நான் செல்வதைக் கேட்டு நீங்கள்
அதிர்ச்சியடைவீர்கள். சில சமயம் குமட்டல் வாந்தி கூட உங்களுக்கு வரலாம். எப்ஸ்டீன்
விவகாரமானது வெறும் அரசியல் சீர்கேடு மட்டுமல்ல. மானிட வரலாற்று நெற்றியில் ஒரு அவமான அடையாளமாகும்.
மனிதன் செல்வத்திலும் செல்வாக்கிலும் உச்சத்தை அடைந்துவிட்டான் என்பதாக எண்ணும் போது, சட்டத்துக்கும், நீதிக்கும் மேலால் வந்து அமர்ந்து விட்டான் என்று உணரும் போது அசாதாரண அத்துமீறல் மற்றும் அடாவடித்தன செயல்களில் ஈடுபட ஆரம்பிக்கிறான்.
எப்ஸ்டீன் தீவில் நடந்து கொடுஞ்செயல்கள்
அனைத்தையும் நீங்கள் வாசித்தறிந்தால் "சா" ( saw) திகில் திரைப்படத்தில் வரும் மிகக் கொடூரமான காட்சிகளை மிஞ்சிய
காட்சிகளை பார்த்தது போன்ற உணர்வு மேலிடும்.
நாம் எப்ஸ்டீனின் தீவுக்குப் போக முன்னர்,
ஆல்ப்ஸ் மலைத்தொடரில் உள்ள மிகவும்
ஒதுக்குப்புறமான ஒரு கோட்டைக்கு உங்களை அழைத்துச் செல்கிறேன், வாருங்கள். 1785 இல் எழுதப்பட்ட ஒரு கையெழுத்துப் பிரதியின் பக்கங்களை திறந்து பார்ப்போம்.
அதுதான் The 120 Days of Sodom (சொடாமின் 120 நாட்கள்) என்ற விசித்திரமான ஆபாச நாவலாகும். இதனை பிரெஞ்சு உயர்குடி எழுத்தாளர் "மார்க்கி டி சா" எழுதியுள்ளார்.
இவரின் பெயரில் இருந்துதான்
உளவியலாளர்கள் "சாடிசம்" (Sadism) என்ற
வார்த்தையை வார்த்து எடுத்துள்ளனர்.
துன்பூட்டுவேட்கை எனப்படும் சாடிசமானது
பிறரை உடலில் ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் துன்புறுத்துவதன் மூலம்
இன்பம் காணுவதாகும்.
இந்த நாவல் அந்தக் கால பிரெஞ்சு சமூகத்தின் ஆதிக்க வர்க்கத்தினரை
பிரதிநிதித்துவப்படுத்தும் நான்கு மனிதர்களின் கதையை விவரிக்கிறது: (ஒரு நிலப்பிரபு, ஒரு மதகுரு, ஒரு நீதிபதி மற்றும் ஒரு பணக்காரர்)- அதாவது (அதிகாரம், மதம், சட்டம் மற்றும் பணம்).
எப்ஸ்டீனின் தீவுக்கு போய் வந்நவர்கள் போலவே! இந்த நால்வரும் தங்களை 120 நாட்கள், யாரும் அணுக முடியாத ஒரு கோட்டையில் சென்று இருக்க முடிவு செய்தனர். கூடவவே அவர்களுடன் டீனேஜ் சிறுவர்களையும் சிறுமிகளையும் அழைத்துச் சென்றனர்.
அங்கே நாகரிகம் வீழ்ச்சியடைந்தது. சட்டம் வீழ்ச்சியடைந்தது... மதம் வீழ்ச்சியடைந்தது.
மனித மிருகங்களாக மாறுகின்றனர்.
அங்கே இந்த "உயர்குடிகள்" அவர்களை மிகவும் கொடூரமாக சித்திரவதை செய்யும் அரக்கர்களாக மாறுகின்றனர், மிகவும் அருவருக்கத்தக்க முறையில் பாலியல் துஷ்பிரயோகம் செய்கின்றனர். கடைசியில் அவர்களை அணு அணுவாக கொலை
செய்கின்றனர்.
