"மக்கள் முட்டாள்கள் அல்ல... அவர்களின் பிரச்சினைக்கு காரணமானவை எவை யார் என்று தெரியாமல் இருக்க அதாவது மக்கள் தங்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான அடிப்படையான அரசியல் தெளிவைப் பெறுவதைத் தடுக்குகிறவகையில் தற்போதைய ''சமுதாய (அரசமைப்பு) அமைப்பு'' திட்டமிட்டு செயல்படுகிறது. அவைதான் தொடர்ந்து சினிமா பிரபல்யங்கள் மட்டுமல்ல சமூகத்தில் உயர் அடுக்கில் உள்ளவர்களின் பிரவேசமும். அதன் தொடர்ச்சிதான், ''அரசியலற்ற அரசியலை'' மக்கள்மீது பலவகைகளில் திணித்துள்ளது. இந்த 'அரசியலற்ற அரசியலுக்கு'' இட்டு செல்வதும் இந்த அரசியலுக்கும் ஒரு தெளிவான 'வர்க்க நலனும், பின்னணியும்'' உள்ளன. அவை ஆளும் முதாலாளி வர்க்க நலன் பேணுவதை தவிர வேறல்ல!!! இந்த அமைப்பு முறையை தகர்க்காமல், தற்போதைய சமுதாயத்தை மக்களுக்கான சமுதாயமாக மாற்றுவதற்கான அரசியல் உணர்வை வளர்க்கமுடியாது. அதுவரை ''புதுப்புது அவதாரங்கள்'' தோன்றிக்கொண்டே இருக்கும்! ஆனால் அவை அனைத்துக்கும் ஒரே அடிப்படைதான். . . உழைக்கும் மக்கள் தினம்தினம் சந்திக்கும் அவலங்களுக்கான காரணத்தை அறியக்கூடாது; உழைக்கும் மக்கள் தங்களுக்கான அரசியலை உணரக்கூடாது! உண்மையான மாற்றத்திற்காகப் போராடக்கூடாது! இந்த பிரபலங்களுக்கு காவடி தூக்கி வால் பிடித்துக் கொண்டிருக்க வேண்டும் அவ்வளவுதான் இந்த பாராளுமன்ற அரசியல் மகிமை.
கம்யூனிஸ்டுகள் கம்யூனிச ஆசான்கள் காட்டிய வழியை பின்பற்றாமல் பிற்போக்கு கருத்துகளை தங்களின் வழிமுறையாக பின்பற்றும் பொழுது, இவர்கள் உழைக்கும் மக்களை அவர்களுக்கான விடுதலைக்கான வழிமுறையை போதிப்பதை விட எதிரி வர்க்கத்திடம் மண்டியிட வைக்கும் வழிமுறையில் தான் உள்ளனர்.
இந்த இதழில் பேசப்படுள்ள கட்டுரைகள்
1). பாசிசம் பற்றி விவாதிக்க-பிரேம சந்திரன்
2). சிறந்த கம்யூனிஸ்ட் ஆவது எப்படி? லியோஷோசி பாகம்- 11
3). திருத்தல்வாதம் செங்யென்சீ பாகம் 5
இலக்கு 88 இணைய இதழ் இந்த இணைப்பை அழுத்தி பெற்றுக் கொள்ளுங்கள் தோழர்களே
1). இலக்கு 88 ஒலி வடிவில் கேட்க இந்த இணைப்பை அழுத்தவும் தோழர்களே
2). இலக்கு 88இணைய இதழின் இரண்டாம் கட்டுரை ஒலி வடிவில் இந்த இணைப்பை அழுத்தி கேட்கவும் தோழர்களே
3). இந்த இணைப்பில் ஒலிவடிவில் சற்று கூடதலான ஒளிபரப்பு
