மார்க்சியம் கற்றல்- 6 கம்யூனுக்கும் நாடாளுமன்றத்துக்கும் இடையில் வேறுபாடு உள்ளது என்றார் மார்க்ஸ்.(ஒலி வடிவில் கேட்க)

அரசு, கம்யூன் மற்றும் புரட்சி: மார்க்சிய நிலைபாடுகள்

இந்த ஆதாரங்கள் மார்க்சியவாதிகள்அராஜகவாதிகள் மற்றும் திருத்தல்வாதிகளுக்கு இடையே அரசு அதிகாரம் மற்றும் புரட்சி குறித்து நிலவும் அடிப்படை வேறுபாடுகளை விளக்குகின்றன. முதலாளித்துவ நாடாளுமன்ற முறைக்கு மாற்றாக, சட்டங்களை இயற்றுவதோடு அவற்றை நேரடியாகச் செயல்படுத்தும் அதிகாரம் கொண்ட கம்யூன் ஆட்சி முறையை மார்க்ஸ் வலியுறுத்தியதை இக்கட்டுரை சுட்டிக்காட்டுகிறது. மார்க்சியத்தின்படி, ஒரு புரட்சிக்குப் பிறகு பழைய அரசு இயந்திரம் தகர்க்கப்பட்டு, தொழிலாளர் சம்பளத்தில் பணியாற்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளைக் கொண்ட சோசலிச அரசு தற்காலிகமாக உருவாக்கப்பட வேண்டும். இதற்கு மாறாக, அராஜகவாதிகள் சோசலிச இடைக்கால அரசை ஏற்காமல் உடனடியாக அரசை ஒழிக்க முயல்வதையும், திருத்தல்வாதிகள் தற்போதைய நாடாளுமன்ற முறையிலேயே தீர்வுகளைத் தேடுவதையும் ஆசிரியர் விமர்சிக்கிறார். இறுதியில், பெரும்பான்மை மக்களே அதிகாரத்தைச் செலுத்தும் போது, அரசு என்ற அடக்குமுறை அமைப்பு படிப்படியாகத் தன் தேவையற்று உலர்ந்து உதிரும் என்பதே மார்க்சியத்தின் அடிப்படைத் தத்துவமாகும். கம்யூன் முறை என்பது வெறும் நிர்வாக மாற்றம் மட்டுமல்ல, அது ஜனநாயகத்தை ஒடுக்கப்பட்ட மக்களின் அதிகாரமாக மாற்றும் ஒரு பிரம்மாண்டமான சமூக மாற்றம் என்று இந்த விளக்கங்கள் தெளிவுபடுத்துகின்றன.

கம்யூனுக்கும் நாடாளுமன்றத்துக்கும் இடையில் வேறுபாடு உள்ளது என்றார் மார்க்ஸ். கம்யூனானது செயலாற்றும் உறுப்பாக இருக்கும் என்றார் மார்க்ஸ். அதாவது முதலாளித்துவ நாடாளுமன்றமானது செயலாற்றும் உறுப்பு அல்ல. சட்டம் இயற்றும் அதிகாரம் கொண்டதுதான் நாடாளுமன்றமாகும். சட்டத்தை நிறைவேற்றும் அதிகாரம் அதிகார வர்க்க நிறுவனமான நிர்வாகத்துறை நீதித்துறை போன்ற அரசுக்குத்தான் உண்டு. ஆனால் கம்யூனானது அல்லது சோவியத்தானது சட்டம் இயற்றுவதோடு கூடவே அதனை செயல்படுத்தும் அதிகாரம் கொண்டதாகும் என்றார் மார்க்ஸ். மார்க்சின் இந்த போதனையைத்தான் காவுத்ஸ்கி சிந்திக்கவே இல்லை என்றார் லெனின். உண்மையில் காவுத்ஸ்கி இந்த மார்க்சின் இந்த போதனையை ஏற்றுக்கொள்ளவும் இல்லை, பிடிவாதமாக மறுத்தார் என்பதே வரலாறாகும். காவுத்ஸ்கியைப் போலவே இந்தியாவில் உள்ள இடதுசாரிகளும் மார்க்சின் இந்த போதனைகளை சிந்தித்துப் பார்க்கவில்லை. அதன் மூலம் நாடாளுமன்ற ஆட்சி முறைக்கும் கம்யூன் ஆட்சி முறைக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை இங்குள்ள இடதுசாரிகள் புரிந்து கொள்ளவில்லை, அல்லது மக்களுக்கு இதனை புரியவைக்கவே இல்லை. ஆகவே தான் இடதுசாரிகள் நாடாளுமன்றத்துக்குள்ளேயே பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ள முடியும் என்று நம்புகிறார்கள், மேலும் அவர்களின் திருத்தல்வாத நம்பிக்கையை மக்களுக்கும் ஊட்டி நிலவுகின்ற நாடாளுமன்றத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஊட்டிக்கொண்டு இருக்கிறார்கள். நாடாளுமன்ற ஆட்சி முறைக்கு மாற்றாக கம்யூன் ஆட்சி முறைக்காக அவர்கள் பாடுபடவே இல்லை. கம்யூன் ஆட்சியை அமைப்பதற்காக மக்களை திரட்டி மக்களை தயாரிக்கவும் இல்லை. உண்மையில் கம்யூன் ஆட்சியை உருவாக்க பாடுபட மறுக்கிறார்கள்.

மார்சியவாதிகளுக்கும் அராஜகவாதிகளுக்கும் உள்ள வேறுபாடு இதுதான்.

