மார்க்ஸ் யார்? அவருக்கு சிலை வைக்கும் நீங்கள் யார்? அவரை புனிதர் ஆக்காதீர் அவர் உங்களின் வர்க்க எதிரி!
மார்க்ஸ் கடவுள் அல்ல- அவர் ஏழை எளிய உழைக்கும் மக்களின் விடுதலைக்கான வழிக்காட்டி அவர்களுக்கான ஆசான்.
சுரண்டல் பேர்வழிகள் அவரை பேச என்ன அருகதையுள்ளது?
உழைக்கும் மக்களை உலக கார்ப்ரேட்களுக்கு அடிமையாக்கும் ஆளும் வர்க்கம் இனி மார்க்சின் பெயரிலும் அடிமை படுத்ததானே இந்த வேலை வேறென்ன? சிலை திறப்பை முன்னெடுக்கும் சீர்திருத்தவாதிகளும், திருத்தல்வாதிகளும், ஏன் சட்டவாதிகள் கலைப்புவாதிகள் இன்னும் பலர் மார்க்சிய பெயரில் மார்க்சிய விரோதமாக செயல்படுவோர் சிலை திறப்பை வரவேற்கின்றனர். ஆனால் சமூக மாற்றம் கொருவோர் அதற்கான அரசியல் தத்துவ நிலையில் மார்க்சிய அடிப்படையில் ஆசான் லெனின் சொன்னது போல்,
"அனைத்து வல்லமை கொண்ட முதலாளித்துவக்கூட்டுகளுடன் மேலும் மேலும் இணைந்து ஒன்றிவரும் அரசானது உழைப்பாளி மக்களை அசுரத்தனமாய் ஓடுக்குவது"
இந்த நோக்கத்தில் இயங்கும் அரசானது யாருக்கானது எதற்கானது அறிந்தவைதானே?
லெனின்சொன்னவைதான்,
"அரசு'' குறித்த சந்தர்ப்பவாதத் தப்பெண்ணங்களை எதிர்த்துப் போராடாமல், பொதுவில் முதலாளித்துவ வர்க்கத்தின் செல்வாக்திலிருந்தும், குறிப்பாய் ஏகாதிபத்திய முதலாளித்துவ வர்க்கத்தின் செல்வாக்கிலிருந்தும் உழைப்பாளி மக்களை விடுவிக்கப் போராடுவது சாத்தியமன்று.
மார்க்சியத்தைப் புதைத்து விட்டு அந்த இடத்தில்
மார்க்சுக்கு
ஒரு அழகிய சிலை
வைப்போம்.- தொழர் த.சிவகுமார் முக நூலில்
மேலும் தோழர் Liga Deva முகநூலில்
காரல் மார்க்ஸ் க்கு
அரசைப் பற்றிய மார்க்சியத் தத்துவமும் புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் கடமைகளும்(26)
முதற் பதிப்பின் முன்னுரை
அரசு பற்றிய பிரச்சனை தத்துவத்திலும் நடைமுறை அரசியலிலும் இன்று மிகுந்த முக்கியத்துவமானது பெற்று வருகிறது. ஏகபோக முதலாளித்துவமானது அரசு-ஏகபோக முதலாளித்துவமாய் மாற்றப்படும் நிகழ்ச்சிப்போக்கை ஏகாதிபத்திய யுத்தம் அளவுகடந்த வேகமும் தீவிரமும் பெறச் செய்திருக்கிறது. அனைத்து வல்லமை கொண்ட முதலாளித்துவக்கூட்டுகளுடன் மேலும் மேலும் இணைந்து ஒன்றிவரும் அரசானது உழைப்பாளி மக்களை அசுரத்தனமாய் ஓடுக்குவது மேலும் மேலும் அசுரத்தனமானதாகி வருகிறது. முன்னேறிய நாடுகள்--அவற்றின் '“உட்பகுதிகளைக்'” குறிப்பிடுகிறோம்- தொழிலாளர்களுக்கு இராணுவக் கடுங்காவல் சிறைக் கூடங்களாகி வருகின்றன.
