முந்தைய பகுதியின் தொடர்ச்சி...
தேசிய இனச்சிக்கலும் மார்க்சியத் தீர்வும்: சுயநிர்ணய உரிமைப் போராட்டம்
இந்தக் கட்டுரை தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டத்தை மார்க்சிய-லெனினியக் கண்ணோட்டத்தில் ஆழமாக விளக்குகிறது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு தேசிய இனமும் தன்னாட்சி உரிமை பெற வேண்டுமானால், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கார்ப்பரேட் சுரண்டல் சக்திகளை பொது எதிரிகளாகக் கருதி ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று இது வலியுறுத்துகிறது. வெறும் பிரிவினைவாதத்தை மட்டும் பேசாமல், ஒடுக்கப்பட்ட வர்க்கங்கள் அனைத்தும் இணைந்து சோசலிசப் புரட்சியை முன்னெடுப்பதே உண்மையான விடுதலையைத் தரும் என ஆதாரங்கள் கூறுகின்றன. இந்திய ஆளும் வர்க்கங்களும் சில போலி கம்யூனிஸ்ட் கட்சிகளும் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை மறுப்பதன் மூலம் உழைக்கும் மக்களை ஏமாற்றுவதாக இக்கட்டுரை குற்றம் சாட்டுகிறது. தாய்மொழிக் கல்வி மற்றும் பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரத்தை நிலைநிறுத்தும் ஒரு புரட்சிகரமான கம்யூனிஸ்ட் கட்சியின் அவசியத்தை இது இறுதி தீர்வாக முன்மொழிகிறது. சாதி மற்றும் மொழி அடிப்படையில் மக்களிடையே உள்ள பிளவுகளைக் கடந்து, உலகளாவிய சோசலிசத் தத்துவத்தின் கீழ் அனைவரும் ஒருங்கிணைவதே இப்போராட்டத்தின் அடிப்படை நோக்கமாகும்.
தேசிய விடுதலைப் போராட்டமும் வர்க்கப் போராட்டமும் எவ்வாறு இணைந்து செயல்படுகின்றன என்பதை விளக்கவும்?
இந்தியாவில் உள்ள தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை குறித்து மார்க்சிய-லெனினியப் பார்வை என்ன?
சுரண்டலற்ற ஒரு சமூகத்தை உருவாக்க கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மாற்று அரசு எத்தகையதாக இருக்க வேண்டும்?
இன்றைய
பிரச்சனையினுடைய பன்முகச் சிக்கல்களைப் புரிந்து கொள்ள அதை அதனுடைய வரலாற்று
நிலையில் வைத்துப் பார்த்தால்தான் புரிந்து கொள்ள முடியும். இந்தப் பிரச்சினையை
இவ்வளவு மோசமாகச் செய்த உடனடியான கடந்தகால நிகழ்ச்சிகளைப் பற்றிய சுருக்கமான வரைவை பார்ப்போம்.
ஒவ்வொரு
தேசியப் போராட்டமும் உள்ளடக்கத்தில் ஒரு வர்க்கப் போராட்டம் ஆகும். வெளிநாட்டு சுரண்டல்காரர்கள், ஒடுக்குமுறையாளர்களாகிய வர்க்கம் அல்லது வர்க்கங்கள்
மற்றும் தேசிய இனத்திற்குள்ளேயே
உள்ள சுரண்டல்காரர்களாகிய வர்க்கம் அல்லது வர்க்கங்கள்தான் தேசிய இனங்களை
சுரண்டுவதற்காக அடக்கி ஒடுக்குகின்றன, இந்த சுரண்டல் மற்றும் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்கள்தான் தேசிய விடுதலைப் போராட்டமாக அமைகிறது.
ஆகவேதான்
தேசிய விடுதலைப் போராட்டமும் ஒரு வர்க்கப் போராட்டமே என்று மார்க்சியம் கூறுகிறது. ஆகவே தேசிய விடுதலைப்
போராட்டத்தில் ஈடுபடுபவர் வர்க்கப் போராட்டம் குறித்த மார்க்சிய போதனைகளை பின்பற்றி
அவர்களது போராட்ட வழிமுறைகளை அமைத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. பொது எதிரிகளை (இந்திய ஆளும் வர்க்கங்கள்
மற்றும் இந்திய ஆளும்வர்க்க அரசியல்வாதிகள், இந்திய ஆட்சி அதிகார அமைப்பு)
இந்தப் போராட்டத்தில் வெல்வதற்கு முதன்மையான உத்தரவாதம் இந்தியாவில் உள்ள பல்வேறு
தேசிய இனங்களில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் ஒற்றுமையாகும். ஒவ்வொரு தேசிய இனமும்
சுயநிர்ணய உரிமையை அடைவதற்கான கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டு வெல்வதற்கு இந்த
ஒற்றுமை அவசியமானதாகும். தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டங்கள்
இந்திய சோசலிசப் புரட்சியின்
பொதுவான பிரச்சனையுடன் ஒரு பகுதியாக நெருக்கமாக இணைந்துள்ளது என்பதை தேசிய விடுதலைப் போராளிகள்
புரிந்துகொள்ள வேண்டும். ஆகவே தமிழ்தேச விடுதலைக்குப் போராடுவதோடு சோசலிசத்துக்காகவும்
போராட வேண்டியது இன்றைய காலக்கட்டத்தில் மிகவும் அவசியமாகும்.
தங்களின்
லட்சியத்தை அடைய இந்தியாவில் உள்ள தேசிய இனங்களில் உள்ள ஒடுக்கப்பட்ட வர்க்கங்களும் தங்களுக்குள்
ஒருங்கிணைந்து தோளோடு தோள் நின்று போராடுவது என்பது இந்திய வரலாற்றின் போக்காக நாம் மாற்ற வேண்டும்.
ஒவ்வொரு
தேசிய இனத்தையும் அல்லது தேசத்தையும் சுரண்டலை நோக்கமாகக் கொண்டவர்களே ஆள்கிறார்கள் அவர்களின் சுரண்டலின் நலனிலிருந்து அடிமைப்படுத்தி ஒடுக்குகிறார்கள் என்பதை நாம் ஆழமாகப்
புரிந்துகொள்ள வேண்டும். இந்த சுரண்டல் மற்றும் ஒடுக்குமுறை காரணமாகவே பல்தேசிய அரசின் கீழ் உள்ள தேசிய இனங்கள் தேசிய இனச்சிக்களை
சந்திக்கின்றன.
ஆகவே இந்தச் சிக்கலைத் தீர்க்கும் போராட்டத்தில் ஒடுக்கப்பட்ட தேசிய இனங்கள் அல்லது தேசங்கள் அவர்களை ஒடுக்குகின்ற வர்க்கம் அல்லது வர்க்கங்களை எதிர்த்துப் போராட வேண்டியது அவசியமாகிவிடுகிறது. ஆகவேதான் ஒவ்வொரு தேசியப் போராட்டமும் ஒரு வர்க்கப் போராட்டமே என்று மார்க்சிய லெனினியம் தெளிவாக வரையறை செய்கிறது. மேலும் இந்தப் போராட்டத்திற்கான தீர்வாக இன்றைய ஏகாதிபத்திய காலக்கட்டத்தில் தேசிய சுயநிர்ணய உரிமைக்காகப் போராட வேண்டும் என்ற கொள்கையை மார்க்சிய லெனினியம் முன்வைக்கிறது. மேலும் தேசிய சுயநிர்ணய உரிமைக்கானப் போராட்டத்தில் அந்நிய சுரண்டல்காரர்களையும் தேசிய இனத்திற்குள்ளேயே உள்ள சுரண்டல்காரர்களையும் எதிரிகளாக மார்க்சிய லெனினியம் சுட்டிக்காட்டுகிறது. இந்த எதிரிகளை எதிர்த்துப் போராடுவதற்கு இந்த எதிரிகளால் பாதிக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட அனைத்து தேசிய இனங்களைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட ஏழை எளிய மக்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து போராட வேண்டும் என்றும் மார்க்சிய லெனினியம் நமக்கு வழிகாட்டுகிறது.
இந்திய வரலாற்றில் இங்குள்ள அனைத்து தேசங்களையும் ஒடுக்கிய
பிரிட்டீஷை எதிர்த்தப் போராட்டத்தில் அனைத்து தேசிய இன உழைக்கும் மக்களும்
ஒன்றுபட்டு போராடி வீழ்த்திய வரலாற்றிலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.
இப்போதும் இந்தியாவிலுள்ள அனைத்து தேசிய இனங்களையும் உள்நாட்டு வெளிநாட்டு
கார்ப்பரேட் முதலாளிகளே ஒடுக்குகிறார்கள்.
இந்த
பொதுவான எதிரியை எதிர்த்தப் போராட்டத்தில் இந்தியாவிலுள்ள அனைத்து தேசிய இனங்களும் ஒன்றுபட வேண்டியது மிகமிக அவசியமே ஆகும்.
