத்தமான அரசியல், சட்டத்துறை மற்றும் இதர உறவுகளும் அமைப்புக்களும், சமூக உணர்வு மற்றும் சித்தாந்தம், இதரவற்றின் வடிவங்கள் நிறுவப்படுகின்றன. உற்பத்திச் சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் இடையில், ஒரு குறிப்பிட்ட சமூகக்தின் உற்பத்தி முறைக்கும் அதன் வடிவங்களுக்கும் இடையில் உள்ள புறநிலையான முரண்பாடு வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் அந்த சமூகத்தின் வாழ்க்கையில் தீவிரமான மாற்றங்களுக்கு, சமூகப் புரட்சிக்கு இட்டுச் செல்கிறது.
இந்த முரண்பாடு புரட்சியின் பொருளாயத அடிப்படையாக அமைகிறது. பழைய அமைப்பிற்குள் புதிய அமைப்பின் முன்நிபந்தனைகள் படிப்படியாக முதிர்ச்சியடைகின்ற நிகழ்வுப் போக்கைப் புரட்சி பூர்த்தி செய்கிறது, புதிய உற்பத்திச் சக்திகளுக்கும் பழைய உற்பத்தி உறவுகளுக்கும் இடையிலுள்ள முரண்பாட்டைக் தீர்க்கிறது, காலாவதியான உற்பத்தி உறவுகளையும் அவற்றைக் காத்துக்கொண்டிருக்கின்ற அரசியல் மேற்கட்டுமானத்தையும் நொறுக்கி உற்பத்திச் சக்திகளின் கூடுதலான வளர்ச்சிக்கு இடமளிக்கிறது.
மார்க்ஸ் தன்னுடைய அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு கருத்துரை என்ற நூலின் முன்னுரையில் வரலாற்றைப் பற்றிய பொருள்முதல்வாதக் கருத்கை மூலச் சிறப்பான முறையில் வகுத்தளித்தார். உற்பத்திச் சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் இடையிலுள்ள மோதலைத் தீர்ப்பதிலும் ஒரு சமூக-பொருளாதார அமைப்பிலிருந்து மற்றொன்றுக்கு மாறுவதிலும் சமூகப் புரட்சியின் சாராம்சம் அடங்கியிருக்கிறது என்பதை மார்க்ஸ் வலியுறுத்துகிறார்; “எந்தச் சமூக அமைப்பும் அதற்குப் போதுமான உற்பத்தி சக்திகள் அனைத்தும் வளர்ச்சியடைவதற்கு முன்பாக ஒரு போதும் அழிக்கப்படுவதில்லை; புதிய, உயர்வான உற்பத்தி உறவுகள் தாங்கள் நீடித்திருக்கக் கூடிய சுற்று வட்டத்துக்குள் முதிர்ச்சியடைவதற்கு முன்பே பழைய உற்பத்தி உறவுகளை ஒருபோதும் அகற்றுவதில்லை” என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
வரலாற்று நிகழ்வுப் போக்கின் புறநிலையான தன்மையை வலியுறுத்துகின்ற பொழுதே மார்க்சியம் வளர்ச்சியடைந்த புரட்சிகரக் தத்துவத்தின் மகத்தான பாத்திரத்தை வலி யுறுத்தி வர்க்கங்கள், கட்சிகள், கோஷ்டிகள் மற்றும் தனிநபர்களின் உணர்வுபூர்வமான நடவடிக்கைகளுக்கும் மாபெரும் முக்கியத்துவமளிக்கிறது. வரலாற்றில் மக்களுடைய பாத்திரத்தைப் பற்றி மார்க்சியத்தின் அடிப்படையான கோட்பாடுகள் மார்க்சும் எங்கெல்சும் கூட்டாக எழுதிய முதல் புத்தகமாகிய புனிதக் குடும்பத்தில் ஏற்கெனவே வகுத்தளிக்கப்பட்டன. பெருந்திரளான மக்கள், உழைக்கும்
மக்கள், தொழிலாளர்களும் விவசாயிகளும் சமூகத்தில் மிக முக்கியமான உற்பத்திச் சக்தியாக இருக்கின்றனர். அவர்கள் தமது உழைப்பின் மூலம் பொருளாயதச் செல்வம் அனைத்தையும் படைக்கிறார்கள், அவர்களே வரலாற்றை உண்மையாகப் படைப்பவர்கள்: “உற்பத்திக் கருவிகளனைத்திலுமே ஆகமிகப் பெரிதான உற்பத்திச் சக்தி புரட்சிகரமான தொழிலாளி வா்க்கமேயாகும்”
வரலாற்றின் முற்போக்கான வளர்ச்சியில் மக்களின் தீர்மானமான பாத்திரத்தின் முக்கியத்துவம் தொடர்ச்சியாக வளர்ச்சியடைந்து கொண்டிருக்கிறது. சமூகத்தில் ஏற்படுகின்ற கொந்தளிப்பு எவ்வளவு விரிவானதாகவும் ஆழமானதாகவும் இருக்கின்றதோ அந்த அளவுக்கு அதில் ஈடுபட்டிருக்கின்ற பெருந்திரளான மக்களும் எண்ணற்றவர்களாக இருக்கின்றார்கள். மக்களே சமூகப் புரட்சிகளை நிறைவேற்றுகிறார்கள். “சமுதாய அமைப்பின் பூரண மாற்றம் என்பது எங்கு ஒரு பிரச்சினையாக இருக்கிறதோ அங்கு மக்கள் திரளினர் தாமுங்கூட அதில் ஈடுபட்டிருக்க வேண்டும், அவர்கள் தாமே போராடி நிலைநாட்ட வேண்டியது என்ன, உடலும் உள்ளலும் ஒருசேர எதற்காக அவர்கள் பாடுபடுகிறார்கள் என்பவற்றை ஏற்கெனவே புரிந்து கொண்டிருக்க வேண்டும்” (மார்க்ஸ்,எங்கெல்ஸ் தே.நூல் 12 தொகுதிகளில் தொகுதி 2 பக்கம்
121) என்று 19ம் நூற்றாண்டின் பிற்பாதியில் நடைபெற்ற வர்க்கச் சண்டைகளின் விளைவுகளில் சிலவற்றை விமர்சித்த எங்கெல்ஸ் 1895இல் குறிப்பிட்டார். பொருளாயத உற்பத்தி விதிகள் மற்றும் உற்பத்திச் சக்திகள், உற்பத்தி உறவுகளின் இயக்கவியலை ஆராய்ந்த மார்க்சும் எங்கெல்சும் வர்க்கங்களாகப் பிரிந்திருக்கும் எல்லாச் சமூகங்களின் வளர்ச்சியின் பிறப்பிடம், இயக்கு சக்தி வர்க்கப் போராட்டமே என்பதை விளக்கினர். சமூகத்தின் வாழ்க்கையில் ஏற்படுகின்ற ஓவ்வொரு அரசியல், சமூக மற்றும் இதர மாற்றத்துக்குப் பின்னாலும் வர்க்கங்களுக்கு இடையிலான போராட்டம், சுரண்டப் படுபவர்களுக்கும் சுரண்டுகின்றவார்களுக்கும் இடையில் நடைபெறுகின்ற போராட்டம் முக்கியமான காரணியாக இருப்பதைப் பார்க்கும்படி மார்க்சியம் நமக்கு போதிக்கிறது. பகைநிலையான சமூக அமைப்புகளில் இந்தப் போராட்டத்தின் முடிவு நிலைகளாக சமூகப் புரட்சிகள் இருக்கின்றன. “இது நாள் வரையிலுமான சமுதாயங்களின் வரலாறு அனைத்தும் வர்க்கப் போராட்டங்களது வரலாறே ஆகும்... ஒடுக்குவோரும் ஒடுக்கப்படுவோரும் ஒருவருக்கொருவர் தீராப்பகை கொண்டோராய், ஒரு நேரம் மறைவாகவும் ஒருநேரம் பகிரங்கமாகவும், இடைவிடாப் போராட்டம் நடத்தி வந்தனர். இந்தப் போராட்டம் சமுதாயம் முழுவதன் புரட்சிகரப் புத்தமைப்பிலோ அல்லது போராடும் வர்க்கங்களின் பொது அழிவிலோதான் எப்போதும் முடிவுறலாயிற்று”. முதலாளி வர்க்கத்தை எதிர்த்துப் பாட்டாளி வர்க்கம் நடத்துகின்ற வர்க்கப் போராட்டம் தவிர்க்க முடியாத விதத்தில் தொழிலாளி வர்க்கத்தின் சமூகப் புரட்சிக்கு, சமூகப் புரட்சியின் மிக உயர்ந்த ரகமான சோஷலிஸ்ட் புரட்சிக்கு இட்டுச் செல்கிறது.
சமூகப் புரட்சிகள் சமூகத்தை உயர்ந்த வளர்ச்சிக் கட்டத்துக்கு, ஒரு புதிய சமூக, பொருளாதார அமைப்புக்கு வளர்த்துச் செல்கின்றன என்ற உண்மையில் மட்டும் அவற்றின் மாபெரும் வரலாற்று முக்கியத்துவம் அடங்கியிருக்கவில்லை; அவை சமூக, அரசியல் முன்னேற்றத்தை வலிமையான முறையில் விரைவுபடுத்துகின்றன என்ற உண்மையில் அவற்றின் முக்கியத்துவம் அடங்கியிருக்கிறது என்பதை மார்க்சும் எங்கெல்சும் எடுத்துக் காட்டினார்கள். மார்க்ஸ் பிரான்சில் வர்க்கப் போராட்டம் என்ற புத்தகத்தில் புரட்சிகளை “வரலாற்றின் என்ஜின்கள்(Marx Engles selected works, vol 1
page 277) என்று வர்ணித்தார்; அவை வளர்ச்சி வேகத்தை மிகவும் அதிகமான அளவுக்கு விரைவுபடுத்துகின்றன, மக்களின் வன்மையான படைப்புச் சக்திகளைக் கட்டவிழ்த்துவிடுகின்றன என்றார். சாதாரண நிலைமைகளில் பல பத்தாண்டுகள் அல்லது நூறாண்டுகள் கூட அவசியமாக இருக்கின்ற வேலைகளை புரட்சிகளின் மூலம் சில மாதங்களில் அல்லது வருடங்களில் நிறைவேற்றுவது சாத்தியம். அவை ஓடுக்கப்படுபவர்கள், சுரண்டப்படுபவர்களின் விழாவாகும். பெருந்திரளான மக்கள் புரட்சிகளின் போது சமூக ஓழுங்குமுறைகளைப் படைப்பதில் அதிகமான அளவுக்குச் சுறுசுறுப்பாகப் பாடுபடுவதைப் போல வேறு ஒரு போதும் பாடுபடுவதில்லை. புரட்சிகரமான கொந்தளிப்புக்கு அவசியமான பொருளாயத முன்நிபந்தனைகளைப் பற்றி மார்க்சும் எங்கெல்சும் ஜெர்மன் சித்தாந்தம் என்ற நூலில் எழுதுகின்றபொழுது “,.. ஒரு பக்கத்தில் உற்பத்திச் சக்திகள் இருக்க வேண்டும்,மறு பக்கத்தில் புரட்சிகரமான பெருந்திரளினர் உருவாகியிருக்க வேண்டும். அவர்கள் அன்றைக்கிருக்கும் சமூகத்தின் தனிப்பட்ட நிலைமைகளுக்கு எதிராக மட்டுமல்லாமல், அன்றைக்கிருக்கன்ற வாழ்க்கை சூழ்நிலைக்கும் அது அமைக்கப் பட்டிருக்கும் மொத்த நடவடிக்கைக்கும் எதிராகக் கிளர்ந்தாக வேண்டும்” ** என்று சுட்டிக் காட்டினார்கள்.