நீடிக்கும் யுத்தத்தின் இதன்முன் என்றும் கண்டிராத கொடுமைகளும் துயரங்களும் மக்களுடைய நிலையைப் பொறுக்க முடியாததாக்கி அவர்களுடைய சீற்றத்தை உக்கிர மடையச் செய்கின்றன. உலகப் பாட்டாளி வர்க்கப் புரட்சி முற்றி வருவது தெளிவாய்த் தெரிகிறது. அரசின்பால் இதற்குள்ள போக்கு பற்றிய பிரச்சினை நடைமுறை முக்கியத்துவமுடையதாகி வருகிறது.
ஒப்பளவில் சமாதான வழியிலான வளர்ச்சிக்குரிய கடந்த பல பத்தாண்டுகளில் திரண்டு பெருகிய சந்தர்ப்பவாதத்தின் கூறுகள் சமூக-தேசியவெறிப் போக்கினை உருவாக்கி அதற்கு ஊட்டமளித்திருக்கன்றன. இப்போக்கு உலகெங்கும் அதிகாரபூர்வமான சோஷலிஸ்டுக் கட்சிகளில் கோலோச்சுகிறது. சொல்லளவில் சோஷலிசம், செயலில் தேசியவெறி— இதுதான் இப்போக்கு (ருஷ்யாவில் பிளெஹானவ், பத்ரேசவ், பிரெஷ்கோவ்ஸ்கயா, ருபனோவிச், ஓரளவு மறைமுகமான வடிவில் தெஸெரெக்கேலி, செர்னோவ் வகையறாக்கள்; ஜெர்மனியில் ஷெய்டெமன், லெகின், டேவிட், மற்றும் பலர்; பிரான்சிலும் பெல்ஜியத்திலும் ரெனொடேல், கெட்டு,வண்டார்வேல்டே; இங்கிலாந்தில் ஹைண்ட்மன், ஃபேபியன்கள், இத்தியாதி). “சோஷலிசத்தின் தலைவர்கள்’ “தமது” தேசிய முதலாளித்துவ வர்க்கத்தின் நலன்களுக்கு மட்டுமின்றி “தமது' அரசின் நலன்களுக்கும் அடிபணிந்து இழிவுற்றுக் தொண்டிழியம் புரிவோராய் மாற்றமடைவது இந்தப் போக்கின் தனி விசேஷமாகும். வல்லரசுகள் எனப்படுவனவற்றில் பெரும்பாலானவை நெடுங்காலமாய் மிகப் பல சிறிய பலவீன இனங்களைச் சுரண்டியும் அடிமைப்படுத்தியும் வந்திருக்கின்றன. ஏகாதிபத்திய யுத்தம் இவ்வகைக் கொள்ளையைப் பகிர்ந்து கொள்வதற்கும் மறுபங்கீடு செய்வதற்குமான யுத்தமாகும். "அரசு'' குறித்த சந்தர்ப்பவாதத் தப்பெண்ணங்களை எதிர்த்துப் போராடாமல், பொதுவில் முதலாளித்துவ வர்க்கத்தின் செல்வாக்திலிருந்தும், குறிப்பாய் ஏகாதிபத்திய முதலாளித்துவ வர்க்கத்தின் செல்வாக்கிலிருந்தும் உழைப்பாளி மக்களை விடுவிக்கப் போராடுவது சாத்தியமன்று.