டி சா இதனை எழுதியபோது, வெறும் புனைகதைகளை எழுதவில்லை; மாறாக அவர் ஒரு அதிர்ச்சியூட்டும் உண்மையை
உரக்க செல்கிறார்.
மனிதனிடம் ஆட்சி அதிகாரமும், பண பலமும் செல்வாக்கும் வரையறையின்றி வந்து குவியும் போது, அவனுக்குள் இருக்கும் மிருகம் விழித்தெழுகிறது, தன்னை தட்டிக் கேட்க யாரும் இல்லை என்ற ஆணவம் அவனை வந்தடைகிறது.
மார்க்க நெறிகள், மானுட விழுமியங்கள் அல்லது தடுக்கும் மனச்சாட்சியோ அற்ற
கோடீஸ்வரர்களும் பணத்தில் மிதக்கும் பிரபலங்களும் இதனால்தான் இத்தகைய
கொடுஞ்செயல்களை சர்வசாதாரணமாக செய்கின்றனர்.
இவர்களுக்குக் கிடைக்கும் இயற்கை இன்பங்களில் பசி தீர்ந்த பிறகு அடுத்த கட்டமாக வரம்புகளை மீறிய இன்பங்களை
நுகர்ந்து பார்க்க வேண்டும் என்ற பேரார்வம் அவர்களின் மிருகத்தனமான எண்ணத்தில் தோன்றுகின்றன.
மனிதன் எப்படி வேட்டையாடும் மிருகமாக, கொடிய அசுரனாக மாறுகிறான் என்பதைப் புரிந்துகொள்ள, உங்களை ஒரு உளவியல்
புத்தகத்தின் பக்கங்களுக்கு அழைத்துச் செல்கிறேன்.
இந்தப் புத்தகம் புகழ்பெற்ற உளவியலாளர் பிலிப் ஜிம்பார்டோவின் (The Lucifer Effect) என்ற ஆக்கமாகும். இதில் அவர், நமக்கு திகிலூட்டும் ஒரு உளவியல் போக்கை
முன்வைக்கிறார்:
'தீமை எப்போதும் மனிதனிடம் காணப்படும் உள்ளார்ந்த பண்பல்ல. தீமை என்பது பெரும்பாலும் அவன் வாழும் சுற்றுச் சூழல், அவன் கொண்டிருக்கும் செல்வம், மற்றும் செல்வாக்கு போன்றவற்றின் விளைவால் உண்டாகும் மனநிலையாகும்.
யாரும் தட்டிக்கேட்க முடியாத செல்வம் மற்றும் செல்வாக்கில் மனிதன் மிதக்கும் போது. (உதா: எப்ஸ்டீனின் தீவு அல்லது சேட்டின் கோட்டை போல) அவனின்
மூளையில் பச்சாதாபத்திற்கு காரணமான நரம்பியல் சுற்றுகள் படிப்படியாக மூடப்படு,
அதன் இருண்ட பக்கம் விழித்தெழுகிறது.
அதிலே அவர், அசாதாரண பாலியல் வெறி மற்றும் மிருகத்தனமான வன்புணர்வுக்கும் காரணமாகும் நரம்பியல் காரணங்களை எளிதாக விளக்குகிறார்.
நமது மூளையில் உள்ள நரம்பு மண்டலங்களில் நம்மை நிர்வகிக்கும் பகுதியில் நம்மை "தடுக்கும் தூண்டும்" சட்டம் உள்ளது.
உதாரணமாக:
நீங்கள் ஒரு புதிய காரை வாங்கியதும் அளவற்ற மகிழ்ச்சியடைவீர்கள். ஒரு மாதம் கடந்த பிறகு, அது சாதாரணமாகிவிடும். ஒரே உணவை பலமுறை உண்ட பி்ன்னர் அதில் ருசியை இழந்துவிடுவீர்கள்.
இப்படித்தான் இந்த உயரடுக்கு சமூகமும்,
அதி சுவையான உணவுகளை புசித்த பின்னர், ஆடம்பர மாளிகைகளில் வசித்த பின்னர் அவைகளில் சுவையை இழந்து விடுகின்றனர். இருக்கும் இன்பங்களை நுகர்ந்த பின்னர் புதுப் புது ஆடம்பரங்களை தேடி அலைகின்றனர் .