1. மார்சியவாதிகள் அரசை அடியோடு ஒழிப்பதை நோக்கமாய்க் கொண்டுள்ள அதேபோது சோசலிசப் புரட்சியால் வர்க்கங்கள் ஒழிக்கப்பட்ட பிறகுதான், சோசலிசம் நிலைநாட்டப்படுவதன் விளைவாய் மட்டுமே, இந்த நோக்கம் நிறைவேற முடியும். அரசு உலர்ந்து உதிர சோசலிசம் வழிவகுக்கிறது என்பதை அங்கீகரிக்கிறார்கள். ஆனால் அராஜகவாதிகள் அரசை ஒழிப்பதற்குரிய நிலைமைகளைப் புரிந்து கொள்ளாமலேயே எடுத்த எடுப்பிலேயே அரசை அடியோடு ஒழிக்க விரும்புகிறார்கள்.

2. மார்க்சியவாதிகள், பாட்டாளி வர்க்கம் அரசியல் அதிகாரம் வென்று கொண்டதும் அது பழைய அரசுப் பொறியமைவை அடியோடு அழித்திட வேண்டும் என்பதையும், அதன் இடத்தில் கம்யூன் வகைப்பட்ட ஆயுதமேந்திய தொழிலாளர்களது ஒழுந்தமைப்பாலான புதிய ஒன்றை நிறுவிக் கொள்வது அவசியம் என்பதையும் அங்கீகரிக்கிறார்கள். ஆனால் அராஜகவாதிகள் அரசுப் பொறியமைவு அழிக்கப்பட வேண்டும் என்று வற்புறுத்துகையில் அதன் இடத்தில் பாட்டாளி வர்க்கம் நிறுவப்போவது என்ன, பாட்டாளி வர்க்கம் எப்படி தனது புரட்சிகர அதிகாரத்தைப் பிரயோகிக்கப் போகிறது என்பது குறித்து தெளிவு உடையோராக இல்லை. புரட்சிகரப் பாட்டாளி வர்க்கம் அரசு அதிகாரத்தைப் பிரயோகிக்க வேண்டும் என்பதைக் கூட அராஜகவாதிகள் மறுக்கிறார்கள்; அதன் புரட்சிகர சர்வாதிகாரத்தை அவர்கள் நிராகரிக்கிறார்கள்.

3. மார்க்சியவாதிகள் தற்போதுள்ள அரசைப் பயன்படுத்திப் புரட்சிக்காகப் பாட்டாளி வர்க்கத்துக்குப் பயிற்சி தர வேண்டும் என்று கோருகிறார்கள். இதனை அராஜகவாதிகள் நிராகரிக்கிறார்கள். (அரசும் புரட்சியும் லெனின் தேர்வு நூல் 6, பக்கம் 136, 137)

இலக்கு விளக்கம்:- மார்க்சியவாதிகளுக்கும் அராஜகவாதிகளுக்கும் இடையிலான வேறுபாட்டை லெனின் இங்கு தெளிவாக விளக்கியுள்ளார். இந்த விளக்கத்தை திருத்தல்வாதிகள் திருத்தி குழப்புவதை நாம் புரிந்துகொள்ள வேண்டியது மிகமிக அவசியமாகும். அரசு பற்றியும் புரட்சி பற்றியும் மார்க்சியவாதிகளின் நிலைபாட்டையும் அராஜகவாதிகளின் நிலைபாட்டை நாம் ஒப்பிட்டுப் பார்ப்போம்.

1. மார்சியவாதிகள் பொதுவாக அரசை அடியோடு ஒழிப்பதை நோக்கமாய்க் கொண்டுள்ளனர். அராஜகவாதிகளும் இதே நோக்கம் கொண்டுள்ளனர். அந்த வகையில் மார்க்சியவாதிகளின் நிலைபாடும் அராஜகவாதிகளின் நிலைபாடும் ஒன்றே ஆகும். இதில் இருவருக்கும் ஒற்றுமை உள்ளது.

ஆகவே அரசை ஒழிப்பது அல்லது அரசு நிறுவனங்களை கலைத்திட வேண்டும் என ஒருவர் கூறுவதாலேயே அவரை அராஜகவாதி என்று மதிப்பிடுவது தவறாகும். ஏனென்றால் மார்க்சிய ஆசான்களும் அரசை ஒழித்திட வேண்டும் என்றே நமக்குப் போதித்துள்ளனர். இந்த போதனையை பின்பற்றுபவர் ஒரு மார்க்சியவாதியாக இருக்கக்கூடும். ஆனாலும் அராஜகவாதியை எப்படி அடையாளம் காண்பது? என்ற கேள்வி நம்முன் உள்ளது.