முதற்கண், அரசு பற்றிய மார்க்ஸ், எங்கெல்ஸ் போதனையைப் பரிசீலிக்கிறோம். இந்தப் போதனையில் கவனியாது புறக்கணிக்கப்பட்டிருக்கும் அல்லது சந்தர்ப்பவாத முறையில் திரித்துப் புரட்டப்பட்டிருக்கும் கூறுகளை மிகவும் முக்கியமாய் விளக்குகிறோம். அடுத்து, இந்தப் புரட்டல்களுக்குப் பிரதான காரணஸ்தராகிய கார்ல் காவுத்ஸ்கிகுறித்து- நடப்பு யுத்தத்தின்போது கையாலாகாததாகிப் பரிதாப முடிவை எய்தியிருக்கும் இரண்டாவது அகிலத்தின் (1889-1914) பிரபல தலைவர் அவர்-— தனிப்பட விவாதிக்கிறோம். இறுதியில், 1905ஆம் அண்டு, இன்னும் முக்கியமாய் 1917ஆம் ஆண்டு ருஷ்யப் புரட்சிகளது அனுபவத்தின் பிரதான முடிவுகளைத் தொகுத்துக் கூறுகிறோம். 1917ஆம் ஆண்டின் ருஷ்யப் புரட்சி இப்பொழுது (1917 ஆகஸ்டுத் தொடக்கம்) அதன் வளர்ச்ச்யினுடைய முதற் கட்டத்தின் இறுதியை நெருங்கிக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. மொத்தத்தில் இந்தப் புரட்சியை ஏகாதிபத்திய யுத்தத்தின் காரணமாய் மூளும் சோஷலிசப் பாட்டாளி வர்க்கப் புரட்சிகளின் கோவையில் ஓர் இணைப்பாய் அன்றி வேறு எவ்விதத்திலும் புரிந்து கொள்ள முடியாது. ஆகவே அரசின்பால் சோஷலிசப் பாட்டாளி வார்க்கப் புரட்சிக்குள்ள போக்கு குறித்த பிரச்சினை நடைமுறை அரசியல் முக்கியத்துவம் மட்டுமின்றி, இன்றைய மிக அவசர அவசியப் பிரச்சினை ஒன்றாகவும்- முதலாளித்துவக் கொடுங்கோன்மையிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்ள வெகு ஜனங்கள் கூடிய சீக்கிரத்தில் என்ன செய்ய வேண்டியிருக்கும் என்பதை அவர்களுக்கு விளக்கிச் சொல்லும் பிரச்சினையாகவும்-- முக்கியத்துவம் பெற்று வருகிறது.
1917 ஆகஸ்டு ஆசிரியர்
வர்க்கச் சமுதாயமும் அரசும்
1. வர்க்கப் பகைமைகள் இணக்கம் காண முடியாதவை ஆனதன் விளைவாய்த் தோன்றியதே அரசு
மார்க்சின் போதனைக்குத் தற்போது என்ன தேர்ந்து வருகிறதோ, அதுவேதான் விடுதலைக்காகப் போராடும் ஓடுக்கப்பட்ட வர்க்கங்களுடைய புரட்சிகரச் சிந்தனையாளர்களும் தலைவர்களுமானோரின் போதனைகளுக்கு வரலாற்றிலே அடிக்கடி. நேர்ந்துள்ளது. ஒடுக்கும் வர்க்கங்கள் மாபெரும் புரட்சியாளர்களை அவர்களுடைய வாழ்நாளில் ஓயாமல் வேட்டையாடின; அவர்களுடைய போதனைகள் மீது காட்டுத்தனமான காழ்ப்பும் வெறித்தனமான வெறுப்பும் கொண்டு கயமையான பொய்ப் பிரசார அவதூறு இயக்கம் நடத்தின, அவர்கள் இறந்த பிற்பாடு அவர்களை அபாயமற்ற பூஜையறைப் படங்களாக்கி வழிபாட்டுக்குரியோராக்கவும், ஓரளவு அவர்களுடைய பெயர்களைப் புனிதத் திருப்பெயர்களாக்கவும் முயற்சிகள் செய்யப்படுகின்றன. ஒடுக்கப்பட்ட