இக்கருத்துக்கள் இன்னும் விரிவான முறையில் கம்யூனிஸ்டூக் கட்சி அறிக்கையில் எடுத்துக் கூறப்படுகின்றன. மனிதகுலத்தின் வளர்ச்சியில் முதலாளித்துவம் ஓரு இயற்கையான கட்டம்; நிலப்பிரபுத்துவத்துடன் ஓப்பிடும்பொழுது அது முற்போக்கானது; ஆனால் வரலாற்று ரீதியில் அது தற்காலிகமான கட்டம்; அது இன்னும் சிறப்பான முறையில் அமைக்கப்பட்ட சமூக உறவுகளுக்கு இடங்கொடுக்கும். முதலாளித்துவ சமூகம் பிரம்மாண்டமான உற்பத்தி சக்திகளைப் படைக்கின்ற பொழுது தன்னுடைய சொந்த அழிவுக்கும் வழிவகுத்துக் கொண்டிருக்கிறது. அது தனக்குச் சவக்குழி தோண்டுபவரை, பாட்டாளி வர்க்கத்தைப் பிரசவித்திருக்கிறது. உழைப்புக்கும் மூலதனத்துக்கும் இடையிலுள்ள போராட்டம் சர்வாம்சம் கொண்டது; அது உலகளாவிய தன்மையைக் கொண்டிருக்கிறது. வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட கட்டத் தில் உற்பத்திக் கருவிகளின் தனியுடைமை உற்பத்திச் சக்திகளின் மீது மாட்டப்பட்ட விலங்காக மாறிவிடுகிறது. சோஷலிசப் புரட்சி முதலாளித்துவத்தை அழிப்பகைத் தவிர்க்க முடியாததாக்குகிறது. வளர்ச்சியுற்றுக்கொண்டிருக்கும் உற்பத்திச் சக்திகளுக்கும் காலாவதியான முதலாளி வர்க்க உற்பத்தி உறவுகளுக்கும் இடையில் ஏற்படுகின்ற மோதலே சோஷலிசப் புரட்சிக்குப் பொருளாதார அடிப்படையாகும்,
முதலாளித்துவ சமுதாயத்தில் தலைமையான உற்பத்திச் சக்தியான பாட்டாளி வர்க்கத்துக்கும் கூலியுமைப்பின் மூலம் படைக்கப்படுகின்ற உற்பத்தியில் பெரும்பகுதியை சுவீகரித்துக் கொள்கின்ற முதலாளி வர்க்கத்துக்கும் இடையிலுள்ள சமரசப்படுத்த முடியாக முரண்பாடு அதன் சமூக, வர்க்க அடிப்படையாக இருக்கிறது.
பாட்டாளி வர்க்கப் புரட்சியே முதலாளித்துவ சமூகத்தை மாற்றியமைப்பதற்குச் சாத்தியமான ஒரே வழியாகும். முதலாளித்துவத்தினால் வளர்க்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான உற்பத்தி சக்திகளுடன் உற்பத்தி உறவுகளைப் பொருந்தச் செய்வது, அதன் மூலம் சமூகம் மேலும் வளர்ச்சியடைகின்ற நிலைமைகளைத் தோற்றுவிப்பது, இயற்கைச்சக்திகளை ஆட்சி புரியும் நிலைமையைப் பெறுதல், தனிநபருடைய முழு வளர்ச்சி, தனிநபர் மற்றும் சமூக நலன்களுக்கிடையில் ஒத்திசைவான இணைப்பை ஏற்படுத்துவது அதன் நோக்கமாகும். முந்திய புரட்சி எதுவுமே மனிதனை மனிதன் சுரண்டுவதை ஓழிக்கவில்லை; அதன் வடிவங்கள் மட்டுமே மாறின. பாட்டாளி வர்க்கப் புரட்சி எல்லாவிதமான சுரண்டலையும் ஒழிக்கிறது, உற்பத்திக் கருவிகளின் பொது உடைமையைக் கொண்டுவருகிறத--- மற்ற புரட்சிகளுக்கும் இதற்கும் உள்ள அடிப்படையான வேறுபாடு இதுவே. மார்க்ஸ் எழுதிய முக்கியமான நூல், அவர் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டு எழுதிய மூலதனம் சோஷலிஸ்ட் புரட்சி தவிர்க்க முடியாதது என்பதற்கு மிகவும் அடிப்படையான பொருளாதார நிரூபணக்தைக் தருகிறது.
“இந்த மாற்றச் செய்முறையின் அனுகூலங்களனைத்தையும் அபகரித்து ஏகபோகமாக்கிக் கொள்ளும் மூலதனப் பெருமுதலைகளின் எண்ணிக்கை இடையறாது குறைவதோடு கூட,
துன்பம், ஒடுக்குமுறை, அடிமைத்தனம், சீரழிவு, சுரண்டல் ஆகியவற்றின் அளவும் அதிகரிக்கிறது, ஆனால் இத்தோடு, எப்போதுமே எண்ணிக்கையில் அதிகரித்துக் கொண்டிருப்பதும் முதலாளித்துவ உற்பத்திச் செய்முறையின் இயங்கமைப்பாலேயே கட்டுப்பாடுடையதாக்கப்பட்டு ஒன்றுபடுத்தப்பட்டு ஸ்தாபன ரீதியாக்கப்படுவதுமான தொழிலாளி வர்க்கத்தின் எதிர்ப்புக்கிளர்ச்சியாக வளர்கிறது.
மூலதனத்தின் ஏகபோகம், அதனோடு சேர்ந்து அதன் கீழ்ப் பிறந்து மலர்ந்துள்ள உற்பத்திச் செய்முறைக்குப் பூட்டிதோர் விலங்காகிறது. உற்பத்திச் சாதனங்கள் மையப்படுவதும் உழைப்புச் சமுதாய ரீதியாவதும், அவற்றின் முதலாளித்துவ ஓட்டுக்குப் பொருந்தி வராத ஒரு கட்டத்தைக் கடைசியில் எட்டுகின்றன. இவ்வாறு ஓடு உடைத்தெறியப் படுகிறது. முதலாளித்துவக் தனிச்சொத்தின் சாவுமணி ஒலிக்கிறது. பறிமுதல்காரர்கள் பறிமுதல் செய்யப்படுகின்றனர்”
அடிப்படையான உற்பத்திச் சாதனங்களில் பொது உடைமையை நிறுவும்பொழுது சோஷலிஸ்ட் புரட்சி மொத்த சமூகத்தையும் மாற்றியமைக்கிறது என்று மார்க்ஸ் வலி யுறுத்துகிறார். புறநிலையான பொருளாதார விதிகளின் தன்னியல்பான, குருட்டுக் தனமான நடவடிக்கைக்குப் பதிலாக அவை உணர்வு பூர்வமாகப் பயன்படுத்தப்படுகின்றன; சமூகத்தின் ஒவ்வொரு உறுப்பினர் மற்றும் சமூகம் முழுவதின் நன்மைக்காகவும் சமூக உற்பத்தி திட்டமிட்ட முறையில் ஒழுங்குபடுத்தப்படுகிறது.
முதலாளித்துவத்தின் வீழ்ச்சி தவிர்க்க முடியாதது என்று விஞ்ஞான ரீதியாக நிரூபித்து விட்டால் அது தன்னளவில், தானாகவே நடைபெறும் என்று அர்த்தமல்ல. மனிதர்களின் உணர்வு அல்லது சித்தத்துக்குச் சம்பந்தமில்லாத புறநிலையான முன்நிபந்தனைகளைத் தவிர உணர்வு பூர்வமான, புரட்சிகர வெகுஜன நடவடிக்கைகளும் அவசியம். காலாவதியான முதலாளித்துவ உற்பத்தி முறைகளை ஒழிப்பதற்கு, தமது ஆதிக்கத்தின் இந்த அடிப்படையைப் பாதுகாக்கின்ற ஆளும் வர்க்கத்தினருடைய பலத்தை நொறுக்க வேண்டும்; அதற்குப் புரட்சிகர சக்தி அவசியம். மார்க்சும் எங்கெல்சம் சோஷலிஸ்ட் புரட்சியின் அவசியத்தை நிரூபித்ததோடல்லாமல் இந்த மிகப் புரட்சிகரமான கடமையை வரலாறு எந்த சமூக சக்தியிடம் ஒப்படைத்திருக்கிறது என்பகையும் எடுத்துக்கூறினார்கள். தொழிலாளி வர்க்கம், பாட்டாளி வர்க்கமே இந்த சக்தி. “மனிதகுலத்தின் மறுமலர்ச்சி” அதனிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது என்று மார்க்ஸ் கூறினார்.
பாட்டாளி வர்க்கத்தின் உலகு தழுவிய வரலாற்றுக் கடமையை கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை அசாதாரணமான வன்மையுடனும் ஆழத்துடனும் எடுத்துரைக்கிறது. முதலாளித்துவமே தொழிலாளி வர்க்கத்தைப் பிரசவிக்கிறது, தொழில் வளர்ச்சி முன்னேற்றத்துக்கு நேரடியான விவகாரதில் தொழிலாளி வர்க்கம் அதிகரிக்கிறது, வளர்ச்சியடைகிறது, தன்னை ஒன்று படுத்திக்கொண்டு அமைப்பு ரீதியாகத் திரட்டிக் கொள்கிறது. மூலதனத்தின் கூலியுழைப்பு என்ற பாட்டாளி வர்க்கத்தின் புறநிலையான நிலைமை கூலியுழைப்பு என்ற மொத்த அமைப்புக்கும் அதை சமரசப்படுத்த முடியாத எதிரியாக்குகிறது. ஒடுக்கப்படுகின்ற இதர வர்க்கங்கள் பிரிந்து, சிதறிவிடுகின்ற பொழுது தொடர்ச்சியாக வளர்ச்சியடைகின்ற இந்த வர்க்கம் ஒன்றே சுரண்டலின் எல்லா வடிவங்களுக்கும் ஒடுக்கு முறையின் ஒவ்வொரு ரகத்துக்கும் ஊசலாட்டமின்றி நிலையான தன்மையுடன் சமரசமில்லாத எதிரியாக இருக்கிறது.
