நல்லகண்ணு: கம்யூனிச வாழ்வும் தத்துவார்த்த விமர்சனமும்
இந்தியக் கம்யூனிச இயக்கத்தின் மூத்த தலைவரான தோழர் ஆர். நல்லகண்ணுவின் வாழ்வு, அரசியல் நெறிகள் மற்றும் அவரது மறைவு குறித்த விரிவான பார்வையை இத்தொகுப்பு வழங்குகிறது. விடுதலைப் போராட்ட வீரரான இவரது எளிமை, தியாகம் மற்றும் வர்க்கப் போராட்ட அர்ப்பணிப்பு ஆகியவை பல்வேறு சமூக வலைதளக் கருத்துக்களின் வழியாக இங்கே போற்றப்படுகின்றன. அதே வேளையில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிகளின் வரலாற்றுப் பிளவுகள், தேர்தல் பாதை மாற்றங்கள் மற்றும் மார்க்சியக் கோட்பாடுகளிலிருந்து அவை விலகிச் சென்ற விதம் குறித்த விமர்சன ரீதியான விவாதங்களையும் இக்கட்டுரை முன்வைக்கிறது. லெனினது உரைகளின் அடிப்படையில் கம்யூனிச ஒழுக்கம் மற்றும் வர்க்கப் போர் குறித்த தத்துவ விளக்கங்கள் அளிக்கப்பட்டு, அதன் பின்னணியில் நல்லகண்ணுவின் பங்களிப்பு மதிப்பிடப்படுகிறது. இறுதியில், ஒரு தலைவரின் தனிப்பட்ட ஒழுக்கத்தைத் தாண்டி, பாட்டாளி வர்க்கப் புரட்சியை முன்னெடுத்துச் செல்வதே அவருக்குச் செலுத்தும் உண்மையான வீரவணக்கம் என இப்பாடம் வலியுறுத்துகிறது. இத்தொகுப்பு ஒரு தலைவரின் மறைவை ஒட்டி எழுந்த அரசியல் மற்றும் தத்துவ ரீதியான உரையாடல்களின் வழிவாக அமைந்துள்ளது.
தோழர் ஆர். நல்லகண்ணுவின் வாழ்க்கை முறை மற்றும் அரசியல் எளிமை பற்றி விளக்குக.
இந்திய கம்யூனிச இயக்கத்தில் ஏற்பட்ட பிளவுகள் மற்றும் அதன் வரலாற்றுப் பின்னணி என்ன?
லெனினின் கருத்துப்படி கம்யூனிச ஒழுக்க நெறி என்பது சாதாரண அறநெறியில் இருந்து எவ்வாறு வேறுபடுகிறது?
கடந்த கால அரசியல் நெறிகளையும் நிகழ்கால அரசியல் கடமைகளையும் வலியுறுத்தி கட்சி பேதமின்றி அனைத்து மக்களுக்கும் வழிகாட்டியாகத் திகழ்ந்த தோழர் ஆர். நல்லகண்ணு இன்று நம்மை விட்டுப் பிரிந்தார் என்று கேட்கும்போதும் சரி ஊடகங்களில் பார்க்கும்போதும் சரி நமது மனத்தை கனமாக்குகிறது.
சுதந்திரப் போராட்டத்திலும் சுதந்திரம் அடைந்த பிறகு நடந்த மக்கள் போராட்டங்களிலும் தொடர்ந்து பங்கெடுத்ததால் சொந்த வாழ்க்கையை போராட்டக் களமாக்கிக் கொண்டவர். அவருக்கு உறுதுணையாக இருந்த அவரது இணையர் 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி இறந்தார். அடுத்த பத்தாண்டுகள் கழித்து இன்று 25.02.2026 மதியம் காலமானார். இவரை எந்த கட்சியில் இருந்தாலும் மக்கள் மறப்பதில்லை. பொதுமக்கள் மறந்தாலும் உழைப்பாளி மக்கள் ஒருபோதும் மறக்க முடியாது இவரை.