வர்க்கங்களை “ஆன்ம திருப்தி” பெறச் செய்வதும், அவற்றை ஏமாற்றுவதும், அதேபோதில் புரட்சி போதனையிடமிருந்து அதன் சாரப் பொருளைக் களைந்து, அதன் புரட்சி முனையை மழுக்கடித்து, அதைக் கொச்சைப்படுத்துவதும்தான் இந்த முயற்சிகளின் நோக்கம். முதலாளித்துவ வர்க்கத்தாரும் தொழிலாளர் இயக்கத்திலுள்ள சத்தர்ப்பவாதிகளும் இன்று மார்க்சியத்கை இவ்வாறு “பதனம் செய்வதில்” ஒன்றுபடுகிறார்கள். இந்தப் போதனையின் புரட்சித் தன்மையை, இதன் புரட்சி ஆன்மாவை அவர்கள் விட்டொழிக்கவோ, மூடிமறைக்கவோ, திரித்துப் புரட்டவோ செய்கிறார்கள். முதலாளித்துவ வர்க்கத்துக்கு ஏற்புடையதை, அல்லது ஏற்புடையதாய்த் தோன்றுவதை முதன்மையதாய் முன்னிலைக்குக் கொண்டுவந்து மெச்சிப் புகழ்கிறார்கள். சமூக-தேசியவெறியர்கள் எல்லோருமே இப்பொழுது “மார்க்சியவாதிகள்” ஆகிவிட்டனர் (சிரிக்க வேண்டாம்!). ஜெர்மன் முதலாளித்துவ அறிஞர்கள்-"நேற்று வரை மார்க்சியத்தை அழித்தொழிக்கும் நிபுணர்களாய் இருந்தவர்கள்_— மார்க்ஸ் 'ஜெர்மன் தேசத்தவர்' என்பதாய் அடிக்கடி பேசுகிறார்கள்; கொள்ளைக்கார யுத்தம் புரிவதற்கு இவ்வளவு திறம்பட ஒழுங்கமைக்கப்பட்டிருக்கும் தொழிற் சங்கங்களுக்குப் போதமளித்தவர் என்பதாய் முழங்குகிறார்கள்"!
மார்க்சியத்தைத் திரித்துப் புரட்டுவது என்றுமில்லாத அளவுக்கு மலிந்திருக்கும் இப்படிப்பட்ட ஒரு நிலைமையில், மெய்யாகவே மார்க்ஸ் அரசு என்னும் பொருள் குறித்து என்ன போதித்தார் என்பதைத் திரும்பவும் நிலைநாட்டுவதே நமது தலையாய கடமை, இதற்கு, நேரடியாக மார்க்ஸ், எங்கெல்ஸ் நூல்களிலிருந்து நீண்ட பல மேற்கோள்கள் தருவது இன்றியமையாதது. நீண்ட மேற்கோள்கள் வாசகத்தைக் கடினமாக்கிவிடும், சுவையாகவும் எளிதாகவும் பலரும் படிக்கத்தக்க வாசகமாக்குவதற்குத் தடையாகிவிடும் என்பது மெய்தான். ஆயினும் இம்மேற்கோள்களைக் தவிர்ப்பது சாத்தியமன்று. மார்க்ஸ், எங்கெல்ஸ் நூல்களில் அரசு என்னும் பொருள் குறித்து காணப்படும் எல்லாப் பகுதிகளையும், அல்லது அத்தியாவசியமான எல்லாப் பகுதிகளையேனும் கூடுமான வரை முழு அளவில் எப்படியும் மேற்கோளாய்க் கொடுத்தாக வேண்டும். அப்பொழுதுகான் விஞ்ஞான சோஷலிசத்தின் மூலவர்களுடைய கருத்துக்களின் முழுப் பரிமாணத்தையும், அவற்றின் வளர்ச்சியையும் பற்றி வாசகர் சுயேச்சையான ஓர் அபிப்பிராயத்தை வந்தடைய முடியும்; இக்கருத்துக்கள் தற்போது மேலோங்கிவிட்ட "காவுத்ஸ்டி வாதத்தால்" திரித்துப் புரட்டப்பட்டிருப்பது ஆவண ஆதாரத்தால் நிரூபித்து, கண்கூடாய்ப் புலப்படுத்த முடியும்.