அவர்கள் (Anhedonia of Power) எனப்படும் அவர்களின் கைவசம் இருக்கும் சுகங்களில் ஆசையின்மை வியாதியால் பாதிக்கப்படுவதாக உளவியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். இனித்தான் அவர்களிடம் பயங்கர ஆர்வம் விழித்தொழுகிறது.
உச்சபட்ச சுகங்களை தேடுவார்கள்.
சாத்தியமற்றதைச் செய்து பார்க்க ஆசைப்படுவார்கள். சர்வதேச அளவிலும் தார்மீக ரீதியாகவும் தடைசெய்யப்பட்டதைச் செய்ய முனைவார்கள்.
இது போன்ற வரலாற்றிலிருந்து இன்னொரு உதாரணம் உள்ளது.
ஒழுக்க வீழ்ச்சி கொடிகட்டிப் பறந்த காலத்தில் ரோமானிய பிரபுக்கள் தங்கள் உணவு மேசைகளில் அமர்ந்திருப்பார்கள். அவர்கள் வயிறு முழுமையாக நிரம்பியதும்
கழிப்பறை சென்று வாந்தி எடுப்பார்களாம்.
பின்னர் மீண்டும் உணவு மேசைக்குத் வந்து சாப்பிடுவார்களாம்.
அவர்களிடம் வயிற்றுப் பசி தீர்ந்தது. ஆனால் மனப்பசி தீரவில்லை. அதனால் தான் இன்னுமின்னும் நகர்வு சுகத்தைத்
தேடி இந்த அசாதாரண வேலையை செய்தார்கள்.
இதைத்தான் மனச்சாட்சியற்ற மனிதர்கள் தங்கள் படுக்கை அறைகளிலும் எப்ஸ்டீன் தீவிலும் செய்கின்றனர். இவர்கள் அங்கே மனச்சாட்சியை வாந்தி எடுத்தே அத்தகைய கொட்ஞ்செயல்களை செய்தனர்.
அவர்களின் வயிற்றுப் பசியும் காமப் பசியும் தீர்ந்தாலும், கருந்துளை போல மனதில் குடிகொண்ட பசி தீர்வதில்லை. எனவே காட்டுமிராண்டித்தன முறையில் பசியை தீர்க்க களமிறங்குவார்கள்.
மனச்சாட்சியற்ற இந்த மேல்வர்க்கத்தினர் சிறுவர் சிறுமிகளை உணர்வுள்ள உயிராக பார்க்க மாட்டார்கள். அவர்கள் அவர்களைப் சடப்பொருட்களாகப் பார்க்கிறார்கள்.
(ருசியான உணவுத் தட்டாக அல்லது ஆடம்பர வாகனம் போல) முழு உலகமும் அவர்கள் பார்வையில் நகரும் ஒரு சதுரங்கப் பலகைதான்.
இந்த மிருக சாதிகளிடம் நெறிபிறழ்வு மாத்திரம் இருக்காது. ஆசை என்னும் அதள பாதளத்தில் விழுந்து குதிக்க வேண்டும் என்ற ஆவல் அவர்களிடம் இருந்து கொண்டே இருக்கும்.
கடைசியாக ஒரு முக்கியமான செய்தியை உங்களுக்கு சொல்லிட்டு முடிக்கிறேன்:
இந்த உயர்சாதியினரின் அசாதாரண மனோநிலையை நாம் புரிந்துகொள்ள உளவியல் புத்தகங்களை வாசிக்க வேண்டிய தேவையில்லை.
வான்மறை வசனம் ஒன்று, இரண்டே இரண்டு வார்த்தைகளில் சுருக்கமாக நமக்கு விளக்குகிறது. ஆனால் அந்த இரண்டு வசனமும் பல நூற்றுக்கணக்கான
உளவியல் நூல்களுக்கு சமமானவை.
((மனிதன் எப்படிப்பட்டவன் என்றால், தன்னை மிஞ்ச யாரும் இல்லை என்று
நினைக்கும் போது அடாவடித்தனம் செய்ய ஆரம்பிக்கிறான்.))