வயதான காலத்திலும் தியாக சீலர்கள் இளைஞர்களாக விளங்க முடியும் என்பதற்கு இவர் ஓர் உதாரணம். கம்யூனிஸ்டு இயக்கத்தின் வீர வரலாற்றை வணங்குகிறவர்கள் தோழர் நல்லகண்ணு வை வணங்காமல் இருக்க முடியுமோ? எண்ணற்ற பாட்டாளி மக்களின் இதயத்தில் வைத்திருந்த தோழர் நல்ல கண்ணு ஒரு இடைவெளியை ஏற்படுத்தி விட்டு நம்மை விட்டுச் சென்றுவிட்டார். கம்யூனிச இயக்கத்தின் அடையாளமாகத் திகழ்ந்த நல்லகண்ணு நம்மை விட்டுப் பிரிந்தார். அவரது உடல் ஓய்வெடுக்கச் சென்றாலும் இயக்கத்தின் பொறுப்புக்களை அவர் வழி நின்று ஏற்று செயல்படுவோமாக!
குருட்டுக்கண்
மாலைக்கண்
காமாலைக் கண்
மாறுகண்
சாளேசுவரக் கண்
தூரப்பார்வை கண்
கிட்டப்பார்வை கண்
இத்தகைய கண்கள் எல்லாம்
தலைவர்களாக இருக்கும்
அரசியலில்
நல்லகண்ணு! நீ மட்டும்
நல்ல கண்
உறங்காத கண் நல்ல கண்ணுவே மரணம் உன்னை உறங்க வைத்து விட்டது.கனத்த இதயத்துடன் செ.பரத்வாஜ், க.அய்யாசாமி
++++++++++++++++++=
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
+++++++++++++++++++++++++++
15வயதில் தனது அரசியல் பயணத்தை
ஆரம்பித்தவர். 101வயது வயதில் பயணத்தை நிறுத்திக் கொண்டார்.
எளிமையான தலைவர். ஆனால் சிறந்த கம்யுனிஸ்ட்டு தலைவர் இல்லை.
அவரது கட்சி தேர்தல் பாதையில் பயணித்து புரட்சிக்கு துரோகம் செய்தது.
+++++++++++++++++++++
நம்முடைய விமர்சனதிற்கு வருவோம். நாம் தோழரை தனிநபரை விட கட்சியாகவும் அவரின் வழிகாட்டலில் கட்சியின் நிலையோடு தோழரின் செயலை புரிந்துக் கொள்ள வேண்டும்...
கம்யூனிச ஒழுக்க நெறியும் பாட்டாளி வர்க்கப் போராட்டமும்
கம்யூனிச ஒழுக்கநெறி என்பது மதக் கோட்பாடுகளையோ அல்லது முதலாளித்துவ வர்க்க நலன்களையோ அடிப்படையாகக் கொண்டது அல்ல என்பதை விளக்குகிறது. கம்யூனிஸ்டுகளின் அறநெறி என்பது பாட்டாளி வர்க்கப் போராட்டத்தின் தேவைகளுக்கும், சுரண்டலற்ற சமுதாயத்தை உருவாக்குவதற்கும் முழுமையாகக் கட்டுப்பட்டதாகும். பழைய சமூகத்தின் சுயநலப் போக்குகளையும் அடிமைத்தனத்தையும் ஒழித்து, உழைக்கும் மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்படுவதே உண்மையான ஒழுக்கம் என இது வலியுறுத்துகிறது. வர்க்க வேறுபாடுகளைக் களைந்து, உழைப்பால் ஒன்றிணைந்த ஒரு புதிய கம்யூனிச சமூகத்தைக் கட்டியெழுப்புவதே இந்த உயர்ந்த அறநெறியின் முதன்மை நோக்கமாகக் கருதப்படுகிறது. தனியார் சொத்துரிமை மற்றும் ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடுவதன் மூலமே மனிதநேயமிக்க இந்த ஒழுக்க விழுமியங்களைப் பெற முடியும் என்று லெனின் கூறினார்.