எங்கெல்சின் நூல்களில் மிகவும் பெயர் பெற்றதான குடும்பம், தனிச் சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் என் பதிலிருந்து தொடங்குவோம். இந்நூலின் ஆறாம் பதிப்பு 1894லேயே ஸ்டுட்கர்ட் நகரில் வெளியிடப்பட்டது. ருஷ்ய மொழிபெயர்ப்புகள் ஏராளம் இருப்பினும் பெரும்பாலும் அரைகுறையாகவோ, சிறிதும் திருப்தியளிக்காதவையாகவோ இருப்பதால், ஜெர்மன் மூலங்களிலிருந்து மேற்கோள்களை மொழிபெயர்க்க வேண்டியிருக்கிறது.
வரலாற்று வழிப்பட்ட தமது பகுத்தாய்வினைத் தொகுத்தளித்து எங்கெல்ஸ் கூறுவதாவது:
“ஆகவே அரசானது எவ்வகையிலும் வெளியிலிருந்து சமுதாயத்தின் மீது வலுக்கட்டாயமாய் இருத்தப்பட்ட சக்தியல்ல; இதே போல அது எவ்வகையிலும் ஹெகல் வலியுறுத்தும் “அறநெறிக் கருத்தின் எதார்த்த உருவோ”, “அறிவின் பிம்பமும் எதார்த்தமுமோ” அல்ல. மாறாக, சமுதாயத்தின் குறிப்பிட்ட ஒரு வளர்ச்சிக் கட்டத்தின் விளைவே அரசு. இந்தச் சமுதாயம் தன்னுட்னான தீராத முரண்பாட்டில் சிக்கிக்கொண்டுவிட்டது., இணக்கம் காண முடியாத பகை சக்திகளாய்ப் பிளவுண்டு விட்டது, இந்தப் பகைமை நிலையை அகற்றத் திறனற்றதாகிவிட்டது என்பதை ஓப்புக்கொள்வதன் விளைவே அரசு. ஆனால் இந்தப் பகை சக்திகள், முரண்பட்டு மோதிக் கொள்ளும் பொருளாதார நலன்களைக் கொண்ட இந்த வர்க்கங்கள், தம்மையும் சமுதாயத்தையும் பயனற்ற போராட்டத்தில் அழித்துக் கொண்டுவிடா மல் தடுக்கும் பொருட்டு, மோதலைத் தணித்து “ஒழுங்கின்” வரம்புகளுக்குள் இருத்தக் கூடிய ஒரு சக்தியை, வெளிப்பார்வைக்குச் சமுதாயத்துக்கு மேலானதாய்த் தோன்றும் ஒரு சக்தியை நிறுவுவது அவசியமாயிற்று. சமுதாயத்திலிருந்து உதித்ததானாலும் சமுதாயத்துக்கு மேலானதாய்த் தன்னை அமர்த்திக் கொண்டு மேலும் மேலும் தன்னை அதற்கு அயலானாக்கிக் கொள்ளும் இந்தச் சக்தியே அரசு எனப்படுவது”? (ஆறாவது ஜெர்மன் பதிப்பு, பக்கங்கள் 177-78).”(27)
அரசின் வரலாற்றுப் பாத்திரம் குறித்தும், அரசு என்றால் என்னவென்பது குறித்தும் மார்க்சியத்தின் அடிப்படை கருத்தை இது தெட்டத் தெளிவாய் எடுத்துரைக்கிறது. வர்க்கப் பகைமைகள் இணக்கம் காண முடியாதவை ஆனதன் விளைவும் வெளியீடுமே அரசு. எங்கே, எப்பொழுது, எந்த அளவுக்கு வர்க்கப் பகைமைகள் புறநிலைக் காரணங்களால் இணக்கம் காண முடியாதவை ஆகின்றனவோ, அங்கே, அப்பொழுது, அந்த அளவுக்கு அரசு உதித்தெழுகிறது. எதிர்மறையில் கூறுமிடத்து, அரசு ஓன்று இருப்பதானது வர்க்கப் பகைமைகள் இணக்கம் காண முடியாகவையாய் இருத்தலை நிரூபிக்கிறது.
