இன்றைய இரவு விவாதிக்க உங்கள்முன் வைத்துள்ளவையே
மார்க்சிய சமூக அறிவியல்: உலகத் தோற்றம் மற்றும் மனிதப் பரிணாமம்
இந்த ஆதாரங்கள் மார்க்சிய சமூக அறிவியல் மற்றும் வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தின் அடிப்படையில் பிரபஞ்சத்தின் தோற்றம் முதல் மனித இனத்தின் பரிணாம வளர்ச்சி வரையிலான பாதையை விளக்குகின்றன. அறிவியல் பூர்வமான டார்வினின் பரிணாமக் கொள்கையை முன்வைக்கும் இக்கட்டுரை, மனிதன் ஒரு தனித்த படைப்பு என்ற மத ரீதியான நம்பிக்கைகளை மறுத்து, உழைப்பின் மூலமே சமூகம் உருவானதை வலியுறுத்துகிறது. பூமியின் உருவாக்கம், உயிரினங்களின் தோற்றம் மற்றும் ஹோமோ செபியன்ஸ் எனப்படும் நவீன மனிதர்களின் இடப்பெயர்வு போன்ற வரலாற்றுத் தரவுகள் இதில் விரிவாகப் பட்டியலிடப்பட்டுள்ளன. ஆதிப் பொதுவுடைமை சமூகம் எவ்வாறு வர்க்க அமைப்பாகவும், தந்தைவழிச் சமூகமாகவும் மாறியது என்பதை விளக்குவதன் மூலம் சமூக மாற்றத்தின் விதிகளை இது கற்பிக்கிறது. மேலும், சாதி மற்றும் மதக் கட்டுமானங்களை உடைக்க அறிவியல் ரீதியான தேடல் அவசியம் என்பதை வலியுறுத்தி, மனிதகுலம் அனைத்தும் ஒன்றே என்ற உண்மையை இப்பாடம் உணர்த்துகிறது. ஒரு நீதியான சமூகத்தை கட்டமைக்க கடந்த கால வரலாற்றை இயக்கவியல் நோக்கில் புரிந்துகொள்வது அவசியம் என்பதே இதன் மையக்கருத்தாகும்.
மனிதப் பரிணாம வளர்ச்சிக்கும் சமூக மாற்றத்திற்கும் இடையிலான தொடர்பை விளக்கவும்.
மதவாதக் கருத்துகளுக்கும் மார்க்சிய சமூக அறிவியல் பார்வைகளுக்கும் உள்ள வேறுபாடுகள் யாவை?
வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தின் அடிப்படையில் சாதி மற்றும் குழுக்கள் உருவான விதம் பற்றித் தெரிவியுங்கள்.
உலகின் தோற்றமும் மனித குல வளர்ச்சி போக்கும்
கீழ்காணும் எழுத்துகளை ஒலி வடிவில் கேட்க இந்த இணைப்பை அழுத்துங்கள் தோழர்களே
நாம் சமூகத்தின் தோற்றதை அறிந்துக் கொள்ள மனிதனின் தோற்றம் மனித வளர்ச்சியின் ஊடாக சமூக இயங்குதளத்தை புரிந்துக்கொள்ள வேண்டும். ஆக நாம் வாழும் இவ்வண்டங்களையும், அதில் அடங்கியுள்ள பால்வெளி மண்டலம், சூரியக் குடும்பங்கள், கிரகங்கள், நட்சத்திரங்கள், மலைமுகடுகள், மாகடல்கள், ஆறுகள், காடுகள், நிலஅமைப்புகள் பற்றி அறிவது மிகவும் அவசியமானது. அறிவியல் கண்டுபிடிப்புகள் இயற்கை சார்ந்த பல்வேறு கற்பனைகளுக்கு முடிவுகட்டி ஆதாரபூர்வமாக நிரூபித்து அந்த முடிச்சை அவிழ்த்துக் கொண்டுள்ளது.
