மார்க்சியத்தை மறுப்போர் எடுக்கும் ஆயுதங்கள் பல அதில் ஆசியபாணி உற்பத்திமுறை பேசுவோர் என்னவகை?

 மார்க்சியவாதிகளைப் பற்றி எங்கெல்ஸ் இவ்வாறு சொல்கிறார், "மார்க்சின் மேற்கோள்களை எடுத்து அப்படியே கையாள்பர் மார்க்சிஸ்டு அல்ல, அந்த இடத்தில் மார்க்ஸ் இருந்தால் எப்படி சிந்திப்பாரோ அவ்வாறு சிந்திப்பவே மார்க்சியவாதி" என்பார்.

மார்க்ஸ் உலகில் உள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் ரெடிமேடாக பதிலை விட்டுச் செல்லவில்லை, ஒருவேளை அவ்வாறு விட்டுச்சென்றிந்தால் அது இயங்கியல் அல்ல ஆம் மார்க்சியமே ஆகாது.

மார்க்ஸ் மார்க்சியவாதிகளுக்கு கற்றுக்கொடுத்தது இந்த சமூகம் எவ்வாறு இயங்குகிறது, அதன் கட்டமைப்பு எவ்வாறு உள்ளது என்பதையும் அதனை ஆய்வு செய்யும் முறையையும், அதன் அடிப்படையில் ஆய்வு செய்து நாம் வாழும் சமூகம் எவ்வகையானது என்பதனை புரிந்துக் கொள்வது(மூலதனம் நூலில் முதலாளித்துவ பொருளுற்பத்தி இயங்கும் முறை) நமக்கு வழிகாட்டியதுதான்.

அவர் ஆய்வு செய்வதற்கு அரசியல் பொருளாதார சமூக இயக்கத்தின் தொடர்ப்புகளை அதன் இயங்கியல் உறவுகளை புரிந்துக் கொள்ள "இயக்கவியல் பொருள்முதல்வாதம், வரலாற்று பொருள்முதல்வாதம்" என்கிற தத்துவங்களை நமக்களித்தார் அதன் அடிப்படையாக கொண்டோரே மார்க்சியவாதிகள் ஆவர்.

 மார்க்சியவாதிகளை விமர்சிப்பவர்கள் இரண்டு விடயங்களை மட்டுமே கைகொள்ள முடியும்:

அவரின் தத்துவபோதனையை தவறு என்று நிறுவ வேண்டும். இறுதியில் மார்க்சியமே தவறு என்றுகூறி ஏகாதிபத்திய கழிச்சடை குப்பைகளை நம் தலையில் ஏற்ற வேண்டும்.  

இந்த பிரச்சினையை நாம் புரிந்துக் கொள்ள இங்குள்ள மார்க்சியவாதிகள், மார்க்சிய தத்துவ அடிப்படைகளை முழுமையாக புரிந்துகொள்வதில் உள்ள கோளாறே. மார்க்ஸ் நிறுவிய தத்துவப்படி நாம் தேடலை செய்ய வக்கற்று மார்க்சிற்கு கற்றுக் கொடுபவர்கள் நோக்கம் என்னே? மார்க்சியத்தை  தவறாக புரிந்துக் கொண்டு அதனை தவறாக நடைமுறைப் படுத்தும் பொழுது மார்க்சியம் அல்ல தவறானவை அதனை புரிந்து நடைமுறை படுத்துவோரின் தவறே இதில் உள்ள தவறை தவறு என்று நிறுவதே எமது நோக்கம்

மேலும் மார்க்சியத்திற்கு முன்பு சமூகத்தை யாரும் சரியாக புரிந்துக்கொள்ள முடியவில்லை. மார்க்சியத்திற்கு பிறகே அது 100% சரியானதாக அறிவியல் பூர்வாக உள்ளது. பிரெஞ்சு புரட்சி செய்தவர்கள்கூட எந்த சமூகத்தை கட்டமைக்கப்போகிறோம் என்று புரிந்துக்கொண்டு செய்யவில்லை, தன்னெழுச்சியாக செயல்பட்டனர். முதல் தொழிலாளர் புரட்சியான 1871 பாரிஸ் கம்யூன்கூட 'உணர்வுபூர்வமாக' புரிந்துக்கொண்டு செய்ததல்ல.       ஆனால் ரஷ்ய சோசலிச புரட்சியோ, சீனப் புரட்சியோ எந்த சமூகத்தை கட்டமைக்கப் போகிறோம் என்பதை திட்டமிட்டு 'உணர்வுபூர்வமாக' நடத்திய புரட்சியாகும்.=

மார்க்சியம் வெறும் தத்துவமாக இல்லாமல் நடைமுறையில் பிரயோகித்து சரிபார்க்கப்பட்டது. மார்க்சியத்திற்கு முன்பும் பின்பும் வேறோரு தத்துவம் இத்தகைய அறிவியல் தன்மையைப் பெற்றிருக்கவில்லை. அவ்வாறு இருக்கவும் முடியாது ஏனெனில் இந்த சமூக சுரண்டலை முற்றுபுள்ளி வைக்க மார்க்சியத்தினால் மட்டுமே முடியும்.

இந்திய வரலாற்றில் மார்க்சியமும் ஆசியபாணி உற்பத்தி முறையும்

இந்தக் கட்டுரையானது இந்திய சமூகக் கட்டமைப்பு மற்றும் ஆசிய உற்பத்தி முறை குறித்து மார்க்ஸியம் முன்வைக்கும் ஆழமான பார்வைகளை விளக்குகிறது. மார்க்ஸியம் என்பது வெறும் கோட்பாடு மட்டுமல்ல, அது சமூக மாற்றத்திற்கான ஒரு அறிவியல் பூர்வமான ஆய்வுமுறை என்பதை இந்தத் தொகுப்பு வலியுறுத்துகிறது. இந்தியாவில் நிலவிய சாதி அமைப்பு, பொது நில உடைமை மற்றும் தற்சார்பு கிராமங்கள் எவ்வாறு நீண்டகாலமாக ஒரு தேக்கநிலையை உருவாக்கின என்பதை இப்பாடப்பகுதி விவரிக்கிறது. பிரிட்டிஷ் காலனியாதிக்கம் இந்தியாவின் பழைய பொருளாதார அஸ்திவாரத்தை உடைத்தெறிந்தாலும், அது இந்தியாவை ஒரு முன்னேறிய முதலாளித்துவ நாடாக மாற்றாமல் தனது தேவைக்கான மூலப்பொருள் வழங்கும் சந்தையாகவே மாற்றியது. தற்போதைய இந்திய சூழலில் முதலாளித்துவமும் பழைய நிலப்பிரபுத்துவக் கூறுகளும் பின்னிப் பிணைந்துள்ளதால், ஒரு புரட்சிகர மாற்றத்தின் மூலமே உண்மையான சமூக விடுதலையை அடைய முடியும் என இது முடிக்கிறது. இறுதியாக, இந்திய வரலாற்றை வெறும் மேலைநாட்டு கண்ணோட்டத்தில் அணுகாமல், அதன் தனித்துவமான சூழல்களை தரவுகளின் அடிப்படையில் ஆய்வு செய்ய வேண்டியதன் அவசியத்தை இக்கட்டுரை வலியுறுத்துகிறது.

ஆசிய உற்பத்தி முறையின் சிறப்பம்சங்கள் மற்றும் அதன் தனித்துவமான கட்டமைப்பு யாது?

இந்திய சமூகத்தின் நீண்டகால மாற்றமின்மைக்கு சாதி முறை எவ்வாறு காரணமாக அமைந்தது?

பிரிட்டிஷ் ஆட்சி இந்திய பொருளாதாரத்தை எவ்வாறு சிதைத்து காலனித்துவ நாடாக மாற்றியது?

ஒலி வடிவில் கேட்க இந்த இணைப்பை அழுத்தவும்

==============

ஆசியபாணி உற்பத்தி முறைதான் என்ன?

இந்தியாவைப் பற்றி காரல் மார்க்ஸ் விடியல் பதிப்பகத்தின் அணிந்துறையில் எஸ்.வி.ராஜதுரை பக்கம் 11 இல் "என் அப்பன் குதிருக்குள் இல்லை" என்ற பழமொழிக்கு ஏற்ப ஏகாதிபத்திய புதிய இடது கருத்தாக்கங்களை  முன்வைத்து எழுதியுள்ள எழுத்துக்கள் புதிய புதிய பெயர்களில் மீண்டும் மீண்டும் உயிர் பெற்றுக் கொண்டே உள்ளது. "விளிம்பு நிலை சமுதாயங்கள் பற்றி மார்க்ஸ்" முத்து மோகனால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கருத்துகள் மற்றும் எஸ் வி ஆரின் ஏகாதிபத்திய கருத்துகளை மார்க்சின் கருத்தாக முன் வைத்துள்ளதுதைதான் இன்று சிலர் பேசுகின்றனர்.

அடுத்து காமராஜர் அவர்கள் தனது பணியினை மார்க்சிய விரோத நிலையில் நிலைநாட்டியுள்ளார்.