கம்யூனிஸ ஒழுக்கம் கடவுள் மற்றும் மத அடிப்படையிலான அறநெறியிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது?
வர்க்கப் போராட்டத்திற்கும் கம்யூனிஸ அறநெறிக்கும் இடையிலான தொடர்பு என்ன?
பழைய சுரண்டல் சமூகத்தின் சுயநலப் பண்புகளை ஒரு கம்யூனிஸ்ட் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும்?
கம்யூனிஸ்டுகள் யார்?
கம்யூனிஸ்டுகளின் பணி என்ன?
இங்குள்ள நிலை என்ன?
நமக்கான வழிமுறை என்ன?
எல்லாப் புரட்சி
வர்க்கங்களையும் -பிரிவினரையும்- மக்கள் திரளினரையும் அணிதிரட்டி இந்தப் பெரும்
சிறப்பு வாய்ந்த போராட்டத்தில் இந்தியப் பாட்டாளி வர்க்கத்திற்கு தலைமை கொடுக்க
வேண்டியது கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றுக் கடமையாகும்.
இந்தியக் கம்யூனிஸ்ட்
கட்சி நம் நாட்டிலுள்ள நூறு கோடிக்கும் மேற்பட்ட மக்களைக் கொண்ட இந்த
நாட்டில் புரட்சிக்கு தலைமை ஏற்று நடத்தும் ஆற்றல் மிக்க கம்யூனிஸ்ட் கட்சியைக்
கட்டியமைப்பதற்கான பாதையை அமைக்கும் கடமை இங்குள்ள கம்யூனிஸ்டுகள் முன் உள்ள பணி
ஆனால் நிலைமை என்னவாக உள்ளது?
சுருக்கமாக வரலாற்று பக்கங்களை திறப்போம்
இந்தியாவில், அன்றைய பிரிட்டிஷ் காலனியாதிக்கத்துக்கு எதிராகப் போராடிக்
கொண்டிருந்த பல்வேறு சக்திகளுக்கு 1917-ல் நடந்த ரஷ்யப் பாட்டாளி வர்க்க சோசலிசப்
புரட்சியின் வெற்றியானது, புதிய
பார்வையையும் புதிய நம்பிக்கையையும் அளித்தது.
அன்றைய பிரிட்டிஷ் காலனியாட்சியில்,
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பல
கம்யூனிசக் குழுக்கள் இரகசியமாக இயங்கி வந்தன.அவை
ஒன்றுபட வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருந்தது.
இந்திய கம்யூனிஸ்ட்
கட்சி (சி.பி.ஐ.)யானது, 1925 டிசம்பர் 25 அன்று கான்பூரில் நடந்த மாநாட்டில்தான் இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி
நிறுவப்பட்டதாக அறிவிக்கிறது. ஆனால் சி.பி.எம். கட்சியோ, 1920-ல்,
அன்றைய சோவியத் ஒன்றியத்தில் ஓர் அங்கமாக இருந்த
உஸ்பெகிஸ்தானின் (துருக்கேஸ்தான்) தலைநகர் தாஷ்கண்டில் அக்டோபர் 17-ம் தேதி நடந்த கூட்டம்தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்ட நாளாகும்
என்று அறிவிக்கிறது. இவற்றில் எது சரியானது என்ற குழப்பம் இந்திய கம்யூனிச
இயக்கத்தில் தொடர்ந்து நீடிக்கிறது. ஆனால் வரலாற்று ஆதாரங்களின்படி, 1925 டிசம்பர் 25-ல் கான்பூரில் நடந்த மாநாட்டில்தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டது
என்பதே சரியான முடிவாகும்.
1964-ல் சிபிஐ உடைந்து சிபிஐ(எம்) கட்சி ஏற்பட்டது. சிபிஐ(எம்) கட்சி
மீண்டும் ஒருமுறை பிளவு கணடது ஏனெனில் சிபிஐ யிலிருந்து சிபிஎம் வைத்த குற்றசாட்டை
தான் இதன் நிலைப்பாட்டை எதிர்த்து 1967ல் மீண்டும் உடைவு.... இவை தத்துவ அரசியல் போராடமா? அமைப்பின் தேவையா? அன்றை வரலாற்று பக்கங்களில் உள்ளன.
