வர்க்க சமூகத்தையும் வர்க்கம் பற்றிய தேடலே இந்தப் பகுதி...
பாட்டாளி வர்க்கதின் முன்னணிப் படையான தனித் தன்மையான கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சியத்தைத் தனது வழிகாட்டும் தத்துவமாகக் கொண்டுள்ளது. மார்க்சியமானது இயக்கவியல் பொருள்முதல்வாதத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. உலகை தன் தத்துவக் கண் கொண்டு விளக்குகிறது. உலக்கில் உள்ள எல்லா பொருட்களும் அதன் அகமுரண்பாடுகளின் போராட்டத்தினாலேயே இயங்குகின்றன. அவற்றை வெளியில் இருந்து எந்த கடவுளோ ஆன்மாவோ எந்த சக்தியும் இயக்குவதில்லை.
சமூக பொருளாதார அமைப்பு என்பது சமூக வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் உள்ள வரலாற்று ரீதியில் நிர்ணயிக்கப்பட்ட சமூக ரகம். அது தனி குணாம்சத்தைக் கொண்டது. எல்லா அம்சங்களின் ஒருமையாகக் கருதப்படுகிறது. ஒவ்வொரு சமூகப் பொருளாதார அமைப்பு வரலாற்று ரீதியில் நிர்ணயிக்கப் பட்ட உற்பத்தி முறை மற்றும் அதற்குரிய உற்பத்தி உறவுகளை கொண்டிருக்கிறது. ஆகவே சமூக பொருளாதார அமைப்பு சமூகத்தில் நிலவுகின்ற பொருளாயத நலன்களின் உற்பத்தி முறை, உற்பத்திக் கருவிகள் மற்றும் சாதனைங்களின் உடைமையின் வடிவத்தைக் குறிஅடையாளமாகக் கொண்டிருக்கிறது.
சமூகத்தின் வரலாறு என்பது ஒரு சமூக பொருளாதார அமைப்பின் வளர்ச்சி மற்றும் அதற்குப் பதிலாக மற்றொரு சமூக பொருளாதார அமைப்பு ஏற்படுவதன் வரலாறு ஆகும்.
தொடர்ச்சியாக மாற்றப்படுகிறது. மனித சமூக முன்னேற்றத்தின் பிரதான திசை வழியாக இருக்கிறது. அதே சமயத்தில் பல்வேறு நாடுகளும் மக்கள் இனங்களும் தம்முடைய வளர்ச்சிப் போக்கில் ஏராளமான தனித்தன்மைகளை வெளிப்படுத்துகின்றன; அவை வெவ்வேறு வேகங்களில் வளர்ச்சி அடைகின்றன; சில நாடுகள் எல்லா சமூக பொருளாதார அமைப்புகளையும் கடந்து வரவில்லை. வரலாறு பல மாறும் காலக்கட்ட வடிவங்களைக் கொண்டிருக்கிறது.
சமூகப் பொருளாதார அமைப்புகளைப் பற்றிய போதனை சமூக விஞ்ஞானத்தில் கேந்திரமான பாத்திரத்தை கொண்டிருக்கிறது. அது பொதுப்படையான சமூகம், பொதுப்படையான முன்னேற்றும் மற்றும் இதர விஞ்ஞானத்துக்கு புறம்பான குறிப்பான ஊகங்களிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு வரலாற்று வளர்ச்சியின் கட்டளை வகைப்படுத்துவதற்கு அடிப்படையாக சமூக பொருளாதார அமைப்பை உபயோகிப்பதன் மூலம் நாம் சமூகத்தின் கட்டமைப்பு நெருங்கிப் பார்க்க முடியும்.
சமூக கட்டமைப்பு என்னும் கருதுகோள் சமூக குழுக்கள் மற்றும் அவற்றின் உறவுகளின் கூட்டுமொத்தத்தை உள்ளடக்கி இருக்கிறது. சமூக கட்டமைப்பின் கூறுகள், வர்க்கங்கள், சமூக பிரிவுகள் மற்றும் அடுக்குகள், சாதிகள், சமூக வகுப்புகள், தொழில்முறை குழுக்கள், இனக் குழுக்கள், தேசம், தேசியம், குலம். ஆகியவற்றின் அடிப்படையில் சமூகத்தில் வர்க்க கட்டமைப்பை சிறப்பான முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு சமூக பொருளாதார அமைப்புக்கும் தலைமையான உற்பத்தி முறைக்கு ஏற்ப பிரத்தியேகமான சமூகக் கட்டமைப்பு உண்டு.