அறிமுக உரையாக சுனிதி குமார் கோஷ் அவர்கள் இந்தியாவைப் பற்றிய மார்க்சின் கருத்தாக்கங்களையும் அவருடைய கண்ணோட்டங்களையும் மிக ஆழமாக தெளிவாக விவரித்துள்ளார்.

அதனைப் பற்றி தொடர்ந்து வரும் பகுதியில் எழுதவுள்ளேன் அதற்கு முன்பாக ஆசிய பாணி உற்பத்தி முறை பற்றிய மார்க்ஸ் ஏங்கெல்ஸ் இன் கருத்துகளை பார்ப்போம்.

1). நிலத்தின் தனி உடைமை இல்லாமை

2).செயற்கையான நீர்ப்பாசன வசதிகளை சார்ந்து இருந்தது.

3).'மாற்றமே இல்லாமல் ஒன்றுக்கு ஒன்று தொடர்பே' இல்லாமல் தனித்தனி அணுக்களாக இருந்த கிராமங்களை கொண்ட சமூகம் அது ; குறைவான வசதிகளோடும் மற்ற கிராமங்களோடு பெரும்பாலும் எத்தகைய தொடர்பு இல்லாமல் இவை இருந்தன. சமூக வளர்ச்சிக்கு இன்றியமையாத வேட்கைகளோ முயற்சிகளோ இக்கிராமச் சமூகங்களுக்கு இருக்கவில்லை.

4). விவசாயத்திற்கும் கைத்தொழிலுக்கும் இடையே தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வந்த ஐக்கியம் மரக்கலப்பையும் கைத்தறியையும் இதர கைத்தொழில் கருவிகளுக்கும் இடையே தொன்று தொட்டு இருந்து வந்த பிணைப்பும் "மாற்ற முடியாத வேலை பிரிவினையை நிலவியதும் "(நிலம் எல்லோருக்கும் பொதுவாக இருந்த நிலை) தன்னிறைவு பெற்று தனிமைப் பட்டு கிடந்த கிராம சமூகங்களின் அடிப்படையாக அமைந்தன.

5). வேளாண்மை உற்பத்தியாளர்களுக்கும் தொழில் உற்பத்தியாளர்களுக்கும் கிராம ஊழியர்களுக்கும் இடையில்  பரம்பரையாக நடந்து வந்த பண்டப் பரிவர்த்தனை மற்றும் பரஸ்பர ஊழியம்; அதனால் சந்தைக்கான உற்பத்தி என்பது முழுக்க முழுக்க தோற்றம் பெறவில்லை.

6). ஊர்களும் நகரங்களும் வெறும் ராணுவ முகாம்களாக காட்சி அளித்தன.

7). இக்கிராம சமூகங்கள் மாற்றத்தை எதிர்த்து வந்தன இந்த கிராம சமூகங்கள் சுய வளர்ச்சி கொண்டு சமூக நிலைமைகளை மாற்றவே முடியாத இயற்கை விதியாக மாறிவிட்டன. 

இவ்வாறு இந்திய சமூக நிலையானது பழங்காலம் தொட்டு 19 ஆம் நூற்றாண்டில் முதல் 10 ஆண்டு வரை மாறாமல் இருந்து வந்ததாக இந்த இடத்தில் குறிக்கப்படுகிறது.

இந்தியாவின் சமூகக் கட்டமைப்பு முழுவதையும் இங்கிலாந்து உடைத்து விட்டது என்று வலியுறுத்தும் மார்க்ஸ் பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவில் அரசியல் ஒற்றுமையை உருவாக்கியுள்ளது. இந்த ஒற்றுமை ஆங்கிலேயரின் வாள் வலிமையால் திணிக்கப்பட்டு மின்தந்தியால் வலுவூட்டப்பட்டு நீடிக்க வைக்கப்பட்டுள்ளது. 

புராதான சமூகங்கள் அனைத்தும் ஒரே வகைப்பாட்டிற்குள் அடைத்து விட முடியாது மாறாக அவை அனைத்தையும் ஒன்றாக பரிசீலித்தால் வகையினம் என்ற அளவிலும், காலத்தில் வேறுபடுகின்ற சமூகக் குழுக்களின் சங்கிலித் தொடராக அவை அமைகின்றன. அத்துடன் அடுத்தடுத்து வளர்ச்சி கட்டங்களையும் அவை சுட்டிக் காட்டுகின்றன என்பதை காண முடியும்... விவசாய சமூகங்கள் சமூக அமைப்பின் புராதான வடிவத்தில் இறுதி கட்டத்தை சேர்ந்த என்ற முறையில் இரண்டாம் நிலை சமூக உருவாக்கத்தின் மாறுதல் காலகட்டத்தை சேர்ந்தவையாக இருக்கின்றன. அதாவது பொது சொத்தை அடிப்படையாகக் கொண்ட சமூகத்திலிருந்து தனி சொத்தை அடிப்படையாகக் கொண்டு சமூகத்திற்கு மாறுகின்ற இடைநிலைக் கட்டத்தை சேர்ந்தவையாக இருக்கின்றது என்று மார்க்ஸ்  மீண்டும் எழுதுகிறார்(பக்கம் 24).

அதே நேரத்தில் கிழக்கு இந்தியாவில் அதாவது இந்தியாவில் காணப்படும் இந்த கிராம சமுதாயங்கள் பொருளாதார சமூக அமைப்பின் இறுதி கட்டத்தில் அல்லது இறுதிக்காலத்தில் இருக்கின்றன என்றும் அவர் விவரித்துள்ளார்.  மேலும் சில நூல்களிலிருந்து....

புராதன சமூகங்கள் ஒரே மாதிரியான பாணியில் அமையவில்லை. மாறாக, ஒட்டு மொத்தமாக பார்த்தால், அவை தொடர்ச்சியான சமூகத்தின் ஒன்றிணைந்த குழுக்களால் (social groupings), வேறுபட்ட விதத்திலும், வேறுபட்ட முதிர்ச்சி நிலையிலும், என தொடர்ச்சியான வளர்ச்சிக் கட்டங்களை குறித்தன. இதில் ஒரு வகை, பெரும்பாலும் எல்லோரும் ஏற்றுக் கொள்ளும், ‘விவசாய சமூகம்’, ரஷ்ய பாணி சமூகமாகும். இதற்கு இணையான மேற்கத்திய சமூகம் ஜெர்மானிய பாணி சமூகமாகும். இது மிக இளையதாகும்.

ஆசியாவில், ஆப்கன் போன்ற நாடுகளில், ‌’கிராம சமூகம்’ இருந்தது. ஆனால் அவை எல்லா இடங்களிலும் மிக இளைய வடிவமாகும். ஏனெனில் அவையே தொன்மையான சமூக அமைப்புகளில் கடைசி வடிவமாகும். புராதன சமூக அமைப்புகளின் கடைசி கட்டத்தில், விவசாய சமூகமே இரண்டாம் தர சமூகமாக மாறும் கட்டத்தில் இருந்தது. அதாவது பொது சொத்து அடிப்படையிலான சமூகத்திலிருந்து தனி சொத்து அடிப்படையிலான சமூகமாக மாறும் நிலையிலிருந்தது. இந்த இரண்டாம் தர அமைப்பு அதன் தொடர்ச்சியான அடிமைகள் மற்றும் பண்ணை அடிமைகள் அடிப்படையிலான சமூகங்களையும் உள்ளடக்கி இருந்தது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். (P.144-145). “என்கிறார் மார்க்ஸ்.

எனவே, ‘அடிமை சமூகம்-நிலப்பிரபுத்து சமூகம்-முதலாளித்துவ சமூகம்’ அல்லது ‘ஆசியபாணி சமூகம்’- முதலாளித்துவ சமூகம் என்ற இரண்டுதான் இந்திய வரலாற்றைப் பற்றிய மார்க்சிய புரிதலின் துவக்கமும் முடிவுமாகும் என மந்திரக் கோல் வீசுவது மார்க்சியத்திற்கு எதிரானதாகும். எனவே இந்த சூத்திரத்தை மீண்டும் மீண்டும் கூறுவது, உண்மை தரவுகளைக் கொண்டு அரும்பாடுபட்டு மேற்கொள்ள வேண்டிய ஆய்வுகளுக்கு மாற்றாகாது. இதனை இந்திய வரலாற்றின் மார்க்சிய மாணவர்கள் கட்டாயம் அறிந்திருக்க வேண்டும்.

அந்த குறிப்புகள், பரிணாம வளர்ச்சி அடிப்படையில், ஆசிய சமூகம் பற்றி பொதுவாகவும், இந்திய சமூகம் பற்றி குறிப்பாகவும் போதுமான அளவில் உள்ளொளி செலுத்தியுள்ளன. ’கீழைத் தேய ஒடுக்குமுறை அரசு’ அமைப்பில் சொத்து என்ற ஒன்று சட்டப்படி இல்லை என்று கூறுவதை நோக்கி செல்வதாக உள்ளது. உண்மையில் பூர்வீக குடிகள் அல்லது பொது சொத்து என்பதே சொத்து உருவாவதற்கான அடிப்படை ஆகும். பெரும்பாலான இடங்களில் சிறு சமூகங்களுக்குள் தொழிலுற்பத்தி மற்றும் விவசாயம் இரண்டும் இணைந்தே சொத்துக்களை உருவாக்கின. இவை தன்னிறைவு பெற்றதாகவும், உற்பத்தி மற்றும் உபரி உற்பத்தி மீதான கட்டுப்பாடுகளை தமக்குள்ளேயே கொண்டதாகவும் இருந்தன.’