நமது திட்டம் என்ற கட்டுரையில் லெனின் கூறும்போது, கம்யூனிஸ்டுகள் மார்க்சிய கோட்பாட்டின் அடிப்படையிலேயே அவர்களது அனைத்து நிலைபாடுகளையும் எடுக்க வேண்டும் என்று கூறுகிறார். புரட்சிகரமான கம்யூனிஸ்ட் கட்சியின் உண்மையான கடமையானது, சமுதாயத்தின் மேற்பூச்சுக்களை மாற்றுவது அல்ல, தொழிலாளர் நலன்களை மேம்படுத்துமாறு முதலாளிகளிடம் கோரிக்கை வைத்து போராடுவது அல்ல, சதி திட்டங்கள் போட்டு செயல்படுத்துவது அல்ல, முதலாளித்துவ அரசுக்கு ஆலோசனை கொடுப்பது அல்ல, இவையெல்லாம் சில வேலைகளில் செய்தாலும் இவைகள் அனைத்தும் முக்கியமானது அல்ல. மாறாக வர்க்கப் போராட்டத்தைக் கட்டியமைத்து தொழிலாளர்களைத் திரட்டி போராடுவதும் அவர்களுக்கு சோசலிச உணர்வை ஊட்டி சோசலிசத்துக்காக போராடுவதற்கு வழி காட்டுவதும்தான் கம்யூனிஸ்டுகளின் முக்கியமான கடமையாகும். பாட்டாளிவார்க்கம் நிலவுகின்ற அரசமைப்பை அதாவது முதலாளிகளுக்கு சேவை செய்து உழைக்கும் வர்க்கங்களை அடக்கி ஒடுக்கும் அரசு நிறுவனங்களை தகர்த்துவிட்டு அதனிடத்தில் பாட்டாளி வர்க்க அரசு நிறுவனங்களை அமைப்பதுதான், அதற்கு தலைமை தாங்கி மக்களுக்கு வழிகாட்டுவதுதான் கம்யூனிஸ்டுகளின் முதன்மையான கடமை என்றார் லெனின். இந்தக் கடமையை இங்குள்ள இடதுசாரி தலைவர்கள் மறந்து விட்டார்கள், அதனை முழுவதுமாகப் புறக்கணித்து விட்டார்கள். அதற்கு மாறாக முதலாளித்துவ சீர்திருத்தவாதிகளின் கொள்கைகளையே, காவுஸ்கி ஸ்ட்துருவே பெர்ன்ஸ்டைன் போன்ற திருத்தல்வாதிகளின் கருத்துக்களை ஏற்றுக்கொண்டு சீர்திருத்தவாத திருத்தல்வாத வழியில் நடைமுறையில் பயணம் செய்கிறார்கள். அதன் விளைவாக பாட்டாளி வர்க்க இயக்கம் பலம் இழந்து, பிளவு பட்டு மக்களின் செல்வாக்கை இழந்து சீரழிந்துவிட்டது.
அதே வேளையில் முதலாளித்துவ சீர்திருத்தவாதக் கட்சிகளும், சங்பரிவார் போன்ற எதிர்ப்புரட்சிகர பிற்போக்கு கட்சிகளும், விஜய் போன்ற பிழைப்புவாத கவர்ச்சிவாத நடிகனின் கட்சிகூட வளர்ந்து விட்டன. இந்த நிலைமாற உழைக்கும் வர்க்கத்துக்கு சோசலிச உணர்வு ஊட்டி, சோசலிசத்துக்காக போராட தலைமை தாங்கி வழிகாட்டக் கூடிய ஒரு புரட்சிகரமான கம்யூனிஸ்டுக் கட்சி இங்கு உருவாக வேண்டும். அதற்காக உழைக்கும் மக்களும் பாட்டாளி வர்க்க அறிவுஜீவிகளும் ஒன்றுபட்டு பாடுபட வேண்டும்.
பெர்ன்ஸ்டைனிசத்தின் “மார்க்சியத்தைப் பழுது பார்த்தல், விமர்சன உரிமை” என்ற வாதங்களை லெனின் துல்லியமாகத் தொலுரித்துக் காட்டியுள்ளார். அவர்களின் மார்க்சியத்தைப் பழுதுபார்த்தல் என்ற கோட்பாடு உண்மையில் முதலாளித்துவப் பத்திரிக்கைகளிலிருந்தும் அவற்றின் பின்வாங்குதல் கோட்பாட்டின் இரவல் வாங்கிய சில துண்டுகளேயாகும். சோசலிசவாதிகளுக்குத் தூண்டில் போட தளராமல் மாற்று உத்திகளைத்
தேடிக்கொண்டிருக்கும் அரசாங்கங்களும், முதலாளித்துவக் கட்சிகளுமே பாட்டாளி வர்க்கத்தின் பயங்கரமான, முன்னணி எதிரிகள் ஆவார்கள். இவர்களுக்கு சலுகை வழங்குவதே பின்வாங்கும் தத்துவமாகும்.