இதனை புரிந்துக் கொள்ள நாம் ஆசான் லெனினிடம் செல்வோம் நமது விமர்சனத்தை சரி பார்க்க...
கம்யூனிஸ ஒழுக்கம் என்பதாய் ஒன்று இருக்கிறதா? நிச்சயமாய் இருக்கிறது! நமக்கு என்று ஒரு தனி அறநெறி
கிடையாது என்று அடிக்கடி பேசப்படுகிறது.
ஒழுக்கநெறி அனைத்தையும் நிராகரிப்பவர்கள் என்று கம்யூனிஸ்டகளாகிய நம் மீது
முதலாளித்து வர்க்கத்தினர் அடிக்கடி குற்றம் சாட்டுகிறார்கள். பிரச்சனையை
குழப்பதற்கான தொழிலாளர் விவசாயிகளில் கண்களில் மண்ணைத் தூங்குவதற்கான ஒரு உபாயமே
இது. எந்த அர்த்தத்தில் நாம் அறநெறியை ஒழுக்க நெறியை நிராகரிக்கிறோம். முதலாளி
வர்க்கத்தினர் அதற்கு அளித்திடும் அந்த அர்த்தத்தில் நிராகரிக்கிறோம். கடவுள்
கட்டளைகளை அவர்கள் அறநெறி அடிப்படையாகக் கொள்கிறார்கள் எங்களுக்கு கடவுள்
நம்பிக்கை கிடையாது என்று நாம் கூறுகிறோம்.
மனிதனுக்கு புறம்பான வர்க்கத்திற்கு புறம்பான கருத்து இனங்கள் அடிப்படையாய்
கொண்ட எந்த ஒழுக்க நெறியும் நாம் நிராகரிக்கிறோம். அது ஏமாற்று வித்தை மாய்மாலம்
நிலப்பிரப்புத்துவ முதலாளிகள் நலனை முன்னிட்டு தொழிலாளர்களையும் விவசாயிகளையும்
மூடர்களாக்குவதற்கு உபாயம் செய்கிறார்கள். எங்களுடைய ஒழுக்க நெறி பாட்டாளி
வர்க்கத்தினுடைய வர்க்க போராட்டத்தில் நலன்களுக்காக முற்றிலும் கீழ்ப்படிந்தது
என்று நாம் கருதுகிறோம்.
எங்கள் ஒழுக்க நெறி பாட்டாளி வர்க்க போராட்டத்தின் ஒழுங்கிலிருந்து உதிக்கிறது
பழைய சமுதாயம் எல்லாம் தொழிலாளர் விவசாயின் மீதும் நிலப்பிரப்புகள் முதலாளித்துவ
புரிந்த ஒடுக்கு முறையின் அடிப்படையில் அமைந்திருந்தது. நாம் அதை அடியோடு அழிக்க
வேண்டி இருக்கிறது, அவர்களை வீழ்த்த வேண்டி இருக்கிறது. ஆனால் இதை செய்ய,
நாம் ஒற்றுமையை உண்டாக்க வேண்டி இருக்கிறது. அது கடவுளால்
உண்டாக்கப்பட கூடிய ஒன்று அல்ல. இந்த ஒற்றுமையை தொழிற்சாலைகளால் மட்டும்தான்
அளித்திட முடியும். நீண்ட நெடிய உறக்கத்திலிருந்து எழுப்பப்பட்டு பயிற்சி
அளிக்கப்பட்ட பாட்டாளி வர்க்கத்தால்தான் உண்டாக்க முடியும். இந்த வர்க்கம் உருவான
பிறகு வெகுஜன இயக்கம் ஒன்று தோன்றி மிகவும் பலவீனமான ஒரு நாட்டில் பாட்டாளி வர்க்க
புரட்சி வெற்றியடைந்திருப்பதை நாம் காண்கிறோம். இந்த வெற்றிக்கு வழி செய்தது இந்த
பாட்டாளி வர்க்க புரட்சி அனைத்து உலகில் முதலாளித்துவ வர்க்கதினால் கடும் தாக்குதலுக்கு
உள்ளாகி கொண்டிருக்கிறவர்கள் இடையில் ஒற்றுமையும் மற்றும் சிதறுண்டுள்ள விவசாயிகளை