இதன் ஒரு பகுதி உபரி உழைப்பு’, இறுதியில் தனிமனிதனாக உருவான உயர் சமூகத்திற்கு சொந்தமாக இருந்தது. இந்த உபரி உழைப்பு, நன்றிகடனாகவும், ஒற்றுமையின் புகழுக்காகவும், எதேச்சாதிகாரத்திற்கான ஒரு பகுதியாகவும், கடவுளாக காட்டப்பட்ட பூர்வீக குடிகளின் கற்பனையான நிறுவனத்திற்கான ஒரு பகுதியாகவும், பொது உழைப்பு வடிவில் தரப்பட்டது.’ .என்கிறார் மார்க்ஸ்.(p.70)

கிழக்கத்திய அடிமை முறையையும் , ஐரோப்பிய அடிமை முறையையும் மார்க்ஸ் ஒப்பீடு செய்திருப்பது சிறப்பானதும் முக்கியமானதும் ஆகும்.

இது ஆசியபாணி, ஸ்லாவோனிய பாணி, பண்டைக்கால தன்னாட்சி குடியரசுகள், ஜெர்மானிய பாணி அனைத்துக்கும் பொருந்தும். அதாவது வேலை (உற்பத்தி) செய்பவனுக்கும் (அல்லது தன்னைத்தானே மறுஉற்பத்தி செய்து கொள்பவன்), உற்பத்தி மறு உற்பத்தி செய்வதற்கான நிலைமைகளுக்கும் இடையிலான உறவு, அவை அவனுக்கே சொந்தம் என்பதையே உண்மையில் சொத்து என்பது காட்டுகிறது. எனவே உற்பத்தி செய்வதற்கான நிலைமைகளுக்கேற்ப சொத்து வெவ்வேறு விதமான வடிவங்களை எடுக்கிறது. உற்பத்தியின் நோக்கம், உற்பத்தியாளரையும், உற்பத்தியாளர் உயிர் வாழ்வதற்கான புற நிலைகளையும் சேர்த்து மறு உற்பத்தி செய்வதே. …… அடிமை முறை, பண்ணை அடிமை முறை மற்றும் இதர., இங்கே உழைப்பவரே மூன்றாவது ஒருவருக்காகவோ அல்லது சமூகத்திற்காவோ தனது உற்பத்தி செய்வதற்கான இயற்கையான நிலைகளுடன் முன்வருகிறார். இதனால் இங்கு சொத்து, சுதந்திரமாக உழைப்பவனுக்கும், அவனது புறநிலைக்கும் உறவாக இனியும் நீடிப்பதில்லை. அது இப்போது முதல் நிலையிலிருந்து இரண்டாம் நிலைக்கு சென்று விடுகிறது. இதுதான் சமூகத்தின் மூலமும் சமூக உழைப்பின் மூலமும் உருவாக்கப்பட்ட  சொத்தின் அறிவுபூர்வமான, தேவையான முடிவு [முடிவாக இருந்தாலும்] ( அடிமை சமூகத்தின் இந்த பண்பு பொதுவான கிழக்கத்திய அடிமை முறைக்கு பொருந்தாது. ஏனெனில் இது ஐரோப்பியரின் கண்ணோட்டத்திலிருந்து உருவாக்கப்பட்டுள்ளது).(ப.95)

மார்க்ஸின் விவரங்கள் நமக்கு கிழக்கத்திய மற்றும் ஐரோப்பிய நாடுகளில் புராதன பொதுவுடைமை சமூகம் எவ்வாறு வர்க்க சமூகமாக மாறியது என்பதனை அறிவதற்கான ஒரு உள்நோக்கு பார்வையை மட்டுமே கொடுத்துள்ளது.

மார்க்ஸ், சமூக சொத்து எவ்வாறு பல்வேறு வழிகளில், அரசு மற்றும் தனியார் சொத்துக்களாக அதனுள்ளேயே வளர்ந்தன என்பதையும் , அவை வளர்ச்சி போக்கில் எவ்வாறு பிரிந்தன என்பதையும் விவாதிக்கிறார்.

ஆசியபாணி சமூகம் நிச்சயமாக மிகவும் நீண்ட காலம், இறுக்கமாக நிலைத்துள்ளது. ‘இதற்கு அவை நிறுவப்பட்டிருந்த அடிப்படை கோட்பாடுகளே காரணம். அதாவது தனிமனிதன் சமூகத்திலிருந்து சுதந்திரமாக இருக்கவில்லை; உற்பத்தி சுழற்சி தன்னிறைவு பெற்றதாக இருந்தது; விவசாயம் மற்றும் கைத் தொழில்களிடையே நிலவிய ஒற்றுமை… மேலும் சில…ஒரு தனிமனிதன் சமூகத்துடனான தனது உறவையும் பொருளாதார சூழலையும் மாற்றிக் கொண்டால் நேர்மாறாக அதன் இயக்கவியல்படி அவனது பொருளாதார சூழல் மாற்றப்படும் அதாவது அவன் வறிய நிலை போன்றவற்றிற்கு ஆளாவான். (P.83)”

ஏன் இந்த” நீண்டகால இறுக்கமான நிலைப்பு” ஆசியாவில் நடந்தது? இதற்கு சாதி முறை ஒரு குறிப்பான, முக்கியமான பங்கை செலுத்தி உள்ளது என்பதை அந்த விவரங்கள் கோடிட்டு காட்டுகின்றன. மார்க்ஸ் அதற்கு பின்வரும் விவரங்களைத் தருகிறார்:

பண்டைய கால அரசுகளில் பூர்வீக குடிகள் இரண்டிலொரு விதத்தில், அதாவது இரத்த உறவுகளாலோ அல்லது இடத்தினாலோ, (kindhip or locality) அமைந்தன. இடத்தை அடிப்படையாகக் கொண்ட பூர்வீக குடிகளுக்கு, இரத்த உறவு பூர்வீக குடிகள் வரலாற்று ரீதியில் முற்பட்டவர்கள். மேலும் எல்லா இடங்களிலும் அவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். அவர்களின் மிக மோசமான மற்றும் இறுக்கமான சாதி நிறுவனங்கள் அவர்களை ஒருவரிடமிருந்தே இன்னொருவரை பிரித்து வைத்திருந்தது, அவர்களுக்கிடையே திருமண உரிமை மறுக்கப்பட்டிருந்தது, மிக வேறுபட்ட நிலைகளில் வைக்கப்பட்டிருந்தனர், ஒவ்வொருவரும் தங்களுக்கே உரிய மாற்ற இயலாத தொழிலை மேற்கொண்டிருந்தனர்.” (P.76-77).

மீண்டும் நிச்சயமாக புராதன சொத்து விசைகள் உற்பத்தியை கட்டுப்படுத்திய பல்வேறு புற சூழல்களிலிருந்து, சொத்து உறவுகள் என்பதற்குள் மூழ்கிவிட்டன. அவையே பல்வேறு வகைப்பட்ட சமூகங்களுக்கும் பொருளாதார அடிப்படை ஆகும். அவையே குறிப்பிட்ட சமூக அமைப்புகளாக முன்னதாக கருதப்பட்டன. இந்த அமைப்புகள், உழைப்பவன் தானே தன்னை உற்பத்திக்கான புற நிலைகளின் முன் வைத்துக் கொள்ளும் போது குறிப்பிடத்தக்க அளவில் மாற்றமடைந்தன. (அடிமை முறை மற்றும் பண்ணை அடிமை முறை போன்றவற்றில் இருந்தது போல). இதன் விளைவாக முதன்முதலாக சொத்து (நில சொத்து)தான் தழுவியிருந்த எளிமையான பொது இயல்பை இழந்தது. மேலும் அதன் சுய அழிவுக்கு வந்தது. இரண்டாவதாக (உற்பத்தி கருவி சொத்துக்கள்) குறிப்பிட்ட வகை உழைப்பாளி- அதாவது கைத்திறன் மற்றும் அதன் தொடர்ச்சியாக உருவான உற்பத்தி கருவிகள் மீதான சொத்து – உற்பத்தி கட்டுப்பாடுகளின் சொத்திற்கு சமமாக விளங்கியது, இது அடிமை முறை மற்றும் பண்ணை அடிமை முறையில் இல்லை என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும். எனினும் இது சாதிய முறை என்ற வடிவில் ஒத்த எதிர்மறை வளர்ச்சிக்கு வழி வகுப்பதாக இருந்தது. (p.101-102). இரத்த உறவு பூர்வீக குடிகள் சாதி என்ற இறுக்கமான கட்டமைப்பாக வளர்ந்தனர். இது இரண்டு வகையான சொத்துக்கள் உருவாகி ஒத்த எதிர்மறையான வளர்ச்சிக்கு வழிவகுத்தன. இது தவிர்க்கவியலாமல், நீண்ட நெடிய காலத்திற்கு, இறுக்கமாக நிலைக்கும் சமூக பொருளாதார அமைப்பிற்கு வழிவகுத்தது. அதாவது மாற்றம் எய்துவதற்கான நிலையை முடிந்தவரை தடுக்கும் வகையில் இருந்தது. இதுவே இந்திய சமூக கூறுகள் குறித்து மார்க்ஸ் நமக்கு தரும் ஒருசில குறிப்புகள் ஆகும். எனினும் கிடைத்துள்ள தரவுகளைக் கொண்டு இதன் உண்மைத் தன்மைகளை ஆய்வு செய்ய இந்திய வரலாற்று மாணவர்களுக்கும் அறிஞர்களுக்கும் இவை குறிப்பிடத்தகுந்த அளவில் போதுமானவையே. 