முதலாளித்துவத்துக்கு எதிராகத் தொழிலாளி வர்க்கத்தின் போராட்டம் அதன் சொந்த விடுதலையை மட்டும் நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை; அதன் நலன்கள் உழைக்கும் மக்களின் மிக விரிவான பகுதிகளின் நலன்களுடன் பொருந்தியிருக்கின்றன. முதலாளித்துவத்தின் கீழ் விவசாய வர்க்கத்துக்கும் நகரக் குட்டிமுதலாளி வர்க்கத்துக்கும் நலிவையும் அழிவையும் தவிர வேறு எந்த வழியுமில்லை; மூலதனத்தின் ஆட்சியைத் தூக்கியெறிகின்ற போராட்டத்தில் பாட்டாளி வர்க்கத்துடன் அணிவகுப்பதே அவர்களுக்கு ஒரே வழியாகும். பாட்டாளி வர்க்கம் சமூக மற்றும் தேசிய அடிமைத் தனத்தின் எல்லா வடிவங்களையும் நிரந்தரமாக ஓழிக்காமல், அதன் மூலம் சமூகம் முழுவதையும் விடுவிக்காமல், தன்னை விடுவித்துக்கொள்ள முடியாது. அதனால்தான் தனக்குச் சொந்த உடைமை இல்லாத இந்த வர்க்கம், முதலாளித்துவ சமூகத்தின் கேந்திரமான நகரங்களில் குவிக்கப்பட்டிருக்கும் இந்த வர்க்கம், ஒன்று சேர்ந்து, அமைப்பு ரீதியாக்கப்பட்டு அடிப்படையான நலன்களை நன்கறிந்துள்ள இந்த வர்க்கம் முழூ சமூக விடுதலை, சோஷலிசம் மற்றும் கம்யூனிசத்துக்கும் நடைபெறுகின்ற போராட்டத்தில் எல்லா உழைக்கும் மக்களின் முன்னணிப் படையாகவும் தலைவனாகவும் இருக்கிறது. இது இப்பொழுது பன்முறை நடைமுறையில் நிரூபிக்கப்பட்டிருப்பதை வரலாறு எடுத்துக்காட்டுகிறது. “உலகத் தொழிலாளர்களுக்கு அவர்களுடைய பாத்திரத்தை, அவர் னுடைய கடமையை, அவர்களுடைய பணியை அதாவது மூலதனத்துக்கு எதிரான புரட்சிகரப் போராட்டத்தில் முதலில் கிளர்ந்தெழ வேண்டும், இந்தப் போராட்டத்தில் அனைத்து உழைக்கின்ற மக்களையும் சுரண்டப்படுகின்ற மக்களையும் தன்னைச் சுற்றித்திரட்ட வேண்டும் என்பதைச் சுட்டிக் காட்டியது மார்க்ஸ், எங்கெல்சின் மாபெரும் வரலாற்றுச் சிறப்பாகும்” என்று லெனின் எழுதினார்.
உழைப்புக்கும் மூலதனத்துக்கும் இடையில் நடைபெறுகின்ற போராட்டத்தின் உலகு தழுவிய பரிமாணம் பாட்டாளி வர்க்க இயக்கத்தின் சர்வதேசத் தன்மையை நிர்ணயிக் கிறது. பாட்டாளி வர்க்கத்தின் வெற்றிக்கு மிக முக்கியமான நிபந்தனைகளில் ஒன்று அதன் புரட்சிகர நடவடிக்கைகள் சர்வதேச மயமாக்கப்பட வேண்டும் என்பதாகும்.
மார்க்சும் எங்கெல்சும் சர்வதேசத் தொழிலாளர் சங்கத்தை நிறுவிய பொழுது *“வெவ்வேறு நாடுகளில் தொழிலாளி வர்க்கத்தின் விடுதலைக்காக இப்பொழுது நடைபெறுகின்ற தொடர்பில்லாத முயற்சிகளை ஒன்றுகூட்டிப் பொதுமைப்படுத்துவது, பாட்டாளி வர்க்க சர்வதேசியவாதக் கோட்பாடுகளை முரணில்லாமல் பின்பற்றுவது அச்சங்கத்தின் நோக்கம் என்றனர்**. தேசியக் குறுகிய மனம், இந்தக் கோட்பாடுகளைப் புறக் கணித்தல் அல்லது மீறுதல் சர்வதேசத் தொழிலாளர் இயக்கத்தை மட்டுமின்றி, எல்லாவற்றுக்கும் மேலாக, அதன் தனித்தனியான தேசியப் பிரிவுகளுக்கு ஊறு விளைவிக்கும். “வெவ்வேறு நாடுகளையும் சேர்ந்த தொழிலாளர்களுக்கிடையே இருக்க வேண்டிய, விடுதலைக்கான எல்லாப் போராட்டத்திலும் அவர்கள் ஒருவரோடொருவர் உறுதியாகச் சேர்ந்து நிற்குமாறு தூண்ட வேண்டிய சகோதரப் பிணைப்பை அலட்சியம் செய்வது அவர்களுடைய தொடர்பில்லாத முயற்சிகளின் பொதுவான தோல்வியினால் தண்டிக்கப்படும் என்பதைக் கடந்த கால அனுபவம் எடுத்துக் காட்டியிருக்கிறது”(மா-எ தே.நூ தொ-5 ப23) என்று மார்க்ஸ் சர்வதேசத் தொழிலாளர் சங்கத்தின் துவக்க அறிக்கையில் எழுதினார். மூலதனத்தின் சர்வதேச பலத்தையும் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த முதலாளி வர்க்கம் பாட்டாளி வர்க்கத்துக்கு எதிராக நடத்துகின்ற ஒன்றுபட்ட முயற்சிகளையும் தொழிலாளி வர்க்கத்தின் சர்வதேச ஒற்றுமையினாலும் ஒருமைப்பாட்டினாலும் எதிர்க்க வேண்டும். அதன் வெற்றிக்கு அது அவசியமான நிபந்தனை. “தொழிலாளி வர்க்கத்தின் சர்வதேசக் கூட்டைத் தவிர வேறு எதுவும் அதன் திட்டவட்டமான வெற்றியை உறுதிப்படுத்த முடியாது”(மா-எ. தொகு- பெர்லின்)
கம்யூனிஸ்ட் கட்சி பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகரமான, உணர்வு பூர்வமான முன்னணிப் படை, அதன் அமைப்பாளி, தலைவன் என்ற தத்துவத்தின் அடிப்படைகளை மார்க்சும் எங்கெல்சும் வகுத்தளித்தனர். அத்தகைய கட்சிக்குத் தலைமை தாங்குவது தொழிலாளி வர்க்கத்தின் உலகு தழுவிய வரலாற்றுக் கடமையை நிறைவேற்றுவதற்கு மிகவும் அவசியமான நிபந்தனை என்பதை அவர்கள் எடுத்துக் காட்டினார்கள். இத்தகைய தலைமை இல்லாமல் சோஷலிஸ்ட் புரட்சி வெற்றி பெற முடியாது, புதிய சமூகத்தை நிர்மாணிக்கவும் முடியாது. “தீர்மானமான தினத்தன்று வெற்றிபெறுகின்ற அளவுக்குப் பாட்டாளி வர்க்கம் வலிமையோடிருக்க வேண்டுமென்றால் அது மற்ற எல்லாக் கட்சிகளிலிருந்தும் வேறுவிதமான, அவற்றை எதிர்க்கின்ற தனிக் கட்சியை உணர்வு பூர்வமான, வர்க்கக் கட்சியை அமைத்துக்கொள்ள வேண்டும்; நானும் மார்க்சும் 1847ம் வருடத்திலிருந்தே இதை வலியுறுத்தி வந்திருக்கிறோம்” என்று எங்கெல்ஸ் 1889இல் எழுதினார். “புரட்சி வெற்றி பெற வேண்டுமென்றால் தொழிலாளி வர்க்கம் தக்க முறையில் ஸ்தாபனமாகத் திரட்டப்பட்டிருக்க வேண்டும். பாட்டாளி வர்க்கம் தன்னுடைய போராட்டத்தின் இறுதி இலட்சியங்கள் எவை என்பதை உணராமலேயே தானாகவே இயங்கத் தொடங்குகிறது. இந்தப் போராட்ட நிகழ்வினூடே பாட்டாளி வர்க்க ஸ்தாபனத்தின் பல்வேறு வடிவங்கள், உதாரணமாக, அதன் பொருளாதார நலன்களை உயர்த்திப் பிடிக்கின்ற தொழிற்சங்கங்கள் மற்றும் இதரவையும் அமைக்கப்படுகின்றன.
தொழிலாளி வர்க்கம் தன்னைப் பின்பற்றுகின்ற சமூகப் பகுதியினருடன், விவசாய வர்க்கம், அறிவுஜீவிகள் மற்றும் உழைக்கும் மக்களின் இதர பாட்டாளி வர்க்கம் அல்லாத பகுதியினருடன் முன்னேறிச் செல்வதற்கு உதவி புரிகின்ற புரட்சிகரமான கட்சிதான் வர்க்க ஸ்தாபனத்தின் மிக உயர்ந்த வடிவமாகும். கட்சி தொழிலாளர் இயக்கத்திற்குள் விஞ்ஞான ரீதியான உலகக் கண்ணோட்டத்தைக் கொண்டு வந்து அதன் மூலம் தன்னுடைய மாபெரும் வரலாற்றுக் கடமையை உணர்ந்த தலைமையான சமூக சக்தியாக அதை ஆக்குகிறது. வர்க்கப் போராட்டத்துக்கு, புரட்சிக்கு, ஓரு புதிய சமூகத்தை நிர்மாணிப்பதற்குத் தலைமை தாங்குகின்ற தகுதி கட்சிக்கு மட்டுமே உண்டு பாட்டாளி வர்க்கக் கட்சியைப் பற்றிய தத்துவத்தின் அடிப்படையான கோட்பாடுகள் கம்யூனிஸ்டுக் கட்டு அறிக்கையில் வகுத்தளிக்கப்பட்டன. அறிக்கையின் ஆசிரியர்கள் “மற்ற எல்லோரையும் முன்னே உந்தித் துள்ளுகின்ற: தொழிலாளி வர்க்கத்தின்: மிகவும் வளர்ச்சியடைந்த, உறுதியான” பகுதியாகக் கட்சியைக் கருதினார்கள்*;
அவர்கள் அதன்மூலம் கட்சிக்கும் வர்க்கத்துக்கும் இடையிலான உறவு நிலையை எடுத்துக்காட்டிக் கட்சியின் நோக்கங்களையும் கடமைகளையும் வரையறுத்துக் கூறினார்கள். கட்சி தொழிலாளி வர்க்கத்துடன் பிரிக்க முடியாதபடி. இணைக்கப்பட்டிருக்க வேண்டும்; மிகவும் வளர்ச்சியடைந்த தத்துவத்தைக் கொண் டிருக்க வேண்டும்; இயக்கத்தின் நிலைமைகளையும் வழியையும் அது புரிந்திருக்க வேண்டும்; மற்ற தொழிலாளர்களைக் காட்டிலும் நெடுந்தொலைவைப் பார்க்க வேண்டும்; அதன் வர்க்கத்தின் மிகவும் உணர்வு பூர்வமான, சுறுசுறுப்பான பகுதியாக இருக்க வேண்டும். வெவ்வேறு கட்டங்களில், பாட்டாளி வர்க்கத்தின் உடனடியான இலட்சியங்களுக்கும் நலன்களுக்கும் போராடுகின்ற பொழுது கம்யூனிஸ்டுகள் “இயக்கத்தின் எதிர்காலத்தையும் உயர்த்திப் பிடிக்கிறார்கள்”. அவர்கள் தொழிலாளி வர்க்கம் முழுவதின் மிகப் பொதுவான நலன்களை, இயக்கம் முழுவதின் நலன்களை எடுத்துரைக்கிறார்கள். கட்சி இல்லாமல் தொழிலாளி வர்க்கம் அதிகாரத்தை வென்றெடுப்பதோ அல்லது சமூகத்தை அடிப்படையாக மாற்றியமைப்பதோ முடியாது என்று அறிக்கை முடிவாகக் கூறியது. இதற்குப் பின்னர் நடைபெற்ற சம்பவங்கள் இதை முழுமையாக நிரூபித்தன. பாரிஸ் கம்யூன் தோல்வியடைந்ததற்கு முக்கியமான கார ணங்களில் ஒன்று அந்த இயக்கத்தை வழிநடத்தும் சக்தியாக ஒரு பாட்டாளி வர்க்கக் கட்சி இல்லை என்பதாகும்.