சமூக அறிவியலின் அடிப்படையில், டார்வினின் கோட்பாடான, குரங்கினத்தின் மூதாதையர் வழியில் மனிதன் தோன்றினான் என்பதற்கான சான்றுகளும், ஆதிப் பொதுஉடைமை சமூகம் மெல்ல சிதைந்து உபரியான விளைபொருள் உற்பத்தி செய்யும் ஆரம்ப காலத்தில் தாய்வழி சமூகம் தந்தை வழி சமூகமாக மாறி மனித சமுதாயம் பல குழுக்களாக பிரிந்து வலிமை மிக்கவன் குழு தலைவராக உயர்ந்து உணவு உற்பத்தி மற்றும் வேட்டை, மேய்ச்சல், நில உரிமை போன்ற போராட்டத்தில் பல ஆதிகுழுக்களுக்கிடையே ஏற்பட்ட போர்கள் மூலம், சிற்றரசு, பேரரசு உருவான விதத்தையும் மிக எளிதாக புரிந்து கொள்ள முடியும் இவைதான் மார்க்சிய சமூக அறிவியல் எனும் வரலாற்று பொருள் முதல்வாத தத்துவ அடிப்படை. இன்னொறுபுறம் நம் சமூதாய கருத்தியலான மதம் மற்றும் ஆளும் வர்க்கமாய் அமைந்துள்ளோர் சித்தாந்தம் எப்போதும் அறிவியல் கண்டுபிடிப்புகள் மற்றும் விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கபட்ட அனைத்து உண்மைகளையும் எதிர்த்தே வந்துள்ளது. அது சாக்ரடீஸ், பிளாட்டோ முதற்கொண்டு தற்கால விஞ்ஞானிகள் அனைவரின் ஆதாரபூர்வ நிரூபனங்களை மறுத்து இந்த உலகம், பால்வெளி அண்டம் உட்பட பிரபஞ்சம் முழுவதும் கடவுள் என்ற ஒரு தனிப்பட்ட நபரால் உருவாக்கப்பட்டது என்று கூறுகிறது, இவ்வுலகின் இன்றைய வளர்ச்சிக்கான பங்களிப்பு மனித உழைப்பு ஆம் மனிதனால் உருவாக்கப்பட்டவை இங்கு நாம் காணும் அனைத்தை, ஆனால் கடவுளின் படைப்பு என்று மதங்களும் அவற்றின் தலைவர்களும் மக்களை நம்பவைத்து, பலநூறு ஆண்டுகளாக மனித சமுதாயத்தை மூடநம்பிக்கையில் ஆழ்த்தியுள்ளனர். இந்த ஆளும் வர்க்க மதவாத கருத்தியல்தான் (நம்பிக்கைவாதம்) மக்கள் மத்தியில் இன்றும் கோலோச்சுகிறது. ஆக மெத்த படித்த அறிவியல் புலமையுள்ள நபர்கள் கூட மதத் தலைவர்கள் சொல்லும் புனைகதைகள், சடங்கு சம்பிரதாயம், மந்திரம் தந்திரம் ஆகிய அனைத்தையும் நம்பி பின்பற்றும் போது; படிப்பறிவில்லாத எளிய மக்கள் நிலை எவ்வளவு கவலைக்குரியது சிந்தியுங்கள்.
ஆக ஆழமாக நமது சமூக நடைமுறையான குடும்ப சமூக அமைப்புமுறையில் பின்பற்றிவரும் பல்வேறு போக்குகளை பற்றி தெளிவாக தெரிந்திருத்தல் அவசியம். அப்பொழுதுதான் இந்த சமூகத்தின் நடைமுறை ஒவ்வொன்றையும் புரிந்துக் கொள்வதோடு நமக்கான அறிவு தேடலில் முழுமை அடையவும் முடியும்.
புதிய புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள், மனிதனின் எண்ணங்களில் எழும் பெரும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண உதவியாயிருக்கிறது; சமூக, மத, கல்வி சம்பந்தமான விசயங்களில் நமக்குள்ள நிலைபாடுகளை அது மாற்றுகிறது. அறிவியல் மனிதனை சித்திப்பவனாக்குகிறது அவன் ஒவ்வொரு பிரச்சினையும் ஏன் தோன்றுகிறது அந்த பிரச்சினைக்கான தோற்றுவாய் என்ன? அந்த பிரச்சினையிலிருந்து விடுபட என்ன முறை என்பதனை சமூக அறிவியல் மார்க்சியம் போதிக்கிறது.
ஆக நமது தேடுதலான சாதி பற்றியும் அதன் போக்குகள் பற்றியும் அன்றிலிருந்து இன்றுவரை அதன் வரலாற்று போக்கை; மனித குலம் தோன்றியதிலிருந்து அதன் இன்றைய இருப்புவரை ஒவ்வொன்றாக சமூக வளர்ச்சி போக்கை இயக்கவியல் வரலாற்று பொருள்முதல்வாத அடிப்படையில் புரிந்துக் கொள்வதோடு, அதனின் தீங்கான பங்களிப்பு இச்சமூகத்தின் வளர்ச்சிக்கும் எல்லா முன்னேற்றதிற்கும் தடையாகவும் உள்ளதை அறியவும், அதனை களைந்தெறியபட என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய தேடலே நமக்கானது.
