தமிழை இழிவாக பேசும் நோக்கம் என்ன?

முந்தைய பாராளுமன்ற உரையில் நிதி அமைச்சர் என்ற நிலையில் நிர்மலா அவர்கள் 11-03-2025 அன்று பேசியதை பெரிய அளவில் எதிர்ப்பு தெரிவித்தார்களா தெரியவில்லை ஆனால் அதனை எதிர்த்து கமல் பேசியதை கேட்டேன்... இதனை பற்றியதே இந்தப்பதிவு... 


நம்மிடையே காணும் பலர் தங்களை தமிழையும் தமிழர்களின் உயர்வுக்காக பாடுபடுவதாக பேசுகின்றனர் ஆனால் இந்த கமலஹாசன் பேசிய அளவிற்கு கூட பேசியதாக தெரியவில்லை இவை ஏன் சொல்வார்களா?

எமது கேள்வி மிக எளிது, பல்வேறு தேசியங்களின் சிறைகூடமாக உள்ள இந்தியாவின் பாராளுமன்றத்தில் என்ன திமிரில் என்ன அகங்காரத்தில் ஒரு அமைச்சர் ஒரு மொழியின் மீது வன்மம் கொண்டு பேசினார்? அது யார் பேசியதாக இருக்கட்டும்! அவர் அதை அங்கு பேச வேண்டிய தேவை என்ன??? தமிழர்களின் வரியை பிடிங்கும் இவர்கள் தமிழர்களின் கல்வி வேலைவாய்ப்பு மருத்துவம் எதனையும் வழங்காது காட்டுமிரண்டிகால தனது சனாதனத்தையும் ஏகாதிபத்திய கார்ப்ரேட் கொள்ளைக்கு வழி செய்ய நினைக்கும் இவர்கள் உழைக்கும் மக்களின் உதிரத்தை குடிப்பதுடன் மொழியாலும் இழிவுப்படுத்தி அவர்களின் வாழ்வுரிமையை கொச்சப்படுத்த அதிகாரம் தந்தது யார்? ஓட்டு கேட்க வேண்டிய தேவையில்லை பின்வாசல் வழியாக மந்திரியாகி விடலாம் என்பதனால்தானே? இவரை போன்ற மக்கள் விரோதிகளை அம்பலப்படுத்தி எத்தனை பேர் பேசியுள்ளனர் தெரியவில்லை ஆனால் இவை வன்மையாக கண்டிக்க தக்கவை இவரை போன்றோரை மக்கள் மன்றத்தில் தண்டிக்க வேண்டும்...

++++++++++++++++

கீழே சில தோழர்களின் பதிவு புரிதலுக்கே...

தோழர் அ.பகலவன் முகநூல் பதிவு இவை:- நான் தமிழ் மொழியை இழிவாக சொல்லவில்லை பெரியார் சொன்னதைத்தான் நான் மேற்கோளாக சொன்னேன் ,
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெரியாரே மேற்கோளாகத்தான் சொன்னார்.

சரி , தமிழை மதிக்கிற பாஜக சமஸ்கிருதத்துக்கு ஒதுக்கும் நிதி அளவுக்கு , தமிழ் மொழிக்கும் நிதி ஒதுக்குங்கள் நீதிமன்ற மொழியாக ,
ஆட்சி மன்ற மொழியாக, அனைத்து நிலையிலும் தமிழ் ஆட்சி மொழியாக வருவதற்கு தடையாக இருப்பது யார்...?

அவர்களை அம்பலப்படுத்தி விட்டு, தமிழை அறியணையில் ஏற்றிவிட்டு அப்புறம் விமர்சியுங்கள். அப்புறம் விமர்சியுங்கள் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்...