இந்திய சமூகம் இன்னும் முதலாளித்துவத்திற்கு முந்தைய வலிமையான கூறுகளையும் தனக்குள்ளே கொண்டுள்ளது. முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில், முதலாளித்துவத்துக்கு முந்தைய சமூகத்தின் சாம்பலிலிருந்து வளர்ந்து, முந்தைய சமூகம், வளர்ந்து வரும் முதலாளித்துவ வாதிகளால் அழித்தொழிக்க பட்டது போல் அன்றி இந்தியாவில் முதலாளித்துவம் முதலாளித்துவத்துக்கு முந்திய சமூகத்தின் மேலடுக்காக உள்ளது. நூற்றாண்டுகளாக இந்த நாட்டை ஆண்ட பிரிட்டிஷ் காலனியவாதிகளோ, 1947ல் அதிகாரத்தை கைமாற்றிக் கொண்ட இந்திய, முதலாளித்துவ வர்க்கமோ, இந்தபழைய அமைப்பை உதைத்து தள்ளிவிடுவதை முதலாளித்துவ அமைப்பு சுதந்திரமாக வளர்வதற்கும் ஒரு முன்னேறிய சமூகத்தை படைபதற்கான முன் தேவையான இவை செய்ய வில்லை. அதனால் இன்றைய இந்திய சமூகம், சாதி, இன, பூர்வீக குடிகள் நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்துள்ள ஏகாதிபத்திய ஆதிக்கம் கொண்ட ஒருவித வினோதமான கலவையாகும். ஆகவே, இந்த பிற்போக்கு முதலாளித்துவத்துக்கு முந்தைய சமூக அமைப்பை, அனைத்து முற்போக்கு சக்திகளையும் ஒன்றுபடுத்தி அழிக்க வேண்டிய பொறுப்பு பொதுவுடமையாளர்கள் மீதும் விழுந்துள்ளது. மேலும், அதன்மூலம் புரட்சிகர சக்திகளை தங்களுக்குள் ஒருங்கிணைத்து, புரட்சியை நடத்தி முடித்து அதன் மூலம் சோசலிச மாற்றத்திற்கான சூழலை ஏற்படுத்தவேண்டும். அப்பொழுதே இந்த கேடுகெட்ட எல்லா பிற்போக்கு முடைநாற்றம் பிடித்த முறைமைகளும் அழித்தொழிக்கப்படும் உண்மாயாலும் எல்லோருக்கும் எல்லாம் என்ற நிலை ஏற்படும் சிந்தியுங்கள் தோழர்களே தொடர்ந்து விவாதிப்போம்...

ஆசியபாணி உற்பத்தி முறையைப் பற்றி பார்த்தோம் அதற்கான விரிவானபதிலை பார்ப்போம்.

1).ஆசிய உற்பத்தி முறை பற்றிய மார்க்சிய கோட்பாடுகள் மாற்றத்துக்கு உள்ளானது போலவே இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி பற்றி அவர் கொண்டிருந்த முந்தைய கருத்துகளும் மாற்றத்துக்கு உள்ளாகின அந்நிய மூலதனத்தின் ஆட்சியானது தொழில் மயமாக்களுக்கு எதிரான (De- Industrialization) ஒரு போக்கை தொடங்கி வைத்துள்ளது இந்திய பொருளாதாரத்தை ஏகாதிபத்திய பொருளாதாரத்தின் பின்னணிப்பாக மாற்றி அதனை மேலும் பிற்பட்ட நிலைக்கு தள்ளுகிறது என்று அம்சத்தை தொடர்ந்து தான் மேற்கொண்ட ஆய்வுகள் மூலம் மார்க்ஸ் புரிந்துக் கொண்டார்.

2). மற்ற நாடுகளில் கைத்தொழில் உற்பத்தியை அழித்ததன் மூலம் இயந்திரம் ஆனது அந்நாடுகளை தனக்கு வேண்டிய மூலப் பொருட்கள் வழங்கும் களங்களாக வலுக்கட்டாயமாக மாற்றுகிறது இவ் விதமாக பிரிட்டனுக்கு வேண்டிய பருத்தி கம்பளிநூல், சணல் நார்சணல், நீலச்சாயம் ஆகியவற்றை உற்பத்தி செய்யுமாறு இந்தியா கட்டாயப்படுத்தப்பட்டது. நவீன தொழில் வள நாடுகளின் தேவைகளுக்கு பொருத்தமான ஒரு புதிய அனைத்து உலக உழைப்பு பிரிவினை தோன்றி உலகின் ஒரு பகுதியை முதன்மையானது ஒரு தொழில் மயமாக்களையும் மற்றொரு பகுதி மூலப்பொருட்களை வழங்குகின்ற முதன்மையான வேளாண்மை உற்பத்திக் களமாகும் மாற்று கருத்து என்று மார்க்ஸ் சொன்னார்.

3). தொடக்கத்தில் ரயில் பாதைகளைப் பற்றி எழுதுகையில் அவை இந்தியாவில் தொழில் புரட்சிக்கான கிரியா ஊக்கியாக செயல்படும் என்று மார்க்ஸ் குறிப்பிட்டு இருந்தார் அவரே பின்னர் 1880  பொதுவாக சொன்னால் ரயில் பாதைகள் வெளிநாட்டு வாணிபத்தின் வளர்ச்சிக்கு பெரும் தூண்டுதலை தந்தன என்பது உண்மைதான்.ஆனால் மூலப் பொருள்களை முக்கியமாக ஏற்றுமதி செய்து வந்த நாடுகளில் வாணிபமானது மக்கள் திரளினரின் துன்பத்தை அதிகரித்தது. உண்மையான உற்பத்தியாளர்களுக்கு ரயில் பாதைகள் துயரத்தையே தந்தன என்று மார்க்ஸ் சொன்னார்.

4). ரயில் பாதைகள் பிரிட்டன் இந்திய பொருளாதாரங்களுக்கு இடையிலே நிலை வந்த காலனி உறவை வலுப்படுத்தின மேலும் ஏற்றுமதி செய்யப்படுவதற்கு பெரிய அளவிலும் சிறிய அளவிலும் அது கொண்டிருக்கும் பொருத்தப் பாட்டுற் கேற்ப மாற்றி அமைக்கப்படுருக்கிறது என்று மார்க்ஸ் எழுதியுள்ளார்.

5). முதலாளிய உலக வாணிபம் என்ற வட்டத்திற்கு இழுத்து செல்லப்பட்டதன் மூலம் தொழில்துறை நாடான பிரிட்டனின் தேவைக்கு பொருத்தமாக இந்தியாவின் உற்பத்தி சக்திகள் பெரும் பகுதி அழிக்கப்பட்டன அல்லது மறுவடிவம் தரப்பட்டன . இதை ஒட்டி பிரிட்டனை அண்டி வாழக்கூடியதாகவே இந்திய நாட்டின் பொருளாதாரம் மாறியது.

6). இந்தியாவிலிருந்து மிகப் பெரும் அளவில் செல்வங்கள் பிரிட்டனுக்கு கொள்ளையடித்து செல்லப்பட்டன. இந்த போக்கு இந்தியாவில் முதலாளித்துவம் வளர்ச்சி அடைவதற்கு பெரும் தடையாக இருந்ததாக மார்க்ஸ் கூறுகிறார்.

7). 1881 ல் அவர் பின்வருமாறு எழுதினார் எடுத்துக்காட்டாக இந்தியாவை பார்ப்போம் நிலம் பொது உடமையாக இருந்த முறை மறைந்தொழிந்ததற்கு ஆங்கிலேயரின் அழிவுச் செயலே காரணம் என்பதையும் அறியலாம்.

8). காலனி ஆட்சியானது ஒரு முதலாளித்துவ சமூகத்திற்கான பொருளாதார அடிப்படைகளில் இடுவதற்கு மாறாக ஏற்கனவே இருந்து வந்த உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியை தடுத்து நாட்டை பின்னுக்கு தள்ளி அதன் குறை வளர்ச்சிக்கான அடிப்படைகளை உருவாக்கியது என்று மார்க்ஸ் முடிவுக்கு வந்தார்.