இந்த பொதுவான எதிரிகள் இந்திய அரசின் துணைகொண்டே ஒடுக்குகிறார்கள். ஆகவே இந்த
அரசையும் ஒடுக்கப்பட்ட தேசிய இனங்கள் எதிர்த்துப் போராட வேண்டியது அவசியமாகிவிடுகிறது. இன்றைய இந்திய ஒற்றை
அரசுக்கு மாற்று தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்த கூட்டரசே ஆகும்.
இந்தியாவின்
விவசாய செயல்பாடுகள், ரூபாயின்
மதிப்பைக் குறைத்தல், ஏகாதிபத்திய
மூலதனத்திற்கான கதவுகளைத் திறந்துவிடுதல், இறக்குமதிக்கான தடைகளை நீக்குதல், தொழிற்சாலைகள் மீதான அரசுக் கட்டுப்பாடுகளை திரும்பப் பெறுதல், அரசு தொழில் நிறுவனங்களை தனியார் மயமாக்குதல் போன்ற இந்திய சமூக அமைப்பை உருவாக்கக்கூடிய, இந்திய மக்களின் வாழ்வில் தாக்கத்தை உருவாக்கக்கூடிய அனைத்து முக்கிய முடிவுகளுமே ஏகாதிபத்திய நாடுகளின்
தலைநகரங்களில் குறிப்பாக வாஷிங்டனில் தான் எடுக்கப்படுகின்றன. அவ்வாறு
எடுக்கப்பட்ட முடிவுகள் புது டெல்லி மூலம் செயல்படுத்தப்படுகின்றன. இது ஒரு
நாட்டின் பொருளாதாரத்தை ஏகாதிபத்திய பொருளாதாரத்துக்கு அடகு வைப்பதாகும். தனது பொருளாதாரத்தை அடகு வைத்த நாடுகளின் அடிப்படை நிகழ்வுகளை தீர்மானிப்பது
காலனியத்தின் அல்லது புதியக்காலனியத்தின் சாராம்சமாகும். இந்தியத் திட்டக் குழுவின் முன்னாள் உறுப்பினர் திரு ஜே. டி. சேத்தி, நேருவின் பொருளாதார வளர்ச்சித் திட்டங்கள் அனைத்தும், தொடக்கத்திலிருந்தே சார்புத் தன்மையுடையதாகவே இருந்தது.
ஆனால் சுயசார்பு தொழில்மயமாக்கல் என்று விளம்பரப்படுத்தப்பட்டது என்று சரியாகவே கூறியுள்ளார். நேருவின் விளக்கப்படி இந்தியா ஒரு
வாடிக்கை நாடுதான். எனவே ஒரு நாட்டின் சார்பு தன்மையை அல்லது சார்பற்ற நிலையை அதன் பெரிய பரப்பளவை வைத்து தீர்மானிக்க முடியாது, தீர்மானிக்கவும் கூடாது. அப்படியானால் இங்கிலாந்து 200 ஆண்டுகள் இந்தியாவை ஆண்டு இருக்க முடியாது.
மார்க்சிய
- லெனினியவாதிகள் அனைத்து ஒடுக்கப்பட்ட நாடுகளின் பெரிய சிறிய நாடுகளின் சுதந்திர
உரிமையை உயர்த்திப் பிடிக்கின்றனர். பிரிந்து போவதை உள்ளடக்கிய சுய நிர்ணய உரிமையை, தங்களுக்கான சொந்த நாடுகளை உருவாக்கிக் கொள்ளும் உரிமையை ஆதரிக்கின்றனர்.
“ரஷ்யாவில் நாம் நமது சோசலிசத்திற்கான புரட்சிகரப் போராட்டத்துடன் தேசிய இனப் பிரச்சனைக்கான புரட்சிகரத் திட்டத்தையும்
கட்டாயம் இணைத்துக் கொள்ள வேண்டும்” என்று லெனின் கூறினார். மேலும், “ஜார்ஆட்சியினால் ஒடுக்கப்பட்ட அனைத்து தேசங்களும் பிரிந்து
சென்று சுதந்திரம் அடைவதற்கான கோரிக்கையை
ரஷ்யா பாட்டாளி வர்க்கம் முன்வைக்க வேண்டும். இல்லையெனில், சோசலிசத்திற்கான நமது புரட்சிகர போராட்டம், ஜனநாயகத்திற்கான தேசிய இனங்களின் பிரச்சனைகளுக்கான புரட்சிகர நடைமுறைகளோடு இணைக்கப்படாத நிலையில்
வெறும் முழக்கமாகவே அமைந்து விடும் என்றும் லெனின் கூறினார். (இந்தியாவின் தேசிய இனச்சிக்கலும் ஆளும்
வர்க்கங்களும், சுனிதிகுமார் கோஷ், அலைகள் வெளியீட்டகம். பக்கம் - 7, 8 )
இந்திய
ஆட்சியாளர்கள் தங்களை சுதந்திரமானவர்களாக காட்டிக் கொள்கிறார்கள். அவர்கள்
சுதந்திரமாகவே, அவர்களது அரசியல் மற்றும் பொருளாதாரக்
கொள்கைகளை எடுப்பதாகவும், அதில் வேறு எந்த
நாட்டை சேர்ந்தவர்களும் தலையிட முடியாது
என்றும் தொடர்ந்து பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்தியாவின் விவசாய செயல்பாடுகள், ரூபாயின் மதிப்பை குறைதல், ஏகாதிபத்திய மூலதனத்தை இங்கு இறக்குமதி செய்வதற்கு, கதவுகளை அகலமாகத் திறந்து விடுதல் இறக்குமதிக்கான தடைகளை மற்றும் கட்டுப்பாடுகளை நீக்குவது, தொழிற்சாலைகள் மீதான அரசின் கட்டுப்பாடுகளை கைவிடுவது போன்ற மக்களுக்கு எதிரான இந்த நாட்டின் வளர்ச்சிக்கு எதிரான பல
பிற்போக்கான பாதகமான மோசமான
கொள்கை முடிவுகளை, இவர்கள் ஏகாதிபத்தியவாதிகளான
ஆட்சியாளர்களிடம் கலந்து பேசியே முடிவுகள் செய்கிறார்கள். இவ்வாறு இந்திய
பொருளாதரத்தை அந்நிய ஏகாதிபத்தியவாதிகளிடம் அடகு வைத்து, இந்திய உழைக்கும் மக்களின் வாழ்வை சூறையாடிக்
கொண்டிருக்கிறார்கள். இது முன்னாள் பிரிட்டிஷ் காலனியின் போது எப்படி எல்லாம் இங்கு கொள்கை முடிவுகளை பிரிட்டிஷ்
ஏகாதிபத்தியவாதிகள் எடுத்தார்களோ, அதுபோலவே தற்போது வெவ்வேறு
ஏகாதிபத்தியவாதிகள் இந்தியாவின் அரசியல் பொருளாதாரக் கொள்கைகளை தீர்மானிக்கிறார்கள். இந்த விவரங்களை இந்திய
திட்டக் குழுவின் முன்னாள் உறுப்பினர் திரு ஜே டி.சேத்தி அவர்களே அம்பலப்படுத்தி
உள்ளார்கள்.
உலகில்
உள்ள அனைத்து தேசங்களையும் ஒன்றிணைப்பதற்கு ஒவ்வொரு தேசங்களுக்கும் சுய நிர்ணய உரிமை அதாவது பிரிந்து போகும் உரிமையைக்
கொடுத்து அவர்களது சுதந்திரமான விருப்பத்தின் அடிப்படையில் கூட்டரசை உருவாக்கி, முழுமையான ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் இடைக்கட்டத்தின்
மூலமாகவே தேசங்களை ஒன்றிணைத்து ஓர் உலக தேசத்தை உருவாக்க முடியும் என்பதே லெனினியம் காட்டும் வழியாகும். இதற்கு மாறாக ஒவ்வொரு தேசத்தையும்
அதன் சுய நிர்ணய உரிமையை மறுத்துவிட்டு கட்டாயப்படுத்தி ஒன்றிணைப்பதன் மூலம் நிச்சயமாக ஓர் உலக தேசியத்தை நாம் படைக்க
முடியாது. ஆகவே கம்யூனிஸ்டுகளின் லட்சியம் ஒரு தமிழ் தேசமோ, ஒரு இந்திய தேசமோ அல்ல, மாறாக ஓர் உலக தேசியமே
கம்யூனிஸ்களின் லட்சியமாகும். அதை அடைவதற்கு தேசங்களின் சுயநிர்ணய உரிமையை
கட்டாயமாக கம்யூனிஸ்டுகள் ஆதரிக்க வேண்டியது கம்யூனிஸ்ட்களின் கடமையாகும். தேசிய இனங்களின் சுய நிர்ணய
உரரிமையை ஆதரிக்காதவர் எவரும் கம்யூனிஸ்டாக ஆகமுடியாது. அவர்கள் மக்களை சுரண்டி
ஒடுக்கும் முதலாளித்துவ வாதியாகவேதான்
இருக்க முடியும். இன்று இந்தியாவில் உள்ள பாராளுமன்ற கம்யூனிஸ்ட் மற்றும் சோசலிசக் கட்சிகள் இந்திய ஒற்றுமையின் அதிதீவிர பாதுகாவலர்களாக இருக்கின்றனர்.