+++++++++++++++++++++++++++++++++++ எமது சில வினாக்கள் விளக்கங்கள்

தேசிய இயக்கங்களின் பொருளியல் அடிப்படையைப் பற்றி லெனின் பின்வருமாறு கூறுகிறார்;உலக முழுவதிலும் முதலாளித்துவமானது நிலப்பிரபுத்துவத்தின் மீது இறுதி வெற்றி கொள்ளும் காலகட்டம் தேசிய இயக்கங்களுடன் இணைந்துள்ளது. சரக்கு உற்பத்தியின் முழுவெற்றிக்கு உள்நாட்டு மார்க்கெட்டைப் பூர்சுவாக்கள்(முதலாளிகள்) கைப்பற்ற வேண்டியது அவசியம்; ஒரே மொழி பேசும் மக்களைக்கொண்ட அரசாங்க ரீதியில் ஐக்கியப்படுத்தப் பட்ட நிலப்பரப்புகள் அதற்கு வேண்டும். அம்மொழியின் வளர்ச்சிக்கும் அதன் இலக்கியம் உருப்பெற்றுத் திகழ்வதற்கும் முட்டுக் கட்டையாக உள்ள தடைகள் அகற்றப்பட்ட வேண்டும். இங்கேதான் தேசிய இயக்கங்களின் பொருளியல் அடித்தளம் இருக்கிறது. மனித உறவுகளுக்கு மிகமிக முக்கியமான சாதனம் மொழி. நவீன முதலாளித்துவத்துக்கு ஏற்ற அளவில் உண்மையிலேயே சுதந்திரமான, விரிவான வாணிகத்துக்கும், மக்கள் சுதந்திரமாகவும் விரிவாகவும் பல்வேறு வர்க்கங்களாக அமைவதற்கும், இறுதியாக மார்க்கெட்டுக்கும் ஒவ்வொரு சிறிய, பெரிய உடமையாளனுக்கும், விற்போருக்கும் வாங்குவோருக்கும் இடையில் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்துவதற்கும் மிக மிக முக்கியமானத் தேவையான சூழ்நிலைகள், மொழியின் ஐக்கியமும் தடையற்ற வளர்ச்சியும்தான்.”(லெனின்-தேசிய இயக்கங்களின் சுயநிர்ணய உரிமை)

இந்திய உழைக்கும் மக்களின் வாழ்வை சூறையாடிக் கொண்டிருக்கிறார்கள். இது முன்னாள் பிரிட்டிஷ் காலனியின் போது எப்படி எல்லாம் இங்கு கொள்கை முடிவுகளை பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகள் எடுத்தார்களோ, அதுபோலவே தற்போது வெவ்வேறு ஏகாதிபத்தியவாதிகள் இந்தியாவின் அரசியல் பொருளாதாரக் கொள்கைகளை தீர்மானிக்கிறார்கள்.
வேலையின்மை வளர்ந்திருக்கிறது, பட்டினிச்சாவு அதிகரித்திருக்கிறது, விவசாயிகள் தற்கொலை கூடிக்கொண்டே போகிறது. இதுதான் இவர்கள் சொன்ன வளர்ச்சியா? இந்தக் கொடுமைகள் அதிகரித்ததற்கு இந்திய ஒற்றை ஆட்சிதானே காரணம்.

இந்தியாவிலுள்ள தேசங்களை உள்நாட்டு வெளிநாட்டு கார்ப்பரேட்டுகள் சுரண்டும் நோக்கத்திலிருந்தே அடிமைப்படுத்தி ஒடுக்குகிறார்கள். அவர்களுக்கு இந்தியாவை மத்தியிலும் மாநிலத்திலும் ஆளும் அரசியல்வாதிகள் துணைபோகிறார்கள். ஆகவே தேசங்களின் மீதான ஒடுக்குமுறைக்கு முடிவுகட்ட உள்நாட்டு வெளிநாட்டு கார்ப்பரேட் முதலாளிகளின் சுரண்டலை ஒழித்துக்கட்டவும் அவர்களுக்கு துணைபோகும் ஆட்சியாளர்களை புறக்கணித்து ஒவ்வொரு தேசங்களும் சுதந்திரமான தேசிய அரசுகளை உருவாக்க வேண்டும்.

கார்ப்பரேட்டுகளின் சுரண்டலை ஒழிக்காமல் சுதந்திர தேசிய அரசுகளால் அதன் சுதந்திரத்தை நீண்டகாலம் பாதுகாக்க முடியாது. இங்கே சிலர் தமிழர்களாகிய நாம் ஆங்கிலம் கற்றுக்கொள்வதில் என்ன தவறு இருக்கிறது என்று அப்பாவித்தனமாக கேள்வி எழுப்புகிறார்கள். தமிழ் மக்களில் சிலருக்கு ஆங்கிலம் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இருக்கலாம், அவர்கள் ஆங்கிலத்தை கற்றுக்கொள்வதை நாம் தடுக்கவில்லை. அவர்களுக்கு ஆங்கிலத்தை கற்றுக்கொள்வதற்கு உரிமை உண்டு என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் தமிழர்கள் அனைவரும் ஆங்கிலம் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியமா? தேவையில்லை என்பதுதான் எமது கருத்தாகும். ஆங்கிலத்தை கற்றுக்கொண்டால் தமிழர்களுக்கு வேலை கிடைக்கும் என்பது கடைந்தெடுத்த பொய்யாகும். ஆங்கில கல்வி பெற்ற பல ஆயிரக்கணக்கான தமிழர்களுக்கு வேலை இல்லை என்பதைத்தான் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கிறது. வேலையின்மைக்கு இந்த முதலாளித்துவ உற்பத்திமுறைதான் காரணம் ஆகும். முதலாளிகள் இலாப நோக்கத்தில் செயல்படுவதால் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை எந்தளவுக்கு அதிகரிக்கிறதோ அந்தளவுக்கு அவர்கள் கூலியை குறைத்துகொடுத்து சுரண்டி இலாபத்தை பெருக்கமுடியும் என்பதால் இங்கு அனைவருக்கும் வேலை கிடைக்கவில்லை.