9). புதிய உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கு மாறாக வேளாண்மையை முதன்மை கொண்ட களமாக இந்தியாவை உலக சந்தையில் பிணைத்தது. ரயில் பாதைகள் நவீன தொழில் முன்னோடியாக செயல்படுவதற்கு மாறாக இந்தியாவை பிரிட்டனின் தொழில்நுட்பத்தின் பொருள்களுக்கான சந்தையாகவும் பிரிட்டனுக்கு வேளாண்மை பொருள்களை வழங்கும் களமாக மாற்றுவதற்கு ஊடகமாயின. (பக்கம் 29) இதனை தொடர்ந்து விவாதிப்போம் மேலும் சில...

ஆசியாவில், ஆப்கன் போன்ற நாடுகளில், ‌’கிராம சமூகம்’ இருந்தது. ஆனால் அவை எல்லா இடங்களிலும் மிக இளைய வடிவமாகும். ஏனெனில் அவையே தொன்மையான சமூக அமைப்புகளில் கடைசி வடிவமாகும். புராதன சமூக அமைப்புகளின் கடைசி கட்டத்தில், விவசாய சமூகமே இரண்டாம் தர சமூகமாக மாறும் கட்டத்தில் இருந்தது. அதாவது பொது சொத்து அடிப்படையிலான சமூகத்திலிருந்து தனி சொத்து அடிப்படையிலான சமூகமாக மாறும் நிலையிலிருந்தது. இந்த இரண்டாம் தர அமைப்பு அதன் தொடர்ச்சியான அடிமைகள் மற்றும் பண்ணை அடிமைகள் அடிப்படையிலான சமூகங்களையும் உள்ளடக்கி இருந்தது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். (P.144-145). “என்கிறார் மார்க்ஸ்.

எனவே,‘அடிமை சமூகம்-நிலப்பிரபுத்து சமூகம்-முதலாளித்துவ சமூகம்’ அல்லது   ‘ஆசியபாணி சமூகம்’- முதலாளித்துவ சமூகம் என்ற இரண்டுதான் இந்திய வரலாற்றைப் பற்றிய  மார்க்சிய புரிதலின் துவக்கமும் முடிவுமாகும் என  மந்திரக்கோல் வீசுவது மார்க்சியத்திற்கு எதிரானதாகும். எனவே இந்த சூத்திரத்தை மீண்டும் மீண்டும் கூறுவதுஉண்மை தரவுகளைக் கொண்டு அரும்பாடுபட்டு மேற்கொள்ள வேண்டிய ஆய்வுகளுக்கு மாற்றாகாது. இதனை இந்திய வரலாற்றின் மார்க்சிய மாணவர்கள் கட்டாயம் அறிந்திருக்க வேண்டும். 

‌ அந்த குறிப்புகள், பரிணாம வளர்ச்சி அடிப்படையில், ஆசிய சமூகம்  பற்றி பொதுவாகவும், இந்திய சமூகம் பற்றி குறிப்பாகவும் போதுமான அளவில் உள்ளொளி செலுத்தியுள்ளன. ’கீழைத் தேய ஒடுக்குமுறை அரசு’ அமைப்பில் சொத்து என்ற ஒன்று சட்டப்படி இல்லை என்று கூறுவதை நோக்கி செல்வதாக உள்ளது. உண்மையில் பூர்வீக குடிகள் அல்லது பொது சொத்து என்பதே சொத்து உருவாவதற்கான அடிப்படை ஆகும். பெரும்பாலான இடங்களில் சிறு சமூகங்களுக்குள் தொழிலுற்பத்தி மற்றும் விவசாயம் இரண்டும் இணைந்தே சொத்துக்களை உருவாக்கின. இவை தன்னிறைவு பெற்றதாகவும்உற்பத்தி மற்றும் உபரி உற்பத்தி மீதான கட்டுப்பாடுகளை தமக்குள்ளேயே கொண்டதாகவும்இருந்தன.’ 

இதன் ஒரு பகுதி  உபரி உழைப்பு’, இறுதியில் தனிமனிதனாக உருவான உயர் சமூகத்திற்கு சொந்தமாக இருந்தது. இந்த உபரி உழைப்பு, நன்றி கடனாகவும், ஒற்றுமையின் புகழுக்காகவும்எதேச்சாதிகாரத்திற்கான ஒரு பகுதியாகவும்கடவுளாக காட்டப்பட்ட  பூர்வீக குடிகளின் கற்பனையான நிறுவனத்திற்கான ஒரு பகுதியாகவும் , பொது உழைப்பு வடிவில் தரப்பட்டது.’ .என்கிறார் மார்க்ஸ்.(p.70)

கிழக்கத்திய அடிமை முறையையும் , ஐரோப்பிய அடிமை முறையையும் மார்க்ஸ் ஒப்பீடு செய்திருப்பது சிறப்பானதும் முக்கியமானதும்  ஆகும்.

கீழ் கண்டவை EMS ன் கருத்தே (மார்க்ஸ், ஆசியபாணி உற்பத்தி முறைபாடு மற்றும் இந்திய வரலாறு – ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் (தமிழில்: எஸ்.நாராயணன்)

முதலாளித்துவ மேதைகளும் தேசிய அரசியல்வாதிகளும், இந்திய வரலாறு குறித்த மார்க்சிய அணுகுமுறை ‘முற்றிலும் பொருத்தமற்றது ‘ என நிரூபிக்க பெரிதும் முயற்சிக்கின்றனர். பொருள் முதல் வாதத்தை விடுத்து கருத்துமுதல்வாத அடிப்படையில், அவர்கள், “இந்தியாவின் ‘பன்னெடுங்கால இந்திய பண்பாட்டுச் சாரம்’,  சமூக வாழ்க்கையில்,  வர்க்க போராட்டத்தால் அல்ல, இந்திய சமூகத்தின் ‘பரஸ்பர ஒத்துழைப்பு’ என்பதில் தான்  உள்ளது”  என்கின்றனர். 

இதனை மறுக்கும் மார்க்சிய அறிஞர்கள், வரலாற்று பொருள் முதல் வாதத்தின் அடிப்படை கோட்பாடுகள், மற்ற சமூகங்களைப் போலவே இந்திய சமூகத்திற்கும் பொருந்தும் என நிரூபித்துள்ளனர்கருத்துமுதல்வாத இந்தியக் காலாச்சாரம் என்றத் தோற்றத்திற்குப் பின்னால் திரைமறைவில் உண்மையில் பொருளாயத வளர்ச்சியே உள்ளது என ஏராளமான கட்டுரைகளையும், புத்தகங்களையும் அவர்கள் மேற்கோள் காட்டுகின்றனர். 
     

பண்டைய கற்கால மனிதனின் ஆயுதங்களின் வளர்ச்சியும், பிற்கால சமூகத்தில் உற்பத்தி கருவிகளின் வளர்ச்சியுமே மனிதனை காட்டுமிராண்டி வாழ்க்கையிலிருந்தும், அடிமைத்தனத்திலிருந்தும் மீட்டு நாகரீக வாழ்க்கைக்கு முன்னேற  வைத்துள்ளது என்பதை  முதலாளித்துவ வரலாற்று ஆசிரியர்களும்  கூட ஏற்றுக் கொள்கிறார்கள். மேலும் அவர்கள், ‘பரஸ்பர ஒத்துழைப்பு’ என்று கூறப்படுவதற்கடியில் , பண்டைய கிராம சமூகங்களுக்கிடையே  , சமூக முரண்பாடுகளும் வளர்ந்து வந்தன என்பதையும், அவை அடக்குமுறைக்கும் சுரண்டலுக்கும் வழிகோலின என்பதையும் எடுத்துக் காட்டுகிறார்கள். இதன் மூலம் வரலாற்று பொருள் முதல் வாதத்தை மறுப்பவர்கள் கூட, மற்ற நாடுகளைப் போலவே இந்தியாவிற்கும்  அறிவியல் பூர்வமான வரலாற்றுச் சட்டங்கள் பொருந்தும் என்பதை தவிர்க்க முடியாமல்  ஏற்றுக் கொள்கிறார்கள். 
      

எனினும் இந்திய வரலாற்றை அறிவியல் பூர்வமாக புரிந்து கொள்வதில் சில இடைவெளிகள் தடையாக உள்ளன. குறிப்பாக சிந்து சமவெளி நாகரீகம் எவ்வாறு அழிந்தது? அதில் அடிமை முறை வழக்கத்தில் இருந்ததா? இருந்திருந்தால் எந்த வடிவில் இருந்தது? அந்த நாகரீகத்தின் எந்தெந்த கூறுகள் பின்னர்  வந்து குடியேறிய ஆரியர்களால் உள்வாங்கப்பட்டன? போன்ற கேள்விகளுக்கும், வளர்ந்துவரும் இந்திய அறிவியல் வரலாறு எழும்பும் இது போன்ற மேலும் பல கேள்விகளுக்கும் காலமும், அர்ப்பணிப்பு மிக்க அறிஞர்களின் கடின உழைப்புமே பதில் சொல்ல முடியும்.