1847ம் வருடத்திலிருந்து மார்க்சும் எங்கெல்சும் பாட்டாளி வர்க்கக் கட்சியின் செயல்திட்ட மற்றும் அமைப்புக் கோட்பாடுகளை விரித்துக்கூறிப் பல புத்தகங்களை எழுதினார்கள். பாட்டாளி வர்க்கத்தின் முதல் சர்வதேச ஸ்தாபனமாகிய கம்யூனிஸ்ட் கழகம்- அது விஞ்ஞான கம்யூனிசத்கைத் தன்னுடைய சித்தாந்தமாகப் பிரகடனம் செய்தது; சர்வதேசத் தொழிலாளர் சங்கம் (முதலாவது அகிலம்)-—பாட்டாளி வர்க்க அரசை நிறுவுவதற்கு வரலாற்றில் செய்யப்பட்ட முதல் முயற்சியான பாரிஸ் கம்யூனுக்குத் தொழிலாளர்களைச் சித்தாந்த ரீதியில் தயாரித்தது; பல நாடுகளில் மார்க்சியக் கோட்பாடுகளின் அடிப்படையில் தொழிலாளர்கள் கட்சிகள் நிறுவப்படுதல்; இரண்டாவது அகிலத்தை (1889) நிறுவுவதில் எங்கெல்சின் பங்கு- தொழிலாளி வர்க்கக் கட்சிகளை நிறுவுவதில் மார்க்ஸ், எங்கெல்சும் நிறைவேற்றிய பணியில் முக்கியமான மைல்கற்கள் இவை. பிரெஞ்சுத் தொழிலாளர் கட்சியின் வேலைத்திட்டத்தின் (1880)
முன்னுரையை எழுதிய பொழுது மார்க்ஸ் இந்த அனுபவத்தைக் தொகுத்துக் கூறினார்: சோஷலிஸ்ட் புரட்சி “ஒரு சுயேச்சையான அரசியல் கட்சியாக அமைக்கப்பட்ட உற்பத்தியாளர்களின் வர்க்கம் அதாவது பாட்டாளி வர்க்கத்தினரின் புரட்சிகரமான நடவடிக்கையில் மட்டுமே... நடைபெறமுடியும்; அத்தகைய ஸ்தாபனத்தை அமைப்பதற்குப் பாட்டாளி வர்க்கத்துக்குக் கிடைக்கக் கூடிய எல்லாச் சாதனங்களையும் உபயோகிக்க முயற்சிப்பது அவசியம்””(மா-எ பெர்லின்), முதலாளி வர்க்கத்துக்கும் பாட்டாளி வர்க்கத்துக்கும் இடையில் வர்க்க ரீதியில் ஒத்துழைப்பு மற்றும் முதலாளித்துவம் சமாதானமான முறையில் சோஷலிசமாக வளர்ச்சியடைதல் ஆகிய சீர்திருத்தவாதக் கருத்துக்களை மார்க்சும் எங்கெல்சும் அம்பலப்படுத்தினார்கள்; வர்க்கப் போராட்டத்தைப் பற்றிய புரட்சிகரத் தத்துவத்தை சந்தர்ப்பவாதிகள் திரித்துக் கூறுகிறார்கள், உண்மைக்குப் பதிலாகப் போலியைக் காட்டுகிறார்கள் என்று அவர்கள் இதை விமர்சித்தார்கள். சோஷலிஸ்ட் புரட்சியும் தொழிலாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்கை வென்றெடுப்பது சமாதான முறையில் அல்லது சமாதானம் அல்லாது முறையில், எத்தகைய வடிவத்தை எடுத்தபோதிலும்- வர்க்கங்கள் இல்லாக, மனிதனை மனிதன் சுரண்டுதல் இல்லாத புதிய சமூகத்தை நிர்மாணிக்கக் கூடிய நிலைமைகளைப் படைக்க முடியும்.
பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் சோஷலிஸ்ட் புரட்சித் தத்துவத்துக்கு மையமாக இருக்கிறது. புரட்சியைப் பாதுகாப்பதற்கு, அதன் சாதனைகளை நிலைநிறுத்துவதற்கு, தூக்கியெறியப்பட்ட வர்க்கங்கள் முதலாளித்துவத்தை மறுபடியும் கொண்டுவருவதற்குச் செய்கின்ற முயற்சிகளை முறியடிப்பதற்குப் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் அவசியமாக இருக்கிறது. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் இல்லாமல் சுரண்டுகின்ற வர்க்கங்களின் எதிர்ப்பை நசுக்குவதும் ஒரு புதிய சமூகத்கை நிர்மாணிப்பதற்கு அவசியமான சமூக, பொருளாதார நடவடிக்கைகளை நிறைவேற்றுவதும் இயலாது. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்றாலே புரட்சியின் முக்கியமான பிரச்சினை, அதாவது அதிகாரத்தைப் பற்றிய பிரச்சினை தொழிலாளி வர்க்கத்துக்கும் உழைக்கும் மக்களுக்கும் சாதகமான முறையில் தீர்க்கப்படுகிறது என்று பொருள். பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத் தத்துவம் தொழிலாளி வர்க்கத்தின் உலகு தழுவிய வரலாற்றுக் கடமையைப் பற்றிய தத்துவத்தை ஸ்தூலமான முறையில் மேலும் விரித்துரைப்பதைப் பிரதிநிதித்துவம் செய்கிறது.
தொழிலாளி வர்க்கம் அதிகாரத்தை வென்றெடுக்க வேண்டிய அவசியம், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தைப் பற்றிய கருத்து முதல் தடவையாக ஜெர்மன் சித்தாந்தத்தில் முன்வைக்கப்பட்டது: “*,.. ஆதிக்கத்தை நோக்கமாகக் கொண்டிருக்கின்ற ஒவ்வொரு வர்க்கமும்-— பாட்டாளி வர்க்கத்தைப் போல அந்த ஆதிக்கம் சமூகத்தின் பழைய வடி வத்தை மொத்தமாகவும் பொதுவாக ஆதிக்கத்தையும் ஒழிப்பதற்கு இட்டுச் செல்கின்ற பொழுதும் கூட- முதலில் அரசியல் அதிகாரத்தை வென்றெடுக்க வேண்டும்” ( Marx and Engels, Collected Works,
Vol. 5, Moscow, 1976, p. 47. ), கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை முழுவதிலும் இக்கருத்து விரவிநிற்கிறது. “பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்” என்ற சொற்றொடர் இன்னும் தோன்றவில்லை (மார்க்ஸ் 1850இல் பிரான்சில் வர்க்கப் போராட்டம் என்ற புத்தகத்தில் அதை முதல் தடவையாக உபயோகிக்கிறார்);
ஆனால் இந்த அடிப்படை யான செயல்திட்டக் கோட்பாடு தெளிவாகவும் உறுதியாகவும் வகுத்தளிக்கப்பட்டது: “ “பாட்டாளி வர்க்கத்தை ஆளும் வர்க்கத்தின் நிலைக்கு உயரச் செய்வதுதான், ஜனநாயகத்துக்கான போரில் வெற்றி ஈட்டுவதுதான் தொழிலாளி வர்க்கம் நடத்தும் புரட்சியின் முதலாவது படி.”(
கா. மார்க்ஸ், பி. எங்கெல்ஸ், கம்யூனிஸ்டுக் கட்சிஅறிக்கை, முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ, 1975,பக்கம் 77)
தொழிலாளி வர்க்கத்தின் இந்த அரசியல் தலைமையினையே எங்கெல்ஸ் மிகவும் பொருத்தமான முறையில் “புதிய சமூகத்தின் ஓரே கதவு”(
Marx and Engels, Selected Correspondence, Moscow, 1975, 386. ) என்று குறிப்பிட்டார்.
சமூக உறவுகளை சோஷலிஸ்ட். கோட்பாடுகளின் அடிப்படையில் மறுபடியும் நிர்மாணிப்பதற்கு தொழிலாளி வர்க்கம் மற்றும் உழைக்கும் மக்களிடம் அரசியல் அதிகாரம் இருப்பது அவசியம். பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் வகிக்க வேண்டிய பாத்திரத்தை விளக்கி மார்க்சும் எங்கெல்சும் பின்வருமாறு எழுதினார்கள்: “பாட்டாளி வர்க்கம் தனது அரசியல் மேலாண்மையைப் பயன்படுத்தி முதலாளித்துவ வர்க்கத்திடமிருந்து படிப்படியாய் மூலதனம் முழுவதையும் கைப்பற்றும்; உற்பத்திக் கருவிகள் யாவற்றையும் அரசின் கைகளில், அதாவது ஆளும் வர்க்கமாய் ஒழுங்க மைந்த பாட்டாளி வர்க்கத்தின் கைகளில் ஒருசேர மையப்படுத்தும்; மற்றும் உற்பத்தி சக்திகளது ஒட்டுமொத்தத் தொகையைச் சாத்தியமான முழு வேகத்தில் அதிகமாக்கும்: பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிறுவுதல் என்றால் “ஜனநாயகத்துக்கான போரில் வெற்றி ஈட்டுவது'' என்று பொருள் என்று மார்க்சும் எங்கெல்சும் எழுதினார்கள். பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் சோஷலிசத்தின் எதிரிகளுக்கு, வரலாற்றுப் போக்கைத் திருப்பி மக்களால் வெறுக்கப்படுகின்ற முதலாளித்துவத்கைத் திரும்பவும் கொண்டு வரவிரும்புகின்ற சுரண்டல்காரர்களுக்கு எதிராக வன்முறையை உபயோகிக்கும். ஆனால் மக்களின் மிக அதிகமான பெரும்பான்மையினருக்கு, உழைக்கும் மக்களின் பெருந்திரளினருக்குப் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பது மிகவும் முழுமையான, விரிவான ஜனநாயகமாக சம்பிரதாயமான ஜனநாயகமாக இல்லாமல் உண்மையான ஜனநாயகமாக இருக்கும்.
மார்க்சும் எங்கெல்சும் முதலாளித்துவ ஜனநாயகத்தையும் நாடாளுமன்றவாதத்தையும் பற்றி மேதாவிலாசத்தோடு விமர்சனம் செய்தார்கள். இது வரையறுக்கப்பட்ட, குறுக்கப்பட்ட, சம்பிரதாயமான ஜனநாயகம். முதலாளித்துவ ஜனநாயகம் என்பது முதலாளி வர்க்க சர்வாதிகாரத்தின் ஒரு வடிவம் மட்டுமேயாகும். நாடாளுமன்றவாத நிலைமைகளில் உழைக்கும் மக்களுக்கு ஒரேயொரு உரிமை மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கிறது- முதலாளி வர்க்கக்கட்சிகளில் எந்தக் கட்சி தங்களைக் குறிப்பிட்ட காலத்துக்கு ஆட்சி செய்யும் என்று தேர்ந்தெடுப்பதே அது. தொழிலாளர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றிய பிறகுதான் மக்களின் முக்கியமான பகுதியினர் ஜனநாயக சுதந்திரத்தை அடைகிறார்கள். அப்பொழுது தான் உழைக்கும் மக்களுக்கு, மக்களில் பெரும்பான்மையினருக்கு ஜனநாயகம்-— அதுவே ஜன நாயகத்தின் மிக உயர்ந்த ரகம், உண்மையான ஜனநாயகம், சோஷலிஸ்ட் புரட்சித் தத்துவத்தை விரித்துக் கூறுவதில் மார்க்ஸ் எழுதிய லுபீ போனயார்ட்டின் பதினெட்டாம் புரூமேர் என்ற புத்தகம் முக்கியமான இடத்தை வகிக்கிறது( கா, மார்க்ஸ், லுயி போனபார்ட்டின் பதினெட்டாம் புருமேர், முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ, 1983, பக்கங்கள் 170-171.).