இதனை விரிவாக பேசும் முன்னர் சிலவற்றை தெளிபெறுவோம்
வர்க்க சமூகத்தில் பொதுவான ஜனநாயகமோ!
பொதுவான அரசோ!
பொதுவான கல்வியோ!
பொதுவான அரசாங்கமோ!
அம்பேத்கர் பெரியார் ஆகியோரின் பணிகள் அன்றைய சமுகத்தில்
பெரும் வரவேற்பு பெற்றது ஏனென்றால் அன்றைய ஆங்கிலேய ஏகாதிபத்தியம் ஒரு குறிப்பிட்ட
அளவில் சீர்திருத்த வகையில் சமூக மாற்றத்திற்கு பணி செய்தது. ஆனால் அதன் நோக்கம்
சமூகம் மாற்றத்தை தடைபோட போராட்டங்களை நிறுத்தி வைக்க தான் மக்கள் விடுதலைப்
போராட்டத்தில் இருந்து திசை மாற இதை பயன்படுத்தினார்கள். ஆம் அம்பேத்கர் பெரியார்
முன்வைத்த கோரிக்கைகள் ஒரு சிலர் முன்னேற பயன்பட்டது இன்றும் மேல் நிலையில் உள்ளார்கள் பெரும்பான்மையான இவர்களினால் பயன்பெற்றவர்களே. ஆனால் இன்றும் உழைக்கும் மக்கள் மிகக் கொடூரமான முறையில்
அடக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் கிடக்கிறார்கள். அவர்களின் விடுதலைப் பற்றி கவலைப்படாத இந்த
மேல் நிலைக்கு வந்த கூட்டம் தங்களின் மேலாதிக்கத்தை நிலை நிறுத்த அம்பேத்கரையும்
பெரியாரையும் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
இதிலும் சிலர் பேச்சில் மார்க்சியவாதியாக காட்டிக் கொண்டே செயலில் மார்க்சியத்தை மறுக்கும் ஏகாதிபத்திய காவலர்களாக உள்ளனர். இவை ஏன் என்பதனை புரிந்துக் கொள்ள வர்க்க புரிதலும் அரசின் வர்க்க சார்ப்பையும் புரிந்துக் கொள்வது அவசியம். மேலும் அம்பேத்கர் பெரியாரின் சீர்திருத்தங்கள் பற்றி புரிந்துக் கொள்வோம்...
‘’சீர்திருத்தங்கள் என்றால் ஆளும் வர்க்கத்தின் ஆட்சியதிகாரத்தை
அழிக்காமலேயே உழைக்கும் மக்களின் நிலைமைகளில் மேம்பாட்டையச் செய்வதாகும். அதாவது
மூலதனத்தின் ஆதிக்கம் இருக்கும் வரை, தனிப்பட்ட மேம்பாடுகள்
ஏற்பட்டாலும், எப்போதும் கூலி அடிமைகளாகவே இருந்து வருவோரான
தொழிலாளர்களை முதலாளித்துவ வழியில் ஏமாற்றுவதுதான் சீர்திருத்தவாதம் ஆகும்’’
என்றார் லெனின்.
"மிதவாத முதலாளித்துவ வர்க்கத்தார் ஒரு கையால் சீர்திருத்தங்களை
வழங்கிவிட்டு மறுகையால் எப்போதும் அவற்றை திருப்பி எடுத்துக்கொண்டு
விடுகிறார்கள்" என்றார் லெனின்.