2. அரசு என்பது ஒரு வர்க்கம் மற்ற வர்க்கங்களை அடக்கி ஆளுவதற்கான ஒரு பலாத்கார நிறுவனம் ஆகையால் பொதுவாக அரசு என்ற அமைப்பு ஒழிக்கப்பட வேண்டும் என்று மார்க்சியவாதிகள் விரும்பினாலும். அதனை ஒழிப்பதற்கு சில நிபந்தனை உண்டு. அந்த நிபந்தனைகள் என்ன? சோசலிசப் புரட்சியால் வர்க்கங்கள் ஒழிக்கப்பட்ட பிறகுதான், சோசலிசம் நிலைநாட்டப்படுவதன் விளைவாய் மட்டுமே, பொதுவாக அரசு ஒழிக்கப்படும் என்றே மார்க்சியம் சொல்கிறது. சமூகம் சோசலிச சமூகமாக மாறவேண்டும், சோசலிச அரசு உருவாக வேண்டும், இந்த சோசலிச அரசு சமூகத்தில் வர்க்கங்களை ஒழிப்பதற்கான முயற்சியில் ஈடுபடும். அந்த வகையில் சோசலிச அரசானது உலர்ந்து உதிரும் அரசாக இருக்கும். இந்த சூழலில் சமூகத்தின் இயக்கத்தில் அரசின் தேவையானது இல்லாமல் போய்விடும், அப்போது அரசானது உலர்ந்து உதிர்ந்துவிடும் என்று மார்க்சியம் சொல்கிறது. ஆகவே அரசை ஒழிப்பதற்கு முன்பு பாட்டாளி வர்க்கமானது சோசலிச அரசை உருவாக்க வேண்டும் என்பது மார்க்சிய நிலைபாடாகும். ஆனால் அராஜகவாதிகள், பொதுவாக அரசு ஒழிய வேண்டுமானால் அரசானது உலர்ந்து உதிரும் அரசாக மாற வேண்டும், அதற்கு சோசலிச சமூகத்தையும், சோசலிச அரசையும் உருவாக்க வேண்டும் என்பதை புரிந்துகொள்ளவில்லை.. ஆகவே உலர்ந்து உதிரும் அரசான கம்யூன் அரசை பாட்டாளி வர்க்கம் உருவாக்க வேண்டும் என்பதை அராஜகவாதிகள் ஏற்றுக்கொள்ளாமல் மறுக்கிறார்கள். ஒரேயடியாக அரசை ஒழித்திட வேண்டும் என்பதுதான் அராஜகவாதிகளின் நிலைபாடாகும், சோசலிச அரசை உருவாக்குவதை மறுப்பதுதான் அராஜகவாதிகளின் மார்க்சியத்திற்கு எதிரான நிலைபாடாகும். மார்க்சியவாதிகளுக்கும் அராஜகவாதிகளுக்கும் இடையிலான வேறுபாடு இதுதான்.. ஆகவே முதலாளித்துவ அரசை தகர்த்துவிட்டு சோசலிச அரசை உருவாக்க வேண்டும் என்ற மார்க்சிய கொள்கையை மறுப்பவர்கள் மற்றும் அதனை கண்டுகொள்ளாமல் இருப்பவர்கள்தான் அராஜகவாதிகளின் நிலைபாட்டை ஏதோ ஒரு வழியில் ஏற்றுக்கொள்பவர்களாக இருக்கிறார்கள். ஆகவே அரசை ஒழிக்க வேண்டும் என்பவர்களை அராஜகவாதிகளாக கருதக்கூடாது. பாட்டாளிவர்க்க கம்யூன் அரசை உருவாக்குவதை மறுப்பவர்களைத்தான் அராஜகவாதிகளாக கருத வேண்டும். ஆனால் இங்குள்ள திருத்தல்வாதிகள் அரசை ஒழிக்க வேண்டும் என்பவர்களை அராஜகவாதிகள் என்று சொல்வது அவர்கள் மார்க்சியத்தை புரிந்துகொள்ளாத நிலையாகும்.

3. சோசலிச அரசும், சோசலிச சமூக அமைப்பும்தான் சமூகத்தில் வர்க்கங்கள் ஒழிக்கப்படுவதற்கு முன்நிபந்தனையாக இருக்கிறது என்கிறது மார்க்சியம். வர்க்கங்கள் ஒழிக்கப்பட்ட பின்புதான் ஒரு வர்க்கம் பிற வர்க்கங்களை ஒடுக்குவதற்கான தேவை இல்லாமல் மறைந்துவிடும்போதுதான், பலாத்கார நிறுவனமான அரசின் தேவை சமூகத்தில் மறைந்துவிடுகிறது. அதன் காரணமாகவே அரசு உலர்ந்து உதிர்ந்துவிடுகிறது என்கிறது மார்க்சியம். இந்த போதனையை ஏற்றுக்கொண்டு சோசலிச அரசை உருவாக்குவதற்குப் பாடுபடுபவர்கள்தான் மார்க்சியவாதியாக இருக்க முடியும். ஆனால் அராஜகவாதிகள் பலாத்கார நிறுவனமான அரசு ஒழிக்கப்பட வேண்டும் என்ற மார்க்சிய கருத்தை ஏற்றுக்கொண்டாலும் சோசலிச அரசின் அவசியத்தை ஏற்றுக்கொள்வதில்லை. ஆகவே சோசலிச அரசின் அவசியத்தை ஏற்றுக்கொள்ளாமலும், அதனை கண்டுகொள்ளாமலும், அதற்காகப் பாடுபடாமலும் இருப்பவர்கள் அராஜகவாதிகளையே பின்பற்றுகிறார்கள்.

4. பாட்டாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தை வெற்றுகொண்ட பின்பு உடனடியாக பழைய அரசு நிறுவனங்களை கலைத்திடும் பணியில் ஈடுபட்டு, பழைய அரசு நிறுவனங்களை கலைத்திட வேண்டும் என்றும் அதனிடத்தில் புதிய வகையான அரசான கம்யூன் அரசு நிறுவனங்களை நிறுவிட வேண்டும் என்கிறது மார்க்சியம். இந்த மார்க்சிய போதனையை அராஜகவாதிகள் ஏற்க மறுக்கிறார்கள். அவர்கள் நிலவுகின்ற அரசை ஒழித்திட வேண்டும் என்று மட்டுமே கூறுகிறார்கள். அதனிடத்தில் சோசலிச அரசை உருவாக்க வேண்டும் என்ற மார்க்சிய கருத்தை ஏற்க மறுக்கிறார்கள். ஆகவேதான் அராஜகவாதிகள் பாட்டாளிவர்க்கம் அரசியல் அதிகாரத்தை வென்றுகொள்ள வேண்டும் என்ற மார்க்சியக் கருத்தை ஏற்க மறுப்பதோடு பாட்டாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தை வெற்றுகொள்வதற்காக எவ்விதமான முயற்சியிலும் ஈடுபடுவதில்லை. ஆகவே பாட்டாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தை வென்றுகொள்வதை ஏற்க மறுப்பவர்களும், அதற்காக பாடுபட மறுப்பவர்களும் அராஜகவாதிகளை பின்பற்றுபவர்களே ஆவார்கள்.