1848-49 புரட்சிகள் மற்றும் இதர முதலாளி வர்க்கப் புரட்சிகளை ஆராய்ந்து, அவையனைத்தும் ஆளும் வர்க்கங்களின் இராணுவ-அதிகார வர்க்க மத்தியப்படுத்தப்பட்ட அரசுப் பொறியமைவை நொறுக்குவதற்குக் தவறிவிட்டன, என்பதை மார்க்ஸ் நிறுவினார். புரட்சிகரமான உறைக்கும் பெருந்திரளினரை நசுக்குவதற்கு எதிர்ப்புரட்சி இப்பொறியமைவைப் பயன்படுத்தியது. “எல்லாப் புரட்சிகளுமே இந்த இயந்திரத்தை உடைத்து நொறுக்குவதற்கு பதிலாக அதை முழுமையாக்கின; தலைமையான ஆதிக்கத்தைப் பெறுவதற்காக மாறிமாறிப் போராடிய கட்சிகள் ஓவ்வொன்றுமே இந்தப் பிரம்மாண்டமான அரசு இயந்திரத்தைக் கைப் பற்றுவதுதான் போரில் வெற்றி பெற்றவர்களுக்குக் கிடைக்கும் ஆதாயம்” என்று கருதின. முதலாளிவர்க்கப் புரட்சியிலிருந்து வேறுபட்ட வகையில் முதலாளி வர்க்கத்தின் இந்த அரசு இயந்திரத்தை நொறுக்குவதே பாட்டாளி வர்க்கப் புரட்சியின் கடமை. 20ம் நூற்றாண்டின் அனைத்து சோஷலிஸ்ட் புரட்சிகளிலும் நிரூபிக்கப்பட்டிருக்கின்ற இந்த முடிவை முதலாளித்துவ அரசை சோஷலிஸ்ட் சீர் திருத்தங்களைச் செய்வதற்கு உபயோகிக்க முடியும் என்ற சீர்திருக்தவாதிகளின் மிகவும் தவறான கருத்துக்களுக்கு எதிராக மார்க்சியம் வைக்கிறது.
1871ம் வருடப் பாரிஸ் கம்யூன் முன்னே வைக்கப்பட்ட ஒரு மாபெரும் காலடியாகும். பிரான்சில் உள்நாட்டுப் போர் என்ற புத்தகத்திலும் மற்றும் இதர புத்தகங்களிலும் கம்யூனின் வரலாறு மற்றும் அனுபவத்தைப் பற்றிய நுணுக்கமான விளக்கமும் அதன் தவறுகளுக்கும் கம்யூன்வாதிகளின் தோல்விக்கும் காரணங்களைப் பற்றிய மிகச் செறிவான, மிக ஆழமாக ஊடுருவுகின்ற விமரிசனப் பகுப்பாய்வை வாசகர் காண முடியும். 72 நாட்கள் மட்டுமே நீடித்த வீரஞ்செறிந்த கம்யூனில் மார்க்ஸ் முற்றிலும் புதிய வரலாற்று ரகத்தைச் சேர்ந்த அரசின் முன்மாதிரியைக் கண்டார். தொழிலாளி வர்க்கம் முதலாளி வர்க்கத்தின் அரசு இயந்திரத்தை நொறுக்குவதோடு மட்டுமல்லாமல், அதனிடத்தில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை ஏற்படுத்து வேண்டும் என்று பெருந்திரளான மக்களின் புரட்சிகரமான படைப்பாற்றலில் பிறந்த பாரிஸ் கம்யூன் எடுத்துக் காட்டியது. கம்யூன் “தொழிலாளி வர்க்க அரசாங்கம், ... பொருளாதார ரீதியில் உழைப்பின் விடுதலையைச் செயலாக்குவதற்குக் கடைசியாகக் கண்டு பிடிக்கப்பட்ட அரசியல் வடிவம்””
என்று மார்க்ஸ் சுட்டிக் காட்டினார். அதன் முக்கியமான சமூக நடவடிக்கைகள் இதையே பிரத்யேகமான நோக்கமாகக் கொண்டிருந்தன.
“வர்க்கங்கள் மற்றும் வர்க்க ஆதிக்க முறை சார்ந்திருக்கின்ற பொருளாதார அடிப்படைகளை வேரோடு அகற்றுவதற்குக் கம்யூன் ஒரு கருவியாக” இருந்தது. ஆனால் கம்யூன் மிகக் குறுகிய காலத்துக்கு மட்டுமே நீடித்தபடியால் “அதன் சொந்த நடவடிக்கைகள், மக்களால் நிறைவேற்றப்பட்ட மக்களுடைய நிர்வாகத்தின் வளர்ச்சிப் போக்கைக் குறிப்பதாக மட்டுமே” இருந்தன. பாரிஸ் கம்யூன் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் முதல் அரசு, முதல் அனுபவம் என்பதில் அதன் உலகு தழுவிய வரலாற்று முக்கியத்துவம் அடங்கியிருக்கிறது.
பாட்டாளி வர்க்கப் புரட்சி, சோஷலிஸ்ட் புரட்சி ஒரு நெடிய சிக்கலான நிகழ்வுப் போக்கு என்று மார்க்ஸ் குறிப்பிட்டார்.முதலாளி வர்க்கப் புரட்சியைப் போல, புரட்சிகர வர்க்கத்துக்கு அதிகாரம் மாற்றப்பட்டு, அந்த வர்க்கத்தின் அரசியல் மற்றும் பொருளாதார ஆதிக்கத்தின் தடைகள் அகற்றப்பட்டதும் அது முடிந்து விடுவதில்லை. அதிகாரத்தை வென்றெடுப்பது சமூகத்தைப் புரட்சிகரமான முறையில் மாற்றியமைப்பதற்குத் தொடக்கநிலையாக மட்டுமே இருக்கிறது. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்கை நிறுவியதும் புரட்சியின் படைப்புக் கடமைகளைப் பற்றிய உணர்வு தொடங்குகிறது. அந்தக் கடமைகளை நிறைவேற்றுகின்ற நிலைமையும் கருவியுமே பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம். பிற்காலக்தில் கம்யூனுடைய அனுபவத்தை அராய்ந்தபொழுது தொழிலாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தை வென்றெடுப்பது வர்க்கப் போராட்டத்தை அகற்றிவிடாது என்று மார்க்ஸ் வலியுறுத்தினார். இந்தப் போராட்டம் தொடர்ந்து நடைபெறுவதற்கு, “தன் வெவ்வேறு கட்டங்களை மிகவும் அறிவு பூர்வமான மற்றும் மனிதாபிமான முறையில்:”
நிறைவேற்றுவகுற்குரிய சாதகமான நிலைமை தொழிலாளி வர்க்கத்துக்கு உருவாக்கப்படுகிறது என்பதைக் காட்டிலும் அதிகமாக ஒன்றுமில்லை. விஞ்ஞான கம்யூனிசத்தின் செயல்திட்டத்தை வகுத்த கோத்தா வேலைத்திட்டத்தின் விமர்சனம் என்ற நூலில் இக் கருத்துக்கள் மேலும் வளர்த்துக் கூறப்பட்டன. முதலாளித்துவத்துக்கும் கம்யூனிசத்தின் முதல் கட்டமான சோஷலிசத்துக்கும் இடையில் ஒரு தனியான மாறுங் கட்டம் வரலாற்று ரீதியில் தவிர்க்க முடியாதது என்ற மிக முக்கியமான கோட்பாட்டை மார்க்ஸ் இந்நூலில் வகுத்துக் கூறினார். “முதலாளித்துவ சமுதாயத்திற்கும் கம்யூனிச சமுதாயத்திற்கும் இடையில் ஒன்று மற்றொன்றாகப் புரட்சிகர மாற்றமடையும் கட்டம் உள்ளது. இதற்கு இணையாக அரசியல் இடைக்கால கட்டம் ஒன்றும் இருக்கிறது. இந்த இடைக்கால கட்டத்தில் அரசு பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர சர்வாதிகாரம் என்பதைத் தவிர வேறு எதுவாகவும் இருக்க முடியாது. கம்யூனிஸ்ட் சமூகம் அதன் வளர்ச்சியில் இரண்டு கட்டங்களின் வழியாகச் செல்கிறது என்று மார்க்ஸ் நிறுவினார்:
முதலாவது சோஷலிசம், இரண்டாவது, அதன் உயர்ந்த கட்டமாகிய கம்யூனிசம். முதல் கட்டமாகிய சோஷலிசத்தில் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சங்களில் ஒன்று, “ஒவ்வொருவரிடமிருந்தும் அவருடைய ஆற்றலுக்கு ஏற்ப, ஒவ்வொருவருக்கும் அவருடைய உழைப்புக்கு ஏற்ப” என்ற கோட்பாட்டின் அடிப்படையில் அதாவது சமூகத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் அவருடைய உழைப்பின் அளவுக்கும் தன்மைக்கும் ஏற்ப, பொருளாயக செல்வத்தைப் பகிர்ந்தளிப்பதாகும். மனிதனை மனிதன் சுரண்டுதல் இனி இல்லை; ஆனால் சமூகத்திலிருந்து கிடைக்கின்ற பொருளாயத வெகுமதியைப் பொறுத்தமட்டில் மக்களுக்கு இடையில் ஓரளவுக்குச் சமத்துவமற்ற நிலைமை இன்னும் இருக்கிறது. ““கம்யூனிச சமுதாயத்தின் முதற் கட்டத்தில், ...நீடித்த பிரசவ வேதனைக்குப் பிறகு முதலாளித்துவ சமுதாயத்திலிருந்து இப்பொழுதுதான் பிறந்து வெளிவதந்திருக்கின்ற” சமூகத்தில் இக்குறைபாடு தவிர்க்க முடியாதது என்று மார்க்ஸ் குறிப்பிட்டார். சோஷலிசம்
என்பது குறுகிய வாழ்க்கை உடைய காலகட்டமல்ல, அது ஒரு முழுமையான வரலாற்றுச் சகாப்தம். புதிய அமைப்பின் பொருளாதார, சமூக மற்றும் இதர நன்மைகள் வளர்ச்சியடைந்த சோஷலிஸ்ட் சமூகத்தில் முழு அளவில் வெளிப்படுகின்றன. சோஷலிசத்தின் முழுமையான, சர்வாம்சவளர்ச்சி இன்னும் உயர்வான கட்டத்துக்குப் படிப்படியாக மாறுவதை இயற்கையாக உறுதிப்படுத்துகிறது.
அரசின் எதிர்காலத்தைப் பற்றிக் கூறுகின்ற பொழுது சோஷலிஸ்ட் சமூகத்தை நிர்மாணிப்பதற்கு ஒரு சோஷலிஸ்ட் அரசு அவசியம் என்பதை மார்க்ஸ் எடுத்துக் காட்டினார். அந்த அரசு தன்னுடைய இலட்சியங்களை நிறைவேற்றிய பிறகு சுரண்டலையும் சுரண்டுபவர்களையும் ஒழித்து கம்யூனிசத்தை நிர்மாணிப்பதை உறுதிப்படுத்திய பிறகு, சோஷலிஸ்ட் அரசு உலர்ந்து உதிரத் தொடங்கும். கம்யூ னிசத்தில் மட்டுமே அது முற்றிலும் மறைந்துவிடும்.