தன்னை பின்பற்றி வர செய்துள்ளது. சுரண்டலாளர்களின் எல்லா தாக்குதலையும் சமாளித்து
நிற்பது திடமான இச்சக்தியை பாட்டாளி வர்க்கம் தன் அணியில் அரவனைத்து வர்க்க
சமூகத்தில் இன்று சிதறுண்டுள்ள உழைப்பாளிகள் வெகுஜனங்கள் ஒன்றுபடவும் தமது அணியில்
ஒன்று திரட்டி கொள்ளவும் கம்யூனிச சமுதாயத்தை முடிவாய் பாதுகாத்துக் கொள்ளவும்,
முடிவாய் உறுதிப் பெரும்படியும் செய்ய,
முடிவாய் பாட்டாளி வர்க்க கட்சி துணை புரிய முடியும்.
எனவேதான் மனித சமுதாயத்திற்கு மேலானது எந்த ஒழுக்க நெறி என்பதாய் நமக்கு
ஏதுமில்லை என்று கூறுகிறோம்.
நமது ஒழுக்க நெறியானது பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டத்தினுடைய
நலன்களுக்கு கீழ்ப்பட்டதாகும் இந்த வர்க்க போராட்டம் எதில் அடங்கி உள்ளது?
இன்றைய ஏகாதிபத்தியத்தை வீழ்த்துதல் சுரண்டும் வர்க்கத்தை ஒழித்தல் இதில்
அடக்குவது.
வர்க்கங்கள் என்பவை யாவை சமுதாயத்தில் ஒரு பிரிவு மற்றொரு பிரிவின் உழைப்பை
அபகரித்துக் கொள்ள வழி செய்வது இங்குள்ள ஒழுங்கு. சமுதாயத்தின் ஒரு பிரிவு
எல்லாவற்றையும் அபகரித்துக் கொள்ளுமாறு அந்த வர்க்கதின் ஒழுங்காக இருக்க
காண்கிறோம். சமுதாயத்தின் இந்த ஒருபிரிவை ஒழித்துக் கட்ட வேண்டிய தேவை இன்னொரு
பிரிவுக்கு உள்ளது.
ஜாரை விரட்டுவது கடினமாய் இருக்கவில்லை ஒரு சில நாட்களை தேவைப்பட்டன.
நிலப்பிரப்புகளை விரட்டுவது அதிக கடினமாய் இருக்கவில்லை ஒரு சில ஒரு சில
மாதங்களில் இதில் செயல்பட்டுவிட்டது. முதலாளிகளை விரட்டுவதும் அதிக கடினமாக இருக்கவில்லை. ஆனால்
வர்க்கங்களை ஒழித்தல் இதையெல்லாம் விட சொல்ல முடியாத அளவுக்கு மிகவும்
கடினமானதாகும்.
வர்க்கப் போராட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது. அதன் வடிவங்கள் மட்டுமே மாறி
இருக்கின்றன. பழைய சுரண்டலாளர்கள் திரும்பி வந்து விடாப்படி தடுப்பதற்காக அறிவொளி
இல்லாத விவசாயிகள் வெகுஜனங்களை ஒரே கூட்டணியாய் ஒன்று படுத்துவதற்காக நடைபெறும்
வர்க்கப் போராட்டம் இது. தொடர்ந்து நடைபெறுகிறது. இந்த போராட்டத்திற்கு எல்லா
நலன்களையும் கீழ்பட செய்வது நமது பணி. நமது கம்யூனிஸ்டுகளின் ஒழுக்க நெறியும்
இப்பணிக்கு கீழ்ப்பட்டது தான். பழைய சுரண்டல் சமுதாயத்தை அழிக்கவும் ஒரு புதிய
கம்யூனிஸ்ட் சமுதாயத்தை கட்டி அமைத்திடவும் பாட்டாளி வர்க்கத்தை மையமாகக் கொண்டு
உழைப்பாளி மக்கள் அனைவரையும் ஒன்றுபட செய்யவும் உதவுவது ஒழுக்கநெறி என்று
கூறுகிறோம்.