மார்க்சியத்தைத் திரித்துப் புரட்டும் போக்கு மிகவும் முக்கியமான, அடிப்படையான இந்த விவகாரத்திலிருந்து தான் தொடங்குகிற பிரதான வழிகளில் செல்கிறது.
ஒரு புறத்தில், முதலாளித்துவ சித்தாந்தவாதிகளும், குறிப்பாய்க் குட்டிமுதலாளித்துவ சித்தாந்தவாதிகளும், எங்கே வர்க்கப் பகைமைகளும் வர்க்கப் போராட்டமும் உள்ளனவோ அங்கு மட்டுமே அரசு இருக்கிறதென்பதை மறுக்க முடியாத வரலாற்று உண்மைகளின் நிர்பந்தம் காரணமாய் ஒப்புக்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகி, வார்க்கங்களிடையே இணக்கம் உண்டாக்குவதற்கான உறுப்பே அரசு என்று தோன்றும் வண்ணம் மார்க்சுக்குத் “திருத்தம்” கூறுகிறார்கள். வர்க்கங்களிடையே இணக்கம் உண்டாக்க முடிந்திருந்தால், மார்க்சின் கருத்துப்படி அரசு உதித்தும் இருக்க முடியாது, தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கவும் முடியாது. அற்பவாதக் குட்டிமுகலாளித்துவப் பேராசிரியர்களும் நூலாசிரியர்களும் கூறும் கருத்துப்படி அருள் கூர்ந்து அவர்கள் அடிக்கடி மார்க்சை ஆதாரங்காட்டுகிறார்கள் "அரசானது வர்க்கங்களிடையே இணக்கம் உண்டாக்குவதாய்த் தோன்றுகிறது. மார்க்சின் கருத்துப்படி வர்க்க ஆதிக்கத்துக்கான ஒர் உறுப்பே, ஒரு வர்க்கம் பிறிதொன்றை ஒடுக்குவதற்கான ஓர் உறுப்பே அரசு; வர்க்கங்களுக்கு இடையிலான மோதலை மட்டுப்படுத்துவதன் வாயிலாய் இந்த ஒடுக்குமுறையைச் சட்ட முறையாக்கி, நிரந்தரமாக்கிடும் “ஒழுங்கை” நிறுவுவகே அரசு. ஆனால் குட்டிமுதலாளித்துவ அரசியல்வாதிகளின் அபிப்பிராயத்தில், ஒழுங்கு என்றால் ஓரு வர்க்கம் பிறிதொன்றை ஓடுக்குவதல்ல, வர்க்கங்களிடையே இணக்கம் உண்டாக்குவதே ஓழுங்கு; மோதலை மட்டுப்படுத்துவது என்றால் ஓடுக்குவோரைக் கவிழ்ப்பதற்கான குறிப்பிட்ட போராட்ட சாதனங்களையும் முறைகளையும் ஓடுக்கப்பட்ட வர்க்கங்களிடமிருந்து பறிப்பதல்ல, வர்க்கங்களிடையே இணக்கம் உண்டாக்குவதே மோதலை மட்டுப்படுத்துவது".