இரண்டாவது கட்டம், உயர்வான சும்யூனிச சமூகக் கட்டம் அவசியமான பொருளாதார, சமூக மற்றும் அன்மீக முன் நிபந்தனைகளைப் படைக்கின்ற நெடுங்கால நிகழ்வினை அடுத்து, ஒரு சோஷலிஸ்ட் சகாப்தத்தின் விளைவாகத் தொடரும். “கம்யூனிச சமுதாயத்தின் உயர் கட்டத்தில், தனி நபரை உழைப்புப் பிரிவினைக்குக் கீழ்ப்படுத்தி அடிமைத் தளையிடுவதும் அதனுடன் கூட கருத்து உழைப்புக்கும் உடல் உழைப்புக்கும் இடையிலான எதிர்நிலையும் மறைந்த பின், உழைப்பானது பிழைப்புக்குரிய சாதனமாக மட்டுமின்றி வாழ்க்கையின் முதற்பெரும் தேவையுமாகிய பின், தனிநபருடைய சர்வாம்ச வளர்ச்சியோடுகூட உற்பத்தி சக்திகளும் அதிகரித்துவிட்ட பின், பொதுச் சமுதாயச் செல்வத்தின் கருவிகள் அனைத்தும் மேலும் அபரிமிதமாகப் பெருக்கெடுத்து ஓடுகையில்-— அப்பொழுதுதான் முதலாளித்துவ உரிமையின் குறுகிய வரம்பு முழுமையாகக் கடக்கப்பட்டு, சமுதாயம் தன் பதாகையில் “ஒவ்வொருவரிடமிருந்தும் அவருடைய ஆற்றலுக்கு ஏற்ப, ஒவ்வொருவருக்கும் அவருடைய தேவைக்கு ஏற்ப!” என்று பொறித்துக் கொள்ளும் “ என்று மார்க்ஸ் எழுதினார்.
சமூகத்தைப் புரட்சிகரமாக மாற்றியமைப்பது அசாதாரணமான அளவுக்கு சிக்கலான, நெடிய மற்றும் பன்முகத் தன்மை கொண்ட நிகழ்வுப் போக்காகும். அதன் வளர்ச்சி யின் உண்மையான பாதையைப்பற்றி விஞ்ஞானக் கம்யூனிசத்தின் மூலவர்களுடைய கருத்துக்கள் அழிவில்லாத தத்துவ மற்றும் செய்முறை முக்கியத்துவக்தைக் கொண்டிருக்கின் றன.
மார்க்சும் எங்கெல்சும் கம்யூனிஸ்டுக் கழகத்துக்கு மத்தியக் கமிட்டியின் வேண்டுகோளில் மற்றும் இதர நூல்களிலும் (மார்க்ஸ் எழுதிய லுயீ போனயார்ட்டின் பதினெட்டாம் புரூமேர், எங்கெல்ஸ் எழுதிய ஜெர்மனியில் புரட்சியும் எதிர்ப்புரட்சியும் மற்றும் இதரவை) தொடர்ச்சியான புரட்சி என்ற கருத்தை வளர்த்துக் கூறினார்கள். முதலாளித்துவச் சீர்திருத்தக் கட்டம் இன்னும் முடிவடையாத பொழுது சோஷலிஸ்ட் புரட்சிக்கு முன்பாக முதலாளித்துவ-ஜனதாயகப் புரட்சி நடைபெறும் என்று அவர்கள் சுட்டிக் காட்டினார்கள். தொழிலாளி வர்க்கத்துக்கும் முதலாளி வர்க்கத்துக்கும் இடையில் எதிர்காலச் சண்டைக் களத்தில் நிலப்பிரபுத்துவ அமைப்புக்களின் இடிபாடுகளை அகற்றிச் சுத்தம் செய்வது அதன் அடிப்படையான பாத்திரமாகும். முதலாளி வர்க்கப் புரட்சியில் தீவிரமாகப் பங்கெடுக்கின்ற பொழுது தொழிலாளி வர்க்கம் தன்னுடைய சொந்தப் பதாகையின் கீழ் சண்டை போட வேண்டும். அதன் இறுதி இலட்சியங்களை நினைவிலிறுத்தி,
முதலாளித்துவ-ஜனநாயசப் புரட்சியுடன் நின்று விடாமல் புரட்சியை மேலும் தொடர்வதற்கு, அதாவது இயன்ற அளவுக்கு அதை வளர்ப்பதற்குப் பாடுபட. வேண்டும். முதலாளி வர்க்கம் பாட்டாளி வர்க்கத்தை ஏமாற்று வதற்கு, மக்களால் வெற்றிகொள்ளப்பட்ட புரட்சியின் பலன்களைத் தானே அனுபவிப்பதற்கு முயற்சிக்கிறது; அந்த முதலாளி வர்க்கம் தருகின்ற அற்பமான சலுகைகளைக் கண்டு பாட்டாளி வர்க்கம் மயங்கிவிடக் கூடாது. புரட்சி பாதிவழியில் நின்றுவிடக்கூடாது; உடைமை வர்க்கங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக, ஆதிக்கம் மற்றும் அரசு அதிகார நிலைகளிலிருந்து அகற்றப்படுகின்றவரை, பாட்டாளி வர்க்கம் அரசு அதிகாரத்கை வென்றெடுக்கும் வரையிலும் அது தொடர வேண்டும். அனைத்கையும் தமுவிய ஜனநாயகப் போராட்படத்தையும் சோஷலிஸ்ட் புரட்சியையும் ஒற்றைப் புரட்சிகர நிகழ்வுப் போக்கின் வெவ்வேறு கட்டங்கள் என்று ஆராய்ந்த பொழுது மார்க்சும் எங்கெல்சும் வளர்ச்சியின் அவசியமான கட்டங்களைத் தாவிக் குதிக்கக் கூடாது என்று எச்சரிக்கை செய்தார்கள். பாட்டாளி வர்க்கம் முதலாளித் துவ-ஜனநாயகப் புரட்சியைப் பற்றி அலட்சியமாக இருக்கக் கூடாது, அதிலிருந்து ஒதுங்கி நின்று, புரட்சியின் தலைமையை முதலாளி வர்க்கத்திடம் ஒப்படைத்துவிடக் கூடாது; அதற்கு மாறாக, பாட்டாளி வர்க்கம் அதில் தீவிரமாகப் பங்கெடுக்க வேண்டும், மிகவும் முறைப்படியான ஜனநாயகத்துக்கும் புரட்சியை அதன் முடிவு நிலவரை கொண்டு போக வேண்டும் என்பதற்கும் உறுதியாகப் போராட வேண்டும் என்று அவர்கள் பாட்டாளி வர்க்கத்துக்குக் கற்பித்தார்கள். நிலப்பிரபுத்துவத்தின் எச்சமிச்சங்களை மிகவும் முற்றாக அகற்றுவதில், ஜனநாயகக் குடியரசை நிறுவுவதில், ஜனநாயகத்தை மிக அதிகமான அளவுக்கு விஸ்தரிப்பதில் தொழிலாளி வர்க்கம் ஜீவாதாரமான அக்கறை கொண்டிருக்கிறது.
தொழிலாளி வர்க்கத்தின் அதிகாரத்தை நிறுவுவதற்காகப் போராடுவதற்கு மிகவும் சாதகமான நிலைமைகளை இந்த அரசு வடிவம் மட்டுமே தோற்றுவிக்கிறது. புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் கூட்டாளிகளைப் பற்றிய பிரச்சனை தொடர்ச்சியான புரட்சி என்ற தத்துவத்துடன் நேரடியாக இணைக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பிரச்சினைக்கு அடிப்படையான தீர்வு கம்யூனிஸ்டூக் கட்சி அறிக்கை யில் கூறப்பட்டிருந்தது; 1848-49ம் வருடங்களில் நடைபெற்ற புரட்சிகள் மற்றும் பாரிஸ் கம்யூனுடைய அனுபவங்களின் மூலம் அது மேலும் வளர்க்கப்பட்டது. புரட்சிகரப் போராட்டத்தில் தொழிலாளிவர்க்கம் மூலதனத்தால் சுரண்டப்படுகின்ற எல்லா உழைக்கும் மக்களுடைய- எல்லாவற்றுக்கும் மேலாக விவசாய வர்க்கத்தினுடைய- நலன்களை எடுத்துரைக்கிறது. “எனவே விவசாயிகள் முதலாளித்துவ ஆட்சி அமைப்பை ஓழிப்பதைக் கடமையாகக் கொண்டுள்ள நகரப்புறப் பாட்டாளி வர்க்கத்தைத் தங்களுடைய இயற்கையான தோழனாக, தலைவனாகக் காண்கின்றனர் *,
என்று மார்க்ஸ் லூயி போனபார்ட்டின் பதினேட்டாம் புரூமேர் என்ற நூலில் எழுதினார். விவசாய வர்க்கம் பாட்டாளி வர்க்கத்தின் கூட்டாளியாகும் பொழுது ““பாட்டாளி வர்க்கப் புரட்சி அதன் கூட்டு இசையைப் பெறுகிறது, இல்லையென்றால் எல்லா விவசாய நாடுகளிலும் அதன் தனிப்பாட்டு கடைசிப் பாட்டாகவே இருக்கும்'' (கா. மார்க்ஸ், லுயீ போனபார்ட்டின் பதினெட்டாம் புரூமேர், முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ, 1982, பக்கம் 179.) என்று மார்க்ஸ் இந்நூலின் முதல் பதிப்பில் கூடுதலாக எழுதினார்.
இக்கருதுகோள்களில் தொழிலாளி வர்க்கத்துக்கும் விவசாய வர்க்கத்துக்கும் இடையில் புரட்சிகரமான கூட்டணியின் அவசியத்தைப் பற்றியும் அக்கூட்டணியில் தொழிலாளி வர்க்கத்தின் தலைமையான பாத்திரத்தைப் பற்றியும் கேந்திரமான அரசியல் முடிவை மார்க்ஸ் உருவாக்கினார். பாட்டாளி வர்க்கத்தைப் பொறுத்தமட்டில், மற்ற வர்க்கங்கள் அனைத்தும் “ஒற்றைப் பிற்போக்குத் திரளைப்'' பிரதிநிதித்துவம் செய்கின்றன என்ற லஸ்ஸாலின் கருதுகோளை மார்க்சும் எங்கெல்சும் தீவிரமாக எதிர்த்தார்கள். இக்கருத்து பாட்டாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்துக்காக நடத்தும் போராட்டத்தில் நகரங்களிலும் நாட்டுப்புறத்திலும் மக்கள் தொகையின் குட்டிமுதலாளித்துவப் பகுதிகளிலிருந்தும் உழைக்கும் மக்களின் பாட்டாளி வர்க்கம் அல்லாத பகுதியினரிடமிருந்தும் ஒதுங்கி நிற்கும்படி விதித்தது. பாட்டாளி வர்க்கத்தின் கூட்டாளிகளைப் பற்றிய பிரச்சினையை விரித்துரைப்பதில் எங்கெல்ஸ் எழுதிய நூல்கள் முக்கியமான இடத்தைப் பெறுகின்றன. பிரான்சிலும் ஜெர்மனியிலும் விவசாயப் பிரச்சினை என்ற புத்தகத்தில் எங்கெல்ஸ் சோஷலிஸ்டுகள் மத்தியில் பரப்பப்பட்டுவந்த சந்தர்ப்பவாதக் கருத்துக்களை விமர்சித்தார்; சோஷலிஸ்ட் புரட்சியின் விவசாயச் செயல்திட்டத்தின் தத்துவக் கோட்பாடுகளை முன்வைத்தார், சோஷலிஸ்ட் விவசாயச் சீரமைப்பின் சாதனங்களையும் வடிவங்களையும் பற்றிப் பல ஆழமான கருதுகோள்களை எடுத்துக் கூறினார்.