“நமது கட்சி நாட்டின் ஒற்றுமைக்காக நிற்கும் அதே வேளையில், எல்லா வகையான
பிரிவினைவாத சக்திகளை எதிர்த்தும் போராடி வருகிறது. நாம் இன்று செயல்படத்தக்க, திறமை வாய்ந்த மைய அரசிற்காக - நாட்டைப் பாதுகாக்கக் கூடிய, பொருளாதார வாழ்வினை நிலைப்படுத்தி ஒருங்கிணைக்க கூடிய, மற்றும் வெளி விவாகாரம், வெளிநாட்டு
வாணிபம்,
தொலைத்தொடர்பு போன்றவற்றை சீராக நடத்துவதற்கான போதுமான படை
பலத்தைக் கொண்டிருக்க கூடிய அரசிற்காக நிற்கிறோம்” என்று சிபிஎம்.ன் அறிக்கை
கூறுகிறது.
“இன்றைய இந்தியச் சூழலில் சுயநிர்ணய உரிமைக்காக வாதிடுவது மக்களின் எதிரியான
ஏகாதிபத்தியத்திற்கு வாய்ப்பாக அமைந்து தேசிய இனப்பிரச்சினை பிரதான பாத்திரத்தை
முழுமையாக தவறவிட்டு இத்தனை ஆண்டுகள் வரை அவர்கள் பெற்று வந்த வளர்சிகளை இழக்க நேரிடும்” என்று சிபிஎம் இன் ரணதிவே எழுதியுள்ளார். அவர் மேலும் “ஆங்கிலேயர்களை வெளியேற்றிய பிறகு தோன்றிய தேசிய அரசு ஏற்கனவே இருந்து வந்த பல்வேறுபட்ட மொழிவாரி குழுக்களை
சந்திக்க வேண்டியதாயிற்று. ஒரு நிலப்பிரபுத்துவ - முதலாளித்துவ ஆட்சியில் ஒற்றுமையும்
சமத்துவமும் பல்வேறு மொழிக்குழுக்களுக்கு இடையே எவ்வாறு உருவாக்க முடியும். சமத்துவமின்மையானது அரசின் ஒற்றுமையைக்
குலைப்பதையும், தேசத்தை துண்டாடுவதையும் எவ்வாறு தடுக்க
முடியும் என்பதே மிக முக்கிய பிரச்சனையாகும்” என்று கூறுகிறார்.
ரணதிவே
போன்ற மார்க்சிஸ்ட்கள், முதலாளித்துவ
நிலப்பிரத்துவ ஆட்சியின் கீழேயே
பல்வேறு மொழி பேசக்கூடிய பகுதிகளில் அவற்றின் ஒற்றுமை, சமத்துவம் மற்றும் இது தொடர்பான பிரச்சனைகளுக்கும் தீர்வு காண முடியும் என்று கூறுகின்றனர்.இந்தியாவிலுள்ள
பாராளுமன்றவாத கம்யூனிஸ்டுகள் (உண்மையில் இவர்கள் திருத்தல்வாதிகள், மார்க்சியத்துக்கு
எதிரானவர்கள்) மற்றும் சோசலிஸ்டுகள் இந்தியா ஒரு ஒன்றுபட்ட தேசமாகவே
இருக்கவேண்டும் என்ற நிலையிலிருந்து இந்திய ஒற்றுமையின் தீவிரமான ஆதரவாளர்களாகவே
இருக்கிறார்கள். அந்த வகையில் இவர்களது கொள்கைக்கும் இந்திய ஆளும்வர்க்க கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜகவினரது கொள்கைக்கும் எவ்விதமான வேறுபாடும் இல்லை. இவர்கள் காங்கிரஸ் கட்சியையோ, பாஜகவையோ இந்திய மக்களின் எதிரிகளாக கருதுவதில்லை. அதற்கு மாறாக இங்குள்ள
தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமைக்காகப்
போராடுபவர்களை மக்களின் எதிரியாகப் பார்த்து அவர்களை எதிர்த்துப் போராடவேண்டும்
என்கிறார்கள்.
இந்திய
அரசானது திறமைவாய்ந்த மைய அரசாக இருக்கவேண்டுமாம். நாட்டைப் பாதுகாப்பதற்கு
அவசியமான பலமான இராணுவம் வேண்டுமாம் சிபிஎம்க்கு. பொருளாதார வாழ்வை அரசு
நிலைப்படுத்த வேண்டும். யாருடைய பொருளாதார வாழ்வை நிலைப்படுத்த வேண்டும்? இதுவரை இந்த அரசு இந்திய பெருமுதலாளிகளின் பொருளாதாரத்தைத்தானே பாதுகாத்துள்ளது, இவர்களுக்குத் தெரியாதா? இவ்வாறு சிபிஎம் கட்சித் தலைவர்கள் இந்திய ஒற்றை ஆட்சியை பாதுகாத்து, அரசு பற்றிய கொள்கையிலும் தேசிய இனங்களுக்கான சுய நிர்ணய உரிமைப் பிரச்சினையிலும்
ஏகாதிபத்தியம் என்ற பூச்சாண்டியைக் காட்டி மார்க்சிய லெனினியத்தை மறுத்த முதலாளித்துவ அரசியல்வாதிகளாகவே செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றனர்.
இன்றைய
சூழலில் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக்காகப் போராடுவதை ஏகாதிபத்தியவாதிகள்
பயன்படுத்திக்கொண்டு நாட்டை பிரித்துவிடுவார்கள் என்று ஆளும் வர்க்கங்களின்
கருத்தையே சிபிஎம் தலைவர்கள்
வாந்தியெடுக்கிறார்கள். தேசிய சுயநிர்ணய உரிமை என்பது இந்தியாவிலுள்ள தேசிய இனங்களின் வளர்ச்சிக்கு தடையாகவே
அமையும் என்கிறார்கள். மேலும் இந்தியாவில் தேசிய இனங்கள் பல்வேறுவிதமான வளர்ச்சியை அடைந்துள்ளதாக ஆளும் வர்க்க அரசியல்வாதிகளைப் போலவே புளுகுகிறார்கள். தேசங்களுக்கு சுய நிர்ணய உரிமை வழங்கினால்
இதுவரை தேசங்கள் பெற்ற வளர்ச்சியை இழக்கவேண்டி வரும் என்கிறார்கள். இதுவரை
தேசங்கள் வளரவில்லை என்ற உண்மையை மூடிமறைத்துவிட்டு தேசங்களின் உரிமைகளை
பறித்துவிட்டு நடந்துகொண்டிருக்கும் ஒற்றை ஆட்சியின் மூலமாக இந்தியாவில் வாழும் மக்கள்
வளருவார்கள் என்று சிபிஎம் தலைவர்கள் கூறி ஆண்டுகள் பல கடந்த பின்பு இன்றைய நிலை
என்ன?
வேலையின்மை
வளர்ந்திருக்கிறது, பட்டினிச்சாவு
அதிகரித்திருக்கிறது, விவசாயிகள்
தற்கொலை கூடிக்கொண்டே போகிறது. இதுதான் இவர்கள் சொன்ன வளர்ச்சியா? இந்தக் கொடுமைகள் அதிகரித்ததற்கு இந்திய ஒற்றை ஆட்சிதானே
காரணம். உண்மையிலேயே சிபிஎம் தலைவர்களுக்கு மனச்சாட்சி என்று ஒன்று இருந்தால்
இவர்களின் இந்தத் தவறுகளுக்கு சுயவிமர்சனம் செய்துகொள்ள வேண்டும். பிரிட்டீஷார்
இந்தியாவைவிட்டு வெளியேறிய பின்பு உருவான அரசை ஒரு நிலப்பிரபுத்துவ முதலாளித்து அரசு என்று இவர்கள் வரையறுக்கிறார்கள்.இந்த அரசால் இங்குள்ள
மொழிவழி தேசிய இனங்களுக்கு (இதனை மொழிவாரிக் குழுக்கள் என்று சிபிஎம் தலைவர்கள்
சொல்கிறார்கள்) இடையில் சமத்துவத்தையும் ஒற்றுமையையும் எவ்வாறு உருவாக்க முடியும்
என்றும் தேசங்கள் பிரிந்துபோவதை எவ்வாறு தடுக்கமுடியும் என்று கேள்வி
எழுப்புகிறார்கள்.