உதாரணமாய், 1917ஆம் ஆண்டுப் புரட்சியின்போது அரசின் முக்கியத்துவத்தையும் பாத்திரத்தையும் பற்றிய பிரச்சனை உடனடிச் செயல்--அதுவும் வெகுஜன அளவிலான செயல்--தேவைப்பட்ட நடைமுறைப் பிரச்சினையாய் அதன் முழுப் பரிமாணத்திலும் எழுந்தபோது, எல்லா சோஷலிஸ்டு- புரட்சியாளர்களும் மென்ஷிவிக்குகளும் “அரசானது” வர்க்கங்களிடையே “இணக்கம் உண்டாக்குகிறது”” என்னும் குட்டிமுதலாளித்துவத் தத்துவத்துக்கு உடனே சரிந்து சென்று விட்டனர். இவ்விரு கட்சிகளையும் சேர்ந்த அரசியல்வாதிகளுடைய எண்ணற்ற தீர்மானங்களும் கட்டுரைகளும் இந்த அற்பத்தனமான குட்டிமுதலாளித்துவ * “இணக்கம் காணும்” தத்துவத்திலே மூழ்கித் திளைத்தன. குறிப்பிட்ட ஒரு வர்க்கத்தின், தனது எதிர்சக்தியுடன் (தன்னை எதிர்க்கும் வர்க்கத்துடன்) இணக்கம் கொள்ள முடியாததாகவிட்ட குறிப்பிட்ட ஒரு வர்க்கத்தின் ஆதிக்கத்திற்கான ஓர் உறுப்பே அரசு என்பது குட்டிமுதலாளித்துவ ஜனநாயகவாதிகள் ஒருபோதும் புரிந்து கொள்ள இயலாத ஒன்றாகும். எமது சோஷலிஸ்டு-புரட்சியாளர்களும் மென்ஷிவிக்குகளும் சோஷலிஸ்டுகளே அல்ல (போல்ஷிவிக்குகளாகிய நாம் எப்பொழுதுமே கூறி வந்துள்ள விவரம்தான் இது), ஓரளவு சோஷலிசப்பதங்களைப் பிரயோடிக்கும் குட்டிமுதலாளித்துவ ஜனநாயக வாதிகளேயன்றி வேறல்ல என்பதற்கு, அரசு சம்பந்தமாய் அவர்கள் அனுசரிக்கும் போக்கு மிகவும் எடுப்பான எடுத்துக்காட்டுகளில் ஒன்று.
மறு புறத்தில், மார்க்சியத்தைப் பற்றிய “காவுத்ஸ்கிவாதப்” புரட்டு இன்னும் நுண்ணயம் வாய்ந்தது. அரசானது வார்க்க ஆதிக்கத்துக்கான ஓர் உறுப்பு என்பதையோ, வர்க்கப் பகைமைகள் இணக்கம் காண முடியாதவை என்பதையோ “தத்துவார்த்தத்தில்” இப்புரட்டு மறுப்பதில்லை. ஆனால் அது பராமுகமாய் விட்டொழிப்பது அல்லது பூசி மெழுகுச் செல்வது இதுதான்: வர்க்கப் பகைமைகள் இணக்கம் காண முடியாதவை ஆகியதன் விளைவே அரசு என்றால், அது சமுதாயத்துக்கு மேலானதாய் நின்று “மேலும் மேலும் தன்னை அதற்கு அயலானாக்கிக் கொள்ளும்” சக்தியாகும் என்றால், ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின் விடுதலை பலாக்காரப் புரட்சியின்றி சாத்தியமில்லை என்பதோடு, ஆளும் வர்க்கத்தால் தோற்றுவிக்கப்பட்டதும் “அயலானாய் இருக்கும்” இந்நிலையின் உருவகமானதும் ஆன அரசு அதிகார இயந்திரத்தை அழித்திடாமலும் இந்தவிடுதலை சாத்தியமில்லை என்பது தெளிவு. தத்துவார்த்த வழியில் தானாகவே வெளிப்படும் இந்த முடிவினை மார்க்ஸ், புரட்சியின் கடமைகளைப் பற்றிய ஸ்தூலமான வரலாற்று வழிப்பட்ட பகுத்தாய்வின் அடிப்படையில் திட்டவட்டமாய் எடுத்துரைத்தார் இதனை நாம் பிற்பாடு காணப் போகிறோம். இந்த முடிவைத்தான்-— பிற்பாடு நாம் விவரமாய்க் காட்டப் போவது போல காவுத்ஸ்கி “மறந்துவிடுகிறார்” திரித்துப் புரட்டுகிறார்.
காவுத்ஸ்கியின் நிலைப்பாட்டில் உள்ளவர்கள்தான் இடதுசாரிகளாய் உள்ள பொழுது மேலே அரசும் புரட்சியும் நூலில் லெனின் சொன்னவை அவர்களுக்கு பொருந்தும் தானே!
தொடரும்....
No comments:
Post a Comment