மார்க்சும் எங்கெல்சும் செய்த முடிவுகளை வரலாறு முற்றிலும் நிரூபித்தது. ஜனநாயகப் புரட்சி சோஷலிஸ்ட் புரட்சியாக வளர்ச்சியடைவதற்கு மிக முக்கியமான முன்நிபந்தனைகள் ஜனநாயகப் புரட்சியில் தொழிலாளி வர்க்கம் தீவிர மாகப் பங்கெடுத்தல், விவசாய வர்க்கம் மற்றும் உழைக்கும் மக்களின் பாட்டாளி வர்க்கம் அல்லாத இதர பகுதிகளுடன் அகன் கூட்டணி, புரட்சியில் அதனுடைய தலைமை ஆகியன என்பதை 20ம் நூற்றாண்டில் நடைபெற்ற புரட்சிகள் எடுத்துக் காட்டியிருக்கின் றன.
இப்புரட்சிகர நிகழ்வுப் போக்கின் முக்கியமான உட் பகுதி ஒடுக்கப்பட்ட மக்களினங்கள் தேசிய விடுதலைக்கும் சுதந்திரத்துக்கும் நடத்துகின்ற இயக்கமாகும், தேசிய விடுதலைப் போராட்டத்துக்கும் சமூக விடுதலைக்காகப் பாட்டாளி வர்க்கம் நடத்துகின்ற போராட்டத்துக்கும் இடையிலுள்ள மிக நெருக்கமான இடைத்தொடர்பையும் இடைச் சார்பையும் தொழிலாளி வர்க்கம் மிகவும் ஆழமாகப் புரிந்து கொள்வதற்கு மார்க்ஸ் எங்கெல்சின் போதனை உதவுகின்றது.
“தேசிய ஓடுக்குமுறையை மிகத் தீவிரமாகவும் முரணில்லாமலும் எதிர்ப்பது தொழிலாளி வர்க்கமே. சோஷலிஸ்ட் புரட்சி ஒன்றுதான் தேசிய ஓடுக்குமுறையை முழுமையாக அகற்றும் என்று மார்க்சியம் போதிக்கிறது. “தனியொருவர் பிறர் ஒருவரைச் சுரண்டுதல் எந்த அளவுக்கு ஒழிக்கப் படுகிறதோ, அதே அளவுக்கு ஒரு தேசம் பிறிதொன்றைச் சுரண்டுதலும் ஒழிக்கப்படும். தேசத்தினுள் வர்க்கங்களுக்
கிடையிலான பகைநிலை எந்த அளவுக்கு மறைகிறதோ, அதே அளவுக்குத் தேசங்களுக்கடையிலான பகைமையும் இல்லாதொழியும்” என்று கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை கூறுகிறது.
தேசிய எல்லைகளுக்குள் புரட்சிகரப் போராட்டத்தின் வெற்றியை உலகப் புரட்சிகர இயக்கத்தின் பொதுப் போக்குடன் இணைத்து மார்க்சும் எங்கெல்சும் ஓவ்வொரு முறையும் எழுதினார்கள். பாட்டாளி வர்க்கப் புரட்சி சர்வாம்ச முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கிறது, எல்லா மக்களினங்களும் அதில் ஈடுபடுவது தவிர்க்க முடியாதது. “உழைப் பின் விடுதலை என்பது ஸ்தலப் பிரச்சினையல்ல, தேசியப் பிரச்சனையுமல்ல; அது நவீன சமூகம் இருக்கின்ற நாடுகள் அனைத்தையும் தழுவிய சமூகப் பிரச்சினை...
உலகப் புரட்சிகர நிகழ்வுப் போக்கில் இரண்டு நீரோட்டங்கள், மேற்கில் பாட்டாளி வர்க்க இயக்கம் மற்றும் ருஷ்யாவில் விவசாய இயக்கம் மற்றும் அவற்றின் இடை இணைப் பைப் பற்றிய விஞ்ஞான ஆய்வில் வேரூன்றிய கருத்தை மார்க்சும் எங்கெல்சும் அநேகமாக 1870க்களில் உருவாக்கினார்கள்.
..( கா. மார்க்ஸ், பி. எங்கெல்ஸ், தேர்வு நூல்கள், பன்னிரண்டு தொகுதிகளில், தொகுதி 5, முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ, 1985, பக்கம் 146
) ரஷ்யாவில் புரட்சிகர இயக்கத்தின் போக்கை மார்க்சும் எங்கெல்சும் நுணுக்கமாக கவனித்தார்கள். மேற்கில் பாட்டாளி வர்க்கப் புரட்சியைத் தொடங்குவதற்கு ருஷ்யாவில் வெகுஜனப் புரட்சி சமிக்கையாக இருக்க முடியும், “அவை ஒன்றுக்கொன்று உதவி செய்ய முடியும்” என்று வலியுறுத்தினார்கள். எங்கெல்ஸ் ரஷ்யாவில் சமூக உறவுகளைப் பற்றி என்ற தன்னுடைய புத்தகத்தின் பின்னுரையில் 1894ம் வருடத்தில் பின்வருமாறு எழுதினார்: “ரஷ்யப் புரட்சி... மேற்கில் தொழிலாளர் இயக்கத்துக்குப் புதிய உத்வேகத்தைக் கொடுக்கும்; அதன் போராட்டத்துக்குப் புதிய, இன்னும் சிறப்பான நிலைமைகளைக் தோற்றுவித்து, அதன் மூலம் நவீன தொழில்துறைப் பாட்டாளி வர்க்கத்தின் வெற்றியை முன்னே கொண்டு போகும்.”
கீழ்த்திசை நாடுகளில் சமூக இயக்கங்களைப் பற்றிய ஆராய்ச்சி வளர்ச்சியில் பின்தங்கியிருக்கும் மக்களினங்களின் வரலாற்று விதிகளைப் பற்றிய முக்கியமான கோட்பாட்டை வகுப்பதைச் சாத்தியமாக்கிற்று. அவர்கள் பாட்டாளி வர்க்கப் புரட்சியுடன் இணைந்து செயலாற்றினால்தான் சோஷலிசக்தை நோக்கித் தங்களுடைய வளர்ச்சிக் காலத்தை குறைத்துக் கொள்ள முடியும். “முதலாளித்துவப் பொருளாதார அமைப்பை உள்நாட்டிலும் அது தலைமையாக இருக்கின்ற நாடுகளிலும் வெற்றிகொண்ட பிறகுதான், “அது எப்படிச் செயலாற்றுகிறது”,
நவீன தொழில்துறையின் உற்பத்தி சக்திகள் சமூகத்தின் உடைமை என்ற முறையில் சமூகம் முழுமைக்கும் எப்படி இயக்கப்படுகின்றன. என்ற தங்களுடைய உதாரணத்தைப் பின்தங்கிய நாடுகள் பார்க்கும் பொழுது மட்டுமே--அப்பொழுதுதான் பின் தங்கிய நாடுகள் வளர்ச்சியின் இந்தக் குறுகிய நிகழ்வுப் போக்கைத் தொடங்க முடியும்”(
Marx and Engels, Selected Works, Vol. 2, Moscow, 1973, pp). என்று எங்கெல்ஸ் எழுதினார். “ஆனால் அவர்களுடைய வெற்றி உத்தரவாதமானது. இது முதலாளித்துவத்துக்கு முந்திய வளர்ச்சிக் கட்டத்திலிருக்கும் எல்லா நாடுகளுக்கும்” பொருந்தும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
இப்புத்தகத்தில்
தரப்பட்டுள்ள பகுதிகள் மார்க்ஸ் எங்கெல்சும் உருவாக்கிய பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகரப் போராட்டத்தின் போர்த்திட்டம் மற்றும் செயல்தந்திரத்தின் அடிப்படைக் கோட்பாடுகள், புரட்சித் தத்துவத்தின் தனித்தனியான அம்சங்களை ஆயுதந்தாங்கிய எழுச்சி, புரட்சிக்கும் யுத்தத்துக்கும் இடையில் உள்ள தொடர்பு, இதரவை --பற்றி அவர்களுடைய கருத்துக்களை வாசகருக்கு விளக்கும். புரட்சிகரமான வாய்வீச்சுக்கும் சந்தர்ப்பவாதத்துக்கும் எதிராக, யதார்த்த நிலைமையைக் கணக்கிலெடுத்துக் கொள்ளாமல் ஆயுதந்தாங்கிய எழுச்சியைப் பாட்டாளி வர்க்கத்தின் மீது திணிக்க அல்லது புறநிலையான சமூக, பொருளாதார நிலைமைகளைக் கருதாமல் அவசியமான கட்டங்களைத் தாவிக் குதிக்க முயற்சி செய்கின்ற, “திடீர்ப் புரட்சி செய்ய முயற்சிக்கின்ற”” அராஜகவாதிகள் மற்றும் “புரட்சியின் ரசவாதிகளுக்கு”* எதிராக அவர்கள் நடத்திய போராட்டத்தையும் வாசகருக்குத் தெரிவிக்கும். வீரசாகசவாதம் மற்றும் தன்னிச்சைவாதம் தவிர, ஒரு புதிய சமூகத்தை நிர்மாணிப்பதுடன் இணைந்த பாட்டாளி வர்க்கப் புரட்சியின் படைப்புத்தன்மை கொண்ட
இலட்சியங்களையும் கடமைகளையும் நிராகரித்தல் மற்றும் அழிவு வெறி அராஜகவாதத்தின் குணாம்சமாகும். புரட்சிகர நிகழ்வுப் போக்கின் பொருளாயத அடிப்படையைப் புரிந்து கொள்ளத் தவறுவதன் மூலம் அராஜகவாதிகள் பெருந்திரளான மக்களைப் புரட்சிகரப் போராட்டத்திலிருந்து திசை திருப்புகிறார்கள்,அதன் மூலம் அப்போராட்டம் தவிர்க்க முடியாத விதத்தில் தோல்வி அடையும்படிச் செய்கிறார்கள்.
மார்க்சும் எங்கெல்சும் உருவாக்யெ சோஷலிஸ்ட் புரட்சித் தத்துவம் வறட்டுக் கோட்பாடு அல்ல, அது செயலுக்கு வழிகாட்டி. இக்காரணத்துக்காகவே அதைத் தோற்றுவித்தவார்கள் வர்க்கப் போராட்டத்தின் சிக்கலான பிரச்சினைகளுக்கு மிகவும் காரியசாத்தியமான அணுகுமுறையைக் கோரினார்கள், தத்துவத்தைப் பற்றி வறட்டுக் கோட்பாட்டு ரீதியான அணுகுமுறையைக் கண்டனம் செய்தார்கள். அதிகாரத்தை வென்றெடுப்பதற்குரிய வழிகளைக் தேர்ந்தெடுத்தல், புரட்சிகரப் போராட்டத்தின் சமாதான மற்றும் சமாதானமற்ற வடிவங்களைப் பயன்படுத்துதல், ஒரு வடிவத்திலிருந்து மற்றொரு வடிவத்துக்கு மாறுதல், போராட்டத்தில் நாடாளுமன்ற முறைகளையும் நாடாளுமன்ற மல்லாத முறைகளையும் இணைத்தல், இதரவை அனைத்தும் ஸ்தூலமான வரலாற்று நிலைமைகளால் நிர்ணயிக்கப்படுகின்றன. யதார்த்த அரசியல் நிலைமை, நாட்டிற்குள்ளேயும் சர்வதேச அரங்கத்திலும் வர்க்க சக்திகளின் சமநிலை ஆகியனவற்றை தனிவகையான சமூக மற்றும் அரசியல் கூறுகள், தேசிய மரபுகள் மற்றும் தொழிலாளர் இயக்கம் அடைந் இருக்கின்ற வளர்ச்சிமட்டத்தைக் கருத்தில்கொண்டு பாட்டாளி வர்க்கக் கட்சி நிதானமாக, முழுமையாக மதிப்பீடு செய்ய வேண்டும் என்று வற்புறுத்தினார்.