5. பாட்டாளி வர்க்கம் நிலவுகின்ற அரசு நிறுவனங்களை கலைத்திட வேண்டும் என்று மார்க்சியம் கூறியபோதும், அதனை நடைமுறையில் செயல்படுத்துவது எப்படி? என்ற கேள்வி நம்முன் உள்ளது. கம்யூன் அரசு நிறுவனங்களை ஒரேயடியாக ஒரு நாளிலிலோ ஒரு சில மாதங்களிலோ நிறுவிட முடியாது. அதற்கு மாறாக நிலவுகின்ற முதலாளித்துவ அரசு அமைப்பிற்குள்ளேயே கம்யூன் அரசமைப்பு நிறுவனங்களை கம்யூனிஸ்டுகள் உருவாக்கி வருங்காலத்தில் சமூகத்தின் ஆட்சிப்பொறுப்பை ஏற்கப் போவது இந்த கம்யூன் நிறுவனமே என்று மக்களுக்குப் போதித்து மக்களை புரட்சிக்காகத் தயார் செய்ய வேண்டும்.

ஒரு புரட்சியின் மூலம் நிலவுகின்ற ஆட்சியை எதிர்த்தப் போராட்டத்தின் மூலம் அரசியல் அதிகாரம் அனைத்தும் கம்யூன்களுக்கே என்று முழங்கி நிலவுகின்ற அரசு நிறுவனங்களை கலைக்கும் போதே அதற்குப் பதிலாக கம்யூன் நிறுவனத்தை நிலைநிறுத்த வேண்டும். இந்தப் பணியை இப்போதே செய்பவர்கள்தான் மார்க்சியவாதி ஆவார்கள். இந்தப் பணியை இப்போது செய்ய மறுப்பவர்கள்தான் அராஜகவாதிகளை பின்பற்றுபவர்களாக இருக்கிறார்கள்.

6. புரட்சிகரமான பாட்டாளி வர்க்கமானது அரசியல் அதிகாரத்தை வென்றுகொள்வதோடு கூடவே தனது அரசியல் அதிகாரத்தை புரட்சிகரமான முறையில் பயன்படுத்த வேண்டும் என்கிறது மார்க்சியம். ஆனால் அராஜகவாதிகள் பாட்டாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதையே மறுப்பதால் பாட்டாளி வர்க்கம் தனது அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்துவதையும் ஏற்க மறுக்கிறார்கள். ஏனெனில் பாட்டாளி வர்க்கம் தனது கைகளில் வைத்திருக்கும் அரசியல் அதிகாரமானது பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமாகும் என்றும் அராஜகவாதிகள் அனைத்து வகையான சர்வாதிகாரத்தை எதிர்க்கும் கொள்கையை பின்பற்றுபவர்கள் ஆகையால் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை பயன்படுத்துவதை எதிர்க்கிறோம் என்கிறார்கள். ஆகவே பாட்டாளி வர்க்கம் தனது சொந்த அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்பதுதான் மார்க்சியமாகும். இதற்கு எதிராக பாட்டாளி வர்க்கம் கம்யூன் அரசு அமைப்பின் மூலம் தனது சொந்த அரசியல் அதிகாரத்தை வென்றெடுத்து அதனை பயன்படுத்தக் கூடாது என்பதுதான் அராஜகவாதிகளின் நிலைபாடாகும். எனவே பாட்டாளி வர்க்கம் கம்யூன் மூலம் தனது சொந்த அரசியல் அதிகாரத்தைப் பெற்று அதனை பயன்படுத்த மறுப்பவர்கள் அராஜகவாதிகளைப் பின்பற்றுபவர்களே ஆவார்கள்..

7. தற்போதுள்ள அரசைப் பயன்படுத்திப் புரட்சிக்காகப் பாட்டாளி வர்க்கத்துக்குப் பயிற்சி தர வேண்டும் என்பதுதான் மார்க்சியம் ஆகும். இதன் பொருள் என்ன? என்பதை நாம் விரிவாகவும் ஆழமாகவும் புரிந்துகொள்ள வேண்டும். கம்யூனிஸ்டுகள் பாட்டாளி வர்க்கத்துக்கு பயிற்சி தரவேண்டும் என்பதுதான் மார்க்சிய ஆசான்களது போதனையாகும். ஆகவே பாட்டாளி வர்க்கத்துக்கு பயிற்சி தருபவரே மார்க்சியவாதி ஆவார்.