இந்த முதலாளித்துவ உற்பத்திமுறையை ஒழிக்காமல் நம் அனைவருக்கும் வேலை கிடைக்காது என்ற உண்மையை மூடிமறைத்துவிட்டு ஆங்கிலம் படித்தால் வேலை கிடைக்கும் என்று திராவிட அரசியல்வாதிகளும், இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்று காங்கிரஸ் மற்றும் பாஜக அரசியல்வாதிகளும் பிரச்சாரம் செய்து நம்மை ஏமாற்றுகிறார்கள். எனினும் இந்த அயோக்கியர்கள் எங்கும் ஆங்கிலம், எதிலும் ஆங்கிலம் என்ற நிலையை உருவாக்கி ஆங்கிலம் படிக்க வேண்டியதை கட்டாயமாக  செயற்கையாக மாற்றியுள்ளனர். அதேபோலவே எங்கும் இந்தி எதிலும் இந்தி என்ற நிலையை உருவாக்கி இந்தியை படித்தே தீரவேண்டும் என்ற நிலையை உருவாக்கியுள்ளார்கள். இதன் மூலம் இவர்கள் மக்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதை தொடர்ந்து மறுத்து மக்களை ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார்கள். மேலும் இவர்கள் பணமில்லாதவர்களுக்கு கல்வியே இல்லை என்ற நிலையை உருவாக்கிவிட்டு ஆங்கிலம் படித்தால் வேலை, இந்தி படித்தால் வேலை என்று நாடகமாடுகிறார்கள். இந்த உண்மையைப் புரிந்துகொள்ளாமல் நாம் ஆங்கிலத்தை படிக்கலாமே என்று அப்பாவித்தனமாக எண்ணுபவர்கள் உண்மையைப் புரிந்துகொள்ள வேண்டும். தமிழர்கள் அனைவரும் ஆங்கிலம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் இந்தியை கற்றுக்கொள்ள வேண்டும் என்பது அயோக்கியத்தனம் மட்டுமல்ல அடக்குமுறையும் ஆகும்.

அதிகாரத்தில் உள்ளவர்கள்  மத்தியிலும் மாநிலத்திலும்  தமிழுக்காக என்ன செய்துக் கொண்டுள்ளனர்?
தமிழ் தேசிய இனம் உள்ளிட்ட இந்தியாவில் உள்ள அனைத்து தேசிய இனங்களும் (பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய) சுயநிர்ணய உரிமையை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இல்லை அதனை பேசுகின்றனரா? அரசில் அங்கம் வகிக்கும் வகிக்க துடிக்கும் ஒட்டரசியல் கட்சிகள்.
இதில் இங்குள்ள....
தமிழ் தேசியவாதிகள் உட்பட தமிழ்தேச இனவாதிகள், திராவிடம் பேசி தமிழை விட ஆங்கிலதிற்கு முன்னுரிமை கொடுக்கும்  திராவிட இயக்கங்கல் கட்சிகள், இன்று புற்றிசலாய் உள்ள தலித்திய இயக்கங்கள், மேலும் திருத்தல்வாத கம்யூனிஸ்ட் கட்சிகள் நிலைப்பாடும் ஒன்றாய் உள்ளதை காண்கிறோம்.
பேச்சுக்குதான் திராவிட - ஆரிய இனவாதிகளின் மோதல் அரசு பொருளாதார சட்ட திட்ட நிலைபாடுகளும் ஒன்றே தான்... ஆகையால் இவர்களுக்கு பெரிய பிரச்சினை இல்லை ஆனால் நமக்கு பிரச்சினை உள்ளது!