மாமேதை லெனின் வாழ்ந்த காலத்திலேயே மார்க்சியம் பழுதடைந்துவிட்டது என்றும், மார்க்சியத்தைப் பழுதுபார்த்து புதிய தத்துவத்தை உருவாக்க வேண்டும் என்றும் மனிதகுலத்தைப் பாதுகாக்க நாம் புதியபாதையில் பயணம் செல்லவேண்டும் என்று மார்க்சியத்தை ஏற்றுக்கொண்டு செயல்படுவதாக நாடகமாடிக்கொண்டே புதிய தத்துவத்திற்காகவும் புதிய பாதைக்காகவும் கருத்துக்களை வெளியிட்டு உழைக்கும் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தினார்கள். அவர்களின் நோக்கம் உழைக்கும் மக்களை புரட்சிப் பாதையிலிருந்து திசைவிலகச் செய்வதே ஆகும். லெனின் போன்ற உன்னதமான தலைவர்களின் கீழ் புரட்சிகரமான கம்யூனிச அமைப்பு இருக்கும்போதே இந்த கேடுகெட்ட வேலைகளை மார்க்சிய எதிரிகளும், துரோகிகளும் செய்தார்கள் என்றால். தற்போது உலகெங்கும் பாட்டாளி வர்க்க அமைப்புகளின் தலைமைகள் மார்க்சிய லெனினியப் பொதுக்கோட்பாடுகளை கைவிட்டுவிட்டு திருத்தல்வாதிகளாக மாறிவிட்ட சூழலில் முதலாளித்துவவாதிகளும் திருத்தல்வாதிகளும் எந்தளவுக்கு மார்க்சியத்தை பழுதுபார்க்க வேண்டும் என்று சொல்லி குழப்பத்தை ஏற்படுத்துவார்கள் என்பதை உழைக்கும் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். அந்த சூழலில் பெர்ன்ஸ்டைனிசத்தின் “மார்க்சியத்தைப் பழுது பார்த்தல், விமர்சன உரிமை” என்ற வாதங்களை லெனின் துல்லியமாகத் தொலுரித்துக் காட்டியுள்ளார். அன்றே லெனினால் அம்பலப்படுத்தி முறியடிக்கப்பட்ட பெர்ன்ஸ்டைனது திருத்தல்வாதக் கருத்துக்களை நாம் படித்து புரிந்துகொண்டு தற்போது பெர்ன்ஸ்டைனது கருத்துக்களை புதிய வகையான கருத்துக்கள் போலவும் புதியவகையான பாதை போலவும் கொண்டுவந்து புதிய வகையான கருத்தை இவர்கள் தற்போது கண்டுபிடித்துள்ளதாகச் சொல்லி நம்மை ஏமாற்ற முயற்சிப்பவர்களின் சதிகளை நாம் புரிந்துகொண்டு அந்த சதிகாரர்களை புறக்கணிக்க வேண்டும். மார்க்சியத்தை திருத்துபவர்கள் அன்றைய காலத்தில் முதலாளித்துவப் பத்திரிக்கைகளிலிருந்து கடன்வாங்கியே அதாவது அன்றைய முதலாளித்துவவாதிகளின் கருத்துக்களையே பாட்டாளி வர்க்க கருத்தாகச் சொல்லி ஏமாற்றினார்கள். அந்த வகையில் இன்றைய மார்க்சிய துரோகிகள் ஏகாதிபத்தியங்களை ஆதரிக்கும் அறிவுஜீவிகளின் கருத்தையே கடன்வாங்கி நம்மிடம் கொண்டுவந்து ஏமாற்றுகிறார்கள். இது பற்றிய விவரங்களையும் தகவல்களையும் சேகரித்து மக்களிடம் இந்த துரோகிகளை அம்பலப்படுத்த வேண்டியது நமது கடமையாகும். ஆகவே பொதுவுடமை அமைப்புகளுக்குள் இத்தகைய மார்க்சியத்தை மறுக்கும் திருத்தும் பேர்வழிகள்தான் உழைக்கும் மக்களின் முதன்மையான எதிரிகள் என்ற மார்க்சிய ஆசான்களின் போதனையை