பாட்டாளி வர்க்கத்துக்கு எதற்காக பயிற்சி தரவேண்டும்? புரட்சிக்காகவே பாட்டாளி வர்க்கத்துக்குப் பயிற்சி தரவேண்டும் என்பதே மார்க்சிய ஆசான்களது போதனையாகும். இவ்வாறு புரட்சிக்காக மக்களுக்கு பயற்சி தருபவரே மார்க்சியவாதி ஆவார். இதற்கு மாற்றாக புரட்சியை மறுத்துவிட்டு அல்லது அதனை கண்டும் காணாமல், கூலி உயர்வுப் போராட்டத்திற்காகவும் தேர்தலில் வெற்றி பெறுவதற்காகவும் முதலாளித்துவ சீர்திருத்தப் போராட்டத்துக்காகவும் பயிற்சி கொடுப்பவர்கள் மார்க்சியவாதிகள் ஆகமாட்டார்கள். பாட்டாளி வர்க்கத்துக்கு பயிற்சி கொடுப்பதற்காகவே தற்போதுள்ள அரசை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்கிறது மார்க்சியம். அதாவது தற்போதைய அரசு அதன் சட்டங்களைப் பின்பற்றியே செயல்படுகிறது. அதாவது போலீஸ்துறை, நீதித்துறை, நிர்வாகத்துறை போன்ற அரசு நிறுவனங்களிலுள்ள அரசு அதிகாரிகள் சட்டத்துக்கு கட்டுப்பட்டே செயல்படுகிறார்கள். ஆகவே முதலாளித்துவ அமைப்பிலுள்ள சட்டங்கள் தொழிலாளர்களுக்கு சில ஜனநாயக உரிமைகளை வழங்கியுள்ளது. இந்த ஜனநாயக உரிமைகளை அதிகாரிகள் பாட்டாளிகளுக்கு வழங்கிட வேண்டியது அவசியம் என்ற நிலையிலேயே செயல்படுவார்கள். இந்த சூழலைப் பயன்படுத்திக்கொண்டே கம்யூனிஸ்டுகள் பாட்டாளிகளுக்கு பயிற்சி கொடுக்க வேண்டும் என்றே மார்க்சிய ஆசான்கள் போதிக்கிறார்கள். இந்த போதனையை சிலர் திருத்துகிறார்கள். தற்போதுள்ள அரசை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று மார்க்சிய ஆசான்கள் சொல்லியிருக்கிறார்கள் என்பதை மட்டும் சொல்லி நிலவுகின்ற அரசில் பங்கெடுத்துக்கொள்ள வேண்டும் என்று திருத்துகிறார்கள். ஆகவே தேர்தலில் கம்யூனிஸ்டுகள் பங்கெடுத்து ஆட்சி அதிகாரத்துக்கு வரவேண்டும் என்கிறார்கள். பாட்டாளி வர்க்கத்துக்கு புரட்சிக்காக பயிற்சி கொடுக்க வேண்டும் என்ற மார்க்சிய ஆசான்களது போதனையை முழுவதும் மறைத்துவிட்டு மறுக்கிறார்கள். பாட்டாளி வர்க்கத்துக்கு புரட்சிக்காக பயிற்சி அளிக்க வேண்டும் என்ற பணியை இவர்கள் செய்வதே இல்லை. இதற்கு மாறாக ஆட்சி அதிகாரத்துக்கு இவர்களது கட்சி வரவேண்டும் என்பதே இவர்களது குறிக்கோளாக உள்ளது. பாட்டாளி வர்க்கத்துக்கு புரட்சிக்காக பயிற்சி அளிக்க வேண்டும் என்ற கொள்கையை அராஜகவாதிகள் ஏற்க மறுக்கிறார்கள். ஆகவே புரட்சிக்காக பாட்டாளி வர்க்கத்துக்கு பயிற்சி அளிக்கவேண்டும் என்ற கொள்கையை மறுப்பவர்களும் அதனை செயல்படுத்த நடைமுறையில் தவறுபவர்களும் அராஜகவாதிகளையே பின்பற்றுபவர்கள் ஆவார்கள். ஆகவே மார்க்சியவாதிகளுக்கும் அராஜகவாதிகளுக்கும் இடையேயுள்ள வேறுபாட்டை புரிந்துகொள்ள நாம் அரசு பற்றியும் புரட்சி பற்றியும் மார்க்சிய ஆசான்களது போதனைகளை நாம் ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

8. மார்க்சியவாதிகளான கம்யூனிஸ்டுகளின் இறுதி லட்சியம், கம்யூனிச சமூகத்தை படைப்பதாகும். கம்யூனிச சமூகத்தில் வர்க்கங்கள் இருக்காது அரசும் இருக்காது. ஆகவே மார்க்சியவாதிகள் வர்க்கங்களையும் அரசையும் ஒழிப்பதையே லட்சியமாகக் கொண்டுள்ளனர். ஆகவே அரசை ஒழிக்க வேண்டும் என்பவர்களை அராஜகவாதிகள் என்று மதிப்பிடக் கூடாது. அராஜகவாதிகளும் அரசை ஒழிக்க வேண்டும் என்று சொல்வதால் அரசை ஒழிக்க வேண்டும் என்பவர்கள் எல்லாம் அராஜகவாதிகள் ஆகிவிட மாட்டார்கள். மார்க்சியவாதிகள் அவர்களது இறுதி லட்சியமான கம்யூனிசத்தை அடைய இடைக்கட்டமாக சோசலிசத்தை அடையவேண்டும் என்கிறார்கள். ஆனால் அராஜகவாதிகள் இந்த இடைக்கட்டமான

சோசலிசத்தையும் சோசலிச அரசையும் மறுக்கிறார்கள். ஆகவே சோசலிசத்தையும் சோசலிச ஆட்சியையும் மறுப்பவர்கள்தான் அராஜகவாதிகளை பின்பற்றுவதாக நாம் கருத வேண்டும். சோசலிசத்தையும் சோசலிச அரசையும் ஏற்றுக்கொண்டால் மட்டும் போதாது, அதற்காகப் பாடுபடாதாவர்கள் அராஜகவாதத்தையே பின்பற்றுபவர்களாகவே கருத வேண்டும். அராஜகவாதிகள் அரசை ஒழிக்க வேண்டும் என்பதை ஏற்றுக்கொண்டாலும், அரசு ஒழிய வேண்டுமானால் அரசானது முதலில் உலர்ந்து உதிரும் அரசாக மாற்றப்பட வேண்டும்.