இந்த வசனங்கள் மனிதனின் இயல்பை அப்படியே சித்தரித்துக் காட்டுகின்றன.
மனிதன் பணத்திலும் பதவியிலும் உச்சத்தை அடையும் போது, ஆட்சியிலும் அதிகரத்திலும் சிகரத்தை எட்டும் போது, தன்னை தட்டிக் கேட்க யாரும் இல்லை என எண்ணும் போது வெறி பிடித்த மிருகமாகிறான்.
சட்டத்துக்கு மேலால் அமர்ந்து அராஜகம் புரிய ஆரம்பிக்கிறான். கடவுளோ, மக்களோ, மனிதாபிமானமோ அவன் கண்ணுக்குத் தெரிவதில்லை. இந்த நேரத்தில் அவன் அடியான் என்ற ஆடையை கழற்றி விட்டு ஆண்டவன் ஆடையை (பெருமிதம் / பெறுமை) அணிந்து கொள்கிறான். ஆனால் அது அவனுக்கு பொருந்தாது என்பதால் தன்னை அழித்துக் கொள்கிறான்.
எப்ஸ்டீன் தீவும், ஆல்ப்ஸ் மலைத் தொடர் கோட்டையும் ரோமானியர்களின் விருந்து மேசையும் மனிதனின் மிருகத்தனத்துக்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். சட்டத்துக்கு மேலால் அமர்ந்து, தன்னை தட்டிக் கேட்க யாரும் இல்லை என்று நம்பும் போது அவன் எந்த அநியாயத்தையும் செய்வான் என்பதற்கான உதாரணங்களாகும்.
மனித உணர்வுகளை அறநெறியாலும் நீதிநெறியாலும் கட்டுப்படுத்தாமல் விடப்பட்டால் எந்த வரம்பையும் தாண்டிச் சென்று விடும் என்பதற்கு எப்ஸ்டீன் தீவு சிறந்த உதாரணம்.
அதிலும் வான்மறை நமக்கு இன்னொரு விசயத்தை சொல்கிறது. மனிதன் இந்தக் கட்டத்துக்கு வந்துவிட்டால் மிருகங்களை விட கீழ் சாதியாக மாறுவிடுவான் என்ற உண்மையை எடுத்துக் கூறுகிறது.
நமக்குத் தெரியும், மிருகங்கள் பசிக்காகவும், இயல்பாக உள்ள இனப்பெருக்க உணர்வுடனும் தான் உடலுறவு கொள்கின்றன. ஆனால் இந்த
உயரடுக்குகள் மேலதிக இன்பத்தைத் தேடி,
தங்கள் உளவியல் பசியை போக்கவும் இந்த அசாதாரண கொடுச்செயல்களில் ஈடுபடுவார்கள்.
இங்குதான் சன்மார்க்க அறநெறியின் மகத்துவம் புலப்படுகிறது. சன்மார்க்கம் விதித்துள்ள (ஹலால் ஹராம்) -ஆகுமான- ஆகாத வரம்புகள் மனிதனின் உரிமைகளை தடுப்பதற்காக வைக்கப்பட்டதல்ல. மாறாக அவன் மிருக நிலைக்கு செல்லக்கூடாது என்பதற்கான பாதுகாப்பு வேலியாகும்.
அதனால்தான் சன்மார்க்கம் பணத்திலும் பாலியலிலும் பதவியிலும் வரம்புகளை வைத்துள்ளது. இது மனிதன் மனிதனாக வாழ தடுக்கும் வரம்புகள் அல்ல. மனிதன் மிருகமாக மாறக்கூடாது என்பதற்கான வரம்புகளாகும்.
((அல்லாஹ் தனது அடியார்களுக்கு,
செல்வத்தை வாரி வழங்கினால் அவர்கள் பூமியில் அட்டூழியம் செய்யத் தலைப்பட்டு விடுவார்கள்; ஆகவே அவன், அளவோடு அவர்களுக்கு வழங்குகிறான். அவன் தன் அடியார்களைப் பற்றி நன்கறிந்தவன்; உற்று நோக்குபவன்.))
No comments:
Post a Comment