நாம் இதனை புரிந்துக் கொள்ள, நம் சமூக அறிவை வளர்த்துக் கொள்ள முடியும். அவை வெறும் யூகங்களாக இல்லாமல் நடைமுறை சாத்தியமான ஒன்றாக இருக்க வேண்டும். அதற்கு நமது கடந்தகால மனித குல சமூக வளர்ச்சி; நம் முன் பல பாடங்களை கற்றுக் கொடுத்துள்ளது. அதனை பற்றி ஆழமான தேடலும் ஆதாரபூர்வமான தகவல்களையும் கணக்கில் கொண்டு நம் தேடுதலை தொடர்வோம்.
மனிதன் தோன்றுவதற்கு முன் அவன் வாழ்விடம் எப்படி வந்தது? இந்த உலகம் எப்படி தோன்றியது? அதில் உயிர் எப்படி தோன்றியது? என்பதனையும் அறிந்துக் கொண்டால் அறிவியல் பூர்வமாக நாம் ஒவ்வொன்றையும் அணுக முடியும். பூமியின் தோற்றம் முதல் உயிரினங்களின் தோற்றம் இன்றைய சமூக வளர்ச்சி போக்கையும் நமக்கு விளக்கும் மார்க்சிய சமூகவிஞ்ஞான அறிவை சற்று பெற்றுக் கொண்டால் நம்மை அறிந்துக் கொள்வது எளிதாக இருக்கும்.
முதலில் உலகம் எப்படி தோன்றியது என்பதை மேலோட்டமாக பார்ப்போம்.
உலகம் ஓர் எரியும் பந்தாக இருந்து பூமியாக மாற கோடிக்கணக்கான ஆண்டுகளாயின. இவ்வாறு பூமியின் வரலாற்றைத் தேடும் நாம்; மனிதகுல தோற்றம் வளர்சியின் வரலாறு என்பது மிக அருகாமையில் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். சூரியமண்டலத்தில் பூமியானது 700 கோடி ஆண்டுகளுக்கு முன் உருவாகியது. இருந்தும் பூமியின் உருவாக்கம் என்பது சுமார் 450 கோடி ஆண்டுகளுக்கு முன்னர்தான் தோன்றியதாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். தீகோளமான சூரிய மண்டலத்தில் பல்வேறு இயற்கை சூழல்கள்குறிப்பாக தொடர்மழை, இடையராது பெய்தபெருமழையால் பூமி குளிர்ந்தது, நீர்நிலைகள் பெருகின. பின்னர் சூரியன், காற்று, நீர்நிலை போன்றவைகள் உருவாகின. அவ்வாறே ஏற்பட்ட நிலநடுக்கத்தாலும், எரிமலையாலும், பூமியின் மேல்பரப்பானது மலைகள், மடுக்கள், குளங்கள், குட்டைகள், ஓடைகள், ஆறுகள், பரந்தகடல்கள், பனிபரப்புகள், பாலைவனங்கள் என உருமாறி சுருக்கமாக பூமி உருவானது. 450 கோடி ஆண்டுகளுக்கு முன் பூமி தோன்றியிருந்தாலும், இதில் உயிரினங்களின் வளர்ச்சி என்பது சுமார் 250 கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றிய அஸோயிக் (Azoic) காலகட்டத்தில் தான் அதாவது 150 கோடி ஆண்டுகளுக்கு முன்புதான் கடற்பாசி புழு, நுங்கு மீன் போன்ற புரோட்டோரோசாசிக் (Proterozoic) தோன்றின அதாவது உயிரினம் பூமியில் தோன்றிய காலகட்டமாகும். ஊர்வன இன்னும் பல்வேறு வகையான அதன் மூதாதையர்கள் 60-27 கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றின. மிஸோஸோயிக் (Mesozoic) என அழைக்கப்படும் ஜுராசிக் டைனோசர் காலகட்டமானது 22.5 லிருந்து 4 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். மாடு, யானையின் முன்னோடி, குதிரைகளின் முன்னோடி, பன்றி, வாலற்ற குரங்குகளின் முன்னோடி, மலரும் தாவரங்கள், நாய், கரடி போன்ற விலங்குகளின் முன்னோடிகள் தோன்றி மறைந்த காலகட்டமானது 7 கோடிலிருந்து 2.5 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். முதுகெலும்புள்ள பல விலங்குகள் இன்றில்லாத வாழ்ந்த காலம் 30 இலட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டக் காலமாகும். கற்காலமனிதன் (Pleistocene) காலக்கட்டம் 20 லிருந்து 30 இலட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டவர்கள் ஆகும். இந்த காலம் பணியுக காலம் அதாவது பழைய கற்கால மனித வளர்ச்சிக் காலம் ஆகும். இதை சுருக்கமாக பார்ப்போம்.