ஏனெனில் உலர்ந்து உதிரும் அரசுதான் ஒழிக்கப்படும். சோசலிசக் கொள்கையை உறுதியாகச் செயல்படுத்தும் அரசுதான் உலர்ந்து உதிரும் அரசாகும். அத்தகைய அரசையும் சோசலிசத்தையும் உருவாக்க மறுக்கும் அராஜகவாதிகள் நடைமுறையில் அரசை ஒழிப்பதற்கு எதிராக அல்லது தடையாக இருக்கிறார்கள். இவர்கள் அரசை ஒழிக்க வேண்டும் என்று விரும்பினாலும் இவர்களால் அரசை ஒழிக்க முடியாது. இவர்களைப் போலவே சற்று மாறுபட்ட கோணத்தில் நிலவுகின்ற முதலாளித்துவ அரசை பாதுகாப்பவர்கள் நடைமுறையில் அரசை ஒழிப்பதற்கு எதிராகவும் தடையாகவும் அராஜகவாதிகளைப் போலவே இருக்கிறார்கள். நிலவுகின்ற முதலாளித்துவ அரசமைப்புக்குள்ளேயே எதனையும் சாதிக்க முடியும் என்று கருதி செயல்படுபவர்கள் ஒருபோதும் அரசை ஒழிக்க முன்வரமாட்டார்கள். நிலவுகின்ற முதலாளித்துவ அரசை தகர்ப்பதற்குக்கூட முன்வர மாட்டார்கள். ஆகவே இவர்கள் சோசலிசத்தை ஏற்பதாகச் சொன்னாலும் நடைமுறையில் சோசலிசத்தை மறுக்கிறவர்களாகவே இருக்கிறார்கள். ஆகவே இவர்கள் நடைமுறையில் சோசலிசத்தை மறுக்கும் அராஜகவாதிகளை பின்பற்றுபவர்களாகவே இருக்கிறார்கள்.-தேன்மொழி

அரசும் புரட்சியும் நூலிலிருந்து பார்ப்போம்

இதுகாறும்‌ அரசாங்கத்தின்‌ கைக்கருவியாய்‌ இருந்து வந்த போலீஸ்‌ இப்பொழுது திடுதிப்பென அதன்‌ அரசியல்‌ செயற்பாடுகள்‌ யாவும்‌ பறிக்கப்பட்டு பொறுப்புள்ள, எக்காலத்திலும்‌ நீக்கப்படக்கூடிய கம்யூன்‌ கைக்கருவியாய்‌ மாற்றப்பட்டது... நிர்வாகத்தின்‌ ஏனைய எல்லாத்‌ துறைகளையும்‌ சேர்ந்த அதிகாரிகளும்‌ இதே போல மாற்றப்பட்டனர்‌... கம்யூன்‌ உறுப்பினர்‌கள்‌ முதலாய்‌ எல்லோரும்‌ தொழிலாளருக்குரிய சம்பளங்கள்‌ பெற்றுப்‌ பொதுச்‌ சேவை புரிய வேண்டியதாயிற்று. அரசின்‌ உயர்‌ பதவியாளர்கள்‌ மறைந்ததோடு உயர்‌ பதவியாளர்களது தனியுரிமைகளும்‌ சலுகைகளும்‌ பிரதிநிதித்துவ மான்யத்‌  தொகைகளும்‌ மறைந்துவிட்டன... பழைய அரசாங்கத்தின்‌ பெளதிகப்‌ பலாத்காரக்‌ கருவிகளான நிரந்தரச்‌ சேனையையும்‌ போலீசையும்‌ ஒழித்துக்‌ கட்டியதும்‌ கம்யூனனது உடனே ஆன்மிக அடக்குமுறைக்‌ கருவியையும்‌, அதாவது குருமார்களுடைய அதிகாரத்தையும்‌ தகர்க்க முற்பட்டது. நீதி மன்றத்தினர்‌ போலியான சார்பற்ற நிலையை இழந்து விட்டனர்‌... இனி அவர்கள்‌ தேர்ந்தெடுக்கப்பட வேண்டியோரும்‌, பொறுப்புடையோரும்‌, நீக்கப்படக்‌ கூடியோரும்‌ ஆயினர்‌...

ஆக, கம்யூனானது நொறுக்கப்பட்ட அரசுப்‌ பொறியமைவுக்குப்‌ பதிலாய்‌ நிறைவான ஜனநாயகத்தை நிறுவியதாய்‌மட்டும்தான்தோன்றும்‌. அதாவது, நிரந்தரச்‌ சேனையை ஒழித்தது; எல்லா அதிகாரிகளையும்‌ தேர்ந்தெடுக்கப்பட வேண்டியவர்களாக்கி, திருப்பியழைக்கப்படக்‌ கூடியவர்‌களாக்கியது. ஆனால்‌ உண்மையில்‌ இந்த மட்டும்தான்‌என்பது ஒருவகை நிறுவனங்களை அகற்றி அவற்றினிடத்தில்‌ அடிப்படையிலேயே வேறொரு தன்மையதான பிற நிறுவனங்‌களைத்‌ தோற்றுவிக்கும்‌ பிரம்மாண்ட மாறுதலைக்‌ குறிப்பதாகும்‌.அளவு பண்பாய்‌ மாறுவதன் எடுத்துக்காட்டு இது. அதாவது முடியுமான அளவுக்கு முழுமையாகவும்‌ முரணின்றியும்‌ செயல்படுத்தப்பட்ட ஜனநாயகமானது முதலாளித்துவ ஜனநாயகத்திலிருந்து பாட்டாளி வர்க்க ஜனநாயகமாய்‌ மாற்றமடைந்து விடுகிறது; அதாவது அரசு (குறிப்‌பிட்ட ஒரு வர்க்கத்தை அடக்குவதற்கான தனிவகை சக்தி) இனி மெய்யான அரசு அல்லாத ஒன்றாய்‌ மாற்றமடைந்துவிடுகிறது.