நாம் கவனமாகப் பின்பற்ற வேண்டும். மார்க்சியவாதிகளை குழப்புவதற்கும் அவர்களை திருத்தல்வாதிகளாக மாற்றுவதற்கு மக்கள் விரோதிகள் தொடர்ந்து முற்சி செய்கிறார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அவர்களிடம் பொருளாதாரம், அரசியல் அதிகாரம், ஆயுத பலம் வலுவாகவே இருக்கிறது. அவர்களை சாதாரணமாக எடைபோடக்கூடாது. அவர்களை எதிர்த்து விடாப்பிடியாகவும் தொடர்ந்தும் சித்தாந்தப் போராட்டம் நடத்தி அம்பலப்படுத்த வேண்டும். அவர்கள் விமர்சன சுதந்திரம் என்று சொல்லி மார்க்சியத்திலுள்ள குறைகளை களையவேண்டும் என்று சொல்வது மார்க்சிய ஆசான்கள் நீண்டகாலம் ஆழ்ந்த சிந்தனையின் மூலம் நமக்கு வழங்கிய மார்க்சிய பொதுக்கோட்பாடுகளை கைவிட்டுவிட வேண்டும் என்பதுதான் அவர்களின் நோக்கமாகும். அதற்காகவே அவர்கள் மார்க்சியத்துக்கு மாற்றாக புதிய பாதையை முன்வைக்கிறார்கள். ஆனால் மார்க்சிய ஆசான்களால் முன்வைக்கப்பட்ட பொதுக்கோட்பாடுகளின் (பழைய பொதுக்கோட்பாடுகளைப்) பின்பற்றித்தான் ரஷ்யாவிலும் சீனாவிலும் சாதனை படைக்கப்பட்டது அப்படியிருக்கும்போது புதிய கோட்பாடும் புதிய பாதையும் நமக்குத் தேவையா? மார்க்சியத்தின் அடிப்படைகளை எதிர்க்கும் புதிய கோட்பாடும் புதிய பாதையும் உழைக்கும் மக்களை ஏய்ப்பதற்காக ஏகாதிபத்தியங்களை பாதுகாப்பதற்காகவே கொண்டுவரப் படுகிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். உண்மையில் அவைகள் புதிய கோட்பாடும் அல்ல, புதிய பாதையும் அல்ல. பெர்ன்ஸ்டைன், காவுத்ஸ்கி போன்ற திருத்தல்வாதிகளின் பாதையையே புதிய பாதை என்று நமக்குச் சொல்கிறார்கள். புதிய கோட்பாடு புதிய பாதை என்பதெல்லாம் பாட்டாளி வர்க்க இயக்கத்துக்குள் முதலாளித்துவ கருத்துக்களை கொண்டுவரும் முயற்சிதான். இத்தகைய பிற்போக்காளர்கள் மார்க்சிய பொதுக்கோட்பாடுகளை பின்பற்றும் கம்யூனிஸ்டுகளைப் பார்த்து வறட்டுவாதிகள் என்றும் சிந்தனைத் துறையில் சமூகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைப் புரிந்துகொள்ளத் தவறும் இயக்கமறுப்புவாதிகள் என்றும் குற்றம்சாட்டுகிறார்கள். ஆனால் இந்த சதிகாரர்கள்தான் சமூக விஞ்ஞானமான மார்க்சியத்தை மறுக்கும் அயோக்கியத்தனத்தை மூடிமறைத்து மக்களை ஏமாற்றும் கயவர்கள் ஆவார்கள். ஆகவே ஒவ்வொரு பிரச்சனை பற்றியும் மார்க்சிய ஆசான்களது பொதுக்கோட்பாட்டை உள்வாங்குவோம், அதன் அடிப்படையில் சிந்தித்து செயல்படுவோம், மார்க்சியத்தை மறுக்கும் புதிய கோட்பாளர்களையும் புதிய பாதையை முன்வைத்து நம்மை ஏமாற்றுபவர்களையும் எதிர்த்துப் போராடி மக்களிடம் அம்பலப்படுத்துவோம். அதற்கு நமக்கு லெனின் வழிகாட்டுகிறார்.