ஆனாலும்
இதற்கான பதிலை இவர்கள் பலகாலம் ஆகியும் இன்றளவும் தீர்வுகாண முடியவில்லை. ஆனால்
சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பே ரஷ்ய கம்யூனிஸ்டுகள் தேசிய இனச்சிக்கலுக்கு
திர்வுகண்டு நடைமுறையில் சாதித்துகாட்டிய பிறகும் சிபிஎம் தலைவர்களுக்கு புத்திவரவில்லை
என்றால் அதற்கு என்ன காரணம்? உழைக்கும் மக்களே சிந்தியுங்கள்.
சிபிஎம் தலைவர்கள் நிலவுகின்ற ஒற்றை ஆட்சிமுறைக்குள்ளேயே தேசிய இனச்சிக்கல்களையும்
மற்றும் பல்வேறு பிரச்சனைகளையும் தீர்த்துக்கொள்ள முடியும் என்று நெடுங்காலமாக கனவுகண்டு
கொண்டிருக்கின்றனர். இவர்களது கனவு இன்றும் கனவாகவே இருக்கிறது.நிலவுகின்ற புதிய காலனிய இந்திய ஒற்றை
ஆட்சிமுறையில் எவ்வளவு காலம் ஆனாலும் இங்குள்ள சாதிப்பிரச்சனை, மதப்பிரச்சனை, தேசிய இனப்பிரச்சனை, மொழிப்பிரச்சனை, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் பிரச்சனை, மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் பிரச்சனை, பெண்களின் பிரச்சனை, வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற எந்தப் பிரச்சனைகளையும் இந்திய ஒற்றை
ஆட்சிமுறையிலான அரசால் தீர்க்க முடியாது. இதற்கு மாறாக தேசிய சுய நிர்ணய உரிமையின்
அடிப்படையில் சுதந்திர தேசிய அரசுகளை நாம் உருவாக்க வேண்டும்.
சுதந்திரமான
தேசிய அரசுகளின் சுய விருப்பத்தின் அடிப்படையில் தேசங்கள் ஒன்றிணைக்கப்பட்டு
இந்திய கூட்டாட்சி அரசை உருவாக்க வேண்டும். இந்த அரசுகள் ஜனநாயகத்தையும்
சமத்துவத்தையும் வளர்க்கும் இலட்சியத்தை கொண்டிருக்க வேண்டும். அதற்காக
விடாப்பிடியாகபாடுபட வேண்டும். இதைத்
தவிர வேறு வழியில்லை.
இந்தியாவிலுள்ள
தேசங்களை உள்நாட்டு வெளிநாட்டு கார்ப்பரேட்டுகள் சுரண்டும் நோக்கத்திலிருந்தே அடிமைப்படுத்தி
ஒடுக்குகிறார்கள். அவர்களுக்கு இந்தியாவை மத்தியிலும் மாநிலத்திலும் ஆளும் அரசியல்வாதிகள்
துணைபோகிறார்கள். ஆகவே தேசங்களின் மீதான ஒடுக்குமுறைக்கு முடிவுகட்ட உள்நாட்டு
வெளிநாட்டு கார்ப்பரேட் முதலாளிகளின் சுரண்டலை ஒழித்துக்கட்டவும் அவர்களுக்கு துணைபோகும்
ஆட்சியாளர்களை புறக்கணித்து ஒவ்வொரு தேசங்களும் சுதந்திரமான தேசிய அரசுகளை
உருவாக்க வேண்டும்.
இந்த
அரசுகள் இந்திய கூட்டாட்சியை ஏற்றுக்கொண்ட சுதந்திரமான தேசிய அரசுகளாகவே
இருக்கவேண்டும். தேசிய சுயநிர்ணயத்தின் அடிப்படையிலேயே இந்திய கூட்டாட்சி செயல்பட
வேண்டும். இந்தியாவில் தற்போதுள்ள ஒற்றை ஆட்சிமுறை ஒழிக்கப்பட வேண்டும். மேலும்
இந்த தேசிய அரசுகள் கார்ப்பரேட்டுகளின்
சுரண்டலை முற்றிலுமாக ஒழித்துக்கட்ட வேண்டும்.
கார்ப்பரேட்டுகளின்
சுரண்டலை ஒழிக்காமல் சுதந்திர தேசிய அரசுகளால் அதன் சுதந்திரத்தை நீண்டகாலம்
பாதுகாக்க முடியாது. இங்கே சிலர் தமிழர்களாகிய நாம் ஆங்கிலம் கற்றுக்கொள்வதில்
என்ன தவறு இருக்கிறது என்று அப்பாவித்தனமாக கேள்வி எழுப்புகிறார்கள். தமிழ் மக்களில்
சிலருக்கு ஆங்கிலம் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இருக்கலாம், அவர்கள் ஆங்கிலத்தை கற்றுக்கொள்வதை நாம் தடுக்கவில்லை.
அவர்களுக்கு ஆங்கிலத்தை கற்றுக்கொள்வதற்கு உரிமை உண்டு என்பதை நாங்கள்
ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் தமிழர்கள் அனைவரும் ஆங்கிலம் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியமா? தேவையில்லை என்பதுதான் எமது கருத்தாகும். ஆங்கிலத்தை கற்றுக்கொண்டால்
தமிழர்களுக்கு வேலை கிடைக்கும் என்பது கடைந்தெடுத்த பொய்யாகும். ஆங்கில கல்வி
பெற்ற பல ஆயிரக்கணக்கான தமிழர்களுக்கு வேலை இல்லை என்பதைத்தான் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கிறது. வேலையின்மைக்கு இந்த முதலாளித்துவ உற்பத்திமுறைதான் காரணம் ஆகும். முதலாளிகள் இலாப
நோக்கத்தில் செயல்படுவதால் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை எந்தளவுக்கு அதிகரிக்கிறதோ
அந்தளவுக்கு அவர்கள் கூலியை குறைத்துகொடுத்து சுரண்டி இலாபத்தை பெருக்கமுடியும்
என்பதால் இங்கு அனைவருக்கும் வேலை கிடைக்கவில்லை.
இந்த
முதலாளித்துவ உற்பத்திமுறையை ஒழிக்காமல் நம் அனைவருக்கும் வேலை கிடைக்காது என்ற
உண்மையை மூடிமறைத்துவிட்டு ஆங்கிலம் படித்தால் வேலை கிடைக்கும் என்று திராவிட
அரசியல்வாதிகளும், இந்தி படித்தால்
வேலை கிடைக்கும் என்று காங்கிரஸ் மற்றும் பாஜக அரசியல்வாதிகளும் பிரச்சாரம் செய்து நம்மை
ஏமாற்றுகிறார்கள். எனினும் இந்த அயோக்கியர்கள் எங்கும் ஆங்கிலம், எதிலும் ஆங்கிலம் என்ற நிலையை உருவாக்கி ஆங்கிலம் படிக்க
வேண்டியதை கட்டாயமாக
செயற்கையாக மாற்றியுள்ளனர். அதேபோலவே எங்கும் இந்தி எதிலும் இந்தி
என்ற நிலையை உருவாக்கி இந்தியை படித்தே தீரவேண்டும் என்ற நிலையை
உருவாக்கியுள்ளார்கள். இதன் மூலம் இவர்கள் மக்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக்
கொடுப்பதை தொடர்ந்து மறுத்து மக்களை ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார்கள். மேலும்
இவர்கள் பணமில்லாதவர்களுக்கு கல்வியே இல்லை என்ற நிலையை உருவாக்கிவிட்டு ஆங்கிலம்
படித்தால் வேலை, இந்தி படித்தால்
வேலை என்று நாடகமாடுகிறார்கள். இந்த உண்மையைப் புரிந்துகொள்ளாமல் நாம் ஆங்கிலத்தை படிக்கலாமே என்று அப்பாவித்தனமாக எண்ணுபவர்கள் உண்மையைப்
புரிந்துகொள்ள வேண்டும். தமிழர்கள் அனைவரும் ஆங்கிலம் கற்றுக்கொள்ள வேண்டும்
என்றும் இந்தியை கற்றுக்கொள்ள வேண்டும் என்பது அயோக்கியத்தனம் மட்டுமல்ல
அடக்குமுறையும் ஆகும்.
மொழிப்
பிரச்சனையில் மக்களுக்கு எது தேவை என்பதை விஞ்ஞான ஆராய்ச்சியாளர்கள் தெளிவாக
சொல்லியுள்ளார்கள். ஒவ்வொரு மனிதனும் தனது தாய்மொழியின் மூலமாகவே கல்வி கற்கவும், சிந்திக்கவும் தனது அறிவை வளர்த்துக்கொண்டு சமூக
வளர்ச்சிக்கு பயனுள்ள பணிகளை ஆற்றமுடியும் என்றும் பணியாற்ற வேண்டும் என்றும்
விஞ்ஞானம் சொல்கிறது. ஆகவே மக்களுக்குத் தேவை தாய்மொழிதான். மாறாக பொதுமொழி என்பது
மக்களின் தேவையில்லை, அதாவது நம்மை
சுரண்டி கொள்கையடிக்கும் முதலாளி கூட்டத்துக்குத்தான் பொதுமொழி அல்லது இருமொழி
மற்றும் மும்மொழி தேவையாகும். ஆகவே சுரண்டலுக்கு எதிரான போராட்டத்தில் நாம்
தாய்மொழிக் கொள்கையை அதாவது ஒருமொழிக் கொள்கையை உயர்த்திப்பிடிக்க வேண்டும்.