 

முதலாளித்துவ வர்க்கத்தாரை அடக்குவதும்‌ அவர்களுடைய எதிர்ப்பை நசுக்குவதும்‌ இனியும்‌ அவசியமாகவே இருக்கிறது. கம்யூனுக்கு இது மிக மிக அவசியமாயிருந்தது. கம்யூன்‌ இப்பணியைப்‌ போதிய உறுதியோடு செய்யாதது அதன்‌ தோல்விக்குரிய காரணங்களில்‌ ஒன்றாகும்‌. ஆனால்‌ அடக்குவதற்கான செயலுறுப்பு இங்கு மக்களின்‌ பெரும்‌பான்மைப்‌ பகுதியே அன்றி, அடிமையுடைமைச்‌ சமுதாயம்‌, பண்ணையடிமைச்‌ சமுதாயம்‌, கூலியடிமைச்‌ சமுதாயம்‌ ஆகிய இவை யாவற்றிலும்‌ இருந்தது போலச்‌ சிறுபான்மைப்‌ பகுதியல்ல. பெரும்பான்மை மக்கள்‌, தாமே தமது ஒடுக்குமுறை யாளர்களை அடக்குவதால்‌, அடக்குவதற்கான தனிவகை சக்திஒன்று இனி தேவையில்லை! இந்த அர்த்தத்‌தில்‌ அரசு உலர்ந்து உதிரத்‌ தொடங்குகிறது. தனிச்‌ சலுகை படைத்த சிறுபான்மையோரது தனி வகை நிறுவனங்களுக்குப்‌ பதிலாய்‌ (தனிச்‌ சலுகை பெற்ற அதிகாரவர்க்கம்‌, நிரந்தரச்‌ சேனையின்‌ தலைவர்கள்‌), பெரும்பான்மை மக்கள்‌ நேரில்‌ தாமே இந்தப்‌ பணிகளை நிறைவேற்ற முடிகிறது.

அரசு அதிகாரத்தின்‌ பணிகள்‌ மேலும்‌ மேலும்‌ கூடுதலாய்ப்‌ பெருந்திரளான மக்களுக்குரியதாகும்போது, இந்த அதிகாரத்‌திற்கான அவசியம்‌ மேலும்‌ மேலும்‌ குறைந்துவிடுகிறது. இச்சந்தர்ப்பத்தில்‌, மார்க்ஸ்‌ வலியுறுத்திக்‌ கூறிய கம்யூனின்‌ பின்வரும்‌ நடவடிக்கைகள்‌ மிகவும்‌ குறிப்பிடத்தக்‌கனவாகும்‌: அதிகாரிகளுக்கான எல்லாப்‌ பிரதிநிதித்துவ மான்‌ பயங்களையும்‌ பண வகையிலான எல்லாத்‌ தனிச்‌ சலுகைகளை யும்‌ ஒழித்தல்‌, அரசின்‌ எல்லா ஊழியர்களது ஊதியங்களையும்‌ தொழிலாளர்களுக்குரிய சம்பளங்களின்‌'? நிலைக்குச்‌ சமமாக்குதல்‌. முதலாளித்துவ ஜனநாயகத்திலிருந்து பாட்‌டாளி வர்க்க ஜனநாயகத்துக்கு, ஓடுக்குவோரின்‌ ஜனநாய கத்திலிருந்து ஒடுக்கப்பட்ட வர்க்கங்களுடைய ஜனநாயகத்‌

இதுகாறும்‌ அரசாங்கத்தின்‌ கைக்கருவியாய்‌ இருந்து வந்த போலீஸ்‌ இப்பொழுது திடுதிப்பென அதன்‌ அரசியல்‌ செயற்பாடுகள்‌ யாவும்‌ பறிக்கப்பட்டு பொறுப்புள்ள, எக்காலத்திலும்‌ நீக்கப்படக்கூடிய கம்யூன்‌ கைக்கருவியாய்‌ மாற்றப்பட்டது... நிர்வாகத்தின்‌ ஏனைய எல்லாத்‌ துறைகளையும்‌ சேர்ந்த அதிகாரிகளும்‌ இதே போல மாற்றப்பட்டனர்‌... கம்யூன்‌ உறுப்பினர்‌கள்‌ முதலாய்‌ எல்லோரும்‌ தொழிலாளருக்குரிய சம்பளங்கள்‌ பெற்றுப்‌ பொதுச்‌ சேவை புரிய வேண்டியதாயிற்று. அரசின்‌ உயர்‌ பதவியாளர்கள்‌ மறைந்ததோடு உயர்‌ பதவியாளர்களது தனியுரிமைகளும்‌ சலுகைகளும்‌ பிரதிநிதித்துவ மான்யத்‌  தொகைகளும்‌ மறைந்துவிட்டன... பழைய அரசாங்கத்தின்‌ பெளதிகப்‌ பலாத்காரக்‌ கருவிகளான நிரந்தரச்‌ சேனையையும்‌ போலீசையும்‌ ஒழித்துக்‌ கட்டியதும்‌ கம்யூனனது உடனே ஆன்மிக அடக்குமுறைக்‌ கருவியையும்‌, அதாவது குருமார்களுடைய அதிகாரத்தையும்‌ தகர்க்க முற்பட்டது. நீதி மன்றத்தினர்‌ போலியான சார்பற்ற நிலையை இழந்து விட்டனர்‌... இனி அவர்கள்‌ தேர்ந்தெடுக்கப்பட வேண்டியோரும்‌, பொறுப்புடையோரும்‌, நீக்கப்படக்‌ கூடியோரும்‌ ஆயினர்‌...