பாரிஸ் கம்யூனுடைய வீழ்ச்சிக்குப் பிறகு 1871இல் அகிலத்தின் லண்டன் மாநாட்டுப் பிரதிநிதிகளிடம் உரை நிகழ்த்திய பொழுது மார்க்ஸ் பின்வருமாறு கூறினார்: “*நாம் அரசாங்கங்களுக்கு அறிவிக்க வேண்டும்: பாட்டாளி வர்க்கத்துக்கு எதிராகத் திருப்பப்பட்டிருக்கின்ற ஆயுதந்தாங்கிய சக்தி நீங்கள் என்பது எங்களுக்குத் தெரியும்; எங்கே சாத்தியமோ அங்கே அமைதியான வழியில் உங்களுக்கு எதிராகப் போராடுவோம், அவசியப்பட்டால் ஆயுதங்களைக் கொண்டும் போராடுவோம்:( * Marx and Engels,
Collected Works, Vol. 7, Moscow, 1976, ற. 542,
).
மார்க்சும் எங்கெல்சும் ஏகபோகத்துக்கு முந்திய முதலாளித்துவ சகாப்தத்தில், தொழிலாளி வர்க்கத்தின் வெற்றிக்கு அவசியமான புறநிலையான நிபந்தனைகள் உருவாக்க மடைந்து கொண்டிருந்த பொழுது சோஷலிஸ்ட் புரட்சித் தத்துவத்தை விரித்துக்கூறினார்கள். 1848-49ம் வருடங்களின் புரட்சியும் பாரிஸ் கம்யூனும் முதலாளித்துவ உற்பத்தி முறையை ஒழிக்கின்ற அளவுக்கு ஐரோப்பாவில் பொருளாதார வளர்ச்சி இன்னும் முதிர்ச்சி அடையவில்லை என்று எடுத்துக் காட்டின என்று எங்கெல்ஸ் 1895இல் சுட்டிக் காட்டினார்.
19ம் நூற்றாண்டில் புரட்சிகரமான வர்க்கமாகிய பாட்டாளி வர்க்கம் கூட இன்னும் அதிகமான பலத்தைப் பெற வேண்டியிருந்தது. லெனின் விளக்கிக் காட்டியதைப் போல ஏகாதிபத்திய சகாப்கத்தின் தொடக்கத்தில் தான் வெற்றிகரமான சோஷலிஸ்ட் புரட்சிக்கு அவசியமான நிலைமைகள் முதிர்ச்சியடைந்தன.
இருபதாம் நூற்றாண்டின் புதிய வரலாற்று நிலைமைகளில் உழைக்கும் மக்களின் முன்னணிப் பகுதியும் மனிதகுலத்தின் ஓடுக்கப்பட்ட பெரும்பான்மையினரும் சுரண்டல், தேசிய ஒடுக்குமுறை வன்முறை, யுத்தங்கள் மற்றும் முதலாளித்துவத்தினால் வளர்க்கப்பட்டுப் பரப்பப்படுகின்ற பேரழிவுகளுக்கும் எதிராக மார்க்ஸ், எங்கெல்சினுடைய தத்துவ பாரம்பரியத்தை உபயோகித்தனர். மார்க்சியத்தின் முழுமையான வெற்றியும் மனித குலத்தின் வளர்ச்சியில் அதன் செல்வாக்கின் தொடர்ச்சியான வளர்ச்சியும் விளதீமிர் லெனினுடைய நடவடிக்கை மற்றும் கருத்துக்களுடன், லெனினியத்துடன் பிணைந்திருக்கின்றன. 20ம் நூற்றாண்டின் வரலாற்று நிலைமைகளில் மார்க்சியத்தின் நேரடியான தொடர்ச்சியாகவும் வளர்ச்சியாகவும் லெனினியம் இருக்கிறது. அது மார்க்சியத்தில் ஒரு புதிய, உயர்ந்த கட்டமாகும்.
மார்க்சும் எங்கெல்சும் உருவாக்கிய புரட்சித் தத்துவத்தை லெனின் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் முடிவுகளின் மூலம் எல்லா அம்சங்களிலும் வளர்த்துச் செழுமைப்படுத்தினார்; அதை ஒரு புதிய, உயர்ந்த மட்டத்துக்கு உயர்த்தினார். முதலாளித்துவ வளர்ச்சியில் மிகவும் சமீபமான போக்குகளை மிகவும் ஆழமாகப் பொதுமைப்படுத்தியதன் அடிப்படையில் லெனின் ஏகாதிபத்தியத்தைப் பற்றிய தத்து வத்தைப் படைத்தார். ஏகாதிபத்தியத்தின் முரண்பாடுகள் மற்றும் விதிகளைப் பற்றி அவருடைய பகுப்பாய்வு மார்க்ஸ் எழுதிய மூலதனத்துக்கு மேதாவிலாசம் நிறைந்த தொடர்ச்சியாகவும் வளர்ச்சியாகவும் இருக்கிறது. ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் கடைசிக் கட்டம், அதை ஓழிப்பதற்குரிய நிலமைகள் அப்பொழுது முதுர்ச்சியடைந்திருக்கின்றன என்று லெனின் எடுத்துக் காட்டினார். ஏகாதிபத்தியம் சோஷலிஸ்ட் புரட்சியின் முற்பொழுதாக, முதலாளித்துவ சமூகத்தில் முன்னெப்பொழுதும் ஏற்பட்டிராத சமூகக் கொந்தளிப்புக்கள் மற்றும் பொருளாதார, அரசியல் நெருக்கடிகளின் சகாப்தமாக இருக்கிறது. ஏகாதிபத்திய காலகட்டத்தில் முதலாளித்துவப் பொருளாதாரமும் கொள்கையும் சமமில்லாத,விட்டுவிட்டு நடைபெறுகின்ற முறையில் வளர்ச்சியடைகின்றன என்ற கண்டுபிடிப்பு புதிய, மிகவும் முக்கியமான கருதுகோள்களை நிலைநிறுத்துவதற்கு லெனினுக்கு உதவின. வெவ்வேறு நாடுகள் வெவ்வேறு காலங்களில் சோஷலிசத்தை அடையும், இந்த நிகழ்வுப் போக்கு மிக அதிகமான வளர்ச்சியடைந்த நாட்டில் தொடங்க வேண்டிய தில்லை, சோஷலிசத்தின் வெற்றி ஆரம்பத்தில் தனியொரு நாட்டில் சாத்தியம் என்பவை இக்கருதுகோள்களாகும். இம்முடிவுகள் சோஷலிஸ்ட் புரட்சியின் பாதை மற்றும் அதன் வெற்றியின் நிபந்தனைகளைப் பற்றி முந்திய கருதுகோள்களை மாற்றியதோடு புரட்சிகரமான தொழிலாளர் இயக்கத்துக்குப் புதிய வாய்ப்புக்களைத் தோற்றுவித்தன.
1917 அக்டோபரில் ருஷ்யாவில் வெற்றியடைந்த புரட்சி உலகத்தின் முதல் சோஷலிஸ்ட் புரட்சியாகும். லெனின் தலைமையில் அது வெற்றி பெற்றது. மாபெரும் அக்டோபர் சோஷலிஸ்ட் புரட்சி உலக வரலாற்றில் ஒரு புதிய யுகத்தை, முதலாளித்துவத்திலிருந்து கம்யூனிஸ்ட் சமூக-யொருளாதார உருவாக்கத்துக்கு மாற்றத்தைத் தொடங்கியது. ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் தென் அமெரிக்காவிலும் பல நாடுகளில் சோஷலிஸ்ட் புரட்சியின் வெற்றி சோஷலிசத்தை ஒரு உலக அமைப்பாக மாற்றியது, உலக வளர்ச்சியில் அதைத் தீர்மானமான காரணியாக மாற்றியது. சோஷலிசத்தின் முதல் வெற்றிக்குப் பிறகு வரலாற்று ரீதியான வளர்ச்சியின் பாதை மற்றும் எதிர்காலத்தைப் பற்றிய ஆழமான நுண்ணறிவுடன் லெனின் இரண்டு சமூக அமைப்புகளுக்கு இடையிலும் உலக ரீதியான போராட்டம் நடைபெறுவது தவிர்க்க முடியாகது என்று சுட்டிக் காட்டினார்;
சோஷலிஸ்ட் வெளிநாட்டுக் கொள்கை, வெவ்வேறு சமூக அமைப்புகளைக் கொண்ட அரசுகளுக்கு இடையில் சமாதான சகவாழ்க்கைக் கோட்பாடுகளை முரணில்லாமல் கடைப்பிடித்தல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறினார்.
இருபதாம் நூற்றாண்டு சோஷலிஸ்ட் புரட்சியின் சகாப்தமாகும். இன்றைய பிரதான புரட்சிகர சக்தியான உலக சோஷலிஸ்ட் சமூகத்தின் பொருளாதார, அரசியல், தார்மிக வளம் தொடர்ச்சியாக வளர்ச்சியடைதல், தேசிய விடுதலை இயக்கம் ஈட்டிய வெற்றிகள்- உண்மையைக் கூறுவதென்றால் 1917 அக்டோபருக்குப் பிறகு மனித குலத்தின் மொத்த வளர்ச்சிப் போக்குமே மார்க்சிய லெனினியத்தின் முடிவுகள் மிகச் சரியானவை என்பதை சந்தேகமில்லாதபடி நிரூபிக்கின்றன.
வர்க்கப் போராட்டம் “நசித்துவிடும்” அல்லது முதலாளித்துவ உலகில் அதை “அகற்றிவிட” முடியும் என்று மூலதனத்தை ஆதரிப்பவார்கள் நம்பினார்கள்; ஆனால் வாழ்க்கை, இன்றைய யதார்த்தங்கள் அந்த நம்பிக்கைகளை நிராகரித்து விட்டன. மார்க்சியத்தின் எதிரிகளின் மிகச் சமிபத்திய கூற்றுக்கள்--முதலாளித்துவம் நவீனமடைதல் மற்றும் மாற்றமடைதல்---அவற்றின் எண்ணற்ற முற்காலக் கூற்றுக்களைப் போலவே உதவாக்கரையாக நிரூபிக்கப்பட்டுவிட்டன. மார்க்சும் எங்கெல்சும் தவிர்க்க முடியாதது என்று விளக்கிக் கூறிய சோஷலிஸ்ட் புரட்சி இன்று “*மிகையான தாகி” விடவில்லை; நம் காலத்தின் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பவியல் புரட்சி அதை மேன்மேலும் அவசியமாக்குகிறது,புதிய தலைமுறைகளும் சமூகப் பகுதியினரும், புதிய கட்சிகளும் ஸ்தாபனங்களும் புரட்சிகர நிகழ்வுப் போக்கில் இணைந்து கொண்டிருக்கின்றன.
முதலாளித்துவத்திலிருந்து கம்யூனிஸ்ட் சமூக-பொருளாதார உருவாக்கத்துக்கு மாறுதல் நம்காலத்திய வரலாற்று நிகழ்வுப் போக்கின் பிரதான போக்காக இருக்கிறது.
No comments:
Post a Comment