பொதுமொழி,
இருமொழி, மும்மொழி என்று
பேசும் கயவர் கூட்டம் அனைத்தும் இந்தியாவிலுள்ள உழைக்கும் மக்களுக்கு எதிரான
முதலாளித்துவ சுரண்டல் கூட்டத்தின் எடுபிடிகளே என்பதை பல மொழி பேசும் உழைக்கும் மக்கள்
புரிந்துகொள்ள வேண்டும்.
எங்களுக்கு
இந்தி மட்டுமல்ல அந்நிய மொழியான ஆங்கிலமும் வேண்டாம். எங்களுக்கு தாய்மொழி தமிழ்
மட்டுமே போதும். எங்களில் யாருக்கெல்லாம் (அவர்கள் சிறு எண்ணிக்கையிலானவர்களே)
வேற்று மொழி தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறதோ அவர்கள் மட்டும் தனிப்பட்ட
முறையில் வேறு மொழியை கற்றுக்கொள்ளலாம். இதற்கு மாறாக தமிழர்கள் அனைவரும் ஆங்கிலம்
கற்றுக்கொள்ள வேண்டும் என்று
சொல்பவர்கள் தமிழ்இனத் துரோகிகளே. தாய்மொழி தமிழை வளர்ப்பவரே எங்களது நண்பர்.
அனைத்து மொழியிலிருக்கும் விஞ்ஞானக் கருத்துக்களையும் தமிழ்மொழியில்
மொழிபெயர்த்துக் கொடுப்பவரே எங்களது நண்பர்கள் ஆவார்கள். தமிழ்மொழியே கல்வி பயிற்றுமொழியாகவும், ஆராய்சிக்கான மொழியாகவும் பேச்சுமொழியாகவும் ஆட்சிமொழியாகவும்
அமைவதற்கு பாடுபடுவதே எமது இலட்சியமாகும்.
சுயநிர்ணய
உரிமையுடன் கூடிய சுதந்திர தமிழ் தேசத்தை உருவாக்கி எங்களது தமிழ் தேசத்தில்
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற நிலையை உருவாக்க பாடுபடுவதே எமது இலட்சியமாகும்.
தற்பொழுது நடைமுறையில் மூன்று விதமான பல்தேசிய அரசுகள் நிலவுகின்றன.
1). கிழக்கு அய்ரோப்பிய நாடுகளில் உள்ள பல்தேசிய அரசுகளில் ஒரு ஒடுக்கும் தேசிய
இனம் என்றும் பல ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் என்றும் உள்ளன. இங்கு ஒடுக்கும்
தேசிய இனத்திற்கு எதிராக ஒடுக்கபடும் தேசிய இனங்கள் போராடும் அதே வேளையில்
ஒடுக்கும் மற்றும் ஒடுக்கபடும் தேசிய இனங்களில் உள்ள உழைக்கும் மக்களிடையே ஒற்றுமையை
ஏற்படுத்தும் முயற்சியும் அவசியம் என்று மார்க்சியம் கூறுகிறது.
2). பல்தேசிய அரசு அமைபுக்குள் உள்ள தேசங்களுக்கு பிரிந்து போகும் சுய நிர்ணய
உரிமைகள் வழங்கப்பட்டு அனைத்து தேசிய இனங்களும் சுய விருப்பத்தோடு கூட்டாக
ஒன்றிணைந்து கூட்டரசின் கீழ் வாழ்ந்து வருகிறார்கள். இத்தகை நாட்டிற்குள் தேசிய இனப்பிரச்சினைதீர்க்கப்பட்டுள்ளது.
3). இந்தியா போன்ற நாடுகளில் முதலாளித்துவம் உருவாகி வளர்ந்து முதலாளிதுவ தேசிய
அரசுகள் உருவாவதற்கு முன்பே பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகள் அனைத்து தேசிய
இனங்களையும் அடிமைபடுத்தி ஒரு பல்தேசிய அரசை இங்கு உருவாக்கினார்கள். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளின்
தலைமையின் கீழ் அமைந்த பல்தேசிய அரசானது இங்குள்ள அனைத்து தேசிய இனங்களையும்
அடக்கி ஒடுக்கி சுரண்டியது. இந்த அரசுக்கு இந்தியாவில் உள்ள பெரும் முதலாளிகள் இவர்களுடன் கூட்டு சேர்ந்து
ஆதரவளித்தனர். இந்த பெரும் முதலாளிகளின் அரசியல் சக்தியாக காங்கிரசும் ஆர்.எஸ்.எஸ்
கும்பலும் இருந்தன. பிரிட்டிஷார் இந்தியாவை விட்டு வெளியேறும் பொழுது அரசியல் அதிகாரத்தை காங்கிரஸ் கட்சியிடம்
ஒப்படைத்தன் மூலம் இந்திய பெரும் முதலாளிகள் அரசியல் அதிகாரதிற்கு வந்தனர். இந்த இந்திய
பெரும்முதலாளிகளும் நாட்டை விட்டு
வெளியேறிய பிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளும் பிற அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய
வாதிகளுடன் கூட்டு சேர்ந்து காங்கிரஸ் மற்றும் ஆர்.எஸ்.எஸ் கும்பலின் துணையோடு இந்தியா முழுவதும் உள்ள தேசிய இனங்களை
அடக்கி ஒடுக்கி சுரண்டினார்கள். இன்று பி.ஜே.பி கட்சி அதிகாரத்தில் உள்ளது அதே
சுரண்டுகிற வேலையை இவர்களும் செய்கிறார்கள். இந்தியாவில் கிழக்கு அய்ரோப்பியா போன்று ஒடுக்கும் தேசிய இனம் என்றும் ஒடுக்கப்படும் தேசிய இனம் என்றும்
இல்லை. அனைத்து தேசிய இனங்களையும் ஒடுக்கும் எதிரிகளாக தற்பொழுது உள்ள உள்நாட்டு வெளிநாட்டு கார்ப்ரேட் முதலாளிகளும் அவர்களை
ஆதரிக்கும் அரசியல் கட்சி
தலைவர்களே உள்ளனர். மேலும் இவர்களை பாதுகாக்கும் இந்திய அரசே தேசிய இனங்களின்
எதிரிகள் ஆவார்கள். இந்த எதிரிகளை எதிரித்து அனைத்து ஒடுக்கபட்ட தேசிய இனங்களும்
ஒன்றுபட்டு போராடி முறியடிக்காமல்
இந்த தேசிய இனங்களுக்கு ஒடுக்குமுறை மற்றும் சுரண்டலிலிருந்து விடுதலை கிடைக்காது.
4) . தேரிய இனங்களின் மீதான ஒடுக்குமுறை சுரண்டலிலிருந்து விடுதலை பெற ஒரு
குறிப்பிட்ட தேசிய இன மக்களை மட்டும் உதாரணமாக தமிழ் தேசிய இன மக்களை மட்டும்
ஒன்று திரட்டுவதற்கான கட்சியை மட்டும்
தங்களால் கட்டப்பட முடியும் என்று கருதி தமிழ் தேச மக்களை மட்டும் திரட்டி தமிழ்
தேச மக்களின் மீது நடத்தப்படும் ஒடுக்குமுறை மற்றும் சுரண்டலை எதிர்த்து போராட
முடியும். அதுதான் எங்களால்
சாத்தியப்படக் கூடியதாக இருக்கிறது என்று கருத்துபவர்களை நாங்கள் தவறானவர்கள்
என்று சொல்லவில்லை. ஆனால் இந்தியா முழுவதும் கட்சி கட்டி அனைத்து தேசிய இனங்களையும்
இந்த ஒடுக்குமுறையாளர்களிலிடமிருந்து
விடிவிக்க முடியாது என்று கூறுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை. ஏனெனில் அத்தகைய முயற்சியில்
இந்தியா முழுவதும் உள்ள தேசிய இனங்களை ஒடுக்குமுறையிலிருந்து விடிவிப்பதற்காக
பாடுபடுபவர்களை தடுபதற்கும் குறை சொல்வதற்கும் இவர்களுக்கு தகுதியில்லை. தங்களது கடமையை குறுக்கிக் கொண்டவர்கள் விரிவான கடமை ஆற்றுபவர்களை
தடுபதற்கு என்ன காரணம்? இவர்களது
தேசங்களையும் விடுவிப்பதற்கான முயற்சியில் ஈடுபடும் இந்திய புரட்சியாளர்கள்
இவர்களுக்கு எந்த வகையில் எதிரிகளாக இருக்கிறார்கள்?. இவர்களது தேசத்தையும் விடுவிப்பதற்காகதானே இந்தியப் புரட்சியாளர்கள்
பாடுபடுவார்கள். அப்படி இருக்கும் பொழுது
குறுகிய தேசிய இனவாதிகள் இந்தியாவில் உள்ள அனைத்து தேசிய இனங்களையும் விடுவிக்க
பாடுபடுபவர்களை எதிர்க்க வேண்டிய அவசியம் ஏன்? ஆகவே தேசிய இன விடுதலை என்பது தேசங்கள் பிரிந்து போவது ஒன்றேதான் என்பது முதலாளித்துவ தேசியவாதம் என்றே
நாங்கள் கருதுகின்றோம்.