இந்தப் போராட்டத்திற்கு உதவி புரியும் உழைப்பாளி மக்களை எல்லாவித சுரண்டலையும்
எதிர்த்து அற்ப தனியார் சொத்துரிமை அவற்றின் எதிர்த போராட்டம் கம்யூனிஸ்ட்டுகளின்
போராட்டமாகும்…
இல்லையேல் பழைய சமூக ஒழுங்காக கொள்ளையடி அல்லது கொள்ளைக்கு இலக்காகு;
அனைவருக்கும் வேலை செய் அல்லது அனிவரையும் உனக்கு வேலை
செய்யும்படி வை; அடிமை
உடைமையாளனாய் இரு அல்லது அடிமையாக இரு. இந்த விதி தான் பழைய சமுதாயத்துக்கு
அடிப்படையாய் இருந்தது. ஒன்று நீ அடிமை உடைமையாளன் அல்லது அடிமை இல்லையேல் சிறு
உடைமையாளன் சிறு அதிகாரி அல்லது அறிவுத்துறையாளன் அதாவது சுருங்க கூரின் தன்னைப்
பற்றி மட்டுமே நினைத்து ஏனையோர் பற்றியும் கவலைப்படாத தன்நல மனப்பான்மை கொண்டோர்
கம்யூனிஸ்டாக இருக்க முடியாது. அதிகார வர்க்கத்தின் முன் அடிபணிந்து தன் வாழ்க்கை
காப்பற்றிக் கொள்ள அடிமை சேவகம் செய்ய நினைப்போர் எப்படி கம்யூனிஸ்டாக இருக்க
முடியும்.
சுரண்டலாளர்களுக்கு எதிரான உணர்வு பூர்வமான போராட்டத்தின் மூலமும்
கம்யூனிஸ்ட்டுகள் பெறும் ஒழுக்க நெறி இச்சமூகத்தில் பேசும் ஒழுக்கநெறியிலிருந்து
வேறானது. அவை சுரண்டலை ஒழித்து சமத்துவத்தை பேசும் மனித சமூக உயர்ந்த ஒழுக்க
நெறியான கம்யூனிச ஒழுக்க நெறியாகும். இங்கே எழுத பயன்பட்ட கட்டுரை (இளைஞர்
கழகங்கனின் பணிகள் அக்டோபர் 1920 லெனின் ஆற்றிய உரைகளிலிருந்து). சுருக்கமாக
மூலத்திலிருந்தே.
இவை புரிந்துக் கொள்ள நாம் கம்யூனிஸ்டாக வேண்டும் தோழர்களே..
வர்க்க சமூகத்தில் பொதுவான ஜனநாயகமோ!
பொதுவான அரசோ!
பொதுவான கல்வியோ!
பொதுவான அரசாங்கமோ!
இல்லை
ஆக தோழர் நல்லகண்ணு எந்த வர்க்க தேவைக்காக உழைத்தார் என்பதனை நீங்களே முடிவு செய்துக் கொள்ளுங்கள் உங்கள் வர்க்க புரிதல் உங்களுக்கான அளவுகோல் தோழர்களே!!!
ஆக இறந்த தோழர் நல்லகண்ணுவின் பணி இதன் அடிப்படையில் அலசி ஆராய்வது அவசியம். ஏனெனில் கட்சியின் மூத்த தோழரும் கட்சியை வழி நடத்தியவர் என்ற அடிப்படியிலும்...
No comments:
Post a Comment