அந்த குறிப்புரைகள், ஆசிய, இந்திய சமூகங்களை மட்டுமல்ல ஒட்டு மொத்த மனித குல வரலாற்றையும் ஆய்வு செய்யும் அறிஞர்களுக்கும் பேருதவியாக இருக்கும். ஏனெனில் அவை வரலாற்றுக்கு முந்தைய புராதன சமூகங்கள் எவ்வாறு பிரிந்தன என்றும் அது எவ்வாறு பல்வேறு வர்க்க வடிவங்கள் உருவாக வழிவகுத்தன என்றும் ஒரு பொதுவான வரைபடத்தைத்தான் தருகின்றன. மார்க்ஸ் கூறுகிறார்:  

மேய்ச்சல் வாழ்க்கை, அல்லது பொதுவாக சொல்ல வேண்டுமெனில் நாடோடி வாழ்க்கையே வழக்கத்தில் இருந்தது. இனக்குழுக்கள் ஓரிடத்தில் தங்கி வாழாமல் ஆங்காங்கே கிடைப்பனவற்றை பயன்படுத்திக் கொண்டு அவை தீர்ந்து போனதும் அடுத்த இடத்திற்கு நகர்ந்தனர். மனிதர்கள் இயல்பிலேயே ஒரே இடத்தில் வசிப்பவர்களாக இருக்கவில்லை.(வளமான சூழல்களில் தங்களுக்கு தேவையான உணவு கிடைக்கும் நிலையில் குரங்குகளைப் போல் ஒரே மரத்தில் கிடைப்பதில் உயிர் வாழ்ந்திருக்கலாம். மற்றபடி அவர்கள் மற்ற காட்டு விலங்குகள் போலவே அலைந்து திரிந்தனர்.) எனவே அந்த இனக்குழு சமுதாயம், – இயற்கையின் பொது அமைப்பு – நிலத்தை கூட்டு (தற்காலிக) உடைமையாக்குவதற்கும் பயன்படுத்துவதற்கும், ஒரு முன்நிபந்தனையாக இருந்ததே அல்லாமல் அதன் பயனாகத் தோன்றவில்லை. 

மனிதர்கள் ஒருவாறு ஓரிடத்தில் தங்கி வாழ ஆரம்பித்ததும்,  சிறிய அளவிலேனும் மூல சமுதாயம் மாற்றப்படுவது, பல்வேறு வெளிப்புற, காலநிலை, புவியியல், பௌதீக மற்றும் இதர நிலைகளையும், மற்றும் அவர்களின் தனிச்சிறப்பான இயற்கை அமைப்பான இனக்குழு இயல்பையும் சார்ந்திருந்தது. இவ்வாறு தன்னிச்சையாக உருவான, இரத்தம், மொழி, பழக்க வழக்கம் போன்ற பிற  பொதுவான கட்டுக்குள்  அமைந்த இனக்குழு சமூகம்தான் – அல்லது மந்தை (herd) எனலாம் – வாழ்வுக்கான தேவைகளை பெறுவதற்கான  முதல் முன் நிபந்தனை ஆகும். அதனை மறு உற்பத்தி செய்து, அதற்கு பொருளாயத தெரிவிப்பைக் கொடுப்பதும் அல்லது பொருள் வடிவாக்குவதும் ஆகும்.(மேய்ப்பவர்கள், வேட்டையாடுபவர்கள், முதலிய செயல்கள்). நிலமே மிகப்பெரும் சோதனைக்கூடமாக இருந்தது. அதுவே உழைப்பதற்கான வழிகளையும், உழைப்பு சாதனங்களையும், வாழ்விடத்தையும் வழங்கியது. இதுவே ஒரு சமுதாயத்திற்கான அடிப்படை ஆகும்.நிலத்துடனான மனிதர்களின் உறவு அப்பாவித்தனமானதாக இருந்தது. அவர்கள் தம்மை அதன் சமுதாய உரிமையாளர்களாகக் கருதிக் கொண்டனர். உயிருள்ள உழைப்பினால் (living labour) தன்னை உற்பத்தியும் மறுஉற்பத்தியும் செய்து கொள்ளும் சமுதாயத்தின் உரிமையாளர்களாகக் கருதினர்.

இது போன்ற சமுதாயத்தின் உறுப்பினர் என்ற வகையில்  (நேர் பொருளிலும் உருவக பொருளிலும்) மட்டுமே அவர் தம்மை உடைமையாளராகவோ கருதிக் கொண்டார். உண்மையில் இந்த முன்நிபந்தனைகளின் கீழ்தான் உழைப்பின் மூலம் கைவரப் பெறுவது நடக்கிறது.  உழைப்பின் விளை பொருளாக அல்ல, மாறாக அதன் இயற்கையான அல்லது புனிதமான (Devine) முன்நிபந்தனைகளாக தோற்றமளித்தது.   
          

இது போன்ற நிலையிலான சமூகமே ஒரு காலத்தில் உலகமெங்கும் நிலவியது. இங்கே உழைப்புக்கு முன் நிபந்தனையான உழைப்பாளர்களுக்கும் உரிமையாளருக்குமிடையே வேறுபாடு காணப்படவில்லை. சமூகத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் ஒரே சமயத்தில் உழைப்பவராகவும் உரிமையாளராகவும் இருந்தனர். இதுவே உழைப்புக்கு நிபந்தனையாக இருந்தது‌. சுரண்டுவோர் சுரண்டப்படுவோர் என்ற உறவே இருக்கவில்லை. உடைமையும் உழைப்பும் ஒன்றாக இருந்தன. இதனால் இங்கே ‘பொற்காலம்’ என்று புராதன பொதுவுடைமை நிலவியது. இங்கு மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையே முழுமையான சமத்துவம் நிலவியது. 
      

இந்த புராதன சமூக அமைப்பு உடைந்த போதுதான் புதிய சுரண்டலுக்கான உறவுகள் உருவாயின. அதாவது நிறைய புதிய சமூக பொருளாதார  அமைப்புகள் உருவாயின. இங்குதான் புராதன பொதுவுடைமை சமுதாயம் கண்டிப்பாக அடிமை சமுதாயத்தால் இடமாற்றம் செய்யப்படும் எனவும்அது கட்டாயமாக நிலப்பிரபுத்துவத்தால் இடமாற்றம் அடையும் எனவும், மீண்டும் அது முதலாளித்துவத்தால் இடமாற்றம் அடையும் என்றும் எந்திரகதியாக மார்க்சியத்தை பொருத்துவது உடைகிறது. தற்போது வெளியிடப்பட்டுள்ள குறிப்புகளில் மார்க்ஸ், புராதன பொதுவுடைமை சமுதாயம் குறைந்தது நான்கு வகைகளில் மாறுபடுவதாக கூறுகிறார். அவை பண்டைக்கால செவ்வியல் [அடிமைச்] சமூகம் (கிரீஸ் மற்றும் ரோம்), ஜெர்மானிய, ஸ்லாவோனிய, ஆசியபாணி ஆகியவை. இவைகளை குறிப்பிடுவதால் வேறு வகைகளில் மாற்றம் நிகழ்ந்திருக்காது என்பதாக புரிந்து கொள்ளக்கூடாது. இந்த நான்கு வகையான முதலாளித்துவத்துக்கு முந்தைய அமைப்புகளைப் பற்றிய உண்மை தரவுகளைத்தான் அப்போது மார்க்ஸ் பெற்றிருந்தார்.

    பண்டைக்கால செவ்வியல் [அடிமைச்] சமூகங்களின் வரலாறு நகரங்களின் வரலாறாகும். ஆனால் இந்த நகரங்கள் நிலவுடமையையும் விவசாயத்தையுமே அடிப்படையாக கொண்டிருந்தன. ஆசிய வரலாறு நாட்டிற்கும் (country) நகரங்களுக்குமிடையே வேறுபாடற்ற ஒற்றுமைத் தன்மையை கொண்டிருந்தது. (பெரிய நகரங்கள், சரியாக சொன்னால், வெறும் அரச குடும்பங்களின் முகாமாகவே இருந்ததாக கருத வேண்டும்; அது உண்மையான பொருளாதார கட்டமைப்பின் மேலடுக்காகவே இருந்தது); மத்திய காலம் (ஜெர்மானிய காலம்) நாட்டுப்புறப் பகுதிகள் வரலாற்றின் நியமப்பாதையாக ஆனதிலிருந்து துவங்குகிறது. அதன் அடுத்தகட்ட வளர்ச்சி நகரங்களையும், நாட்டையும் எதிர்த்து நின்ற போக்கில் இருந்தது; நவீனம் (வரலாறு)  என்பதுபண்டைய  காலங்களில் நகரங்களை நாட்டுப்புறங்களாக்குவது போல் அல்லாமல், நாட்டுப்புறப் பகுதிகளை நகரமயமாக்குவது என்பதாக இருந்தது. (pp.77-78).