5). தேசிய இன விடுதலை என்பது தேசிய இனங்களின் மீதான ஒடுக்குமுறை மற்றும் சுரண்டலை எதிர்த்து போராடி
முறியடிப்பதுதான் என்பதே எங்களின் நிலைப்பாடு.
6). இந்த ஒடுக்குமுறையையும் சுரண்டலையையும் எதிர்த்து போராட முன் வருபவர்கள்
அனைவருமே தேசிய இன விடுதலை போராட்டத்தில் நண்பர்களே. இத்தகைய நண்பர்களை
ஒருங்கிணைத்து ஒடுக்குமுறையாளர்களை எதிர்த்து போராடாமல் தேசிய இனங்களுக்கு ஒடுக்குமுறையிலிருந்து விடுதலை கிடைக்காது என்பதே எங்களது நிலைபாடாகும்.
7). தமிழ் தேசத்துக்குள் மட்டும் கட்சியை கட்டுவதும் தமிழ்தேச மக்களை மட்டும்
ஒருங்கிணைத்து போராடுவதும் உங்களது கொள்கையாக இருப்பது உங்களது விருப்பம், உங்களது விருப்பப்படி செயல்படுவதை யாரும் தடுக்க முடியாது
நாங்களும் தடுக்கவில்லை.
8). தமிழ் தேசத்தை ஒடுக்கும் ஒடுக்குமுறையாளர்களே இந்தியா முழுவதும் உள்ள அனைந்து தேசிய இனங்களையும் ஒடுக்கும் பொதுவான
எதிரிகளாக இருகிறார்கள். இந்த பொதுவான எதிரியை எதிர்த்து போராடுவதை ஒடுக்கப்படும்
அனைத்து தேசிய இனங்களும் ஆதரிக்க வேண்டும். அதற்காக அனைத்து ஒடுக்கப்படும் தேசங்களும் ஒன்றுபடுவது மிகமிக அவசியம் என்பதே
எங்களது நிலைப்பாடு. அந்த ஒற்றுமையானது
அமைப்பு ரீதியாகவும் இருக்க வேண்டும் என்பதே சர்வதேசியவாதிகளான மார்க்சிய
ஆசான்களது போதனையாகும். இந்த போதனையை மறுப்பவர்கள் மார்க்சியவாதியாக இருக்க
முடியாது.
9). கம்யூனிட்டுகள் சர்வதேசியவாதிகளாக இருந்தாலும் அவர்களது போராட்டமானது தேசிய
போராட்டங்களிலிருந்தே துவங்க வேண்டும் என்று மார்க்சிய ஆசான்கள் கூறியுள்ளார்கள்.
அதன் பொருள் குறிப்பிட்ட மக்களை அடக்கி ஒடுக்கி தனது அரசின் மூலம் ஆட்சி
செய்பவர்களை எதிர்த்து அந்த அரசை தகர்பதற்கான போராட்டத்தின் மூலமே துவங்க வேண்டும்
என்பது பொருளாகும். அதன்படி பார்த்தால் தமிழக பாட்டாளி வர்க்கம் இந்திய அரசை
தகர்பதற்கான போராட்டங்களை நடத்த வேண்டும். அதற்கு பிற தேசிய இனங்களை சேர்ந்த
பாட்டாளி வர்க்கங்களையும் ஒரு அமைப்பின் கீழ் ஒன்றுபடுத்துவது மிகமிக அவசியமே
என்பதுதான் மார்க்சிய ஆசான்களின் வழிகாட்டல் ஆகும். இதனை தவறாக புரிந்துக் கொண்டு இந்தியாவில்
உள்ள தேசிய இனங்களை ஆட்டிபடைக்கும் அரசை தகர்க்க வேண்டும் என்பதை புறக்கணித்து
விட்டு தேசிய இனங்களின் விடுதலை போராட்டம் என்று பேசுவது திருத்தல்வாதமே ஆகும்.
10). தேசங்களின் போராட்டம் எதை எதிர்த்து? தேசங்களை ஒடுக்கும் சுரண்டலாளர்களையும் அவர்களின் அரசையும் எதிர்த்த போராட்டமே
ஆகும். ஆனால் இவர்கள் தமிழ் தேச இனமானது அதனை ஒடுக்கும் அரசை எதிர்த்து போராட
வேண்டியதை பற்றி பேசாமல் தமிழ் தேச பிரிவினை பற்றி மட்டும் பேசுவதனால் எந்த பயனும்
இல்லை. தமிழ் தேச மக்களின் மீதான சுரண்டலை எதிர்த்து போராட்டாமல் தமிழ்தேச மக்களுக்கு
விடுதலை இல்லை.
மார்க்சிய ஆசான்களின் போதனைகளிலிருந்து நாம் தெரிந்துக் கொள்ள வேண்டிய
விசயங்கள் என்ன?
1). கம்யூனிஸ்ட் கட்சி என்பது பாட்டளி வர்க்கதின் புரட்சிகரமான உணர்வு பூர்வமான முன்னணி படை. அதன் அமைப்பு தலைவன். அதாவது பாட்டாளி
வர்க்கம் மற்றும் உழைக்கும் மக்களுக்கு நடைமுறையில் வழிகாட்ட கூடிய தத்துவ
தலைமைதான் கம்யூனிஸ்ட் கட்சி. அந்த கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் முதலில்
கையில் ஏந்த வேண்டிய ஆயுதம் மார்க்சிய தத்துவ ஆயுதம். இந்த தத்துவ ஆயுதத்தை கையில்
ஏந்த மறுத்து விட்டு தான் தோன்றிதனமாக சிந்தித்து செயல்படுவோரை கொண்ட ஸ்தாபனம் ஒரு
கம்யூனிஸ்ட் கட்சியாக முடியாது.
2). கம்யூனிஸ்ட் கட்சியானது பிற கட்சிகளை போல் இல்லாமல் தனித்துவம் பெற்ற கட்சியாக
இருக்க வேண்டும். பாட்டாளி வர்க்க நலன்களை உயர்த்தி பிடிக்கின்ற பாட்டாளி வர்க்க
உணர்வு பூர்வமான கட்சியாக இருக்க வேண்டும்.
3). கம்யூனிஸ்ட் கட்சியானது பாட்டாளி வர்க்கம் உட்பட ஒடுக்கப்பட்ட அனைத்து
வர்க்கங்களையும் அனைத்து தேசிய இனங்களையும் ஒரு ஸ்தாபன தலைமையின் கீழ் ஒரே
ஸ்தாபனமாக ஒன்று திரட்டப்பட்டு இருக்க வேண்டும்.
4) பாட்டாளி வர்க்க கட்சியானது தொழிலாற் சங்கம், விவசாய சங்கம், மாணவர் சங்கம், அறிவு ஜீவிகளுக்கான சங்கம் போன்ற பல சங்கங்களை உருவாக்கி
அவற்றிக்கு தலைமை கொடுத்து வழிகாட்ட வேண்டும். இத்தகை வர்க்க
ஸ்தாபனங்களுக்கெல்லாம் மிக உயர்வான ஸ்தாபனமாக கம்யூனிஸ்ட் கட்சி விளங்க வேண்டும்.
5). இந்த வர்க்க ஸ்தாபனங்களில் செயல்படும் உறுப்பினர்களுக்கெல்லாம் விஞ்ஞான
ரீதியான உலக கண்ணோட்டமான மார்க்சியத்தை போதித்து அவர்களிடம் சோசலிச சிந்தனை
முறையுடன் சோசலிச உணர்வையும், வளர்க்க வேண்டும்.
6). சமூகத்தில் உள்ள உழைக்கும் மக்களின் நோக்கங்கள் லட்சியங்கள் கடைமைகளை பற்றி
எடுத்து விளக்கி அவர்கள் பொறுப்பாக செயல்படுவதற்கு கம்யூனிஸ்ட் கட்சி வழிகாட்டி
செயல்பட வேண்டும்.
7). இத்தகைய கம்யூனிஸ்ட் கட்சி இல்லாமல் தொழிலாளி வர்க்கம் அதிகாரத்தை வென்றெடுபதோ
சமூதாயத்தை அடிப்படையாக மாற்றி அமைப்பதோ முடியாது.