மேலும் லெனின் கூறினார்:-
“வறட்டுச் சிந்தனை” என்பது எத்தனை வசதியான சொல். எதிர்க்கருத்தை லேசாகத் திரிக்கவேண்டும் பிறகு அந்தத் திரிபை மறைக்க வறட்டுத் தத்துவம் என்று பெயரிட்டு விடவேண்டும். அவ்வளவுதான் வேலை முடிந்தது. தொடர்ந்து கூறினார்:-
சோசலிசக் கட்சியை உண்மையான விசுவாசிகளின் கூடாரமாக மாற்ற நாங்கள் முயன்றதாகக் கூக்குரல் எழுப்பும் சுதந்திரமான கருத்துக் கூறுபவர்களை, வறட்டுத் தத்துவத்திலிருந்து மாறுபட்டவர்களை மதத்துரோகிகள் என்று சித்திரவதை செய்ததாகக் கதை கட்டப்படும் இந்தக் கூரிய நாகரீகமான சொற்களைப் பற்றி நாங்கள் நன்றாக அறிந்துள்ளோம். ஆனால், அவற்றில் துளியும் உண்மையோ பொருளோ கிடையாது. லெனின் திரிபுவாதத்தை முழுமூச்சாக எதிர்த்து மார்க்சியத்தின் தூய்மையைப் பாதுகாத்தார் அதேசமயம் மார்க்சியத்தைப் படைப்பாற்றலுடன் படிக்கவேண்டும் என்றும் புரட்சிகரப் போராட்டங்களின் அனுபவங்களால் அதனைச் செழுமைப்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.((திருத்தல்வாதம், செங் யென்-சீ, பக்கம் - 22, 23)
விளக்கம்:- மார்க்சியத்தை திரிப்பவர்களும், எதிர்ப்பவர்களும் மார்க்சியவாதிகளை வறட்டு சிந்தனையாளர்கள் என்று கூசாமல் குற்றம் சாட்டுகிறார்கள். இவ்வாறு மார்க்சியவாதிகள் மீது எவ்விதமான ஆதாரமில்லாமல் குற்றம் சாட்டுவது அவர்களுக்கு வசதியாக இருக்கிறது என்பதை மார்க்சிய ஆசான்கள் விளக்கினார்கள். இவ்வாறு கண்மூடித்தனமாக குற்றம்சாட்டிவிட்டு மார்க்சியத்தை திரிப்பது, பிறகு அவர்களின் திரிபுவாதத்தை மூடி மறைக்க மார்க்சியவாதத்தை வறட்டுத் தத்துவம் என்று பெயரிட்டு மார்க்சியவாதிகள் மீது தாக்குதல் தொடுப்பதுதான் நிருத்தல்வாதிகளின் நரித்தந்திரமாகும் என்று மார்க்சிய ஆசான்கள் திருத்தல்வாதிகளை அம்பலப்படுத்தினார்கள். ஆகவே ஒருவர் பேசுவது மார்க்சியமா? அல்லது திரிபுவாதமா? என்பதை கூர்மையாக கவனித்து இனம்காண வேண்டும். மார்க்சியத்தை தந்திரமாகவும் சதித்தனமாகவும் திருத்துபவர்களும் எதிர்ப்பவர்களும் கம்யூனிஸ்டுக் கட்சியானது கண்மூடித்தனமாக மார்க்சியத்தை ஏற்றுக்கொண்டு அதற்கு விசுவாசமுள்ள கூட்டம் என்று கூப்பாடு போடுகிறார்கள். உண்மைதான் உழைக்கும் மக்களையும் அவர்களின் நலனுக்காகப் பாடுபடுபவர்களையும் நம்பி அவர்களுக்கு விசுவாசமான கூட்டம்தான் கம்யூனிஸ்ட் கட்சியாகும்.