மனிதகுல வரலாறு எனும் நூலில் உலகம் தோன்றியது முதல் அதில் உயிரினங்கள் உருவான வரலாற்றை பல்வேறு நிலைகளில் அவைகள் அடைந்த பரிணாம வளரச்சியை பற்றித் தெளிவாக விளக்கியுள்ளார். உயிரினங்களின் பரிணாமம் பற்றி டார்வின் மற்றும் இன்னபிற ஆராய்ச்சியாளர்களின் அடிப்படையில் “கடல்தான் உயிரின் தாய், ஆரம்ப உயிர்கள் தோன்றியதும், உயிரினங்கள் உதயமானதும் கடலில்தான். முதலில் தோன்றிய உயிர் என்பது ஒரு செல் புரோட்டாசோவா தான். பின் படிப்படியாக சூரிய சக்தியை உள்வாங்கி அடுத்தடுத்த உயிரினங்கள் தோன்றிவந்ததாகக் கூறப்படுகிறது. எல்லா உயிரினங்களும் பரிணாம வளர்ச்சியில் எளிய நிலையில் இருந்து மாறி மாறி தோன்றின” என்று. இதை ஒப்புக்கொள்கிறவர்கள் கூட மனிதன் குரங்கின் மூதாதையினர் வழி தோன்றல் என்பதை ஏற்க விரும்புவதில்லை. மனிதன் என்பவன் தனி படைப்பு என்று கூறிக் கொள்ளவே விரும்புகின்றனர். ஆனால் தற்கால விஞ்ஞானிகள் பரிணாம பாதையில் வெற்றி பெற்ற பாலூட்டி இனங்களில் ஒன்றுதான் மனித இனம் என்று நிரூபித்துள்ளனர்.
உடற்கூறுரீதியாக ஹோமோசெபியன் (Homo sapiens) என்றழைக்கப்படும் நவீனமனிதர்கள் (அறிவுக் கூர்மையுடைய மனிதன்) ஆப்பிரிக்காவில் சுமார் 3,00,000 ஆண்டுகளுக்கு முன் தோன்றினர். இந்த நவீன மனிதர்கள் சுமார் 60,000 ஆண்டுகளுக்கு முன் உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் தொடர் இடப்பெயர்வால் பரவியதாக நம்பப்படுகிறது. இவ்வாறு மனிதனின் வளர்ச்சி போக்கை அறியும் நாம் மனிதன் மூலம் பற்றி பல்வேறு கருத்துக்கள் இருந்தாலும் அவன் விலங்கினத்தை சேர்ந்தவன் என்பதில் ஐயமில்லை.
அவன் ஹோமோசெபியன் எனும் பிரிவை (இனத்தை) சார்ந்தவன். ஒரே இனத்தை சேர்ந்தவர்கள் என்று அடிப்படையில் உலகில் உள்ள எந்த ஆணும் பெண்ணும் ஒன்றுசேர்ந்து இனப்பெருக்கம் செய்யமுடியும். இயற்கையின் இந்த நியதிப்படி உலகில் உள்ள அனைத்து மனிதர்களும் ஒரே இனத்தை சேர்ந்தவர்கள், நிறத்தால், மொழியால், பிரதேசத்தால் வேறுபட்டிருந்தாலும் எல்லோரும் அந்த ஆதிமனிதனின் தொடர்ச்சியே, தொப்புள் கொடி உறவே.
அந்த ஆதி மனிதனின் வழி தோன்றால்தான் பல்வேறு மொழி, பிரதேசம் இன்னும் பலவாக பிரிந்து ஒடுக்கும் கூட்டமும் ஒடுக்கபடும் கூட்டமும் ஒன்றாய் வாழ்ந்துக் கொண்டுள்ளோம்... அதன் பல தோற்றுவாய் தொடர்ந்து ஆராய்வோம்
No comments:
Post a Comment