8). முதலாளி வர்க்கதிற்கும் பாட்டாளி வர்க்கதிற்கும் இடையில் ஒத்துழைப்பு மற்றும்
சமாதான முறை மாற்றம், என்பது
மார்க்சியத்திற்கு எதிரான சீர்திருத்த வாதமே. அத்தகைய சீர்திருத்தவாத்தை எதிர்த்து
கம்யூனிஸ்டுகள் போராட வேண்டும்.
9). மார்க்சியத்தின் புரட்சிகர தன்மையை திரித்து கூறும் திருத்தல்வாத போலி
கம்யூனிஸ்டுகளை எதிர்த்தும் போராட வேண்டும்.
10). பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம், சோசலிசப் புரட்சிகரத் தத்துவதிற்கு மையாமாக இருக்கிறது. சோசலிச புரட்சியின்
சாதனைகளை அழிபதற்கு முயற்சி செய்யும் முதலாளித்துவ சக்திகளை முறியடிப்பதற்கு
பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் மிக மிக அவசியமாக இருக்கிறது. இந்த வகையில் புரட்சியின் முக்கிய பிரச்சனையாக அதிகாரப் பிரச்சினை
இருக்கிறது. அதாவது பாட்டாளி வர்க்க சர்வாதிகராம் இருக்கிறது.
சில கேள்விகள் தமிழகத்தில் தேசிய இன பிரச்சினையை முன்னெடுப்போர் முன்
1). இந்தியாவின் ஆட்சி அதிகாரம் யாரின் கையில் உள்ளது?
2). எந்த வர்க்கதின் கையிலிருந்து எந்த வர்க்கத்தின் கைக்கு ஆட்சியைமாற்றுவது?
3). தமிழக புரட்சி என்றால் என்ன?
4). இந்திய அரசை எதிர்த்து போராடாமல் தமிழக விடுதலை அதாவது பிரிவினை எப்படி?
5). இந்திய தேசிய இனங்களின் மீதான ஒடுக்குமுறைக்கு இந்திய ஒற்றுமை என்ற கொள்கை
காரணமா?
இந்திய ஆளும் வர்க்கத்தின் சுரண்டல் காரணமா?
6). தமிழ் தேச விடுதலையில் தமிழ் கார்ப்ரேட் முதலாளிகளின் இடம் எதிரியா? நண்பனா?
7). தமிழ் தேசத்தின் மீதான ஆதிக்கம் யாரால்?
அ).
பன்னாட்டு ஆதிக்கம், ஆ). இந்திய
வல்லாதிக்கம், இ). நிலப்பிரத்துவ ஆதிக்கம், ஈ). சாதி
ஆதிக்கம்(பார்ப்பனர்). இதனை சுட்டுக்காட்டியுள்ள நீங்கள் இந்த
ஒடுக்குமுறையாளர்களையும் சுரண்டலாளர்களையும்
எதிர்த்து போராடி முறியடிப்பது பற்றி பேசவில்லையே ஏன்?
8). தேசிய இன விடுதலை போராட்டங்களை இந்தியாவிலிருந்து பிரிந்து போவதை முரணின்றி
ஆதரிக்கிறோம் (பக்கம் 66 தமிழ் தேசியமும் மார்க்சியமும்
தேன்மொழி) என்பதன் அடிப்படையில் பிரிவினையை கூறும் உங்களை பிரிவினைவாதிகள் என்று ஏன் கூறக்கூடாது?
9).ஒன்றுபட்ட இந்தியாவிற்குள்ளே தமிழ் தேச சுதந்திரத்தை அடைய முடியாதா ஏன்?
10). ஆளும் வர்க்கம், “இல்லாத இந்திய
தேசத்தை உருவாக்க முயற்சிக்கிறது” அதேபோல் திராவிட தேசிவாதிகள், “இல்லாத திராவிட தேசிய இனம்” ஒன்றை உருவாக்க முயலுகிறார்கள்
அதன் நோக்கம் என்ன?
11). இவர்கள் சொல்லும் இந்திய தேசிய இன மக்கள் வெவ்வேறு தாய் மொழியை கொண்டுள்ளனர், வெவ்வேறு காலாச்சார வரலாற்றை கொண்டுள்ளார்கள் இவர்கள்
எப்படி ஒரே தேசிய இனமாக மாற முடியும்?
12). இந்த இந்தி மொழி பேசுகின்ற மக்கள் வறுமையின் காரணமாக இந்தியாவின் பல பகுதிக்கு குறைந்த கூலிக்கு வேலைக்கு
செல்லுகின்ற நிலைமையில் இவர்களை ஒடுக்கும் தேசிய இனம் என்று சொல்ல முடியுமா?
13) இந்த மக்கள் தங்களின் வாழ்வுக்காக பிற தேசங்களை சார்ந்திருக்கும் பொழுது
இவர்கள் பிற தேச மக்களின் மீது பகைதன்மை கொள்வார்களா?
14). அதானி, அம்பானி போன்றே சிவ் நாடார், டி.வி.எஸ் போன்ற கார்ப்ரேட்கள் தமிழ் தேசிய இனத்தைச்
சேர்ந்த கார்ப்ரேட் முதலாளிகள் மாறன் குடும்பம், ஜகத் ரட்சகன் போன்ற கார்ப்ப்ரேட் முதலாளிகள், இந்தியா முழுவதிலும் சுரண்டலில் ஈடுபடுகின்றார்கள். இவர்கள் தமிழ் தேச இனத்தின்
எதிரியா?
நண்பனா?
இறுதியாக நமது சிந்தனை விவாதம் மற்றும் நடைமுறைக்கான வழிமுறை குறித்து.
1. நம் சமூகத்தில் சாதிப்பிரச்சனை என்றாலும் தேசிய இனப்பிரச்சனை என்றாலும் வேறு
எந்தப்பிரச்சனை என்றால் அதனை தீர்ப்பதற்கு ஒரு பொருத்தமான அரசின் தேவையை நாம் உணர
வேண்டும். அதாவது மக்கள் சந்திக்கும்
பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் அதனை ஒரு பொருத்தமான அரசின் மூலமேதான் தீர்க்க முடியும். ஆகவே பிரச்சனைகளை
தீர்ப்பதற்கான அரசு எப்படி இருக்க வேண்டும் என்பதை நாம் கண்டறிய வேண்டிதுதான் நமது முதன்மையான கடமையாகும்.
2. நமக்கான அரசில் யார் யாரெல்லாம் பங்குகொள்ள வேண்டும் என்பதை நாம் தீர்மானிக்க
வேண்டும்.
3. அரசின் கொள்கை முடிவை உருவாக்குவதில் பெரும்பான்மையான மக்களுக்கு பங்கு இருக்க
வேண்டும்.
4. அரசின் கொள்கை முடிவை செயல்படுத்தும் அதிகாரிகளும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
5. ஆட்சியில் உள்ளவர்கள் தவறு செய்தால் அவர்களை உடனடியாக தண்டிக்கும் அதிகாரம்
மக்களுக்கு வேண்டும்.
6. பெருமுதலாளிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்து அரசின் கட்டுப்பாட்டிற்குள்
கொண்டுவர வேண்டும். இந்த அரசு அதிகாரிகள் மக்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர
வேண்டும்.
7. சாதி தீண்டாமை கொடுமைகள் செய்யும் நபர்களை மக்கள் நீதிமன்றத்தில் விசாரித்து
மக்களின் ஆதரவோடு தண்டிக்கப்பட வேண்டும்.
8. அரசின் கொள்கை முடிவெடுப்பதிலும் அதனை நடைமுறைப் படுத்துதலிலும்
பெரும்பான்மையான மக்களை நேரடியாக ஈடுபடுத்த வேண்டும்.
9. அரசு பற்றிய மார்க்சிய ஆசான்களது போதனைகளை அனைத்து மக்களுக்கும் புரிய வைப்பதற்கான கல்வி இயக்கத்தை நடத்த
வேண்டும்.
10. மார்க்சியம் மட்டுமே உழைக்கும் மக்களுக்கான தத்துவம். மார்க்சியமல்லாத பிற
தத்துவங்கள் அனைத்தும் ஏதோ ஒரு வகையில் மக்களுக்கு எதிராக துரோகம் செய்யும்
தத்துவமே என்பதை அம்பலப்படுத்துவதற்கான
கல்வி இயக்கத்தை நாம் நடத்திட வேண்டும்.
11. கம்யூன் வகைப்பட்ட அரசைப் பற்றி கம்யூனிஸ்டுகள் விரிவாகவும் ஆழமாகவும்
புரிந்துகொண்டு மக்களிடம் பரப்ப வேண்டும்.