அந்த விசுவாசமானது குருட்டுத்தனமானது அல்ல. அது விஞ்ஞான அடித்தளத்தின் மீதான நம்பிக்கையும் விசுவாசமாகும். அறிவுள்ளவர்கள் விஞ்ஞானத்தை நம்புவார்கள், அறிவற்ற மூடர்கள் விஞ்ஞானத்தை நம்பமாட்டார்கள். மதவாதிகள் எப்படி சுதந்திரமான கருத்துக் கூறுபவர்களையும் வறட்டுத் தத்துவத்தை எதிர்ப்பவர்களையும் மதத்துரோகிகள் என்று கூறி தாக்குதல் தொடுத்தார்களோ அதுபோலவே மார்க்சியத்தை மறுப்பவர்களை கம்யூனிஸ்டுகள் கண்மூடித்தனமாக தாக்குகிறார்கள் என்று மார்க்சியவாதிகள் மீது குற்றம் சுமத்துகிறார்கள். ஆனால் மார்க்சியவாதிகளின் கருத்துக்கள் நடைமுறையில் சாதனை படைத்துள்ளது, ஆனால் மார்க்சியத்தை மறுப்பவர்களின் கருத்துக்கள் எவ்விதமான சாதனையும் படைக்கவில்லை. உதாரணமாக லெனின் ரஷ்யாவில் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் கூட்டின் மூலமே ஜாரின் எதேச்சிகாரத்தை வீழ்த்தி வெற்றிபெற வேண்டும் என்று சொல்லி அதனையே நடைமுறையில் சாதித்துக்காட்டினார். ஆனால் டிராட்ஸ்கி சோசலிசப் புரட்சி என்று சொல்லி விவசாயிகளோடு கூட்டுவைக்கக் கூடாது என்று சொல்லி எவ்விதமான சாதனையையும் படைக்கவில்லை. இதிலிருந்தே நாம் தெரிந்துகொள்ளலாம் மார்க்சியவாதிகள் சமூக விஞ்ஞான அடிப்படையிலேயே முடிவுகள் எடுத்துச் செயல்படுகிறார்கள் வெற்றியும் பெற்றார்கள். ஆனால் திருத்தல்வாதிகள் மார்க்சிய விஞ்ஞானத்துக்கு எதிரான கண்ணோட்டத்திலிருந்து முடிவுகள் எடுத்துச் செயல்படுகிறார்கள் அதனால் அவர்கள் தொடர்ந்து தோல்வியடைகிறார்கள்.
லெனின் மார்க்சியத்தை கவனமாகவும் உள்ளது உள்ளபடி படித்து உள்வாங்க வேண்டும் என்றார். அதன் அடிப்படையில் சமூகப் பிரச்சனைகளை அலசி ஆராய்ந்து நாம் சமூக மாற்றத்துக்கு என்ன செய்ய வேண்டும் என்ற முடிவெடுத்துச் செயல்பட வேண்டும். மேலும் நமது நடைமுறைப் போராட்டங்களின் மூலம் நமது வேலைத்திட்டத்தை சோதித்து அறிய வேண்டும் என்றும் நமது நடைமுறை அனுபவத்திலிருந்து நமது கொள்கைகளை செழுமைப்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த முறையை லெனின் பின்பற்றி கட்சி செய்த தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு தவறுகளை திருத்தி செயல்படுத்தி சாதனை படைத்தார். இந்த விஞ்ஞான முறையைப் பின்பற்றும்போது கட்சிக்குள் நிலவிய திருத்தல்வாதக் கருத்துக்களை எதிர்த்து விடாப்பிடியாகப் போராடி மார்க்சியத்தை பாதுகாத்ததோடு சோசலிசப் புரட்சியை வெற்றிகரமாக நடத்தி முடித்தார். இங்கு திருத்தல்வாதத்தை முறியடிக்கத் தவறியதால் மார்க்சியத்துக்கு எதிரான பல்வேறுவகையான தத்துவங்களை கொண்டுவந்து முதலாளித்துவ சீர்திருத்தவாதிகளும் திருத்தல்வாதிகள் மற்றும் கலைப்புவாதிகள் கம்யூனிச உணர்வுள்ளவர்களையும் மக்களையும் குழப்பிக்கொண்டு இருக்கிறார்கள். இவர்களை சித்தாந்தத்துறையில் முறியடிக்காமல் இங்கு கம்யூசம் வளராது. மேலும் அவர் மார்க்சிய சிந்தனையை நாங்கள் முற்றுப்பெற்றுவிட்ட மாற்றமே செய்யக்கூடாத ஒன்றாகக் கருதவில்லை. ஒரு அறிவியலின் அஸ்திவாரக் கல்லாகவே