முதலாளிகள் உழைக்கும் மக்களுக்கு குறைந்த கூலி கொடுத்து
சுரண்டி அவர்களின் மூலதனத்தை குவித்துக் கொள்வார்கள். ஆகவே முதலாளிகளும் அவர்களது
அரசும் எப்போதும் வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிக்க விரும்பமாட்டார்கள். ஆனாலும்
வேலையில்லாத்திண்டாம் அதிகரித்தால் உழைக்கும் மக்கள் அரசை எதிர்த்துப்
போராடுவார்கள் என்பதை உணர்ந்து ஆட்சியாளர் மக்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக்
கொடுக்க ஆர்வம் உள்ளவர்கள்போல் காட்டிக் கொள்வதற்காக வேலை வாய்ப்பில் எளிய
மக்களுக்கு (பிற்பட்ட, சாதியால் தாழ்த்தப்பட்ட
சாதியினருக்கு) முன்னுரிமை கொடுக்கிறோம் என்று சொல்லி இட ஒதுக்கீட்டுக் கொள்கை
என்ற சீர்திருத்தக்கொள்கையை கொண்டு வந்து இந்தியாவில் செயல்படுத்தினார்கள். இதன்
மூலம் இவர்களால் அனைத்து உழைக்கும் மக்களுக்கும் வேலைவாய்ப்பை இவர்களால் கொடுக்க
முடியவில்லை ஆனால் வெற்று கோசங்களால் உழைக்கும் மக்களை ஏமாற்றி பிரிவினை செய்கின்றனர். மேலும் சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு செய்வதன் மூலம்
உழைக்கும் மக்களை சாதிரீதியாக நிரந்தரமாக பிரிக்கும் மோசடியை செய்தார்கள். ஒவ்வொரு
சாதியைச் சேர்ந்த உழைக்கும் மக்களும் ஒற்றுமையாக இருக்க விடாமல் சாதி அடிப்படையில்
சில சாதியைச் சேர்ந்தவர்களுக்கு வேலை கிடைப்பதைப் பார்த்து பிற சாதியினர்
போட்டிபொறாமை கொள்ளச் செய்து சாதி அடிப்படையில் வேற்றுமையையும் வெறுப்பையும்
பகையையும் வளர்த்தார்கள். இதன் வெளிபாடு இன்று நேரடியாக சாட்சியாக உள்ளன.
லெனின் கூறியதுபோல உழைக்கும் மக்களை கோஷ்டிகளாக சாதி
அடிப்படையில் பிளவுபடுத்தினார்கள். கூலி அடிமைத் தனத்திலிருந்து உழைக்கும் மக்கள்
விடுதலை பெற வேண்டும் என்றஉணர்வை உழைக்கும் மக்களிடம் மழுங்கடித்தார்கள்.
ஆட்சியாளர்களும், முதலாளிகளும் கொடுக்கும் சலுகைகளே போதுமானது என்ற சுயதிருப்தி மனப்பான்மையை
மக்களிடம் ஏற்படுத்தினார்கள். இந்தகைய மன நிலையிலேயே வாழ்ந்து பழக்கப்பட்டுவிட்ட
மக்கள் இப்போது அவர்களுக்கு கொடுக்கப்பட்ட சலுகைகளை ஆட்சியாளர்கள் பறிக்கும் போது
உழைக்கும் மக்கள்கையறு நிலையிலேயே நிற்கிறார்கள். இந்த அநீதிகளை எதிர்த்துப்
போராடுவதற்கான நிறுவனங்கள் அதாவது கட்சிகள் இன்றி மக்கள் தனிமைப்
பட்டுள்ளார்கள். ஆகவே இந்திய வரலாற்றில் உழைக்கும் மக்கள் இந்த சீர்திருத்தவாதி களை
நம்பி அவர்கள் பின்னால் சென்றதன் விளைவாக உழைக்கும் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளார்கள்
பலவீனப் படுத்தப்பட்டுள்ளார்கள், உழைக்கும் மக்கள்
சீரழிந்துள்ளார்கள் என்ற நடைமுறை உண்மையை அன்றே லெனின் பல நாடுகளின்
அனுபவங்களிலிருந்து வழிகாட்டியதை நாம் பின்பற்றத்தவறியதன்
பலனை இப்போது நாம் அனுபவித்துக்கொண்டு இருக்கிறோம்.
"அற்ப சலுகைகளின் மூலம் சீர்திருத்தவாதிகள் தொழிலாளர்களை பிளவுபடுத்தவும் ஏமாற்றவும்
முயல்கிறார்கள். அவர்களை வர்க்கப் போராட்டத்திலிருந்து திசை திருப்பிவிட முயலுகிறார்கள்" என்றார் லெனின்
மார்க்சிய வரலாற்றுப் பொருள் முதல்வாதம் நாம் வாழும் சமூக
இயக்கத்தை ஆம் அந்த சமூகத்தின் ஒவ்வொரு அங்கங்களின் இயக்கத்தை அவை எப்படி
இயங்குகிறது என்பதை மிகத் துல்லியமாக குறிப்பிடுகிறது அப்படி என்னும் பொழுது அந்த
சமூகத்தின் ஒவ்வொரு அங்கத்தையும் புரிந்து கொண்டவர்கள் மட்டும் தான்
மார்சியவாதியாக இருக்க முடியும்.
இன்னும் பின்னர்....
No comments:
Post a Comment