12. இந்த பாராளுமன்ற முறையிலான அரசு நடைமுறையில் எப்படியெல்லாம் மக்களுக்கு
துரோகம் செய்து உழைக்கும் மக்களை ஒடுக்குகிறது என்ற உண்மையை உதாரணமாக விவசாயிகளின்
போராட்டத்தையும் துப்புறவு தொழிலாளர்களின் போராட்டத்தையும் எப்படி நசுக்கியது
என்பதை மக்களுக்கு எடுத்துச் சொல்லி இந்த மக்கள் விரோத அரசமைப்பையே தகர்த்திட
வேண்டியதன் அவசியத்தை மக்களிடம் பிரச்சாரம் செய்து விழிப்புணர்வு ஊட்ட வேண்டும்.
13. அரசுத் தலைவர்களின் அதிகாரம் என்பது மக்களுக்கு சேவைசெய்வதற்கான கடமையாக
இருக்க வேண்டும். அதாவது மக்களின் மீது அதிகாரத்தை செலுத்துவதாக இல்லாமல்
மக்களுக்காகப் பாடுபடுவதற்கான
பொறுப்பாக இருக்க வேண்டும். மக்களின் எதிரிகளை மட்டுமே அடக்குவதற்கு அதிகாரத்தை
அல்லது வன்முறையைப் பயன்படுத்த
வேண்டும்,
அதுவும் மக்களின் ஆதரவோடுதான் அதனைச் செய்ய வேண்டும்.
14. அரசு என்றால் போலீஸ், இராணுவம், வழக்காடு மன்றம், சிறைச்சாலை, நிர்வாகத்துறை மக்களின் நலனுக்கான
மருத்துவத்துறை போன்ற நிறுவனங்களாகும். அரசாங்கம் என்றால், எம்.எல்.ஏ, எம்.பி, மந்திரிகள் போன்றவர்களைக்கொண்ட அமைப்பாகும். இங்குள்ள அரசைப் பற்றியும் அரசாங்கத்தைப் பற்றியும் மக்களுக்கு போதனை செய்து பாட்டாளி
வர்க்க அரசின் தேவையை மக்களிடம் பிரச்சாரம் செய்ய வேண்டும்.
15. தேசிய இனப்பிரச்சனையில் கம்யூனிஸ்டுகளின் கொள்கை, ஒவ்வொரு தேசிய இனத்துக்கும் பிரிந்துபோகும் சுயநிர்ணய உரிமை
அடிப்படையிலான சுதந்திரம் வேண்டும். அதேவேளையில் ஒவ்வொரு தேசிய இனத்தைச் சேர்ந்த உழைக்கும் மக்களிடம் ஒற்றுமை பாதுகாக்கப்பட்டு
வளர்க்கப்பட வேண்டும். ஒரு
தேசிய இனத்தின் மீதான ஒடுக்குமுறையை எதிர்த்துப் போராடுவதற்காக பிற இனத்தின் மீது
வெறுப்புணர்வு ஊட்டப்படுவதை எதிர்த்துப் போராட வேண்டும்.
16. சாதிப்பிரச்சனையில் தாழ்த்தப்பட்ட சாதியினர் மீது செலுத்தப்படும் தீண்டாமை கொடுமைகளை எதிர்த்துப் போராட வேண்டும். அதே வேளையில்
தாழ்த்தப்பட்டவர்களும் தாழ்த்தப்பட்டவர் அல்லாத பிற சாதியைச் சேர்ந்த உழைக்கும் மக்களுக்கும் இடையில் ஒற்றுமையை
பாதுகாத்து வளர்க்க வேண்டும். தீண்டாமை ஒழிப்பு போராட்டத்திற்காக சாதிகளுக்கு
இடையே ஒற்றுமையை சீர்குழைக்கும் பிரிவினைவாதிகளை எதிர்த்தும் நாம் போராட வேண்டும். தாழ்த்தப்பட்ட சாதியைச்
சேர்ந்தவர்கள் மட்டுமே ஒன்றுபட்டு போராட வேண்டும் என்ற பிளவுவாதத்தை நாம் எதிர்க்க
வேண்டும். அனைத்துச் சாதியைச் சேர்ந்த உழைக்கும் மக்கள் ஒன்றுபட்டு போராடுவதன்
மூலமே தீண்டாமை கொடுமையை ஒழிக்க முடியும் சாதிகளுக்கு இடையே சமத்துவம் கண்டு
சாதிகளே இல்லாத நிலையை ஏற்படுத்த முடியும்.
கம்யூனிஸ்ட்
கட்சி பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகரமான உணர்வு பூர்வமான முன்னணி படை, அதன் மார்க்சிய தத்துவத்தின் அடிப்படைகளை மார்க்சும் எங்கெல்சும்
வகுத்தளிதனர். அத்தகைய கட்சிக்கு தலைமை தாங்கும் தொழிலாளி வர்க்கத்தின் உலகுத் தழுவிய வரலாற்றுக் கடமையை
நிறைவேற்றுவதற்கு மார்க்சிய தத்துவ அறிவு மிகமிக அவசியமான நிபந்தனையாகும். அத்தகைய
மார்க்சிய அறிவின் தத்துவ தலைமை இல்லாமல் புரட்சி வெற்றி பெற முடியாது புதிய புரட்சிகரமான சமூகமாக
சமூகத்தை மாற்றி அமைக்க முடியாது.
“தீர்மானகரமான தினத்தன்று வெற்றிபெறுகின்ற அளவுக்கு பாட்டளி வர்க்கம் வலிமையோடு
இருக்க வேண்டும், அது மற்ற எல்லா கட்சிகளிலிருந்தும்
வேறுவிதமான அவற்றை எதிர்கின்ற தனிக்கட்சியை உணர்வு பூர்வமான, வர்க்க கட்சியை
அமைத்துக் கொள்ள வேண்டும் என்று 1847ம்
வருடத்திலிருந்தே நாங்கள் வலியுறுத்தி வந்திருக்கிறோம் என்று எங்கெல்ஸ் 1889 ல் எழுதினார்.
புரட்சி
வெற்றி பெற வேண்டும் என்றால் தொழிலாளி வர்க்கம் முறையாக ஸ்தாபனமாக திரட்டப்பட்டு
இருக்க வேண்டும் பாட்டாளி வர்க்கம் தன்னுடைய போராட்டத்தின் இறுதி இலட்சியங்கள் எவை
என்பதை அறிந்து செயலாற்ற வேண்டும்.
தமிழ்
தேசத்தின் மீதான ஒடுக்குமுறை மற்றும் சுரண்டலை எதிர்த்த விடுதலை போராட்டமும்
இந்தியா முழுவதும் உள்ள அனைந்து தேசிய இனங்களின் மீதான ஒடுக்குமுறை மற்றும்
சுரண்டலை எதிர்த்த விடுதலை போராட்டமும் ஒரே பொதுவான எதிரிகளான உள் நாட்டு வெளிநாட்டு கார்ப்ரேட்டுகள் அவர்களின் நலனுக்காக பாடுபடும் அரசியல்
கட்சிகளும் அவர்களின் அரசு ஆகியவற்றை எதிர்த்த போராட்டங்களே ஆகும். ஆகவே பொதுவான எதிரியை எதிர்த்து போராடும் தமிழ் தேச விடுதலை போராட்டத்தையும் இந்திய விடுதலை போராட்டத்தையும்
தனித்தனியாக பிரிப்பதும் ஒன்றுக்கு எதிராக மற்றொன்றை வைப்பதும் மார்க்சியம் ஆகாது. இரண்டுக்கும் நோக்கம் ஒன்றே.
தமிழ் தேச
விடுதலை பற்றி பேசும் நபர்களின் வலிமை அல்லது சாத்தியம் தமிழ் தேசத்துக்குள் கட்சியை கட்டுவதும் போராடுவதும் என்ற
நிலையில் அதுதான் சாத்தியம் என்று அவர்கள் செயல்படட்டும். ஆனால் நடைமுறையில் பிற
தேசிய இனங்களின் ஆதரவு அவசியம் என்று அவர்கள் உணர்வார்கள். ஆகவே தமிழதேச விடுதலையா இந்திய விடுதலை என்பது
கோட்பாட்டு பிரச்சினை அல்ல நடைமுறை பிரச்சினை. நடைமுறையில்தான் இவர்கள் உணர்வார்கள்.
தமிழ்
நாட்டில் உள்ள சுரண்டப்படும் மக்களிடம் சுரண்டலை எதிர்த்து போராடுவதற்காக நாம் ஒன்றுபட வேண்டியதன் அவசியத்தை பிரசாரம் செய்து
கட்சி கட்ட வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு. இந்த சுரண்டலையும் ஒடுக்குமுறையையும் செயல்படுத்தும் அரசை தகர்பதும்
அதற்கு மாற்றாக சுரண்டலை ஒழிக்கும் அரசுமுறையை உருவாக்கும் லட்சியத்தை அடிப்படையாக
கொண்டு ஒன்றுபட வேண்டியதன்
அவசியத்தை பிரசாரம் செய்து கட்சியை கட்ட வேண்டும்.
தேவைப்படின் தொடரும் தோழர்களே.....
No comments:
Post a Comment