ஆக, கம்யூனானது நொறுக்கப்பட்ட அரசுப்‌ பொறியமைவுக்குப்‌ பதிலாய்‌ நிறைவான ஜனநாயகத்தை நிறுவியதாய்‌மட்டும்தான்தோன்றும்‌. அதாவது, நிரந்தரச்‌ சேனையை ஒழித்தது; எல்லா அதிகாரிகளையும்‌ தேர்ந்தெடுக்கப்பட வேண்டியவர்களாக்கி, திருப்பியழைக்கப்படக்‌ கூடியவர்‌களாக்கியது. ஆனால்‌ உண்மையில்‌ இந்த மட்டும்தான்‌என்பது ஒருவகை நிறுவனங்களை அகற்றி அவற்றினிடத்தில்‌ அடிப்படையிலேயே வேறொரு தன்மையதான பிற நிறுவனங்‌களைத்‌ தோற்றுவிக்கும்‌ பிரம்மாண்ட மாறுதலைக்‌ குறிப்பதாகும்‌.அளவு பண்பாய்‌ மாறுவதன் எடுத்துக்காட்டு இது. அதாவது முடியுமான அளவுக்கு முழுமையாகவும்‌ முரணின்றியும்‌ செயல்படுத்தப்பட்ட ஜனநாயகமானது முதலாளித்துவ ஜனநாயகத்திலிருந்து பாட்டாளி வர்க்க ஜனநாயகமாய்‌ மாற்றமடைந்து விடுகிறது; அதாவது அரசு (குறிப்‌பிட்ட ஒரு வர்க்கத்தை அடக்குவதற்கான தனிவகை சக்தி) இனி மெய்யான அரசு அல்லாத ஒன்றாய்‌ மாற்றமடைந்துவிடுகிறது.

 

முதலாளித்துவ வர்க்கத்தாரை அடக்குவதும்‌ அவர்களுடைய எதிர்ப்பை நசுக்குவதும்‌ இனியும்‌ அவசியமாகவே இருக்கிறது. கம்யூனுக்கு இது மிக மிக அவசியமாயிருந்தது. கம்யூன்‌ இப்பணியைப்‌ போதிய உறுதியோடு செய்யாதது அதன்‌ தோல்விக்குரிய காரணங்களில்‌ ஒன்றாகும்‌. ஆனால்‌ அடக்குவதற்கான செயலுறுப்பு இங்கு மக்களின்‌ பெரும்‌பான்மைப்‌ பகுதியே அன்றி, அடிமையுடைமைச்‌ சமுதாயம்‌, பண்ணையடிமைச்‌ சமுதாயம்‌, கூலியடிமைச்‌ சமுதாயம்‌ ஆகிய இவை யாவற்றிலும்‌ இருந்தது போலச்‌ சிறுபான்மைப்‌ பகுதியல்ல. பெரும்பான்மை மக்கள்‌, தாமே தமது ஒடுக்குமுறையாளர்களை அடக்குவதால்‌, அடக்குவதற்கான தனிவகை சக்திஒன்று இனி தேவையில்லை! இந்த அர்த்தத்‌தில்‌ அரசு உலர்ந்து உதிரத்‌ தொடங்குகிறது. தனிச்‌ சலுகை படைத்த சிறுபான்மையோரது தனி வகை நிறுவனங்களுக்குப்‌ பதிலாய்‌ (தனிச்‌ சலுகை பெற்ற அதிகாரவர்க்கம்‌, நிரந்தரச்‌ சேனையின்‌ தலைவர்கள்‌), பெரும்பான்மை மக்கள்‌ நேரில்‌ தாமே இந்தப்‌ பணிகளை நிறைவேற்ற முடிகிறது.

அரசு அதிகாரத்தின்‌ பணிகள்‌ மேலும்‌ மேலும்‌ கூடுதலாய்ப்‌ பெருந்திரளான மக்களுக்குரியதாகும்போது, இந்த அதிகாரத்‌திற்கான அவசியம்‌ மேலும்‌ மேலும்‌ குறைந்துவிடுகிறது. இச்சந்தர்ப்பத்தில்‌, மார்க்ஸ்‌ வலியுறுத்திக்‌ கூறிய கம்யூனின்‌ பின்வரும்‌ நடவடிக்கைகள்‌ மிகவும்‌ குறிப்பிடத்தக்‌கனவாகும்‌: அதிகாரிகளுக்கான எல்லாப்‌ பிரதிநிதித்துவ மான்‌ பயங்களையும்‌ பண வகையிலான எல்லாத்‌ தனிச்‌ சலுகைகளை யும்‌ ஒழித்தல்‌, அரசின்‌ எல்லா ஊழியர்களது ஊதியங்களையும்‌ தொழிலாளர்களுக்குரிய சம்பளங்களின்‌'? நிலைக்குச்‌ சமமாக்குதல்‌. முதலாளித்துவ ஜனநாயகத்திலிருந்து பாட்‌டாளி வர்க்க ஜனநாயகத்துக்கு, ஓடுக்குவோரின்‌ ஜனநாய கத்திலிருந்து ஒடுக்கப்பட்ட வர்க்கங்களுடைய ஜனநாயகத்‌துக்கு, குறிப்பிட்ட ஒரு வர்க்கத்தை அடக்குவதற்கானதனிவகை சக்தியாய்‌அமைந்த அரசிலிருந்து ஓடுக்குவோரை அடக்குவதற்கான பெரும்பான்மை மக்களது-அதாவது தொழிலாளர்கள்‌, விவசாயிகளது பொது சக்திக்கு ஏற்பட்ட மாற்றத்தை ஏனைய எவற்றையும்விட இந்த நடவடிக்கைகள்‌ மிகத்‌ தெளிவாய்ப்‌ புலப்படுத்துகின்றன

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்