 
ஸ்லாவோனிய வகையை பொறுத்தவரை, மார்க்ஸ் ‘ரஷ்ய வகை’ என அழைக்கிறார். அவர் இதனை  “அதிக எண்ணிக்கையிலான வளர்ச்சி படிநிலைகளைக் கடந்து உருவான மிக நவீன வடிவிலான தொன்மை வகை”(p.142), என்கிறார். மீண்டும்:  ‘நில சொத்து சமூகத்தினுடையது, ஆனால் ஒவ்வொரு விவசாயியும் மேற்கு நாடுகளின் சிறு விவசாயிகள் போலவே தனது நிலத்தை தானே உழுது கவனித்து வந்தான். ‘(p.144). மார்க்ஸ் இங்கு ஒரு தேவையான எச்சரிக்கையை விடுக்கிறார்:

‌”புராதன சமூகங்கள் ஒரே மாதிரியான பாணியில் அமையவில்லை. மாறாக, ஒட்டு மொத்தமாக பார்த்தால், அவை தொடர்ச்சியான சமூகத்தின் ஒன்றிணைந்த குழுக்களால்  (social groupings), வேறுபட்ட விதத்திலும் , வேறுபட்ட முதிர்ச்சி நிலையிலும், என தொடர்ச்சியான வளர்ச்சிக் கட்டங்களை குறித்தன. இதில் ஒரு வகைபெரும்பாலும் எல்லோரும் ஏற்றுக் கொள்ளும்,    ‘விவசாய சமூகம்’, ரஷ்ய பாணி சமூகமாகும். இதற்கு இணையான மேற்கத்திய சமூகம் ஜெர்மானிய பாணி சமூகமாகும். இது மிக இளையதாகும். 

  ஆசியாவில், ஆப்கன் போன்ற நாடுகளில், ‌’கிராம சமூகம்’ இருந்தது. ஆனால் அவை எல்லா இடங்களிலும் மிக இளைய வடிவமாகும். ஏனெனில் அவையே தொன்மையான சமூக அமைப்புகளில் கடைசி வடிவமாகும். புராதன சமூக அமைப்புகளின் கடைசி கட்டத்தில், விவசாய சமூகமே இரண்டாம் தர சமூகமாக மாறும் கட்டத்தில் இருந்தது. அதாவது பொது சொத்து அடிப்படையிலான சமூகத்திலிருந்து தனி சொத்து அடிப்படையிலான சமூகமாக மாறும் நிலையிலிருந்தது. இந்த இரண்டாம் தர அமைப்பு அதன் தொடர்ச்சியான அடிமைகள் மற்றும் பண்ணை அடிமைகள் அடிப்படையிலான சமூகங்களையும் உள்ளடக்கி இருந்தது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். (P.144-145). “என்கிறார் மார்க்ஸ்.


எனவே, ‘அடிமை சமூகம்-நிலப்பிரபுத்து சமூகம்-முதலாளித்துவ சமூகம்’ அல்லது   ‘ஆசியபாணி சமூகம்’- முதலாளித்துவ சமூகம் என்ற இரண்டுதான் இந்திய வரலாற்றைப் பற்றிய  மார்க்சிய புரிதலின் துவக்கமும் முடிவுமாகும் என  மந்திரக் கோல் வீசுவது மார்க்சியத்திற்கு எதிரானதாகும். எனவே இந்த சூத்திரத்தை மீண்டும் மீண்டும் கூறுவதுஉண்மை தரவுகளைக் கொண்டு அரும்பாடுபட்டு மேற்கொள்ள வேண்டிய ஆய்வுகளுக்கு மாற்றாகாது. இதனை இந்திய வரலாற்றின் மார்க்சிய மாணவர்கள் கட்டாயம் அறிந்திருக்க வேண்டும். 
‌    

அந்த குறிப்புகள், பரிணாம வளர்ச்சி அடிப்படையில், ஆசிய சமூகம்  பற்றி பொதுவாகவும், இந்திய சமூகம் பற்றி குறிப்பாகவும் போதுமான அளவில் உள்ளொளி செலுத்தியுள்ளன. ’கீழைத் தேய ஒடுக்குமுறை அரசு’ அமைப்பில் சொத்து என்ற ஒன்று சட்டப்படி இல்லை என்று கூறுவதை நோக்கி செல்வதாக உள்ளது. உண்மையில் பூர்வீக குடிகள் அல்லது பொது சொத்து என்பதே சொத்து உருவாவதற்கான அடிப்படை ஆகும். பெரும்பாலான இடங்களில் சிறு சமூகங்களுக்குள் தொழிலுற்பத்தி மற்றும் விவசாயம் இரண்டும் இணைந்தே சொத்துக்களை உருவாக்கின. இவை தன்னிறைவு பெற்றதாகவும்உற்பத்தி மற்றும் உபரி உற்பத்தி மீதான கட்டுப்பாடுகளை தமக்குள்ளேயே கொண்டதாகவும்இருந்தன.’ 
    

இதன் ஒரு பகுதி  உபரி உழைப்பு’, இறுதியில் தனிமனிதனாக உருவான உயர் சமூகத்திற்கு சொந்தமாக இருந்தது. இந்த உபரி உழைப்பு, நன்றி கடனாகவும், ஒற்றுமையின் புகழுக்காகவும்எதேச்சாதிகாரத்திற்கான ஒரு பகுதியாகவும்கடவுளாக காட்டப்பட்ட  பூர்வீக குடிகளின் கற்பனையான நிறுவனத்திற்கான ஒரு பகுதியாகவும் , பொது உழைப்பு வடிவில் தரப்பட்டது.’ .என்கிறார் மார்க்ஸ்.(p.70)
     
கிழக்கத்திய அடிமை முறையையும் , ஐரோப்பிய அடிமை முறையையும் மார்க்ஸ் ஒப்பீடு செய்திருப்பது சிறப்பானதும் முக்கியமானதும்  ஆகும்.

         இது ஆசியபாணி, ஸ்லாவோனிய பாணி, பண்டைக்கால தன்னாட்சி குடியரசுகள், ஜெர்மானிய பாணி அனைத்துக்கும் பொருந்தும். அதாவது  வேலை (உற்பத்தி) செய்பவனுக்கும்(அல்லது தன்னைத்தானே மறுஉற்பத்தி செய்து கொள்பவன்), உற்பத்தி மறு உற்பத்தி செய்வதற்கான நிலைமைகளுக்கும் இடையிலான உறவுஅவை  அவனுக்கே சொந்தம் என்பதையே உண்மையில் சொத்து என்பது காட்டுகிறது.எனவே உற்பத்தி செய்வதற்கான நிலைமைகளுக்கேற்ப சொத்து வெவ்வேறு விதமான வடிவங்களை எடுக்கிறது.  உற்பத்தியின் நோக்கம், உற்பத்தியாளரையும், உற்பத்தியாளர் உயிர் வாழ்வதற்கான புற நிலைகளையும் சேர்த்து மறு உற்பத்தி செய்வதே. ……அடிமை முறை, பண்ணை அடிமை முறை மற்றும் இதர., இங்கே உழைப்பவரே மூன்றாவது ஒருவருக்காகவோஅல்லது சமூகத்திற்காவோ தனது உற்பத்தி செய்வதற்கான  இயற்கையான நிலைகளுடன் முன்வருகிறார்.  இதனால் இங்கு சொத்து, சுதந்திரமாக உழைப்பவனுக்கும், அவனது புறநிலைக்கும் உறவாக இனியும் நீடிப்பதில்லை. அது இப்போது முதல் நிலையிலிருந்து இரண்டாம் நிலைக்கு சென்று விடுகிறது. இதுதான் சமூகத்தின் மூலமும் சமூக உழைப்பின் மூலமும் உருவாக்கப்பட்ட சொத்தின்  அறிவுபூர்வமான, தேவையான முடிவு [முடிவாக இருந்தாலும்] ( அடிமை சமூகத்தின் இந்த பண்பு  பொதுவான கிழக்கத்திய அடிமை முறைக்கு பொருந்தாது. ஏனெனில் இது ஐரோப்பியரின் கண்ணோட்டத்திலிருந்து உருவாக்கப்பட்டுள்ளது).(ப.95) 
      

இங்கே மார்க்ஸ் மற்ற ஐரோப்பிய நாடுகளைப் போலவே இந்தியாவிலும் புராதன பொதுவுடைமை சமுதாயத்திலிருந்து அடிமை சமுதாயம் வளர்ந்தது என காட்டும் தவறான முயற்சிகளை சுட்டி காட்டுகிறார். கிழக்கத்திய நாடுகளில் வளர்ந்த அடிமை முறை, அது பண்டைய கிரீஸ் மற்றும் ரோம் நாடுகளில் நடைபெற்ற முறைகளிலிருந்து வேறுபட்டவை. மேலும் கிழக்கத்திய நாடுகளின் அடிமை முறையிலும் கூட மேற்கு ஆசியாவில் (எடுத்து காட்டாக) வளர்ந்தது போல் இந்தியாவில் வளரவில்லை. இங்கு சமூக முன்னேற்றம் முற்றிலும் மாறுபட்ட வழியில் நடைபெற்றது. 
மார்க்ஸின் விவரங்கள் நமக்கு கிழக்கத்திய மற்றும் ஐரோப்பிய நாடுகளில்    புராதன பொதுவுடைமை சமூகம் எவ்வாறு வர்க்க சமூகமாக மாறியது என்பதனை அறிவதற்கான ஒரு உள்நோக்கு பார்வையை மட்டுமே கொடுத்துள்ளது. 