++++++++++++++++++++++++++++++++++
மேலும் இன்னும் இரு தோழர்களின் முகநூலிலிருந்து
************************************
தோழர்களே!
நான் "தமிழர்கள்" என்பது பற்றிப் பேசுவது, திராவிடர்கள் என்பது பற்றியேயாகும். திராவிடம் என்றாலும், தமிழ்நாடு என்றாலும் ஒன்றுதான்! இது சரித்திர ஆராய்ச்சிக்காரர்கள் முடிவாகும். திராவிடம் என்ற பேச்சே தமிழ் வார்த்தையாகும். எப்படி எனில் திரு இடம் என்பதுதான் திருவிடமாகி, திராவிடம் என்பதாக ஆகிவிட்டது. தமிழர்கள் திரு என்கின்ற வார்த்தையை ஒரு மேன்மை அணியாக ஒவ்வொன்றுக்கும் உபயோகிப்பது வழக்கம்.
வடவர்கள் எப்படி சிரீ என்பதை ஒவ்வொரு வார்த்தைக்கும் முன்னால் உபயோகிக்கிறார்களோ அதுபோல், தென்னவர்கள் திரு என்பதை உபயோகிக்கிறார்கள். திருப்பதியை திருமலை என்கிறோம். ஆரூரைத் திருவாரூர் என்கிறோம். ஐயாறைத் திருவையாறு என்கிறோம். அதுபோல் தமிழர் வாழ் இடம் முழுமையும் திருஇடம்- திருவிடம் என்கிறோம். இது வடமொழி உச்சரிப்பால் திராவிடமாகிவிட்டது. தமிழ் என்றால் இனிமை, இனிமைக்கு மேன்மை தருவது இயற்கையல்லவா! ஆதலால், நான் யோசித்தவரை இதைத்தவிர திராவிடம் என்கிற வார்த்தைக்குக் காரணம் எனக்குத் தோன்றவில்லை.
நமது பண்டிதர்கள் பலர், "தமிழ் என்பது த்ரமிளமாகி, த்ரமிழமாகி, திராவிடமாகி விட்டது" என்று சொல்லுவதுண்டு. ஆனால், ஒரு வார்த்தையானது 4, 5 தடவை மாறி இருக்கும் என்பதைவிட, நான் சொல்லுகிறபடி ஒரே மாற்றம்தான் ஆகியிருக்கலாம் என்பது மிகப் பொருத்தமாக இல்லையா? அது எப்படி இருந்தாலும் சரி; திராவிட நாடு, திராவிட மொழி, திராவிட மக்கள் என்ற கருத்தில்தான் வழங்குகிறார்கள். ஆதலால் திராவிடர் என்பவர் தமிழரே ஆவார்கள். அதனாலேயே திராவிடர்கள் என்று பேசுகிறேன்.
திராவிடர் என்பது #நாட்டைப் பொறுத்தே ஏற்பட்ட பெயராகும். ஒவ்வொரு மக்களுக்கும் நாட்டைப் பொறுத்தும் #மொழியைப் பொறுத்தும்தான் பெயர் வருகிறது. மலையாளிகளுக்கு மலைப்பாங்கைப் பொறுத்தே அந்தப் பெயர் வந்தது.
இந்த முறையில் பார்த்தோமானால், திராவிட நாடு, தமிழ்நாடு என்பது மேன்மையையும், இனிமையையும் பொறுத்து ஏற்பட்ட பெயராகும். ஆனால், நம் திராவிட நாடானது நாம் இன்று கூறும் எல்லையை மாத்திரம் கொண்டதல்ல! இட்லர் சொல்லுகிறபடி நாட்டு எல்லை, கடவுளால் சிருஷ்டிக்கப்பட்டதல்ல; மக்களால் சிருஷ்டிக்கப்படுவது. திராவிட மக்கள் ஒரு காலத்தில், திராவிட நாட்டு விஸ்தீரணமாக இன்றைய இந்தியா முழுவதையும் கொண்டு இருந்தார்கள்.. திராவிட நாட்டுக்கு வட எல்லை இமயமலை! மற்ற மூன்று புறத்து எல்லை பெரிதும் சமுத்திரம்!! இப்படி இருந்ததற்கு ஆதாரம்
இதோ பாருங்கள், இந்த இந்திய சரித்திர பூகோளப் பாடப்புத்தகத்தில்!!
இன்றுள்ள இந்தியா படத்தைப் போட்டு இதற்கு திராவிடம் என்று பெயர் கொடுத்திருக்கிறார்கள்!!!
இது கிறிஸ்து பிறப்பதற்கு 2500 வருஷங்களுக்கு முன் வரையில் இருந்து வந்த பெயராகும். சரித்தக்காரர்கள் இன்றைக்கு 8000 வருடத்துக்காலம் வரைதான் சரித்திரம் கண்டுபிடித்து இருக்கிறார்கள். அதில் கிறிஸ்து பிறப்பதற்கு 2000 வருடத்துக்கு முன் முதல் கி.மு.6000 வருடம் வரை கண்டுபிடித்த சரித்திரப்படி, "இந்தியா" திராவிட நாடாக இருந்திருக்கிறது. இதில் இருந்த மக்கள் திராவிடர்களாகவே இருந்திருக்கிறார்கள். இதோ ஆராய்ச்சியாளர் குறிப்புப் பாருங்கள். மற்றும் #ஹரப்பா, மகஞ்சோதாரோ முதலிய இடங்களில் ஏற்பட்ட, புதிய கண்டுபிடிப்புகள் மூலமும், இந்தியா முழுவதும் திராவிட எல்லைக்கு உட்பட்ட விஸ்தீரணம் என்பது கல்லுப்போல் உறுதியாகி விட்டது.
............. .............
எனவே, இந்தியா என்பது முதலில் திராவிடமாய் இருந்தது. அதில் பூர்வகுடிகள் என்பவர்கள் திராவிடர்களாய் இருந்தார்கள் என்பதைக் குறிக்கின்றது.
11.01.1942 ஞாயிற்றுக்கிழமை #திருவள்ளூர்_நன்னெறிக் கழகத்தில் பெரியார் ஈ.வெ.இராமசாமி அவர்கள் செய்த சொற்பொழிவின் சுருக்கம்.
என்ற,
112 பக்க நூல்.
வெளியீடு: 27.09.2010
பெரியார் ஈ.வெ.இராமசாமி- நாகம்மை கல்வி, ஆராய்ச்சி அறக்கட்டளை வெளியிட்ட சிறுநூல். விலை உரு.30/-
மேலே உள்ள பதிவு நூலின் முன்பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இந்தப்பகுதி விவாததிற்கே