அதனைக் கருதுகிறோம். வாழ்க்கையோடு மாற்றம் பெறவேண்டும் என்றால் அதனை அனைத்து திசைகளிலும் வளர்த்தெடுப்பது சோசலிசவாதிகளின் கடமையாகும். என்று குறிப்பிட்டார். மார்க்சியத்தை சுதந்திரமாக விரிவாக ஆய்வு செய்வதன் அவசியத்திற்கு அழுத்தம் கொடுத்தார். ஏனென்றால் மார்க்சிய சிந்தனை ஒரு பொதுவான வழிகாட்டும் சிந்தனைகளைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்தக் கோட்பாடுகள் நாட்டுக்கு நாடு மாறுபடும். இங்கிலாந்தில் இயங்குவதுபோல் பிரான்சில் இயங்காது. பிரான்சில் இயங்குவதுபோல் ஜெர்மனியில் இயங்காது. ஜெர்மனியில் இயங்குவதுபோல் ரஷ்யாவில் இயங்காது. ((திருத்தல்வாதம், செங் யென்-சீ, பக்கம் - 23)
விளக்கம்:- மார்க்சிய சிந்தனையை மார்க்சிய சமூக விஞ்ஞானத்தை முற்றுப்பெற்ற விஞ்ஞானமாக மார்க்சிய ஆசான்கள் கருதவில்லை. மார்க்சியத்தை வறட்டுத் தத்துவமாகவும் கருதவில்லை. சமூக வீஞ்ஞனத்தின் அடிப்படையான அஸ்திவாரமாகவே (It is the basic foundation of social science) மார்க்சிய ஆசான்கள் கருதினார்கள். சமூகத்தை மாற்றுவதற்கான பொதுவான வழிகாட்டுதலாகவே கருதினார்கள். இந்த பொதுவான வழிகாட்டுதலை குறிப்பான பிரச்சனையில் பொருத்திப்பார்த்து குறிப்பான கொள்கை கோட்பாட்டு முடிவெடுத்து செயல்பட வேண்டும் என்றார்கள். நாம் வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு முடிவெடுப்பதற்காக இந்த அடிப்படை கோட்பாடுகளை பயன்படுத்தி மார்க்சிய தத்துவக் கண்ணோட்டத்தை வளர்க்கவேண்டும். அந்த வகையில் மார்க்சியத்தை லெனின் லெனினியமாக வளர்த்தார். லெனின் எப்படி மார்க்சியத்தின் அடிப்படைகளை திருத்தாமல் வளர்த்தாரோ அந்த வகையில்தான் மார்க்சியத்தை வளர்க்க வேண்டும். ஆனால் இங்குள்ள சில பிற்போக்கு பேர்வழிகள் மார்க்சியத்தின் அடிப்படைகளுக்கு எதிராக புதிய பாதையை நமக்கு காட்டுகிறார்கள். இந்த வகையான புதிய பாதையானது மார்க்சியத்திற்கு எதிரான கொள்கைகளே ஆகும். ஆகவே சமூகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை இயக்கவியல் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்திலிருந்தும் புரட்சிகரமான வரலாற்று அனுபவங்களைக்கொண்டு ஆய்வு செய்ய வேண்டும் என்று மார்க்சிய ஆசான்கள் போதித்துள்ளார்கள்.தாவர விஞ்ஞானமானது உலகம் முழுவதற்கும் பொதுவான விஞ்ஞானம் என்றாலும், ஒவ்வொரு பகுதியுள்ள நிலத்தின் தன்மையில் வேறுபாடுகள் உள்ளதால், ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறு பயிர்களை விளைவிக்க வேண்டும் என்றாலும் அனைத்துப் பயிர்களின் வளர்ச்சி பற்றி பொதுவான விஞ்ஞானத்தைப் பின்பற்ற நாம் தவறக்கூடாது. அதுபோலவே ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறான தன்மைகள் இருப்பதால் வெவ்வேறு நாடுகளிலும் வெவ்வேறு முறைகளை நாம் கையாள வேண்டும் என்றாலும் மனித சமூகம் என்ற அடிப்படையில் பொதுவான சமூக விஞ்ஞானக் கோட்பாட்டை நாம் புறக்கணிக்கக்கூடாது என்றே மார்க்சிய ஆசான்கள் நமக்குப் போதித்துள்ளார்கள்………
No comments:
Post a Comment