மார்க்ஸ், சமூக சொத்து எவ்வாறு பல்வேறு வழிகளில், அரசு மற்றும் தனியார் சொத்துக்களாக அதனுள்ளேயே வளர்ந்தன என்பதையும் , அவை வளர்ச்சி போக்கில் எவ்வாறு பிரிந்தன என்பதையும் விவாதிக்கிறார்.
     

ஆசியபாணி சமூகம் நிச்சயமாக மிகவும் நீண்ட காலம், இறுக்கமாக நிலைத்துள்ளது. ‘இதற்கு அவை நிறுவப்பட்டிருந்த அடிப்படை கோட்பாடுகளே காரணம். அதாவது தனிமனிதன் சமூகத்திலிருந்து சுதந்திரமாக இருக்கவில்லை; உற்பத்தி சுழற்சி தன்னிறைவு பெற்றதாக இருந்தது; விவசாயம் மற்றும் கைத் தொழில்களிடையே நிலவிய ஒற்றுமை… மேலும் சில…ஒரு தனிமனிதன் சமூகத்துடனான தனது உறவையும் பொருளாதார சூழலையும் மாற்றிக் கொண்டால் நேர்மாறாக அதன் இயக்கவியல்படி  அவனது பொருளாதார சூழல் மாற்றப்படும் அதாவது அவன் வறிய நிலை போன்றவற்றிற்கு  ஆளாவான். (P.83)”
    

ஏன் இந்த” நீண்டகால இறுக்கமான நிலைப்பு” ஆசியாவில் நடந்தது? இதற்கு சாதி முறை ஒரு குறிப்பான , முக்கியமான பங்கை செலுத்தி உள்ளது என்பதை அந்த விவரங்கள் கோடிட்டு காட்டுகின்றன.  மார்க்ஸ் அதற்கு பின்வரும் விவரங்களைத் தருகிறார்:

பண்டைய கால அரசுகளில் பூர்வீக குடிகள் இரண்டிலொரு விதத்தில் , அதாவது இரத்த  உறவுகளாலோ அல்லது இடத்தினாலோ, (kindhip or locality)  அமைந்தன. இடத்தை அடிப்படையாகக் கொண்ட பூர்வீக குடிகளுக்குஇரத்த உறவு பூர்வீக குடிகள் வரலாற்று ரீதியில் முற்பட்டவர்கள். மேலும் எல்லா இடங்களிலும் அவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.  அவர்களின் மிக மோசமான மற்றும் இறுக்கமான சாதி நிறுவனங்கள் அவர்களை ஒருவரிடமிருந்தே இன்னொருவரை பிரித்து வைத்திருந்ததுஅவர்களுக்கிடையே திருமண உரிமை மறுக்கப்பட்டிருந்தது, மிக வேறுபட்ட நிலைகளில் வைக்கப்பட்டிருந்தனர், ஒவ்வொருவரும் தங்களுக்கே உரிய மாற்ற இயலாத தொழிலை மேற்கொண்டிருந்தனர்.”  (P.76-77).
மீண்டும் நிச்சயமாக புராதன சொத்து விசைகள்  உற்பத்தியை கட்டுப்படுத்திய பல்வேறு  புற சூழல்களிலிருந்துசொத்து உறவுகள் என்பதற்குள் மூழ்கிவிட்டன. அவையே பல்வேறு வகைப்பட்ட சமூகங்களுக்கும் பொருளாதார அடிப்படை ஆகும். அவையே குறிப்பிட்ட சமூக அமைப்புகளாக முன்னதாக கருதப்பட்டன. இந்த அமைப்புகள், உழைப்பவன் தானே தன்னை உற்பத்திக்கான புற நிலைகளின் முன் வைத்துக் கொள்ளும் போது குறிப்பிடத்தக்க அளவில் மாற்றமடைந்தன. (அடிமை முறை மற்றும் பண்ணை அடிமை முறை போன்றவற்றில் இருந்தது போல). இதன் விளைவாக முதன்முதலாக சொத்து (நில சொத்து)தான் தழுவியிருந்த  எளிமையான பொது இயல்பை இழந்தது. மேலும் அதன் சுய அழிவுக்கு வந்தது. இரண்டாவதாக (உற்பத்தி கருவி சொத்துக்கள்) குறிப்பிட்ட வகை உழைப்பாளி- அதாவது கைத்திறன் மற்றும் அதன் தொடர்ச்சியாக உருவான உற்பத்தி கருவிகள் மீதான சொத்து – உற்பத்தி  கட்டுப்பாடுகளின் சொத்திற்கு சமமாக விளங்கியதுஇது அடிமை முறை மற்றும் பண்ணை அடிமை முறையில் இல்லை என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும். எனினும் இது சாதிய முறை என்ற வடிவில் ஒத்த எதிர்மறை வளர்ச்சிக்கு வழி வகுப்பதாக இருந்தது. (p.101-102).

இரத்த உறவு பூர்வீக குடிகள் சாதி என்ற இறுக்கமான கட்டமைப்பாக வளர்ந்தனர். இது இரண்டு வகையான சொத்துக்கள் உருவாகி ஒத்த எதிர்மறையான வளர்ச்சிக்கு வழிவகுத்தன. இது தவிர்க்கவியலாமல்நீண்ட நெடிய காலத்திற்குஇறுக்கமாக நிலைக்கும் சமூக பொருளாதார அமைப்பிற்கு வழிவகுத்தது. அதாவது மாற்றம் எய்துவதற்கான நிலையை முடிந்தவரை தடுக்கும் வகையில் இருந்தது. இதுவே இந்திய சமூக கூறுகள் குறித்து மார்க்ஸ் நமக்கு தரும் ஒருசில குறிப்புகள் ஆகும். எனினும் கிடைத்துள்ள தரவுகளைக் கொண்டு இதன் உண்மைத் தன்மைகளை ஆய்வு செய்ய இந்திய வரலாற்று மாணவர்களுக்கும் அறிஞர்களுக்கும் இவை குறிப்பிடத்தகுந்த அளவில் போதுமானவையே.  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), தனது கட்சித் திட்டத்தில் குறிப்பிட்டிருப்பது போல:
       

முதலாளித்துவ முறையில் வளர்ந்தாலும், இந்திய சமூகம் இன்னும் முதலாளித்துவத்திற்கு முந்தைய வலிமையான கூறுகளையும் தனக்குள்ளே கொண்டுள்ளது. முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில்,  முதலாளித்துவத்துக்கு முந்தைய சமூகத்தின் சாம்பலிலிருந்து  வளர்ந்து, முந்தைய சமூகம்,  வளர்ந்து வரும் முதலாளித்துவ வாதிகளால்  அழித்தொழிக்க பட்டது போல்  அன்றி இந்தியாவில் முதலாளித்துவம் முதலாளித்துவத்துக்கு முந்திய சமூகத்தின் மேலடுக்காக  உள்ளது. நூற்றாண்டுகளாக இந்த நாட்டை ஆண்ட பிரிட்டிஷ் காலனியவாதிகளோ, 1947ல் அதிகாரத்தை கைமாற்றிக்கொண்டஇந்தியமுதலாளித்துவ வர்க்கமோஇந்தபழைய அமைப்பை உதைத்து தள்ளிவிடுவதை முதலாளித்துவ  அமைப்பு சுதந்திரமாக வளர்வதற்கும் அதன்பின் அதை சோசலிச சமூகத்தால் இடமாற்றம் செய்யவுமான முன் தேவையான இதை செய்ய வில்லை. அதனால் இன்றைய இந்திய சமூகம்சாதி, இன, பூர்வீக குடிகள் நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்துள்ள ஏகபோக முதலாளித்துவ ஆதிக்கம் கொண்ட  ஒருவித வினோதமான கலவையாகும். ஆகவே, இந்த முதலாளித்துவத்துக்கு முந்தைய சமூக அமைப்பைஅனைத்து முற்போக்கு சக்திகளையும் ஒன்றுபடுத்தி அழிக்க வேண்டிய பொறுப்பு கட்சியின் மீதும் தொழிலாளர் வர்க்கத்தின் மீதும் விழுந்துள்ளது. மேலும், அதன்மூலம் புரட்சிகர சக்திகளை தங்களுக்குள் ஒருங்கிணைத்து,  அதிவிரைவில் ஜனநாயக புரட்சியை நடத்தி முடித்து அதன் மூலம் சோசலிச மாற்றத்திற்கான சூழலை ஏற்படுத்தவேண்டும். 
        

அது மட்டுமல்ல இந்திய சமூகம் குறித்து விரைவாக குவியும் உண்மை தரவுகளைக் கொண்டு அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்து ‘நீண்டகாலமாக மிகவும் இறுக்கமாக  நிலைகொண்டு இருக்கின்ற’  முதலாளித்துவத்திற்கு  முந்தைய சமூக  அமைப்பு என்ற மார்க்சிய புரிதலை வலுவாக்க வேண்டியது மார்க்சிய அறிஞர்களின் பொறுப்பாகும். அத்துடன் அவர்கள்பண்டைய காலம் முதல் இன்று வரையிலான இந்திய வரலாற்றை மறு கட்டமைப்பு செய்ய முயற்சி எடுக்க வேண்டும். 

தொடரும்....


No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்