நிர்மலா அம்மையார் பேச்சு இந்த இணைப்பில்

இந்த தகவல்களை நக்கீரன் இணையத்தில் காண

கீழ்காணும் பகுதி தோழர் துரை சண்முகம் முகநூலிருந்தே... 

அமெரிக்க உஞ்சவிருத்தி!

........................................................

"தமிழ் படித்தால் 

பிச்சை கூட 

 கிடைக்காது!"

ஏகாதிபத்திய பிச்சையின் 

அசரீரி  ஒலிக்கிறது

ஆங்கிலம் படித்தாலும் அமெரிக்காவின் 

காலைப் பிடிக்க வேண்டும்; 

பிள்ளை மொழி 

இனிதானாலும் 

பிரிட்டிஷ்காரன் 

தாள் பணிந்து 

பிச்சை எடுக்க 

உதவியது மொழி மட்டுமல்ல,

பிழைப்பதற்கான வழி!

செம்மொழியாகக் கூட இருக்கலாம்! 

உற்பத்தி உறவுகளின் 

செய் மொழியாக இல்லாவிட்டால் 

எம்மொழியும்

'பத்து பைசாவுக்கு' 

பயன் இல்லை!

இது 

மொழிக் குற்றம் அல்ல

ஆளும் அடிமைகளின் 

அரசியல் வழிக் குற்றம்.

இருப்பினும் 

அம்மணி சொல்வது போல் 

"தமிழ் பிச்சை எடுக்க உதவாது!"

ஊஞ்ச விருத்திக்கு 

என்று 

உயர்வான மொழி 

இது அல்லவே!

'பஞ்ச' ரத்தின கீர்த்தனைகளின்

ஊஞ்ச விருத்திக்கு

நெஞ்சை நிமிர்த்திப் 

பாடுங்கள் நிம்மி,

டிரெம்ப்பின் தாள் பணிந்து 

பிச்சை எடுக்க உதவும்

பிழைப்பு மொழி 

ஏதாதிபத்திய 

பக்தி மொழிதான்!

ஒத்துக் கொள்கிறோம்.


திருவையாறு

தியாகராஜர்

ஆராதனைக்கும்,


திருவாட்டி

பட்ஜெட் 

தீபாராதனைக்கும்

பெரிதாக

சுருதி பேதமில்லை..

இரண்டின்

திசையும்

இனி,

உஞ்சவிருத்தி!

பஞ்ச ரத்ன கீர்த்தனை

பட்ஜெட் ராகத்தில்,

" எந்தரோ..மகானு..பாவுலு

எல்லாமே..தனியாருலு!

ராமா!..மானமு லேதா?

தனவாடனி..அபிமானமு லேதா!"

இரயில்..மின்சாரம்..

வங்கி..பொதுத்துறை

அந்த..ராமனும்

இனி..

தனியார் இலாபத்துக்கு

தோதா!

              - துரை. சண்முகம்.

++++++++++++++++++++

விவாதம் தொடரும்....

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்